ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
எந்தக் காரணத்துக்காகவும் படையினரைக் காட்டிக் கொடுக்காது அரசாங்கம்! – அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிப்பு. [Monday, 2014-02-10 07:48:26] ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவம் செய்யத் தயாராக இருப்பதாக, பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தம்மை அமர்வுகளில் பங்கேற்குமாறு பணித்தால் தாம் பங்கேற்கத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த காலங்களில் நடைபெற்ற முக்கியமான அமர்வுகளில் மஹிந்த சமரசிங்க இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினை வழிநடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் ஜெனீவா செல்லும் குழு தொடர்பில் ஜனாதிபதி அறிவிப்பார் எனவும், தேவை ஏற்பட்டால் பிரதிநிதிகள் குழுவிற்கு…
-
- 13 replies
- 649 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவரும் யுத்த தோல்விகளின் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவருடன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு பிளவுபட்டால் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்தும் தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கக்கூடிய திட்டங்கள் குறித்தும் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி : தமிழ்வின்
-
- 13 replies
- 2.6k views
-
-
ஆடம்பர மாளிகையை விரும்பாத ஜனாதிபதி ஆடம்பர மாளிகையோ, ஆடம்பரமான வாழ்க்கையையோ தான் விரும்புவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையினை மக்களின் பார்வைக்காக உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் மாணவர்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆடம்பரமான முறையில் இந்த மாளிகை காணப்படுகின்ற போது நீங்கள் ஏன் இதனை விடுத்து இன்னுமொரு மாளிகையினை தேர்ந்தெடுத்தீர்கள் என திருகோணமலையைச் சேர்ந்த தமிழ் மாணவன் ஒருவனினால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 13 replies
- 1.1k views
-
-
இன்று விசேட வர்தமானி அறிவித்தல் மூலம் இலங்கை பாராளுமன்றை ஜனாதிபதி 18/01/2022 வரை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ளார் (prorogued). நன்றி @Nathamuni https://www.dailymirror.lk/breaking_news/Parliament-prorogued/108-226724
-
- 13 replies
- 742 views
- 1 follower
-
-
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார். இதன் போதே இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லி…
-
- 13 replies
- 1.3k views
-
-
நடேசன் நம்பிக்கை பேட்டி ''கிளிநொச்சியை மீளவும் கைப்பற்றுவோம்!'' ஐந்து மாதங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது இலங்கை. ராணுவத்தின் ஓயாத குண்டு வீச்சுகள்... அதிரும் துப்பாக்கிகள்... பலியாகும் அப்பாவித் தமிழர்கள் என்று நிலவரம் சூடேறிக்கொண்டிருக்க, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றியிருக்கிறது இலங்கை ராணுவம். தமிழீழ காவல்துறை அலுவலகம், தமிழீழ தேசிய வங்கி, நீதித்துறை, வரி வசூலிப்புத் துறை என்று சகலத்தையும் நிர்மாணித்து புலிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருந்த இடமான கிளிநொச்சி வீழ்ந்தது, புலி களுக்குப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனிடம் சில …
-
- 13 replies
- 3.3k views
-
-
ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே முதலமைச்சர் இருக்கவேண்டும்: - த.சித்தார்த்தன் [saturday, 2013-06-01 20:05:43] ஐந்து கட்சிகளினதும் தெரிவாகவே வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் இருக்க வேண்டும் என புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் இணைந்து முதலமைச்சர் வேட்பாளரைத் தெரிவுசெய்து நிறுத்துவதன் மூலமே கூட்டமைப்பின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்த முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது மக்கள் கூட்டமைப்பின் மீது முழுமையான நம்பிக்கையை வைக்க உதவுமென்றும் அவர் கூறியுள்ளார். வட மாகாணசபை தேர்தல் செப்டெம்பரில் நடைபெறப் போவதாகக் கூறப்படும் நிலையில் ஊடகங்களில் முதலமைச்சர் வேட்பாளராக தமி…
-
- 13 replies
- 809 views
-
-
சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏற்க நீண்ட நேரம் செல்லாது நாட்டுக்கு மிகவும் முக்கியமான தீர்மானமொன்றை நாளை சனிக்கிழமை அறிவிக்கப் போவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்ரப அமில தேர் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். போர்நிறுத்த உடன்படிக்கையை அரசாங்கம் கிழித்தெறிய வேண்டுமென கொழும்பு விகாரமாதேவிப் பூங்காவில் தொடர்ச்சியான சுழற்சிமுறையான உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்திவரும் தேசிய பிக்குகள் முன்னணி, நாளை தலதாமாளிகையில் விசேட பூஜையொன்றை நடத்தவுள்ளது. விசேட பூஜையின் பின்னர் நாட்டுக்கு முக்கியமானதும், கடுமையானதுமான தீர்மானமொன்றை அறிவிக்க இருப்பதாகவும், இந்தத் தீர்மானது இனப்பிரச்சினைத் தீர்வு த…
-
- 13 replies
- 3k views
-
-
வரும் மாதங்களில் பத்து நாட்களுக்கு ஒரு கப்பல் என்ற அடிப்படையில் இலங்கைப் படைகளுக்கு தேவையான ஆயுதத் தளபாடங்களைத் தவறாது அனுப்பி வைப்பதற்கு இலங்கைக்கு உறுதியளித்துள்ளது பாகிஸ்தான். கொழும்பு ஆங்கில வார ஏடோன்றில் இவ்வாறு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. அந்த வார இதழில் மேலும் தெரிவித்திருக்கும் சில தகவல்கள் வருமாறு :- விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்குகின்றது. இராணுவ நடவடிக்கைக்கு அவசியமான பொருட்களுடன் கப்பல்கள் கொழும்பிற்கும் கராச்சிக்கும் இடையில் அடிக்கடிப் பயணிக்கின்றன. பாகிஸ்தான் தனது ஆயுதத் தளபாட தொழிற்சாலைகளிலிருந்தும் தனது இராணுவத்தின் சேமிப்புக் களஞ்சியங்களிலிருந்து இலங்கைக்கு அவசியமானவற்றை வழங்குகின்…
-
- 13 replies
- 2.7k views
-
-
சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்! நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்… கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 109 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சம்பா அரிசி தற்போது 162 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 48% அதிகமாகும். கடந்த ஆண்டு 93 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 123 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 183 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு தற்போது 259 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 550 ரூபாயாக இருந்த ஒரு கிலோ…
-
- 13 replies
- 766 views
-
-
சர்வதேசத்தின் ஆதரவைப்பெற தமிழ்க் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றம் அனுப்புங்கள் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு யுத்தம் இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு உறுதியானதும் நிரந்தரமானதும் நியாயமானதும் நடைமுறைப்படுத்துவதற்கும் ஏற்ற அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் இருக்கும் சர்வதேச சமூகம், தனது அடுத்த நகர்வுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் வடக்கு,கிழக்கு தமிழ் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பை உன்னிப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான அணியாக பாராளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மாத்திரமே சர்வதேச சமூகத்தின் உறுதியான ஆதரவைப் பெறமுடியும் என்பதை ஒவ்வொரு தமிழ் வாக்காளனும் உணர…
-
- 13 replies
- 962 views
-
-
"ஒற்றுமை என்பது புனிதமானதல்ல!" - சேனன் (மிக அண்மையில் இலங்கை சென்று திரும்பிய சேனனுடன் ஒரு நேர்காணல்) நேர்காணல்: : ம. நவீன் சேனன் தொண்ணூறில் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து இந்தியா , பிரான்ஸ் என்று அகதியாக அலைந்து தற்போது லண்டனில் வசிக்கிறார். 'அம்மா', 'எக்ஸில்' ஆகிய சஞ்சிகைகளில் வித்தியாசமான கதைகளைக் கவிதைகளை எழுதியவர். எதிர், தமிழ்ஒருங்கமைப்பு ஆகிய இணையத்தளங்களின் ஆசிரியராகவும் செயற்பட்டு வருகின்றார். சேனன் லண்டனில் தொழிலாளர்களின் போராட்டங்களையும் அடக்குமுறைகளுக்கெதிரான எதிர்ப்புகளையும் மிகத் தீவிரமாக முன்னெடுப்பவர். மார்க்சிய சிந்தனைவாதி. தமிழ்ஒருங்கமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளரான சேனன் கடந்த மாதம் கொழும்பில் நடத்திய கூட்டத்தில் சிறீலங்கா அரச…
-
- 13 replies
- 1.3k views
-
-
Published on August 26, 2011-12:06 am No Comments இந்தியாவில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகளின் கூட்டம் தோல்வியில் முடிந்தாலும் அதன் பின்னணியில் சில வெளிவராத சுவாரசியமான சம்பவங்களும் நிகழ்ந்தேறியிருக்கின்றமை தற்போதுஅம்பலமாகியிருக்கின்றது. இந்தியாவில் நடைபெற்ற இலங்கைத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திற்கான ஏற்பாட்டினை இந்தியக் காங்கிரஸ் எம்பியான சுதர்சன நாச்சியப்பன் மேற்கொண்டிருந்தார். இந்த அழைப்பு அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பட்ட போது இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிக்கும் அனுப்பப்பட்டிருந்தது. இந்த அழைப்பின் அடிப்படையில் கஜேந்திரகுமாரும் கஜேந்திரனும் இந்தியா செல்வதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. இந்த முடிவுக்கு அமைய லண்டனில் வாசம் செய்துவருகின்ற கஜேந்திரகுமார் கஜேந்திரனை அழ…
-
- 13 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 07 MAY, 2023 | 07:05 PM சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (07) நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; சில காலத்தின் முன்னர் வரை இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். தமிழ் பௌத்த சின்னங்களை ஆக்கிரமிப்பதற்காகத்தான் பௌத்த விகாரைகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. பௌத்தர்களே இல்லாத இடங்களில் அவை கட்டப்படுகின்றன. விகாரைகளை கட்டி, அதை பராமரிக்க ம…
-
- 13 replies
- 889 views
- 1 follower
-
-
வெள்ளிக்கிழமை, 03 யூன் 2011, 11:10.15 PM GMT ] இன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4 அறிவித்த "இலங்கையின் கொலைக்களம்" என்னும் போர்க்குற்ற ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை திரைப்படமாக்கியது சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இன்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது. பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது. இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்…
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
ராஜீவ் காந்தியை றோ உளவுப் பிரிவு பிழையாக வழிநடத்தியது – அருண் தம்பிமுத்து 20 நவம்பர் 2012 இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை, அந்நாட்டு உளவுப் படைப் பிரிவான றோ பிழையாக வழிநடத்தியுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். தமிழ் இராணுவக் குழுக்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் றோ உளவுப் பிரிவு, ராஜீவ் காந்தியை பிழையாக வழிநடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டம் நாட்டுக்கு பொருத்தமானதாக அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை விடவும் நடைமுறைச் சாத்தியப்பாடுடைய முறைமை ஒன்று அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைய பாராளுமன்ற முறைமை தொடர்பிலும் திருப்தி கொள்ள முடியாது …
-
- 13 replies
- 1.7k views
-
-
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகள் கருணா அம்மான் என அழைக்கப்பட்டும் விநாயகமூர்த்தி முரளிதரனிடமிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது யுத்த குற்ற விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர்கள் புலிகள் இயக்க அமைப்பினருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டிருந்தார். இது குறித்து இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய நாடுகளுக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ், கருணாவின் கருத்தை வைத்துக் கொண்டு அவரை சுதந்திரமாக செயற்பட விட முடியாது என தெரிவித்துள்ளார். கருணா தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, பல குற்ற…
-
- 13 replies
- 1.2k views
-
-
பிரித்தானியாவுக்கு பயணமானார் ஜனாதிபதி பிரித்தானியாவில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று புதன்கிழமை (11) முற்பகல் லண்டன் பயணமானார். ஜனாதிபதியும் தூதுக்குழுவினரும் இன்று (11) முற்பகல் 10.05க்கு எமிரேட்ஸ் EK 651 விமானத்தில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிப் பயணமாகினர். பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனின் தலைமையில் பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்குபற்றும் ஊழலுக்கெதிரான சர்வதேச மாநாடு, நாளை வியாழக்கிழமை (12) லண்டன் நகரில் ஆரம்பமாகவுள்ள அதேநேரம், …
-
- 13 replies
- 666 views
-
-
மதுபோதையில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர், 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை, கழிவறைக் கதவு என நினைத்து திறக்க முயன்றதாக லண்டனில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=19961
-
- 13 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனை பாராட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழு அறிக்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏறாவூர் மத்திய செயற்குழுவின் கொள்கை பரப்புச் செயலாளர் யூ.எல்.முஹைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'கிழக்கு மகாணசபையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இருந்துவந்த இழுபறி நிலைமைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் சமயோசிதமாக அரசியல் பட்டறிவு சாணக்கியத்துடன் எடுத்த முடிவு, கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் இன ஐக்கியத்தை வலுப்படுத்த உதவியுள்ளது. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். கிழக்கு மாகாணசபை ஆட்ச…
-
- 13 replies
- 740 views
-
-
கொழும்பு தெற்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர், அவருக்குக் கீழ் பணி புரியும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு ஆபாசப் படங்களைக் காண்பித்தமை தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த பிரதி பொலிஸ்மா அதிபர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை தனது அறைக்குள் அழைத்து தனது மடிக் கனிணியிலிருந்த ஆபாசப் படங்களைக் காண்பித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் கான்ஸ்டபிள் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பொலிஸ் உயரதிகாரி ஒருவரிடம் கூறியுள்ளார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறன்றன. இதேவேளை,கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை பணத்துக்காக கொலை செய்தமை, களனி பிரதேச அரசியல்வாதியைக் …
-
- 13 replies
- 1.2k views
-
-
தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை கைது ! 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்த பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சுங்கத்தினால் விதிக்கப்பட்ட அபராதத்தை செலுத்த முடியாமல் அவர் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக டி சில்வா முன்னிலையில் குறித்த பிரான்ஸ் பிரஜை நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 70 மில்லியன் ரூபாய் தண்டப்பணம் செலுத்த முடியாமைக்காக 35 வயதுடைய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 3ஆம் திகதி …
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
கலப்பு நீதிமன்றம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கம்: கலப்பு நீதிமன்றம் என்ற விடயம் உத்தேச யோசனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சமர்ப்பித்துள்ள உத்தேச தீர்மானத்தில், கலப்பு நீதிமன்ற பொறிமுறைமை குறித்து பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. இரண்டாவதாக திருத்தி அமைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்த விடயம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதவான்களுடன் கூடிய கலப்பு நீதிமன்ற முறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென முன்னதாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், தற்போது அந்த கலப்பு நீதிமன்றம் உள்ளக நீதிமன்ற விசாரணையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதவான்கள், பொதுநலவ…
-
- 13 replies
- 1k views
-
-
(ஆர்.யசி) நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை…
-
- 13 replies
- 1.3k views
-
-
(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)ஈழ விடுதலை ஆரவாளரும், தமிழுணர்வாளரும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தலைவருமான திரு.பழ நெடுமாறன் இன்று காலை சென்னையில் கைதாகினார்.இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய். இலங்கை அரசுக்கு இராணுவ உதவிகள் செய்யாதே எனும் கோரிக்கைகளுடன் ஆர்ப்பாட்டம் செய்த போதே தமிழக காவல்துறையால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக செய்திகள் விரைவில்.... http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267
-
- 13 replies
- 3.3k views
-