ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
தமிழ் தேசிய எதிர்ப்பாளர் DBS ஜெயராஜ் வீட்டில் சுமந்திரன் டாரா ! [ Monday, 07 November 2011, 01:20.53 PM. ] manathan.com அமெரிக்கா சென்று அங்கிருந்து கனடாவுக்கும் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்கள் கனடாவில் DBS ஜெயராஜ் வீட்டில் தங்கியுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது.விடுதலைப் புலிகளை படு மோசமாக விமர்சித்து சிங்களவர்களுக்கு சிலிர்ப்பூட்டும் செய்திகளை எழுதிவரும் மிக மோசமான ஊடகவியலாளர் DBS ஜெயராஜ் என்பது யாவரும் அறிந்ததே. விடுதலைப் புலிகளைப் பற்றி அவர் மோசமாக விமர்சித்தாலும் பரவாயில்லை அது அவர் விருப்பு வெறுப்பு என்று கூறிவிடலாம். ஆனால் தமிழ் தேசியத்தையும், தனி நாட்டுக்கோரிக்கையையும் பிழை என வர்ணிக்கும் இவரது வீட…
-
- 3 replies
- 1.8k views
-
-
புலியை சாட்டி அகதி பிச்சை கேட்கிறார் இலங்கை சுதந்திர கட்சி முக்கியஸ்தர் - திருட்டு வேலைக்கு 10 மாத சிறை. (சனிக்கிழமை, 16 செப்ரெம்பர் 2006 )(ஜோசெப்) புலிகளை சாட்டி அகதி அந்தஸ்து கோரியுள்ளார் இலங்கை சுதந்திர கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான மூத்த குமார் கிரிஸ்ணசாமி. சுமார் 47 வயதுடைய இவர் சுதந்திர கட்சியின் முக்கியஸ்தராவார். குடந்த வாரம் பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் இவர் பிறான்ஸ் நாட்டில் இருந்த போலிக் கடவுச் சீட்டுடன் லண்டன் வந்தார். புலிகள் தன்னை கொல்லப் போவதாகவும் அதனால் லண்டனுக்கு ஓடி வந்ததாகவும் போலியான வாக்கு மூலத்தை பிரித்தானிய குடிவரவு திணைக்களத்திற்கு கொடுத்திருந்தார். தன் போலியான கடவுச் சீட்டுக்காக 10ஆயிரம் பவுண்களை செலுத்தியதாகவும் ச…
-
- 1 reply
- 1.8k views
-
-
நாமல் என்ன செய்கிறார்: அம்மா கண்ணீர் வெலிக்கடை சிறைச்சாலையில், சிறைவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சிறைச்சாலையில் என்ன என்ன செய்கிறார் என்று, அவரை பார்த்துவிட்டு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்தார். அங்குள்ள சிறை கைதிகளுக்கு அவர், யோகாசனம் கற்றுக்கொடுக்கின்றார் என்றும் டலஸ் எம்.பி தெரிவித்தார். அதேபோல, அவர் சிறைச்சாலையில் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றார் என்றும் கூறினார். இதேவேளை, நாமல் ராஜபக்ஷவை தன்னுடைய தாய், ஷிரந்தி ராஜபக்ஷ, சகோதாரர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பார்;வையிட்டுள்ளனர். நாமலை பார்த்த தாய், கண்ணீர்விட்டு அழுதுவிட்டார் என்று, அவருடன் ச…
-
- 1 reply
- 1.8k views
-
-
மேற்குலகின் பிரபல இசை நட்சத்திரமும், இலங்கைத் தமிழ் பெண்ணுமான மாயா அருள்பிரகாசத்தின் (MIA) செவ்வியை ஒளிபரப்புச் செய்யக் கூடாதென அரசாங்க ஆதரவு அமெரிக்க வாழ் இலங்கையர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாயா அருள்பிரகாசம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகப் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் மாயா செயற்பட்டு வருவதாக எதிர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒபரா வின்பரை என்ற உலகப் புகழப் பெற்ற செவ்வி நிகழ்ச்சியொன்றில் மாயா கலந்து கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த செவ்வியை நடத்தக் கூடாதென அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வரும் அமெரிக்க வாழ் இலங்கையர்கள் குறித்த …
-
- 0 replies
- 1.8k views
-
-
பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் முன்நகர்வுகள் முறியடிப்பு: 15 படையினர் பலி- 29 பேர் காயம் [சனிக்கிழமை, 09 ஓகஸ்ட் 2008, 08:12 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் மூன்று முனைகளில் சிறிலங்காப் படையினர் இன்றும் நேற்றும் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில், 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 29 பேர் காயமடைந்துள்ளனர். பாலமோட்டை, நவ்வி, குஞ்சுக்குளம் வரையான பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை 7:10 மணிமுதல் மாலை 6:00 மணிவரை மூன்று முனைகளில சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விடுதலைப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
தனுஷின் மாரி திரைப்படத்தின் பதாகைகளில் அதிகளவான சிகரட் பிடிக்கும் காட்சி புகுத்தப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் நேற்று வியாழக்கழமை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஆர்ப்பட்டக்காரர்கள் தனுஷின் படத்துக்கு செருப்பு மாலை அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர். சமூகத்துக்கான நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் ப.தினேஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டனர். : http://www.tamilmirror.lk/150344#sthash.alH4gxhN.dpuf
-
- 2 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழு ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை இலங்கை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் உரையாற்றிய பிரதிநிதி குறிப்பிட்டார். பான் கீ மூன் நியமித்த ஐநா நிபுணர் குழு இலங்கை குறித்து முழுமையான அறிக்கை வெளியிட்டதாகவும் இலங்கையில் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முழுமையாக அறிக்கை வெளியிடவில்லை எனவும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இருந்து வெளிநாடு சென்று ஐநாவுடன் இணைந்து செயற்படுபவர்கள் அச்சுறுத்தப்படுவதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், அவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
அறுபது நீண்ட ஆண்டுகள், தமிழ் பேசும் சிறுபான்மையினர், இடைவெளியின்றிச் சூறையாடப்பட்டிருக்கின்றனர்; வேறுபாடின்றி தெருவோரத்தில் கொன்று போடப்பட்டிருக்கின்றனர்; அவர்கள் காணி நிலம், வீட்டு முற்றம், தெருக்கோடி எல்லாமே பேரினவாதப் புற்று நோய்க் கிருமிகளால் சிறுகச் சிறுக அரிக்கப்பட்டு அதன் உச்ச பட்ச வடிவமாக வன்னி நிலம் முழுவதுமே அபகரிக்கப்பட்டுவிட்டது. கொன்று போடப்பட்டவர்கள், சாம்பலாக்கப்பட்டவர்கள், விரட்டியடிக்கப்பட்டவர்கள், சிதைத்துச் சிதைது குடியேற்றப்பட்டவர்கள் என்று வடக்கும், கிழக்கும், மலையகமும் மறுபடி மறுபடி அவலங்களின் பூமியாக மாற்றப்பட்டுவிட்டது. இவையெல்லாம் நேற்று ஆரம்பித்து இன்று முடிவடையும் சிவில் யுத்தமல்ல. பின் காலனியக் காலகட்டம் முழுவதுமே தமிழ்ப் பேசும் சிறுப…
-
- 9 replies
- 1.8k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகள் மட்டுமே ஈழத் தமிழர்களுக்குப் பாதுகாப்பு" - கனிமொழி இலங்கையில் போர் மேகங்கள் மீண்டும் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் பந்தலில் உட்கார்ந்தார் கனிமொழி. தமிழக அரசியலில் மீண்டும் ஓர் பரபரப்பு. முதல்வர் கலைஞரின் மகளை, அவரது சி.ஐ.டி. காலனி வீட்டில் சந்தித்தோம். ஈழப் பிரச்னை தொடர்பாக பல விஷயங்களை நுனிப்புல் மேயாமல் அழகாகவும் அதேசமயம் ஆழமாகவும் அலசினார். எதையும் தெளிவாகப் பேசுகிறார். சற்று ஆத்திரமூட்டும் கேள்விகளுக்கும் அமைதியாகப் பதில் தந்தது, கனிமொழியின் பக்குவத்தைக் காட்டியது. ராஜிவ் படுகொலைக்குப் பிறகு, இலங்கைப் பிரச்னையில் இருந்த அனுதாபம் போய், அங்கே பிரச்னை தலைதூக்கும்போத…
-
- 1 reply
- 1.8k views
-
-
அன்று மகிந்த ஆட்சியிலே 18 ஆம் திருத்தம் என்ற அரசியலமைப்பு சட்ட திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிய அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும், இன்று 18 ஆம் திருத்தத்தை இல்லாது ஒழிக்கும் 19 ஆம் திருத்தத்துக்கு ஆதரவாக கையை உயர்த்தி ஆதரவளித்து பாவமன்னிப்பு பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய நிறைவேற்று சபை உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நற்பணி மன்ற நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, நல்லாட்சி, நீதிமன்ற சுதந்திரம், ஊடக சுதந்திரம், பொலிஸ் காவல்துறை சுதந்திரம் ஆகிய பல விடயங்கள் நமது ஆட்சியின் மூலம் மீண்டும் இந்த நாட்டில் இப்போது கொண்டு வரப்பட்டுள்ளன. இது போதாது. இந்…
-
- 1 reply
- 1.8k views
-
-
கேகாலையில் ஆயுர்வேத வைத்தியரால் கொரோனாவுக்காக கண்டுபிடித்ததாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் (08) ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியது என கூறப்படும் இந்த மருந்தை தம்மிக்க பண்டார என்ற ஆயுர்வேத வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அண்மையில் பரிசோதனை முயற்சியாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அருந்தி பரிசோதித்து இருந்தார். இந்நிலையிலேயே இன்று இதனை பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், 5 ஆயிரம் பேர் இந்த மருந்தை பெற்று சென்றுள்ளனர். குறித்த மருந்தினை பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் சென்று பெற்றதை அவதானிக்க முடிந்தது…
-
- 9 replies
- 1.8k views
-
-
பயங்கரவாத தாக்குதலுக்கு இரகசிய உத்தரவிட்ட ஆட்சித்தலைவர் முபாரக்கின் கடிதமும், சிறீலங்கா பிரதமர் உரையும் ஓர் ஒப்பீடு.. இன்று வெளியாகியுள்ள இரண்டு செய்திகள் பயங்கரவாதத்தின் முகமூடிகளை கிழித்தெறிவதாக இருக்கின்றன. ஒன்று சிறீலங்கா பிரதமர் டி.எம்.ஜெயரத்தினா ஆற்றிய உரை மற்றையது எகித்திய முன்னாள் அதிபர் கொஸ்னி முபாரக்கின் இரகசிய கடிதம். இந்த இரண்டையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மையான பயங்கரவாதமா ? இல்லை பம்மாத்து பயங்கரவாதமா ? உலக ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்ற கேள்வி எழும் . பொட்டம்மானின் சகாவின் உதவியுடன் தமிழகத்தில் புலிகளின் ஆயுதப் பயிற்சி மூன்று முகாம்களில் நடைபெறுவதாகக் கூறியுள்ளார் சிறீலங்கா பிரதமர். அத்தோடு தமிழக தலைவர்களை குறிவைத்து இது நடப்பதாகவும் கூறியுள்ளார்.…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஜெனிவா: கஜேந்திரகுமார்-சுமந்திரன்-விக்னேஸ்வரன் கொழும்பில் நேரில் சந்திக்கின்றனர்.! ஜெனிவா விவகாரத்தை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ம.ஆ.சுமந்திரன் மற்றும் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூவரும் கொழும்பில் நேரில் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபை அமர்வை தமிழர் தரப்பு ஒற்றுமைப்பட்டுக் கையாள்வதற்கான வாய்ப்புக் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் சார்பில் சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பில் கூட…
-
- 7 replies
- 1.8k views
-
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்! adminJanuary 28, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2025/210421/
-
-
- 33 replies
- 1.8k views
- 3 followers
-
-
2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒளிப்பதிவுகளை திரிபுபடுத்தப்பட்டு சர்வதேச ரீதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி கூறியுள்ளார். சனல் 4 அலைவரிசையினால் பயன்படுத்தப்பட்ட ஒளிப்பதிவுகளானவை எல்.ரி.ரி.ஈ.யினால் வெளியிடப்பட்ட திரிபுபடுத்தப்பட்ட ஒளிப்பதிவுகள் என ஐ.ரி.என். தொலைக்காட்சியில் தயா மாஸ்டர் கூறினார். எல்.ரி.ரி.ஈ. தலைவர் பிரபாரகனின் 12 வயதான மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக சனல் 4 அலைவரிசையின் புதிய வீடியோவில் குற்றம் சுமத்தப்படுவது குறித்து தயா மாஸ்டர் கூறுகையில், எல்.ரி.ரி.ஈ. காவலர்களின் கடும் பாதுகாப்பில் பாலச்சந்திரன் இருந்ததாகவும் அவர் தப்பியோட முயற்சித்தபோது எல்.ரி.ரி.ஈ. காவலர்களால…
-
- 19 replies
- 1.8k views
-
-
மன்னார், வவுனியா பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களின் போது வீரச்சாவடைந்த போராளிகளினதும், தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்த போராளிகளினதும் விபரங்களை தமிழிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 6 replies
- 1.8k views
-
-
-
-தாரகா- இன்றைய சூழலில் உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் சக்திகளும், அதேவேளை ஒடுக்குமுறைகளை கையாளும் அரசுகளும் மிகவும் ஈடுபாட்டுடன் அவதானிக்கும் விடயம் கொசொவோவின் சுதந்திர அரசு பிரகடனம்தான். இன்றைய நவீன அரசியல் என்பது ஒருபுறம் அரச பயங்கரவாதங்களுக்கான விளக்கங்களாலும், மறுபுறம் அதனை எதிர்த்து முயறிடிப்பதற்காக போராடி வரும் விடுதலை சக்திகளின் நியாயங்களாலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த ஒரு தேசம் சுதந்திர நாடாக பரிணமித்திருப்பதானது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு வகையில் கொசொவோ அரசு பிரகடனமும், அதனை குறிப்பாக அமெரிக்கா உட்பட ஜரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் அங்கிகரித்ததும…
-
- 2 replies
- 1.8k views
-
-
நாடாளுமன்றில் கடும் அமளிதுமளி – சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து குழப்பம் (3ஆம் இணைப்பு) நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, இறுதியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார். நாடாளுமன்றம் கூடியது – மஹிந்த விசேட உரை (2ஆம் இணைப்பு) நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று மீண்டும் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இன்றைய அமர்வில் நாட்…
-
- 16 replies
- 1.8k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி MAR 13, 2015by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இன்றுமாலை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் பற்றிய தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை. http://www.puthinappalakai.net/2015/03/13/news/4379
-
- 15 replies
- 1.8k views
-
-
2005ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளை ரத்துசெய்யுமாறு ஐனாதிபதி உத்தரவு. 2005 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் பகுதி ஒன்று பல்தேர்வு வினாத்தாள்களின் முடிவுகளை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். கனணி மயப்படுத்தலில் ஏற்பட்ட பிழை காரணமாக தமது பரீட்சை முடிவுகள் தொடர்பில் மீள் திருத்தம் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கப்பெற்றமையை தொடர்ந்தே இந்த உத்தரவு ஜனாதியினால் பரீட்சை ஆணையாளருக்கு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து கண்டி மற்றும் தங்காலை பகுதி மாணவர்களின் பெற்றோர் ஜனாதிபதியிடம் இந்த பிரச்சினை குறித்து விளக்கமளித்தமையை தொடர்ந்தே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்தார். இதேவேளை இந்தப்பிரச்சினை தீர்க…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் சிறுவர் போராளிகளை விடுவித்துள்ளமையை வரவேற்றிருக்கும் அமெரிக்கா, மனித உரிமை விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழகத்தின் உச்ச நட்சத்திரமாக போற்றப்படும் ரஜனி காந்த், அரசியல்வாதிகளான வை.கோ மற்றும் ராம்தாஸ் ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் இயங்கி வரும் தமிழ் வானொலிச் சேவைகள், தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வியாபார முயற்சிகளுக்கு புலிகள் பணத்தை முதலீடு செய்துள்ளனர். குறித்த ஊடகங்கள் வெறுமனே இலங்கை அரசாங்கம் மீது போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடுத்து, தமிழ் புலம்பெயர் மக்களின் பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதனை விளக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அதிக எண்ணிக்கையிலான தமிழ் இணைய தளங்கள் புலம் பெயர் தமிழர்க…
-
- 2 replies
- 1.8k views
-
-
அரசாங்க உத்தியோகம்-ஓசியில் இருப்பதற்கு அவங்களுக்கு சம்பளம், இது காணாதெண்டு சம்பளம் கூட்டோனும் எண்டு போராட்டம் வேற..அந்த ரெயில்வே டிபார்ட்மெண்ட்ல வேலைசெய்யிறவங்கட சம்பளம் பாத்தனியே 2 லச்சம் தம்பி..... வைத்தியசாலையில் ஒரு நாள் நிறைகுடிவெறியில் ஒரு குடிமகன் வந்திருந்தார் வாயில் தூசண வார்த்தைகளைக்கொட்டிக்கொண்டுவந்தவர் தனது கோபத்தை அங்கே பணிபுரிந்துகொண்டிருக்கும் வைத்தியர்கள் மீதும் தாதிகள் மீதும் காட்டினார். டேய் நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்...... சரி விடயத்திற்கு வருவோம் இலங்கையில் வரியை 15% இல் இருந்து 18% இற்கு அடுத்தவருடத்தில் இருந்து அதிகரிக்கப்போகின்ற…
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்காலின் பின்னர் தப்பிச்சென்று வவுனியா முகாமில் மறைந்திருந்தநிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பிரதான விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக சிறிலங்கா அரசு கூறியுள்ளது. இதனால் சந்தேகநபர்கள் மீதான வழக்கு முடியும்வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 யூன் மாதம் குற்றத் தடுப்புப் பிரிவினரால் குறித்த நான்கு போராளிகளும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைத்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டியுள்ளதென நீதிமன்றிற்கு அறிக்கை சமர்பித்து பொலிஸார் கூறியுள்ளனர். இயக்கத்தில் ஆயுதப் பயிற்சி பெற்று பல தாக்குதல்களை இவர்கள் புரிந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பொலிஸார்…
-
- 0 replies
- 1.8k views
-