ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
செப்ரெம்பர் மாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த வடமாகாணசபைத் தேர்தலை, அரசு எதிர்வரும் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. வடமாகாண சபைத் தேர்தலையும், மேல் மாகாண சபைத் தேர்தலையும் ஒன்றாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சர்வதேச நாடுகள், வடமாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த வருடம் வரவுசெலவு திட்டச் சமர்பிப்பின்போது, வடமாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறும் என்று ஜனாதிபதி அறிவித்திருந்தார். இந்த நிலையில் சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான அழுத்தம் காரணமாகவும், இந்த மாத இறுதியில் இடம் பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டும…
-
- 9 replies
- 1.2k views
-
-
தைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும்.இந்நிகழ்வானது இவ்வருடம் ஜனவரிமாதம் 14ஆம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது. இவ்விழா சங்க காலத்தில் வேளாண்மைக்கு வேண்டிய மழை நீரையும், சூரிய ஒளியையும், காற்றையும் தேவைக்கேற்ப வழங்கி தம்மையும், நாட்டையும் செழிப்புடன் வாழ உதவிய இயற்…
-
- 9 replies
- 3.1k views
-
-
கனகராசா சரவணன் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இதனை பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர். மணல் லொறியொன்றின் சாரதியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற போது, ராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என தெரியவந்துள்ளது. இராஜா…
-
- 9 replies
- 925 views
-
-
முன்னாள் போராளிகளின் விபரம் திடீரென சேகரிப்பு செ.கீதாஞ்சன் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னாள் போராளிகளின் முழுமையான விபரங்களை திரட்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. புனர்வாழ்வளிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்பிலான அடிப்படை தகவல்களை சேகரித்தல் என்ற தகவலுக்கு அமைய நீதி அமைச்சின் கீழ் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. வாழ்வாதார உதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தினால் இந்த விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. https…
-
- 9 replies
- 828 views
- 1 follower
-
-
வகுப்பறைகளில் மயங்கி விழுதல்... இராணுவத்தினரின் எஞ்சிய உணவுக்கு கையேந்துதல்: பெரும் அவலத்தில் யாழ். சிறார்கள் [ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 19:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பாரிய பட்டினிச்சாவு அவலத்தை எதிர்கொண்டிருப்பதாக "வீரகேசரி" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. "வீரகேசரி" நாளேட்டில் வெளியான செய்தி விவரம்: வடமராட்சி, தீவகம், தென்மராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உலக உணவுத்திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தற்போது தடைபட்டுள்ளது. பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான போசாக்கு உணவு எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சமைத்த உணவும் வழங்கப்படுவதில்லை. சிறுவர் பாதுகாப்பு நிதியம் மற்றும் யுனிசெஃப் போன்ற சி…
-
- 9 replies
- 1.6k views
-
-
2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடத்தப்படவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பெஃப்ரல் அமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் …
-
-
- 9 replies
- 594 views
- 1 follower
-
-
மொனறாகல தாக்குதலை நடத்தியோரிடம் நவீன ரக தொலைத் தொடர்புக்கருவிகள்: "சண்டே ரைம்ஸ்" [ஞாயிற்றுக்கிழமை, 20 சனவரி 2008, 07:27 மு.ப ஈழம்] [பி.கெளரி] சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் நவீன ரக தொலைத்தொடர்புக் கருவிகளை வைத்திருந்தனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் எழுதியவற்றின் முக்கிய பகுதிகள்: கொழும்பில் இருந்து 238.4 கி.மீ தூரத்தில் மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தல பகுதியில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கடந்த செவ்வாய்கிழமை (15.01.08) இராணுவச் சீருடையுடன் மூன்று பேர் …
-
- 9 replies
- 2.5k views
-
-
வடக்கு - கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை அரசு மீறக்குடியேற்றத் தவிறினால், தாம் அவர்களை குடியேற்றப்போவதாக, ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. சிங்களவர்களை குடியேற்றுமாறு சிறீலங்கா அரசிடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், அரசு அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பதாக ஹெல உறுமயளவின் பொதுச்செயலாளர் ஓமல்பே சோபித தேரர் கூறினார். தமிழ் பேசும் மக்களின் தாயக பூமியான வடக்கு-கிழக்கில் கடந்த கால பேரினவாத அரசுகளால் பலவந்தமாகக் குடியேற்றப்பட்ட சிங்களவர்களையே மீளக் குடியேற்ற வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய அழைப்பு விடுத்திருக்கின்றது. நன்றி : பதிவு
-
- 9 replies
- 2.7k views
-
-
அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக குற்றஞ் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டதேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு கடூழிய சிறைத் தண்டணை வழங்கப்படும் என அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தேசிய செயட்பட்டளர் கருணாகரன் கந்தசாமி என்பருக்கு 20 அண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான இந்நபர் ஆறு வருடங்களிற்கு முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அதிக பட்ச தண்டனை வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இவர் 2000ஆம் ஆண்டு நடுப் பகுதியில் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்ததாக குற்றஞ் சாட்டப்பட்ட…
-
- 9 replies
- 2k views
-
-
சுண்ணாகம் மின் உற்பத்தி நிலையத்தைத் திறப்பதற்கு ஜனாதிபதி யாழ் செல்கிறார் புதன், 01 ஒக்ரோபர் 2008 [செய்தியாளர் மயூரன்] யாழ்ப்பாணம் சுண்ணாகத்தில் திறக்கப்படவுள்ள மின்சார உற்பத்தி நிலையத்தைத் திறந்து வைப்பதற்காக மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் செல்லவுள்ளார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 5 மணி நேரம் மின்வெட்டுக்கு உள்ளாகின்ற யாழ் குடாநாட்டுக்குத் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்கும் நோக்குடன், 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் 36 மெகாவோல்ட் மின்சார உற்பத்தியை நிலையம் சுண்ணாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. புதிதாக அமைக்கப்பட்ட மின்சார உற்பத்தி நிலையத்தை இம்மாதம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திறந்து வைக்க உள்ளார் என சிறீலங்கா ஊடகத்துறை அமைச…
-
- 9 replies
- 2.5k views
-
-
காணாமல் போன 9 வயது சிறுமியின் சடலம் சதுப்பு நிலத்திலிருந்து கண்டெடுப்பு 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES களுத்துறை - பண்டாரகம - அட்டுலுகம பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அட்டுலுகம பகுதியிலுள்ள சதுப்பு நிலமொன்றில் இருந்து இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒன்பது வயதான இந்த சிறுமி கொலை செய்யப்பட்டு, சடலம் குறிப்பிட்ட பகுதிக்குக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் வெளியிடுகின்றனர். வீட்டிலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு, கோழி இறைச்சி கொள்வனவு செய்வதற்காக நேற்று முற்பக…
-
- 9 replies
- 587 views
- 1 follower
-
-
மேல்மாகணசபை உறுப்பிணர் ஹிருனிகா பிரேமசந்திர, தனது தாயுடன் வெளிநாடொன்றுக்குப் பயணமாகியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த, முல்லேரியா பிரதேச சபைத் தலைவர் சோலங்க ஆராச்சி, 'எனது தங்கை ஹிருனிகா எதிர்க் கட்சியில் இணைந்து கொண்டதால், அவருக்கு அரசாங்க தரப்பிலிருந்து பல இன்னல்களும் கஷ்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இதனால் அவர் உடன் வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் சில நாட்களின் பின் நாடு திரும்பி, மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொள்வார்' என தெரிவித்தார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114398/language/ta-IN/article.aspx
-
- 9 replies
- 872 views
-
-
மகிந்தரின் புதல்வர் நாமல் இராஜபக்ஷவின் சுவிஸ் வங்கி கணக்கில் 2000 மில்லியன் டொலர்கள் Thursday, September 1, 2011, 19:03 போர்க்குற்றவாழி,சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பல்வேறு நிறுவனங்களையும் அமைப்புகளை நடத்தி வருபவருமான நாமல் ராஜபக்ஷவின் சுவிஸ் வங்கிக் கணக்கில் இரண்டாயிரம் மில்லியன் டாலர்கள் அளவில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. அரச சொத்துகளை விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த பணமும் மற்றும் கப்பம்;அரச நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட பணமுமாகவே இவ்வாறு சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது. http://www.tamilthai.com/?p=25660
-
- 9 replies
- 1.8k views
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் களமிறங்கவுள்ளதாக அக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அறிவித்துள்ளார். வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சிவஞானம் சிறீதரன், தான் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளார். உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்களை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று, யாழ். நல்லூரில் உள்ள சுமந்திர…
-
-
- 9 replies
- 639 views
- 2 followers
-
-
போர் நிறுத்தம் ஒன்றுக்குத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் தாயாரில்லை என சிறீலங்காப் பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க கூறியுள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- போர் நிறுத்தம் ஒன்றுக்கு நாம் தயாரில்லை. இதனால் வரும் எந்த சவாலையும் நாம் எதிர்கொள்ளத் தாயாக உள்ளோம். விடுதலைப் புலிகளால் யுத்த நிறுத்த அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதும் அதனுள் நாம் சிக்கிக் கொள்ளமாட்டோம்.பயங்கரவாதம் இன்று எம்மிடம் சிக்கியுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை இல்லாது அழிக்க வேண…
-
- 9 replies
- 1.6k views
-
-
இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக…
-
- 9 replies
- 716 views
-
-
Published By: DIGITAL DESK 3 05 JUN, 2023 | 12:27 PM (எம்.மனோசித்ரா) சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு…
-
- 9 replies
- 575 views
- 1 follower
-
-
http://naathamnews.com/?p=4598 சனல்-4க்கு பதிலடி என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசு இன்று செவ்வாய்கிழமை விவரணப்படமொன்றை திரையிடவுள்ள நிலையில் சிறிலங்கா அரசின் கபடத்தனங்களை அம்பலப்படுத்தி ஐ.நா மனித உரிமைச் சபையில் தமிழர்களுக்கான நீதியை நிலைநாட்டுவோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற உப மாநாடொன்றில் சிங்களக் காடையர்கள் நடத்திய அடாவடித்தனம் கடும் பரபரப்பை ஐ.நா மனித உரிமைச் சபையில் ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறிலங்கா அரகு இந்த விவரண்படத்தினை திரையிட முற்பட்டுள்ளது. இந்நிலையில் ஈழத்தமிழனத்தின் மீதான இனவழிப்பை மூடிமறைத்து சிங்கள தேசத்துக்கான ஆதரவினைத் திரட்ட முனையும் சிறிலங்கா அரசின் கபடத்தனத்தை அம்பலப்படுத்துவோம் என நா.த.அ…
-
- 9 replies
- 1.1k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் முரண்பாடுகள் களையப்படும் - விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் நிலவும் முரண்பாடுகள் களையப்படும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக கட்சி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்பு தலைவர்களுக்கும் யாழ்ப்பாணத் தலைவர்களுக்கும் இடையில் கொள்கை அடிப்படையிலான முரண்பாடுகள் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு இடங்களிலிருந்தும் தமிழர் பிரச்சினை வௌ;வேறு விதமாக நோக்கப்படுகி;றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்ச…
-
- 9 replies
- 738 views
-
-
யுத்த நடவடிக்கைகளில் வெளிநாட்டு படையினர் சம்பந்தப்படவில்லை - அரசாங்கம் அறிவிப்பு வீரகேசரி நாளேடு 9/11/2008 9:07:17 PM - இலங்கையில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் இந்திய படையினரோ, வெளிநாட்டு படையினரோ சம்பந்தப்படவில்லை. எனினும், தேசிய பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அயல் நாடான இந்தியா அதிநவீன ராடர் கருவியை வழங்கியமையையிட்டு இந்தியாவுக்கு அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். வன்னியிலிருந்து சர்வதேச தொண்டு நிறுவனங்களை வெளியேறுமாறு கோரப்பட்டமை தற்காலிக ஏற்பாடாகும். அப்பிரதேசத்தில் நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் பணிகளை மேற்கொள்வதற்கு தொண்டு நிறுவனங்களுக்கு இடமளிக்கப்படும் என…
-
- 9 replies
- 1.9k views
-
-
சீனாவில் கோட்டாபய ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2012 23:37 0 COMMENTS சீனாவும் இலங்கையும் பாதுகாப்பு ஒத்துழைப்பை கட்டியெழுப்புவதாக இன்றைய உயர்மட்ட கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறது. இருநாட்டு இராணுவ உறவினை உறுதி செய்து, ஒத்துழைப்பை அதிகரித்து நற்புறவை பேணவுள்ளதாகவும் இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் லியாங் கௌங்லிக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ் உள்ளிட்ட உயர்மட்ட குழுவுக்குமிடையில் பீஜிங்கில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்படி முடிவுகள் எட்டப்பட்டன. சீனாவில் நடைபெறுகின்ற ஒன்பதாவது சர்வதேச விமான மற்றும் விண்வெளி கண்காட்சியில் கலந்துகொள்வதற்காகவே பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சீனாவுக்கு…
-
- 9 replies
- 1.1k views
-
-
14.11.2005 அன்று அரசியற்பணிக்காக படையினரின் வல்வளைப்பில் உள்ள அக்கரைப்பற்றிற்குச் சென்றவேளை ஒட்டுக்குழுவினர் நடாத்திய தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகிலன்(சுரேஸ்) அவர்களின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். லெப்.கேணல் முகிலன் அவர்களுடன் வெள்ளை என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 9 replies
- 1.6k views
-
-
மனித உரிமைகள் குறித்த பேச்சுக்களில் சிறிலங்கா உடனடியாக ஈடுபட வேண்டும் – ஜோன் கெரி JAN 12, 2015 | 13:07by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் மனித உரிமைகள் விவகாரங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் விரைவில் பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், குஜராத் மாநிலம் காந்திநகரில் செய்தியாளர்களிடம் பேசும் போதே இதனைத் தெரிவித்துள்ளார். நேற்றிரவு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வாழ்த்து தெரிவித்திருந்தார் ஜோன் கெரி. இந்த நிலையில் இன்று சிறிலங்கா விவகாரம் குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், சிறிலங்காவின…
-
- 9 replies
- 730 views
-
-
கதிர்காமம் சென்ற பெண்ணை இராணுவத்தினரே பலத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்! சிறுத்தை கடித்து மரணமானதாக முன்னர் தெரிவிக்கப்பட்ட பெண்ணை சிங்கள இராணுவத்தினரே பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் படுகொலை செய்துள்ளனர். குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது உறவினர்களால் தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற பெண் ஒருவரை யால காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலி கடித்துக்குதறியதில் அப்பெண் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக முன்னர் செய்தி வெளியாகியிருந்தது. ஆயினும் இவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் சிறுத்தையோ அல்லது ஏதாவது மிருகமோ தாக்கியதால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். குறித்தபெண் பாலியல் பலாத்காரம் செ…
-
- 9 replies
- 2.7k views
-
-
கப்டன் குணாளனின் வித்துடல் விதைப்பு [ த.இன்பன் ] - [ ஓகஸ்ட் 11, 2007 - 06:04 AM - GMT ] கடந்த ஏழாம் நாள் வவுனியா நகரப்பகுதியில் சிறிலங்கா படையினரால் மறிக்கப்பட்டவேளை தற்காப்பு அங்கியை வெடிக்க வைத்து வீரச்சாவைத் தழுவிய கப்டன் குணாளனின் வித்துடல் முழு படைய மதிப்புடன் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூங்கிலாறு மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட மாவீரர் மண்டபத்தில் இம் மாவீரரின் வித்துடல் வைக்கப்பட்டு வீரவணக்கக் கூட்டம் நடைபெற்றது. பொதுச்சுடரினை போராளி பிரபா ஏற்றினார். வித்துடலுக்கான ஈகைச்சுடரினை தளபதி ஜனார்த்தனன் ஏற்றினார். மலர் மாலையை போராளி பேரின்பம் சூட்டினாரர். வீரவணக்க உரைகளை போராளி சங்கீதன், வவுனியா மாவட்ட அரசியற்துறை…
-
- 9 replies
- 2k views
-