ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
பௌத்த சிங்களவர்களை நெளிய வைக்கிறதா, சிவா சேனா ஆதரவு. வவுனியாவில் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களால், (இலங்கை) சிவ சேனை என்னும் அமைப்பு ஆரம்பிக்கப் பட்டு இருந்தது. இது தொடர்பாக அறவிப்பு வந்தபோது இலங்கையில் யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் மும்பாயினை தலைமையிடமாக கொண்ட மத்திய அரசின் பிஜேபி கட்சியின் சக்தி மிக்க, இந்திய சிவ் சேனா அதற்கு ஆதரவு தெரிவித்தவுடன், சிறிது அதிர்வு அலைகள் உண்டாகி உள்ளது போல தெரிகிறது. இலங்கை சிவா சேனை, தீவின் முதன்மை மதமான பௌத்த மதத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்து மதத்தினை காக்க போராடக் போவதாக அறிவித்து உள்ளதால், 'உலகெங்கும் உள்ள இந்துக்களின் நலனை பாதுகாக்க நாம் முனைப்புடன் உள்ளதால், சிவ சேனைக்கு, எமது ஆதரவு இருக்கும் என்று சிவ…
-
- 25 replies
- 1.9k views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணையில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இலங்கை அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இரு தரப்புக்கும் இடையில் தரகராகச் செயற்படும் இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட சுப்பிரமணிய சுவாமி,இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்துச் சுதந்திரமான, சர்வதேச விசாரணைகளை வலியுறுத்தும் பிரேரணையின் வரைவு தொடர்பாக அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுக்கள் இடம்பெற்று வருகின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமான அதிகாரிகள், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூ…
-
- 25 replies
- 1.9k views
-
-
அரசியல் அதிகார பகிர்வுக்கு இணக்கம், போர்க்குற்றச்சாட்டுக்களை தமிழர் தரப்பு கைவிட்டால்? டெயிலிமிரர் சிங்கள அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் இதில் தமிழர் தரப்பு சிங்கள தரப்புக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிட வேண்டும் எனவும் அதற்கு பிரதிஉபகாரமாக தமிழர் தரப்புக்கு ஒரு அரசியல் தீர்வு தரப்படும் எனவும் சொல்லபட்டுள்ளது. இது இந்தியாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்ச தனது இலண்டனுக்கான தோல்விப்பயணத்திற்கு பின்னரும் இராகுல் காந்தியின் சென்னை பேச்சுக்கு (இலங்கையில் தமிழர் தரப்பின் பிரச்சனை தீர்க்க ஆவன செய்யப்படல் வேண்டும் ) பின்னருமே கூட்டமைப்புடன் பேச இணங்கியுள்ளதாக சொல்லபட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.9k views
-
-
http://www.icc-cpi.int/NR/exeres/0EF62173-...15EE1D25BB3.htm http://www.icc-cpi.int/Menus/ICC/Structure...the+Prosecutor/ இதற்காக நாம் பரப்புரை அதிகம் செய்ய வேண்டும்! contact page: http://www.icc-cpi.int/Menus/ICC/Contact
-
- 11 replies
- 1.9k views
-
-
கொழும்பு, கிருலப்பனையில் நேற்று புதன்கிழமை இரவு இனம்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர். கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு பின்னாலுள்ள கிருல வியாபாரய குடிமனைப் பகுதியிலேயே நேற்றிரவு 7.45 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் இடம்பெற்றதாக கிருலப்பனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் மாலன் பெரேரா தெரிவித்தார். காயமடைந்தவர்களில் இருவர் தமிழர்கள். மற்றவர் சிங்களவராவார். கோபால் மகேந்திரன் (50 வயது) சரோஜினி ரதிதேவி (47 வயது). கே.வி. சமந்த (35 வயது) ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் தமிழர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் சிங்கள இளைஞர் களுபோவில ஆஸ்பத்திரியிலும் அனுமதிக…
-
- 3 replies
- 1.9k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் ஆதரிக்கும் என நம்புவதாக இந்திய மத்திய பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க இருக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்குமா என உள்ளுர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான தீர்மானத்தை தனிப்பட்டரீதியில் தான் ஆதரிப்பதாகவும் பிரதமரிடமும் இவ்விடயத்தை வலியுறுத்துவேன் எனவும் பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி மேலும் தெரிவித்…
-
- 9 replies
- 1.9k views
-
-
முகமாலையில் எறிகணைத் தாக்குதலில் படைச்சிப்பாய் பலி. ஒருவர் காயம். யாழ்ப்பாணம் முகமாலை முன்னரங்கப் பகுதிகளிலிருந்து சிறிலங்காப் படையினர் நேற்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி எறிகணைவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டனர். இத்தாக்குதலுக்குப் பதில் தாக்குதலை விடுதலைப்புலிகள் மேற்கொண்ட போது ஒரு சிறிலங்காப் படைச்சிப்பாய் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்கா படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://sankathi.org/
-
- 3 replies
- 1.9k views
-
-
யாழ். மாநகர சபையில் இன்று பலப்பரீட்சை பரபரப்பான அரசியல் சூழலில் யாழ்ப்பாண மாநகரசபையின் முதலாவது அமர்வு இன்று காலை நடைபெறவுள்ளது. கடந்த பெப்ரவரி 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் யாழ்ப்பாண மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் இன்று காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவதாக, மாநகர முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. 45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ். மாநகரசபையில், தனித்து ஆட்சியமைக்க குறைந்தபட்சம் 23 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. எனினும், எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மாநகர முதல்வர் தெரிவில் பலத்த எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. அதிகபட்சமாக 1…
-
- 19 replies
- 1.9k views
-
-
ரெண்டு வழக்கு. ரெண்டுமே தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் தலைவலிய கொடுக்கறதுதான். ஒன்று மூத்த வக்கீல் கருப்பன் மூலமா கிளம்புது. இலங்கைக்கு ஆயுத உதவி, ஆள் உதவி யாரை கேட்டுக் கொடுத்தீங்க. ஆயிரம்கோடி பணம் கொடுத்த நோக்கமென்ன...? இந்தியர்களோட வரிப்பணத்தை இப்படி கண்டமேனிக்கு செலவு செய்ய அதிகாரம் கொடுத்தது யாரு. மந்திரிசபையா? எப்போ கூடி முடிவெடுத்துச்சு. என்னவென்று முடிவெடித்தது. இல்ல, பிரதமரா...? இப்படி அவர் தனியா முடிவெடுக்க அதிகாரம் இருக்கா? அப்படீன்னு கேட்டு ஒரு வழக்கு போட்டிருக்காரு. எப்படியோ வழக்கு ஏற்கப்-பட்டிருக்கு. பிரதமருக்கும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் விளக்கம் தாங்கோ அப்படீன்னு உத்தரவு போட்டிருக்காரு நீதிபதி..." "இன்னொரு வழக்கு, திருச்சி வேலுசாமி போடுறது…
-
- 5 replies
- 1.9k views
-
-
என் இனிய தமிழீழ மக்களே... நமக்கு இது போராத காலம் இல்லை. இது நமக்கு புலிகள் கொடுத்துள்ள வைப்பக கருதுங்கள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலம் புலிகள் நம்மை ஆயுதப் போராட்டம் மூலம் நம் தமிழீழ தாயகம் கனவை நிறைவேற்ற போராடினார்கள்... தொடர்ச்சியான போராட்டங்களால் சிங்களவனை செயலிழக்க செய்து வந்தது. காலத்தின் ஓட்டத்தில் அந்தப் போராட்டத்திற்கும் ஒரு ஒய்வு தேவைப்பட்டது. அதலால் புலிகள் போராட்டத்தை நமது கைக்கு கைமாற்றி சென்று உள்ளது.. இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்... இது நமக்கான போராட்டம் , இது புலிகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் , இதை நாம் தொடராவிட்டால் வேறு யார் நமக்காக செய்ய முடியும். நாம் இனி குறை சொல்லவோ , இறந்து போன நம் உறவுகளுக்காக கவலைப் படவோ நேரமில்லை. இ…
-
- 2 replies
- 1.9k views
-
-
உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள…
-
- 8 replies
- 1.9k views
-
-
சம்பந்தன் ‐ அரியநேந்திரன் ‐ தோதமஸ் ஆகியோரை போட்டுத் தள்ள வேண்டும் ‐ மேயர் சிவகீதாவை பதவியில் இருந்து தூக்கி மட்டக்களப்பில் இருந்து துரத்த வேண்டும் ‐ கருணா தலமையிலான கூட்டத்தில் இனிய பாரதி சிபாரிசு‐ மட்டக்களப்பில் ஜனாதிபதி தோலியடைந்ததற்கான காரணம் என்பது குறித்து நேற்றைய தினம் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபைக்கு அருகிலுள்ள றெஸ்ற்கவுஸில் நடைபெற்ற இந்தக் கூட்டம் இரு பகுதியாக இடம்பெற்றதாக அமைச்சர் முரளீதரன் (கருணா) ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி ஆகியோருக்கு நெருக்கமான ஒருவர் GTNறிகுத் தெரிவித்தார். நண்பகல் வேளை இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் அமீர்அலி, அமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா முதலமைச்சர் சிவனேசதுரை சந்த…
-
- 3 replies
- 1.9k views
-
-
http://blog.sajeek.com/?p=444 எல்லோரும் சேர்ந்து கொள்ளியெடுத்து நெருப்பு மூட்டி பற்றியெரிய வைத்து விட்டு - இப்போ எரியூட்டிய கைகள் கூட தங்கள் கொள்ளிக் கட்டைகளை மறைத்து வைத்து விட்டு தனியே ஒரு கையை மட்டும் சுட்டிக் காட்டி அதோ அதோ அந்தக் கைதான் எரித்தது எனச் சொல்வதிலுள்ள நியாயம் என்ன ? அன்டன் பாலசிங்கம் அவர்களின் போரும் சமாதானமும் நூலில் இருந்து …. தமிழீழ அரசியல் போராட்ட வரலாற்றில் ஒரு இருள் படர்ந்த காலப் பகுதியாக கட்டவிழ்ந்தது 1987 அக்டோபர் மாதம். அக்டோபர் 2ம் நாள் பருத்தித்துறை கடற்பரப்பில் நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவம் இந்திய அரசின் கையாலாகாத் தனத்தாலும் சிங்கள அரசின் இனவெறிப் போக்கினாலும் பேரவலமாக மாறியது. புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளான குமரப்பா புலேந்திரன் ஆக…
-
- 4 replies
- 1.9k views
-
-
சட்டலைட் படங்கள் வெளிவந்த பிறகுதான் வெளிநாட்டு ஊடகங்கள் எமது செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
-
- 4 replies
- 1.9k views
-
-
09.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் எழில்காந்த் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நாளும், 09.09.2006ம் ஆண்டு முகமாலைப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கரன், லெப்.கேணல் குட்டி, லெப்.கேணல் அரிச்சந்திரன் உட்பட்ட மாவீரர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். படங்களைப் பெரிதாய்ப்பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்.
-
- 8 replies
- 1.9k views
-
-
இலங்கை கடற்படையினரால் மீனவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நேற்று மீனவர் சிலர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றிருந்த போது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் தங்க பாண்டியன் என்ற மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டார் . இந்த சம்பவத்தால் புதுக்கோட்டையில் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும் இறந்த மீனவர் குடும்பத்துக்கு முதல்வர் கருணாநிதி ஒரு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். ஆதாரம் தினமலர்
-
- 12 replies
- 1.9k views
-
-
பெரும் எண்ணிக்கையானோர் பங்கெடுத்த ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் மனிதநேயப் பேரணி இன்று மாலை சென்னை மன்றோ சிலையிலிருந்து புறப்பட்ட ஈழத்தமிழர் பாதுகாப்பை வலியுறுத்தும் வரலாற்றுச் சிறப்பு மிக்க மனிதநேயப் பேரணியில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி மாலை 3 மணிக்கு புறப்படும் என அறிவித்திருந்தபோதும், தொண்டர்களின் தொடர் வருகை காரணமாய் மாலை 4.30 மணிக்கே புறப்பட்டது. பேரணியை எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தலைமையேற்று நடத்த தமிழ்த் தேசிய பெருந்தலைவர் பழ.நெடுமாறன் முன்னிலை வகித்தார். பேரணியில் மருத்துவர் ந. சேதுராமன், பசீர்அகமது, நடிகர் மன்சுூர் அலிகான், அரிமாவளவன், ஓவியர் புகழேந்தி, மனிதம் அக்னி சுப்பிரமணியம், ஓவியர…
-
- 4 replies
- 1.9k views
-
-
வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை மூவர் ரயிலில் மோதி பலியாகியுள்ளனர். மேலும், குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். http://www.virakesari.lk/article/6221
-
- 22 replies
- 1.9k views
-
-
வெள்ளி 09-11-2007 17:42 மணி தமிழீழம் [தாயகன்] பிரெஞ்சு புலனாய்வுத்துறை கொழும்பு செல்லுகின்றது பிரான்ஸின் புலனாய்வுப் பிரிவின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று அடுத்த வாரம் கொழும்பு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் பற்றி ஆராய்வதற்கும், அது தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிக் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்தக்குழு கொழும்பு செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இடம்பெறும் இந்தச் சந்திப்பின் மூலம் இருநாட்டு புலனாய்வுத்துறைகளும் நெருங்கிய தொடர்பைப் பேண முடியுமென இரண்டு தரப்பும் கருதுவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பின் பெயர் குறிப்பிட விருமம்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவரை ஆதாரம்க…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஒரு காலத்தில் வெட்டுப்புள்ளியை அறிமுகம் செய்து தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறித்த சிங்களப் பேரினவாதிகள் இன்று அதே வெட்டுப்புள்ளியைப் பாவித்து சிங்கள மாணவர்களைக் கொண்டு தமிழ் மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பறிக்க முற்படுகின்றனர். கிழக்குப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி யாழ் பல்கலைக்கழகத்துக்கும் பெருவாரியான சிங்கள மாணவர்கள் அனைத்துப் பீடங்களுக்கும் தெரிவாகி இருப்பதும்.. பொருளாதார நெருக்கடியிலும் இராணுவ அச்சுறுத்தலின் கீழும் கல்வி பயிலும் தமிழ் மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்பு இதனால் இழக்கப்படுவதும் கண்கூடாகியுள்ள போதும்.. தமிழர்கள் மத்தியில் இருந்து இது தொடர்பில் எந்த ஆட்சேபனைகளும் கிளம்பாதது வியப்பளிப்பதாகவே இருக்கிறது..! உதாரணத்துக்கு யா…
-
- 6 replies
- 1.9k views
-
-
சீமானின் அடுத்த உறுமல்... ''அரசியல் இயக்கம் ஆரம்பம்..'' தேர்தல் காலம் வரை உரத்து முழங்கிய ஈழ ஆதரவுக் குரல்கள் இப்போது எங்கே போய் விட்டன என்பது தெரியவில்லை. அதேநேரம் ஈழத்தின் கோர வீழ்ச்சி நிஜமான தமிழுணர்வுக் குரல்களையும் விம்மியடங்க வைத்து விட்டது. இதற்கு நடுவில், தொடர்ந்து ஈழ விடிவுக்காக குரல் உயர்த்திக் கொண்டிருக் கிற இயக்குநர் சீமான், வருகிற 18-ம் தேதி ஊர்வலம், பொதுக்கூட்டம் என நடத்தி மதுரையை கலங்கடிக்கத் தயாராகி விட்டார். 'அறுத்தெறிவோம் வாரீர்...' என உணர்வாளர் களை ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் சீமான், அடுத்தகட்டமாக அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அனல் கிளம்பி இருக்கும் நிலையில் நாம் அவரை சந்தித்தோம். ''பேரணி, பொதுக்கூட்டம் என தி…
-
- 4 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவின் ஐக்கிய நாடுகளுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியும் போர்க்குற்றவாளியுமான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இராஜதந்திரி என்பதால், ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள வியன்னா ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் சலுகைகள், நியமங்கள் ஊடாக அவர் பாதுகாக்கப்படுவார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. . மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மற்றும் அவருக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அனுப்பியுள்ள அழைப்பாணை என்பவற்றை தாம் கவனத்தில் எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். . ஐக்கிய நாடுகள் வழங்கும் இராஜதந்திரிகளுக்கான பாதுகாப்பு மற்றும் வியன்னா உடன்படிக்கை கூற்றுக்கள் என்பன…
-
- 5 replies
- 1.9k views
-
-
வடக்கெங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்! 18 மே 2013 இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பேரவலத்தில் ஆகுதியான அனைவருக்குமான 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளினில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது. யாழ்.மாவட்டத்திற்கான நிகழ்வு நகரிலுள்ள தமிழரசுக்கட்சி வளவினுள் இன்று மாலை நடைபெற்றிருந்தது.நூற்றுக்கும் அதிகமான மக்கள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற அங்கத்தவர்கள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகளென பெருமனவானோர் பங்கெடுத்திருந்தனர். பேராசிரியர் சிற்றம்பலம் தலைமையினில் இவ்வஞ்சலி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்திற்கான நினைவேந்தல் கூட்டம…
-
- 0 replies
- 1.9k views
-
-
பெரும்போர் மூளும் அபாயம்! சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்! அடுத்த போர் சிங்களப் பகுதியிலேயே நடக்கும்! - பழ. நெடுமாறன் கடந்த ஐந்தாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த போர் நிறுத்த உடன்பாட்டினை தன்னிச்சையாக சிங்கள அரசு நீக்கிக்கொண்டுள்ளது. இதற்கு உலக அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐய்.நா. பேரவையின் பொதுச் செயலாளரும்-அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் பெரும் போர் மூண்டெழும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. விடுதலைப்புலிகள் இறுதிக் கட்டப்போருக்குத் தயாராகி வருகின்றனர். சிங்கள வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொ…
-
- 1 reply
- 1.9k views
-
-
பலாலி விமான நிலையம் குறித்து ஆராய, இந்திய குழு யாழ்ப்பாணம் செல்கிறது… யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் குறித்து ஆராய்வதற்காக இந்திய குழுவொன்று அங்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய ஏற்கனவே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து ஆராய்வதற்காக மூன்று இந்திய அதிகாரிகளை கொண்ட குழுவினர் இன்று (21.08.18) யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளதாக விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் உதவியுடன், பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக, இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்…
-
- 14 replies
- 1.9k views
-