ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
தெளிவடைந்த இலட்சிய உறுதியை தலைமேல் சுமந்து பணி செய்தவரே எமது தலைவரும், மாவீரர்களும். அதேபோல் நாமும் இலட்சியத் தெளிவையும், உறுதியையும் வளர்த்து அதில்தான் உண்மையான ஒற்றுமையைத் தேடவேண்டும் என உலகத் தமிழர் பேரவையின் தலைவர் கலாநிதி எஸ் யே இம்மானுவேல் அவர்கள் புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு நேற்று (28) விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: உலக சமாதான தினத்தில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு ஒரு புத்தாண்டு வாழ்த்துச் செய்தி. புலம்பெயர்ந்த ஈழத் தமிழருக்கு அன்பும், பண்பும் கலந்த எமது புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகுக. ஆன்ம வளங்கள், உடல் வளங்கள், சமூக வளங்கள் உங்களை அன்பிலும், ஒற்றுமையிலும், சமாதானத்தில…
-
- 0 replies
- 1.3k views
-
-
'வடக்கில் எட்டுப்பேருக்கு ஓர் இராணுவச் சிப்பாய் என்ற நிலைமைதான் உள்ளது. அதுதான் உண்மை. தெற்கில் இருப்பது போன்ற நிலைமை வடக்கு, கிழக்கில் இல்லை. ராஜபக்சாக்கள் ஒரு விடயத்தைச் சொல்லும்போது உண்மையைப் பேசுவதில்லை. அவர்கள் உண்மையை மழுப்பிப் பேசுகின்றனர். இவை ஆரோக்கியமான விடயங்கள் அல்ல.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற அரசின் யுத்த வெற்றி விழாவில் உரையாற்றும்போது வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டா என்றும், படைக்குறைப்பு செய்யப்படமாட்டா என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருப்பது தொடர்பில் கருத்துவெளியிடும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர்…
-
- 3 replies
- 1.3k views
-
-
Apr 21, 2011 / பகுதி: செய்தி / சிறீலங்கா இராணுவம் க்லெஸ்டர் குண்டுகளை வீசியது – அல்ஜசீரா நேற்று இரவு 20.04.2011 அல்ஜசீரா தொலைக்காட்சியில் மக்களும் சக்தியும் எனும் தலைப்புடைய நிகழ்ச்சியில் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் மக்கள் படுகொலைகள்,மீள்குடியேற்றங்கள் மறுவாழ்வுகள் என பல முனைகளில் தமிழ் மக்களின் அவலங்களை படமாக்கியிருந்தனர். அதில் சிறீலங்காவின் போர்க்குற்றம் பற்றியே அதிகம் பேசப்பட்டிருந்தது ஆனால் சிங்கள இராணுவ அதிகாரிகள் மற்றும் சிங்கள அரசியல்வாதிகள் அனைவரும் தாம் தமிழ் மக்கள் எவரையும் கொல்லவில்லை என்றே தெரிவித்ததர்கள். கோத்தபாய தமிழீழ விடுதலைப்புலிகளே போர்க்குற்றம் புரிந்ததாகவும் இப்பொழுது அவர்களே அரசுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்வதாகவும் கூறினார…
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவுக்கு ஆயுத மற்றும் நிதி உதவிகளை அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் அவதானிப்பு அமைப்பு கோரியுள்ளது. சிறீலங்காவில் சிறுவர் படை சேர்ப்பு மற்றும் சிறுவர் மற்றும் மனித உரிமைகள் மோசமாக சிறீலங்காவால் மீறப்பட்டு வருவதை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வன்மையாக சாடி வரும் நிலையில் அமெரிக்க நியோர்க்கை தளமாகக் கொண்டியங்கும் Human Rights Watch (HRW) சர்வதேச சமூகத்திடம் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளது. Citing child soldiers, HRW urges cut in military aid to Sri Lanka [TamilNet, Friday, 27 April 2007, 03:18 GMT] Human Rights Watch (HRW) this week called on the United States to curtail military assistance to Sri Lanka,…
-
- 2 replies
- 1.3k views
-
-
நிமல் சிறிபால டி சில்வா தொடர்ந்தும் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர். அதேபோல தினேஷ் குணவர்த்தனவால் எதிர்க்கட்சி தலைவராக முடியாது. ஒரே கட்சி ஆளும் தரப்பாகவும் எதிர்த் தரப்பாகவும் இருந்து செயற்பட அனுமதியில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை உருவாக்க நாம் தயார் , சபாநாயகரிடமும் எமது விருப்பத்தை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார். பிரதான இரு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி யார் என்ற முரண்பாடு ஏற்பட்டுள்ள…
-
- 6 replies
- 1.3k views
-
-
2004 ஆம் ஆண்டு, மே மாதம் 30 ஆம் திகதி, திங்கட்கிழமை. காலை 9 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்று வந்தது. 'ஹலோ" என்றதும் அழைத்தவரின் குரலில் ஒரு தடுமாற்றமும,; பதற்றமும் தெரிந்தது. '..... வேலைக்குப் போகவில்லையா?" 'இல்லை, ஏன்?" 'மாமாங்கத்தில ஜேர்னலிஸ்ட் ஒருவரச் சுட்டுப் போட்டுக் கிடக்காம். அது தான். .... ஒருவேள நடேசண்ணையா இருக்குமோ?" விபரம்: http://www.swissmurasam.info/
-
- 1 reply
- 1.3k views
-
-
எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் - தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர்நாள் உத்தியோகபூர்வ அறிக்கை தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் நாள் - 2021 தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை வெளிவந்துள்ளது தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 27.11.2021 எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழத்தேச அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராட…
-
- 16 replies
- 1.3k views
-
-
அடுத்து வருடம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைத்தால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நொவம்பர் மாதம் 23ம் திகதி இந்த உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவை வெளிப்படுத்தும் என்று, ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தேர்லில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவளிக்கும் என்றும் உறுதிய…
-
- 14 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியில் ராஜபக்சே! வியாழக்கிழமை, நவம்பர் 5, 2009, 10:56 [iST] கொழும்பு: இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்கள் வசிக்கும் வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு பகுதிகளில் திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ராணுவத்தின் 65வது பிரிவின் தலைமையகம் அமைந்துல்ள வன்னி துணுக்காய் பகுதிக்குச் சென்ற அவர் ராணுவ வீரர்களை சந்தித்துப் பேசினார். மேலும் அப் பகுதியில் பள்ளிக்கூடம், கோவில்களில் தமிழர்கள் தங்க வைக்கப்பட்டு்ள்ள இடங்களையும் அவர் பார்வையிட்டார். முகாமில் உள்ள சிலருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் பிறகு கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய இடங்களுக்குச் சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். ராஜபக்சேவுடன் அவரது தம்பியும், பாதுகாப்பு துறை செ…
-
- 4 replies
- 1.3k views
-
-
லைக்கா, ஐங்கரன் குழுமங்கள் இலங்கை அரச விமானப்படை விமானத்தில் லைக்கா மொபைல் என்ற பல்தேசிய வியாபார நிறுவனத்திற்கும் இலங்கை அரசிற்கும் இடையேயான தொடர்பும், லைக்கா மொபைல் டேவிட் கமரன் கட்சிக்கு வழங்கிய நிதி தொடர்பான ஆதரங்களும் கடந்த சில வாரங்களக வெளியாகியிருந்தன. இனியொரு இணையம் இது குறித்த பல தகவல்களை வெளியிட்டிருந்தது. லைக்கா மொபல் நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன், லைக்கா பிளை நிறுவனத்தின் இணைப்பாளரும் லைக்கா ஊடகப் பேச்சாளருமான திரு.சிவசாமி ஆகியோர் இலங்கை அரச விமானப்படை விமானத்தில் சென்று இறங்கும் காட்சி இன்று வெளியானது. இந்த் இருவரோடும் இலங்கை அரச அமைச்சராகவிருந்த கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய மற்றும் ஐங்கரன் நிறுவன உரிமையாளர் கருணாகரமூர்த்தி ஆகியோர் காணப்படுகின்றனர். ஐங்க…
-
- 12 replies
- 1.3k views
-
-
தேர்தல் அறிவிப்பு வெளிவந்த பின்னர் சுமந்திரனோடு இணைந்து பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருந்த சிறீதரன் தனது தனித்த ஓட்டத்தை ஆரம்பித்துள்ளதாக சுமந்திரனது ஆதவாளர்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைக்க தொடங்கியுள்ளனர். தினம் இவ்விவகாரம் வடமராட்சி பகுதிகளினில் சூடுபிடிக்கின்ற விவகாரமாக இருந்திருந்தது. தபால் மூல வாக்களிப்பு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையினில் சிறீதரன் தனிப்பட்டதாக தனது செயற்பாட்டாளர்களிடம் சுமந்திரனை வாக்களிப்பின் போது புறக்கணிக்க அறிவுறுத்தியுள்ளார்.இதனையடுத்தே இருவரிற்குமிடையேயான முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனக்கான விருப்பு வாக்கு தொடர்பினில் கூடிய ஆர்வம் கொண்டுள்ள சிறீதரன் கிளிநொச்சியினில் தனது கட்சி சார்ந்த ஏனைய தரப்…
-
- 2 replies
- 1.3k views
-
-
கண்டி வத்தேகம கல்வி வலயத்தின் குண்டசாலை பிரிவிலுள்ள கெஹலிய ரம்புக்வெல்ல ஆரம்ப பாடசாலையின் பெயரை உடனடியாக மாற்றுமாறு மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ்.அபயகோன் நேற்று உத்தரவிட்டுள்ளார். இக்கல்லூரியை குண்டசாலை றோயல் ஆரம்ப பாடசாலை என மாற்றம் செய்வதற்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கட்டமைப்புக் குழு சமர்ப்பித்த யோசனைக்கு ஆளுநர் அனுமதியளித்துள்ளார். கடந்த காலங்களில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், இப்பாடசாலையின் உத்தியோகபூர்வ பெயரை மாற்ற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 2012 ஆம் ஆண்டு …
-
-
- 18 replies
- 1.3k views
- 1 follower
-
-
மட்டக்களப்பிலிருந்து 6 கிலோ மீற்றார் தூரத்தில் உள்ள பாலமீன்மடு என்ற கடற்கரை கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடு கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றை தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். சுமார் ஐந்து அடி ஆழத்தில் 16 பேரது எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் குறித்த சம்பவத்தை கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் கிராம சேவகர் அரச அதிபருக்கு அறிவித்ததாகவும் அரச அதிபர் மாவட்ட நீதவான் இராம கமலனுக்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ் - முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து சிறுபான்மையினக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் சேர்ந்து கொள்ளப் போவதில்லை என துணைப் படைக் குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். தமிழ் - முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்து சிறுபான்மையினக் கூட்டணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் தாம் சேர்ந்து கொள்ளப் போவதில்லை என சிறிலங்கா துணைப் படைக் குழுவின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். இனி நடக்க இருக்கும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு ஏற்ற வகையில் தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு முயற்சிக்கப்படுகிறது. இது க…
-
- 6 replies
- 1.3k views
-
-
ஏறாவூர் விபத்தில் – விரிவுரையாளர் உயிரிழப்பு மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற விபத்தில் விரிவுரையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இன்று(வியாழக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது சந்தை வீதி, செங்கலடியைச் சேர்ந்த கந்தக்குட்டி கோமளேஸ்வரன் (வயது 48) என்ற மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த விரிவுரையாளரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள…
-
- 7 replies
- 1.3k views
-
-
இங்குகிருப்பவர்கள் புத்த பிக்குகளா? யுத்த பிக்குகளா? போருக்கு எதிராக நாம் நடத்திய கூட்டத்தை குழப்ப முயற்சித்தவர்கள் பௌத்த துறவிகளுக்கான காவியுடையை அணிந்திருந் தார்கள். தங்களை தேசிய பிக்கு முன்னணியை சார்ந்தவர்கள் என்று கூறிக் கொண்டார்கள். மனித உயிர்களை பலி எடுக்கும் யுத்தத்தை நிறுத்தும்படி கூறும் எமது சமாதான இயக்கத்தை குழப்பும்படி பௌத்த தர்மத்தில் எங்கே கூறப்பட்டிருக்கின்றது? புனித புத்த பகவானின் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு யுத்தத்தை முன்னெடுக்கும்படி கூறும் இவர்கள் புத்த பிக்குகளா? அல்லது யுத்த பிக்குகளா? என மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். வியாழக்கிழமை போருக்கு எதிரான முன்னணி நடத்திய கூட்டத்தில் ஊடு…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழில் போதைப்பொருள் விற்ற பெண்ணும் வாங்க சென்ற மாணவன் உள்ளிட்ட 10 பேரும் கைது 29 MAR, 2023 | 11:00 AM யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று (29) மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் ஹெரோயின் வாங்கி பாவிக்கும் 10 வாடிக்கையாளர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடமிருந்து போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர் எனவும், கைது செய்யப்பட்டோர் 17 தொடக்கம் 22 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. போதைப் ப…
-
- 0 replies
- 1.3k views
- 1 follower
-
-
ராஜபக்ச பறைசாற்றும் வெற்றியின் முகத்திரை விரைவில் கிழிபடும்: த.தே.கூ. ஜெயானந்தமூர்த்தி சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச பறைசாற்றும் வெற்றியின் முகத்திரை விரைவில் கிழிபடும் என்று இத்தாலியில் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சே. ஜெயானந்தமூர்த்த்p இத்தாலிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கடந்த மாதம் 28ஆம் நாளன்று சிசிலி நாடாளுமன்றத்தில் அரச தரப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு தமிழீழத் தாயகத்தின் இன்றைய நிலவரங்களையும் சமாதான ஒப்பந்தம் பற்றிய நிலைமைகளையும் எடுத்து விளக்கினார். கத்தானியாப் பிரதேசத்தில் கடந்த மாதம் 29ஆம் நாளன்று நிகழ்வில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஜனநாயக விரோத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே 16 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் ஐக்கிய தேசிய ன்னணியுடன் இணைந்துள்ளன. பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவுடனோ அல்லது எம்முடன் இணைந்துள்ள ஏனைய கட்சிகளுடனோ எதுவித இரகசிய ஒப்பந்தங்களும் செய்து கொள்ளப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க தெவித்தார். அரசாங்கத்திலுள்ள பல அமைச்சர்கள், க்கியஸ்தர்கள் மற்றும் எம்மோடிருந்து வெளியேறியவர்களில் பலர் இன்று எம்மோடு இணைவதற்கும் சரத் பொன்சேகாவை ஆதப்பதற்கும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த வகையில் அடுத்த வாரம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி தரும் வாரமாகவே அமையப் போகிறது என்றும…
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளார். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொஷவிற்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (15) காலை 6.30க்கு அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் அப்துல்லா மஹ்ரூப் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் கைது (adaderana.lk)
-
- 6 replies
- 1.3k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 24.06.07 அன்று ஒளிபரப்பான ஆய்வு நிகழ்வு
-
- 0 replies
- 1.3k views
-
-
கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்! கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், அப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், இதனால் மதுபானசாலை அமைப்பதில் தமக்கு உடன்பாட…
-
- 8 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு 3/5/2009 10:17:12 PM - புதுக்குடியிருப்பு சந்தியைக் கைப்பற்றி அங்கு நிலைகொண்டுள்ள படையினர் தற்போது அங்கிருந்து 4 கிலோமீற்றர் கிழக்குப் பகுதியில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்காக கிழக்கு கடற்கரையினூடாக முன்னகர்வு முயற்சியினை மேறகொண்டு வருகின்றனர். இதன் போது படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அப்பகுதிகளில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இதில் படைத்தரப்புக்கு சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் புலிகள் இயக்கம் பாரிய இழப்புக்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக படைத்தரப்பு தெரிவிக்கின்றது. தற்போது சுமார் 45 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்தினர் படையினரால் மூன்று திசைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்களுக்கு அஞ்சி, வடமராட்சியில் சிறீலங்கா படைகள் உசார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டை மீட்பதற்கான படையெடுப்பை, நாகர்கோவில் பகுதி ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடுக்கக்கூடும் என்று, தேசிய புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்துள்ள நிலையில், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் முதல் வடமராட்சி வடக்கு தொண்டைமானாறு வரையான கடலோரப் பிரதேசங்கள் தோறும், சிறீலங்கா படை அணிகள் உசார்படுத்தப்பட்டு பாதுகாப்புபலப்படுத்தப்பட்ட
-
- 0 replies
- 1.3k views
-
-
இக்பால் அலி யுத்த வெற்றிக்காக அதிகளவிலான பங்களிப்பு முஸ்லிம் தரப்பில் இருந்து கிடைத்துள்ளது. இந்நாட்டுக்காக முஸ்லிம் சகோரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். அதே போன்று தமிழ் மக்களும் செய்துள்ளனர். எந்த வேறுபாடுகளின்றி நாங்கள் எல்லோரும் மனிதர் என்றே நேசிக்கின்றோம் என்று என்று கண்டி பள்ளேகல இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பிரிகேடியர் சாந்த ஹேரத் தெரிவித்தார் கண்டி கட்டுக்கலை ஜும்ஆப் பள்ளிவாசலின் ஏற்பாட்டில் தேசிய இராணுவ வீரர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு விசேட துஆப் பிரார்த்தனை வைபவம் தலைவர் அப்சல் மரைக்கார் தலைமையில் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கண்டி பள்ளேகல இராணுவ முகாம…
-
- 6 replies
- 1.3k views
-