ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
இலங்கையில் விரைவில் ஆட்சி மாற்றம்.! இலங்கையில் விரைவில் ஆட்சியைப் பிடித்து காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேசிய சுதந்திர முன்னணி கட்சியினர் சார்பில் விகாரமகாதேவி பூங்கா அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மகிந்த ராஜபக்சே, குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இலங்கை அரசு பொறுப்பேற்காமல் தப்பிக்க நினைப்பதாக குற்றம்சாட்டினார். இலங்கையில் போர் காலம் முடிந்து 10 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக வசித்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது அந்த நி…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஞாயிறு 03-02-2008 19:15 மணி தமிழீழம் [சிறீதரன்] கொழும்பு தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் சிறீலங்கா சுதந்திர தினத்தை கொண்டாட முற்பட்டிருக்கும் இவ்வேளையில் மக்களை அச்சப்படுத்தும்வகையில் பொதுமக்களை இலக்கு வைத்து நிகழ்த்தப்படும் இத் தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் அமெரிக்கா கொழும்பு புகையிரத நிலையம், தெகிவளை மிருகக்காட்சி சாலை, தம்புள்ள ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 9 replies
- 2.4k views
-
-
“தேசம்” ”சுயநிர்ணய உரிமை”: இனவாதமல்ல Sri Lanka.4 hours ago தேசிய மக்கள் சக்திக்கு பெருமளவில் வாக்களித்ததன் மூலம் வடபகுதி மக்கள் இனவாத்தை கைவிட்டுள்ளதாக ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். ஆனால் ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” ”மரபு வழித் தாயகம்” என்பதை உள்ளடக்கிய அரசியல் விடுதலைப் போராட்டம் 'இனவாதம்' அல்ல. “இனவாதம்” என்பது ஒரு இனம் ஏனை இனங்களைவிட மேலானது என்ற உள்ளார்ந்த எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு இனத்தின் “சுயமரியாதை - நாகரிகம்” என்பது 'சுயநிர்ணய உரிமை' 'தேசம்' பற்றிய கோட்பாட்டுக்குள் அடங்கும். ஆகவே இவற்றை இனவாதம் என்றால் 'இலங்கை அரசு' என்ற கட்டம…
-
-
- 9 replies
- 679 views
-
-
யாழ் சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி. சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்களால் திங்கட்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தென் பகுதியில் இருந்து யாழ்ப்பணத்திற்கு சுற்றுலா வந்திருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த 11பேர் சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி அப்பகுதி மக்கள் விபத்து நடைபெற்ற பகுதியில் 11 மெழுகுதிரி ஏற்றி மலர் தூபி அஞ்சலி செலுத்தி இருந்தனர். இதேவேளை திங்கட் கிழமை காலை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (7…
-
- 9 replies
- 815 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு தொலைக்காட்சி சொல்லிவருகிறது. இதனால் உலகத்தமிழர்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. இதனால் மனம் கொதித்துப்போன மதிமுக தொண்டர் தீக்குளித்துள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீக்குளித்த மதிமுக தொண்டர் சிதம்பரம் அருகில் உள்ள குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர். http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=8641
-
- 9 replies
- 2.6k views
-
-
காரைநகரில் புலிச் சீருடை அணிந்தவரே சிறுமியை தூக்கிச் சென்றாராம்! - நாடாளுமன்றத்தில் கதைவிட்ட பிரதமர் [saturday 2014-07-26 09:00] காரைநகர் முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர், சிறுமியை அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று காரைநகர் சம்பவத்துடன் புலிகளைத் தொடர்புபடுத்தி நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார் பிரதமர் டி.எம். ஜயரட்ண. நாடாளுமன்றத்தில் நேற்று காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்தி விசேட உரைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இ…
-
- 9 replies
- 476 views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இல்லை - கோத்தபாய ராஜபக்ஸ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் என்ற ஒன்று இல்லை எனவும், ஒப்பந்தம் இருப்பதாகக் கூறுவதில் அர்த்தம் இல்லை என்றும், சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அனைத்துலக சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக வார்த்தை அளவில் மாத்திரமே அர்த்தமற்ற ஒப்பந்தமாக இது இருக்கின்றது என்றும், அசோசியேட் பிறஸ் ஊடகத்துடனான நேர்காணலில் கோதபாய ராஜபக்ஸ கூறியுள்ளார். கடந்த சில மாதங்களில் கிழக்கில் விடுதலைப் புலிகளுடனான போரில் கணிசமான வெற்றிகளை தமது இராணுவம் பெற்றது என்றும், இந்த வெற்றி தற்பொழுது வடக்கு நோக்கி நகர்த்தப்படுவதாகவும் கோத்தபாய மேலும் கூறினார். சிறீலங்கா அரசுத் தலைவர் ம…
-
- 9 replies
- 2.1k views
-
-
கருணா குழுவினர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தால் அதற்கு அரசாங்கம் பொறுப்பில்லை. Wednesday, 18 April 2007 கொழும்பில் வெளிவரும் ஆங்கில நாளிதழான டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க லியனாராய்ச்சிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி தெரிவித்துள்ளது. டெய்லி மிரர் பத்திரிகையில் கருணாகுழுவினர் பற்றிய செய்திகளை பிரசுரிக்க வேண்டாமென சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ஷ் தெரிவித்துள்ள அதேவேளை கருணா குழுவினர் டெய்லி மிரர் பத்திரிகையின் ஆசிரியர் சம்பிக்க ரணவக்கவை கொலை செய்ய முயற்சித்தல் அதற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளதாக சுதந்திர ஊடக அமைப்பின் பேச்சாளர் சுனந்த தேஷப்பிரிய தெரிவித்…
-
- 9 replies
- 2.6k views
-
-
27 AUG, 2024 | 09:23 PM (இராஜதுரை ஹஷான்) மகாநாயக்கர்களையும், பௌத்த கலாச்சாரத்தையும் திட்டமிட்ட வகையில் விமர்சிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதை அவதானிக்க முடிகிறது. இதனை அலட்சியப்படுத்த முடியாது. தமிழர்களை பாதுகாத்த இராணுவத்தினர் மீது யுத்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் இராணுவத்தினரை பாதுகாப்போம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். குருணாகல் - கல்கமுவ பகுதியில் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கட்சி என்ற ரீதிய…
-
-
- 9 replies
- 724 views
- 2 followers
-
-
மேற்குலக நாடுகள் இலங்கையில் ஆட்சிமாற்றத்தை விரும்புகின்றன- தமரா குணநாயகம்! Published on March 6, 2012-11:28 am · இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றை மாத்திரமே மேற்கு நாடுகள் விரும்புகின்றன என ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் கூறியுள்ளார். ‘மேற்குலக நாடுகளின் உண்மையான இலக்கு ஆட்சி மாற்றம்தான். இலங்கையில் தாம் அடைய விரும்புவனவற்றில் இதுவும் ஒன்றாகும் என ஜெனீவாவிலுள்ள பல தூதுவர்கள் என்னிடம் கூறியுள்ளனனர் என தமரா குணநாயகம் தெரிவித்தார். இறைமை மிக்க ஏனைய நாடுகளில் தலையிடுவதை நியாயப்படுத்துவதற்காக பாதுகாப்பதற்கான கடப்பாடு எனும் கோட்பாட்டை அமெரிக்கா பின்பற்றி வருகிறது’ என அவர் கூறினார். இலங்கை ஒரு ‘தோல்வியடைந்த நாடு’ என பிரித்தானிய வெள…
-
- 9 replies
- 1.2k views
-
-
புலிகளின் பாடலைக் கேட்டதாக குருநகர் இளைஞர் கைது! - 14 நாட்கள் விளக்கமறியல் [Thursday 2016-04-21 19:00] தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் பாடல்களை கேட்டு ரசித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று சிவில் உடையில் சென்ற பொலிஸாரினாலேயே 25 வதுடைய குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞன் இன்று மாலை யாழ் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=155950&cat…
-
- 9 replies
- 949 views
-
-
''தனி ஈழம்தான் ஒரே தீர்வு!'' : ஆவேச மன்சூர்... ராமேஸ்வரத்தில் திரையுலகினர் நடத்திய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட் டத்தில் உணர்ச்சிப் பெருக்கில் பேசப்போய் இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் சட்ட நடவடிக் கைகளுக்கு உள்ளானார்கள். இதையடுத்து, நடிகர் சங்கம் இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய உண்ணாவிரதத்தில் 'இந்திய இறையாண்மைக்கு பங்கம் வராமல்' பேசுமாறு சங்கத் தலைவர் சரத்குமார் நடிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார். இருந்தும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான், தன் பாணியில் மனசில் பட்டதை போட்டுடைத்து பரபரப்பு கிளப்பியிருக்கிறார். ''அகிம்சைப் போராட்டத்தின் மூலம் மட்டும் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. சிப்பாய் கலகம் என்கிற ஆயுதப் புரட்சி, …
-
- 9 replies
- 3.2k views
-
-
தமிழருக்கு மனிதாபிமான ரீதியில் உதவ முன்னர் தனது கணவர் செய்த தவறுகளுக்கு ஒட்டுமொத்த தமிழர்களிடமும் குறிப்பாக தமிழ்ப் பெண்களிடமும் பகிரங்க பொது மன்னிப்பை அனந்தி எழிலன் கோரவேண்டும் என்று தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளர் ஆர்.சிவராஜா தெரிவித்துள்ளார். தமிழர்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருடன் பேசவுள்ளதாக அனந்தி எழிலன் தெரிவித்திருப்பது பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் திருமலை அரசியல் பொறுப்பாளராக எழிலன் இருந்த போது தான் மாவிலாறு அணையை இழுத்து மூடி இறுதிப் போருக்கு பிள்ளையார் சுழி போட்டார். ந…
-
- 9 replies
- 1.3k views
-
-
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளி கல்வி அமைச்சினால் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய கொழும்பு றோயல் மற்றும் விசாகா கல்லூரிகளுக்கு நுழைவதற்கான வெட்டுப்புள்ளிகளே அதிகமாகும். கொழும்பு-7 டி.எஸ்.சேனாநாயக்கான வெட்டுப்புள்ளி 175 ஆகும். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/93542-2013-12-17-11-01-07.html
-
- 9 replies
- 834 views
-
-
அமைச்சர் டக்ளஸின் அறைகூவலுக்கு தமிழ் தரப்பிலிருந்து பெரும் வரவேற்பு! வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கான இடைக்கால நிர்வாக கட்டமைப்பை உருவாக்க வேண்டுமெனும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அழைப்பை நாட்டிலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ் புத்திஜீவிகள், அரசியல் விமர்சகர்கள், மதப் பெரியார்கள் மற்றும் சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் பெரிதும் பாராட்டி வரவேற்றுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் எடுத்துள்ள இந்த அறைகூவலை இனியும் காலம் தாழ்த்தாது உடனடியாக அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் சாருமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே இந்த முயற்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்த…
-
- 9 replies
- 1.1k views
-
-
Published By: DIGITAL DESK 3 14 AUG, 2023 | 04:36 PM வைத்தியர்கள் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு வைத்தியர்களை இந்நாட்டுக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் விதித்துள்ள அதிக வரிப்பணமும் தற்போது நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதான காரணம் எனவும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் வைத்தியசாலை நெருக்கடியை எதிர்நோக்குவதாகவும் குணரத்ன தெரிவித்தார். வைத்தியர்களின் எண்ணிக்கை குறைவடைந்த நிலையில் இருவர் இருந்த இடத்தில் ஒருவரையும் அல்லது மூவர் இருந்த இடத்தில் இருவரையும் பண…
-
- 9 replies
- 435 views
- 1 follower
-
-
கிழக்கு மகாணச சபை முதலமைச்சர் பயணம் செய்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. வீரகேசரி இணையம் 10/31/2008 9:22:19 AM - கிழக்கு மாகாண சபை முதல்வர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் சென்ற வாகனம் கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி சென்ற வேளை இன்று காலை 9.00 மணியளவில் .விபத்துக்குள்ளாக்கியுள்ளது. இந்தவாகனம் லொறி ஒன்றுடன் மோதியுள்ளது.எனினும் முதலமைச்சரிற்கு எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
-
- 9 replies
- 1.9k views
-
-
முஸ்லிம் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் புர்கா மற்றும் நிஜாப் உடைகளை அணிவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரி ஒருவரே இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். சிறிலங்காவின் புலனாய்வுச் சேவை ஒன்றின் உயர் அதிகாரியின் ஆலோசனையின் பேரிலேயே பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி இந்த யோசனையை முன்வைத்திருக்கிறார். இந்த அதிகாரி முன்னைய அரசாங்கத்திலும் உயர் பதவியை வகித்தவராவார். புர்கா போன்ற முஸ்லிம் பெண்கள் அணியும் உடைகளை அணிந்து கொண்டு, சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதை தடுக்கவே இந்த உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த அதிகாரி கோரியுள்ளார். …
-
- 9 replies
- 589 views
-
-
கடந்த வருடம் நடைபெற்ற போரின் இறுதிப்பகுதி மிகவும் கெடுமையானது. அதன் போது 20,000 தொடக்கம் 40,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக த யப்பான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளின் போரிடும் வலுவை முறியடித்த சிறீலங்கா அரசு அதன் ஓராண்டு விழாவை கொண்டாடி வருகின்றது. ஆனால் சிறுபான்மை இனங்களின் அபிலாசைகளை சிறீலங்கா அரசு நிறைவேற்றாத சமயத்தில் அதனால் களமுனை வெற்றியை தக்கவைக்க முடியாது. சிறுபான்மை இனங்களின் பிரச்சனைக்கான தீர்வுகளை காணமுற்படாது, எதிர்க்கட்சிகளின் குரல்களை சிறிலங்கா அரசு அடக்க முற்படுவது ஒரு தலைமுறையினருக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை அது இழந்ததாகவே இருக்கும். மகிந்தா அரசு தற்போது கூட அதனை மேற்கொள்ள முடியும். அதன…
-
- 9 replies
- 927 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றவர்களுக்கு நடந்த சோதனை ! முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் பிரசார கூட்டத்துக்கு வருகைதந்த பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரையும் பொலிஸார் தீவிர பரிசோதனையின் பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்த செயற்பாடு பலர் மத்தியில் விசனத்தை தோற்றுவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய மாபெரும் பிரசார கூட்டம் மாலை 6 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் நடைபெற இருந்த நிலையில், அங்கு வருகைதந்த பொதுமக்கள் ஊடகவி…
-
- 9 replies
- 671 views
-
-
ஸிரீ லன்காவுக்கான அயுத ஏற்றுமதி லைசன்ஸ்கள் அமேரிக்கவினால் ரத்து. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24169
-
- 9 replies
- 3k views
-
-
நான் பிரபாகரனை அழிக்க வேண்டுமென கனவிலும் நினைக்கவில்லை: - கூட்டமைப்பை தாக்கினார் ஆனந்தசங்கரி [Wednesday, 2013-01-09 11:52:06] தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையகத்தில் 29-12-2012 அன்று இடம்பெற்ற பொதுச்சபை கூட்டத்தில் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் ஆற்றிய தலைமை உரை அனைவருக்கும் வணக்கம். தமிழ்மக்களின் இன்றைய நிலை முன்பு என்றும் இல்லாதவாறு மிக மோசமாகி இருப்பதோடு நிலைமை நாளுக்குநாள் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. எம்மவருள் ஒற்றுமையின்மையும் சில தலைவர்களின் எதேச்சாதிகார போக்கும் சுயநல நோக்கமும் நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வந்துள்ளமை நீங்கள் அனைவரும் அறிந்ததே. கடந்…
-
- 9 replies
- 1.2k views
-
-
இணைத்தலைமை நாடுகள், கனடா போன்றவை உடனடி யுத்த நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைக் கூட செவி மடுக்காமல்.. வன்னி மக்களை அழித்தொழிப்பதற்கான "உலகின் மிகப்பெரிய மனிதாபிமான யுத்த நடவடிக்கை" என்ற கவர்ச்சிகரமான பெயரில் தமிழின அழிப்புக்கான இறுதிப் போர் நடவடிக்கையை சிறீலங்காவின் 58வது படைப்பிரிவு இன்று ஆரம்பித்துள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ளது. உலகின் இத்தனை நாடுகளிலும் தமிழர்கள் எழுப்பும் குரல்களை யாரும் உண்மையான அக்கறையோடு செவிமடுக்காத நிலையில்... தமிழ் மக்களின் இழப்புக்கள் குறித்து எந்த அக்கறையும் இன்றி இந்தியா போன்ற நாடுகள் மெளனமாக இருந்து சிறீலங்காவின் இன அழிப்புப் போர் நடவடிக்கைகளை வரவேற்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் 350 பொதுமக்களைப் பலி கொண்ட சிறீலங…
-
- 9 replies
- 2.8k views
- 1 follower
-
-
தமது ஆயுதக்குழுவை அரச படைகளுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல்கட்டமாக 200பேர் திருகோணமலையில்; இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும
-
- 9 replies
- 2k views
-
-
தொடரும் போர் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாதளக்கு அதிகமான பொதுமக்கள் கொல்லப்படுவதையிட்டு தன்னுடைய ஆழ்ந்த கவலையைத் தெரிவித்திரு்கும் அமெரிக்கா, பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்குமாறு அரசாங்கத்திடமும், தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றது. "நாம் ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்றோம். ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்குப் பொதுமக்களின் உயிரழப்புக்கள் அதிகரித்திருப்பதாக நாம் கருதுகின்றோம்" என இது தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜயன் கெலி ஊடகவியலாளர்களிடம் உரையாற்றியபோது இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கொல்லப்பட்டிருப…
-
- 9 replies
- 903 views
-