ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. சிறீலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான போர் தற்போது களமுனை நகர்வுகளை விட இரஜதந்திர நகர்வுகளில் அதிகம் சிக்கி கொண்டுள்ளது. உலகின் இந்த நகர்வுகளில் சிக்கிக்கொள்ளாமல் விரைவாக போரை நிறைவு செய்து விடவே சிறீலங்கா அரசும், இந்திரா காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசும் கடும் முயற்சிகளை கடந்த வாரமும் இந்த வாரத்தின் ஆரம்பத்திலும் மேற்கொண்டிருந்தன. எனினும் விடுதலைப்புலிகளின் எதிர்த்தாக்குதல்கள், அனைத்துலகத்தில் தமிழ் மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் காரணமாக அவர்களின் இந்த திட்டம் கைகூடவில்லை. பாதுகாப்பு வலையத்தின் மீது கனரக ஆயுதங்களை பயன்படுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
அம்பாறை - சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. இதன்போது பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது. அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அம்பாறை பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக…
-
- 18 replies
- 1.4k views
-
-
கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி! சிறிலங்கா விமானப்படை தியத்தலாவ முகாமில் மாணவ கடெற் பயிலுனர்களுக்கு ஆயுதப் போர்ப்பயிற்சிகளையும் வழங்கியுள்ளது. இந்தப் பயிற்சி முகாமுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களும், மட்டக்களப்பில் இருந்து முஸ்லிம் கல்லூரி மாணவர்களும் சிறிலங்கா விமானப்படையினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். சுமார் 1000 வரையான பாடசாலை மாணவர்கள் 40 பிளட்டூன்களாகப் பிரிக்கப்பட்டு இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒரு வாரகாலம் தியத்தலாவ விமானப்படைத் தளத்தில் வைத்து இவர்களுக்கு ரி-56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாளும் போர்ப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசாங்கம் மீசை முளைக்காத பாடசாலை …
-
- 4 replies
- 1.4k views
-
-
Published on September 21, 2011-1:29 pm No Comments தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெறவுள்ளது என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அறிவிப்பு விடுத்திருந்தார். இந் நிலையில் இந்த நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் மீறி நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனு…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை அமெரிக்கா ஆதரித்து அதை அவசர அவசரமாக அமுலாகியபோது இலங்கையில் சிங்கள அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அது ஒரு முட்டுக்கட்டையாகவேதான் அமையும் என்பது அவ்வேளையில் அமெரிக்காவுக்கு தெரிந்திருக்கவில்லையா? என்ன இப்போது மட்டும் வடக்கு கிழக்கைப் பிரிக்க வேண்டுமென்ற தீர்ப்பு பேச்சுவார்த்தைக்கு சாதகமில்லை என்று கூறி அமெரிக்கா முதலைக் கண்ணீர் வடிக்கிறது. ரிச்சர்ட் பவுச்சரின் இலங்கைப் பயணமும் அவர் சிங்கள இராணுவத்துடன் மேற்கொண்ட சந்திப்புகளும் ஒரு நடுநிலையான இராஜதந்திர நகர்வுகளாகக் கருதமுடியாது. http://nitharsanam.com/?art=21063
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுங்கள் ‐ ஓப்ரா வின்பெரியிடம் மாயா கோரிக்கை: இலங்கையில் ஆபத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு உதவும் வகையிலான முனைப்புகளை மேற்கொள்ளுமாறு இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட பிரித்தானியாவைச் சேர்ந்த ஆங்கிலப் பாடகியான மாயா அருள்பிரகாஷம், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி வழங்குனரான ஓப்ரா வின்பெரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில்; இந்த கோரிக்கையை மாயா விடுத்துள்ளார். இலங்கை விமானப்படையினர் இந்த வாரத்தில் தமிழர்களின் வீடுகள், முகாம்கள் மீது குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த மாயா, ஒப்ராவின் கைகளை இறுக்கப் பற்றி பிடித்துவாறு இந்தக் கோரிக்கை விடுத்த…
-
- 9 replies
- 1.4k views
-
-
யாள்ப்பாந பேரூந்திள் தமில் நள்ள நிளையிழ் விழையாடுது ( காணொழி) 2010-12-09 13:52:34 ]நாங்களும் எழுத்துப் பிழை விட்டுத்தான் சில செய்திகள் பிரசுரிக்கின்றோம்.... ஆனால் யாழ்ப்பாணப் பேரூந்துகளில் தற்போது கண்டபாட்டுக்குத் தமிழ் கொலை செய்யப்படுவதைப் பார்க கவலையா இருக்குப் பாருங்கோ... http://newjaffna.com/fullview.php?id=MTE0OA==
-
- 1 reply
- 1.4k views
-
-
ஒய்யாரமாகவே ஊரைக் கூட்டியே சிறப்பாதான் வந்தாரடி குதம்பாய் - ஆனா சிதம்பரம் செருப்பா சிரிச்சாரடி! பொய்முகம் கண்டதும் பொறுக்க மாட்டாமலே புறப்பட்டு வந்தடி குதம்பாய்…. அந்தச் செருப்புக்கு நன்றியடி! சிங்காரம் கெட்டு, செருப்படிப்பட்ட சிதம்பரம் மூஞ்சிக்கு சிவகங்கை ஏதுக்கடி குதம்பாய் - காங்கிரசுக்கு தேர்தல் ஒரு கேடாடி! செருப்படிபட்டதை வெளியில் சொன்னாக்கா தண்டிக்க வேணுமாண்டி குதம்பாய் - தமிழின துரோகி தங்கபாலுதான் மிரட்டுறாண்டி! இந்த மூஞ்சிக்கு ஏத்த அளவு என்னான்னு பாத்து வீசுங்கடி குதம்பாய்…. ஈழத்து செருப்பையும் சேத்துக்கடி! ஜெர்னைல் சிங் போட்ட செருப்புக்கும் கோவம் வந்த்து ஏதுக்கடி குதம்பாய் - அந்த வரலாறை கூறுங்கடி! பிந்தரன்வாலாவை…
-
- 7 replies
- 1.4k views
-
-
புதிய சானல் 4 போர்குற்ற ஆவண வெளியீடு http://bcove.me/3ews1u8f http://bcove.me/xggd89lu http://bcove.me/e22ay7jh மூடி விட்டு போகலாம் என பார்த்தாலும் சில கோரகாட்சிகள் .. அனைத்துலக ரீதியில் செயல்பட இந்த எளிய தோழரின் ஆலோசனைகள் 1) அந்தந்த நாடுகளில் தமக்கு சார்பாக வாதிட ஈழ தோழர்கள் தலைமையிலான சட்டத்தரணிகளின் அமைப்புகளை உருவாக்குதல் 2) வேலை வாய்ப்புகளில் தாங்கள் உயர் அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் 3) வங்கி ஒன்றினை உருவாக்கி அனைத்து ஏழை நாடுகளையும் கவர்ந்திடல்(வருமா வராதா என்பதெல்லா கேட்கபடாது ) 4)சிங்களவனுக்குள் காசு பணத்தால் அடித்து விட்டு உளவு துறையை இறக்கிவிடல்( ஏன் அவந்தான் கால்ம் பூர…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விசேட குழுவின் சிரேஷ்ட ஆலோசகராக ஜெனரல் சவேந்திர சில்வாவை எவ்வாறு அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்து ஐ.நா.வையும் அதன் பின்னர் அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தையும் மூன்று வாரங்களுக்கு முன்னர் இன்னர் சிற்றி பிரஸ் கேட்க ஆரம்பித்தது. இலங்கை தொடர்பான ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர்குழுவின் அறிக்கையில் போர்க்குற்றத்துடன் சம்பந்தப்பட்டதாக சவேந்திர சில்வாவின் 58 ஆவது படையணி திரும்பத் திரும்ப பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இதனை ஏற்பாடு செய்யுமாறு கூறப்பட்டிருந்ததாக இன்னர் சிற்றி பிரஸுக்கு பங்களாதேஷின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பெப்ரவரி 14 இல் கூறியிருந்தார். பெப்ரவரி 16 …
-
- 3 replies
- 1.4k views
-
-
-
அனுராதபுரம் வான் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கியது எப்படி? "டெய்லி மிரர்" [வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2007, 05:18 PM ஈழம்] [பி.கெளரி] அனுராதபுரம் வான் படைத்தளத்தை கடந்த திங்கட்கிழமை அதிகாலை தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு தாக்கி அழித்தனர் என்பது தொடர்பாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான டெய்லி மிரரில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் சுனில் ஜெயசிறீ தெரிவித்துள்ளார். அதன் முக்கிய பகுதிகளை அறிய.. http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கையினால் மாலைதீவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சார்க் நினைவுச்சின்னம் சேதமாக்கப்பட்டது இலங்கை அரசாங்கத்தினால் வடிவமைக்கப்பட்டு, மாலைதீவுக்கு அன்பளிப்புச் செய்யப்பட்ட சார்க் நினைவுச்சின்னம், மசகு எண்ணெய் ஊற்றப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேசிய சின்னத்தை குறிக்கும் இந்த சிங்கச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானிய நினைவுச்சின்னமொன்று உடைக்கப்பட்டு எரிக்கப்பட்டு, திருடப்பட்டதற்கு மறுநாள் இந்த சிங்கச் சிலை சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை உருவ வழிபாட்டு கலாசாரம் என எதிர்ப்பாளரக்ள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இச்சிலைகளை சார்க் மாநாட்டுக்காக மாலைதீவுக்கு இறக்குமதி செய்ய அனுமதித்தகைம்காக மாலைதீவு சுங்கத் திணைக்களத்திற்கு எதிராக மலைதீவ…
-
- 4 replies
- 1.4k views
-
-
'இருமுனைப் போரை தமிழினம் இன்று சந்திக்கின்றது': சு.ப.தமிழ்ச்செல்வன் [சனிக்கிழமை, 2 யூன் 2007, 09:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் பேராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்" என்று தமிழீழ விடுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிழக்கில் என்ன நடக்கப் போகின்றது? [29 - July - 2007] [Font Size - A - A - A] -சங்கரன் சிவலிங்கம்- ஜனாதிபதி மகிந்தவின் தொப்பிகல திருவிழா ஒருவாறு முடிந்துவிட்டது.இராணுவத் தளபதிகள், அரசியல்வாதிகள் மாறியுள்ள நிலையில் இவ்விழவின் மூலம் பொலிஸ் அலுவலர்களும் அரசியல்வாதிகளாக மாறியிருந்தனர். கொழும்பு வடக்கிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் பொலிஸ் அலுவலர்களே வெற்றிக் கொடியேற்றி பாற்சோறு வழங்கினர். பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்கனவே அச்சடித்து வழங்கப்பட்ட அறிக்கையையும் வாசித்தனர். கிழக்கில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகளே அவ்வறிக்கையில் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. படையினர் மேற்கொண்ட கூட்டுக்கொலைகள் பற்றி மூச்சே விடப்படவில்லை. அதிபர்களும் ஆசிரியர்களும் தாங்கள் எதுவும் உரையாற…
-
- 1 reply
- 1.4k views
-
-
04.11.2007 கொழும்பு துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் அடையாளம் தெரியாத ஆயுதம் தாங்கியோரால் துறைமுக காவல்துறை அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 36 - அகவையுடைய பிரசன்னா - பத்ரன என்பவர் ஆவார். பிரசன்னா - பத்ரன, கடந்த வெள்ளிக்கிழமை இரவு அலுவலகப் பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக தனது வாகனத்தை நோக்கிச் சென்றார். அப்போது தலைக்கவசம் அணிந்த நபர், பிரசன்னா - பத்ரன மீது 6 தடவைகள் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். சூட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். http://www.sankathi.net/
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவன் ஒருவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று மதம் மாற்றியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 13 வயதுடைய குறித்த சிறுவன் சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவனது தாயாரினால் அடையாளம் காணப்பட்டு பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே இக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இச் சிறுவனை காத்தான்குடிக்கு கடத்திச் சென்று இஸ்லாமிய மதத்துக்கு மாற்றியது மட்டுமன்றி மனிதாபிமானமற்ற வகையில் நடத்தியதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.இச் சம்பவம் தொடர்பில் மூவர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சிறுவனை காத்தான்குடிக்கு அழைத்துச் சென்று தனது …
-
- 1 reply
- 1.4k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி முகமாலை தாக்குதலுக்கு உத்தவிட்டார்? Sunday, 27 April 2008 பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, முகமாலை தாக்குதலுக்கு உத்தரவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அதில் ஏற்பட்ட தோல்விக்கு அவரே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்துக்களும் வெளியாகியுள்ளன. எனினும் இதனை மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல் மையம், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி முகமாலை தாக்குதலுக்கு இராணுவத்தளபதி உத்தரவிட்டார் என்ற தகவலை நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்திய போது படையினரும் எதிர்தாக்குதலை நடத்திய சம்பவமே முகமாலையில் இடம்பெற்றதாக அந்த மைய…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும் – இரா.சம்பந்தன் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்று பலமான பேரம் பேசும் சக்தியாகத் திகழ வேண்டும். இதுவே எமது இலக்கு. இதற்கு எமது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இந்தத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். அதனால் தரமான வேட்பாளர்களை நாங்கள் களமிறக்குகின்றோம். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கும் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் எமது தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படும். கிராமங்கள் தோறும் சென்று எமது நிலைப்பாடுகளை மக்களிடம் தெரிவிப்போம் என நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்…
-
- 13 replies
- 1.4k views
- 1 follower
-
-
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு முதலைமைச்சர் மு.கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது நண்பன் என குறிப்பிட்டது எமக்கு கவலை தருகின்றது. எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் தமிழகத்தில் அரசியல் இலாபத்தை கருத்தில் க…
-
- 6 replies
- 1.4k views
-
-
அடுத்த வருட ஆரம்பத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு - மகிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு காணமுடியுமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பிக்கை தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற பொது வைபவம் ஒன்றில் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்வருட முற்பகுதியில் நியமிக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழு அடுத்த வருட முற்பகுதியில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனையைச் சமர்ப்பிக்கும். ஜனவரி அல்லது பெப்ரவரியில் இத்தீர்வு ஆலோசனை வரைவை சர்வகட்சி மாநாடு முன்வைக்கும். எப்படியிருந்தும் அரசு புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும். நாங்கள் சமாதானத்தை ஏற்படுத்த விரும்புகிறோம். எனினும், ஆயுத வன்முறையி…
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கை பாராளுமன்றத்தின் நிலையைகண்டு இந்த நாடு வெட்கப்பட வேண்டிய நிலைமை காணப்படுவதாகவும் மனநோயாளர் ஆஸ்பத்திரியை விடவும் மோசமானதாகவே காணப்படுவதாகவும் ஐ.தே.க இன்பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மோசடிக்காரர்களும்,காடையர்களும்,பாதாள உலகை சேர்ந்தவர்களுமே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டினார்; அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சிலர் நடந்து கொள்வதால் ஜனநாயகமும்,பாராளுமன்றமும் அபகீர்திக்கு உள்ளாகியிருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க விசனம் தெரிவித்தார். http://www.thinamurasam.com/
-
- 8 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது உறுதி: இஸ்லாமிய தீவிரவாதம் ஒழிக்கப்படும் – கோட்டா In இலங்கை April 26, 2019 6:30 pm GMT 0 Comments 1073 by : Litharsan இந்த வருடம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவது உறுதி என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் உளவுத் துறையை மீளக் கட்டமைத்து பரவியுள்ள இஸ்லாமியத் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி மக்களைப் பாதுகாப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவை ஒன்றுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத்தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஜனா…
-
- 13 replies
- 1.4k views
-
-
’படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில்’ “கண்டி மாவட்டத்தில் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சால் முன்னெடுக்கப்பட்டுவந்த வீட்டுதிட்டங்களைக்கூட இந்த அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளமையானது பெரும் அநீதியான செயலாகும்”என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். படிப்பது தேவாரம், இடிப்பதோ சிவன் கோவில் என்பதுபோல்தான் இந்த அரசாங்கத்தின் பயணம் அமைந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்பாட்டாளர்களுடன், கண்ட…
-
- 2 replies
- 1.4k views
-
-
மேற்குலகம் விரும்பினால் சிறீலங்கா மீது தீர்மானத்தை நிறைவேற்றமுடியும் சன்டேரைம்ஸ் [Monday, 2011-05-02 04:07:38] சிறீலங்கா மீது ஐ.நாவின் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என மேற்குலகம் தீர்மானித்தால் அவர்கள் அதனை நிறைவேற்றியே முடிப்பார்கள் என்பதற்கு லிபியா, சிரியா விவகாரங்கள் நல்ல உதாரணங்கள் என த சன்டேரைம்ஸ் தனது அரசியல் பத்தியில் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய பகுதிகள் வருமாறு: ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடுகளை தமக்கு ஆதரவாக திரும்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகின்றது. 47 அங்கத்தவர்களை கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு தற்போது தாய்லாந்து தலைமை தாங்குகின்றது. இந்த சபையில் அங்கோலா, ஆர்ஜன்ரீனா, பஹாரைன், பெல்ஜியம், பி…
-
- 0 replies
- 1.4k views
-