Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ராணுவ நடவடிக்கை: மேனன்-நாராயணனுடன் தொடர்பில் இருக்கிறோம்-இலங்கை செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 21, 2009, 16:44 கொழும்பு: இலங்கை நிலவரம் குறித்து தினசரி எஸ்.எஸ்.மேனன் மற்றும் எம்.கே.நாராயணன் ஆகியோரைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறேன். அவர்களும் என்னுடன் ரெகுலராக தொடர்பு கொண்டு கேட்டு வருகிறார்கள் என்று ராஜபக்சேவின் தம்பியும், பாதுகாப்புத்துறை செயலாளருமான கோதபாய ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரபாகரன் ஒன்று சரணடைய வேண்டும். அல்லது மடிய வேண்டும். சரணடைய அவர் முன்வந்தால் நல்லது. இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். எங்களை எதிர்த்துப் போரிட வேண்டும் என்று அவர் நினைத்தால், அவருக்கு மரணம்தான் ஏற்படும். அவர் சரணடைந்தால், எங்களது…

  2. தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் பணியாற்றிய வைத்தியர்களும் சுகாதார ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். அதற்கு மக்களிடமிருந்தும் வலுவான ஆதரவு கிடைக்கப்பெற்றதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது அவ்வாறான சூழல் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தேவிபுரப் பிரதேசத்தில் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தை திறந்துவைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கின் சுகாதார தேவையானது ஏனைய மாகாணங்களை விட அதிகமானது. அவற்றை நிவர்த்திசெய்வதற்கு ஆளணி பற்றாக்குறை காணப்படுகின்றது…

  3. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதன்மை வேட்பாளராக தெரிவு செய்துள்ளதில் இந்தியா தொடர்புபட்டுள்ளதாக வெளியான செய்திகளை, இந்தியத் தூதரகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, கொழும்பிலுள்ள இந்தியத் துணைத் தூதுவர் பி.குமரன், "விக்னேஸ்வரனின் நியமனத்திலோ அதுதொடர்பான முயற்சிகளிலோ நாம் எந்த வகையிலும் தொடர்புபடவில்லை. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் நாம் நிச்சயமாக வீண் தலையீடுகளைச் செய்யவில்லை. இது சிறிலங்காவின் உள்நாட்டுத் தேர்தல் நடைமுறையாக இருக்கும் நிலையில், இதில் நாம் தலையிட வேண்டிய உறுதியான காரணம் என்ன?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=88091&cat…

  4. (ஆர்.யசி) கொவிட் -19 வைரஸ் தொற்றில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் விதமாக இலங்கையில் பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. இதில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களாம். இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் ஏதேனும் ஒரு வர்க்கத்தை சேர்ந்த தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்டவர்க்களில் 200 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்தார். இவர்களில் 177 பேர் ஏதேனும் ஒரு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் என்பதுடன் கொவிட் மரணங்களில் இது 3.38 வீத பதிவாகும் எனவும், இரண்டு தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களில் 23 பேர்உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். …

  5. மாவீரர்களுக்கு கிடைத்த வெற்றி! அனந்தி எழிலன் சிறப்பு பேட்டி இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார். வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன். நக்கீரன் என்றதும், "உங்கட பத்திரிகையை நிரம்பப் பிடிக்கும்' என்றார், மகிழ்ச்சி பொங்க. கேள்விகளை முன்வைத்த…

  6. தமக்கு வாக்களிக்காததால், எம்மை முடக்கி வருகிறது மத்திய அரசு! – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு. [Wednesday, 2014-02-26 08:03:07] நாம் எவ்வளவு பணஞ் செலவு செய்து தெருக்கள் போட்டோம், இரயில் வரச் செய்தோம், கட்டடங்கள் கட்டினோம், பல வேலைத்திட்டங்களில் ஈடுபட்டோம். நீங்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. ஆகவே உங்கள் மாகாணசபையை நடத்த விட மாட்டோம்' என்பது போல், சட்டம் எமக்குத் தந்த உரித்துக்களையுந் தராது எம்மை முடக்கி வருகின்றது மத்திய அரசாங்கம். இவ்வாறு முடக்குவது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயல் என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்தார். நேற்றுக் காலை 9 மணிக்கு மாந்தை பொதுச் சந்தையைத் திறந்து வைத்து உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையி…

  7. போர்க்குற்றம் இல்லை, யாரையும் சுடவும் இல்லை – சரத் பொன்சேகா திகதி: 06.05.2010 // தமிழீழம் வன்னியில் தாம் முன்னெடுத்த ஆக்கிரமிப்புப் போரின்போது தமது படைகள் எந்தவித போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என, சிறீலங்காவின் முன்னாள் படைத்தளபதி ஜெனரல் சரத் பொன்செகா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த விடுதலைப் புலிகளைச் சுட்டுக்கொல்லுமாறு சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கொட்டாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிடவில்லை எனவும், தமது படைகள் அவ்வாறு யாரையும் சுட்டுக்கொல்லவில்லை எனவும் அவர் மேலும் கூறியிருக்கின்றார். இது பற்றி ஊடகங்கள் தவறான தவலை வெளியிடுவதாகத் தெரிவித்த அவர், கடந்த வாரவிடுறைப் பத்திரிகை ஒன்றிலும், தனக்கு உத்தரவு வழங்கப்பட்…

  8. இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் குறித்த பல ஆவணங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் வெளிவந்துள்ளன. கீழ் வரும் காணொளியில் மரணித்த புலி உறுப்பினர்கள் இலங்கை இராணுவம் விலங்குகளைப் போல வீசியெறிவதையும், இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கு ஆதாரமாக கருகிய உடல்களையும் காணலாம். இந்தக் காணொளி பல சர்வதேச ஊடகங்களிற்கும், உரிமைக் குழுக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியப் படிப்பவர்கள் இவ் ஆவனத்தை மனித உரிமை அமைப்புக்களுக்கும் தமக்குத் தெரிந்த ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கலாம். தொழில் நுட்பம் சார்ந்து ஆவணத்தை உறுதிப்படுத்த எம்மிடம் உரிய வசதிகள் இல்லை. போரில் ஈடுபட்ட இராணுவத்திதைச் சேர்ந்த ஒருவரின் தொடர்பு ஊடாக இந்த ஆவணம் இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ப…

  9. ஜி.எஸ்.பி. பிளஸ்' வரிச் சலு கையை ஓகஸ்ட் 15ஆம் திகதி முதல் நிறுத்துவது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என கொழும்பிலுள்ள அதன் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேலதிக கால நீடிப்பு வழங்கப்படமாட்டாது. இலங்கை சர்வதேச பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்த 15 நிபந்தனைகள் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை அதனை நிராகரித்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கடந்த 24 ஆம் திகதி வியாழக்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை முற்றாக நிராகரிப்பது என முடிவு எடுக்கப்பட்டது. இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகள…

  10. புலிகளைப் போலத் தனியரசு நடத்துகிறது பொதுபல சேனா! – அமைச்சர் ரிஷாட் பதியுதீன் விசனம். [sunday, 2014-04-13 05:51:07] விடுதலைப் புலிகள் இலங்கைக்குள் சமாந்தரமான அரசு ஒன்றை இங்கு நடத்தியமை போன்று பொதுபல சேனாவும் அரசு ஒன்றை நடத்துகின்றது, புலிகள் போல விரும்பிய இடத்தில், விரும்பிய நேரத்தில் தாக்கிவிட்டு யாராலும் விசாரிக்கப்படாமல் சுதந்திரமாக அதனாலும் செல்ல முடிகின்றது. என்று அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பகிரங்கமாக வேதனை வெளியிட்டிருக்கின்றார். நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெறும் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஒரு விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்படவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். பொதுபல சேனாவின் அண்மைக் க…

    • 5 replies
    • 760 views
  11. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19477 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19472 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19471 http://www.eelampage.com/?cn=28649 http://www.eelampage.com/?cn=28642 http://www.tamilcanadian.com/page.php?cat=546&id=4351

  12. வர்த்தகக் கப்பலுடன் மோதியதில் நொருங்குண்டு போன இந்தியப் போர்க்கப்பல் கடந்த திங்களன்று ஸைப்பிரஸ்ஸில் பதிவுசெய்யப்பட்ட வர்த்தகக் கப்பலுடன் மும்பாய்த் துறைமுகத்தில் மோதுப்பட்டு விபத்துக்குள்ளாகித் தரைதட்டிய 3000 மெட்றிக் தொண் எடையுள்ள இந்திய கடற்படைக் கப்பலான விந்தியாகிரியை எப்படி மீன்டும் புணர்நிர்மானம் செய்யலாம் என்று இந்திய அதிகாரிகல் மூளையைப் போட்டுக் கசக்கிக்கொண்டு இருக்கிறார்களாம். மோதுப்பட்டதுடன் உடனேயே தீப்பற்றியும் கொண்ட இந்த யுத்தக்கப்பலின் இழப்பென்பது சமாதானக் காலத்தில் ஒரு கடற்படைக்கு ஏற்பட்ட மிகவும் வெட்கக்கேடான சம்பவம் என்று சர்வதேச இராணுவ வல்லுனர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விபத்து நடந்த வேளையில் சிப்பந்திகளுற்பட 400 பேரை வேறு கப்பல்களிலி…

  13. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியில் சாவகச்சேரி நகர பொதுச்சந்தை மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சாவகச்சேரி நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டு இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்த பொதுச்சந்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 1995 வரையாயான காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் லட்சக்கணக்கில் வியாபாரிகளும் வர்த்தகர்களுமென பெரும் சன நெருக்கடியை எதிர்கொண்ட நகரம் அதன் பின்னரான யுத்தகால சுழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த சந்தை கட்டிட தொகுதியை மீள் நிர்மாணம் செய்யும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=7764636059048…

  14. கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் உள்ள மகுள் மதுவ யில் ஏற்றப்பட்டு இருந்த இலங்கையின் தேசியக் கொடியை கீழிறக்கி அங்கு (சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவ அடையாளங்களை நீக்கிய) சிங்கள கொடி என அழைக்கப்படும் ஒரு கொடியை பறக்கவிட ஒரு கும்பல் முயற்சி செய்ததால் அங்கு பதட்ட நிலை தோன்றியுள்ளது. இது தொடர்பில் கண்டி போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட கும்பலின் செயலை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை தோன்றியுள்ளது. நேற்று தலதா…

  15. இலங்கை அரச பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட புதிய சிக்கல்கள் நிறைந்த காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பேரினவாதத்தின் ஒடுக்குமுறை அதன் கட்டற்ற உச்சவடிவத்தை தொட்டிருக்கிறது. ஆக்கிரமிப்பு, இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு என்ற அத்தனை மனித விரோத செயற்பாடுகளதும் மொத்த உருவமாக சிங்கள பவுத்த பேரின வாதம் தனது பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது. தமிழ் தேசிய விடுதலைப் போரில் பிரதான பங்கு வகித்த ஆயுதப் போராட்ட வடிவத்தை முற்று முழுதாகத் தோற்கடித்த பின் அவலங்களும் அழிவுகளுமே தாயகத்தில் தேங்கி நிற்க, இலங்கை பேரினவாத அரசின் இரத்தம் படிந்த கோரக் கரங்கள் புலம் பெயர் நாடுகள் வரை நீட்சியடைகின்றன. இலங்கை அரசினால…

  16. தமிழன் அரசியல் சுதந்திரம் அற்று வாழும் இலண்டன் நகரத்தில் தேசிய நினைவெழுச்சிநாள் மிக அற்புதமாக மிக சிறப்பாக நடை பெற்றது. 20000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.. நிகழ்வை ஒழுங்கு செய்த தமிழ் தேசிய நினைவேந்தல் அகம் மிகவும் சிறப்பாக செயலாற்றி இருகின்றார்கள். சகல ஒழுங்குகளும் சிறப்பாக இருந்தன. உணவு பரிமாற்றம் , கார்திகை பூ , தாயக வெளியீடுகள் விற்பனை , உதவியாளர்களின் சேவை என்று அனைத்தும் சிறப்பாக ஒருங்கமைத்து நடத்தி முடித்துள்ளார்கள். மேடையில் அரங்கேற்றப்பட்ட அரங்க நிகழ்வு மிகவும் சிறப்பு. இதுதான் முதல் முறை இவ்வளவு நீளமான அரங்க நிகழ்வு தமிழ் மேடை ஏறியுள்ளது என நினைக்கிறேன். இதில் சிறப்பு என்னவென்றால் நிகழ்ச்சி தொடங்கும் போது ஆர…

  17. நாட்டில் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக கோத்தாபய ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டார்கள். அவ்வாறு கூறி ஆட்சிபீடமேறியவர்களின் செயற்பாடுகள் தேசிய பாதுகாப்பை ஏற்படுத்தும் வகையிலா அமைந்திருக்கின்றன? சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண மக்கள், ஊடகவியலாளர்களின் நிலை என்னவாகும்? இத்தகைய செயற்பாடுகள் தொடர்பில் வருத்தம் தெரிவிக்கும் அதேவேளை அவற்றைக் கடுமையாகக் கண்டனம் செய்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப…

  18. இறுதிப்போரில் இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமை உறுதி! காடியன் தெரிவிப்பு இறுதிப்போரில் ஒரு இலட்சம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், இலங்கை இராணுவம் போரில் தடை செய்யப்பட்ட கொத்துக்குண்டுகளை (க்ளெஸ்டர்) பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ளதாக தெ காடியன் செய்தி வெளியிட்டுள்ளது. தெ காடியன் செய்தித்தாள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு ஆதாரங்களாக வன்னியில் இருந்து மீட்கப்பட்ட கொத்துக்குண்டுகளின் பாகங்கள் புகைப்படங்களாக காட்டப்பட்டுள்ளன. குறித்த பிரதேசத்தில் இருந்து ஆர்பிகே 500 ஏ கியு-2.5RD என்ற கொத்துக்குண்டுகளே மு…

    • 5 replies
    • 736 views
  19. இன்று (23-02-13) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் லண்டனில் பாலச்சந்திரன் மற்றும் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கேட்டு துண்டுப் பிரசுர விநியோகம் நடைபெறவுள்ளது. இப்போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்காணும் தொலைபேசியுடன் தொடர்பு கொள்ளவும் 020 3371 9313 http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19110:2013-02-23-10-42-50&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

  20. Jun 5, 2013 சிங்கள ஆதிக்கக் கனவினுள் தீக்குச்சி கிழித்து எறிந்தவன்.- ச.ச.முத்து (தியாகி சிவகுமாரனனின் முப்பத்திஒன்பதாவது ஆண்டு நினைவாக.). அந்தநாளுக்கு முந்தையபொழுதில் அதைப்போன்றஒரு காட்சியை தமிழீழம் பார்த்துஅறிந்து இருக்கவில்லை.மிகவும் உணர்ச்சி நிறைந்த ஒரு இறுதி நிகழ்வு அதற்குமுன்னர் நடந்ததில்லை.தமிழீழவிடுதலைக்கான போராட்டம் மெதுமெதுவாக ஆயுதப்போராட்டத்தைநோக்கி நகர்ந்துகொண்டிருந்த அந்த ஆரம்பபொழுதில் சிவகுமாரன் என்ற ஆயுதபோராட்ட வீரனுக்கு தமிழ்மக்கள் கொடுத்த திரளான இறுதிவழிஅனுப்பு நிகழ்வானது அப்போது தமிழீழவிடுதலைக்கான ஆயுதபோராட் டத்தில் நின்று கொண்டிருந்தவர்களுக்கும் அதற்குப்பின்னர் போராட்டகளத்துக்கு வந்தவர்களுக்கும் மிகப்பெரிய உந்துதலைக் கொடுத்தது. பொன்.சிவகுமாரன் தா…

  21. கச்சதீவில் இராணுவ முகாம் அமைக்கும்நோக்கம் இல்லை - அரசாங்கம் தெரிவிப்பு வீரகேசரி இணையம் 6/21/2009 6:52:01 PM - கச்சதீவு பிரசேதத்தில் இராணுவ முகாம் அமைக்கும் நோக்கம் எதுவுமில்லை என முற்றுமுழுதாக இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவின் எல்லைப்புறமாக பாக்கு நீரினைக்கு அருகில் குடிமக்கள் எவருமற்ற 275 ஏக்கர் நிலப்பரப்பில் கச்சதீவு அமைந்துள்ளது. இது குறித்து வெளிவிவகார அமைச்சர் கருத்து வெளியிடுகையில், இலங்கை புதுடில்லியுடன் நல்லதொரு உறவை பேணிவருகிறது. இந்த வகையான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் மூலம் இருதரப்பு உறவை பாதிக்கவைக்க சில சக்திகள் முயற்சிக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை…

  22. மொனராகலையில் போதி மரம் முறிந்து விழுந்ததில் 27 பேர் வைத்தியசாலையில் அனுமதி வீரகேசரி இணையம் 10-4-2009 11:07:46 AM மொனராகலை ஒபேகொடவில் போதி மரம் முறிந்து விழுந்ததில் மத வழிபாட்டில் ஈடுபட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 27 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். நேற்று பெளர்ணமி தினமாகும் இது தொடர்பான மத வழிபாடு அப் பகுதியிலுள்ள பெளத்த விகாரையொன்றல் நடை பெற்றுக் கொண்டிருந்த வேளை போதி மரம் (அரச மரம்) சீரற்ற கால நிலை காரஷமாக முறிந்து விழுந்ததாக சம்பவம் தொடர்பாகக் கூறப்படுகின்றது. வீரகேசரி

    • 5 replies
    • 2.4k views
  23. கிளிநொச்சி மாவட்டத்தில் 2013 ஆம் ஆண்;டு காலபோக நெற்செய்கையானது வறட்சி காரணமாக 26961 ஏக்கர் அழிந்துள்ளது என கிளிநொச்சி மாவட்ட கமநல சேவைகள் நிலைய உதவி ஆணையாளர் தயாரூபன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று(20) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது கடந்த வருடம் பருவமழை பொய்த்து போனமையால் மழையை நம்பி வருடந்தோளும் மேற்கெர்ளளப்படும் மானாவாரி நெற்செய்கை முற்றாக அழிந்துள்ளது. குளங்களின் கீழ்மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை பெருமளவுக்கு நீர்பாசனம் மேற்கொள்ளப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறது. அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட…

  24. இறைவனின் நீதி உங்களை அழிக்கும், இல்லையேல் நான் எரிப்பேன்! – ஆணைக்குழு முன் சாபமிட்ட தாய் [Monday 2014-09-29 08:00] காணாமல்போனவர்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் தனது பிள்ளை தொடர்பில் முறைப்பாடு கொடுக்க வந்த வயதான தாயிடம் ஆடு வேண்டுமா என்று ஆணைக்குழுவினர் கேட்டதால், அந்த தாய் சாபமிட்டுவிட்டு சென்ற சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2ம் நாள் அமர்வு முழங்காவில் மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர், காணாமல்போன தன் மகன் தொடர்பாக சாட்சியம் அளிக்க வந்திருந்தார். அரசாங்க உதவிகள் கிடைத்துள்ளதா? என ஜனாதிபதி ஆணைக்குழு அவரிடம் கேள்வி எழுப்பியது. இதற்கு அந்தத் தா…

  25. [Tuesday, 2011-08-30 13:23:26] ஒருவர் தாக்கல் செய்த கருணை மனு மீது முடிவெடுக்க 11 வருடங்கள், 4 மாத கால தாமதம் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 21 வருடங்களை அவர் சிறையில் கழித்த நிலையில் நீ நாளை தூக்கில் தொங்க விடப் படப் போகிறாய் என்று கூறுவது மனிதாபிமானமே இல்லாதது என்று வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி கூறியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ராஜீவ் கொலையாளிகள் பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக இன்று ஆஜரானார் ராம்ஜேத்மலானி. அப்போது அவர் வாதிடுகையில், கிட்டத்தட்ட 11 வருடங்கள், நான்கு மாதங்கள் தாமதம் செய்துள்ளனர், இந்த மூவரின் கருணை மனுக்களை பரிசீலனை செய்து நிராகரிக்க. இது மிகப் பெரும் வேதனை. ஒரு மனிதனுக்கு கிட்டத்தட்ட 21 வருடங்களை சிறையில…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.