ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
மன்னார் மாவட்டம் பேசாலையில் அமைந்துள்ள காவல்துறை நிலையம் மீது இன்று காலை கடற் புலிகள் அதிரடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆறு படகுகளில் வந்த கடற்புலிகள் காலை 8.00 மணியளவில் காவல்துறை நிலையம் மீது தாக்குதலை நடத்தியுள்ளன. இதேவேளை தலைமன்னார் கடற்படைத் தளம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் விடுதலைப் புலிகளின் தாக்குதலை தாம் முறியடித்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தரப்பில் 17 பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகளின் ஒரு படகு சேதமடைந்ததாகவும் சிறிலங்கா படைத்தரப்புத் தெரிவித்துள்ளது. மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை.
-
- 6 replies
- 3.1k views
-
-
Sunday, 17 February 2008 இலங்கை ஜனாதிபதி மற்றும் அவரது உறவினர்களை கொலை செய்வதற்காக போட்ட ஒரு சதித் திட்டம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இது தொடர்பாக கைதானவர்களில் 10 தமிழரும் 4 சிங்களவர்களும் அடங்குவர். சிங்களவரில் ஒருவர் ஜனாதிபதியின் ஜப்பான் மொழி பெயர்ப்பாளராகும். அடுத்த மூவரில் இருவர் இராணுவத்திலிருந்து தப்பியோடிவர்கள். அடுத்தவர் ஒரு பெளத்த துறவியாகும். மேலதிக தகவல்கள்
-
- 6 replies
- 3k views
-
-
-றிப்தி அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த வாரம் ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பான் பிரதமர் சினோஸ் அபியின் அழைப்பினையேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 14ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார். நான்கு தினங்கள் ஜப்பான் தங்கவுள்ள ஜனாதிபதி, ஜப்பான் பிரதமர் உட்பட பல அரச முக்கியஸ்தர்களை சந்தி பேச்சு நடத்தவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஜப்பானுக்கான இந்த விஜயத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த டிசெம்பர் மாதத்திலேயே ஜப்பானுக்கான விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அப்போதைய ஜப்பானிய பிரதமரின் இராஜினாமாவை தொடர்ந்து குறித்த விஜயம் இறுதி…
-
- 6 replies
- 603 views
-
-
தீபாவளி பண்டிகை நாளில் இறைச்சி வாங்க சென்றவர் மீது கத்திக்குத்து..! யாழ்.கோப்பாயில் சம்பவம். தீபாவளி பண்டிகை நாளில் கோப்பாய் சந்தியில் மாட்டிறைச்சி கடைக்காரனின் கத்திக்குத்துக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கோப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவத்துடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்த சுன்னாகத்தில் வசிக்கும் இறைச்சிக்கடை உரிமையாளர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இறைச்சி வாங்கச் சென்றவர் பசு மாட்டு இறைச்சிபோல் உள்ளது என்று தெரிவித்ததால் உரிமையாளர் கோபமடைந்து கத்தியால் க…
-
- 6 replies
- 1.3k views
-
-
கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் வரவினை எதிர்பார்த்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பதுங்கித் தாக்குதல் நடவடிக்கைக்காக காத்திருந்தனர். அப்போது, சிறப்பு அதிரடிப்படையினருக்கும் விடுதலைப் புலிகளின் அணி ஒன்றுக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 5:10 நிமிடமளவில் நேரடியாக உக்கிர மோதல் இடம்பெற்றது. பல மணிநேரம் இடம்பெற்ற இம்மோதலில் 9-க்கும் அதிகமான சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் உயரதிகாரி ஒருவர் உட்பட 7 படையினர் படுகாயமடைந்துள்ளனர். தமது தரப்பில் 4 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் அவர்களுக்கு வீரவணக்கத்தினை தெரிவித்துக் கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். http://www.tamilskynews.com/ http…
-
- 6 replies
- 1.2k views
-
-
எம் தேசத்தை பாலைவனமாக்க அனுமதியோம் முல்லைத்தீவு மாவட்டத்தில் கூழாமுறிப்பு பகுதியில் பாரியளவிலான வன அழிப்பை மேற்கொண்டு, இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் என இளைஞர் அணி குறிப்பிட்டுள்ளது. இனப் பரம்பலை சிதைக்கும் நோக்குடனான குடியேற்றத்தை தடுத்து நிறுத்த கோரி இளைஞர் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஏற்கனவே மன்னாரில் வில்பத்து, வவுனியாவில் பம்பைமடு, முல்லைத்தீவில் குமாரபுரம் அடர் வனங்கள் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நோக்குடன் அழிக்கப்பட்ட வேளையில் இன நல்லிணக்கம் கருதி நாம் அனைவரும் அமைதி காத்திருந்தோம். ஆனால் இப்போது நிலமை எல்லை மீற…
-
- 6 replies
- 897 views
-
-
சம்பந்தன் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு கூட்டமைப்பு எம்.பி. சிவசக்தி ஆனந்தன் சபையில் முன்வைத்தார் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் அனுமதி மறுத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அரசியலமைப்பு சபையின் தலைவர் கரு ஜெயசூரியவிடத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சமயத்தில் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், மாவை.சோனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் உள்ளட்ட எதிர்க்கட்சியான கூட்டமைப்பின் எம்.பி.க்கள் சபையில் பிரசன்னமாகியருந்து அமைதியாக முற…
-
- 6 replies
- 607 views
-
-
தமிழக மீனவரைத் தாக்குகின்ற மூன்றாவது சக்தி எது? இந்தியாவின் தமிழக மீனவர் மீது மூன்றாவது சக்தி ஒன்றுதான் தாக்குதல் நடத்துகின்றது என அரசு அறிவித்து உள்ளது. அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் இதை தெரிவித்து உள்ளார். "தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வருவார்களாக இருந்தாலும்கூட இலங்கைக் கடல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவே மாட்டார்கள்.. எனவே தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கு பின்னால் மூன்றாவது சக்தி ஒன்று உண்டு என சந்தேகிக்க வேண்டி இருக்கின்றது." இவ்வாறு தூதுவர் தெரிவித்து உள்ளார். http://www.tamilcnn.org/index.php?action=fullnews&id=571
-
- 6 replies
- 1k views
-
-
இலங்கை இந்திய மத்திய அரசுடனே ஒன்றிணைந்து பணிபுரிவதாகவும் எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் இணைந்து பணிபுரிவதில்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில் - இலங்கை என்பது இறையாண்மை நாடு. இறையாண்மை நாடொன்றின் செயற்பாடுகள் என்பன பிரிதொரு அங்கீகரிக்கப்பட்ட நாடொன்றின் அரசுடன் சார்ந்தே இருக்குமே தவிர எந்தவொரு தனிப்பட்ட மாநிலங்களோடும் சார்ந்து இருக்காது. ஒரு நாட்டின் பிரச்சினையில் ஏனைய நாடுகளின் மத்திய அரசே தீர்மானம் மேற்கொள்ள முடியுமே தவிர மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றி பயனில்லை என்பதால்…
-
- 6 replies
- 1.3k views
-
-
வரலாற்றில் முதல் முறையாக சுவிஸ் பாராளுமன்றில் தமிழன் குரல். லுசர்ன் (LUZERN) மாநில பாராளுமன்ற உறுப்பினராக உள்ள லதன் சுந்தரலிங்கம் அவர்களை அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை.வருகிற ஐப்பசி 23 நடக்க உள்ள சுவிஸ் பாராளுமன்றத்துக்கான தேர்தலில் லதன் சுந்தரலிங்கம் அவர்கள் SP கட்சி சார்பில் போட்டியிடுகிறார் எனும் செய்தியை எமது உறவுகளுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அன்பான லுசர்ன் (LUZERN) வாழ் தமிழ்மக்களே உங்களின் வாக்கு அட்டைகள் சென்றவாரம் தபால் மூலம் கிடைக்க பெற்று இருபீர்கள் என நம்புகிறோம்.அவற்றை எமது குரல் பாராளுமன்றத்துக்கு வெளியில் அல்ல, உள்ளே ஒலிக்க பயன்படுத்துவோம்.எமது வரலாறு தந்த இந்த ஈடுஇணையற்ற வாய்ப்பை எமது முழுமையான பங்களிப்பிநூடாக நிறைவேற்…
-
- 6 replies
- 1.7k views
-
-
கடத்தல் சம்பவங்களுக்கும் அரசாங்கத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திரச சமரசிங்க தெரிவித்துள்ளார். சில தரப்பினர் குற்றம் சுமத்துவதனைப் போன்று இலங்கையில் இரகசிய காவல்துறையினர் கடத்தல்களில் ஈடுபடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காவல்துறையினரும், அதனுடன் தொடர்புடைய தரப்பினரும் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரேம்குமார் குணரட்னத்தை காவல்துறையினர் கைது செய்யவும் இல்லை அவரை விடுதலை செய்யவும் இல்லை என திசர சமரசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் கடத்திச் செல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globa…
-
- 6 replies
- 693 views
-
-
எப்போதும் சம்பந்தன்தான் கூட்டமைப்பின் தலைவர்.! – மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று சுமந்திரன் திட்டவட்டம் .! “இரா.சம்பந்தன், கட்சியை வழிநடத்தக்கூடிய ஆற்றல் இருக்கும் வரைக்கும் – சுகதேகியாக இருக்கும் வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக அவரே செயற்படுவார். அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. அவருக்குரிய ஆற்றலும் அனுபவமும் இப்போது வேறு எவரிடமும் இல்லை.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ‘சக்தி’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற ‘மின்னல்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “இரா.சம்பந்தனுக்குப் பின்னர் தமி…
-
- 6 replies
- 848 views
-
-
சம்பந்தன் சமுகமளிக்காமையால் பாராளுமன்றக்குழு கூட்டம் இரத்து : வியாழனன்று கூடலாம்? (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சமூகமளிக்காமையின் காரணமாக நேற்று கூடவிருந்த பாராளுமன்றக்கு குழு கூட்டம் இறுதி நேரத்தில் இரத்தானது. அதேநேரம், எதிர்வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை அன்று கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவை கூட்டடுவதற்கு எதிர்பார்ப்புக்கள் இருப்பதாக தெரியவருகின்றது. எவ்வாறாயினும் அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட அறிவிப்புக்கள் இரா.சம்பந்தனிடத்திலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுகின்றது. இதேவேளை, இருபதாவது திருத்தச்சட்டம் சம்பந்தமாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பின…
-
- 6 replies
- 1.2k views
-
-
(ஆர்.ராம்) கிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் இந்தியா விசேட கரிசனை செலுத்தியுள்ளதோடு, அதுபற்றிய உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதிலும் அதீத ஈடுபாட்டுடன் அடுத்துவரும் நாட்களில் சில நகர்வுகளை செய்யவுள்ளது. இதேவேளை, தற்போதுள்ள கொரோனா நெருக்கடிகள் சொற்பகாலத்தில் கட்டுக்குள் வரும் பட்சத்தில் குறுகிய கால விஜயமொன்றை இந்திய வெளிவிவாகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் விரைந்து மேற்கொள்வதற்குரிய சாத்தியப்பாடுகள் அதிகமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்தவார நடுப்பகுதியில் நடைபெற்றிருந்தது. அதாவது, அமெரிக்க இராஜாங்க …
-
- 6 replies
- 636 views
-
-
கிளிநொச்சியில் வீசப்பட்ட துண்டுப் பிரசுரங்கள்! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல்லினை நேற்று மாவீரர்களின் உறவினர்கள் முன்னாள் போராளிகள் இணைந்து நாட்டியிருந்தனர். கல்லறை அமைக்கும் பணி காவல்துறையினரால் …
-
- 6 replies
- 463 views
-
-
எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக ஸ்லின் 143 இசட் விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள இலங்கை மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக எமது இணையத்தளத்திற்கு நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். எரித்திரியாவில் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற விமானப் படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமான…
-
- 6 replies
- 1.6k views
-
-
ஐரோப்பிய நாடு ஒன்றில் பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்க வேண்டும் எனச் சிரேஷ்டஅமைச்சர்கள் சிலர் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் ஊர்ஜிதமானதானால் வரவேற்கத்தக்கவையே. ஏனெனில் நாட்டில் சமாதான முயற்சிகள் முன்னேற்றம் காண்பதற்கும் அமைதிச் சூழ்நிலை தோற்றுவதற்கும், இது சிலவேளை உதவக்கூடும். ஆனால் இச்சிரேஷ்ட அமைச்சர்களின் ஆலோசனைகளை சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிறைவேற்றத்தக்கதானதொரு சூழ்நிலை உள்ளதா? என்பது கேள்விக்குரியதொன்றே. ஏனெனில் அவர் உருவாக்கியுள்ள அரசியல் களம் அதற்குச் சாதகமானதாக இருப்பதாகத் தெரியவில்லை. அதாவது சமாதான முயற்சிகளுக்கு மாறானதொரு கூட்டையே சனாதிபதி ஏற்படுத்தியுள்ளார். ஒரு புறத்தில் அவர் சனாதிபதியாவதற்கு உதவிய ஜே.வி.பியினரு…
-
- 6 replies
- 1.9k views
-
-
இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் தமிழ் ஈழம் மலரும்: வைகோ * Sunday, January 30, 2011, 13:44 பிரபாகரன் உயிருடன் வருவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும் என்று வைகோ கூறினார். இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் தியாகம் செய்த முத்துக்குமார் மற்றும் 18 பேரின் நினைவு அஞ்சலி பொதுக்கூட்டம் சென்னை பெரவள்ளூரில் நேற்று இரவு நடைபெற்றது. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க …
-
- 6 replies
- 945 views
-
-
-ஐ.நா.பாதுகாப்பு சபை செயற்குழுவுக்கு இலங்கை வலியுறுத்தல் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும், ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு இது குறித்து சிபார்சு செய்ய வேண்டுமெனவும் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் தொடர்பான பாதுகாப்பு சபையின் செயற்குழு கூட்டத்தில் இலங்கை வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் சிறுவர்கள் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் குறித்து செயலாளர் நாயகத்தின் அறிக்கையை ஆராயும் பொருட்டு நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.தலைமையகத்தில் சிறுவர்கள் மற்றும் ஆயுதமோதல்கள் தொடர்பான பாதுகாப்பு சபை செயற்குழு வெள்ளிக்கிழமை கூடியது. இதன் போதே, ஐ.நா.வுக்கான இலங்கையின…
-
- 6 replies
- 2.2k views
-
-
முள்ளிவாய்க்களில் நடத்து என்ன ? ஆனந்தபுரத்தில் தலைவரை வெளியேற்றிய கேணல் கஜனின் – மனைவி சிறப்பு பேட்டி Friday, April 29, 2011, 13:08 ஆனந்த புரத்தில் தலைவர் நின்ற பகுதியில் இராணுவ சுற்றி வளைப்பு பொக்ஸ்சை (box ) உடைத்து தலைவரை பாதுகாப்பாக அழைத்து சென்ற வீர தளபதி கேணல் கஜன் அவர்களின் துணைவியார் வழங்கிய பரப்பரப்பு பேட்டி . தலைவர் மகன் சாள்ஸ் அந்தோணி -மகள் துவராக -தளபதி சொர்ணம் மகள் உட்பட பலர் எவ்வாறு வீரகாவியம் ஆனார்கள் . இராணுவத்துடன் கையால் சண்டை பிடித்த போராளிகள் .. பல திடுக்கிடும் தவலக்ளுடன் கண்ணீர் மல்க அந்த களமுனை சம்பவத்தை விபரித்தார் . இந்த வீர தளபதிகளின் தியாகங்கள் வீண்போகாது . தமிழா இதன் பின்னாரவது ஒன்றிணைந்து எமது போராட்டத்தை வென்ற…
-
- 6 replies
- 3.5k views
-
-
வெள்ளை வான் விவகாரம் – மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் 4 மணிநேரம் விசாரணைJUL 23, 2015 | 12:53by கார்வண்ணன்in செய்திகள் மீரிஹான பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரால் பயன்படுத்தப்படும் வெள்ளை வான் கைப்பற்றப்பட்டது தொடர்பாக, மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவிடம் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படைப்பிரிவின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சில் இணைப்பதிகாரியாகப் பணியாற்றுபவருமான மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான், கடந்த திங்கட்கிழமை இரவு மீரிஹாவின் வைத்து சிறிலங்கா காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. இதில் இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் மூன்று மெய்க்காவலர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இர…
-
- 6 replies
- 925 views
-
-
முள்ளிவாயக்க்hலில் படுகொலை செய்ய்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இன்று மாணவர்கள் ஒன்றுகூடலாம் என்றே யாழ் பல்கலைக்கழகக மாணவர் ஒன்றியச் செயலாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகச் சூழலில் இராணுவ ஜீப் வண்டிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந்மீது இன்று அதிகாலை கூரிய ஆயுதங்கள், கம்பிகளால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்துப் பீட மாணவர்களும் பல்கலைக்கழகத்தில் கூடியுள்ளனர். நேற்றைய தினம் இரவு யாழ் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் மாணவர்களின் அறைகுக்கள் நுழைந்துள்ளனர். அதிகாலை வேளையில் விடுதியை காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படு…
-
- 6 replies
- 1.5k views
-
-
பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு வெளிநாட்டிலாவது நடவடிக்கை பொறுப்புக்கூறும் கடப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு இலங்கையிலோ அன்றேல் வெளிநாட்டிலோ நடவடிக்கை எடுக்கப்படும் என உண்மை ,நீதி ,இழப்பீடு மற்றும் மீள நிகழாமை தொடர்பான ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் எச்சரித்துள்ளார். கொழும்பு ஐநா தலைமைப்பணிமனையில், இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பப்லோ டி கிரீஃப் இந்த எச்சரிக்கையை விடுத்தார். இலங்;கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் 2015ம் ஆண்டு மார்ச்சில் முதலாவது விஜயத்தை ஆரம்பித்த பப்லோ டி கீரிப் இம்முறை ஐந்தாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப்பேசியிருந்…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஐ.நாவுடனான மோதல்களில் இருந்து பின்வாங்கும் அணிசேரா நாடுகள் திகதி: 11.07.2010 // தமிழீழம் சிறீலங்கா அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான மோதல்களில் சிறீலங்காவுக்கு சார்பான நிலைப்பாட்டை கொண்டுள்ள அணிசேரா நாடுகள் தற்போது ஐ.நாவுக்கு எதிராக மென்மையாக போக்கை கடைப்பிடிக்க தலைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: சிறீலங்காவுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையுடன் தீவிரப்போக்கை கடைப்பிடித்து வந்த 118 நாடுகளின் கூட்டமைப்பான அணிசேரா நாடுகள் தற்போது தமது நிலையில் இருந்து பின்னடித்து வருவதாக சிறீலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்ட போராட்டம் குறித்து அணிசேரா நாடுகள் சிறீ…
-
- 6 replies
- 1.4k views
-
-
யாழின் முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முயற்சியாக இன்றிலிருந்து முக்கியமான இடங்களில் இராணுவ சோதனை சாவடிகள் அமைத்து வீதியால் பயணிப்போரை சோதனையிட உள்ளதாக யாழ்ப்பாண ராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் பொதுவெளியில் அதிகளவாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேற்படி விடயம் தொடர்பில் அண்மையில் விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநரால் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாணத்தி…
-
- 6 replies
- 652 views
- 1 follower
-