ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142853 topics in this forum
-
தம்புள்ளையிலுள்ள சர்ச்சைக்குரிய பள்ளிவாசலை அகற்றுமாறு புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சரும் பிரதமருமான டி.எம்.ஜயரட்ன இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ரங்;கிரி தம்புள்ள விகாரை புனித பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளமையினால் இப்பள்ளிவாசலை உடனடியாக அகற்றுமாறும் பிரதமர் உத்திரவிட்டுள்ளார். அகற்றப்படும் பள்ளிவாசலுக்கு பதிலாக வேறு பொருத்தமான இடத்தில் இஸ்லாமியர்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அதிகாரிகளை பிரதமர் அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்பளையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலொன்றையடுத்து பிரதமர் இந்த அறிவுறுத…
-
- 23 replies
- 1.6k views
-
-
சர்வதேசத்தின் கணிப்பு தடம் மாறிச் செல்கிறதா? ` இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுகின்றன. இதனால்தான் வெளிநாட்டு இராஜதந்திரிகள் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தச் சூழ்நிலை உருவாக வழிவகுத்தது இலங்கை அரசுதான். இப்படி அரசு மீது குற்றம் சுமத்தியிருக்கின்றது பிரதான எதிரணியான ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாட்டு இராஜதந்திரிகள் வரம்பு மீறித் தலையிடுகிறார்கள் எனத் துள்ளிக் குதித்துச் சீறுகின்றது அரசு. ஆனால் அவ்வாறு அவர்கள் தலையிடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியமைக்கு அடிப்படையே அரசின் குளறுபடிப் போக்கும் செயற்பாடும்தான். இலங்கையில் அரசின் பின்புல நடவடிக்கைகளாக அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்கள…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழகத்தில் தேர்தல் வெற்றியில் திமுக தொண்டர்கள் பட்டாசு வெடிகளை கொழுத்தி கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வீதிகள் தோறும் இனிப்பு வழங்கி திமுக தேர்தல் மகிழ்வில் கூத்தாடிக் கொண்டிருக்கிறது. தமிழன் இஞ்சி தின்ற குரங்காக ஆட்டம் போடும் நேரத்தை சரியாக குறிவைத்து சிங்கள இனவாதம் இறுதித் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது. தமிழன் வாழும் இரண்டு இடங்களிலும் வெடியோசை கேட்கிறது. ஓர் இடத்தில் கூத்தாடுகிறான், மறு இடத்தல் செத்து மடிகிறார்கள். தேர்தல் செய்திகளால் தமிழகம் முழுவதும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. அந்தப் போர்வைக்குள் தமிழர் முடங்கிக் கிடக்க சிங்கள அரசு தனது இன அழிப்பை வெற்றிகரமாக நடாத்திக் கொண்டிருக்கிறது. சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் தூக்கி வீசிவிட்டு தூக்கணாம் குருவிக் கூட்…
-
- 2 replies
- 1.6k views
-
-
கிசோர் மற்றும் தங்கேஸ்வரியின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார் தேச நிர்மாண அமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரின் நடவடிக்கை குறித்து சிறீலங்காவின் தேச நிர்ணமான அமைச்சர் நிசந்த புஞ்சி நிலமே அப்பலப்படுத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் கிழக்கு ஆக்கிரமிப்பில் 300 பேர் கொல்லப்பட்டதை உறுதி செய்து பெயர் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இரா.சம்பந்தன் உரையாற்றிய பின்னர் அதற்குப் பதிலளித்த தேச நிர்மாண அமைச்சர் புஞ்சி நிலமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் மற்றும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.தங்கேஸ்வரி ஆகியோர் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமது முழு ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் எனத் தெ…
-
- 6 replies
- 1.6k views
-
-
400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கொழும்பில் பெயர் குறிப்பிடப்படாத உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பதுங்கு குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 400 மில்லியன் ரூபாய்கள் செலவில் மிக நவீன வசதிகளை கொண்டதாக இந்த பதுங்கு குழி அமைக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைக்கப்பட்ட பொறியியல் நிறுவனம் ஒன்று இதை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கும் பணியில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமை…
-
- 7 replies
- 1.6k views
-
-
'படுகொலை செய்யப்பட்ட மகேஸ்வரன் எம்.பி. கடந்த வாரம் யாழ் செல்வதற்கு முன் 'சுடர் ஒளி' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியவற்றை இந்த அரசு அப்படியே நடைமுறைப்படுத்திக் காட்டிவிட்டது. தனக்கு கொலை அச்சுறுத்தல்கள் இருக்கின்றன, போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என முன் கூட்டியே மகேஸ்வரன் பல முறை அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதனை அரசு உதாசீனப்படுத்தி அவருடைய உயிரையே பறித்துவிட்டது.' என்று அரசின் மீது குற்றம் சுமத்துகிறார் ஐ.தே..கட்சியின் ஊடகப் பேச்சாளரான நா.உ. கயந்த கருணாதிலக்க. நேற்றுக்காலை எதிர்க்ட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலே இதனை அவர் தெரிவித்ததார். கடந்த 22ம் திகதி 'சுடர்ஒளி' பத்திரிகையில் வெளியான செய்தியை (சிங்கள மொழி பெயர்ப்பை) கய…
-
- 0 replies
- 1.6k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நோயாளிகளிற்கு மருத்துவர்கள் வைத்தியம் செய்வார்கள். ஆனால்.. மருத்துவர்களாக வளர்ந்து எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவைகள் செய்யவேண்டியவர்களே.. நோயாளிகளாக - நோய்களினால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களாக இருந்தால் நிலமை எப்படி இருக்கும்? இந்த அவலத்தை வேறு எவரும் அல்ல... யாழ் மருத்துவபீட மாணவர்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றது. உணவு, உடை, உறையுள், கல்விச்செலவுகள் என்று தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் கிடைக்காதநிலையில் மாணவர்கள் தற்போது திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றார்கள். தாய், தகப்பன், கூடிப்பிறந்தவர்களை பிரிந்த நிலையில்... அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாதநிலையில் மருத்துவபீடத்தில் கல்வியை தொடரும…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழத்தின் தாயுறவே! புலத்தில் உறவுகளையும், புலம் பெயர் தெசத்தில் வாழ்வினையும் தொலைத்து விட்டு நிற்கும் புலம் பெய தேசத்துறவொன்றின் இந்த மடலுக்காய் ஒரு சில நிமிடங்கள் ஒதுக்கு, ஒன்றித்து வாசி, உடன் செயற்படு. உன் உடன் பிறப்பெனும் உரிமையில் கேட்கின்றேன். ஈழத்தின் இறுதிக்கட்டப் போரினை இன்று முடித்து விடுவோம், நாளை முடித்து விடுவோம் என்று இறுமாந்திருந்த சிங்களத்தின் சிந்தனைகளை , சீறியெழுந்த போராளிகள் சிதறடித்தது கண்டு கலங்கிற்று சிங்களச் சிறிலங்கா. ஈந்த நாட்களுக்குள் முடித்து விடும் என்று நம்பி, இந்தியத் தேர்தலுக்கும்ட நாள் குறித்தாகி விட்ட நிலையில், இன்னமும் போர் முடியவில்லை என்பதும், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சர்வ தேசங்களுக்கு இந்தியாவைக் கேளுங்கள் என சிங்க…
-
- 3 replies
- 1.6k views
-
-
கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னி வான்பரப்பில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று வான்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சிறீலங்கா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த பொழுது கடந்த 2005ஆம் ஆண்டில் வன்னியில் தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகி வீழ்ந்து நொருங்கியதாக முன்னர் சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. எனினும், 2005ஆம் ஆண்டில் இரணைமடுவை அண்டிய பகுதிகளில் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமது வான்படையின் ஆளில்லா வேவு விமானம் ஒன்றை, பிறிதொரு விமானம் ஒன்றின் சகிதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்புலிகள் சுட்டு வீழ்த்தியதாக தற்பொழுது சிறீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சின் உயரதிகாரி…
-
- 1 reply
- 1.6k views
-
-
தேர்தல் முடிவுகள் விட்டுச் சென்றுள்ள உண்மைகள் இலங்கை அரசியலில் தமிழ்பேசும் மக்கள் தான் இலங்கையின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் இயங்கு சக்தி என்று நிலவிய மாயை உடைத்தெறியப்பட்டிருக்கின்றது. இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, மிகவும் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்கப்பட்ட தேர்தல் இன்று (27-01-2010) கணிப்புக்களை தவிடுபொடியாக்கி நிறைவினை நோக்கி வந்துள்ளது. தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயகத்தினால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையின் படி ஜனாதிபதி மகிந்த இராஜபக்ச 6.01 மில்லியன் வாக்குகளைப் பெற்று முன்னிலையில் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னோடு போட்டி இட்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சே…
-
- 2 replies
- 1.6k views
-
-
உலகத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி இருக்கிறது சேனல் 4 தொலைக்காட்சி! நெஞ்சில்ஈரம் உள்ள வர்களைக் கண்ணீர் வடிக்கவும், ரத்தம் சூடானவர்களைக் கொதிக்க வைக்கும் அளவுக்கும் ஈழத்துக் காட்சிகளை அந்தத் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது. இப்போது, ஈழத்தில் நடந்த போர்க்குற்றங்களையும் மனிதஉரிமை மீறல்களையும் ஐக்கிய நாடுகள் சபை விவாதித்துக்கொண்டு இருக்கிறது. ஆனால், இந்த நேரத்திலும், 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம்தான்� என்பதை ஒப்புக்கொள்வதற்குக்கூட பல நாடுகள் யோசிக்கின்றன என்பதுதான் வேதனை. வியட்நாம் போர் தாக்குதலில் ஒரு சிறுமி பதறியபடி நிர்வாணமாய் ஓடி வந்த புகைப்படம் வெளியானதற்கே, இந்த உலகம் பதைபதைத்துத் துடித்தெழுந்தது. ஆனால், ஈழத் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் நிர்வ…
-
- 0 replies
- 1.6k views
-
-
"நம்முடைய இனத் தமிழர்களை ஒழிப்பதற்கு இலங்கை அரசு போரிலே ஈடுபடுமேயானால் அப்போது எங்களுக்கு இந்திய அரசு துணையாக இருக்க வேண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கை கேட்டுக்கொள்கிறேன்," என்று தமிழக முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டார். இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுகவின் நிலையும் - மத்திய அரசுக்கு வேண்டுகோளும் எனும் தலைப்பில் நடந்த பொதுக்கூட்டத்தில், திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி பேசியது: நீண்ட காலத்திற்கு பிறகு இலங்கை பிரச்சனை குறித்து பேச வேண்டிய, செயல்பட வேண்டிய உறுதி எடுக்க வேண்டிய, ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு நம்முடைய நிலையை விளக்கி, நாம் தமிழகத்திலே எத்தகைய தாங்கொணா துயரத்திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை எடுத்துச் சொல்லி, அவர்…
-
- 1 reply
- 1.6k views
-
-
நீங்களும் பாதிக்கப்படிருந்தால், உங்கள் உறவினர் பாதிக்கப்படிருந்தால் அவர்கள் சார்பில் ஒரு வாக்கு மூலத்தை இன்றே காலம் தாழ்த்தாமல் பதிவு செய்யுங்கள் =========================================================================== வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், அரசியல் பிரமுகருமான க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகனான சூரியதீபனும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து சிறிலங்கா படைத்தரப்பினரால் தனியாக அழைத்துச் செல்லப்பட்டதை தான் நேரில் கண்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவுக்கு எழுத்து மூல சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து மூல சாட்சியம் வழங்கியவரின் பெயரை அவரது பாதுகாப்ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளவத்தையில் ரயில் மோதியதில் பதுளையை சேர்ந்த தமிழ் யுவதி பலி [24 - March - 2008] டிட்டோ குகன் கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ரயிலில் மோதுண்டு தமிழ் யுவதியொருவர் பலியாகியுள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்திலிருந்து மிக குறுகிய தூரத்திலேயே மாலை 3.18 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். இளைஞர் ஒருவருடன் இந்த யுவதி கை கோர்த்தவாறு ரயில் பாதை வழியே நடந்து வந்து கொண்டிருந்த போதே பின்னால் வந்த ரயில் யுவதி மீது மோதியுள்ளது. சம்பவத்தின் போது யுவதி ரயில் பாதையிலும் இளைஞன் ரயில் பாதையை விட்டு சற்று வெளிப்புறமாகவும் இருவரும் கை கோர்த்த படி நடந்து வந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேர…
-
- 4 replies
- 1.6k views
-
-
31 மே 2011 பிரிகேடியர் டென்சில் கொப்பாகடுவ, கேணல் விஜய விமலரட்ன ஆகிய இருவரும்.. 1987ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியை இந்திய மத்திய அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் மாநாட்டில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு இந்தியாவுடனான உறவு சரியான முறையில் பேணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். 1987ம் ஆண்டு வடமராட்சி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் தலையீட்டினால் இந்த இராணுவ முன்நகர்வை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியவில…
-
- 19 replies
- 1.6k views
-
-
தமிழர் தாயகப் பகுதியான திருகோணமலையில் சிறிலங்காவின் நடவடிக்கைகளால் இந்தியாவின் பிரசன்னம் அதிகரித்து வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமான "சண்டே ரைம்ஸ்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.6k views
-
-
My link
-
- 3 replies
- 1.6k views
-
-
""டெய்லிமிரர்'' ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் அவரைச் சந்தித்த பிரிட்டிஷ் தூதுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டார் கொழும்பு. ஏப்.20 பாதுகாப்புச் செயலாளரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக் கப்பட்டவர் என்று கூறப் படும் "த டெய்லி மிரர்' பத்திரிகை யின் ஆசிரியரான செல்வி சம்பிக்க லியனாராய்ச்சியை நேரில் சென்று சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்த கொழும் புக்கான பிரிட்டிஷ் தூதுவர், அடுத்த நாளான நேற்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட் டார். இவ்வாறு ஏ.எவ்.பி.செய்தி நிறுவனம் தகவல் வெளி யிட்டிருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ குறுகிய கால முன்னறிவித்தலோடு பிரிட்டிஷ் தூது வர் டொமினிக் சில்கொட்டை, பாதுகாப்பு அதிகம் நிறைந்த தமது அலுவலகத்துக…
-
- 5 replies
- 1.6k views
-
-
சவற்காரத்தின் விலை... சடுதியாக, அதிகரிப்பு! சவற்காரத்தின் விலையை 100%க்கும் மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, இலங்கையில் 70 ரூபாய் பெறுமதியான சவற்காரத்தின் விலை 115 ஆகவும், 75 ரூபாயாக இருந்த சவற்காரத்தின் விலை 145 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சிறுவர்களுக்கான சவற்காரத்தின் விலை 74 இல் இருந்து 175 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சவற்கார இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2022/1278413
-
- 27 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும். 20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை... என அரசின் எடுப்பு டக்ளஸ் கருத்து ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
நமால்- சிறீரங்காவின் காடைத்தனமே – அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தை அதிர்ச்சியடைய வைத்தது செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருந்த இரு சக்கர உழவு இயந்திரங்களில் ஒரு பகுதியை அரசாங்க தரப்பினர் சிங்கள மக்களுக்கு வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களை வழங்கும் இந்த வைபவத்திற்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக், ஸ்ரீரங்கா, மனு நாணயக்கார, சரா நாத பஸ்நாயக்க ஆகியோர் செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளின் எதிர்ப்பிற்கு மத்தியில் தமது அரசியல் ஆதரவாளர்களுக்கு உழவு இயந்திரங்களைப் பலவந்தமாகப் பெற்றுக்கொடுத்துள்ளனர். வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 470 ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.மட்டக்கள
-
- 4 replies
- 1.6k views
-
-
நேற்று மாலை ரொறன்ரோ நகரப்பகுதியில் நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தின்போது மகிந்தவின் வேடமணிந்து வந்தவரின் நிலமை மிகவும் கவலக்கிடமாக இருந்தது.... வேடதாரியை யுவதிகளும் சிறுவர்களும் பனிக்கட்டிகளைக்கொண்டு தாக்கினார்கள்... இந்த ஒளிப்பதிவினை முழுமையாக தரமுடியாவிட்டாலும் சிறு பகுதியினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.... நிழலுக்கே இந்த நிலையெனில் நிஜத்திற்கு....... http://ca.youtube.com/watch?v=pXLah9wFgB0&...re=channel_page நட்புடன் -நிசான்
-
- 2 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன. இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர். 98*19 அளவுடைய ரவைகள் - 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் - 2750 மற்றும் 357 ரக ரவைகள் - 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/106708/language/ta-IN/article.aspx
-
- 10 replies
- 1.6k views
-
-
நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் ஜெ - திருமா இலங்கையில் நடக்கும் போரில் தமிழர்கள் கொல்லப்படுவது இயல்புதான் என்று ஜெயலலிதா கூறியதிலிருந்து அவர் எத்தகைய நஞ்சு தோய்ந்த நெஞ்சைக் கொண்டவர் என்பதை தமிழ் சமுதாயம் உணர வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் செத்து மடியும் தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக, மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்து விட்டது. முதல் அமைச்சர் கருணாநிதியின் வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டு, பிரணாப் முகர்ஜியின் இலங்கைப் பயணத்துக்கான வாய்ப்பும் இல்லை என்றாகிவிட்டது. அரசுச் செயலாளர் சிவசங…
-
- 0 replies
- 1.6k views
-