ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
உகண்டா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பை மேம்படுத்தவென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உகண்டாவுக்கு வருகை தந்துள்ளதாக உகண்டாவின் முன்னணி நாளேடான நியூவிஷன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து உகண்டாவுக்கான உயர் ஸ்தானிகர் வேலுப்பிள்ளை கணநாதன் தெரிவிக்கையில், அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு உகண்டா வந்துள்ள ராஜபக்ஷ நாட்டில் ஐந்து தினங்கள் தங்கவுள்ளதாகவும் அங்கு தங்கியிருக்கும் காலத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடும் பொருட்டு ஜனாதிபதி முசவெனி பாதுகாப்பு படைகளின் தளபதி ஆகியோரை சந்திக்கும் சந்தர்ப்பம் ஒன்றை அவருக்கு கிட்டவுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சைச் சேர்ந்த தொழில்நுட்பக் குழுவொன்றையும் அவர் சந்திக்…
-
- 12 replies
- 670 views
-
-
இலங்கையின் 71வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று காலை காலி முகத்திடலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி பற்றிய செய்திகளே, தற்போது சிங்கள சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அசாத் சாலி தனது மனைவிகளான பாத்திமா சியாதா, ரஷ்னா ஆகியோருடனும் தனது இளைய புதல்வனுடனும் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டார். இரண்டு மனைவிகளுடன், விசேட விருந்தினர் ஒருவர் இலங்கை சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென சமூக ஊடகங்களில் குறிப்பிடப்பட்டு வருகிறது. http://www.pagetamil.com/36198/
-
- 12 replies
- 2.1k views
-
-
[size=4]தமிழக மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குவதை தடுக்க தனுஷ்கோடியில் இந்திய ராணுவத் தளம் அமைக்க வேண்டும் என திமுக கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்[/size] [size=4]இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:-[/size] [size=4]கோடியக்கரை அருகே 18-8-2012 அன்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மீனவர்கள் வைத்திருந்த மீன்கள், டீசல் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.[/size] [size=4]இந்தத் திடீர் தாக்குதலில் தமிழக மீனவர்கள் நிலைகுலைந்து போய் கதறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரு…
-
- 12 replies
- 760 views
-
-
எரிக் சொல்ஹெய்மிற்கும், கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பு. நோர்வேயின் முன்னாள் அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதற்கமைய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பொருளாதார மீட்சி, பசுமையான அபிவிருத்திகள் மற்றும் அரசியல் சீர்திர…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
இராவணன் சிங்கள மன்னன் அல்ல, மாறாக அவன் ஆதம் நபியின் வாரிசாக இலங்கையில் வாழ்ந்த ஆதம் வாரிசு என்ற ஆதி வாசிகளின் பரம்பரையை சேர்ந்த முஸ்லிம் மன்னனாவான் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி குறிப்பிட்டார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது,இராவணன் சிங்கள மன்னன் என அமைச்சர் மேர்வின் சில்வா பாராளுமன்றத்தில் சொல்லியுள்ளது இலங்கையினதும் சிங்களவரினதும் வரலாறு பற்றிய அவரது அறியாமையை காட்டுகிறது. இராவணனின் வரலாறு பல லட்சம் வருடங்களுக்கு முற்பட்டது என்று இந்தியாவில் சொல்லப்படும் அதே வேளை ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்டது என்று சிங்கள வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். சிங்கள இனமோ சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கைக்கு வந்ததாக ச…
-
- 12 replies
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளின் கடுமையான தாக்குதல் முறைமைகளேயே மாவோயிஸ தீவிரவாதிகள் பயன்படுத்துகின்றனர் ‐ இந்தியா 18 May 10 01:52 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகளினால் இலங்கையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல் முறைமைகளை தற்போது மாவோயிஸ் தீவிரவாதிகள் பின்பற்றி வருவதாக இந்தியா அறிவித்துள்ளது. குறிப்பாக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குண்டுத் தாக்குதல் முறைமைகளை மாவோயிஸ தீவிரவாதிகள் பயன்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ.ஈ.டி எனப்படும் விருத்தி செய்யப்பட்ட குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த முறைமைகளை விடுதலைப் புலிகளே அதிகம் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பஸ் ஒன்றின் மீது இந்திய மாவோயிஸ தீவிரவாதிகள் நடத்திய…
-
- 12 replies
- 1.1k views
-
-
கடற்கரைக்கு முதல் முறையாக கூட்டமாக வந்த டொல்பின்கள்: பொதுமக்கள் ஆச்சரியம்! Nov 16, 2025 - 12:01 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரைப் பகுதியை நோக்கி நேற்றைய தினம் (16) மதியம் ஒரு தொகுதி டொல்பின் மீன்கள் (Dolphins) கூட்டமாக வந்து சேர்ந்தன. இந்தச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மீனவர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் அங்கு சென்று பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின்கள் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. மன்னார் மாவட்டத்தில் கரையோரப் பகுதிக்கு இந்த டொல்பின் மீன் இனம் கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேரம் இலுப்பைக்கடவை கடற்கரையோரங்களில் கூட்டமாகச் சுற்றித் திரிந்த குறித்…
-
-
- 12 replies
- 674 views
- 1 follower
-
-
ராஜபக்சே அனுப்பிய ரகசிய தூது.. தூக்கியெறிந்த ரஜினி!! இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார். இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை. சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழா…
-
- 12 replies
- 1.8k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தினமும் காலையும் மாலையும் ஜனாதிபதியுடன் பேசி சிரித்து அவரை சந்தோஷப்படுத்துகின்றார். ஆனால் பாராளுமன்றத்தினுள் வந்து தமிழ் மக்களுக்காக அடித்தொண்டையால் போலியாக கத்தி உரக்கப்பேசுகின்றார். இவ்வாறு அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே பாராளுமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக சபையில் உரையாற்றிய மகேஸ்வரன் தமிழர்கள் கைது விவகாரம் தொடர்பாக இந்த சபையில் பேசினால் அமைச்சர்கள் ஜனாதிபதியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பதிலளிக்கின்றனர். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் பதில் எங்களுக்கு தேவையில்லை. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சொல்வதை, எங்கள் முறைப்பாட்டை ஜனாதிபதியோ, அமைச்சர்களோ கேட்பதில்லை எ…
-
- 12 replies
- 3.5k views
-
-
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை : யாழ்.டொன் பொஸ்கோ மாணவன் சாதனை தரம் ஐந்து புலமைப் பரீட்சை முடிவுகளின் பிரகாரம் யாழ். டொன் பொஸ்கோ பாடசாலையைச் சேர்ந்த நோதிநாதன் வசீகரன் 192 புள்ளிக்களைப் பெற்று யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவ்வருடம் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரீட்சையின் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் குறித்த மாணவன் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பாராட்டியுள்ளனர். http://onlineuthayan.com/news/970
-
- 12 replies
- 2.8k views
-
-
(நாலாவது ஈழப் போர் இடம் பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில், பெருமெடுப்பிலான தாக்குதல் முயற்சிகள் எதுவுமின்றி விடுதலைப் புலிகள் அமைப்பு காட்டி வரும் மௌனப் போக்கானது அவர்களது நலிவுற்ற தன்மையை வெள்காட்டி நிற்பதாகக் கருதப்படுமா என்ற கோணத்தில், இலங்கையின் போர் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும் வகையில் அமைகிறது இக்கட்டுரை. ) (திலக் கோதாகொட என்பவரால் எழுதபட்ட இக்கட்டுரை கடந்த 03ம திகதி 'ராவய' பத்திரிகையில் பிரசுரமாயுள்ளது. அதன் தமிழாக்கம் இது.) தமிழாக்கம சரா விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக மேற்கொள்ளபட்டு வரும் இன்றைய யுத்ததில் இலங்கை அரசபடைகள் நிரந்தர வெற்றியை நிச்சயமாக ஈட்டிக் கொள்ளும் என்ற ஏகோபித் எதிர்பார்ப்பு தென்புலத்து அரசியல் களத்தில தளிர் விட்டு வளர்ந்த…
-
- 12 replies
- 4.1k views
-
-
-
- 12 replies
- 3.7k views
-
-
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிய பயங்கரவாத தடைச்சட்டம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது என கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இந்த சட்டமூலத்தை தோற்கடிக்க மக்கள் ஐக்கியப்படவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்கள் எங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு இந்த இடத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் என எங்களை கருதுவோம் இந்த புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை தோற்கடிப்பதற்கு நாங்கள் ஒன்றிணையவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தவேகத்தில் நிலைமை சென்றால் நாங்கள் இன்று சுதந்திரமாக கருத்துதெரிவிப்பது பேசுவது போன்…
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
“பிற மொழியையும் தெரிந்து வைத்திருங்கள். அது பிறரோடு பழக உதவும். அடுத்தவரை அணுக உதவும். வெறும் மொழிப்பித்து என்பது உங்களைக் கிணற்றுத் தவளையாக்கிவிடும். கிணற்றுத் தவளையும் நீந்தும் உயிர்வாழும். ஆனால், உலகத்தின் அனுபவமும் அளவும் அதற்குச் சிறியதாகத் தெரியும்” என முகம் கொள்ளாத சிரிப்புடன் எம்மோடு பேசத் தொடங்கினார் வணக்கத்துக்குரிய குட்டிக்குளமே விமலசார தேரர். “இந்த இனிப்பான தருணத்தில் சில விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என இலக்கணத் தமிழில் தேன் சுவையாக கூறினார் 32 வயதான தேரர். “மொழிப்பற்று என்பது மரத்தின் வேரைப் போன்றது. வேர் மண்ணை ஊன்றியிருப்பதே எமக்குத் தேவை. அம்மரத்தின் கிளைகள் எண்ணிக்கை …
-
- 12 replies
- 810 views
-
-
தென்னிந்திய நடிகை அசின் இன்று ஜனாதிபதியின் பாரியார் சகிதம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார் ‐ ஜீரிஎன் செய்தியாளர் 11 July 10 01:53 pm (BST) பிரபல தென்னிந்திய நடிகை அசின் இன்று யாழ்பக்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதியின் பாரியார் சிராந்தி ராஜபக்ஸ இன்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில் அவருடன் நடிகை அசினும் விஜயத்தை மேற்கொண்டிருந்தார் என ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய திரைப்படச் சங்கங்கள் அனைத்தும் நடிகை அசினின் திரைப்படத்திற்கு தடை விதித்துள்ளன. தடையை மீறி இந்திய நடிகர் சங்கம் அண்மையில் இடம்பெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னிந்தியாவில் அவரது திரைப்படங்கள் திரையிடுவதற்கு த…
-
- 12 replies
- 2.7k views
-
-
தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று ம…
-
- 12 replies
- 1k views
- 1 follower
-
-
திருகோணமலையில் தந்தை செல்வாவின் சிலை உடைப்பு (படங்கள் இணைப்பு) திருக்கோணமலை நகரப்பகுதியிலுள்ள அமரர் ஜே.வி.செல்வநாயகத்தின் சிலை இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் புரத்திலுள்ள சிவன் கோயிலுக்கு அருகில் உள்ள இச் சிலை நேற்றிரவு உடைக்கப்பட்டுள்ளது. சிலையின் தலைப்பகுதி உடற் பகுதியிலிருந்து உடைக்கப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தலைப் பகுதி சிலையின் கீழ் போடப்பட்டுள்ளது. உடைக்கப்பட்ட தந்தை செல்வாவின் சிலை தற்போது மறைக்கப்பட்ட நிலையில் உள்ளது. http://www.vanakkamnet.com/selva/
-
- 12 replies
- 1.9k views
-
-
வெள்ளவத்தைப் பகுதியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக வெடித்ததால் இருவர் பலியானதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் கதிர்காமதேவன் ஜெனிட் நிரோஷன் (வயது 24) மற்றும் மகேந்திரன் சசிதரன் ஆகிய இருவருமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானவர்களாவர். வெள்ளவத்தை33ஆவது ஒழுங்கைப் பகுதியில் வைத்தே மேற்படி இரு குழுவினர் மத்தியிலும் மோதல் வெடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சம்பவத்தில் மரணித்த இருவரில் ஒருவர், மோதலை விலக்க எத்தனித்த சமயமே கத்திக் குத்துக்கு இலக்காகி மரணமானதாகவும் மற்றுமொரு தகவல் கூறுகின்றது. இச்சம்பவத்தை அடுத்து குற…
-
- 12 replies
- 1.7k views
-
-
தமிழீழத்தை அங்கீகரிக்குமாறு கனேடிய தமிழ் காங்கிரஸ் கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோள் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டில் விடுக்கப்பட்டது (என நினைக்கிறேன்). CTV Newsnet இல் தொடர்ந்து 1/2 மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒளிபரப்புகிறார்கள். மேலதிக தகவல் விரைவில்.
-
- 12 replies
- 3k views
-
-
இலங்கை மத்திய வங்கி இவ்வருடம் சுமார் 41.7 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை புதிதாக அச்சிட்டு பாவனைக்கு விடவுள்ளது. கடந்த வருடம் மத்திய வங்கி பொருளாதாரத்திற்கென 24.6 பில்லியன் ரூபா நாணயத்தாள்களை அச்சிட்டு வெளியிட்டிருந்தது. கடந்த வருடம் 27.7 பில்லியன் ரூபாவுக்கான நாணயத் தாள்களை அச்சிட திட்டமிடப்பட்டிருந்த போதும் குறைவாகவே அச்சிடப்படடிருந்தது. இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப் பகுதியில் மாத்திரம் 16.9 பில்லியன் ரூபா நாணயத்தாளகளை புதிதாக அச்சிட்டு வெளியிடுவதற்கு மத்திய வங்கி திட்டமிட்டிருந்தது. புதிதாக அச்சிடும் பணத்தை குறிப்பிட்ட இலக்க மட்டத்திற்கு அதிகமாகச் சென்று விடாதவாறு நடைமுறைப்படுத்த மத்திய வங்கி நடவடிக்கை பலவற்றை மேற்கொண்டுள்ளது. …
-
- 12 replies
- 1.7k views
-
-
புலிகளின் பாடல்களைப் பயன்படுத்தி ஐதேக யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் யாழ்மாவட்டத்தில் தேர்தல்காலப் பரபரப்புக்கள் வேட்பாளர்களிடையே தொற்றிக்கொண்டிருக்கிறது. கவனிக்கவும் வேட்பாளர்களிடையேதான். ஒவ்வொரு கட்சியும் கட்சிக்குள் நபர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் எப்படியெல்லாம் தம்மை மார்க்கெட்டிங் செய்ய முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் எண்பதுகளுக்குப் பிறகான தலைமுறைக்கு மிகவும் புதியதான இந்தக் கூத்துகளில் பல சுவாரசியங்களும் நடைபெறுகின்றன. தேர்தல் பிரச்சாரத்திற்காக தெருக்கூத்துக்களில் தொடங்கி வாகனத் தொடரணிகள் வரை “காசைக் கரியாக்குகின்ற” கைங்கரியங்களே நடைபெறுகின்றன என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்தியாவின் எந்த அரசியல் கலாசாரத்தை நாம் கைகொட்டிச்…
-
- 12 replies
- 1.6k views
-
-
மணலாறு மீது பாரிய தாக்குதலை நடத்தப் போகும் புலிகள்: கொழும்பு ஆங்கில ஊடகம் ஜஞாயிற்றுக்கிழமைஇ 29 யூலை 2007இ 09:01 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ மணலாற்றில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடான "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: சிறிலங்கா வான்படையினர் இந்த வாரம் வன்னியில் பல வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மூன்று இடங்களில் ஒன்றான ஒட்டிசுட்டானில் இருந்து வடமேற்காக உள்ள முதலியார்குளமும் ஒன்றாகும். மணலாற்றுப்பகுதியில…
-
- 12 replies
- 3k views
-
-
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரமென்ன? இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றி தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விடயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் என பல வகைகள் உள்ளன. இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் என பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத்தக்கவை. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய…
-
- 12 replies
- 1.3k views
-
-
பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. அமைச்சரவை நேற்று இரவு கூடிய போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமை…
-
- 12 replies
- 931 views
- 1 follower
-
-
நாடு கடந்த தமிழீழ அரசின் விளக்க கோவை வெளியீடு: ஜெனீவாவில் செயலகம்; புதிய இணையத் தளம்; ஏப்ரலில் தேர்தல் ......புதினப்பலகை.... நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைப்பதற்கான 135 பிரதிநிதிகள், உலகின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்தும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவது தொடர்பாக அதற்கென அமைக்கப்பட்டிருந்த மதியுரைக்குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அறிக்கையைத் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று வெளியிடவுள்ளோம் என்பதனை ஏற்கனவே தங்களுக்க…
-
- 11 replies
- 1.2k views
-