நாவூற வாயூற
சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்
நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.
ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
2472 topics in this forum
-
மீன் சொதி தேவையான பொருட்கள்: மீன் -500கிராம் பச்சைமிளகாய் -5எண்ணம் பெரியவெங்காயம் -50 கிராம் கறிவேப்பிலை -சிறிது வெந்தயம் -1 மேஜைக்கரண்டி பெரும்சீரகம் -2 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் -1 தேக்கரண்டி தேங்காய்பால் -1 கப் உப்பு -தேவையான அளவு செய்முறை: 1. பச்சைமிளகாய், வெங்காயத்தை வெட்டி வைத்துக் கொள்ளவும். 2. ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரைக் கொதிக்க வைத்து அதில் வெட்டிய வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், வெந்தயம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து வேக விடவும். 3. இந்தக் கலவையில் துண்டுகளாக்கிய மீனைச் சேர்த்து தேவையான அளவு வேகவைக்கவும். 4. மீன் ஓரளவு வெந்ததும் அதில் தேங்காய்ப் பாலைச் சேர்த்து, தேவையான உப்பு போட்…
-
- 39 replies
- 6.2k views
-
-
ஒரு உலோகத்தட்டை அடுப்பின் மீது வைத்து தேவையான பொருட்களை கொட்டி இரண்டு சிறிய உலோகத்தகடுகளால் அவற்றை கொத்தி, ட்ரம்ஸ் அடிப்பது போல நல்ல சத்தம் எழுப்பிச் செய்வதுதான் வழக்கமான கொத்து ரொட்டி செய்யும் முறை. அந்த வசதியில்லாதவர்கள் இந்த முறையில் இலகுவாக செய்யலாம். தேவையான பொருட்கள் இறைச்சி கறி (ஆடு அல்லது மாடு) - அரை கப் முட்டை - 1 பின்வரும் பொருட்களை தனித் தனியே சிறிய துண்டுகளாக அரிந்து வைத்துக்கொள்ளவும். வீச்சு ரொட்டி அல்லது சாதாரண ரொட்டி - 2 லீக்ஸ் (பச்சை இலை) - கைப்பிடியளவு மஞ்சள் கோவா - கைப்பிடியளவை விட கொஞ்சம் கூடுதலாக சிறிய தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 5 கறிவேப்பிலை - ஒரு இணுங்கு (கையால் ரொட்டி அரிவது கஷ்டமென்றால் food processor இல் போட்டு …
-
- 39 replies
- 20.2k views
-
-
கோழி வடை தேவையான பொருட்கள்: 250 கிராம் கோழிக்கறி, 100 கிராம் கடலை பருப்பு, 50 கிராம துவரம் பருப்பு, 2 வெங்காயம், 6 பச்சை மிளகாய், கைப்பிடியளவு முருங்கை கீரை, 1 மேசைக்கரண்டி இஞ்சிப்பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் எண்ணெய் செய்முறை: கடலை பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்து வைத்தபின் எலும்பில்லாத கோழிக்கறியை அடித்து உதிர்த்து வைத்துக் கொள்ளவும். முருங்கைக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கோழிக்கறி, கீரை, பருப்பு, இஞ்சி விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து வடைகளாக தட்டி இலையில் வைக்…
-
- 38 replies
- 6.7k views
-
-
இந்த சிங்கள கிராமிய சமையல் சேனல் லைப் பாருங்கள். மொழியே தேவை இல்லை. மிக அருமையாக தந்துள்ளார்கள். பின்னணி இசை, படப்பிடிப்பு என எம்மை தூக்கிக் கொண்டு போய் அப்படியே ஊரில் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். தோட்டத்தில் வெங்காயத்தாளை புடுங்க்குவதாகட்டும், தம்பியர் விறகு வெட்டுவதும், அம்மம்மா வெங்காயத்தாளை சுத்தப்படுத்துவதும்.... தம்பியும், அக்காவும் சமைப்பதும் அருமை. பாராட்டாமல் இருக்க முடியாது.
-
- 38 replies
- 3.5k views
-
-
அப்பம் தயாரிக்கும் முறை தேவைபடுகிறது. நீங்கள் செய்யும் முறையை தந்து உதவ முடியுமா? ?
-
- 38 replies
- 15.9k views
-
-
கல்லு றொட்டி . தேவையான பொருட்கள் : கோதுமை மா 1 கிலோ . தேங்காய் 1 . பச்சை மிளகாய் 7 அல்லது 8 . சின்னவெங்கயம் 250 கிறாம் . உப்பு தேவையான அளவு செய்முறை : கோதுமை மாவை பைக்கற்ருடன் நீராவியில் அரை மணித்தியாலம் அவிக்கவும் . அவித்த கோதுமை மாவை அரிதட்டில் சூட்டுடன் போட்டு அரிக்கவும் . அரித்த மாவை ஒரு சட்டியில் போட்டு வைக்கவும் . தேங்காயை உடைத்து துருவி வக்கவும் . சின்னவெங்காயத்தை சுத்தப்படுத்தி வைக்கவும் . பச்சை மிளகாயையும் , சின்னவெங்காயத்தையும் குறுணியாக வெட்டி சட்டியில் உள்ள கோதுமை மாவுக்குள் போடவும் . துருவிய தேங்காய்பூவையும் கோதுமை மாவுடன் சேர்த்து உப்பும் கலந்து தண்ணியும் கலந்து றொட்டிக்குப் பிசைவது போல் பிசையவும் . நன்றாகப் பிசைந்த மாவை அரை மணித்தியால…
-
- 37 replies
- 4.5k views
-
-
எங்க சொதி உலகத்தில் இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில் அடங்கா...இதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..செய்முறைய படிச்சமா, பதில் போட்டமா என இருக்காமல் ஒரு தடவை சமைத்து உண்டு தான் பாருங்களேன். அதன் பின்னர் நீங்களும் "சொதி ஸ்பெஸலிஸ்ட்" (யாராவது தமிழ்படுத்தி தாருங்கள்) ஆகிடுவிங்க. அசைவத்தில் முட்டை சொதி, மீன் சொதி, இறால் சொதி, இறைச்சி சொதி, கருவாட்டு சொத…
-
- 37 replies
- 9.9k views
-
-
உப்பு மா செய்வது எப்படி ? அதற்கு என்ன ... என்ன சாமான்கள் தேவை என்பதை யாராவது அறியத் தருவீர்களா ?
-
- 37 replies
- 29.2k views
-
-
போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும் நன்றி
-
- 36 replies
- 8.1k views
-
-
இலங்கையில் இருக்கும் போது, இதனை வீட்டில் சமைப்போம்... நல்ல சுவையானதாக இருக்கும். இது சிங்கள நாட்டில், விளைவதாக நினைக்கின்றேன். நேற்று... இங்கிலாந்தில் ஒரு தமிழ் கடையில்... கண்டபோது, ஆசையில் வாங்கி விட்டேன். அதனை... எப்படி சமைப்பது என்று, யாருக்காவது தெரிந்தால்... கூறுங்களேன்.
-
- 36 replies
- 15.3k views
-
-
-
கருவாட்டுக்குழம்பு எப்படிச் செய்வது? யாராவது சொல்வீர்களா?? மிக்க நன்றி
-
- 36 replies
- 21.9k views
-
-
நண்டு சாப்பிட்டு பழகினவங்க நண்டை எப்படி செய்தாலும் ஒரு கை பாக்காம விட மாட்டாங்க... அதிலும் நண்டு மசாலாவா... சொல்லவே வேணாம்... நண்டு சாப்பிட்டு பழக்கமில்லாதவங்களும் ஒருதடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க.. அப்பறம் நீங்களும் இதுக்கு அடிமையாயிடுவீங்க....! தேவையான பொருட்கள்: நண்டு - 2 பெரியது தேங்காய் (துருவியது) - 1/2 கப் சின்ன வெங்காயம் - 25 மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீ ஸ்பூன் சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - தேவைக்கு கடுகு - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு செய்முறை: * நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். * சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். * தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய…
-
- 36 replies
- 7k views
-
-
மீன்ரின் வெங்காயப்புூ வறை -------------------------------------------- தேவையான பொருட்கள் 1பிடி வெங்காயப்புூ தண்டு சின்ன மீன்ரின் வெட்டிய வெங்காயம் சிறிதளவு சிறிதளவு உள்ளி கறிவேப்பிலை சிறிது உப்பு சிறிது மஞ்சள்; தூள் சிறிது மிளகு சிறிது செத்தல் மிளகாய் 2 தே- எண்ணெய் சிறிது பெ-சீரகம் சிறிது வெந்தையம் சிறிது எனி செய்முறை -------------------- பாத்திரத்தை அடுப்பில் வையுங்கள் ? வைத்து விட்டிங்களா? ஓகே எனி அடுப்பை போடுங்கள் போட்டு விட்டிங்களா ? ஓகே அதனுள் சிறிது எண்ணெய் விடுங்கள் -எண்ணெய் சூடாகி வரும் போது .வெங்காயம் -உள்ளி-கறிவேப்பிலை-அவற்றைப் போடுங்கள் ? பிறகு நன்றாக கிளறுங்கள் ? பின்னர் 2 செத்தல் மிளகாயை சின்னனாக வெட்டி…
-
- 36 replies
- 8.5k views
-
-
தேவையானப் பொருட்கள் இறால் - அரை கிலோ சி. வெங்காயம் - ஐம்பது கிராம் பூண்டு - மூன்று பல் தக்காளி - மூன்று மிளகாய்த்தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன் மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - ஒரு டீ ஸ்பூன் உப்பு -ஒன்றரை டேபிள் ஸ்பூன் எண்ணை - மூன்று டேபிள் ஸ்பூன் சோம்பு - ஒரு டீ ஸ்பூன் கறிவேப்பிலை - மூன்று கொத்து தேங்காய்த் துருவல் - மூன்று டேபிள் ஸ்பூன் சீரகம் - கால் டீ ஸ்பூன் செய்முறை * இறாலை சுத்தம் செய்து அரை டேபிள் ஸ்பூன் உப்பு போட்டு பிசறி பத்து நிமிடம் வைத்து பிறகு மூன்று முறை தண்ணீர் விட்டு நன்றாக கழுவி வைக்கவும். * வெங்காயத்தை இரண்டிரண்டாகவும், தக்காளியை நான்காகவும் நறுக்கவும். * தேங்காய் & சீரகத்தை அரைக்கவும். * சோம்ப…
-
- 36 replies
- 12.7k views
-
-
சில வருடங்களாக நண்பர்கள்/உறவுகளாகிவிட்டோமே எப்போதும் தொந்தரவு குடுப்பது நியாயம் இல்லை என நினைத்து சில வாரங்களாக செய்முறைகள் எழுதுவதை தவிர்த்து வந்தேன். ஆனால் விதி வலியது என்பது எனக்கு சில நாட்களாக புரிகின்றது. காரணம் தொடர்ந்து என்னை சமையல் செய்முறைகளை எழுத சொல்லி வரும் கருத்துக்களும், மின்னஞ்சல்களுமே. இனிமேல் உங்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என சொல்லியபடியே மறுபடி சமையல்கட்டிற்குள் போகின்றேன். புதிதாக சமையல்கட்டிற்குள் நுழைந்திருக்கும் அன்பு அண்ணன் ஜோசப் பால்ராஜுக்காக [யாழ் கள சகோதரர்]ஒரு செய்முறை. [இந்த வாய்ப்பை விட்டால் ஜோண்ணா சமைக்க ஆரம்பித்திருப்பதை எப்படி தான் உலகிற்கு சொல்வது! கிகிகி] இச்செய்முறை விரைவில் செய்யக்கூடியது மட்டுமில்லாது உடலிற்கும் சத்துள்ள ஒர…
-
- 35 replies
- 7.7k views
-
-
ஆமை வடை தேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - அரை கப் உளுத்தம்பருப்பு - அரை கப் துவரம்பருப்பு - அரை கப் பச்சைமிளகாய் - 6 மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி மஞ்சள்பொடி - கால் தேக்கரண்டி புளி - சிறு நெல்லிக்காய் அளவு உப்பு - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 கப் செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு இவை மூன்றையும் ஊறவைத்து, நன்றாக ஊறியபின் நீரை வடித்துவிட வேண்டும். பருப்புகளுடன், பச்சை மிளகாயையும், உப்பையும் சேர்த்து அம்மியில் வைத்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, சீரகம், மிளகினை இலேசாக உடைத்து மஞ்சள்பொடியுடன் அரைத்து வைத்துள்ள பருப்பில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். மாவினை எலுமிச்சை அளவி…
-
- 35 replies
- 8.9k views
-
-
சுவையான இறால் கறி ........ தேவையான பொருட்கள் . றால் பெட்டி (தலை உள்ளது ) 16/18 இருக்கும் மிளகாய் தூள் .........2 கரண்டி உள்ளி ...................... ஒரு பூடு வெங்காயம் ..........தேவையான அளவு கறி வேப்பிலை வெந்தயம் பழப்புளி (ஒரு தேசிக்காயளவு ) உப்பு ........... செய்முறை :.......... இறாலை முதுகுப்ப்குதியால் கீறி (கத்தரிக்கோல் நன்று ) நூல் போன்ற கறுப்பு அழுக்கு குடலை அகற்றவும் . தலையில் உள்ள கூர் போன்ற பகுதியை கண்ணுடன் சேர்த்து வெட்டி அகற்றவும் .இதை ஒரு பாத்திரத்தில் புறம்பாக வைக்கவும . பின் ஒரு சட்டியில் வெட்டிய வெங்காயம் , நறுக்கிய உள்ளி, வெந்தயம், கருவபிலை என்பவற்றை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும் . பின் மிளகாய் தூளை சேர்த்து …
-
- 34 replies
- 14.8k views
-
-
-
- 34 replies
- 2.9k views
-
-
ஆடி அமாவாசை விரதத்திற்கான சுவையான பாகற்காய் கறி தயாரிக்கும் முறை
-
- 34 replies
- 3.4k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே! உங்களுக்காக கடலை வடையும் பக்கோடாவும் நானே செய்து காட்டியுள்ளேன்.
-
- 34 replies
- 3.7k views
- 1 follower
-
-
முட்டை அவிப்பது என்பது ஒரு பெரிய கலை. நம்பினாலும், நம்பாட்டிலும் அது தான் உண்மை. அதிகம் அவித்தாலும் சுவையிருக்காது, சிறுது நேரத்தில் எடுத்தாலும் பச்சைவாடை போகாது. அதிகம் அவிப்பதால் சுவையில் வித்தியாசம் வரப்போவதில்லை. ஆனால் சத்து குறைந்துவிடும். முட்டையை அவித்தோ/பொறித்தோ சாப்பிடலாம். சிலர் அப்படியே பச்சையாகவும் சாப்பிடுவார்கள். அது அனைவருக்கும் பொருந்தாது. தவிர அவித்த முட்டையில் தான் ப்ரோட்டின் சத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் முட்டையை போட்டு அவிக்க வேண்டும். (முட்டையை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால், அறை வெப்பத்திற்கு வந்த பின்னர் தான் அவிக்க வேண்டும். )நீர் கொதிக்க தொடங்கியதும், அரை அவியலாக வேண்டும் எனில் 3 நி…
-
- 34 replies
- 13.4k views
-
-
லெமன் இல் வைரஸ் எதிர்ப்பு சக்தி இருக்கு என்பதால் இன்று Lemon rice . குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு லெமன் ரத்த குழாய்களை மெதுவாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அத்துடன் இதய நோய் சுகமடையவும் உதவும் (விட்டமின் B இருப்பதால்)
-
- 34 replies
- 3.6k views
-
-
தேவையான பொருட்கள் எக் பீட்டர் கோதுமை மா அல்லது அரிசிமா வெந்நீர் அளவுகேற்ப உப்பு தேங்காய் பூ கோதுமைமா புட்டினை அவிப்பம் ஓகேயா :P போதுமானவளவு கோதுமை மாவினை 5 நிமிடங்கள் ஒரு கோப்பையில் போட்டு மைக்ரோவேயில் வைக்க பின் அந்த மாவினை அரிந்தெடுத்து புட்டு குழைக்கும் பாத்திரத்தில் இடுக.அளவுகேற்ப உப்பு வெந்நீர் சேர்த்தபின் எக்பீட்டரை உபயோகித்து ஒரு 30 செக்கண் மாவினை குழையுங்க.ஊரில பேணியால குத்திற மாதிரி புட்டு குழைக்கப்பட்டுவிடும்.பின் புட்டு குழலிலோ அல்லது ஸ்ரிமரிலோ தேங்காய்பூவினை கலந்து அவித்து எடுத்து பரிமாறுங்கள் Copyright 2002-2007 eelavan85, All Rights Reserved. :P எக் பீட்டர்
-
- 33 replies
- 8k views
-
-
தேவையான பொருட்கள்: 1 & 1/2 கப் - கொண்டைக்கடலை(இரவில் ஊறவைத்த கடலையை மென்மையாகும் வரை வேகவைக்கவும்) 2 - சிறிய வேகவைத்த உருளைக்கிழங்கு, தோலை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும் 2 - சிறிய தக்காளி, நறுக்கியது 2 தேக்கரண்டி - கொத்தமல்லி இலை நறுக்கியது 1 - பச்சை மிளகாய், நறுக்கியது 2-3 தேக்கரண்டி - எலுமிச்சை சாறு 1/4 தேக்கரண்டி - ஹிமாலயன்/பிங்க உப்பு 2 தேக்கரண்டி - Chaat மசாலா செய்முறை: ஒரு பெரிய கிண்ணத்தில் வேகவைத்த கொண்டைக்கடலை, வேகவைத்த உருளைக்கிழங்கு துண்டுகள், நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு, மற்றும் சாட் மசாலாவை ஒன்றாக கலந்தால் சலாட் தயார் சலாட்டை கலந்த உடன் பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்…
-
- 33 replies
- 5.1k views
-