Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வாகரையை நோக்கி சிறிலங்காப் படையினர் முன்னேற முயற்சி [திங்கட்கிழமை, 4 டிசெம்பர் 2006, 17:27 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] மட்டக்களப்பு வாகரைப் பகுதியை நோக்கி டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள படை நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றனர். வாகரைப் பிரதேசத்தின் மேற்கே உள்ள காட்டுப்பகுதியை அண்டிய கட்டுமுறிவுக்கு ஊடாக வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்கில் படையினர் இன்று திங்கட்கிழமை காலை முதல் டாங்கிகள், கவச வாகனங்கள் சகிதமாக நகர்வை மேற்கொண்டனர். இந்நகர்வு முயற்சி செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமடு, கரடிக்குளம் படை முகாம்களிலிருந்து படையினர் இந்நகர்வை ஆரம்பி…

    • 9 replies
    • 3.2k views
  2. நானும் ஒருவரலாற்றுத் தவறை இழைத்தவனாகவே கொள்ளப்படுவேன்; விக்கி தமிழர் விடுதலைக் கூட்டணி பல கட்சிகளின் ஒரு கூட்டாக பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக உருவாக்கம் பெற்ற போது அதன் தலைமைகள் சந்தர்ப்பங்களை நழுவ விட்டு நாடாளுமன்ற பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்தது.அப்போது ஆட்சியாளர்களுக்கு நிபந்தனைகள் எதுவுமற்ற ஆதரவை நல்க முற்பட்டதனூடாக அரசின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டது. தமது அரசியல் தீர்வு விடயங்களை சுமூகமாக கையாளமுடியும் என்ற எதிர்ப்பை எமது தலைவர்கள் கொண்டிருந்தனர். ஆனால் அது கை கூடவில்லை.எமது அப்போதைய தலைவர்களின் தூரநோக்கற்ற செயல்போல அதே பிழையை தற்போது எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைகளும் செய்துவருகின்றவென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். …

  3. அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றது தனக்கு ஒரு நெகிழ்ச்சியான அனுபவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா குறிப்பிட்டுள்ளார். நேற்றுமுன்தினம் பிற்பகல் கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் அன்று மாலை அலரிகையில் நடைபெற்ற தைப்பொங்கல் விழாவில் பங்கேற்றார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட எஸ்.எம்.கிருஸ்ணா, "சிறிலங்கா அதிபர் ஒரு நல்ல பண்பாளர் என்பதை நேற்று [திங்கள்] நடந்த ஒரு சம்பவம் மூலம் நான் புரிந்து கொண்டேன். நேற்றுக்காலையில் அலரி மாளிகையில் தைப்பொங்கல் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் மாலையில் தான் நான் கொழும்பு வந்து சேருவேன் என்பதை அறிந்து …

    • 9 replies
    • 1.5k views
  4. யாழ் . பல்கலை விரிவுரையாளர்களுக்கு எதிராக சுவரொட்டி adminSeptember 18, 2024 சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளித்த 15 விரிவுரையாளர்களை விமர்சித்து யாழ் பல்கலை வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உடன்பாடு இன்றி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட 15 விரிவுரையாளர்களின் செயலை விமர்சித்து இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2024/206845/

  5. எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாரிய வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23,372 வாக்குகளை பெற்று முதலாவது இடத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 10,113 வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பெற்றுக் கொண்டுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5,273 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ள அதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி 2,435 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு 17 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சிக்கு 7 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கு 3 ஆசனங்களும், மக்கள் விடுதலை முன்னணிக்கு 2 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. …

  6. லண்டன் மேயர் தேர்தலில் போட்டியிடும் இருவர், தமிழர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர் என இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. லிவிங்ஸ்டனின் எதிர் வேட்பாளரான கொன்சவேட்டிவ்வின் போரிஸ் ஜோன்ஸனும் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவு கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதாக இலங்கை அரசாங்க குற்றம் சுமத்தியுள்ளது. லேபர் கட்சியில் இருந்து கென் லிவிங்ஸ்டனும், கான்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொறிஸ் ஜோன்சனும் போட்டியிடுகின்றனர். இத் தேர்தல் நேற்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. வெற்றிபெற்றது யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. பெரும்பாலும் லேபர் கட்சியைச் சேர்ந்த கென் லிவிங்ஸ்டன் அவர்களே வெற்றிபெற…

    • 9 replies
    • 1.4k views
  7. இந்த தளத்தில் இந்திய பிரதமருக்கு மின்னஞ்சல்களை அனுப்பி தமிழக உறவுகளின் முயற்சியில் நாமும் பங்கெடுக்கலாம் http://pmindia.nic.in/write.htm

  8. மீண்டும் மதவாதச் சிந்தனையின் மூலமாக நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, அரசாங்கத்தை மட்டுமல்லாது, தமிழ் முஸ்லிம் மக்களை ஆட்டங்காணச் செய்தற்கான முயற்சிகள் வெகுலாவகமாக மேற்கொள்ளப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகின்றது. மட்டக்களப்பு நகருக்குள் இருக்கும் பல வீதி வழியாக தமிழ் மக்களை துவேச வார்த்தைகளால் திட்டி ஓடித்திரிந்த மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரின் அடாவடித்தனம் இன்றைய தினம் மட்டக்களப்பு நகரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சர்ச்சைகளை ஏற்படுத்துவதில் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு சற்றும் இழைத்தவர் அல்ல நான் என்பதை சுமணரத்ன தேரர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இன்றைய தினம் பொதுபலசேனா உள்ளிட்ட பௌத…

  9. விடுதலைப் புலிகளை கொன்றமைக்கே சம்பந்தன் அரசாங்கத்தை பழிவாங்க நினைக்கின்றார். எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு தூக்குக் கயிற்றினை மாட்டவே கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் வடக்கில் சிங்களக் கொடியினை வீழ்த்தி தமிழீழக் கொடியினை பறக்க விடும் முயற்சியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேசத்துடன் இணைந்து செயற்படுகின்றனர். அரசாங்கம் இனியாவது பிரிவினைவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சிங்கள நாட்டினைக் காப்பாற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பத்தரமுல்லையில் தேசிய சுதந்திர முன்னணியினால் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு…

  10. கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி திகதியும் கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும் வீடுகளிலும் இடம்பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இன்றைய நாளில் சுதுமலை முருகன் கோயிலில் சொக்கப்பனைக்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் சாட்சியளிக்கச் செய்த சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து அடியார்கள் வழிபட்டனர். கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்து வழிபடுவதும் குறிப்பிடத்தக்கது. - See more at: http://o…

  11. தர்மத்திற்கமைய நடப்பவரை தர்மமே பாதுகாக்கும் - ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை November 11, 2018 ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கை ( 2018.11.11) தற்போதைய அரசியல் நிலைமைகளை தெளிவுபடுத்தும் வகையில் 14 நாட்களுக்குள் இது நான் உங்கள் முன் உரையாற்றும் மூன்றாவது முறையாகும். முதலாவதாக கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்தியதை அடுத்து நான் எனது கருத்துக்களை முன்வைத்தேன். அதேபோன்று நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி பத்தரமுல்லையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது இரண்டாவது தடவையாக அரசியல் நிலைமைகளை உங்களுக்கு தெளிவுபடுத்தினேன். இன்று மூன்றாவது முறையாக உங்கள் முன் உரையாற்றுகின்றேன்…

    • 9 replies
    • 1.2k views
  12. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டி? [புதன்கிழமை, 16 யூலை 2008, 03:53 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காவின் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் கருணா போட்டியிடவுள்ளார் என்று அவரது கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். லண்டனில் தனது சிறைவாசத்தை நிறைவுசெய்து கொண்டு சிறிலங்காவுக்கு திரும்பிய கருணா, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானை சந்தித்துப் பேசினார். கொழும்பில் நடைபெற்ற ஐந்து மணி நேர சந்திப்பில் அவரது கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இதனை அடுத்து, மட்டக்களப்புக்கு சென்ற கருணா அங்கு தனது பழைய கட்சி உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் கொழும்பில் கருத்து தெரிவித்த அவர், தனது உறுப்பினர்களை சிறிலங்கா இராணுவத்திலும், காவல…

    • 9 replies
    • 1.5k views
  13. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு வருமாறு சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி அழைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அங்கியைக் களைந்து விட்டு சுத்தமான கையுடன் அரங்கத்திற்கு வருமாறு தமிழ் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி கடிதமொன்றினூடாகவே எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பதம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு அதன் நாணயத்தை இழந்துள்ளதாகவும் இதனால் பொதுமக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படவில்லை எனவும் ஆனந்தசங்கரி அனுப்பி வைத்துள்ள…

  14. நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கத் திட்டம்! பௌத்த துறவிகள் விஜயம் 27 Views நெடுந்தீவுப் பகுதிக்கு நேற்றைய தினம் பயணித்த தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர் மற்றும் பெளத்த துறவிகள் அடங்கிய குழுவினர் வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் நோக்கில் இரகசிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நெடுந்தீவில் உள்ள வெடியரசன் கோட்டையென்பது தமிழ் பௌத்த அரசன் வாழ்ந்த இடம் என இவர்கள் கருத்துரைத்ததோடு, யாழ்ப்பாணம் விகாரதிபதியும் உடன் பயணித்து அப்பகுதிகளை நேரில் பார்வையிட்டு அப்பகுதியின் நில உரிமை மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் உரித்து தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனர்.இதன்போது அப்பகுதிகளை படமாக்கியதுடன் அப்பி…

  15. டக்களஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி. மற்றும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியன எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுவதனை விடவும், சொந்தக் கட்சி சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் கூடுதல் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என கட்சிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. தனித்து போட்டியிட்டால் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆசனத்தையேனும் வெல்ல முடியும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி தனித்து போட்டியிடத் தீர்மானித்த காரணத்…

  16. எமது மக்களுக்கான விடிவு என்பதும் அதனை ஒட்டிய போராட்டம் என்பதும் பலவகைகளாக வகுக்கப்படதுண்டு, வகுக்கப்பட்டும் வருகின்றது. விடுதலைப்புலிகள் என்கின்ற அமைப்பு பலமாக ஈழதேசத்தில் இருந்தபோது சர்வதேசம் எங்கும் வாழும் மக்களிடத்தில் இருந்த ஒற்றுமையும், புலம்பெயர் போராட்டங்களும், இன்று ஏன் முடங்கிப் போய்க்கிடக்கின்றன? ஈழத்தில் ஆயுதப்போரட்டம் என்பது நாங்களாக விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. சிங்களப் பேரினவாதத்தினால் எங்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்றே. விடுதலைக்காகப் போராடிய அமைப்பை திட்டமிட்டு பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தியமையால் தொடர்ந்து இயங்கவிடாது தடுத்தது சர்வதேச நாடுகள். சிங்கள அரசும் திட்டமிட்டே சிறுவர் படை சேர்ப்பு என்று நடக்காத ஓர் வதந்தியைப் பரப்பி எமது இனத்தினை அதன் சுதந்…

  17. இந்திய இராணுவத்தினர் 5000 பேர் இலங்கை வந்தடைந்துள்ளனர்? இலங்கை வடக்கில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக 5 ஆயிரம் இந்திய இராணுவம் கொழும்பு வந்தடைந்திருப்பதாக தமிழகத்தில் இருந்து வெளியாகும் இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக கண்ணி வெடிகளை அகற்றவென இந்திய இராணுவத்தினர் 500பேர் இலங்கை வரவுள்ளனர் என்று பாதுகாப்பு பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேக அண்மையில் தெரிவித்தார். ஆனால் தற்போது 5 ஆயிரம் வீரர்கள் வரை வந்திருப்பதாகவும், அவர்கள் விரைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் சென்று பணியைத் தொடங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த இதழில் மேலும் கூறியிருப்பதாவது: சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிடமிரு…

  18. யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர். அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது. யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன. வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் …

    • 9 replies
    • 1.4k views
  19. ஒபாமா ராஜதந்திர ரீதியில் ராஜபக்சேவுக்கு சொல்லாமல் சொல்கிறார்..... அவர் ராஜபக்சேக்கு எழுதிய தன்னுடைய மடலில் கூறியதாவது .... சுதந்திர தினத்தை, தேசிய நாளாக கொண்டாடும் இலங்கை வாழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்து வாழும் இலங்கை மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எம்மிரு நாடுகளுக்கிடையில் உள்ள இடையறாத நட்பினை எங்கள் நாடு மதிப்பளிக்கிறது. ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் அகியவற்றில், அமெரிக்காவுடன் ஒத்த கருத்துடைய தோழமை நாடான இலங்கையில் நடைபெறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு, முன்னேற்றம் காணப்படும் என நான் நம்புகிறேன். போரினால் பாதிக்கப் பட்டுள்ள இலங்கை முழுவதையும் வருங்காலத்தில் அம…

  20. நாளை இரவு 8.40 பிரான்சின் அரசு தொலைக்காட்சியான பிரான்ஸ் 2 சனலில் Envoyé Spécial என்ற தலைப்பில் சிறீலங்கா பற்றிய ஆவணப்படம் ஒன்று காண்பிக்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் சிறீலங்காவின் உல்லாச பயணம் போருக்கு பிந்திய நிலைமைகள் பற்றி விபரணங்களும் தேசியத்தலைவர் மற்றும் விடுதலைப்புலிகள் பற்றி செய்திகளும் இடம்பெறவுள்ளதாக அறிய முடிகிறது. இந்த ஆவணப்படத்தை தயாரிப்பதற்கு ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு பணிபுரியும் சில சிங்கள ஊடகவியலாளர்களின் உதவி பெறப்பட்டதாகவும் அறிய முடிந்தது. பிரான்சிலுள்ளவர்கள் குறிப்பாக இளையோர் தவறாது இந்த ஆவணப்படத்தை பார்த்து 'உண்மைகளை திட்டமிட்டு மறைத்தல்' 'தவறான வரலாற்றை கூறுதல்' சிறீலங்காவுக்கு உல்லாசப்பயணம் செய்யும்படி பிரெஞ்சு மக்களை துண்டும் விதத்தில் காட…

    • 9 replies
    • 1.1k views
  21. மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சரும்,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனின் பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் விஷேட அழைப்பின் பேரில் இலங்கை நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபிய நாட்டின் முன்னணி முதலீட்டாளரும்,இளவரசருமான ஷேஹ் பஹத் பின் முக்ரீன் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு 23 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. கொழும்பில் இருந்து இலங்கை விமானப் படையின் விஷேட விமானம் மூலம் மட்டக்களப்பு இலங்கை விமானப் படை தளத்திற்கு வருகைதந்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் காத்தான்குடி விஜயம் செய்ததுடன், அவருக்காக காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்விலும் கலந்து கொண்…

    • 9 replies
    • 1.2k views
  22. கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இல்லை (வீடியோ) முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாக இருப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என தாம் நம்புவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (26) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக தேவையான வீசா பெற்று அந்த நாட்டுக்கு சென்றுள்ளதால் அவர் தலைமறைவாக இருப்பதாக நான் நம்பவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163791

    • 9 replies
    • 1.2k views
  23. பூகோள வெப்பமடைதலுக்கு நாடுகளே உண்மையான போர்க் குற்றவாளிகள் : ஜனாதிபதி பூகோள வெப்பமடைதல் அதிகரிப்பதற்கு உதவும் நாடுகளே உண்மையான போர்க் குற்றவாளிகள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பூகோள வெப்படைதல் காரணமாக அனைத்து தாவர, விலங்கு இனங்களும் அழிவடையலாம். உண்மையான போர்க் குற்றவாளிகளும் மனித உரிமைகளை மீறியவர்களும் பூகோள வெப்பமடைதல் அதிகரிப்பதற்கு உதவும் நாடுகளே என ஜனாதிபதி தெரிவித்தார். இவ்விதிகளை மீறுபவையாக மேற்குலக நாடுகள் உள்ளன என கண்டியில் நடைபெற்ற புவி மணித்தியால நிகழ்வில் உரையாற்றுகையில் ஜனாதிபதி தெரிவித்தார். புள்ளிவிபரங்களின்படி, பூகோள வெப்பமடைதலுக்கு காரணமான மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா உள்ளதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூ…

  24. சுனாமி நிவாரண நிதியை திருடிய ராஜபக்ஷ கூட்டம் எப்படி மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறது? என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். சரத் பொன்சேகா மேலும் தெரிவித்ததாவது: நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த சஜித் பிரேமதாச எனக்கு தந்த பொறுப்பை நான் மதிக்கிறேன். அந்த எதிர்பார்ப்பை நான் நிறைவேற்றுவேன். உங்களின் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நான் செயற்படுவேன். இராணுவத் தளபதியாக நான் செயற்பட்டபோது போரை இன்னுமொரு தளபதிக்கு …

  25. [size=4]இனியும் ஈழத் தமிழர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனவும் தமிழர்கள் மீது ஒரு துரும்பு பட்டாலும் இனி இந்தியாவில் இருந்துதான் போர் கிளம்பும் என்பதை இலங்கை தலைவருக்கு தெரிவித்துக்கொள்வதாகவும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.[/size] [size=4]இன்று (23.06.2012) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஈழ சுதந்திரம் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தமிழர்கள் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளைச் சந்திக்க நேரிடும் என்று பேசிய இலங்கை அரசின் அமைச்சர் சாம்பிக ரணவக்கவைக் கண்டித்து ஜூ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.