ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
நாட்டில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம்! இலங்கையில் 43 வருடங்களின் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான உத்தேச சட்டமூலத்தினை வர்த்தமானியாக வெளியிடுவதற்கும், நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை இராஜதந்திர சமூகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வதேச தரம் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, தடுப்புக் காவல் ஆணைகள், தடை உத்தரவுகள், உத்தரவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்தல், குற்றம் சாட்டப்பட்டவர்களின் வழக்கு…
-
- 11 replies
- 780 views
- 1 follower
-
-
உ திரு. ஈஸ்வரபாதம் சரவணபவன் அவர்கட்கு, நிர்வாக இயக்குனர், “உதயன்” பத்திரிகை, யாழ்ப்பாணம். 08.06.2024 உங்களை எப்படி விளித்து இக் கடிதத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. ஒரு காலத்தில் நீங்கள் எங்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் என்றாலும், இப்போது உங்களை நண்பர் என்று விளித்து எழுத என் உள்ளம் மறுத்து நிற்கிறது. காரணம், இப்போது நீங்கள் எங்களுக்கு மட்டும் அல்ல எவருக்குமே உண்மையான நண்பராக இல்லை என்பதுதான்!. நீங்கள் எப்படியும் இருந்துவிட்டுப் போங்கள்! நான் எங்களின் பழைய நட்பை நினைந்து உங்களை இடித்துரைப்பதற்காகவே இக் கடிதத்தை எழுதத் தொடங்குகிறேன். எனது இந்த முயற்சியால், எந்தப்பயனும் விளையப் போவதில்லை என, என் அறிவுக்குத் தெரிந்தாலும், என் கடமை…
-
-
- 11 replies
- 1.1k views
-
-
வணக்கம், மிகப்பெரிய மனிதப்பேரவலம் சிறீ லங்கா பயங்கரவாத அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அகால நேரத்தில் தமிழ் ஜனநாயகம் பேசுகின்ற விளக்குமாறுகள் யாழ் குடாநாட்டில் தமது தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறிப்பாக தேவனந்தா அடிகளார் தமிழ் மக்கள்பால் தான் பேரன்பு கொண்டுள்ளதை நீரூபிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுவாமிகள் பொதுமக்களுடன் சாதாரண பேரூந்தில் ஒன்றாக பயணம் செய்ததாகவும் இதைக்கண்ணுற்ற பொதுமக்கள் (?) ஆனந்தக்கண்ணீர் வடித்ததாகவும் கூறப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பேரூந்தை ஓட்டிய சாரதி இரு கண்களிலும் கண்ணீர் ஆறாக ஓட தேவாந்தா சுவாமிகளை கட்டியணைத்து தனது அன்பை தெரிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. வாழ்…
-
- 11 replies
- 2k views
-
-
மூலம்: http://www.tamilcanadian.com/news/tamil/index.php?action=full_news&id=5650 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று வேறு கட்சிகளில் போட்டியிட்ட எம்.பி.க்கள் அனைவரும் இம்முறை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் (2004) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 22 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. ஆனால், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகிய எம்.பி.க்கள் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டனர். எனினும், மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்று படுதோல்வியடை…
-
- 11 replies
- 1.6k views
-
-
கோத்தபாயவுடனான சந்திப்பு செய்தி – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு Pழளவநன டில: ழn ஜூன் 29இ 2010 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாகஇ பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு (26,27-06-2010) தினங்களில் ஒளிபரப்பான ஜி.ரி.வி செய்திகளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் கோத்தபாயவைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மருத்துவர் அருட்குமார் சிறீலங்காவிற்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்டது எனவும், அவரது பயணம் பற்றியோ, அன்றி கோத்தபாயவைச் …
-
- 11 replies
- 1.6k views
-
-
கொழும்பில் 5 சடலங்கள் மீட்பு. சிறிலங்காவின் தலைநகரான கொழும்பு வடக்கின் கந்தானை காவல்துறை பிரிவில் உள்ள முத்துராஜவெல சதுப்புநில காட்டுப்பகுதியில் இருந்து 5 சடலங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை 3 சடலங்களும் சனிக்கிழமை 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சில சடலங்கள் கண்கள் கட்டப்பட் நிலையிலும் மிகவும் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர். படுகொலை செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இந்த சதுப்பு நிலப் பகுதிகளுக்கு எடுத்து வரப்பட்டு போடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. -Puthinam-
-
- 11 replies
- 2.8k views
-
-
கொள்ளுப்பிட்டியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல் ஒன்று கொழும்பிலிருந்து வந்துள்ளது? உண்மையா? மேலதிக தகவல்கள் தெரியவில்லை.
-
- 11 replies
- 2.7k views
-
-
போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவு [புதன்கிழமை, 20 ஓகஸ்ட் 2008, 06:21 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி வானொலியான புலிகளின் குரலின் போராளிக் கலைஞர் லெப். நிலவன் வீரச்சாவடைந்துள்ளார். புலிகளின் குரல் நிறுவனத்துடன் இணைந்து கலைப்பங்கு உள்ளிட்ட செயற்பாடுகளை முனைப்பாக மேற்கொண்டவர் லெப். நிலவன். சிறிலங்காப் படையினருக்கு எதிரான களங்களில் எதிரிக்கு எதிராக முனைப்பான தாக்குதல்களை இவர் நடத்தியிருந்தார். படையினரின் வலிந்த தாக்குதல்களுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்களில் இவர் முனைப்பான பங்கை ஆற்றியிருந்தார். புதினம்
-
- 11 replies
- 2k views
-
-
அனுராதபுரத்தில் அரபு மத்ரஸா இனந்தெரியாதோரால் தீக்கிரை. சிறீலங்கா | ADMIN | OCTOBER 27, 2012 AT 11:43 அனுராதபுரம், மல்வத்தை சிங்கனுவ பகுதியில் அமைந்துள்ள அரபு மத்ரஸா ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுமார் 20:20 அடி பரப்பைக்கொண்ட இந்த மத்ரஸா நேற்றிரவு 10 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அனுராதபுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம் மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளையும் மற்றும் அறநெறி வகுப்புகளையும் நடத்தி வந்த தற்காலிக கற்கை நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமயகம் உறுதி செய்துள்ளது. இத் தீவிபத்து சம்பவத்தினால், ஹாட்போட் மட்டைகளால் மறைக்கப்பட்ட நிலையி…
-
- 11 replies
- 1.3k views
-
-
கிறிஸ்தவ, முஸ்லிம் அடிப்படைவாதிகளிடமிருந்து இந்து, பௌத்த மதங்களையும் கலை,கலாசார, பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாத்துக் கொள்ளும் காலம் வந்துவிட்டது. எனவே, இன்றே ஒன்றுப்படுவோம், மதமாற்றத்திற்கு எதிராக போராடுவோம் என பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். மதமாற்ற தடைச்சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைநிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றும் தேரர் தெரிவித்தார். இந்துக்களை மதமாற்றம் செய்வதற்கு எதிராக இந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று கொழும்பு விவேகானந்தா மண்டபத்திற்கு முன்பாக ஆரம்பமானது. இவ்வூர்வலம் ஜிந்துப்பிட்டி, செட்டியார் தெரு, மெயின் வீதி, ரெக்லமேஸன் வீதி ஊடாக கொட்டாஞ்சேனை வந்தடைந்தது. இதில் ஜனாத…
-
- 11 replies
- 994 views
-
-
நோர்வே தூதர் பிரட்ஸ்கார் நாளை வன்னி சென்று புலிகளை சந்திப்பார் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கார் நாளை 1 ஆம் திகதி வன்னி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரட்ஸ்கார் வன்னிக்குச் செல்லவிருந்த போதிலும் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கடைசி நேரத்தில் இந்த விஜயத்தை அரசு ரத்துச் செய்திருந்தது. எனினும், வன்னிக்கான பயணத்தை கைவிடுமாறு பிரட்ஸ்காரை தாங்கள் கேட்கவில்லையெனவும் அவராகவே இதனைக் கைவிட்டிருந்ததாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை மறுத்த ஹான்ஸ் பிரட்ஸ்கார், வன்னிக்குச் செல்ல வேண்டாமெனவும் பாதுகாப்பு பிரச்சினைகளிருப்பதாகவும் அரசு கூறியதாலேயே தனது பயணம் இறுதி நேரத்தில் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்திருந…
-
- 11 replies
- 2.6k views
-
-
இலங்கைக்கு ரேடார் வழங்கவில்லை-காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 16, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற சென்னை: இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் எதையும் வழங்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சாதனை படைத்தது. இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்றும் போது காலியாக இருக்கும் இடங்களை பொதுப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இது அதிர்ச்சியளிக்கிறது. இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யவும் தேவையான சட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பிரதமருக்கும், சோனியா காந்திக…
-
- 11 replies
- 2.2k views
-
-
ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்கு தமிழக முதல்வர் மு.கருணாநிதி நாளை 14ஆம் திகதி கூட்டவிருக்கும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவிருப்பதாகத் தெரியவருகிறது. தற்பொழுது ஜெனீவாவிலிருக்கும் இரா.சம்பந்தன் உட்பட மூவர் அடங்கிய குழு நாளைய சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் பங்கெடுக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் கட்சிகளுக்கு ஈழத்தமிழர் மீது முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறைகள் குறித்து விளக்கமளிக்கவிருப்பதாகவும், ஏற்கனவே, சில தமிழகக் கட்சிகளின் பிரமுகர்களைச் சந்தித்து ஈழத் தமிழர் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து விளக்கமளித்திருப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற …
-
- 11 replies
- 1.5k views
-
-
கடந்த சில மாதங்களில் வவுனியா தடுப்பு முகாம்களில் பணியாற்றுகின்ற இலங்கை ராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் பல பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். குறைந்தது 14, 15, 16 வயதான மூன்று தமிழ்ச் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதாக வவுனியா நீதிபதி முன்னால் ஒக்டோபரில் கூறியுள்ளனர். பல பாலியல் வல்லுறவுகள் தடுப்பு முகாம்களின் வலயம் 2 மற்றும் வலயம் 3 ஆகியவற்றில் நடந்தாலும் வவுனியா மருத்துவமனையில் வைத்து 14 வயதான மனநிலை குன்றிய சிறுமி ஒருவரையும் ராணுவம் கற்பழித்துள்ள விடயம் தெரிய வந்துள்ளதாக தமிழ்நெட் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்ததாக கூறப்பட்ட 17 வயதான சிறுமி ஒருவரை புலனாய்வு பிரிவினர் கற்பழித்துள்ளதோடு, அச்சிறுமியை புலிகளை அடைத்து…
-
- 11 replies
- 1.4k views
-
-
கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டாரா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக தலைவர் அவர்கள் அங்கீகாரம் வழங்கி நாங்கள் ஒரு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தினோம். இன்று தமிழரசு…
-
- 11 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில் மழை பெய்துகொண்டிருந்தது. இதனால் ஜனாதிபதி செயலகத்தில் மோடியை வரவேற்கும் வைபவம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது. இதன்போதே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோடியை குடை பிடித்து அழைத்துச் சென்றார். ஒரு இறைமையுள்ள நாட்டின் அதியுச்ச தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி இன்னோர் நாட்டின் பிரதமருக்கு குடை பிடிப்பதா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் சிலர், "மைத்திரி மீண்டும் தன் எளிமைப்…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
ஹாட்லி கல்லூரி முன்னாள் அதிபர் விபத்தில் சாவு பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இவரை பருத்திதுறை முதலாம்கட்டை சந்தியில் அரச திணைக்கள வாகனம் ஒன்று மோதியுள்ளது. விபத்தில் கனகசபாபதி அருளானந்தம் (வயது 61) என்பவரே உயிரிழந்தார். விபத்துகுறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். http://www.malarum.com/article/tam/2015/05/09/9980/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%A…
-
- 11 replies
- 1.2k views
-
-
எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்…
-
- 11 replies
- 1.9k views
-
-
நல்லூர் ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு நேற்று நடைபெற்ற இசை நிகழ்வொன்றில் வயலின் வாசித்துக் கொண்டிருந்த வயலின் வித்துவான் இராதாகிருஸ்ணண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.நல்லூர் மகோற்சவத்தை முன்னிட்டு தினமும் துர்க்கா தேவி மணிமண்டபத்தில் இசை நிகழ்வு நடைபெற்று வருகின்றது. வழமை போன்று நேற்று இரவும் திருவிழா முடிவடைந்த பின்னர், இசை நிகழ்வு ஆரம்பமானது.இதன் போது வயலின் வாசித்துக்கொண்டிருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடன், அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும்,அவர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/news/140
-
- 11 replies
- 928 views
-
-
இலங்கையின் பிரபல கலைஞரான ”உபாலி” செல்வசேகரன் அவர்கள் தனது 64 வது வயதில் கொழும்பில் மாரடைப்பால் காலமானார். இலங்கையில் திரைவானில் எழுபதுகளில் பிரபலமாகப் பேசப்பட்ட கோமாளிகள் என்னும் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட திரைப்ப்படத்தில் சிங்கள பாணியில் தமிழ் பேசும் ”உபாலி” என்ற பாத்திரத்தில் நடித்து, பிரபலமாகி, பலராலும் மெச்சப்பட்டவர் செல்வசேகரன். ‘உபாலி என்ற பாத்திரத்தின் மூலம் ஜனரஞ்சக கலைஞனாக அனைவராலும் அறியப்பட்ட செல்வசேகரன் உண்மையில் ஒரு பல்துறைக் கலைஞர்.’ வானொலி, மேடை, தொலைக்காட்சி முதல் திரைப்படம் வரை இலங்கையின் அனைத்து ஊடகங்களிலும், இலங்கையின் இரு மொழிகளிலும் முத்திரை பதித்த செல்வசேகரன், தினகரன் நாளிதழின் சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சரசவிய வ…
-
- 11 replies
- 1.3k views
-
-
வடபோர் முனையில் சிறிலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடபெற்ற சமரில் அரச படைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பை அடுத்து இராணுவ விசாரணைக்கென கொழுப்பிலிருந்து இரு இராணுவ அதிகரிகளை உள்ளடக்கிய குழு ஒன்று யாழ் சென்றுள்ளது. இன்று பலாலி இராணுவ படைத்தளத்திற்கு சென்றடைந்த இக்குழு படைத் தளபதிகளிடம் விசாணைகளை நடத்திவிட்டு பலாலி படைத்தளத்திலிருந்து உலங்கு வானூர்தி மூலம் வரணி, கிளாலி, நாகர்கோவில் படைத்தளத்திற்கு சென்று படைத்தளபதிகளுடன் விசாரணைகள் நடத்ததியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 11 replies
- 2.3k views
-
-
நாட்டை சீரழிக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேர்தல் திணைக்களத்தின் 60ம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஜனநாயகம் இல்லாவிட்டால் நாடு அழிவுப்பாதைக்கு சென்றுவிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாட்டை அழிப்பதற்கு நாம் எவரும் தயாரில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை எல்லா நேரங்களில் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை தேர்தல் திணைக்களம் நன்கு அறிந்து வைத்துக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial…
-
- 11 replies
- 699 views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுவது ஒரு விபசாரி தனது கற்பைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்றதென அமைச்சர் சி.பி.இரட்நாயக்கா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; யாழ்ப்பாணத்தில் மக்கள் பசி, பட்டினி என்றும் படிப்பதற்கு கொப்பி, பென்சில்கள் இல்லையென்றும் அவதியுறுவதாகக் கூறும் தமிழ்க் கூட்டமைப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளை விட்டு வெளியேறி கொழும்பில் இருந்தவாறு சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். யாழ். குடாநாட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியற்று இருக்கையில் புரட்சியாளர்களின் பிள்ளைகள் வெளிநா…
-
- 11 replies
- 3.2k views
-
-
16 OCT, 2023 | 03:03 PM இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதலில் பாலஸ்தீன் மக்களுக்கான தனது ஆதரவு தொடரும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்து பாலஸ்தீன தூதுவரை சந்தித்து மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகெங்கும் பயங்கரவாதத்திற்கு இடம் இல்லை என்றும் போர் அதற்கு தீர்வு அல்ல என்றும் பாலஸ்தீன் தூதருடனான கலந்துரையாடலில் மஹிந்த கூறினார். இலங்கையின் போர் தொடர்பான அனுபவங்களில் இருந்து சமாதானத்தின் அவசியத்தை பாலஸ்தீன தூதருக்கு எடுத்துக் கூறிய மஹிந்த ராஜபக்ஷ, அமைதியை நிலைநாட்டுவது இருநாடுகளுக்கும் இடையிலான செழிப்ப…
-
- 11 replies
- 671 views
- 1 follower
-
-
சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் 02 MAR, 2024 | 06:58 PM சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாற…
-
- 11 replies
- 1.5k views
- 1 follower
-