ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலியும், ஆத்ம சாந்திப் பூசையும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (ஏப்ரல் 21-2019) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்காக 31ஆம் நாள் அஞ்சலியும், திருப்பலியும் ஆத்ம சாந்திப் பூசையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான த. சிவநாதன் அறிவித்துள்ளார். ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வுகளில் உயிர்நீத்த உறவுகளின் குடும்பத்தார்கள், அன்பர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இந்நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) காலை 10.00 மணியளவில்…
-
- 8 replies
- 1.3k views
-
-
டெங்குவுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை! – கண்டுபிடித்த பந்துல டெங்குவால் வருடத்துக்கு 500 – 600 பேர் பலியான போதும் தேர்தல்கள் நடைபெற்றன என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்துடன் டெங்கு இறப்புக்களுடன் ஒப்பிடும் போது கொரோனாவில் ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். நேற்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். https://newuthayan.com/டெங்குவுடன்-ஒப்பிடும்-ப/ 🤣🤣
-
- 8 replies
- 765 views
-
-
பரிதி படுகொலைக்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை –தயான் ஜயதிக்க 11 நவம்பர் 2012 தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தலைவர் பரிதி எனப்படும் நடராஜா மகேந்திரனின் படுகொலைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரான்ஸிற்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இந்தக் கொலையின் பின்னணியில் இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சம்பவம் தொடர்பில் பிரான்ஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் அரசாங்கத்தினால் விசாரணை நடத்தப்பட்டு வரும் ஓர் விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவது பொருத்தமற்றது என அவர் சு…
-
- 8 replies
- 771 views
-
-
பணம் கொடுத்து நாட்டை விட்டு தப்பினார்களா விடுதலைப் புலிகள்? இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற போது, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவருக்கு பணம் கொடுத்து, 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கோப்புப் படம் காணமால் போனோர் தொடர்பாக செயல்படும் அலுவலகம் குறித்து ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். இறுதிக் கட்டப் போர் நடைபெற்ற போது 200-க்கும் மேற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் சமரவீர, இவர்களுக்குள் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்…
-
- 8 replies
- 999 views
-
-
சாதிப்பதற்கு ஊனம் ஒருபோதும் தடையல்ல; 3ஏ சித்தி பெற்ற வாழ்வக மாணவன் தர்மதன் ஊனமென்பது எதற்கும் தடையில்லை எதையும் முயற்சித்தால் நாம் சாதித்து காட்ட முடியும். கலைப்பிரிவில் 3ஏ சித்திபெற்று மாவட்ட நிலையில் 4ஆவது இடத்தைப் பிடித்து சாதித்த சுன்னாகம் வாழ்வக மாணவன் சொர்ணலிங்கம் தர்மதன் கூறுகின்றார். தனது இரு கண்களில் பார்வையை இழந்த நிலையிலும் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் விடாமுயற்சியுடனும் கற்றேனென உதயனுக்கு வழங்கிய செவ்வியில் மிகவும் உருக்கமாக தெரிவித்தார் அவர். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: யாழ். மாவட்டத்தில் என்னைப் போன்ற விசேட திறமையுள்ள மாணவர்களுக்கு கற்றலை தொடர்வதற்கான போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. சாதாரண மாணவர்களுடன்…
-
- 8 replies
- 651 views
-
-
வடக்கில், விவசாயப் பண்ணைகள்... படையினர் வசமிருப்பது உண்மையே – சமல் ராஜபக்ஷ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார். வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர், மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு …
-
- 8 replies
- 722 views
-
-
ஐ.நாவிடமிருந்து வடமாகாண முதலமைச்சர் நேரடியாக நிதி பெற்றுவதற்கு எடுத்த முயற்சி தோல்வி என்பது உண்மையா? ஐக்கிய நாடுகள் அமைப்பிடமிருந்து நேரடியாக நிதியைப் பெற்றுக்கொள்ள வட மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக கொழும்பில் தகவலகள்; வெளியாகி உள்ளன. வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்காக இவ்வாறு விக்னேஸ்வரன் நேரடியாக நிதி பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய மேம்படுத்த உதவி பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அந்த உதவி மத்திய அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும் என, ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி சுபி நெண்டி முதலமைச்சருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இலங்கை அரசா…
-
- 8 replies
- 1k views
-
-
இன்றைய தினம் இத்தாலியிலிருந்து வருகை தந்த ஒருவரின் மனைவி தலைச்சுற்று காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்திருந்தார். எனினும் வைத்தியசாலையிலிருந்தவர்கள் கொரோனாவாக இருக்கலாம் என்ற அச்சத்தில் பீதி அடைந்த போதிலும் மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு அவ்வாறான எந்த ஒரு சான்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் வடக்கில் கொரோனா தொற்றுவதற்குரிய சாத்தியங்கள் மிகக் குறைவு எனவே மக்கள் பீதியடையத் தேவையில்லை கொரோனா தொற்று உள்ளவர் ஒருவருடன் நெருக்கமாகப் பழகும் ஒருவருக்கே ஒரு தொற்று ஏற்படுவதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே வடக்கினை பொறுத்த வரைக்க…
-
- 8 replies
- 895 views
-
-
யாழ்ப்பாண சாந்தினி வயிறு நிறைய போதைப் பொருளுடன் சென்னையில் கைது http://tamil.oneindia.com/news/tamilnadu/jaffna-woman-carries-rs-2-50-cr-durgs-her-belly-261965.html வயிற்றுக்குள் 2.5 கோடி "போதை".. "அயன்" சாந்தினி அதிரடி கைது! சென்னை: அயன் படத்தில் பார்த்திருப்போம்.. சிறிய டியூப் மாத்திரைக்குள் போதைப் பொருட்களை நிரப்பி அதை வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். பிறகு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு மலமிளக்கி கொடுத்து வெளியில் எடுப்பார்கள். அதே பாணியில் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை ஆறரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த வி…
-
- 8 replies
- 1.4k views
- 1 follower
-
-
பிரபாகரனை மீட்க அமெரிக்கா முயன்றவேளை தமிழக தலைவர்கள் எதிர்த்தனர்-சிவ்சங்கர் மேனன் தனது நூலில் விபரிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்டெடுப்பதற்காக அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் எதிர்ப்பை வெளியிட்டி ருந்ததாக இந்திய முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் பாதுகாப்பு ஆலோசகருமான சிவ்சங்கர் மேனன் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் எழுதிய ஆங்கில நூலிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளார். பிரபாகரனை மீட்பதற்கு அமெரிக்காவும் நோர்வேயும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்…
-
- 8 replies
- 1k views
-
-
1983-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி வெளிக்கடை சிறையில் சிங்கள வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழீழத்து தளபதிகளில் ஒருவரான குட்டிமணியை 1973-ம் ஆண்டு தமிழகத்தில் கைது செய்து சிங்கள அரசிடம் ஒப்படைத்தவர் கருணாநிதிதான் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பார்வதியம்மாளைத் திருப்பி அனுப்பிய சம்பவத்திற்கெதிரான கண்டனக் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இது பற்றி வைகோ பேசியதாவது : 1973-ம் ஆண்டுவாக்கில் குட்டிமணி தமிழகத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இந்த நேரத்தில் இது பற்றி அறிந்த சிங்கள அரசு குட்டிமணியைத் தங்களிடம் ஒப்படைக்கக்…
-
- 8 replies
- 2.6k views
-
-
வேறு நாடுகளுக்கு செல்லாமல்... தாய் நாட்டிற்கு வருமாறு, கோட்டாவிடம்.. மஹிந்த கோரிக்கை. விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்கும் மேலாக வெளிநாட்டில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தஞ்சமடைந்துள்ளார். போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்ததை அடுத்து தாய்லாந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளார். இருப்பினும் தாய்நாட்டுக்கு வருமாறு அவரது சகோதரர் விடுத்த கோரிக்கைக்கு கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதிக்க…
-
- 8 replies
- 462 views
-
-
எதிர்வரும் 28 தொடக்கம் 30 வரை ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று நோர்வே தேசியதொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. Tamiltigrene til samtaler i OsloTamiltigrene (LTTE) har gått med på å delta i fredssamtaler i Oslo 28.-30. oktober, sier en kilde som står nær samtalepartene. -------------------------------------------------------------------------------- Publisert i dag 14:12 Den ikke navngitte kilden uttaler seg etter at Norges spesialutsending Jon Hanssen-Bauer møtte ledelsen for LTTEs politiske fløy i Kilinochchi nord på Sri Lanka i dag. Fra før har de sri lankiske myndighetene sagt til de norske …
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கையில் தனிநாடு ஒன்று அமைக்கப்படுவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்க போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரைத் தொடர்பாகவே அவர் இதனை குறிப்பிட்டார். இலங்கையில் காணப்படும் இனப்பிரச்சினைத் தொடர்பில் இரண்டு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றை காணவேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு எனவும் அவர் கூறினார். விசேட தேவையுடையோருக்காக அமெரிக்க யு.எஸ் எய்ட் நிறுவனம் இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மோட்டிவேசன் சரிட்டபல் ட்ரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து நிதியுதவியளிக்கும் கட்டங்களுக்கான விசேச நிர்மாண உதவி திட்ட நிகழ்வை ஆரம்பித்து வைத்தே போதே …
-
- 8 replies
- 2.1k views
-
-
மியான்மாரிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி 06.05.2008 / நிருபர் எல்லாளன் மியான்மார் நாட்டிற்கு சிறிலங்கா 25000 டொலர் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. சூறாவளியால் கடுமையாகத் தாக்கப்பட்டு பேரிடர் நிகழ்ந்துள்ளதாகவும் உலகநாடுகளின் உதவி ஏற்றுக்கொள்ளப்படுமெனவும் மியான்மார் அறிவித்துள்ளநிலையில் சிறிலங்காவின் இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதேவேளை மியான்மாரிலிருந்து வரவிருந்த அரிசிக்கப்பல்களை அவசரமாக எதிர்பார்த்திருந்த கொழும்பு அரசாங்கத்திற்கு அங்கே ஏற்பட்ட சூறாவளிப் பேரழிவுகள் ஒரு பின்னடைவை கொடுத்துள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மியான்மாரில் பேரழிவிற்குள்ளாகியுள்ள இடங்களுள் இரண்டு நெல் உற்பத்தியில் பிரதான மையங்களாகும். http://www.sank…
-
- 8 replies
- 1.8k views
-
-
தேடப்படும் குற்றவாளி டக்ளஸை பிரதமஅதிதியாக அழைத்து கௌரவித்த இந்திய தூதரகம் Published on January 29, 2013-4:19 pm · இந்திய நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரகம் கௌரவித்துள்ளது. சென்னை நீதிமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது கொலை, சிறுவனை கடத்தி கப்பம் பெற்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைகளில் டக்ளஸ் சமூகமளிக்காததால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய நீதிமன்றம் ஒன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கும் டக்ளஸ் தேவானந்தாவை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதரக…
-
- 8 replies
- 854 views
-
-
அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் மதிக்கப்பட வேண்டியவை எனவும் கெரி, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார். இலங்கையில் முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி அரசாங்கம் நகர்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் ந…
-
- 8 replies
- 691 views
-
-
இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சிறப்பு இஸ்லாமிய வழிபாடுகள் By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 10:26 AM இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் திங்கட்கிழமை (26) இராணுவ அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் இஸ்லாமிய மத முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் இராணுவத்திற்கு ஆசி வேண்டி சிறப்பு இஸ்லாமிய மத வழிபாடுகள் இடம்பெற்றன. பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியன பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவர் அல்-ஹாஜ் மொஹமட் கலீல், செயலாளர் மற்றும் கொள்ளுபிட்டிய ஜும்மா பள்ளி வாசல் நிர்வாக சபை சபையின் உறுப்பினர்கள் , இராணுவ முஸ்லீம் சங்க தலைவர் பிரிகேடிய…
-
- 8 replies
- 517 views
- 1 follower
-
-
பிரபாகரன் நாமம் இன்னும் 3,000 ஆண்டுகள் வாழும்; விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவிப்பு தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது இவ்வாறு தெரிவித்தார் நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும் தெஹிவளைகல்சிசை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன. உதயன், சுடர்ஒளி பத்திரிகைகளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டி…
-
- 8 replies
- 1.4k views
-
-
Published By: VISHNU 16 MAY, 2025 | 03:18 AM இளைய தலைமுறையினர் பொது அறிவுத் தேடலிலும் தம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும் என ஊர்காவற்றுறை பிரதேச செயலர் ஈஸ்வரானந்தன் தயாரூபன் தெரிவித்தார். புளியங் கூடல் இலட்சுமி நாராயணன் அன்னதான மண்டபத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநிர் நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வும் ஊர்காவற்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மாதர் சங்கங்கள் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு இடையிலான வினாடி வினாபோட்டி நிகழ்வும் இன்று வியாழக்கிழமை குறித்த மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒப்பீட்டளவில் இளையோர் தமது பொது அறிவுத் தேடலை வளர்த்…
-
-
- 8 replies
- 445 views
- 1 follower
-
-
தற்போது நடைபெறும் யுத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டிருந்த 9500 இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் என ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இவ் விடயம் குறித்து இராணுவ பேச்சாளன் உதய நாணயக்காரவிடம் அப்பத்திரிகை வினவிய போது : 2008 ஜனவரி மாதம் வரை 15.000 பேர் வரை இராணுவத்திலிருந்து தப்பியோடியுள்ளதாகவும் இவர்களுள் அரசின் மன்னிப்புக் காலத்தில் திரும்ப வந்த 4000 பேர் சேவையில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கிடையில் மேலும் தப்பியோடியவர்கள் வந்து சேர இராணுவத்தால் கொடுக்கப்பட்ட மேலதிக கால அவகாசத்திற்கிடையில்; அண்மையில் மஹிந்த அனுராதபுரத்தில் பொதுமக்களை சந்தித்த வேளை தாய் மண்ணைக் காப்பதற்காக மறுபடியும் சேவையில் வந்தினைந்து கொள்ளும்படி பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். …
-
- 8 replies
- 2k views
-
-
பிரித்தானியாவில் உள்ள அழும்கட்சியான கான்சர்வேட்டிவ் கட்சி, தமிழர்களுக்கான உப குழு ஒன்றை ஆரம்பிக்க அனுமதி கொடுத்துள்ளது. பிரிட்டிஷ் தமிழ் கான்சர்வேட்டிவ் (British Tamil Conservatives) என்று அழைக்கப்படும் இக் குழுவில் பல ஆழும் கட்சியின் எம்பீக்கள், ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மற்றும் தமிழர்கள் இணைந்துள்ளார்கள். பிரித்தானியாவில் வாழும் பல்லின மக்களுக்கு மத்தியில், தமிழர்களுக்கு கிடைக்கப்பெற்ற முதல் உரிமை இது என்று சொல்லப்படுகிறது. வெள்ளை இன மக்களுக்கு நிகரான ஒரு அந்தஸ்த்தை இது பெற்றுத்தந்துள்ளது எனலாம். கடந்த 9ம் திகதி நடைபெற்ற இதன் முதல் மாநாட்டில், ஆழும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள், புத்திஜீவிகள், எம்.பீக்கள் மற்றும் தமிழ் பிரமுகர்கள் கலந்துகொண்டனர…
-
- 8 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் இன்று (25) கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடகக்ப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னதாக கூடிய கொரோனா தடுப்பு செயலணியே குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ். வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும், கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் முடக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகளும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது. …
-
- 8 replies
- 836 views
-
-
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்காக 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூய் ஷென்ஙொங் தடுப்பூசிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தார். வடக்கு கிழக்கினை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கும் நோக்கோடு சுமார் 16 இலட்சம் தடுப்பூசிகளை சீன அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. குறித்த தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதுவரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான தடுப்பூசிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் …
-
- 8 replies
- 383 views
-
-
சீனாவின், இராணுவக் கப்பலிற்கு... இலங்கை அரசாங்கம் அனுமதி. சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது என இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லும் குறித்த கப்பலை தடுப்பதற்கான... உரிய காரணங்களை இந்தியாவும் அமெரிக்காவும், முன்வைக்க தவறியுள்ளன. இதன் காரணமாக சீனாவின் யுவாங் வாங் 5 கப்பலிற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் விவகாரம் இலங்கை அரசாங்கத்திற்கு பூகோள அரசியல் தலையிடியாக மாறியுள்ள நிலையில் எதிர்வரும் 16 ம் திகதி கப்பல் துறைமுகத்திற்குள் நுழையவுள்ளது. குறித்த கப்பல் 11 ம் திகதி துறைமுகத்திற்குள் நுழைய திட்டமிடப்பட்டிருந்த போ…
-
- 8 replies
- 1.2k views
- 1 follower
-