Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உலக சமுதாயம் உதவ வேண்டும் - எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை: அனோமா திகதி: 10.02.2010 // தமிழீழம் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா ஏபிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கையில், எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன். நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை. எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும். எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூட…

  2. தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருக…

  3. இலங்கை ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தை கைவிடுங்கள் , மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன் - சுமந்திரன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரிட்டனில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேற்கொள்ளவிருக்கும் போராட்டத்தை கைவிடவேண்டும் என்று மன்றாட்டமாக கேட்டுக்கொள்கிறேன். - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோள் காணொலியாக, - http://www.malarum.com/article/tam/2015/03/09/9001/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF…

  4. 'தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்." - கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது. விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினர், வான் புலிகளின் உதவியுடன் கடந்த திங்கட்கிழமை அதிகாலை அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத்தளம் மீது மேற்கொண்ட வெற்றிகரமான 'எல்லாளன் நடவடிக்கை" அதிரடித் தாக்குதல்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் சிங்கள அரச…

    • 6 replies
    • 3.9k views
  5. வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வா…

  6. 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் .. புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? - சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கவிஞர் புதுவை இரத்தினதுரையை மறந்து விட்டோமா? என்று சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை (14.05.2011) மட்டுவில் ஞானகுமாரனின் 'சிறகு முளைத்த தீயாக' என்னும் கவிதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டார். சங்க காலத்துப் புலவர்கள் தொழில்முறைப் புலவர்கள். இவர்களில் அநேகர் அரசர்களைச் சார்ந்து அவர்களை நாளும் புகழ்பாடிப் பொன்னும் பொருளும் பெற்றுவந்தார்கள். ஆனால், எங்களுடைய இலக்கியப் படைப்பாளிகள் தொழில்முறை எழுத்தாளர…

  7. மட்டக்களப்பில்.... பொலிஸார் இருவர் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரு பொலிஸார் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக வவுணத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் வவுணத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் மற்றும் பிரசன்னா ஆகியோரே உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் இவ்விரு பொலிஸாரும் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை, அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாதோரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக…

    • 31 replies
    • 3.9k views
  8. விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தொடர்பில் பெரியளவில் ஐரோப்பிய யுூனியன் முடிவினை எடுக்கும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இத்தகைய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரியவருகின்றது. ஐரோப்பிய தமிழ் மக்கள் இது தொடர்பில் தங்கள் மிகஅவசரமான வேண்டுதல்களை ஐரோப்பிய யுூனியனிற்கும் தங்கள் நாட்டு அரசிற்கும் உடனடியாக அனுப்பி ஒரு காத்திரமான எதிர்ப்பை காட்டல் வேண்டும். அனைத்து தமிழ் அமைப்புக்களும் உடனடியாக இன்று 19.05.06 இதனை அனுப்பிடல் வேண்டும். அந்த மனுவில்: 1. சமாதான நடவடிக்கைகள் குழப்பமுறும். உடனடியாகவே சிறீலங்கா போரை ஆரம்பிக்கும். 2. சர்வதேச சமூகத்தை நம்பி பேச்சுக்களுக்கு வந்த தமிழர்களுக்கு இழைக்கப்படும் துரோகம். 3. ஐரோப்பிய யுூனியன் தடை வித…

    • 3 replies
    • 3.9k views
  9. இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகத்தின் பெண் பணியாளர் இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன. இன்று அவர் ஐந்து மணித்தியாலங்களிற்கு மேல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கு முன்னர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுபவர் சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையிலேயே குறிப்பிட்ட பெண் இன்று தூதரக அதிகாரிகளுடன் சென்று சிஐடியினரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். https://www.virakesari.lk/article/70686

  10. காரைநகர் படைமுகாமில் இருந்து பாரிய குண்டு வெடிப்புச்சத்தம். காரைநகர் படையினரின் முகாமிற்குள் இரவு பாரிய குண்டுச்சத்தங்கள் செவிமடுக்கப்பட்டுள்ளது. முகாமினுள் இருந்த ஆயுதக் களஞ்சியம் வெடித்திருக்காலாம் என பிரதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு 10.00 மணியளவில் காரைநகர் பிரதேசத்தில் அமைந்துள்ள படைமுகாமில் ஒரு மணித்தியாலயம் வரை கேட்ட பாரிய குண்டுச்சத்தங்கள் யாழில் பல பிரதேசங்களிலும் கேட்டதுடன் பாரிய அளவில் வெளிச்சம் தென்பட்டதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். இதனால் மக்களிடையே பெரும் பதட்டம் நிலவியதாகவும் படைமுகாமில் உள்ள ஆயுதக்களஞ்சியங்களில் ஒன்று வெடித்துச் சிதறியிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாகவும் இப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர். சம்பவதினம்…

  11. மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை - பகுதி 01 air72005ம் ஆண்டின் காலப்பகுதி அது. மகிந்த ராஜபக்ச சிறீலங்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று போரைத் தொடங்கவில்லையாயினும் போருக்கான ஆயத்தங்கள் படையினரால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன என புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தன. இராணுவத்தினருக்கான போர் பயிற்சிகளிலும், ஆயுதக் கொள்வனவுகளிலும் சிறீலங்கா தீவிரமாக இறங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தது. மகிந்த அரசு பாரிய போர் ஒன்றைத் தொடங்கப் போகின்றது என்பது மிகவும் உறுதியாகத் தெரிந்தது. அதற்கான முன்னேற்பாடுகள் மட்டுமல்ல, போர் நிறுத்தத்தை மீறும் வகையில் ஆங்காங்கே விடுதலைப் புலிகளுக்கு எதிரான சில தாக்குதல் நடவடிக்கைகளிலும், விடுதலைப் புலிகளுக்கு ஆத்திரத்தை ஊட்டக்கூடிய…

  12. பெங்களூரு ரங்கநாத். முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் படுகொலை வழக்கைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்தப் பெயர் நன்கு பரிச்சயம். ஏனெனில், ஷ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சம்பவத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளிகள் சுமார் இருபத்தொரு நாட்கள் பெங்களூருவில் பதுங்கியிருந்தது ரங்கநாத்தின் வீட்டில்தான். ராஜீவ் கொலை வழக்கில் 26-வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட ரங்கநாத், தூக்குத் தண்டனைக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர். 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி இரவு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் அமைப்பினர்தான் இந்தப் படுகொலையைச் செய்தார்கள் என 26 பேருக்கு தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை …

  13. வன்னிப்பெரு நிலப்பரப்பிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் நாளை செவ்வாய்க்கிழமை வெளியேறவுள்ளதாக சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதி கோர்டன்வைஸ் இன்றிரவு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  14. கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். படையினரின் மூன்று உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  15. முள்ளிவாய்க்காலில் தமிழ் இன அழிப்பு யுத்தம் உக்கிரம் பெற்றிருந்த போது கலைஞர் அவர்கள் மத்தியஅரசுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுத்துஅழிவைத் தடுத்திருக்கமுடியும் என்ற ஆதங்கம் எம் மக்கள் மத்தியில் இன்றும் உண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். துமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவையொட்டி வடக்கு முதல்வரின் அஞ்சலிக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும்,தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமானகலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவுச் செய்திகேட்டுத் தமிழ்க் கூறும் நல்லுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது 94வது அகவையில் முதுமையின் நியதிக்கு ஏற்பவே காலமாகியுள்ளார். எனினும் அவர் தம…

  16. புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல் ஜெனிவா உடன்பாட்டுக்கு எதிரானது என்றும் தெளிவாக எச்சரிக்கைகள் இன்றி இராணுவ இலக்கல்லாத ஒரு சிவிலியன் இலக்கு தெரிவு செய்யப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை போர்க் குற்றம் என்றும் எல்லைகளற்ற பத்திரிகையாளர் அமைப்பான RSF குற்றம்சாட்டியுள்ளது. இதேபோன்ற தாக்குதல்களை முன்னர் அமெரிக்காவும் இஸ்ரேலும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ------------- Airstrike on VoT, a war crime - Reporters Without Borders [TamilNet, Tuesday, 27 November 2007, 18:39 GMT] A Sri Lanka military air strike Tuesday on the Voice of…

    • 13 replies
    • 3.9k views
  17. திகதி: 25.07.2010 // தமிழீழம் சங்கதி இணையத்தள முகவரி தனிநபர் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பதிவுக்குரியவர் அதனைக் கையகப்படுத்தி தவறானவர்களின் கைகளில் ஒப்படைக்க முனைந்துள்ள நிலையில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் குழுமம் முழுமையாக வெளியேறி www.sangathie.com என்ற புதிய இணையத் தளத்தில் இயங்கவுள்ளது. இவ் இணையத்தளமே கடந்த காலங்களில் இயங்கிவந்த இணையத்தள செய்தியாளர்களால் இயக்கபடவுள்ளது என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அத்துடன், கடந்த காலங்களில் நீங்கள் தொடர்புகொண்ட இலத்திரனியில் முகவரியில் sankathireaders@gmail.com உங்கள் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம். நன்றி சங்கதி நிர்வாகம் http://www.sangathie.com/index.p…

  18. பாதுகாப்புப் படையினர் மடு தேவாலயப் பகுதிக்குள் பிரவேசித்துள்ள போதிலும் இன்று மாலை ஜனாதிபதி இதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வரை தகவல்களை வெளியிடுவதில்லை என பாதுகாப்பு அமைச்சுத் தீர்மானித்துள்ளது. 572ஆவது படையணியின் ஏழாவது தரைப்படை மற்றும் 7ஆவது சிங்கப் படையணி என்பன இணைந்து நேற்று நண்பகல் அளவில் மடு தேவாலயப் பிரதேசத்தை கைப்பற்றியதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்தார். தற்போது அந்தப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த எவரும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மடு தேவாலயம் கைப்பற்றப்பட்ட விடயம் தொடர்பாக ராவய பத்திரிகை இராணுவப் பேச்சாளரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது இன்னமும் படையினர் தேவாலயத்திலிருந்து 50…

    • 15 replies
    • 3.9k views
  19. பார்வையிட இங்கே கிளிக் செய்க நன்றி காவலன்.கொம்

    • 4 replies
    • 3.9k views
  20. வணக்கம் எல்லோருக்கும். தமிழர் சிங்களவர்களிடையே பிரச்சனை ஏற்பட என்ன காரணம்? எமது மூன்றாம் தலைமுறை எம்மிடம் வந்து புலிகள் எதற்காக சண்டை பிடிக்கிறார்கள் எனக் கேட்டால் என்ன சொல்வீர்கள்? அத்தோடு வெளி நாட்டு மக்களும் வந்து இந்த பிரச்சனை உருவாகக் காரணம் என்ன எனக் கேட்டால் என்ன சொல்வது? தயவு செய்து விளையாட்டாக எடுக்க வேண்டாம். நாம் ஈழம் என்ற தனி நாடு கேட்பதற்கும்,சிங்களவருடனுன் தமிழன் சேர்ந்து வாழ முடியாது என்பதற்கும்,இனப் பிரச்சனை உருவாகியதிற்கும் மூல காரணம் என்ன? அதற்கு யார் காரணம்? தனிய பல்கலைகளக வெட்டுப் புள்ளிகள் மட்டும் தான் காரணமா? அல்லது 1931ம் ஆண்டு டொனமூர் ஆனைக்குழுவினால் கொண்டு வரப்பட்ட பிரதேசவாத பிரநிதித்துவமும் பிரச்சனைக்கு தூண்டுகோலாக அமைந்தது எனக் கொள்…

    • 23 replies
    • 3.9k views
  21. ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர். சமகால அரசாங்கத…

  22. தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் கிளைமோரில் சிக்கியதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தமிழ் செல்வன் அண்னா வாகனத்தில் இல்லாததால் தப்பித்ததாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருகின்றது வழமையான பொய்களை சிங்கள பத்திரிகைகள் அவிழ்துவிடுவதால் உறுதிப்படுத்த கேட்கின்றேன் http://www.elakiri.com/forum/showthread.php?t=30732

  23. யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் தன்னை திருமணம் செய்யும்படி பெண்ணொருவரை தொந்தரவு செய்த நபரை திங்கட்கிழமை இரவு (26) கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கினைச் சேர்ந்த கந்தையா லிங்கேஸ்வரன் (34) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அதே பகுதியினைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரை, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பொருட்களையும் உடைத்துள்ளார். இது தொடர்பாக தொந்தரவுக்குள்ளாகிய பெண் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒரு மாத காலத்திற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தமையால் குறித்த நபர் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் த…

    • 2 replies
    • 3.9k views
  24. யாழ்குடாவில் மூடப்படும் படை முகாம்கள் திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவம் களமுனையில் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் யாழ்குடாவில் இருந்து படையினரை மீளப்பெற்று வன்னிக்கு அனுப்பி வருகின்றது. அண்மையில் அராலி, பருத்தித்துறை, அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இருந்து முகாம்களை மூடி படையினரை வன்னிக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் வலிகாமம் சண்டிலிப்பாய் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான படைமுகாம் நேற்று நள்ளிரவுடன் மூடப்பட்டு, தற்போது அப்பகுதியில் சிறிய காவல் அரண்கள் இரண்டை மட்டும் படையினர் நிறுவி வருகின்றனர். சங்கதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.