ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142802 topics in this forum
-
18 MAY, 2024 | 07:28 AM முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூத்தியாகியுள்ளன . அந்தவகையில் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளான நாளை(18) காலை 07.00 மணிதொடக்கம் 09.30மணிவரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது உயிர்நீத்தவர்களுக்குரிய பிதிர்க்கடன் நிறைவேற்றும் கிரிகைகள் இடம்பெறவுள்ளது. அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள புனித பவுல் தேவாலயதில் 08.30 மணிக்கு விசேட திருப்பலி ஆராதனைகளும் இடம்பெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பொதுச் சுடரேற்றப்பட்டு தமிழினப்படுகொலை…
-
-
- 10 replies
- 667 views
- 1 follower
-
-
சர்வதேச விருதை பெற்றார் மஹிந்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு “World Icon Award” என்ற சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்தியாவினால் வல்லுநர்களுக்காக “World Icon Award” விருது வழங்கப்படுகின்றது. அந்தவகையில் இம்முறை இலங்கையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 10 பேருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதில், மஹிந்தவுக்கு, 30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்காக “World Icon Award” வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/சர்வதேச-விருதை-பெற்றார்/
-
- 10 replies
- 1.9k views
- 1 follower
-
-
முன்னாள் அமைச்சர் தி.மகேஸ்வரனின் கொலை தொடர்பில் அவரது 5 சகோதரர்களிடமும் விசாரணைகள் மேற்கொண்டால் யார் கொலையைச் செய்தார்கள் என்ற உண்மை வெளிப்படும். சகோதரர்களுடன் நான் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால் இந்தவிடயம் தனக்குத் தெரியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், மகேஸ்வரனின் சகோதரர்களுக்கும் அவரது மனைவி விஜயகலாவுக்கும் மகேஸ்வரனை யார் கொலை செய்தார் என்பது தெரியும். தமது வியாபார நோக்கத்துக்காகவும் அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவும் அவர்கள்…
-
- 10 replies
- 1.3k views
-
-
பயங்கரவாதிகளுக்கும், சுதந்திரப் போராளிகளுக்கும் இடையில் தெளிவான வேறுபாடுகள் இருப்பதாக கனடாவில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன தெரிவித்திருப்பதாக கனேடியப் பத்திரிகையான ‘நஷனல் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையின் வடபகுதியை தனியான சுதந்திர அலகாகப் பிரகடனப்படுத்தவேண்டுமென கனடாவின் டவுன்ஸ் வியூ மைதானத்தில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வில் முக்கிய உரையாற்றிய அவுஸ்ரேலிய மருத்துவர் பிரான் செனவிரட்ன கூறியிருந்ததாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “இதனைவிட இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வு இல்லை” என அவர் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலங்குவானூர்திகள் குண்டுத் தாக…
-
- 10 replies
- 1.6k views
-
-
சர்வதேச சமூகம் ஒருபோதும் தீர்வைப் பெற்றுத்தரமாட்டாது - தமிழர்கள் கனவு காணக்கூடாது.! "இலங்கையின் தேசிய பிரச்சினைகளுக்கு அரசுதான் தீர்வுகளை வழங்கும். அதைவிடுத்து சர்வதேச சமூகம் தீர்வைப் பெற்றுத்தரும் என்று வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கனவு காணக்கூடாது." - இவ்வாறு காணி விவகார அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். "சர்வதேச அரங்கில் அரசைப் பலவீனப்படுத்தவே பொத்துவில் தொடக்கம் - பொலிகண்டி வரையிலான பேரணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் முன்னெடுத்துள்ளனர்" எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும், இவ்வாறான பேரணியால் அரசை ஒருபோதும் பலவீனப்படுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
புலம்பெயர் பிரஜையின் கால் துண்டிப்பு -செல்வநாயகம் கபிலன் செம்மணிப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (18) இரவு கும்பலொன்று ஒருவரைத் துரத்தித் துரத்தி வெட்டியதில் அந்நபர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர் கைதடியைச் சேர்ந்த இங்கிலாந்தில் வசித்து தற்போது விடுமுறையில் நாட்டுக்கு வந்திருந்த பொன்னம்பலம் நந்தகுமார் (வயது 44) என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்கானார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். - See more at: http://www.tamilmirror.lk/170310#sthash.usb8nbVF.dpuf
-
- 10 replies
- 1.2k views
-
-
"மண்டேலா" திரைப்படத்தை வடமாகாணத்தில் திரையிட்டால் போராட்டம்..! சிகை அலங்கரிப்பாளர்கள் எச்சரிக்கை.. அண்மையில் வெளிவந்துள்ள மண்டேலா திரைப்படத்தில் அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகளை நீக்கவேண்டுமென வடமாகாண அழகுக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தென் இந்தியாவில் வெளிவர இருக்கும் மண்டேலா திரைப்படமானது அழகக் கலையில் ஈடுபடுவோரை கொச்சைப்படுத்தும் முகமாகவும் அவர்களின் தொழிலை 30 வருடம் பின்னோக்கி கொண்டு செல்லும் முகமாக காட்சிகள் அமைக்க…
-
- 10 replies
- 894 views
-
-
அன்பான விபூசிகாவுக்கு குருபரன் மாமா எழுதுவது... என்ற இந்தக் கடிதம் 18 மார்ச் 2014 குளோபல் தமிழ்ச் செய்திகளில் வெளியாகி இருந்தது. சம காலத்தின் பிரதிபலிப்புகளோடு இந்த பதிவு தொடர்பு படுகிறது. குறிப்பாக பாகிஸ்தானிய சிறுமி மலலாவிற்கு சர்வதேச சமாதானத்திற்கான உயரிய விருதான நோபல் பரிசு கிடைத்தமையிட்டு உலகம் கொண்டாடுகின்றது.. அந்த மகிழ்வில் நாமும் இணைகிறோம்... இந்த வேளையில், எங்கள் மண்ணில், இலங்கை சிங்கள பௌத்த பேரினவாதத்தால் வஞ்சிக்கப்படும் எங்கள் குழந்தைகளை - விபூசிகாக்களை உலகம் கண்டு கொள்ளவில்லையே என்ற எங்களின் தவிப்பு நியாயமானதே. தன் அண்ணாவை தாருங்கள் என்று கேட்டதற்காக இந்த ஈழத்து மலலாவும், தன் மகனைத் தா என்று கேட்டதற்காக அவளது அம்மாவும் தனித்தனியாக பிரித்தெறியப் பட்டார்…
-
- 10 replies
- 1.1k views
-
-
“மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்றால் விக்கியின் தலைமையின் கீழ் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயார்”..... எம்.ஏ.சுமந்திரன் “தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தானே விரும்புகின்ற தனது நான்காவது தெரிவின்படி, கட்சி அரசியலைவிட்டு விலகி — இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து — தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க அவர் முன்வருவாரானா…
-
- 10 replies
- 1.7k views
-
-
திக்கம் வடிசாலை தைப்பூசத்தன்று இயங்க ஆரம்பிக்கும் - அமைச்சர் மற்றும் தலைவர்கள் உறுதி! யாழ்ப்பாணம் - வடமராட்சி திக்கம் வடிசாலை எதிர்வரும் தைப்பூச நாளிலிருந்து இயங்கும் என பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவன் மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் சந்திரசேகரன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இறுதியாக பனை அபிவிருத்தி சபை தலைவராகவிருந்த பெரும்பானமை இனத்தை சேர்ந்த நபர் பல கோடி ரூபா பணத்தை கையூட்டாக பெற்று தனியார் நிறுவனம் ஒன்றிற்கு 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளதாகவும், அக்குத்தகையையும் அமைச்சரவை பத்திரம் ஊடக இரத்து செய்யவுள்ளதாகவும், பனை அபிவிருத்தி சபை இவ்வாண்டு முதல் பனை தென்னை வள அபிவிருத்தி சங்கங்களிடம் கையளிக்கப்படும் எனவும் அங்கு இடம் பெற…
-
-
- 10 replies
- 684 views
-
-
ஜனாதிபதியின்... முக்கிய கோரிக்கையினை, நிராகரித்தார் சட்டமா அதிபர்! கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்குமாறு, ஜனாதிபதி முன்வைத்த யோசனையை சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நிராகரித்துள்ளார். இலங்கையில் தங்கியிருந்து நாட்டுக்கு சேவையாற்ற வேண்டிய தேவை தமக்குள்ளதாக சட்டமா அதிபர் அறிவித்ததாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துளார். அத்துடன், ஜனாதிபதியின் யோசனைக்கு சட்டமா அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1214257
-
- 10 replies
- 1.1k views
-
-
லண்டனில் மாபெரும் கண்டனப் பேரணி தொடங்கியது. லண்டனில் ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் மாபெரும் பேரணி இன்று சனிக்கிழமை முற்பகல் தொடங்கியுள்ளது. பிரித்தானியாவின் ரவல்கர் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகள் திரண்டுள்ளனர். தமிழர் வாழ்வில் ஜூலை மாதத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள அவலங்களை நினைவு கூரும் வகையில் பேரணியில் பங்கேற்றோர் கறுப்பு உடை தரித்து பங்கேற்றுள்ளனர். நிகழ்வின் தொடக்கத்தில் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. பிரித்தானியாவில் நகராட்சி மன்ற உறுப்பினர்களாக உள்ள தயா இடைக்காடர், திருமதி சசிகலா சுரேஸ் கிருஸ்ணா உள்ளிட்ட பெருந்திரளானோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளனர…
-
- 10 replies
- 2.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 02 SEP, 2024 | 05:27 PM சென்னை - யாழ்ப்பாணத்திற்கிடையில் புதிய விமான சேவையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை ஆரம்பமானது. இதற்கமைய, குறித்த சேவையின் முதலாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை (01) மாலை 3.05 மணிக்கு சென்னையிலிருந்து 52 பயணிகளுடன் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்போது இசை மற்றும் நடனத்துடன் பயணிகள் அழைத்து வரப்பட்டனர். பின்னர் பலாலியில் இருந்து சென்னை நோக்கி பயணத்தை குறித்த விமானம் ஆரம்பித்தது. பலாலியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் 74 பயணிகள் பயணத்தை மேற்கொண்டனர். விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் யாழ்ப்பாண உற்பத்திகள் வழங்கப்பட்டன. …
-
-
- 10 replies
- 811 views
- 1 follower
-
-
பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71728 முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு…
-
- 10 replies
- 2.5k views
-
-
சர்வதேச சமூகத்திடம் உறுதியளித்துள்ளபடி பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து விலகி இலங்கை அரசு தொடர்ந்து இதே கொள்கையில் சென்றுகொண்டிருந்தால் அடுத்த வருட முற்பகுதியில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டிவருமென அமெரிக்கா நேற்று முன்னெச் சரிக்கை விடுத்திருக்கிறது. கொழும்பில் நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சின்போது அமெரிக்காவின் இந்தக் கருத்தை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்க அமைச்சர் றொபேட் ஓ பிளேக் வெளிப்படுத்தியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்ற உறுப…
-
- 10 replies
- 1.3k views
-
-
கொதித்துக் கிளம்பும் எஸ்.ஆர்.பி. ''தமிழ் சினிமாவில் விடுதலைப்புலிகள் பணம்..'' 'விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தமிழ் சினிமாவில் ஏகத்துக்கும் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ் சினிமாவை இப்போது ஆட்டிப்படைப்பது புலிகள்தான்!'' - இப்படி ஒரு தடாலடி ஸ்டேட்மென்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம். குன்னூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது இந்த குண்டைப் போட்ட எஸ்.ஆர்.பி., 'தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மோசம்' என்று மாநில அரசையும் அட்டாக் செய்திருக்கிறார். கருணாநிதி ஆதரவாளரான ஜி.கே.வாசன் கோஷ்டியில் இருந்து கொண்டே எஸ்.ஆர்.பி. செய்த விமர்சனங்கள், அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. இந்த நிலையில் …
-
- 10 replies
- 6k views
-
-
வவுனியாவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்தவர்களுக்கு றிசாட் பதியுதீனால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வீரபுரம் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் அரசாங்கத்தை அண்டிப் பிழைக்கும் இந்த அராஜக அமைச்சரின் செயல் குறித்து மக்கள் ஆத்திரமடைந்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் குறித்த பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் சுவரொட்டிகளுக்கு மேல் றிசாத் பதியுதீனின் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றனர். அப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இந்தச் செயலுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அங்கு நின்ற பதி…
-
- 10 replies
- 1.4k views
-
-
இரணைமடு குளத்திற்குள் ஏற்பட்ட அதிசயம்! வியந்து போன மக்கள் Report us Suman 2 hours ago கிளிநொச்சி - இரணைமடு குளத்தின் வான்பகுதிக்குள் அதிகளவு மீன்கள் பிடிபடுவதனால் இன்று பலர் மகிழ்ச்சியில் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். பெருமளவானவர்கள் வான்பகுதிக்குள் மீன் பிடியில் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நூற்றுக்கணக்கான கிலோ மீன்கள் பிடிப்படுவதனால் வியாபாரிகளும் இரணைமடுவில் குவிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். நேற்று மாத்திரம் பல இலட்ச ரூபாவுக்கு மீன்கள் விற்பனை இடம்பெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு தொடர்ந்தும் வான்பகுதிக்குள் பலர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதோடு அவற்றை கொ…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
உள்ளக விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெற்றாலே நீதி கிடைக்கும் – முதலமைச்சர்SEP 15, 2015by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவில் உள்ளக விசாரணை நடத்தப்பட்டால், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது என்றும் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அனைத்துலக விசாரணையை வலியுறுத்தி வடக்கு மாகாணசபை உறுப்பினர்களால் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் வரை மேற்கொள்ளப்பட்ட நடைபயணத்தின் முடிவில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டது. அதனைப் பெற்றுக்கொண்ட பின்னர், கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண முதலமைச்சர், “உங்களின் வேதனைகளை நன்…
-
- 10 replies
- 1k views
-
-
இலங்கை தமிழரசு கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விமலேஸ்வரி உள்ளிட்ட ஏனைய நால்வரையும் உடன் கட்சியிலிருந்து நீக்குமாறு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கத்துக்கு எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அவரது அறிவுறுத்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நேற்று முன்தினம் 27/06/2020 அன்று தமிழரசுக் கட்சி மகளிர் அணிச் செயலாளர் என்று கூறப்பட்ட விமலேஸ்வரி சிறீகாந்தரூபன் மற்றும் நால்வர் யாழ்ப்பாணம் ஊடக மையத்துக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இக்கடிதத்தை எழுதுகிறேன். நேற்று 28/06 காலை தாங்களும் தொலைபேசி மூலம் இவ்விடயங்கள் தொடர்பில் பேசியிருந்தீர்கள். 1.…
-
- 10 replies
- 1.6k views
-
-
மஹிந்தவின் பாரியார், மகன்களுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம் ஷிரந்தி,யோஷித்த சி.ஐ.டி.க்கு;ரோஹித்த எப்.சி.ஐ.டி.க்கு (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக் ஷ மற்றும் அவர்களது புதல்வர்களான யோஷித்த ராஜபக் ஷ, ரோஹித்த ராஜபக் ஷ ஆகியோருக்கு எதிரான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று மஹிந்தவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவும், இளைய மகனான ரோஹித்த ராஜபக்ஷவிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை நடாத்தவுள்ளதாகவும் நாளை இரண்டாவது மகனான யோசித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நட…
-
- 10 replies
- 930 views
-
-
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடுமையான தொனியில் எடுத்துரைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கான வெகுமதியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் பதவிக்கு வந்து ஒருவருடமாகும் நிலையிலும் ஜனாதிபதியின் குறித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. எனவே இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தலைமையில் ஜனாதிபதியுடன் எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்போது கடுமையான தொனியில் இந்த விவகாரத்தை ஜனாதிபதியிடம் முன்வைக்கவும் கூட்டமைப்…
-
- 10 replies
- 1.2k views
-
-
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை கோரி இன்றும் தமது எதிர்ப்பினை தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். அந்தவகையில் மலையகத்தில் வெலிமடை கட்டுகல்ல தோட்ட தொழிலாளர்கள் வெலிமடை – ஊவா பரணகம பிரதான வீதியில் கட்டுகல்ல சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதன்போது காட்டிக் கொடுக்காதே தொண்டா, வடிவேலா, எமக்கு 1000 ரூபா வேண்டும் என பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியமை குறிப்பிடதக்கது. http://www.virakesari.lk/article/12349
-
- 10 replies
- 530 views
-
-
லண்டன் முத்துமாரியம்மன் கோவிலை இடிக்கத் துடிக்கும் இலங்கைத் தூதர் அம்சா: தமிழர்கள் கொதிப்பு இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதர் தமிழ்க்கலாசாரத்தை அவமதிப்பதாக அவர் மீது புகார்கள் எழுந்துள்ளன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இது தமிழ்க்கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. இங்கு தமிழர்கள், ஈழத் தமிழர்கள், இந்துக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த கோவிலில் ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக ஒரு தூண் உள்ளது. இப்படிபட்ட கோவிலை எப்படியாவது இடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் இலங்கை தூதரக உயர் அதிகாரி அம்சா சதி வேலை செய்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த கோவிலில் பயங்கரவாதத்திற்கு ஆதரவான செயல்கள் நடைபெறுவதாகவும்…
-
- 10 replies
- 2.5k views
-
-
பிக்குமார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா? [29 - July - 2007] ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான போராட்டத்தின் துவக்கமாக கடந்த வாரம் தலைநகர் கொழும்பில் `மக்கள் அலை' பேரணியை நடத்திய அதேதினத்தில் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தது. கிழக்கில் தொப்பிகல பிரதேசத்தில் இராணுவத்தினர் அடைந்த வெற்றியை சிறுமைப்படுத்திக் கருத்துத் தெரிவித்து படையினரை அவமதித்ததாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பௌத்த பிக்குமாருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த தீர்வையின்றி வாகனங்களை இறக்…
-
- 10 replies
- 1.9k views
-