ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
யாழ் போதனாவில் மருத்துவ தவறால் சிறுமியின் கை அகற்றம் ! யாழில். மருத்துவ தவறால் 08 வயது சிறுமியின் இடது கை, மணிக்கட்டின் கீழ் அகற்றப்பட்டுள்ள நிலையில் சிறுமி தொடர்ந்தும் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியை சேர்ந்த 08 வயது சிறுமி காய்ச்சல் காரணமாக கடந்த 25ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 26ஆம் திகதி, சிறுமியின் கையில் “கனுலா” (குளுக்கோஸ் , மருந்துகள் ஏற்றுவதற்காக மணிக்கட்டின் கீழ் பொருத்தப்படும் ஊசி) பொருத்தப்பட்டு, நோய் எதிர்ப்பு மருந்து (அன்டி பயோடிக்) ஏற்றப்பட்டுள்ளது. “கனுலா” உரிய வகையில் சிறுமியின் கையில் பொருத்தா…
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை : திமுகவிற்கு காங்கிரஸ் எச்சரிக்கை டெல்லி : தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தமிழக அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறப்போவதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வீரப்பமொய்லி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, நாட்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். ஆனால், அண்மைக்காலமாக, தமிழகத்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சிலர் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது த…
-
- 1 reply
- 1.6k views
-
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்! வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(11) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர். அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். (ச) https://newuthayan.com/arti…
-
-
- 29 replies
- 1.6k views
- 2 followers
-
-
சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனராம்! அறிக்கையை நிராகரிக்கிறார் டக்ளஸ் ஐ.நா பொதுச் செயலாளர் நியமித்திருக்கும் தருஸ்மன் குழுவினர் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர் என்று ஈபிடிபியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏசியன் ரிபியூன் இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்செயலாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை எழுதியிருப்பவர்கள் ஐ.நாவின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர். இவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் ஆகும். பான் கீ மூன் கூலிக்கு அமர்த்தப்பட்ட இந்த எழுத்தாளர்களை நியமித்…
-
- 13 replies
- 1.6k views
- 1 follower
-
-
விமானத்தாக்குதலை அடுத்து இப்பார்வையை காண்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
-
- 3 replies
- 1.6k views
-
-
சீன பாதுகாப்பு அமைச்சர், இலங்கைக்கு விஜயம் – ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சு! சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் (Wei Fenghe) இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு இலங்கையை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா வைரஸ் பரவலின் பின்னர், கடந்த ஒக்டோபரில் சீன மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் (Yang Jiechi) வருகையைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் மேற்கொண்ட இரண்டாவது மிக உயர்ந்த பயணமாக இது உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1212991
-
- 22 replies
- 1.6k views
- 1 follower
-
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்! adminJanuary 28, 2025 இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. https://globaltamilnews.net/2025/210421/
-
-
- 33 replies
- 1.6k views
- 3 followers
-
-
இன்னும் எத்தனை நாடகங்களை இன்னும் எத்தனை நாட்களுக்கு பார்க்கவேண்டி இருக்குமோ? ஆனால் கண்டிப்பாக மே 13க்கு பிறகு இருக்காது. போர் நடந்தால் மக்கள் சாகதான் செய்வார்கள் என்று முழங்கிய தலைவி இன்று ஈழ தமிழர்களுக்கு தனி ஈழம் அமைய வேண்டும் என்று மேடைக்கு மேடை முழங்குகிறார். ஐந்துவருடம் ஆட்சியில் மந்திரி பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று மேடைக்கு மேடை இலங்கையில் போரை நடத்துவதே காங்கிரஸ்தான் என்கிறார் , இந்த ஞானோதயம் எப்பொழுது ஏற்பட்டது என்று தெரியவில்லை ஒருவேளை புத்தருக்கு போதி மரம் போல் இவருக்கு அம்மாவின் நிழல் போல. ஈழ தமிழர்களுக்கா உண்மையாக பாடுபடுகிறவர் என்று நினைத்து வந்த திருமா, நான் காங்கிரசின் விசுவாசி காங்கிரஸுக்கு எதிராக நடக்கமாட்டேன் என்று சிதம்பரத்தில் முழ…
-
- 1 reply
- 1.6k views
-
-
Jul 20, 2010 / பகுதி: முக்கியச் செய்தி / தாயகன் முத்தையன்கட்டில் சுற்றிவளைப்பு - அச்சத்தில் மக்கள் : மணலாற்றில் வான் தாக்குதல்? கிளிநொச்சி முத்தையன்கட்டு பகுதியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படையினர் சுற்றிவைளப்புத் தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளமை மக்களை அச்சத்திற்குள் தள்ளியுள்ளது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டதாகக் கூறிவரும் சிறீலங்கா படையினர் வன்னியில் மீளக் குடியேறியுள்ள மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்ற போதிலும், சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற்கொள்ளாது இருந்தனர். ஆனால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென முத்தையன்கட்டை சுற்றி வளைத்த படையினர் வீடு வீடாக சோதனை நடத்தியதுடன், வீதிகளில் சென்றோரை மறித்து ஆள் அடையாள அட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
MI-24 உலங்கு வானூர்திகள் பூநகரி பகுதியில் விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதல் நடத்தியுள்ளன. வீரகேசரி இணையம் 11/8/2008 11:46:19 AM - இலங்கை விமானப்படையினரின் MI-24 உலங்கு வானூர்திகள் நேற்று இரவு 9.45 மணியளவில் பூநகரி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப்புலிகள் ஒன்று கூடும் இடங்கள் மீது விமானத்தாக்குதலை நடத்தியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் ஜனக நாணயக்கார தெரிவித்துள்ளார். இந்த வெற்றிகரமான விமானத்தாக்குதல் விடுதலைப்புலிகளுக்குப் பாரிய சேதங்களை விளைவித்திருப்பதாகப் பாதுகாப்புத் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.6k views
-
-
கடன் வழங்கும் நாடுகள் சிறீலங்காவை சுரண்ட தயார் நிலையில் Posted by கபிலன் on 12/07/2011 in செய்தி இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகள் வளச் சுரண்டலில் ஈடுபடக் கூடிய அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கு சில நாடுகள் பாரியளவில் கடன்களை வழங்கி வருவதாக அரசாங்கம் பிரச்சாரம் செய்கின்ற போதிலும் அதன் பின்னணியில் ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். குறிப்பாக சீனா போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை அனைத்துமே கடன் என்னும் வகையீட்டுக்குள் அடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுத…
-
- 1 reply
- 1.6k views
-
-
மே...மே...மேர்வின்...மே மே...மேர்வின்...மே...மே [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2011-09-20 10:10:11| யாழ்ப்பாணம்] தமிழ் மொழியின் சிறப்பும் சுவையும் மிகவும் அருமையானவை.மிருகங்கள், பறவைகளின் ஒலிகளுக்குக் கூடப் பெயர் சூட்டி அவற்றின் தன்மைக்கு மதிப்புக் கொடுத்த மொழி உலகில் தமிழ் மொழியாக மட்டுமே இருக்க முடியும். சிங்கம் கர்ச்சிக்கும், யானை பிளிறும், மயில் அகவும், குயில் கூவும், ஆடு கத்தும், மாடு கதறும் இப்படி மிருகங்கள், பறவைகளின் ஒலிக்குப் பெயர் சூட்டிய தமிழ்மொழி; ஆறறிவு படைத்த மனிதனின் ஒலி குறித்து வெவ்வேறு சொற்பதங்களை சூட்டி மனித உணர்வுகளை சொல்லூடாக வெளிப்படுத்தியது. புன்சிரிப்பு, எக்காளம், அழுகை, குளறல், கத்தல், கதறல், விம்மல், வெதும்பல் இப்படி ஒலிக்கு மட்டுமன்றி உ…
-
- 2 replies
- 1.6k views
-
-
மத்திய அமைச்சர் பா. சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்ட 13 தொழில்நுட்ப வல்லுனர்கள் தமிழக காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஆலங்குடிப் பகுதியில் வைத்து இவர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டபோதே இக் கைதுச்சம்பவம் நடைபெற்றதாகவும், இக்கைதின்போது இவர்களிடமிருந்த துண்டுப்பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இகைப்ப படம் பிடிக்க முயன்ற பத்திரிகை நிருபர்கள் தடுக்கப்பட்டதாவும், மேலும் அச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களைக் கைது செய்ய முயன்ற பொலிசாரிடம் என்ன வகையில் கைது செய்கின்றீர்கள் எனக் கேட்டபோது, இந்திய சட்ட அமைப்பின், 188, 147, 153(a), 504, 505 பிரிவுகளுக்கமைவாகவே இக் கைது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டதாகவும் அறியவருகிறது…
-
- 5 replies
- 1.6k views
-
-
யாழ் குடாநாட்டில் சிறீலங்கா படைகளுடன் இயங்கி வந்த தமிழ் ஒட்டுக்குழுக்கள், கொழும்பிற்கு ஓட்டமெடுப்பதற்கான பகீரத பிரயத்தனங்களில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் நாட்களில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலொன்று, தென்னிலங்கையில் இருந்து வடமராட்சி பருத்தித்துறை துறைமுகத்தை சென்றடைய இருக்கின்றது. குறிப்பிட்ட கப்பல் மீளவும் தென்னிலங்கைக்கு புறப்படும் போது, அதில் பல்கலைக் கழக மாணவர்கள், அரசாங்கம் பணியாளர்கள், மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற மக்கள் செல்ல இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, தென்னிலங்கைக்கு தப்பிச் செல்வதற்கான ஆயத்தங்களில், சிறீலங்கா துணைப்படை ஈ.பி.டி.பி குழு உட்பட, யாழ் குடாநாட்டில் இயங்கும் தமிழ் ஒட்டு…
-
- 0 replies
- 1.6k views
-
-
சூரியப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து உங்கள் அனைவரையும் சந்திப்பதிலும் குறிப்பாக இங்கு அதிகளவான மாணவர்கள் வருகை தந்திருப்பதானது மகிழ்ச்சியளிக்கின்றது. நமது நாட்டின் மீது நாம் அன்பு செலுத்தும் அதேவேளை எமக்கே உரித்த thx http://www.newjaffna.com/
-
- 7 replies
- 1.6k views
-
-
யாழ். முகமாலை மற்றும் மன்னார்ப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக சிங்களம் போர்ப்பிரகடனம் செய்துள்ளது. வழமைபோன்று சிங்கள பேரினவாத ஊடகங்கள் பொதுமக்களை உசுப்பிவிடுவதற்காக தம் செய்திகளை ஆசிரியர் தலையங்கமாகவும், செய்தி வடிவிலும் வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. 10 இலட்சம் கையெழுத்து வாங்கும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இராஜ தந்திர செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பின்கதவு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஒட்டுக்குழுக்கள், தமிழர் விரோத குழுக்கள் மூலம் எதிர்ப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. உண்ணா விரதத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால் தமிழர் தரப்பு நேற்று முந்தினம் வரை மூன்று அறிக்கைகள் விடப்பட்டுள்ளன. அந்த அறிக்கைகளும் தம்மை விலாசம் காட்டுவதற்…
-
- 6 replies
- 1.6k views
-
-
நிபுணர் குழு அறிக்கை: வாயை மூடிக்கொண்டு இருக்கவும் ரணில் எச்சரிக்கை வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011 ஐ.நா செயலாளர் நாயகம் பான் - கீ - மூனின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுக்கும் வரை அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து எதனையும் வெளியிட வேண்டாம் என அந்த கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, கட்சியின் உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை இதுவரை பகிரங்கப்படுத்தப்படாததாலும், அது குறித்து அரசாங்கம் உத்தியோபூர்வமான அறிக்கை எதனையும் வெளியிடாத நிலையிலும் அவசரமாக அறிக்கைகளை வெளியிடும் தேவையில்லை என கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடு சென்றிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் வ…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கையில் உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுக்கத் திட்டமிட்டுள்ளனர். இலங்கை அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான சிவிலியன்கள் சொல்லொனா துயரங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. யுத்த பிரதேசத்திலிருந்து சிவிலியன்களை மீட்டெடுக்கும் நோக்கில் இந்த யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளது வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டாக இந்த கோரிக்கையை முன்வைக்க உள்ளனர். எதிர்வரும் வாரத்தில் இந்த கோரிக்கை உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் காரணமாக சிவில…
-
- 3 replies
- 1.6k views
-
-
[size=4]கிழக்கு மாகாண சபையில் புதிய ஆட்சியை அமைப்பதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக இதுவரை எவ்வித அழைப்பும் கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப தெரிவித்துள்ளது. இவ்வாறான அழைப்பு கிடைத்தால் அதுகுறித்து ஆராயத் தயாராக இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.[/size] [size=4]கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அமைச்சர் டளஸ் அழகப்பெரும, கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு இணைந்துகொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்தார்.[/size] [size=4]கொள்கைகளில் வேறுபாடுகள் இ…
-
- 21 replies
- 1.6k views
-
-
இலங்கை ஆட்சியாளரின் நீண்ட கால சுலோகத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருக்கும் அமெரிக்கா [21 - November - 2007] * பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும்ஆட்டிவிடும் கைங்கரியத்தை வாஷிங்டனும் டில்லியும் தொடரக் கூடாதென்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு வ.திருநாவுக்கரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) நிதி முடக்கி வைக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விடுதலைப்புலிகளுக்கு எதிரானதே ஒழிய தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல என அமெரிக்க அரசாங்கம் 16.11.2007 ஆம் திகதி தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டுவதற்கும் ஆயுதக் கொள்வனவு செய்வதற்கும் TRO முகவர் நிலையமாகச் செயற்பட்டு வருகிறதென்பதே நிதி முடக்கத்திற்கான காரணமெனக் கூறப்பட்டுள்ளது. அதாவது, அமெரிக்க நிர்வாகத்தின் 13224…
-
- 0 replies
- 1.6k views
-
-
13.11.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7701cbc8a1653ad
-
- 0 replies
- 1.6k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 0 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான யுத்தத்தை தடுத்து நிறுத்தும் நோக்கில் உலகின் முக்கிய நாடுகள் இலங்கை மீது பல்வேறு பொருளாதார அழுத்தங்களை பிரயோகிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தெரியவருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மற்றும் வர்த்தக சலுகைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையில் யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டம், சர்வதேச நாணய நிதியக் கடன் உள்ளிட்ட முக்கிய பொருளாதார சலுகைகளை முடக்குவதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க சர்வதேச நாடுகள் முயற்சித்து வருவத…
-
- 2 replies
- 1.6k views
-
-
[size=3][size=4][/size][/size] [size=3][size=4]இந்தியாவிலேயே அதிக வயது கூடிய மருத்துவ பட்டப்படிப்பு மாணவர் ஒரு இலங்கைத் தமிழர் என இந்தியாவின் பிரபல ஆங்கில நாளிதழான த டைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக் காட்டியுள்ளது.[/size][/size] [size=3][size=4]இலங்கைத் தமிழரான சரவணபவன் என்பவர் தம்மீதான அவதானிப்பு சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த அவருக்கு தற்போது 50 வயதாகிறது.[/size][/size] [size=3][size=4]சென்னை பல்கலைக்கழகத்தின் 170 வருட கால வரலாற்றில், 50 வயது மாணவர் ஒருவர் கல்வி பயிலும் முதல் சந்தர்ப்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது.[/size][/size] [size=3][size=4]அவர் இரண்டாம் வகுப்பு பரீட்சையை மாத்திரம் 16 வருடங்களாக எழுதியிருப்பத…
-
- 7 replies
- 1.6k views
-