Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது. “நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என…

    • 14 replies
    • 1.9k views
  2. மல்லாவியை சொந்த இடமாக கொண்ட குணலிங்கம் - உசாளினி (இயக்க பெயர் - அகல்விழி. வயது 19 ) இவர் ஒரு புதிய போராளியாவார் ..இராணுவ கொடுமைகள் காரணமாக 2008 / 05 ம் மாதமளவிலே போராளியாக இணைந்தவர் . தமிழீழ தொலை காட்சி செய்தி சேகரிப்பாளராக பணி புரிந்துள்ளார் என உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.http://uyirambukal.blogspot.com/2010/12/blog-post_5570.html

    • 0 replies
    • 1.9k views
  3. விடுதலைப் புலிகளுக்கு அப்பால்: ராஜீவ் காந்தி கொலைப் பின்னணி – நூல் வெளியீடு ராஜீவ் காந்தி. இவரது மரணத்திற்காக 21 ஆண்டுகளாக 7 பேரை தூக்குக் கொட்டடியிலும், சிறைக் கொட்டடியிலும் வைத்திருந்தாலும், இந்த வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால், இன்றும் விசாரிக்கப் பட்டு வருகிறது. இன்றும் விசாரணையில் இருக்கும் ஒரு வழக்கில் 21 ஆண்டுகளாக 7 பேரை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் ? மேலும், ராஜீவ் கொலையில் இந்த 7 பேர்தான் உண்மைக் குற்றவளிகளா ? இதில் வேறு யாருக்கும் தொடர்பே இல்லையா ? இதன் பின்னணியில் உள்ள சதிதான் என்ன என்ற கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில், “விடுதலைப் புலிகளுக்கு அப்பால் ராஜீவ் கொலைப் பின்னணி – காலடிச் சுவடுகள்” என்ற புத்தகம் வெளிவருகிறது. …

  4. சோமாலிலாந்து என்று இன்று அழைக்கப்படும் சோமாலியின் வடபகுதி சோமாலியாவில் இருந்து பிரிவதற்கான போராட்டத்தை 1988 இல் ஆரம்பித்திருந்தது. சோமாலிலாந்து சர்வதேச அங்கீகாரங்களைப் பெறாத ஒரு நடைமுறை அரசைக் கொண்டிருக்கிறது. தற்பொழுது சோமாலியாவின் தென்பகுதிகளில் அதிகரித்துள்ள யுத்தம் அதில் எத்தியோப்பியாவின் மற்றும் அமெரிக்காவின் ஈடுபாடுகள் யாவரும் அறிந்ததே. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ள சோமாலியாவில் இருந்து மக்கள் தற்பொழுது ஆயிரக்கணக்கில் சேமாலியாவில் இருந்து பிரிந்து சர்வதேச அங்கீகாரம் இல்லாதிருந்தும் வெற்றிகரமாக இயங்கும் சோமாலிலாந்தினுள் பாதுகாப்பு புகலிடம் தேடிச் செல்கிறார்கள். சோமாலிலாந்தின் இந்த வெற்றியின் இரகசியத்தைப் பற்றி அல்ஜசீரா ஆங்கில சேவையின் விவரணம் People &…

  5. சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இ…

  6. சம்பூரை சில நாட்களில் கைப்பற்றிவிடுவோம்: சரத் பொன்சேகா [வியாழக்கிழமை, 31 ஓகஸ்ட் 2006, 06:11 ஈழம்] [கொழும்பு நிருபர்] சம்பூரை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து எதிர்வரும் சில நாட்களில் கைப்பற்றிவிடுவோம் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது குறித்து சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது: யுத்தகளம் முக்கியத்துவம் வாய்ந்த அப்பகுதியில் இராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. http://www.eelampage.com/?cn=28554 விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முன்னர் இருந்த கட்டைப்பறிச்சான் எமது கட்டுப்பாட்டில் வந்துள்ளது. சம்பூரை நோக்கி நாம் நகர்ந்துள்ளதால் அங்கிருந்து விடுதலைப் புலிகள் வெளியேறுகின்ற…

  7. எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க வேண்டும், வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்கத் தேவையில்லை என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கை ஒன்றை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிடுகையில், “விடுதலைப் புலிகள், வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதில்லை. வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் நிதி சேகரித்து வந்ததே இதற்கு காரணம். தற்போது வெளிநாட்டவர்களுக்கு தேவையான வகையில் நாடு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் தெற்காசியாவில் நடந்த மிகப் பெரிய தாக்குதல். இந்த தாக்குதலில் வெளிநாட்டவர்கள் கொல்…

  8. Posted on : Mon Jun 18 8:04:25 EEST 2007 கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு வாய்ப்பு தலைநகர் கொழும்பிலிருந்து பொலி ஸாராலும், படையினராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஈழத்தமிழர்கள், அந் தக் கொடூரத்தின்போது பெரும் மன உளைச் சலையும் அசௌகரியங்களையும் அனு பவித்தார்களாயினும், "இழப்பிலும் நன்மை' என்பது போல இச்சம்பவம் அவர்களுக்கு நல்லதோர் பிரகாசமான எதிர்காலத்துக்கும் வழிகோலியிருப்பதாகச் சுட்டிக்காட்டப் படுகின்றது. இவ்வாறு தலைநகர் விடுதிகளிலி ருந்து விடியற்காலை வேளை, அச்சுறுத்த லுக்கு மத்தியில் பலவந்தமாக வெளியேற் றப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், மேற்கு நாடு ஒன்றுக்குச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து க…

  9. வன்னி மீது இறுகி வரும் சிறீலாங்காவின் பொருளாதாரத்தடை. அத்தியாவசிய உணவுப் பொருட்களிற்கு அதிகரித்து வரும் தட்டுப்பாடு. http://www.ltteps.org/?view=2129&folder=2

  10. யாழ்ப்பாணத்தில் கோத்தபாய குழுவினர் 07.08.2008 / நிருபர் எல்லாளன் யாழ்குடாநாட்டிற்கு சிறிலங்காவின் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா மற்றும் கோத்தபாய ராஜபக்ச டொனாட் பேரேரா ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று காலை 10.00 மணியளவில் விஜயம் செய்துள்ளனர் இங்கு சென்ற இவர்கள் யாழ்குடா படைத்தளபதி டிஸ் சந்திரசிறியைச் சந்தித்து களநிலமைகள் குறித்து ஆராய்ந்ததுடன் யாழ்குடாநாட்டில் களநிலைமைகளில் மாற்றம் ஏற்படாதவாறு பார்க்குமாறும் பணித்துள்ளனர். அத்துடன் பலாலியிலிருந்து இக்குழுவினர் யாழ்நகருக்கும் காரைநகர் கடற்படைத்தளத்திற்கும் விஜயம்செய்து படைஉயர்மட்டதளபதிகளுடன் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசித்தாக தெரிவிக்கப்படுகிறது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=…

  11. சென்னை மறைமலைநகரில் கடந்த நான்கு தினங்களாக, ஈழத்தமிழர்களைப்பாதுகாக்க இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்துமாறு, இந்திய மத்திய அரசைக்கோரி, நடாத்தி வந்த உண்ணாநிலைப்போராட்டத்தினை, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ், உட்பட பல்வேறு தலைவர்களும் கேட்டுக்கொண்டதன்பேரில் தனது போராட்டத்தினை நிறைவு செய்தார். அவருக்கு மருத்துவர் ராமதாஸ் பழரசம் கொடுத்து போரட்டத்தை நிறைவு செய்து வைத்தார். போராட்டத்தை நிறைவு செய்வதற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரமளவில் மிக நீண்ட விளக்கவுரை ஆற்றிய தொல் திருமாவளவன், இந்த அறப்போராட்டம் முடிக்கப்பட்டாலும், தமிழர்களின் மனநிலையை மதிக்காத, இந்திய மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும், தமிழர்களின் உணர்வுகளைப் புரிய வைக்குவிதத்தில் …

    • 1 reply
    • 1.9k views
  12. தமிழீழ விடுதலை புலிகளை மீள உருவாக்க முயன்றதாக 2014ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட கோபி எனும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனின் கிளிநொச்சி – இயக்கச்சி, பனிக்கையடி பகுதியில் உள்ள வீட்டில் இன்று (03) பல்வேறு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் கோபியின் தாய் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் பரந்தன் பகுதியில் பஸ் ஒன்றில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டு, அது தொடர்பில் தம்பதி ஒன்றும் கைது செய்யப்பட்டது. அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து கோபியின் வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட வெடி பொருட்கள் மீட்கப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இதன்போது கோபியின் தாயும், மற்றுமொரு வயோதிப பெண்ணும் கைது செய்யப்பட்டனர். இதன்படி தயானுஜன் அம்பிகா (35-வயது),…

    • 5 replies
    • 1.9k views
  13. (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார். …

    • 10 replies
    • 1.9k views
  14. புலிகளின் திடீர் யாழ். தாக்குதலின் எதிர்விளைவுகள் என்ன? யாழ்ப்பாணத்தில் ஆக்கிரமித்து நிற்கும் சிறிலங்கா இராணுவத்தின் பலாலி உள்ளிட்ட 3 பிரதான தளங்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்தியிருக்கும் திடீர் எறிகணைத் தாக்குதல்களானது களத்தில் இராணுவத்தினருக்கு பாரிய உளவியல் தாக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதை விவரிக்கிறது இந்த ஆய்வு. யாழ். குடாநாட்டை ஆக்கிரமித்திருக்கும் சிறிலங்கா இராணுவத்தினர் அனைவருக்குமான கட்டளை மையமாகப் பலாலியும் வழங்கல் மையமாக பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகியனவும் இருக்கின்றன. அண்மையில்தான் சிறிலங்கா இராணுவத்தினருடைய கடற்படைத் தளமாக மயிலிட்டி மாற்றப்பட்டு முதன்மையான வழங்கல் துறைமுகமாக உருவாக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் காங்கேசன்த…

    • 1 reply
    • 1.9k views
  15. புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் சிறிலங்கா படையினருக்கு ஏற்பட்ட அதிக உயிரிழப்புக்கள் மற்றும் படையப் பொருட்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.9k views
  16. படையினரின் பலப்பரீட்சைக் களமாக மாறியுள்ள புதுக்குடியிருப்புச் சமர்க்களம் [ ஞாயிற்றுக்கிழமை, 08 மார்ச் 2009, 12:45.30 PM GMT +05:30 ] [ வீரகேசரி ] வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள சுமார் 45 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு ஆயிரக்கணக்கான படையினர் தமது பலத்தைப் பரீட்சிக்கின்ற களமாகி இருக்கிறது. விடுதலைப்புலிகளின் ஆட்பலம் 600 ஐ விடவும் குறைந்து போய் விட்டதாக படைத்தரப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தது. இந்தநிலையில் புலிகளிடம் இருந்து எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் தாக்குதல்களை இராணுவம் தீவிரப்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் படைத்தரப்பு புதுக்குடியிருப்புச் சந்திப்பகுதியை கைப்பற்றியது. பல வாரங்களாக புதுக்குடியிருப்புக்கான சமர் நீடித்து வந்த நிலை…

    • 0 replies
    • 1.9k views
  17. பேதங்களை மறந்து சம்பந்தனின் இல்லத்திற்கு வாருங்கள் : சுமந்திரன் தமிழ் கட்சிகளுக்கு பகிரங்க அழைப்பு 13 NOV, 2022 | 08:52 PM எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்துவதற்காக கட்சி வேறுபாடுகளை புறம் வைத்து அனைவரையும் உரையாடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சம்பந்தனின் கொழும்பிலுள்ள இல்லத்தில் ஒன்றுகூடுமாறு வடகிழக்கு தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடகிழக்கில் சமஷ்டி அடிப்படைய…

  18. தனக்கு ஏற்பட்ட ஆபத்தைத் தடுக்க பேராபத்தை நாடுகிறது இலங்கை! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-04-29 07:21:44| யாழ்ப்பாணம்] இலங்கையில் இடம்பெற்ற வன்னிப் போரின் போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த ஆலோசனைக் குழு, தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அறிக்கை முழுமையாக வெளிவருவ தைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசு கடும் பிரயத்தனம் செய்த நிலையில், அறிக்கை முழுமையாக வெளிவந்தாயிற்று.வன்னியில் நடந்த யுத்தக் குற்றம் தொடர் பில் இதுவரை சர்வதேச ஊடகங்களும், மனித வுரிமை அமைப்புக்களுமே தகவல்களை வெளியிட்டு வந்தன. இப்போது ஐ.நா. சபையும் போர்க் குற்றம் தொடர்பில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஐ.நா. வெளியிட்…

    • 2 replies
    • 1.9k views
  19. விடுதலைப் புலிகள் ஏட்டுக்காக சிறி. இந்திரகுமார் எழுதிய - எல்லாளன் இராச்சியத்தில் பிரபாகரனின் வீரர்கள்... http://www.tamilnaatham.com/articles/2008/...mar20080307.htm

    • 8 replies
    • 1.9k views
  20. கோழைகள் வீரர்களை வென்றது எப்படி? Posted by PUTHIYATHENRAL , at 11:04 AM புலிகளுக்கு எதிரான போரைத் தனித்து நின்றே நடத்தினோம் என்று இலங்கை அரசு அவ்வப்போது பெருமைப்பட்டுக் கொள்ளும் நிலையில், இந்தப் போர் உலகநாடுகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது என்ற உண்மை இப்போது மெல்ல, மெல்ல வெளியே வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, இந்தப் போருக்கு இந்தியா கணிசமான உதவிகளை வழங்கியுள்ளது. கடந்த வாரம், இந்தியாவின் பி.ரி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில் புலிகளுக்கு எதிரான போரின்போது இந்தியா ராடர்களையும், விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும், கடற்படைக் கப்பல்களையும் வழங்கியதை உறுதிப்படுத்தியது. விடுதலைப்புலிகளின் வான் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக இந்தியா இந்த உதவிகளை வழங்கியிரு…

  21. தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்களின் மூலம் பாதுகாப்புத் தரப்பின் மீது இராணுவ ரீதியான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியாதெனப் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் அடைந்துவரும் தொடர் தோல்விகளை மூடி மறைப்பதற்காகவும், ஆதரவு வழங்கும் தரப்பினரைத் திருப்திப்படுத்தவுமே இந்தத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இதுவரையில் 6 தடவைகள் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாகவும், விமானப்படையினர் 6000 தடவைக்கு மேல் அவர்கள் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதகாவும் கோத்தபாய சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகளின் இலகுரக விமானங்களின் மூலம் 30 கிலோ எடையுடைய இரண்டு கு…

    • 8 replies
    • 1.9k views
  22. [size=4]வன்னி மக்கள் தொடர்பில் இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னரும் அதற்கு முன்னரும் இலங்கை அரசாங்கத்தினால் பதியப்பட்ட தரவுகளை ஒப்பிட்டு பார்க்குமிடத்து 1 இலட்சத்து 46ஆயிரத்து 676பேர் கணக்கில் அடங்கவில்லை என்று ஐ.நா உள்ளக பரிசீலனைக் குழு, தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் பின்னர் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் யுத்தத்துக்கு முன்னர் வன்னியில் காணப்பட்டதாகக் கூறப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கைக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. இந்த முரண்பாடு தொடர்பில் குழுவின் உறுப்பினர்களிடையே வாதவிவாதங்கள் இடம்பெற்றதாகவும் இவ்வாறு கணக்கில் வராத மக்கள் தொகையினர் யுத்த காலகட்டத்தின் போது உயிரிழந்தி…

  23. நாரந்தனையில் ஈபிடிபி துணை இராணுவக் குழுவின் மூத்த உறுப்பினர் சடலமாக மீட்பு. சிறீலங்கா துணை இராணுவக் குழுவான ஈபிடிபியின் மூத்த உறுப்பினர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை யாழ் ஊர்காவற்துறை நாரந்தனை அம்பலவாணர் வீதியில் சடலம் மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை சாம்பல்தீவு ஆத்திமோட்டையைச் சொந்தஇடமாகக் கொண்ட மூன்று பிள்ளைகளின் தந்தையான 30 அகவையுடைய சித்திரவடிவேல் சாந்தகுமார் (பஸ்டின்) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் நேற்று ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் அடிகாயங்களுடன் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளா -Pathivu-

  24. தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் சோழ மாமன்னன் இராசஇராசன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது. முள்ளி வாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாகவும், ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்துத் தியாகம் செய்த முத்துக்குமார் உட்பட 19 ஈகிகளின் நினைவாகவும் சிற்ப நுணுக்கம் மிகுந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. இராசஇராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே இரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில…

  25. வெள்ளவத்தையில் இன்று இரவு இளைஞர் ஒருவர் 7ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து தற்கொலை செய்துள்ளார். இவர் தங்கியிருந்த தொடர்மாடி தீடீரெனப் பொலீஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதை அடுத்து இவர் 7 ஆவது மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளதாககத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் தங்கியிருந்த தொடர்மாடியில் இருந்து தாம் சில பொருள்களைக் கைப்பற்றியுள்ளதாகப் பொலீஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் பற்றிய விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

    • 0 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.