நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
சீனாவின் கொழுக்கட்டை சாப்பிட்டதுண்டா!
-
- 5 replies
- 1.3k views
-
-
சன்பிரான்ஸ்சிஸ்கோவில் 3 மாத. த்துக்கொரு தடவை தான் நண்டு பிடிக்க விடுவார்களாம். நேற்றைய தினம் கடலுக்கு போய் காவல் நின்று 4 நண்டுகள் ஒன்று 10$ படி வாங்கி வந்தோம். பேரனுக்கு நண்டு என்றால் அவரை நண்டுப்பிரியன் என்றே சொல்லலாம். இரவே அப்பப்பா கில் பண்ணு கறியைக் காச்சு என்று நின்றான்.பொறடா நாளைக்கு என்றேன். காலையில் எழும்பி இதே வேலையாகவே நின்றான். https://postimg.cc/gallery/zBh4N83
-
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
தூதுவளை-ரசம் தூதுவளை இலை காம்புடன் – 1 கப் புளி – எலுமிச்சையளவு மிளகு – 1/2 டீஸ்பூன் சீரகம் – 1/2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 பூண்டு – 4 பல் தாளிக்க – கடுகு, சீரகம், மிளகாய் சிவப்புஉப்பு – தேவையான அளவு செய்முறை: காம்புடன் உள்ள தூதுவளை இலையை நன்கு கழுவி அம்மியில் வைத்து தட்டிக் கொள்ளவும். பின் மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு முதலியவற்றை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சுட வைத்து அதில் கடுகு, சீரகம், மிளகாய் போட்டு தாளித்து பின் தட்டி வைத்துள்ள இலையைப் போட்டு ஒரே ஒரு வதக்கு வதக்கி, மிளகு, சீரகம், மிளகாய், பூண்டு தட்டி வைத்துள்ளதையும் போட்டு புளியையும் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். நுரைத்து மேலே வரும் போது இறக்கவ…
-
- 5 replies
- 5.8k views
-
-
பாட்டியின் அசத்தல் விடக்கோழி வறுவல்.( சுரக்காய் பாழி முறை )
-
- 5 replies
- 987 views
-
-
புதினாத் துவையல் தேவையானவை புதினா இலை - 2 கப் தேங்காய் - 1 துண்டு பச்சை மிளகாய் - 3 உளுத்தம் பருப்பு - 1 கைப்பிடி புளி - பட்டாணி அளவு உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிது கடுகு - தாளிக்க செய்யும் முறை புதினா இலையை ஆய்ந்தெடுத்து, ஒரு வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி வதக்கி எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காயை வில்லைகளாகப் போட்டு வதக்கி எடுத்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் தேங்காய் வில்லை, பருப்பு, புதினா இலை, பச்சை மிளகாய், சிறிது புளி, உப்பு போட்டு கொரகொரவென…
-
- 5 replies
- 2.7k views
-
-
தேவையானவை: மீன்_1 kg புளி_சிறு எலுமிச்சை அளவு... சின்ன வெங்காயம்_7 தக்காளி_பாதி பூண்டு_பாதி வறுத்து அரைக்க: கொத்துமல்லி விதை_2 கைப்பிடி காய்ந்த மிளகாய்_8 (காரத்திற்கேற்ப கூட்டிக் குறைத்துக்கொள்ளவும்) மிளகு_15 சீரகம்_1/2 டீஸ்பூன் மஞ்சள்_சிறு துண்டு வெந்தயம்_சிற…
-
- 5 replies
- 1.4k views
-
-
வெஜிடேபிள் முட்டை ரோல். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா? அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். அதிலும் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த ரோலை காலையில் கூட செய்து சாப்பிடலாம். குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த வெஜிடேபிள் முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சப்பாத்தி - 1 உருளைக்கிழங்கு - 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது) கத்திரிக்காய் - 1 (துண்டுகளாக்கப்பட்டது) முட்டை - 2 (அடித்துக் கொள்ளவும்) வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 1 (பொடி…
-
- 5 replies
- 1k views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
என்னென்ன தேவை? உரித்த பூண்டு - ஒரு கிண்ணம், தனியா - 3 டேபிள்ஸ்பூன், மிளகு - 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி, புளி - சிறிய உருண்டை, உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன். எப்படி செய்வது? கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாய…
-
- 5 replies
- 943 views
-
-
மசால் வடை மசால் வடை இது பெரும்பாலும் காலை உணவுகளான பொங்கல்... பூரி ...இட்லி..... வகைகளோடு இணைத்து வழங்கபடுவது.... தேவையானப் பொருட்கள்: கடலைப்பருப்பு - 2 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சைமிளகாய் - 2 அல்லது 3 காய்ந்த மிளகாய் - 1 இஞ்சி - ஒரு சிறுத்துண்டு கறிவேப்பிலை - சிறிது தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் உப்பு - 1 டீஸ்பூன் எண்ணை - பொரிப்பதற்கு செய்முறை: கடலைப்பருப்பை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்றாகக் கழுவி தண்ணீரை வடித்து விடவும். அதிலிருந்து ஒரு கைப்பிடி பருப்பை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீதி பருப்புடன் காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்து சற்று கொரகொரப…
-
- 5 replies
- 2.2k views
-
-
-
- 5 replies
- 4.8k views
-
-
நெருப்புக்கோழி முட்டைக்கு இங்கிலாந்தில் வரவேற்பு அதிகரித்துள்ளது. பறவைகளிலேயே நெருப்புக் கோழியின் முட்டைதான் மிகவும் பெரியது. ஒரு கோழி முட்டையைக் காட்டிலும் 24 மடங்கு பெரியது நெருப்புக் கோழி முட்டை. அரை அடி உயரம், ஒன்றரை அடி சுற்றளவு கொண்ட இந்த முட்டை சுமார் 2 கிலோ எடை கொண்டது. இதன் விலை 19.95 பவுண்டுகள்; அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,500 ரூபாய். இந்த முட்டையின் ஆம்லெட் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம். ஒரு நெருப்புக் கோழி முட்டையில் 15 பேருக்கு ஆம்லெட் தயாரிக்கலாம். கோழி, வாத்து முட்டையைக் காட்டிலும் இதற்கு ருசி அதிகம் என்பதால், குழந்தைகள் இதனை ஒரு பிடி பிடித்துவிடுகிறார்கள். ஆனால் ஒரு முட்டையை அவிப்பதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். இதனை டிரில்லிங் மிஷினால் துளைத்…
-
- 5 replies
- 4.2k views
-
-
தேவையான பொருட்கள்: ஆட்டு மூளை மஞ்சள் தூள் - 2 சிட்டிகை மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி மிளகு - 1 தேக்கரண்டி தேங்காய் - 2 பத்தை உடைத்த கடலை - ஒரு கைப்பிடி சீரகம், பட்டை, சோம்பு - அரை தேக்கரண்டி வெங்காயம் - 2 பூண்டு - 10 பல் புளி - எலுமிச்சை அளவு தயிர் - 1 தேக்கரண்டி தேங்காய்ப்பால் - 1 மூடி எண்ணெய் - தேவையான அளவு கொத்துமல்லி, கறிவேப்பிலை செய்யும் முறை: முதலில் மூளையை தண்ணீர் விட்டு கழுவி அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் மூளை வெந்ததும் அதன் மேல் ஜவ்வை எடுத்துவிட்டு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, பட்டை, சோம்பு, போன்றவற்றை வறுத்து, அதனுடன் நறுக்கிய தேங்காய், மிளகாய் தூள், உடைத்த கடலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள…
-
- 5 replies
- 2.9k views
-
-
ஆடிக்கூழ் செய்முறை 5- 6 பேருக்கு போதுமானது தேவையான பொருட்கள் : அரிசி - 1/2 சுண்டு வறுத்த பயறு - 100 கிராம் கற்கண்டு - 200 கிராம் தேங்காய் - 1 உப்பு - அளவிற்கு தண்ணீர் - 14 தம்ளர் செய்முறை : அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து இடித்தரித்துக் கொள்க . ஒரு தேங்காயை துருவி 4 தம்ளர் தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து பாலை பிழிந்தெடுத்து , இதில் 1/2 தம்ளர் முதல் பாலை எடுத்து வேறாக வைக்கவும் . பின்பு அரித்து வைத்துள்ள மாவில் 1/3 பனங்கு மாவை எடுத்து பாத்திரத்திலிட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத் தம்ளர் முதல் பாலை சிறிது …
-
- 5 replies
- 6.6k views
-
-
கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள்: (2 - பேருக்கு) இன்ஜி - 1/2 விரல் நீளம் பூண்டு - 1 பல்லு பச்சைமிளகாய் - 2 சின்ன வெங்காயம் - 2 கொத்தமல்லி தழை - 1 கட்டு புளி - 1 துருவிய தேங்காய் - 3 மேசைகரண்டி கருவேப்பில்லை - 5 இலைகள் கடுகு - 1/2 தேக்கரண்டி சமையல்எண்ணெய் - 1 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு சமைக்கும் முறைகள்: வாணலியை அடுப்பில் வைக்கவும். எண்ணையை வானலியில் விட்டு சிறிது சூடாகியுடன், இன்ஜி, பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் வதக்கவும். இதோடு கொத்தமல்லியை சேர்த்து வதக்கவும். இதோடு துருவிய தேங்காயை சேர்த்து வதக்கும். ஒரு நிமிடம் வதக்கியவுடன் ஆற வைக்கவும். ஆறிய இந்த கலவையை புளியுடன் தேவைக்கற்றவாறு தண்ணீர் சேர்த்து மின் அம்மியி…
-
- 5 replies
- 4.2k views
-
-
தாளித்த இட்லி மிகவும் பிரபலமானது இந்த இட்லி. நீங்கள் சில இடங்களில் இசை சுவைத்திருப்பீர்கள். சுற்றுலா செல்பவர்கள் எடுத்துச் செல்வதும் பெரும்பாலும் இந்த வகை இட்லிகள்தான். தேவையானவை இட்லி மாவு - 1/2 கிலோ உளுந்தம் பருப்பு - சிறிதளவு கடலைப் பருப்பு - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 4 தேங்காய் - ஒரு கப் கடுகு - சிறிது கருவேப்பிலை அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு கடுகைப் போடவும். பின்னர் காய்ந்த மிளகாய்களை கிள்ளிப் போட்டு தாளிக்கவும். அதிலேயே கருவேப்பிலையையும் போட்டு தாளித்து எடுத்து மாவில் சேர்க்கவும். அதே வாணலியில் மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விட்டு அதில் கைப்பிடி உளுந்து, கைப்பிடி கடலைப் பருப்பைப் போட்டு …
-
- 5 replies
- 3.4k views
-
-
-
- 5 replies
- 1.2k views
-
-
தேவையானவை: பைனாப்பிள் - 4 துண்டுகள் புளி ஒரு சிறிய எலுமிச்சம் பழ அளவு தண்ணீர் - 250 மில்லி ரசப் பொடி - ஒரு டீஸ்பூன் மிளகு - சீரகத்தூள் - கால் டீஸ்பூன் வேக வைத்த பருப்பு - ஒரு கப் கடுகு - கால் டீஸ்பூன் எண்ணெய் - தேவையான அளவு கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு. கொத்தமல்லி - தேவையான அளவு செய்முறை: புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, ரசப் பொடி, உப்பு சேர்த்து, பைனாப்பிளை பொடியாக நறுக்கிப் போட்டு, நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை நன்கு மசித்து கரைத்து விட்டு... கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு-சீரகத்தூள் தாளித்து, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கவும். …
-
- 5 replies
- 3.3k views
-
-
வாங்க இண்டைக்கு நாம எப்பிடி வெள்ளை இடியப்பமும், உருளைக்கிழங்கு போட்டு ஒரு தேங்காய் பால் சொதியும் செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து சொல்லுங்க.
-
- 5 replies
- 609 views
- 1 follower
-
-
இந்த வல்லாரை கீரை கண்டால் நான் கடைக்கு உள்ள போயு எல்லா கீரையும் வாங்கி விடுவன்.. ஏன் தெரியுமா உறவுகளே வல்லாரை வெள்ளி கிழமையில் மரக்கறியுடனோ இல்லை ஒரு சாம்பருடன் சாப்பிட்டால் நல்ல சுவையா இருக்கும்.. என்ன கொடுமை என்றால் நான் வல்லாரை கேட்டு வீட்டில் எல்லாரயும் தொல்லை பண்ணுவன்.. ஒரு நாள் என் அம்மா 5கட் வல்லாரை கொண்டு வந்து பண்ணி வைத்து விட்டு இதுதான் உனக்கு இன்று சாப்பாடு என்று சொல்லி விட்டார்கள்.. வல்லாரைக்கு தேவையானது சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை தேவையான அளவு உப்பு தேவையான அளவு தேசிக்காய் புளி வல்லாரை நன்று கழுவி எவ்வளவு சின்னதான் கட் பண்ண முடியுமோ அவ்வளவு சின்னதான் கட் பண்ணி அதே ஒரு பாத்திரத்தில் வயுங்கள் .. அது போலதான் சின்ன வெங…
-
- 5 replies
- 5.6k views
-
-
நாக்கில் எச்சில் வரவழைக்கும் வஞ்சிர மீன் குழம்பு செய்ய...! தேவையானவை: வஞ்சிரம் மீன் - 500 கிராம் சின்ன வெங்காயம் - 200 கிராம் நாட்டுத் தக்காளி - 200 கிராம் பெரிய வெங்காயம் - 100 கிராம் பூண்டு, புளி - 100 கிராம் காய்ந்த மிளகாய் - 4 கறிவேப்பிலை - சிறிதளவு நல்லெண்ணெய் - 100 மி.லி வெ…
-
- 5 replies
- 2.6k views
-
-
பிள்ளைகள், யாராவது சைவக் கேக் (முட்டை போடாத கேக்) செய்முறை தருவீர்களா? நன்றி
-
- 5 replies
- 8.6k views
- 1 follower
-
-
கதம்ப முறுக்கு தேவையான பொருட்கள்: அரிசி மாவு : 1 கப் கோதுமை மாவு : 1 கப் மைதா மாவு : 1 கப் சோள மாவு : 1 கப் பொட்டுக் கடலை மாவு : 1/2 கப் மிளகாய் தூள் : 2 ஸ்பூன் பெருங்காயப் பொடி : 1 சிட்டிகை உப்பு : தேவையான அளவு நெய் : 1/2 குழி கரண்டி நல்லெண்ணெய் : 2 ஸ்பூன் எண்ணெய் : பொறிக்கத் தேவையான அளவு செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, மைதா மாவு, கோதுமை மாவு, சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய் தூள், பெருங்காயப் பொடி, உப்பு, நெய், நல்லெண்ணெய் என இவை எல்லாவற்றையும் போட்டு நன்றாக கலக்கவும். அதன்பின் தண்ணீர் கலந்து பிசையவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். எண்ணெய் சூடாவதற்கு முன்னதாகவே, தயாராக உள்ள மாவினை சிறு சிறு உருண்டைகளாக எடுத்…
-
- 5 replies
- 882 views
-
-
தேவையான பொருட்கள் 1 சுண்டு பச்சையரிசி 5 தேங்காய் (அல்லது ரின் தேங்காய்ப்பால் 8 சிறியவை) ஏலக்காய்ப்பொடி சிறிதளவு 200 கிராம் கஜு 1 கிலோ சீனி (4 சுண்டு) 3 மேசைக் கரண்டி சவ்வரிசி (பதிலாக வறுத்த பாசிப்பயறையும் பாவிக்கலாம்) 250 கிராம் சக்கரை செய்முறை அரிசியை ஊறவைத்து இடித்து அரித்து மாவாக எடுத்து கொள்ளவும். முழு தேங்காளாயின் துருவி முதல் பால் தனியாகவும் மற்றைய பாலை தனியாகவும் 8 கிளாஸ் தண்ணீர் சேர்த்து பிளிந்து எடுக்கவும். அல்லது ரின் பாலாயின் 8 கிளாஸ் தண்ணீரை 2 ரின் தேங்காய்பாலுடன் கலந்து வைக்கவும். பின்னர் வாய் அகன்ற கனமான பாத்திரத்தில் மா, தேங்காய்ப்பால், சீனி, சர்க்கரை, சவ்வரிசி சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து 2 மணி…
-
- 5 replies
- 1.4k views
-
-
தேவையான பொருட்கள் சீனி 250g மா 250g மாஜரின் 250g ரின் பால் (Condensed Milk) 395g வறுத்த ரவை 4 மே.க பேக்கிங் பவுடர் 1 மே.க. தண்ணீர் 300ml ,Cashew Nuts 50g பிளம்ஸ் 50g வனிலா 1 மே.க செய்முறை 1.ஒரு பாத்திரத்தில் மாஜரின், சீனி, ரின் பால், மூன்றையும் கலந்து சீனி கரையும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். 2.முதலில் மாவுடன் பேக்கிங் பவுடரை சேர்த்து 3 முறை அரிதட்டினால் அரித்துக் கொள்ளவும். 3.பின்னர் மாவையும் சேர்த்து, முந்திரி பருப்பு, பிளம்ஸ், வறுத்த ரவை, வனிலா, தண்ணீர் ஆகியவற்றையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். 4.கேக் தட்டிற்கு எண்ணைக் கடதாசி போட்டு கேக் கலவையை ஊற்றி 180°C யில் 35 நிமிடம் பேக் செய்து கொள்ளவும். 5.ஆறியபின் துண்டு துண்டாக வெட்டி ப…
-
- 5 replies
- 4.3k views
-