ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143582 topics in this forum
-
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பிடித்தால் பொலிஸாருக்கு 5000 ரூபாய். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு தீர்மானித்துள்ளது. இந்த திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில், குடிபோதையில் வாகனம் ஓட்டும் ஒருவரை கைது செய்யும் பொலிஸ் அதிகாரிக்கு அவரது சம்பளத்தில் ரூ. 5000 கூடுதல் கொடுப்பனவாகவும் மேலும் கைது செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என போக்குவரத்து கட்டுப்பாட…
-
- 7 replies
- 480 views
- 1 follower
-
-
'வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை! கொழும்பு, அம்பாந்தோட்டை துறைமுக பங்குகளை சீனாவிற்கு விற்க முடிவு!!' கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்களின் உரிமை மற்றம் நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இக்கட்டுமானப் பணிகளுக்கான கடனாக சீனாவிடமிருந்து பெறப்பட்ட 3 பில்லியன் டொலர் தொகையினை மீளளிக்க முடியாத நிலையிலேயே சில அரச நிறுவனங்களின் பங்கு சீனாவிற்கு வழங்கப்படவுள்ளது. இத்தீர்மானத்தினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்குரிய அமைச்சரவை ஆவணத்தினை நிதியமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகச் செயலருமான …
-
- 7 replies
- 1.6k views
-
-
சொந்த வீட்டின் அருகில் இருந்து வீட்டிற்கு செல்ல முடியாத அவல நிலை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு தொடர்கின்றது என இலங்கை பாராளுமன்ற உறுப்பின சுமந்திரன் தெரிவித்தார். நேற்று கனடியத் தமிழர் பேரவையின் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் சிறப்பு அதீதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற முதுமொழி அறுவடை முடிந்து இயற்கைக்கு நன்றி தெரிவிக்கப்படுகின்றது. எதிர்காலத்தில் புதுப்பிக்கப்பட்ட வீட்டில் நாங்கள் சிறப்பாக வாழ்வோம் என்ற நம்பிக்கை தருவதாக அமைகின்றது. போரினால் இடப்பெயர்ந்த பல நூறு ஆயிரம் தாயகத்தில் உள்ள மக்கள் கூரைகளற்ற வீடுகளில் வாழ்கின்றார்கள். இன்னும் 200,000 மக்கள் தங்கள் சொந்த இடத்துக்குத் திரும்…
-
- 7 replies
- 1k views
-
-
(செ.தேன்மொழி) மெகசின் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. வெலிக்கடைச் சிறைசாலை வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த செல்லபிள்ளை மகேந்திரன் எனப்படும் கைதியொருவரே நேற்று முன்தினம் வியாழக்கிழமை இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் கூறியதாவது, மட்டகளப்பு பகுதியைச் சேர்ந்த செல்லபிள்ளை மகேந்திரன் என்பவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான்காம் திகதியே கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமை காரணமாக கைது செய்யப்பட்ட இவர் 50 வருட சிறைதண்டனையும் , ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்ட நிலையிலே மெகசின்…
-
- 7 replies
- 857 views
-
-
சிறிலங்கா இராணுவத்தினர் தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளின் மைய நகரமாகவும், அவர்களின் தற்போதைய தலைநகரமாகவும் உள்ள கிளிநொச்சி நகரை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் கைப்பற்றிவிடுவர் என்று தான் முழுமையாக நம்புவதாக சிறி லங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையான ரைம்ஸ் பத்திரிகைகக்கு தற்போதைய படை நவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது எமது படையினர் வன்னியில் நாளாந்தம் பெரும் வெற்றிகளை பெற்றவண்ணம் முன்னேறிக்கொண்டு செல்வதாகவும், இந்த வருட முடிவுக்குள் அவர்கள் விடுதலைப்புலிகளின் முக்கிய நடுவ நகரமான கிளிநொச்சிநகரை கைப்பற்றிவிடுவர் என …
-
- 7 replies
- 1.8k views
-
-
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்ட விவகாரத்தில் உண்மை இருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதாகவும், இதற்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்படுமாக இருந்தால் தான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், ‘முன்னாள் போராளிகள் பலர் என்னுடன் தொடர்பு கொண்டு விஷ ஊசி ஏற்றப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறானவர்களில் சிலருக்கு ஏற்றப்பட்ட விஷ ஊசிகளுக்கு எதிராக சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால் அவற்றை வெளிப்படுத்தக் கூடிய சூழல் தற்போது இல்லை. வைத்த…
-
- 7 replies
- 519 views
- 1 follower
-
-
வவுனியா கூட்டம்:ரணிலுக்கு ஏமாற்றம் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே, பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரப் பயணமாக நேற்று மாலை வவுனியா நகரசபைக் கலாச்சார மண்டபத்திற்கு சென்றிருந்தார். பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய மக்கள் இன்மையினால் கூட்டம் 4:30 மணிக்கே ஆரம்பமாகியது. ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலர் திஸ்ஸ அத்தனாயக்கவும் உடன் சென்றிருந்தார். கூட்டம் சரியான முறையில் ஒழுங்கமைக்கப்படவில்லை என்று கட்சியினரிடையே வாய்த்தகாரறும் ஏற்பட்டது. மண்டபத்தில் 80 வீதமான இருக்கைகள் காலியாக இருந்தன. சுமார் 200 பேர் மட்டுமே கூட்டத்திற்கு வந்திருந்தனர். வவுனியா தேர்தல் கூட்டம் ரணிலிற்கு பெரும் ஏ…
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழ் மக்கள் அறவழி போராட்டத்தை ஆரம்பிக்கவேண்டும்! அதனையே வீரவன்ஸவின் போராட்டம் வலியுறுத்துகின்றது. தேசிய அரசியல் உரிமைகளையும், உயிர்வாழும் உரிமையையும் வேண்டி நிற்கும் தமிழ் மக்கள் செய்ய வேண்டியதை, ஆளுகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் செய்வது விந்தையானது. உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழ் மக்கள் அறவழி சாத்வீகப் போராட்டங்களை மீண்டும் ஆரம்பித்திட வேண்டும் என்பதையே அமைச்சர் விமல் வீரவன்ஸவின் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் வலியுறுத்துகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஐ.நா.வளாகத்திற்கு முன்னால் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரதம் தொடர்பில் கருத்து தெரிவித…
-
- 7 replies
- 691 views
-
-
இலங்கைக்கு குதிரைகளை அன்பளிப்பு செய்தது இந்தியா இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆறு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இந்திய அரசால் பயிற்சியளிக்கப்பட்ட இந்தக் குதிரைகள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்தக் குதிரைகள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு ஒருங்கமைப்புத் தலைவர் பிரகாஷ் கோபாலன் இலங்கை இராணுவத்தினரிடம் இன்று இந்த குதிரைகளைக் கையளித்தார். குதிரைகளை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்றதுடன், இதன்போது குதிரைகள் பயிற்சியளிக்கப்பட்டதற்கான சான்றிதழ்களும், பிறப்புச் சான்றிதழ்களும் இலங்கை இராணு…
-
- 7 replies
- 765 views
-
-
பருத்தித்துறை- அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர்: நோயாளர்கள் அலைக்கழிப்பு! August 6, 2024 மருத்துவர் ஒருவர் அவசர நோயாளர் காவு வாகனத்தில் வீடு திரும்புவதற்காக, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளர்களை அலைக்கழித்து காக்கவைக்கப்பட்ட சம்பவம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்களினால் பரிந்துரைக்கப்பட்ட நோயாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு காக்கவைக்கப்பட்டே அவசர நோயாளர் காவு வாகனத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். …
-
-
- 7 replies
- 786 views
- 1 follower
-
-
தொடர்ந்து முன்னேறும் சிங்கள ராணுவத்துக்கு சமாதி கட்டுமா கிளிநொச்சி? 2-ம் உலகப்போர் உச்ச கட்டமாக இருந்த நேரம். ஹிட்லரின் ஜெர்மனி படை ரஷியாவுக்குள் புகுந்து வெற்றிகளை குவித்து தலை நகரம் மாஸ்கோவை பிடிக்க முன்னேறி கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் மாஸ்கோ ஜெர்மனி படையிடம் விழலாம் என்ற பரபரப்பான கட்டம். மாஸ்கோவை நோக்கி வந்த ஜெர்மனி படையை எதிர்கொள்ள லெனின் கிராடு என்ற இடத்தில் ரஷிய படை அரண் அமைத்து நின்றது. இருதரப்புக்கும் அங்கு கடும் சண்டை நடந்தது. ரஷியபடை அடித்த அடியில் ஜெர்மனி தடுமாறியது. ஜெர்மனி வீரர்கள் கூட்டம், கூட்டமாக செத்து விழுந்தனர். இனியும் தாக்குபிடிக்க முடியாது என்று கருதிய ஜெர்மனிபடை பின்வாங்கியது. அவர்களை ரஷியபடைகள் விடாமல் விரட்டி சென்றன. படை …
-
- 7 replies
- 3.2k views
-
-
முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்பு பலரும் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் எடுத்தவனையெல்லாம் துரோகி,இலங்கை அரசுடன் சேர்ந்தியங்குகிறார்கள்,விலை போய்விட்டார்கள் என்ற ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு தேச விடுதலையை நேசிக்கும் மக்களை குழப்புவதையே சில தமிழ் இணையங்கள் தற்போது வேலையாக வைத்துள்ளது. பேசி தீர்க்கவேண்டிய விடையங்களை இணையத்தில் எழுதி உங்கள் முகத்தில் நீங்களே காறித்துப்புவதாகவே இது உள்ளது. தலைமையின் வெளிப்பாடு இல்லாத இந்த காலப்பொழுதில் மக்களை தேசிய உணர்வுள்ளவர்களே வழிநடத்தி ஒரு குடையின் கீழ் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.போர் குற்றங்களை உலக அளவில் நிருபிப்பதற்கு போராட வேண்டும். ஆனால் நாம் செய்வது தான் என்ன?? …
-
- 7 replies
- 1.7k views
-
-
15.10.2006 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வீரகாவியமான கடற்கரும்புலி லெப்.கேணல் வளவன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
-
- 7 replies
- 687 views
-
-
நாவன்மையால் தமிழரை நடுத்தெருவுக்கு கொண்டுவரும் சுமந்திரன். இந்த நாடு(ஶ்ரீலங்கா) , ஒரேயொரு பிரச்சினையை, பல வருடங்களாகச் சந்தித்து வருகிறது. அதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்ற ஒரேயோர் எண்ணத்தில் தான், தான் இந்த அரசியலுக்குள் பிரவேசித்ததாகவும் அது வெற்றியளித்தாலோ அல்லது தோல்வி கண்டாலோ, தன்னுடைய அரசியல் பயணம் தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேசிய பிரச்சினைக்கான தீர்வுக்காக, புதிய சமூக ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்படல் வேண்டுமென்றும் அதற்கான சகல முயற்சியையும் தான் எடுப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த முயற்சி வெற்றியளித்தால், வந்த காரியம…
-
- 7 replies
- 1.3k views
-
-
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை! சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்காக சலுகை விலையில் மதுபான வகையொன்று அடுத்த வருடம் முதல் தயாரிக்கப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் உதயகுமார பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், மது வரி திணைக்களத்தின் இந்த வருடத்துக்கான வருமான இலக்கில் இதுவரையில் 210 மில்லியன் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டுக்கான மதுவரித் திணைக்ககளத்தின் வருமான இலக்காக 232 மில்லியன் ரூபாய் என மதிப்படப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள வருமான இலக்கு எதிர்வரும் 29 ஆம் திகதிக்குள் பெற்றுக் கொள…
-
-
- 7 replies
- 634 views
- 1 follower
-
-
ஊடகவியலாளரைத் தொலைபேசி மூலம் அச்சுறுத்தியுள்ள பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உடனடியாக அந்தப் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். நேற்று (11) மாலை கண்டியில் இடம்பெற்ற ‘சுதந்திர மேடை’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். பாதுகாப்புச் செயலாளர் மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் காரணமாக இந்த நாட்டு மக்களே வெட்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
-
- 7 replies
- 1.3k views
-
-
தற்போது தமிழகத்தில், நடைபயணம் மேற்கொண்டுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நேற்று நடைப்பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்தார். கடும் வெயிலின் காரணமாக ரத்த அழுத்தம் அதிகமாகி, மயக்கம் அடைந்தார் என தெரியவருகிறது. மயக்கம் அடைந்த நிலையிலும் நடைப் பயணத்தை கைவிடாது, டாக்டர்கள் சிகிச்சைக்குப்பின், மீண்டும் நடைபயணத்தை தொடர்ந்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அவரது மூன்றாம் கட்ட நடைபயணம், நேற்று முன்தினம் பொள்ளாச்சியில் இருந்து தொடங்கியது. முதல் நாளில் 20 கி.மீ., பயணம் மேற்கொண்ட வைகோ, கோட்டூரை அடைந்தார். அன்று இரவு கோட்டூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பின், இரவு அங்குள்ள ம.தி.மு.க.…
-
- 7 replies
- 890 views
-
-
கடத்தப்பட்ட மாணவி தப்பி வந்தார் - மட்டக்களப்பில் சம்பவம் திகதி: 05.05.2010 // தமிழீழம் இன்றுகாலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் தப்பிவந்துள்ளார். அவர் தெரிவித்துள்ள தகவல்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. களுதாவளை தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்விபயிலும் பா.நிரஞ்சலா என்ற மாணவியை பாடசாலை முன்றலில் கறுப்பு வேனில் வந்த இனந்தெரியாத நபர்கள் இன்று காலை கடத்திச் சென்றுள்ளனர். அவரை மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்க முற்பட்ட வேளை, அந்த மாணவி அங்கிருந்து தப்பி, எருவில் கண்ணகி வித்தியாலயத்திற்குச் சென்று பாடசாலை அதிபர் கைலாசபிள்ளையிடம் சம்பவத்தை விபரித்துள்ளார். பாடசாலை அதிபர் அந்த மாணவியு…
-
- 7 replies
- 921 views
-
-
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல்-4 பேர் காயம் வெள்ளிக்கிழமை, ஜூலை 23, 2010, 8:58[iST] ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசி அவர்கள் நடத்திய தாக்குதலில் நான்கு மீனவர்கள் காயமடைந்துள்ளனர். ஜூலை 17ம் தேதி ஒரு படகு காணாமல் போனது. இதையடுத்து 20 பேர் கொண்ட மீனவர்கள் குழு அந்தப் படகை தேடி கடலுக்குள் சென்றது. தனுஷ்கோடி அருகே காணாமல் போன படகு மிதப்பதைப் பார்த்து அதை தங்களது படகுடன் இணைத்து கரைக்குக் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு இலங்கை மீனவர்கள் வந்துள்ளனர். தமிழக மீனவர்கள் படகை நோக்கி பெட்ரோல் குண்டுகளை வீசித…
-
- 7 replies
- 785 views
-
-
தென்னிலங்கைத் தாக்குதல்கள்! யாரால் ? ஏன் செய்யப்பட்டது? -By Andrew http://www.sooriyan.com Sunday, 14 January 2007 தமிழர் தாயகத்தில் அறிவிக்கப்படதா ஒரு யுத்தம், ஒரு முழுமையான யுத்தமாக மாறிவரும் நிலையில், தென்னிலங்கையின் சுமூகமான வாழ்வியல், அரசியல் என்பன வேறொரு பரிமாணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தென்னிலங்கையின் கரப்பிட்டிய – நித்தம்புவப் பிரதேசத்திலும், ஹிக்கடுவப் பிரதேசத்திலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குள் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு மட்டுமல்ல கட்சி சாரா இராணுவப் புலனாய்வாளர்களுக்கும் பாரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இந்தக் குண்டுவெடிப்புகளுக்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் வழமைபோல புலிகளைக் குற்றஞ்சாட்டியிருந்தால…
-
- 7 replies
- 3k views
-
-
முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்: கிளிநொச்சியில் ஜனாதிபதி _ வீரகேசரி இணையம் 7/21/2011 11:13:00 AM எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ் போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். அதுவே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கின் நிர்மாண பணிகளை ஆரம்பித்துவைத்து உரையா…
-
- 7 replies
- 1.3k views
-
-
[ புதன்கிழமை, 24 ஓகஸ்ட் 2011, 00:07 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] விடுதலைப் புலிகளின் தோல்வியை தாங்க முடியாத சக்திகளே கிறீஸ் மனிதனின் பின்னணியில் இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்புச்செலயர் கோத்தாபய ராஜபக்ச கூறியுள்ளார். முஸ்லிம் சமய மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று மாலை நடத்திய கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள அவர், “விடுதலை புலிகள் இயக்கத்தை தோற்கடித்த சிறிலங்கா இராணுவத்தால் எதையும் சாதிக்க முடியும். எனினும் கிறீஸ் மனிதன் விடயத்தில் சிறிலங்கா இராணுவம் பொறுமையாக செயற்படுகின்றது. அதை பொதுமக்கள் இலாபமாக பயன்படுத்த கூடாது. …
-
- 7 replies
- 1.3k views
-
-
நாம் மூச்சாக எழுந்து நின்றால் தமிழீழம் விரைவில் வரும்: அனுராதபுரம் தாக்குதலுக்கு தலைமையேற்ற லெப்.கேணல் இளங்கோவின் இறுதி வேண்டுகோள் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 02:14 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] "வானேறி வந்து குண்டு போடுகின்ற சிங்கங்களை அவையின் குகைக்குள்ளேயே சந்திக்கப் போகின்றோம்- நீங்கள் எழுந்து மூச்சாக நின்றால் போதும் தமிழீழம் விரைவாக வந்து சேரும்" என்று அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலுக்குத் தலைமையேற்றுச்சென்ற கரும்புலி லெப். கேணல் இளங்கோ தமது அணியின் சார்பில் எழுதிய இறுதிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதம்: 09.10.2007 என் அன்பான மக்களுக்கு, சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்…
-
- 7 replies
- 3k views
-
-
தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து வைத்துக் கொண்டு புலிகள் மீண்டும் உருவாகப் போகிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் வந்துவிட்டது. என்றெல்லாம் தீவிரவாதிகள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளை நாங்கள் மீள உருவாக்கப் போகிறோம். தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்து விட்டோம். என தென்னிலங்கையில் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு பேசிவரும் தீவிரவாதிகளே வடக்கில் தேசிய பாதுகாப்பினால் இடம்பெயர்ந்து 25 வருடங்கள் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை வந்து ஒரு தடவை பாருங்கள். நான் அந்த மக்களை சந்தித்தேன் அந்த மக்களுடைய வாழ்க்கை முறையை பார்த்தேன். அவர்கள் வாழ்ந்த…
-
- 7 replies
- 1.4k views
-
-
பலத்த எதிர்பார்ப்பு ஆரவாரங்களுக்கு மத்தியில் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்திருக்கின்றார். மேற்கு நாடுகளின் - குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தமே பொன்சேகாவின் விடுதலைக்குப் பிரதான காரணமாக இருந்துள்ளது என்பது அனைவருக்கம் தெரிந்ததுதான். பொன்சேகாவின் வருகையுடன் சிறிலங்காவின் அரசியலில் முக்கியமான திருப்பங்கள் ஏற்படலாம் என்பது சாதாரண சிங்கள மக்களிடையே காணப்படும் எதிர்பார்ப்பாகும். பொன்சேகா வெளியே வந்தபோது காணப்பட்ட மக்களின் ஆரவாரம் இதனைத் தெளிவாகப் பலப்படுத்தியது. இந்த எதிர்பார்ப்புக்கள் எந்தளவுக்கு யதார்த்தமானவை என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சரத் பொன்சோகாவின் விடுதலை தொடர்பாக கடந்த சில மாத காலமாகப் பேசப்பட்…
-
- 7 replies
- 1.6k views
-