Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாவூற வாயூற

சமையல் | உணவு | குறிப்புகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நாவூற வாயூற பகுதியில் சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் பற்றிய தகவல்கள், காணொலிகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் வேறு தளங்களில் இருந்து இணைக்கப்படும் பதிவுகளுக்கு  நேரடியான மூல இணைப்பையும், பதிவை ஆக்கியவரின் பெயர் இருந்தால் அதனையும் கட்டாயம் குறிப்பிடவேண்டும். அத்துடன் காப்புரிமை உள்ள தளங்களில் இருந்து அனுமதி பெறாமல் இணைப்பதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே சமையல் குறிப்புக்கள், உணவு தயாரிக்கும் முறைகள் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணைத்தல்வேண்டும். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தால் மீண்டும் மீண்டும் இணைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. Started by Rasikai,

    இன்டைக்கு எனக்கு வீட்டை பொழுது போகேல்ல. என்ன செய்வம் என்டு யோசிச்சன். அம்மாவும் தனக்கு ஏலாமல் இருக்கு நீ சமை என்டுட்டா சரி புதுசா ஏதாவது செய்வம் என்டு போட்டு களத்துல இறங்கிட்டன். இதோ எனது வீரதீர செயலை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். தேவையானப் பொருட்கள்:- வறுத்த உழுத்தம் மா - 1 சுண்டு வறுத்த சிவப்பு அரிசிமா - 1/4 சுண்டு சீனி அல்லது சக்கரை - 50 கிராம் ( சீனி விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க தேவையில்லை) உப்பு - 1 சிட்டிகை தேங்காய்ப்பால் - 4 கப் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் பால் விட்டு அதில் அரிசிமா, உழுத்தம் மா, உப்பை போட்டு கட்டியில்லாமல் கரைக்கவும். பின்னர் மிதமான தீயில் வைத்து வேக விடவும். மா அடியில் ஒட்ட விடாது கிளறிக் கொண்டே இருக்கவும். …

    • 17 replies
    • 11.5k views
  2. வெந்தயக் குழம்பு - ச‌சிகலா வியாழன், 26 ஜூன் 2008( 11:49 IST ) உடலுக்கு குளிர்ச்சியும், வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்க மாதம் ஒரு முறையாவது வெந்தயக் குழம்பு செய்து சாப்பிடுவது நல்ல பலன்களைத் தரும். இரண்டு பேருக்கு தேவையான வெந்தயக் குழம்பு செய்வதற்கான வழி முறை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை வெங்காயம் - 2 தக்காளி - 2 புளி - எலு‌மி‌ச்சை அளவு வெந்தயம் - அரை தேக்கரண்டி மிளகாய் தூ‌ள்- 1 தேக்கரண்டி த‌னியா தூ‌ள் - 2 தே‌க்கர‌ண்டி மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி தே‌ங்கா‌ய் - 2 ப‌த்தைக‌ள் உப்பு - தேவையான அளவு இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி கொத்துமல்லி, கறிவேப்பிலை கடுகு, எண்ணெய் - தாளிக்க …

  3. சூப்பரான... வாழைக்காய் பஜ்ஜி. மாலை நேரத்தில் வீட்டில் டீ போட்டு குடித்தாலே, ஸ்நாக்ஸ் எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, சற்று சூடாகவும், உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையிலும், வாழைக்காயை வைத்து ஒரு பஜ்ஜி செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். இப்போது அந்த வாழைக்காய் பஜ்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: வாழைக்காய் - 1 கடலை மாவு - 1/2 கப் அரிசி மாவு - 1/2 கப் மைதா மாவு - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் சோடா உப்பு - 1 சிட்டிகை பெருங்காயத் தூள் - சிறிது உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு செய்முறை: முதலில் வாழைக்காயை நீளமாக சீவிக் கொள்ளவும…

  4. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியா சமையல் பகுதிக்கும் வந்தாச்சு இங்கதான் சமையல் வல்லுனர்கள்/சமையல் கலைஞர்கள் இருக்கிறீங்களே . எனக்கும் கொஞ்சம் சுவையா சமைக்க உதவி செய்யுங்கோ. என்ர நிறுவனத்தில எங்கட குழுவில 5 பேர் இருக்கிறம். ஒவ்வொரு வியாழக் கிழமையும் ஒராள் சமைக்கவேணும். வாற வியாழன் திரும்ப என்ர முறை. ஏற்கனவே இரண்டு தரம் ஏதோ தட்டுத் தடுமாறி எனக்கு தெரிஞ்சத வைச்சு சமைச்சுக் குடுத்திட்டன். இரண்டு தரமும் கோழியை வைச்சு விளையாடியாச்சு. இனி வேற ஏதாவது புதுசா செய்ய வேணும் . சுலபமா - கனநேரம் செலவளிக்காமல் (30 - 50 நிமிடங்களுக்குள்) செய்யக் கூடிய ஒரு உணவுக்கு செய்முறை சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்

    • 40 replies
    • 11.4k views
  5. விடுமுறை நாட்களில் காலை வேளையில் கடற்கரைக்கு சென்று விரும்பிய மீன்களை வாங்கி வந்து உண்பது வழ்மை நான் வேற அசைவ ஆசாமி ஆகையால் இன்று இந்த மீன் கண்ணில் பட்டது மொத்தமாக வாங்க இயலாது இருந்தாலும் கிலோவில் வாங்கி சமைத்தாலும் நமது முறையில் இதை விட இந்த மீனை வேறு எப்படி சமைக்கலாம் ஒருக்கா சொல்லுங்கோவன் சமையல் கலை தெரிந்தவர்கள் மட்டும்

  6. இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி இராசவள்ளிக் கிழங்கு - 1 தேங்காய்ப்பால் (முதற்பால்) - 1/2 கப் தேங்காய்ப்பால் (இடண்டாம்பால்) - 2 கப் சீனி - 1 - 11/2 கப் உப்பு - 1 சிட்டிகை இராசவள்ளிக் கிழங்கை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டவும் - ~2 கப் வர வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் தேங்காய் இரண்டாம் பால், கிழங்கு துண்டுகளைப்போட்டு அவிய விடவும். கிழங்கு நன்கு அவிந்ததும் சீனி, உப்பு போட்டு கலந்து மெல்லிய நெருப்பில் கொதிக்க விடவும். சீனி கரைந்ததும் கிழங்கை அகப்பை அல்லது மத்தால் நன்கு மசித்து கூழாக்கி விடவும். பின்னர் தேங்காய் முதற் பாலை விட்டு காய்ச்சவும். ஒன்று அல்லது இரண்டு கொதி வந்ததும் இறக்கவும். சுவையான இராசவள்ளிக்கிழங்கு கஞ்சி தயார். சுடச்சுடவும் குடிக்கலாம். அல…

  7. மட்டன் ஈரல் வறுவ‌ல் செய்வது எப்படி மட்டன் ஈரல் வறுவல் மிகவும் நன்றாக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மட்டன் ஈர‌ல் - கால் கிலோ வெங்காயம் - 3 தக்காளி - 2 இஞ்சி பூண்டு விழுது - ‌சி‌றிதளவு மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி மிளகு தூள் - அரை தேக்கரண்டி தனியாதூள் - அரை தேக்கரண்டி கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி சீரக தூள் - அரை தேக்கரண்டி மஞ்சள் தூள் - கால் தேக்க…

    • 4 replies
    • 11.1k views
  8. ஹலோ எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா நண்பர்க$லே ....வீடு குடி போக பலகாரம் செய்வார்கள் தானே என்ன பலகாரம் செய்யணும் அதன் செய்முறையையும் கூற முடியுமா நண்பர்களே... அதோடு பால்ரொட்டி எப்படி செய்வார்கள் அதன் செய்முறையையும் ப்லீஸ் ஹெல்ப் பண்ணவும்.....னன்றி

    • 8 replies
    • 11.1k views
  9. Started by ரதி,

    உங்களில் எத்தனை பேருக்கு ஈரல் பிடிக்கும்...ஈரல் சமைப்பதற்கு முன் நன்கு கவனமாக கழுவ வேண்டும், ஈரல் மென்மையானது சமைத்த பிறகு அதன் சிகப்பு நிறம் போய் இருக்க வேண்டும் அத்தோடு அதிக நேரம் அவிய விட்டால் அது இறுகி போய் கடிக்க கஸ்டமாக இருக்கும் ஆகவே கவனமாக சமைக்க வேண்டும்.இனி ஈரல் வறுவல் செய்ய தேவையான பொருட்களை பார்ப்போம்; ஆட்டு ஈரல் அல்லது கோழி ஈரல் 1/2 கிலோ வெங்காயம் 1 உள்ளி 6 அல்லது 7 பல் கருவேப்பிலை தேவையான அளவு மஞ்சல் தேவையான அளவு[1 தேக்கரண்டி] உப்பு தேவையான் அளவு மிளகாய்த் தூள் தேவையான அளவு[3 தேக்கரண்டி] கறுவா 1 துண்டு ஏலக்காய் 2 லவங்கம் 1 எண்னெய் தேவையான அளவு[3தொடக்கம் 5 தேக்கரண்டி] வெங்காயத்தாள் 1 கட்டு இனி எப்படி செய்வது எனப் பார்ப்போம்…

  10. வெண்டைக்காய் புளி குழம்பு தேவையானவை வெண்டைக்காய் - 1/4 கிலோ வெங்காயம் - 1/2 கறிவேப்பிலை பூண்டு - 5 பல் மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் புளித்தண்ணீர் - 1/4 கப் உப்பு பெருங்காயத்தூள் - சிறிது தேங்காய்ப்பால் -1/4 கப் கடுகு வெந்தயம் உப்பு எண்ணெய் செய்முறை * வெண்டைக்காயை வட்ட வட்டமாக நறுக்கி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு , சிறு தீயில் நன்கு வதக்கி எடுக்கவும். * கடாயில் மேலும் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, வெங்காயம், பூண்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். * அதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் , புளித்தண்ணீர், உப்பு சேர்…

  11. தாய்ப்பால் பெருக்கும் உணவுகள் * ரோஸ்டட் கார்லிக் * பத்தியக் குழம்பு * பச்சை மருந்துப் பொடி * பால்சுறா குழம்பு * பூண்டு கீரை பருப்பு மசியல் * பால்சுறா புட்டு * பூண்டு பால் * கருவாட்டுக் குழம்பு * பூண்டு ரசம் * முட்டை ரசம் * மருந்துக் குழம்பு * மட்டன் மிளகு ஈரல் வறுவல் * கசாயம் * வெந்தய டீ கர்ப்பகாலம் முதல் பாலூட்டும் காலம் வரை பெண்களுக்கான சத்துணவு சமையல்கள் பற்றிச் சொல்லிவரும் தூத்துக்குடியைச் சேர்ந்த திவ்யா, இந்த இதழில் வழங்குவது பாலூட்டும் பெண்களுக்கான பிரத்யேக சமையல்கள்! இங்கே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். ரோஸ்டட் கார்லிக் தேவையானவை: பூண்டு - 4 நெய் - 1 டீஸ்பூன் செ…

  12. கொழும்பில் இருக்கும் போது அடிக்கடி Tuna மீன் பொரியல் கடைகளில் வாங்கிச் சாப்பிட்டு இருக்கின்றேன். சிங்களத்தில் 'கெலவல்லோ' என்று அழைக்கப்படும் இந்த மீன் பொரியல் சுவையாக இருக்கும். இந்த மீனைக் கறி வைத்தால் பலருக்கு பிடிப்பதில்லை. சுனைக்கும் தன்மை இருக்கும் மீன்; ஆனால் பொரித்தால் நன்றாக இருக்கும் யாருக்காவது இதை எப்படி பொரிப்பது என்று தெரியுமா? அத்துடன் Tuna மீனுக்கு தமிழ் பெயர் என்ன என்று தெரியுமா?

  13. மரக்கறி சூப் (Vegetable soup) தேவையானவை கரட்-500 கிராம் போஞ்சி-500 கிராம் உருளைக்கிழங்கு-500 கிராம் தக்காளி-500 கிராம் பீட்ரூட்-500 கிராம் கோவா-200 கிராம் வெங்காயம்-100 கிராம் பச்சைமிளகாய்-100 கிராம் பூண்டு-10 பல்லு இஞ்சி-1 சிறிய துண்டு மிளகு-சிறிதளவு சீரகம்-சிறிதளவு செய்முறை காய்கறிகளை நன்றாகக் கழுவி, சிறு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் வேக வைக்க வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாயை நறுக்கி எண்ணையில் வதக்கி காய்கறிகளுடன் சேர்க்கவும். பின் அதனை இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து பிறகு ஒரு லீற்றர் தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகு, சீரகம் கலந்து மீண்டும் கொதிக்க வைக்கவும். பின்னர் இறக்கி பரிமாறவும். இது எல்லோருக்கும் நல்லது. (குறிப்பாக நோ…

    • 22 replies
    • 10.7k views
  14. 30 வகை பிரியாணி எவ்வளவுதான் ஆர்வத்துடனும், அக்கறையுடனும் சமைத்துப் பரிமாறினாலும்... டேஸ்ட் பார்த்துவிட்டு, பல சமயங்களில் உதட்டைப் பிதுக்கும் பிள்ளைகளும், எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் சாப்பிட்டுவிட்டு கைகழுவும் பெரியவர்களும், பிரியாணி செய்துகொடுத் தால்... 'வாவ்!’ என்று வாய்பிளப்பார்கள். அந்த அள வுக்கு வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் அள்ளி அள்ளி சுவைக்க வைக்கும் பிரியாணியில் 30 வகைகளை வாரி வழங்குகிறார் சமையல் கலை நிபுணர் எஸ்.ராஜகுமாரி. இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத இளநீர் பிரியாணி, முருங்கைக் காய் பிரியாணி, பைனாப்பிள் பிரியாணி ஆகிய வற்றுடன் உடல்நலத்துக்கு உற்ற துணையாய் கைகொடுக்கும் வேப்பம்பூ பிரியாணி, நார்த்தங்காய் பிரியாணி போன்றவையும் இதில் அடங்கும். ''அப்புறமெ…

  15. Started by SUNDHAL,

    ஆப்பிள் பாயாசம் தேவைப்படும் பொருட்கள்: *ஆப்பிள்- 150 கிராம். * சப்போட்டா- 150 கிராம். * காய்ந்த அத்திப்பழம்- 2 * பாதாம்-10 * பிஸ்தா- 10 * கிராம்பு- 3 * ஜாதி பத்ரி- சிறு துண்டு. * சவ்வரிசி- 50 கிராம். * வெல்லம்- 200 கிராம். * நெய்- மூன்று மேஜைக்கரண்டி. * தேன்- ஒரு மேஜைக்கரண்டி. * ஏலக்காய்- 6 * தேங்காய் (சிறியது)- ஒன்று. செய்முறை: ஆப்பிள், சப்போட்டா போன்றவைகளை சிறு துண்டுகளாக நறுக்கி, ஒவ்வொரு கரண்டி நெய்யில் தனித்தனியாக வறுத்து, பின்பு நன்றாக அரையுங்கள். சவ்வரிசியை வேகவையுங்கள். பாதாம், பிஸ்தா இரண்டையும் சிறிதாக நறுக்கி, நெய்யில் வறுத்து வைக்கவும். அதில் மீதம் இருக்கும் நெய்யில் அத்திப்பழ…

    • 99 replies
    • 10.6k views
  16. Started by தூயா,

    பால் தேத்தண்ணி தேவையான பொருட்கள்: பால் - 1 கப் தேயிலை - 1 தே.க சீனி - 2 தே.க சுடு நீர் 1/2 செய்முறை: 1. முதலில் நீரை கொதிக்க வைத்து சுட சுட 1/2 கப் எடுக்கவும். அதனுள் தேயிலையை போட்டு கலக்கிவிடுங்கள். 2 நீர் ஓரளவு கொதிக்க தொடங்கியதுமே பாலை எரியும் அடுப்பில் வைத்து காய்ச்ச ஆரம்பிக்க வேண்டும்.. பாலை நன்றாக காய்ச்சி எடுக்கவும். (பால் பொங்கி வர வேண்டும்.) 3. பால் கொதித்ததும், தேயிலை சாயத்தை பாலுடன் கலக்கவும். (வடிக்க மறக்க வேண்டாம்) 4. இதனுள் சீனியை போட்டு கலக்கலாம். (சுட சுட குடிக்க விருப்பம் இருப்பின்) / படங்களில் வருவது போல ஆற்றலாம். (சுட சுட வேணாம் என்பவர்கள்) கவனிக்க வேண்டியது: - பாலும் நீரும் ஒன்றன் பின் ஒன்றாக கொதிக்க விட வேண்டாம். - த…

  17. மீன்களில் சால்மன் மற்றும் டூனா என்னும் சூரை மீன் மிகவும் ஆரோக்கியமானவை. இத்தகைய மீன்களில் அதிக சத்துக்கள் நிறைந்திருப்பதோடு, மிகுந்த சுவையும் உள்ளது. மேலும் இந்த மீன்களுள் சூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மற்றும் பலவற்றிற்கும் பெரும் உதவியாக இருக்கும். இத்தகைய சூரை மீனை வைத்து கிரேவி செய்து வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு வலுவோடும், ஆரோக்கியத்துடனும் இருக்கும். இப்போது இந்த சூரை மீனை வைத்து எப்படி கிரேவி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சூரை மீன் - 2 டின் வெங்காயம் - 1 (நறுக்கியது) தக்காளி - 1 (நறுக்கியது) பூண்டு - 4-5 பல் (நறுக்கியது) இஞ்…

    • 18 replies
    • 10.6k views
  18. பனங்காய்ப்பனியாரம். இங்கை பனங்கழி இல்லாமலே பனங்காய் பனியாராம் செய்யலாம் பாருங்கோ நல்ல பிங்சுகரட்டை எடுது தோலோடா அவியுங்கோ கரையவிடாமல். அப்புறமா தோலைசீவி அதுக்கு அளவான சீனி போட்டு நல்லா அரையுங்கோ அது பனங்கழி மாதிரி நல்லா வரும் வரை. அதுக்கு பிறகு அளவான கோதுமை மாவை போட்டு குழையுங்கோ. கொஞ்சம் பொங்குவதுக்கு அளவான பொடியும் போடுங்கோ 6 மணித்தியாலத்துக்குப் பிறகு எடுத்து சுடுங்கோ சரியா பனங்காய் பனியாரம் போல இருக்கு சாப்பிடு போட்டு சொல்லுங்கோ :wink:

    • 47 replies
    • 10.4k views
  19. பருப்பு கீரை கூட்டு தேவையான பொருட்கள் 1 1/2 கோப்பை கடலைப் பருப்பு 1 கொத்து கீரை (பசலை, ஸ்பினாச், அரை கீரை போன்றது) 2 சிவப்பு தக்காளிகள் 15 பல் பூண்டு 1 தேக்கரண்டி மஞ்சள் உப்பு தேவைக்கேற்ப 1 தேக்கரண்டி ஜீரகம் 1 தேக்கரண்டி கடுகு 2 சிவப்பு மிளகாய்கள் காய்ந்தது செய்முறை கீரையை கழுவி சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைத்துக்கொள்ளவும். இதே நேரத்தில் கடலைப்பருப்பை பிரஷர் குக்கரில், மஞ்சள், உப்பு, 7 பல் பூண்டு போட்டு வேகவைத்துக்கொள்ளவும். பருப்பு வெந்ததும், இதனை கீரையோடு சேர்த்து, தக்காளியை வெட்டி இதனோடு சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும், ஜீரகம், கடுகு சேர்த்து, வெடிக்கும்போத…

  20. மிளகு பூண்டு குழம்பு பூண்டு உடல் நலத்திற்கு ஏற்ற உணவுப் பொருள். பூண்டின் மணத்திற்குக் காரணமான சல்ஃபர் அதில் உள்ள ஈதர் மனிதர்களின் நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும். எனவே அடிக்கடி நாம் உண்ணும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வது அவசியமாகும். மிளகு பூண்டு குழம்பு சற்றே காரமான உடலுக்கு ஏற்ற சைவ குழம்பாகும். தேவையான பொருட்கள்: மிளகு – 4 டீ ஸ்பூன் சீரகம் – 1 டீ ஸ்பூன் மல்லி - 2 டீ ஸ்பூன் பூண்டு - 20 பல் சின்ன வெங்காயம் - 10 தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன் கடுகு - 1/2 டீ ஸ்பூன் பெருங்காயம் - 1 டீ ஸ்பூன் புளி - எலுமிச்சையளவு கறிவேப்பிலை - சிறிதளவு உப்பு - தேவையான…

  21. உருளைக்கிழங்கு ரோல்ஸ் தேவையான பொருட்கள் உருளைகிழங்கு கறிக்கு உருளைகிழங்கு - 250 கிராம் சிறிய வெங்காயம்- 10 / Shallot வெங்காயம் - 1(இது கிட்டத்தட்ட சிறிய வெங்காய சுவையை தரும்) பச்சை மிளகாய் - 1 உப்பு- சுவைக்கு கறித்தூள் - உங்கள் உறைப்பு அளவுக்கு ஏற்ப மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி கறிவேப்பிலை - 2 நெட்டு ரோல்ஸ் உருட்ட ஸ்பிறிங் ரோல்ஸ் சீற் பக்கட் (frozen உணவு பகுதியில் இருக்கும்) முட்டை - 4 காய்ந்த பாண் நொருக்கல்?? - 250 க்ராம் பொரிக்க எண்ணேய் செய்முறை 1. உருளைகிழங்கை உப்பு போட்டு நன்கு அவித்து எடுத்து, தோல் உரித்து வைக்கவும் 2. ஸ்பிரிங்க் ரோல் சீட்ஸ் ஐ அதன் உறையின் பின்புறத்தில் சொல்லி உள்ளது போல் free…

    • 15 replies
    • 10.1k views
  22. என்னென்ன தேவை: மீன் Red Mullet - 6 உள்ளி / வெள்ளைப்பூண்டு - 6 வெங்காயம் - 1 இஞ்சி விழுது - 1 மே.க மிளகாய் - 2 மஞ்சள் தூள் - 1 தே.க மிளகாய் தூள் - 1 1/2 மே.க சீரகம் - 1 1/2 தே.க எண்ணெய் - 3 மே.கா எப்படி செய்யணும்: - முதல்ல மீனை எடுத்து சுத்தம் பண்ணிக்குங்க. படத்தில் இருப்பது போல இருக்கணும். இதுவரை நான் மீனை சுத்தம் செய்யாததால் எப்படி என கேட்காதீர்கள். அண்ணன்களிடம் தான் நானே கேட்கணும். - படத்தில் இருப்பது போல மீனை இரண்டு பக்கமும் கீறிக்கொள்ளுங்கள். - Paper Towel இல் மீனை போட்டு வைக்கணும். ஏன் என்றால் மீனில் இருக்கும் நீர் தன்மை பேப்பரில் ஊறிப் போய்விடும். - இப்போ வெங்காயம், உள்ளி, இஞ்சி, தூள்வகைகளுடன் உப்பை சேர்த்து நன்றாக…

    • 11 replies
    • 10k views
  23. Started by தூயா,

    எங்க சொதி உலகத்தில் இத்தனை பிரபலம் என எனக்கு தெரியாது. சொதி செய்முறை தெரியுமா? சொதி என்றால் என்ன? சொதி செய்முறை எப்ப எழுதுறிங்க என பல உறவுகள் கேட்டுக்கொண்டேயுள்ளனர். எத்தனை நாளுக்கு தான் "விரைவில் எழுதுகிறேன்" என ஏமாற்றுவது. சொதியில் பல வகை உண்டு: சைவம் & அசைவம். சைவ சொதியில் வெள்ளைச்சொதி, மஞ்சள் சொதி என இருவகை உண்டு. அசைவத்தில்....அப்பப்பா எண்ணிலடங்கா..சுவையோ சொல்லில் அடங்கா...இதெல்லாம் அனுபவிச்சு பார்க்கணும்..செய்முறைய படிச்சமா, பதில் போட்டமா என இருக்காமல் ஒரு தடவை சமைத்து உண்டு தான் பாருங்களேன். அதன் பின்னர் நீங்களும் "சொதி ஸ்பெஸலிஸ்ட்" (யாராவது தமிழ்படுத்தி தாருங்கள்) ஆகிடுவிங்க. அசைவத்தில் முட்டை சொதி, மீன் சொதி, இறால் சொதி, இறைச்சி சொதி, கருவாட்டு சொத…

    • 37 replies
    • 9.9k views
  24. சிக்கன் 65 (Chicken 65) தேவையான சாமான்கள்: கோழி-400கிராம், இஞ்சி-1 துண்டு, மிளகாய்த்தூள்-2தேக்கரண்டி, வினிகர்-1 மேசைக்கரண்டி, உள்ளி-10 பல், எண்ணை-1 கோப்பை, உப்பு-தேவையான அளவு செய்யும் முறை: 1. கோழியைத் தோலை உரித்து பெரிய துண்டுகளாக வெட்டி கழுவிக்கொள்ளவும். 2. இஞ்சி, உள்ளி அரைத்து உப்பு சேர்த்து வினிகருடன் கலக்கி, மிளகாய்த்தூளைச் சேர்த்து கோழித்துண்டுகளில் தடவி முன்று மணி நேரம் உற வைக்கவும். 3. பிறகு கோழித் துண்டுகளை அரை அவியலாக வேகவைத்து தண்ணீர் இல்லாமல் எடுத்துக்கொள்ளவும். 4. பாத்திரத்தில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கோழித் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். இப்போது சிக்கன் 65 ரெடியாக உள்ளது. (இப்போது தான் பறவைக் காய்ச்சல் ந…

  25. ஆண் மீனைவிட பெண் மீனைத்தான் சாப்பிடவேண்டும். ஏன்.. எப்படி? ‘கடல் மீன், ஆத்து மீன், குளத்து மீன், ஏரி மீன் என்று எங்கெங்கெல்லாமோ மீன்? வஞ்சிரம், கொடுவா, வாளை, இறால் என்று கொஞ்சமா மீன் வகைகள் நீர் நிலையில்!' - இப்படியொரு கவிதை வரியை படித்தது நினைவில் வருகிறது. மீன் என்றதும் நாவில் எச்சில் ஊறும். பொதுவாக அதன் முட்களை நீக்கிவிட்டு சதையைத் தின்பதிலும், சிலவகை மீன்களில் அதன் எலும்புகளை சக்கையாகும்வரை பற்களால் மென்று தின்பதிலும் ஒரு சுகம். இவை எளிதில் ஜீரணமாகி, ரத்தத்தில் கலந்து, உடலுக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குவதில் மீன்களுக்கு நிகர் மீன்களே! உலகத்திலுள்ள தானியங்கள், காய்கறிகள், ஜீவராசிகள் போன்றவை முற்றிலும் அழிந்துபோனாலும்கூட மனிதக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.