ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
Published on May 20, 2013-9:19 am · No Comments வடமாகாணசபைக்கு காணி காவல்துறை அதிகாரங்கள் வழங்க தேவையில்லை என ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா டெயிலி மிரருக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். இந்த அதிகாரங்களை வழங்குவது குறித்து தெற்கில் உள்ள தெற்கில் உள்ளவர்கள் சிலர் கடுமையான கருத்துக்கள் வெளியிட்டு வருவதால் காணி காவல்துறை அதிகாரங்களை வடமாகாணத்திற்கு வழங்காது நிறுத்தி வைப்பது நல்லது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசுத்தலைவர் தன்னை மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கூறியதாகவும் எனினும் தான் மாகாணசபை தேர்தலில் போட்டியிட விருப்புவதாகவும் அவர் தெரிவித்தார். ‘ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடாமல் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்…
-
- 13 replies
- 915 views
-
-
இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சிங்களவர்களுக்காகப் பௌத்த விகாரைகள் இருப்பதில் என்ன பிரச்சினை? வடக்கு - கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கக்கூடாது என்று எந்தச் சட்டத்தில் உள்ளது?" என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார். 'திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேசத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 238 சிங்களவர்களுக்கு 23 பௌத்த விகாரைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன. 10 சிங்களவர்களின் வழிபாட்டுக்காகத் தலா ஒரு விகாரை வீதம் அமைக்கப்படவுள்ளது. குச்சவெளி பகுதியில் இந்தப் புதிய விகாரைகளை அமைக்கும் திட்டத்துக்கான அனுமதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் வழங்கப்பட்டுள்…
-
- 13 replies
- 760 views
- 1 follower
-
-
நவனீதம்பிள்ளையை மணக்க விரும்புகின்றேன் - மேர்வின் சில்வா 27 ஆகஸ்ட் 2013 நவனீதம்பிள்ளையை திருமணம் செய்ய விரும்புகின்றேன் என பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். நாட்டைச் சுற்றி செல்வதற்கு தன்னை இணைத்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார். நாட்டின் வரலாற்றை நவனீதம்பிள்ளைக்கு கற்றுக்கொடுக்க விரும்புகின்றேன். இராவண மன்னன் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விஜய குமாரனுக்கு இளவரசி குவேனியை மணம் முடித்துக் கொடுத்தோம் என அவர் தெரிவித்துள்ளார்.. அதேபோன்று, நவனீதம்பிள்ளை விரும்பினால் நாளை அவரை மணந்து கொள்ளத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாருதானையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத…
-
- 13 replies
- 1.3k views
-
-
வேலூர் சிறையிலிருந்து தப்பித்த விடுதலைப் புலிகளை நான் தான் அனுப்பிவைத்தேன் - வைகோவின் திடீர் அறிவிப்பால் தமிழகத்தில் பரபரப்பு! [sunday, 2012-08-19 10:02:31] வேலூர் சிறையிலிருந்து, அகழி வழியாக தப்பிய இலங்கைத் தமிழ் இளைஞர்கள், 45 பேரில், மூவரை புதுக்கோட்டையிலிருந்து, கடல் வழியாக இலங்கைக்கு நான் தான் அனுப்பி வைத்தேன் என வைகோ தெரிவித்துள்ளார். கடந்த, 1995ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த விடுதலைப்புலிகள், 43 பேர், அகழி வெட்டி, அதன் மூலமாக சிறையில் இருந்து தப்பிய சம்பவம் நடந்தது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தப்பியோடிய புலிகளில், 21 பேர் மட்டுமே, அடுத்த சில நாட்களில் இந்தியப் பொலிஸாரால் கைத…
-
- 13 replies
- 1.9k views
-
-
தமிழீழம் மலர்ந்தால் தன்னைவிட மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் கிடையாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கி பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். திமுகவும் காங்கிரசும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசுவதற்…
-
- 13 replies
- 1.7k views
-
-
(ஜே.ஜி.ஸ்டீபன் - ப.பன்னீர்செல்வம்) இராவணேஸ்வரன் தமிழனா - சிங்களவனா? இலங்கை இந்து நாடா? பௌத்த நாடா? என்பது தொடர்பில் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான சீ.யோகேஸ்வரனுக்கும் இடையில் இன்று சபையில் கடும்வாதம் ஏற்பட்டது. இலங்கை இந்து நாடு என்றும் சிவபக்தனான இராவணேஸ்வர மன்னன் இலங்கையை அரசாட்சி புரிந்ததாகவும் கூறி வரலாறுகளை எடுத்துக்காட்டிப் பேசினார். இதன்போது யோகேஸ்வரன் எம்.பி.யின் எடுத்துக்காட்டல்களை உடனடியாக மறுத்துரைத்த அமைச்சர் மேர்வின் சில்வா, யோகேஸ்வரன் எம்.பி.யின் கருத்துக்கு மாறான வாதத்தை முன்வைத்து இதிகாசங்களையும் சுட்டிக்காட்டினார். இதன்போது இராவணேஸ்வரன் மன்னன் சிங்களவன் என்றும் இலங்கை பௌத்த நாடு என்றும்…
-
- 13 replies
- 3.7k views
-
-
பதவி விலகுகிறார் சவேந்திர சில்வா – புதிய இராணுவத் தளபதியாக விக்கும் லியனகே! இராணுவ தளபதி பதவியிலிருந்து ஜெனரல் சவேந்திர சில்வா, எதிர்வரும் 31ஆம் திகதி விலகவுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எதிர்வரும் ஜுன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் பாதுகாப்பு படைகளின் புதிய பிரதானியாக அவர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். அதேநேரம், மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் முதலாம் திகதி புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்கவுளள்தாக என இராணுவம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1283967
-
- 13 replies
- 671 views
-
-
புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல் ஜெனிவா உடன்பாட்டுக்கு எதிரானது என்றும் தெளிவாக எச்சரிக்கைகள் இன்றி இராணுவ இலக்கல்லாத ஒரு சிவிலியன் இலக்கு தெரிவு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை போர்க் குற்றம் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பான RSF குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்ற தாக்குதல்களை முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ------------- Airstrike on VoT, a war crime - Reporters Without Borders [TamilNet, Tuesday, 27 November 2007, 18:39 GMT] A Sri Lanka military air strike Tuesday on the Voice of…
-
- 13 replies
- 3.9k views
-
-
நாட்டில் உப்பு தட்டுப்பாடு! நாட்டில் உப்பு இறக்குமதி தாமதமானதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்த போதும் அது தாமதமாகியுள்ளதாகவும் இதனால் சந்தையில் உப்பு தட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளதாகவும் அந்த சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் வாரத்தில் குறித்த உப்புத் தொகை கிடைத்த பின்னர் உப்பு தட்டுப்பாடு கட்டுப்படுத்தப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, 1 கிலோகிராம் உப்புப் பொதியை 450 முதல் 500 ரூபா வரையிலான விலையில் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உப்பு …
-
- 13 replies
- 624 views
- 2 followers
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டினருகே வெடிகுண்டு மீட்பு வீரகேசரி இணையம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.சிவாஜிலிங்கம் அவர்களின் கெப்பிட்டிபொல பகுதியிலுள்ள வீட்டு வளாகத்திலிருந்து வெடிகுண்டொன்றை படையினர் இன்று காலை மீட்டனர். இந்த வெடிகுண்டு தொடர்பில் இராணுவ தலைமையகததிற்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து கெப்பிட்டிபொலயிலுள்ள 44ஆம் இலக்க வீட்டை சோதனைக்குட்படுத்தியபோது, இந்த கண்டு மீட்கப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு சுமார் ஒன்றைரை கிலோ கிராம் எடையுடையது எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயககார மேலும்…
-
- 13 replies
- 2.8k views
-
-
பொன்சேகா கைது இலங்கையின் உள் நாட்டு விவகாரம் - சீனா மலேசிய நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 14, 2010 China பொன்சேகா கைது தொடர்பாக பல நாடுகள் கட்டம் கட்டமாக கருத்து தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையில் சீனாவும் தனது கருத்தினை தெரிவித்துள்ளது. அதாவது சீனாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது. இலங்கையில் பொன்சேகா அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டமை அவர்களது உள் வீட்டு பிரச்சினை அதில் நாம் தலையிட முடியாது. அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் நாம் தலையிடுவதில்லை என சீனா கூறியுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2…
-
- 13 replies
- 850 views
-
-
மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை : பௌர்ணமியன்று போராட்டம் ; பூர்வீக நிலத்தின் உரிமையாளர்கள் அழைப்பு 08 FEB, 2025 | 03:49 PM மாற்றுக் காணி என்ற பேச்சுக்கே இடமில்லை - பூர்வீக நிலத்தின் உரிமையாளர்களாகிய நாம் உரிமங்களுடன் இருக்க தையிட்டி விகாரை நிர்மாணிக்கப்பட்ட நிலப்பரப்பும், அதனை அண்டிய மக்களின் காணி நிலங்களும் விகாரைக்குரியதென்று கூறுவதை ஏற்க முடியாது என கூறியுள்ள தையிட்டி காணி உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் பௌர்ணமி நாளன்று போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை (08) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்த குறித்த காணி நிலங்களின் உரிமையாளர்கள் இ…
-
-
- 13 replies
- 850 views
- 2 followers
-
-
டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து ............... தொடர்ந்து வாசிக்க....................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_9002.html
-
- 13 replies
- 4.6k views
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் பணியிலிருந்தபோது இந்திய அமைதிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட வைத்தியசாலை ஊழியர்களின் 25 வது நினைவு தினம் இன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலையில் பணியிலிருந்தபோது வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன்போது 21 பணியாளர்கள் இந்தியப்படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களது நினைவாக ஒவ்வொரு வருடமும் இந்நினைவு பிரார்த்தனை இடம்பெறும். இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு, பொது மக்களால் ஈகைச் சுடருடம் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்.போதனா வை…
-
- 13 replies
- 723 views
-
-
-
- 13 replies
- 1.7k views
-
-
இலங்கையின் மூத்த தமிழறிஞர் சிவத்தம்பியின் வருகையை எதிர்பார்த்து, 'வருக சிவத்தம்பி... உருகுதே என் இதயம்!' எனக் காத்திருந்தார் முதல்வர். கருணாநிதியின் காத்திருப்பு வீண் போகவில்லை. வந்திருக்கிறார் சிவத்தம்பி! ''ஆங்கிலத்தின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் எந்த நிலையில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?'' ''இந்தியா, ஆங்கிலேயர்களின் காலனியாக இருந்தது. ஆகவே, ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க இயலாது. இருந்தாலும் தமிழ், தமிழர் என்ற உணர்வு இருக்கும் வரை, எந்த மொழியாலும் தமிழை அழிக்க முடியாது. உலகின் முக்கிய மொழிகளான ஸ்பானிஷ், அரபிக், ஃபிரெஞ்ச், ஆங்கிலம் போன்ற மொழிகளில், தமிழைப்பற்றிய நூல்களை எழுதினால், தமிழின் பெருமையை உலகுக்கு இன்னும் வலுவாக எடுத்துக்கூற முடியும். …
-
- 13 replies
- 3.1k views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா வவுனியாவில் போராட்டம் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு எதிராக பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் வவுனியாவில் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளது. அண்மையில் விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வாழும் சிறுபான்மை சிங்களவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படக் கூடாது எனவும், பௌத்த விஹாரைகள் அமைக்கக…
-
- 13 replies
- 966 views
-
-
ஐரோப்பியம் ஒன்றிய தடை விதித்தால் அமைதி முயற்சிகளுக்கு கடுமையான ஆபத்து ஏற்படும்: பாலசிங்கம் எச்சரிக்கை சர்வதேசத்தின் மேலதிக எந்த ஒரு தடை நடவடிக்கையும் அது ஏற்கனவே பலவீனமடைந்துள்ள அமைதி முயற்சிகளை மிகக் கடுமையாக எதிர்மறையாக பாதிக்கும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கக் கூடும் என்ற செய்திகள் தொடர்பாக தமிழ்நெட் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: சர்வதேச சமூகத்திடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தும் வகையிலான தென்னிலங்கை கடும்போக்காளர்களின் இந்த கோரிக்கையானது ஆயுத வழித்தீர்வை கைக்கொள்வதற்கான ஒரு முன்னோட்டமாகும். தமிழீழ விடுதல…
-
- 13 replies
- 2.6k views
-
-
நல்லூர் கோவிலுக்கு, இராணுவம் வரலாம், போலீசார் வரலாம், வெள்ளைக்காரன் வரலாம்.... ஆனால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டும் தமது வேண்டுதல்களுக்காக வரக்கூடாது. கதவடைக்கும் நல்லூர் கோவில் நிர்வாகம். இவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.
-
- 13 replies
- 1.1k views
-
-
”உங்கள் பிரதம மந்திரியின் மனைவி உங்கள் இந்திய உளவுத்துறையை நம்பவில்லை, ஆகவே இத்தாலிய உளவுத் துறையிடமிருந்து தன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்து கொண்டார்”. புலன் விசாரித்ததில் இதுதான் புலப்படுகிறது. அகில இந்திய காங்கிரஸின் பொது காரியதரிசியாக இருந்த ராஜீவ் காந்தியின் இல்லத்தில் அப்போது ஒரு சாதாரண குடும்பத் தலைவியாகவே சோனியா இருந்தார். ஆனால் இந்திய வெளி உளவுத் துறையான RAWவுக்கும் (Research & Analysis Wing) இத்தாலிய உளவுத் துறைக்குமிடையே இரகசிய சந்திப்புக்கு சட்டவிரோதமாக ஏற்பாடு செய்தார். அந்த சமயம் சோனியா இந்திய பிரஜா உரிமை கோரி விண்ணப்ப மனுவைக் கூட அனுப்பவில்லை. உங்களுக்கு வினோதமாக உள்ளதா? மேலே படியுங்கள். சோனியாவின் சகோதரி அனுஷ்காவின் கணவர் வால்டர் வின்சி (Walter Win…
-
- 13 replies
- 3.2k views
-
-
27/05/2009, 13:05 [செய்தியாளர் மயூரன்] சிறிலங்காவுக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை தோல்வி! சிறிலங்காவுககு எதிராக இஸ்ரேல், உலக சுகாதார ஸ்தாபன அமர்வில் கொண்டுவந்த யோசனை 193 நாடுகளின் ஒத்துளைப்புடன் முறியடிக்கப்பட்டது என சிறி லங்கா சகாதார போசாக்குத்துறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62 ஆவது அமர்வில் சிறி லங்கா சார்பாக கலந்து கொண்டார். அந்த அமர்வின்போது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவராகவும் அவர் தெரிவுசெய்யப்பட்டார். மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாகக்கருதி சிறி லங்காவுக்கு எதிராக விசாரணைகளை நடத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக்குழுவொன்றை சிறி லங்காவுக்கு அனுப்பவேணட…
-
- 13 replies
- 3.1k views
-
-
முல்லைத்தீவில் இராணுவம் சுட்டுக்கொன்ற சிறுத்தையின் இணையா கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்டது? June 21, 2018 கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ச…
-
- 13 replies
- 2k views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலை படுகொலை 29 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு யாழ்.போதனா வைத்தியசாலையில் 1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிகள், மேற்பார்வையாளர் உள்ளிட்ட 21 பணியாளர்களும், சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாள ர்களுமாக 68 பேர் கொல்லப்பட்டனர். 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதி இந்திய இராணுவத்தினர் வைத்தியசாலை மீது மேற்கொண்ட தாக்குதலில் இந்த 68 பேரும் உயிரிழந்தனர். இன்றையதினம் இடம்பெற் நிகழ்வில் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் செ.பவானந்தராஜா உயிரிழந…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
புலிகளின யுத்த வியூக இரகசியங்கள் இராணுவப் படையினர் வசம் - அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் யுத்த வியூகம் தொடர்பான பல முக்கிய இரகசியங்கள் இராணுவத்தினருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கத்திற்குச் சார்பான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இந்த யுத்த வியூகங்களை மாற்றியமைப்பதற்காகவே புலிகள் யுத்த நிறுத்தமொன்றைக் கோரியதாகவும், அது பலனற்றுப் போனதாகவும் லண்டனில் உள்ள புலிகள் வலையமைப்பை மேற்கோள் காட்டிக் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் நோக்கில் லண்டனில் விசேட இரகசிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது அடைந்துள்ள பின்னடைவிற்குக் கருணா அம்மானே முழுப்பொறுப்பு …
-
- 13 replies
- 4.1k views
-
-
மஹிந்தவின் அரசியல் எதிர்காலம் இன்று முடிவாகும்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மூன்றாவது தடைவை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது குறித்து இன்று தெரியவரும். மூன்றாம் தவணைக்காக போட்டியிட முடியுமா? மற்றும் இரண்டாம் தவணைக்காகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் போட்டியிட முடியுமா என்பது குறித்து ஜனாதிபதி உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் இன்று உயர் நீதிமன்றம் சட்ட விளக்கம் அளிக்க உள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான பத்து பேர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து ஆராய்ந்துள்ளனர். இந்தநிலையில் இன்று பிற்பகல் 2.30 அளவில் நீதியரசர்கள் மீண்டும் கூடி இந்த விடயங்கள் குறித்து ஆராயவுள்ளனர். நீதியரசர்களுக்கு இடையில் நடைபெற…
-
- 13 replies
- 3.5k views
-