கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ரெண்டாந்தாரமாயெண்டாலும் பறவாயில்லை ஆனால் ஒரு கலியாணம் அன்புள்ள அக்கா, **** அக்காவை அறிஞ்சிருப்பியள். அவாவும் ஒரு எழுத்தாளர். மகளீர் அமைப்பு வெளியிட்ட வெளியீடுகள் ஈழநாதம் புலிகளின் குரலில எல்லாம் அவாடை எழுத்துகள் வந்திருக்கு. தடுப்பிலயிருந்து இப்ப விடுதலையாகி வந்திருக்கிறா. குடும்பம் சரியான கஸ்ரம். பாவம் மேலும் 2தங்கச்சியவை இருக்குதுகள். இவாக்கு 37வயதாகீட்டுது. வெளிநாட்டு மாப்பிளைமார் ஆருக்கேன் கலியாணம் பேசி அவவுக்கு ஒரு வாழ்க்கையை அமைச்சுக் குடுக்க வேணும். ஏதாவது ஒரு வழி செய்யுங்கோக்கா. அன்புடன் **** இதென்னடா அநியாயம் விழுந்தது….? நானென்ன கலியாணப் புறோக்கரெண்டு நினைச்சிட்டாங்களோ ? மனிசில சின்னக் கோவமும் வந்தது. இந்த நாலுவரிக்கடிதத்தை எழுதினவனும் ஒர…
-
- 80 replies
- 9.3k views
-
-
[01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்ச…
-
- 21 replies
- 2.5k views
-
-
“படிச்ச மனோ வந்து நிற்கின்றான் ,இரவு மாக்கூசுக்கு வா” கதைத்த வேறொன்றும் நினைவில்லை படிச்ச மனோ என்ற சொல்லை தவிர. எட்டாம் வகுப்பில் இருந்து A/L வரை என்னோட படிச்சவன் இந்த படித்த மனோ. எவருக்கும் அடங்காத ஆனால் மிக ஆழுமையுள்ள ஒரு பிறப்பு.முதலாம் பிள்ளை என்பது O/L வரை அவனுக்கான இடம்.அதை இன்று உலகம் பூராக இருக்கும் யாழ் இந்து டாக்குத்தர்களோ,எஞ்சினியர்களோ எத்தனையோ பகீரத பிராயத்தனம் பண்ணியும் அந்த அவனுக்கான இடத்தை மாற்ற முடியவில்லை. ஒரு போல் பொயின்ற் பென், ஒரு கொப்பி, வாராத தலைமயிர், காக்கிகாற்சட்டை, பட்டன் பூட்டத சேட் இதுதான் அவனின் அடையாளம். இரண்டு மனோக்கள் எங்கள் செற்றில் இருந்ததால் நல்லா படிக்கும் இவன் படித்த மனோ .மற்றது மொக்கு மனோ .படிப்பிற்கும் இவனுக்கும் வெகுதூரம்,வீட்ட…
-
- 20 replies
- 3.4k views
-
-
வாசலில் புத்தம் புதிய ரொயாட்டா கார் வந்து நின்றதும்.. ஓடிச் சென்று.. வாங்கோ.. உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம் என்றபடி காரின் கதவுகளை திறந்துவிட்டார் மணப்பெண்ணின் அப்பா சுந்தரேசன். வேளைக்கு வருவம் என்று தான் வெளிக்கிட்டம் சம்பந்தி ஆனால் ரபிக் ஜாமில சிக்கிக்கிட்டம் அதுதான் லேட்டாப் போச்சு என்றார் மாப்பிள்ளையின் அப்பா சந்திரகாசன். அது பறுவாயில்லை.. லேட்டா என்றாலும் வந்து சேர்ந்தீங்களே. அது சந்தோசம். எங்க மாப்பிள்ளைத் தம்பியைக் காணேல்ல.. கனடாவில இருந்து லண்டன் வந்ததும் களைச்சுப் போட்டாரோ..?! இல்ல அவன் இரண்டு கிழமை லீவில தான் வந்தவன். அதுக்குள்ள ஒரு கிழமை ஓடிப் போச்சே என்ற கவலையில இருக்கிறான். அந்தா பின் சீற்றில இருந்து இறங்கி வாறான்.. நீங்கள் காணேல்லைப…
-
- 14 replies
- 2.9k views
-
-
ரொறொன்ரோ பெண் - அ.முத்துலிங்கம் முதலில் ஒரு கடிதத்துடன் தொடங்கலாம் என நினைக்கிறேன். 50 வருடத்திற்கு முந்திய கடிதம். ஒரு கனடிய இளம் பெண் எழுதியது. மானுடவியலில் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிக்காக அவர் தெரிவு செய்த இடம் தமிழ் நாட்டில் உள்ள ஒரு பிற்பட்ட கிராமம். கோவை, காங்கேயம் அருகில் உள்ள ஓலைப்பாளையம். கனடாவில் உள்ள அவருடைய தாயாருக்கு எழுதிய முதல் கடிதம். (சில இடங்களில் சுருக்கப்பட்டுள்ளது.) ‘நான் வசிக்கும் சிறிய வீடு. ஒரு முற்றமும், பூட்டக்கூடிய சாமான் அறையும், வெளியே சமைக்கவும் குளிக்கவும் வசதிகள் கொண்டது. வெள்ளையடித்த உள் சுவருக்கு மேல் சாய்ந்து கிடக்கும் கூரை மழைத் தண்ணீரை முற்றத்தில் கொட்டும். வீட்டின் முழுப்பரப்பும் 18 X 30 அடி இருக்கலாம். தெற்குப…
-
- 1 reply
- 1.6k views
-
-
[size=3][/size] [size=5]றஞ்சியின் கதையைச் சொல்ல வேணும். அதன்மூலம் அவருடைய நிலைமையை, அவர் சந்திக்கின்ற பாடுகளையெல்லாம் நாலு பேருக்கு அறியப்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது இதையெல்லாம் அறிகின்றவர்களிடமிருந்து பிறக்கின்ற கருணையினால், அன்பினால், இரக்கத்தினால் அவருக்கு ஆதரவும் உதவியும் கிட்டக்கூடும் என்று நீண்ட நாட்களாக யோசித்திருந்தேன். ஆனால், அந்தக் கதையை எழுதும்போது அது சிலவேளை றஞ்சிக்குச் சங்கடங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் தயக்கத்தோடு அதைத் தவிர்த்தேன். ஒரு காலத்தில் யாரிலும் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்த்திருக்காமல் வாழ்ந்த நிலை மாறி, இப்ப பிறரை எதிர்பார்த்து, பிறரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு, அதுவும் இப்படி பலருக்கும் தெரியக்கூடிய பகிரங…
-
- 4 replies
- 1.2k views
-
-
றாகிங் – ஒரு வன்முறை “நான் இனி பல்கலைக் கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்” சொன்னவன் இப்போ இறந்து போய்விட்டான். பல நூற்றுக் கணக்கான தோப்புக்கரணங்கள் போட்டே செத்துப்போனான் அவன் என்றால், அதிர்ச்சியடையாதார் யார்?. இதற்குப் பெயர் “பகிடிவதை”. “பகிடிப்பட்டவன்” வரப்பிரகாஷ். “எனது மகனின் மரணச் சடங்கில் எந்த மாணவனும் பங்குபற்றக்கூடாது”. தட்டியில் துயரமும் கோபமும் கலந்து எழுதிவைத்தார் விதுரா இன் தந்தை. சிறுநீரகம் சிதைக்கப்பட்டு செத்துப்போனவன் விதுரா. செயற்கைச் சிறுநீரகம் பொருத்தி இயங்கவைக்க செய்யப்பட்ட முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடிந்தது. இவன் பலியாகியதும் “பகிடிவதைக்குத்தான்”. இவையெல்லாம் அண…
-
- 2 replies
- 701 views
-
-
மனதுக்குள் எதோ ஒரு வலி தூக்கம் கலைந்து விளித்து எழுந்தேன்.அட நெஞ்சில் விழுந்த இரு துளி கண்ணீர்.ஏன்கேள்வி பிறக்கும் போதுதானே வேள்வி நடக்கும். றிஷானா கொடும் தவறு செய்த பெண்ணே உனக்கு மரணதண்டனை.மிகவும் சரியான தண்டனை.பலவருடங்களாய் உன்னைப்பற்றிய வாதங்கள் விவாதங்கள் அனைத்துக்கும் முடிவு .செத்து ஒளிந்தாய்.நீ ஒரு இஸ்லாமிய பெண் உனக்கான தண்டனை சரி.ஆனால் ஏனோ தெரியவில்லை .இன்னும் என் கண்கள் உகுத்த துளிகள் உயிரில் சுடுகிறது.உன் முதல் தவறு ஏழை பெற்றோருக்கு மகளானது.அதுவும் முதல் மகளானது.உன் வயதுக்கு இறக்கை முளைத்து சிறகடித்து பறக்கும் வயதில் பணம் கொத்திவர பாலைவனம் பறந்தாய் அது உன் மறுதப்பு. சிலவேளைகளில் நினைத்திருப்பாய் ஒழுகும் உன் குடிசைக்கு ஒழுங்கான கூரையிடுவெனென.அதுவும் உன் தப்பு.பல …
-
- 4 replies
- 964 views
-
-
ஊசியிலை மரங்களுடன் கூடிய ஐரோப்பிய மண்ணில் உள்ள இங்கிலாந்தில் பாகிஸ்தானிய இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவள் றுக்சானா (Ruksana) என்ற அந்தச் சிறுமி. எல்லா இங்கிலாந்துச் சிறுவர் சிறுமியர் போல அவளும் சுதந்திரச் சிட்டாக பள்ளிக் காலத்துக்குள் நுழைகிறாள். அவள் பள்ளியில் துடிப்புடன் செயற்பட்டு சிறந்த மாணவியாக ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய முக்கிய மூன்று பாடங்களிலும் set 1 (உயர்நிலைக்குரிய) மாணவியாகவே இருந்து வந்துள்ளாள். 15 வயதை அடைந்து பருவமும் அடைகிறாள். 15 வயதில் ஒரு சிறுமிக்குள் என்னென்ன அழகிய கனவுகள் ஓடுமோ அத்தனையும் இவளுக்குள்ளும் ஓடிக் கொண்டிருக்கும் வேளையில்.. பாகிஸ்தானிய பூர்வீகப் பெற்றோர் இவளை சுற்றுலாவுக்கு என்று பாகிஸ்தான் அழைத்துச் ச…
-
- 32 replies
- 5.5k views
-
-
இவன் அப்ப சின்னப் பொடியன். முக்கால் சைக்கிள் ஒன்றில பள்ளிக்கூடம், ரியூசன் போய் வந்து கொண்டிருந்தான். கூடப் படிச்ச தர்சினியில கொஞ்சம் விருப்பமிருந்தது. பள்ளிக்கூடம் போனால் அவளைப் பார்த்துக் கொண்டிருப்பான். அந்த நேரம் சாமான் எல்லாம் ஆனை விலை குதிரை விலை. அரசாங்கம் கன சாமானுக்கு தடை போட்டிருந்தது. பற்றி, சோப் கண்ணுக்குத் தெரியாது. இவன் பள்ளிக்கூடம் வெளிக்கிட்டான் என்றால் அப்பு வளர்க்கிற மாடு மூசி மூசி மோப்பம் பிடிச்சுவந்து நக்கும்.. சோப் தட்டுப்பாடென்பதால பனங்காயிலதான் அப்ப உடுப்புத் தோய்க்கிறது. கலியாணவீடு, திருவிழாக்களுக்கு போடுறதெண்டு ஆசை ஆசையாக ஒரு நல்ல மஞ்சள் சேட் வைத்திருந்தான். ஒருநாள் தோய்த்துக் காயப் போட அதை மாடு சப்பிப் போட்டுது. அந்த சேட்டில்லாமல் போனத…
-
- 35 replies
- 3.8k views
-
-
றெயில் பயணம் http://fr.wikipedia.org/wiki/Fichier:Attentat_du_RER_B_%C3%A0_la_station_Saint-Michel_2.jpg 1995 ல் ஓர் அதிகாலை நேரம் மனோவினது நித்திரைக்கு உலை வைத்தது அவனது அலாரம் . மனோ வழக்கமாகவே பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே அலாரத்தை வைப்பதுண்டு , இதனால் மனோ பூனைத் தூக்கத்தை சர்மிளாவின் அணைப்பில் அனுபவிப்பதுண்டு . அவனது கை கட்டிலின் மறுபுறம் துளாவியது . அந்த இடம் வெறுமையாகவே இருக்க இந்த நேரத்தில் சர்மி எங்கே போய்விட்டாள் ? என்று நினைத்தவாறே அவன் கட்டிலில் இருந்து விலுக்கென்று எழுந்தான் மனோ . வீட்டின் ஹோலுக்குள் வந்தபொழுது , சர்மை முழுகிவிட்டு பல்கணியில் தனது தலையைத் துவட்டிக்கொண்டிருப்பது கண்ணாடி ஜன்னலுக்கால் தெரிந்தது . அவனுக்கான கோப்பி ஆவி பறந்தபடி குசின…
-
- 10 replies
- 1.4k views
-
-
எனக்கு றொனியனின் ஞாபகம் இப்பொழுது தான் வந்தது . நான் வந்து இவ்வளவு நேரமாகியும் அதைக் காணவில்லை . அம்மாவின் அரவணைப்பில் , மரக்கறி உணவையே உண்டு வளர்ந்த சுத்த வீரன் றொனியன் . ஒழுங்கையில் யாரும் அவனுடைய அனுமதியில்லாமல் போகமுடியாது . மீறினால் வயிற்ருப்பிடி தான் ஆள் அரக்காது . தங்கைச்சி பகலில் பள்ளிக்கூடம் போனால் றொனியன் தான் அம்மாக்கு காவல் வீரன் . அம்மா என்னுடன் கதைக்கும்பொழுது , றொனியனப்பற்றி கதைக்காவிட்டால் அவாக்குப் பத்தியப்படாது . ஒருநாள் தங்கைச்சியைக் கொண்டு றொனியனைப் படம் எடுத்து எனக்கு அனுப்பியிருந்தா . அப்பொழுது தான் எனக்கு றொனியனின் ஆழுமை தெரிந்தது . அவன் மண்ணிற நிறத்தில் , நெடிய உருவத்தில் , அம்மாவின் ஊட்டத்தால் நல்ல செளிப்பாக இருந்தான் . நான் தங்கைச்சியைக் கூப்பிட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
என்ன அங்கிள் ஜிம்மியோட வாக்கிங் போறீங்கள் போல.... ஓமடா தம்பி. இந்தப் பார்க்கை யும் ஜிம்மியையும் விட்டா எனக்கு என்ன கதி.. சொல்லு பார்ப்பம். ஏன் அங்கிள் அப்படிச் சொல்லுறீங்க. ஊரில நீங்கள் டொக்டரா இருந்தனீங்கள் தானே. அந்த அனுபவத்தை வைச்சு.. இங்க சரிற்றி வேலை செய்தால் சனத்துக்கு நாலு நல்லது செய்ததாகவும் இருக்கும் உங்களுக்கும் ஓய்வு காலத்தில் நாலு பேரோட பழகின நட்பும் மனத் திருப்தியும் கிடைக்குமே..! நீ சொல்லுறது சரி தான் தம்பி. இப்ப பார் நான் லண்டன் வந்து 6 வருசம் ஆகிட்டுது. ஊரில உள்ள பென்சனைக் கூட எடுக்கப் போக முடியல்ல. மகனட்ட வந்ததோட அவன் கூடவே இருக்கிறன். அவனுக்கும் ஊருக்குப் போற நினைப்பில்ல. அட பென்சன் வருகுது வா ஒருக்கா போய் எடுத்துக் கொண்டு வரும் எண்டால்.…
-
- 11 replies
- 2.1k views
-
-
லட்டு - ஜி.கார்ல் மார்க்ஸ் ஓவியங்கள் : செந்தில் இந்தக் கதையைப் படிக்கத் தொடங்குவதற்குமுன்பு, நீங்கள் இந்த ‘லட்டு’ எனும் வார்த்தையை எவ்வாறு உச்சரித்தீர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். ‘ட்’ அப்புறம் ‘டு’ என்கிற வார்த்தைகளுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்து அதை உதிரச்செய்து விடாமல் ‘Latdu’ என மென்மையாக, அதேசமயம் Laddu என்று நீர்த்துப் போனதாகவும் அல்லாமல், வாஞ்சையாக அதை உச்சரிக்க முடிந்தால், இந்தக் கதை உங்களுக்குப் பிடித்துவிடும். “மென்மை, வாஞ்சை போன்ற வார்த்தைகள் ரொம்பவும் க்ளிஷேவானவை ஆயிற்றே... எதற்காக ஒரு கதையை இப்படித் தொடங்குகிறான்...” என்று உள்ளுக்குள் எழுந்துவரும் எரிச்சலை மறைத்துக்கொண்டு, “சரி சரி... மேலே சொல்...” என்று வாசிப்பதைத் தொடர்…
-
- 0 replies
- 1.9k views
-
-
லண்டனில் கனடாவில் புலம் பெயர்ந்த தமிழர்களால் உருவாக்கப்பட்டு பல விருதுகளை பெற்ற 1999 என்ற திரைபடம் 11.06.11 அன்று காண்பிக்கப்பட்டது.இத் திரைபடம் அதிகம் அறியப்பட்டிராத ஒரு நிறுவனத்தின் திரைபட விழா மூலம் திரையிடப்பட்டது. லண்டன் புறநகர் பகுதியான kingston இல் திரையிடப்பட்ட பொழுதும் அரங்கு நிறைந்த நிலையில் பல இனத்தவரும் காணப்பட்டனர்.இந்த படம் சகல மட்டத்து திரைபட ரசிகர்களாலும் பார்க்க கூடிய படம். ஆனால் இந்த படத்தை லண்டனில் யாரும் விநியோகிக்க முன் வரவில்லையாம் என்பது துன்பகரமான செய்தி. இந்த படம் இத்திரை படவிழாவில் இலவசமாக காண்பிக்கப் பட்டது.இந்த படம் பார்த்து முடித்துவிட்டு என்னுள் எழுந்த கருத்து.தென்னிந்திய மற்றும் குப்பை படங்களை ரசித்து பழக்கப்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை விரும்…
-
- 9 replies
- 1.3k views
-
-
இன்று (20.08.2016) லண்டனில் நடந்த முழு நாள் நாவல் கருத்தரங்கில் புலம் பெயர் எழுத்தாளர்கள் தமிழ்ந்தியினதும் சாந்தி நேசக்கரமினதும் நாவல்களும் விமர்சனத்துக்கு எடுக்க பட்டிருந்தது இதில் குறிப்பிடத்தக்க அம்சம் கனடாவிலிருந்து தமிழ்நதியும் ஜெர்மனியிலிருந்து சாந்தியும் இந் நிகழ்வுக்கு வந்திருந்தார்கள் தமிழக நாவல்கள், புலம் பெயர் எழுத்தாளர் நாவல்கள், பிற மொழி நாவல்கள் என்று அடிப்படையில் அமர்வுகள் நடைபெற்றன. சுசீந்திரன் ,நித்தியானந்தன் , யமுனா ராஜேந்திரன் மற்றும் சிலர் விமர்சர்களாகவும் இருந்தனர் https://www.youtube.com/watch?v=HrwwxgOLE http://sinnakuddy1.blogspot.co.uk/2016/08/blog-post_20.html
-
- 2 replies
- 1.7k views
-
-
உங்களின் லண்டன் என்ற கனவுலகத்திற்கு வந்தவுடன் உங்களை எல்லோரும் பவுண் காசு கொடுத்து வரவேற்பார்கள் என்றுதானே நினைத்திருந்தீர்கள். இங்கு வாழ்க்கையை இழுத்து பிடித்து வாழ்வதற்கு பலர் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். லண்டன் உங்களை பாராட்டி, சீராட்டி வளர்க்கும், பணத்தை அள்ளித்தரும் என்று நினைத்தால் அது உங்களின் முட்டாள்தனம்.ஹீத்ரோ எயார் போட் உங்களை செங்கம்பளம் போட்டு வரவேற்காது உங்களை குத்தி குடையும். போனகிழமை வெளிநாட்டுக்கு போய்விட்டு ஹீத்ரோ எயார் போட் இமிக்கிறேசன் கவுண்டரில் நின்று கொண்டிருந்தேன். எனக்கு பக்கத்து கவுண்டரில் ஒரு நேபாள தேசத்து பெண் நின்று கொண்டிருந்தாள். அவள் இளம் பெண் ஸ்ருடன்ட் விசாவில் வந்திருக்கிறாள்.இமிக்கிறேசன் ஒபிஸர் கேட்கும் கேள்விக்கு கூட ஆங்க…
-
- 271 replies
- 26.1k views
-
-
லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு! விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கு…
-
- 7 replies
- 2.7k views
-
-
மான்டேஜ் மனசு 19: லன்ச் பாக்ஸ் - மதிப்புமிகு மாற்றுக் காதல்! அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டுக்கு கிளம்பத் தயாராக இருந்த தருணம் அது. குணசேகரன்தான் செல்போனில் அழைத்தார். ''குடும்பஸ்தன் ஆன பிறகு மேன்ஷனையே மறந்திட்டியே டா...'' ''அப்படில்லாம் இல்லை பெருசு... ஒருநாள் கண்டிப்பா வர்றேன்.'' ''இப்படியே எத்தனை நாளைக்குதான் சமாளிப்ப... இன்னைக்கு ஃப்ரீயா..?'' ''ஹ்ம்ம். நீங்க எங்கே இருக்கீங்க?'' அடுத்த அரை மணி நேரத்தில் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்ஷனில் குணசேகரனை சந்தித்தேன். சம்பளம் போட்ட தினம் என்பதால் குணசேகரன் நண்பர்களுடன் உற்சாகமாகப் பேசிக்கொண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
லவ் ‘‘என்னடா, தரணி! நீ லதாவை ஒன் சைடா லவ் பண்றதா சொன்னே... ஆனா, எப்பவும் ஸ்கூல், படிப்புன்னே சுத்திட்டு இருக்கே? அவ பின்னாடியே சுத்தினாதானே சரியான சமயத்துல ‘ஐ லவ் யூ’ சொல்ல முடியும்?’’ - என் அட்வைஸைக் கேட்டு தரணி ஒன்றுமே சொல்லவில்லை. சிரித்துக்கொண்டான். நாங்கள் +2 முடித்தபோது தரணி நல்ல மார்க் எடுத்து பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். அப்போது லதா அவள் வகுப்புத் தோழன் ஒருவனைக் காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அதை தரணியிடம் சொன்னபோதும் சிரிப்புதான் பதில். கல்லூரி முடித்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பெரிய நிறுவனத்தில் நல்ல வேலையில் அமர்ந்தான் தரணி. சில மாதங்களிலேயே கல்யாணப் பத்திரிகையோடு வந்தான். கூடவே லதாவும். அவள்தான் மணப்பெண்ணாம். ‘‘எப்படிடா?’’ - ரகசியமாய்க் கேட்டே…
-
- 0 replies
- 1.8k views
-
-
லால் அங்கிள்.. கண்டியில் இருந்த தன் வீட்டில் லால் கட்டைக்காற்சட்டையும் அரைக்கை ரீ சேட்டும் போட்டு கதிரையில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்ச்சிப்பெட்டியை வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.அருகிலிருந்த சோபாவில் சஞ்சையும் துசியும் சதீஸும் எதுவும் பேசாது அமைதியாக தொலைக்காட்ச்சியை அவதானித்துக்கொண்டிருந்தனர்.மூவர் முகத்திலும் கவலையுடன் கூடிய அமைதி குடிகொண்டிருந்தது.தெரணை ரீவியில் செய்தியறிக்கையில் படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறந்த உடலை கைப்பற்றிவிட்டதாகக்கூறி ஒரு வீடியோவை ஒளிபரப்பிக்கொண்டிருந்தனர்.எதையும் வெளிப்படையாகச் சொல்லமுடியாமல் பயத்துடன் உட்கார்ந்திருந்தாலும் பொடியங்கள் மூவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது.லாலிற்க்குப் பயந்து லாலின் முன்னால் அவர்…
-
- 22 replies
- 2.4k views
-
-
லியோன் பேராலயம் டேவிட் அல்பாஹரி தமிழில்: சுகுமாரன் டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948) செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியா…
-
- 0 replies
- 489 views
-
-
லூக்கா 22:34 அ. முத்துலிங்கம் ஏசு அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். ஆரம்பத்தில் ஒரு துவக்கு இருந்தால் நல்லாயிருக்கும் என்ற எண்ணம் மார்செலாவுக்கு எழவே இல்லை. கனடாவில் அவளுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத்தான் ஆரம்பித்தது. ஒரு முடி திருத்தகத்துக்குப் போனால்கூட முதலில் உங்கள் உயரத்துக்கு ஏற்ப நாற்காலியை ஏற்றி இறக்குவார்கள். திருமணத்தில் அப்படி ஒன்றும் செய்வதில்லை. முதல் ஆறு மாதம் சுமுகமாகப் போனது. அதன் பின்னர்தான் தொடங்கியது. காலையில்தான் அவளுக்கு அடி விழும். மற்ற வீடுகளில் நடப்பது போல மாலையில் கணவன் குடித்துவிட்டு வந்து அடிப்பதில்லை. அலுவலகத்துக்குப…
-
- 0 replies
- 770 views
-
-
லொறி- க.கலாமோகன் சில வாரங்களாகவே நான் அவளை எனது வீட்டின் அருகில் உள்ள மதுச்சாலையில் கண்டு வருகின்றேன். அங்கு சில வேளைகளில்தான் போயிருந்தாலும் , அவள் மீண்டும் அங்கு போக என்னைத் தூண்டினாள். நிச்சயமாக எனக்கு அவள் மீது காதல் தொடங்கியது என நினைக்கவேண்டாம். ஆனால் அவள் என்னைக் கவர்ந்தாள். அவளது முகம் வட்டம். விழிகள் பச்சை. உடல் மிகவும் மெலிவு. நீல டவுசர். அவளின் முன் ஓர் பியர்க் கிளாஸ்…. அவளது அருகிலோ சிரித்தபடியும் ஆடியபடியும் சிலர்… நான் அதிகாலையில் தொழிலுக்குச் செல்லும் வேளையில் மதுச்சாலை மூடிக் கிடக்கும். ஆழமாக அதன் கதவுகளைப் பார்ப்பேன். அந்தக் கதவுகளில் உள்ள சித்திரங்கள் எனக்கு மகிழ்வைத் தருவன. ஓர் வயோதிபர் தனது கண்களைச் சிமிட்டிச் சிரித்துக் கொண…
-
- 1 reply
- 664 views
-
-
நாய்க்கும் நமக்குமான பிணைப்பிற்கும் ஒரு செவிவழி தொன்மம் உண்டு. சிறு வயதின் ஒரு தூக்க வேளையில், என் உம்மா வழியாக எனக்கு கடத்தப்பட்ட செய்தியை உங்களுக்கும் சொல்கின்றேன். முதல் மனிதர் ஆதம் நபியை இறைவன் மண்ணிலிருந்து படைக்கும் சமயத்தில், மலக்குகளில் முதன்மையானவனாக இருந்த இப்லீஸ் அது குறித்து பொறாமைப்பட்டானாம். நெருப்பால் படைக்கப்பட்ட தன்னை விட மண்ணால் படைக்கப்படும் இந்த உயிரினம் மிஞ்சி விடுமே என்ற எரியும் பொறாமையில் ஆதமை நோக்கி உமிழ்ந்திருக்கின்றான். அந்த எச்சில் அவரின் வயிற்றில் போய் விழ, இறைவன் அதை கிள்ளியெறிந்துவிட்டானாம். கிள்ளப்பட்ட இடம் மனிதர்கள் அனைவருக்கும் தொப்புளாகிவிட்டது. கிள்ளியெறியப்பட்ட எச்சிலானது உலகின் முதல் நாயாக பிறப்பெடுத்ததாம். எனவே, நாய் நமக்கு சா…
-
- 0 replies
- 565 views
-