Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. 1976 அதிகாலை வேளை சிலிர்ப்புடன் தொடங்கியது . இலேசான மார்கழி மாதத்து குளிரும் , பிள்ளையார் கோயிலடி மணியோசையும் , அம்மாவின் அடுப்படிச் சண்டை ஒலியும் , மாட்டுக் கொட்டிலில் நந்தினியிடம் இருந்து அண்ணை பித்தளைச் செம்பில் பால்கறக்கும் சர்..... என்ற ஒலியும் படுக்கையில் கிடந்த சிறுவனான வர்ணனுக்கு இதமாகவே இருந்தன . அப்பொழுது அவனிடம் சிறு வயதுக் குழப்படியும் கற்பனைகளுமே அதிகம் . தும்பிக்கு வாலில் கயிறு கட்டி பறக்க விடுவதும் , கோயில் கேணியடியில் பேத்தை மீன்கள் பிடிப்பதும் , தரவைக்குள் மாடுகள் மேயப் புதினம் பார்ப்பதும் அவனின் முக்கிய பொழுதுபோக்காக இருந்தன . இன்று என்ன செய்யலாம் என்று கற்பனை பண்ணியவாறே மீண்டும் போர்வையைக் குளிருக்கு இதமாகப் போர்த்தியவாறே படுக்கையில் குப்பறக் கவிண்டு பட…

  2. உடற்பயிற்சி நிலையம் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தது. மிகச் சிலரே அந்நேரம் வந்திருந்தார்கள். காதிற்குள் இளையறாஜா ஒலிக்க காடியோவில் மூழ்கியபோது, பாடல் ஒவ்வொன்றையும் சிற்றுவேசன் பாடலாக ஆக்கி, மனம் பழைய சீன்களை மனத்திரையில் ஓடவிட்டுக்கொண்டிருந்தது. காடியோ முடித்த கையோடு வெயிற்சிற்கு சென்றபோதும், இன்று ஏனோ மனமும் உடலும் பள்ளிக்குச் செல்ல மறுக்கும் குழந்தைபோல் முரண்டு பிடித்தன. ஒன்றுமே செய்யாமல் இருப்பதைக் காட்டிலும் முப்பது வீதமாவது செய்தோமே என்று திருப்த்திப்படுத்திக்கொண்டு லொக்கர் நோக்கி நடந்துகொண்டிருக்கையில் கடைப்பார்வை கைப்பற்றிய, இலிப்ற்றிக்கல் உபகரணத்தில் உழன்றுகொண்டிருந்த, பெண் பரிட்சயமான முகமாகத் தெரிந்தது. எனவே மீண்டும் பார்த்தபோது மிகப் பரிட்சயமானதாகத் தெரிந்த…

    • 25 replies
    • 3.4k views
  3. Started by anni lingam,

    அவளைநான் பார்க்கவில்லை.எனக்கு தெரியவும் தெரியாது.நிறம் அதுவும் தெரியாது.ஆனாலும் அவளுக்கு நான் வைத்த பெயர் ஓவியா.பதினாறு வருடங்கள் பின் நோக்கிபார்கிறேன். ------------------------------------------------------------------------------------------------------ 1997.எதோ ஒரு மாதத்தின் எதோ ஒருநாள்.விடிகாலை பொழுது.காந்தன் அவளின் வருகை கருதி அழகாய் அமைத்திருந்த தன் வீட்டில் அவளின் கனவுடன்.தொலைபேசி-காதில் வைத்தான். அவளேதான்.அத்தான் நான் உக்ரைன் நாட்டிற்கு வந்திட்டேன்.எனக்கு பிரச்சனை இல்லை.நீங்கள்என்ன செய்கிறிங்கள்.தேன்வந்து பாய்ந்தது காந்தனின் காதிலே .காந்தனுக்கு சிறு வயதில் இருந்தே பேசிவைக்க பட்ட பெண் அவள்.மச்சாள்.சுவிஸ் வந்தநாள் முதல் அவளின் நினைவில்…

    • 25 replies
    • 2.3k views
  4. காட்சி 2 : மணி 5.30. கடற்கரையில் அனிதா தன் காதலனுக்காக காத்திருக்கிறாள்.... இருவரும் 7 வருடங்களாக காதலிக்கிறார்கள்.... பள்ளிப் பருவத்திலேயே தொடங்கி விட்ட காதல்... கிருஷ்ணா +2 படித்துக் கொண்டிருந்தான்.... அனிதா +1 படித்துக் கொண்டிருந்தாள்.... அப்போது அரும்பிய காதல் 7 வருடமாக நீக்கிறது.... கிருஷ்ணாவின் மாமன் மகள் தான் அனிதா என்றாலும் அவர்கள் குடும்பத்தில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இயல்பாக அவர்கள் மணமுடிக்கத் தடையாக இருந்தது.... கிருஷ்ணாவும் எப்படியோ தட்டுத் தடுமாறி வாழ்க்கையில் முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.... இனி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள் என்று தெரிந்தால் கூட குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை..... "சரியா 5.15 மணிக்கெல்லாம் வந்துடுவ…

  5. அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1 “அக்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர். நுகர்வு கலாசாரம் "ரெ…

    • 25 replies
    • 5.9k views
  6. காலிரண்டையும் இழந்த பெண்போராளியின் சொந்தக்கதை. “காதல் களம் கணவன் கடைசிக்கனவு“ இதுவொரு குறுநாவலுக்கான தலைப்பு. இக்கதையானது ஒரு முன்னாள் பெண் போராளியின் வாழ்வு. அவள் போராளியானது முதல் 2009மே 17சரணடையும் வரை வாழ்வில் அனுபவித்த துயரங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டாள். தனது வாழ்வைப் பதிவுசெய்யும் உரிமையைத் தந்து தனது வாழ்வை என்னூடாகப் பதிய வைத்துள்ளாள். 2006 செஞ்சோலை வளாகத்தில் நிகழ்ந்த விமானக்குண்டு வீச்சில் காயமடைந்து இரு கால்களையும் இழந்து போய் முகத்திலும் காயங்களோடு வாழும் அன்பினியை அவளது குடும்பமே விலக்கி வைத்திருக்கிறது. அன்பினி தனித்து வாழ்கிறாள். அவளுக்கான நம்பிக்கை நிறைந்த வாழ்வை ஒளியேற்றி வைப்பதாகப் பலர் அவளது வாழ்வில் புகுந்தனர். ஒருவன் காதலனாக இன…

  7. எனக்கு பெண் பார்கிறாங்களங்கோ....... ஆமா....வயசு வந்திடிச்சு......(வயசுக்கு வந்து நீண்ட காலம் ஆயிட்டுது...அது வேற கதை)அது தானுங்கோ கல்யாண வயசு....... காதலின் விண்ணப்பங்கள் எல்லாத்தையும் ஒருபடி சமாளிச்சு அந்த வலையில மாட்டுப்பட்டு எனது கற்பை(?) கரைச்சிடாமல் ஒருவாறு நெளிஞ்சு.... சுளிஞ்சு.... இந்தளவிற்கும் வந்தாச்சு..... இப்போ பெண் பார்க்கிறாங்களங்கோ......பெரியவ

    • 25 replies
    • 4k views
  8. அம்மா பசிக்குது... அந்த பிஞ்சு குழந்தையின் பசிக்கான அழுகை சாரதாவின் நெஞ்சை பிழிந்தது. இரண்டு நாளாக தானும் சாப்பிடாமல் பிள்ளைக்கு மட்டும் ஒரு நேரம் கஞ்சி கொடுத்த அந்த திருப்தியும் காணாமல் போய் இருந்தது. அவளிடம் ஒன்றும் இல்லை. சமையலுக்கு பயன்படுத்தும் பாத்திரத்தை கூட வித்து சாப்பிட்டாச்சு . இனி என்னதான் செய்வாள் அந்த குழந்தை அருணனின் அழுகையை நிறுத்த...? சர்வதேச அரசியலையும், மகிந்தவின் இனவாத போரையும், போராளிகளின் மனஉறுதி தளாராத வீரத்தையும் சொல்லி அருணனுக்கு புரியவைக்க முடியாது. காலையில் இருந்து இது எட்டாவது தடவை அவன் பசிக்காக அழுவது. அவன் அழும்போது இவளும்தான் அழுவாள் மனசுக்குள்ளே. பசிக்காக அழும் தனயனின் குரலை கேட்கவா ஆண்டவா, இன்னும் என் உயிரை எடுக்காமல்…

    • 25 replies
    • 5.3k views
  9. அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும் பிரேமவதி மனம்பேரியின் கதை தமிழில் : ஃபஹீமாஜஹான் ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹெந்திரிக் அப்புஹாமி - லீலாவதி தம்பதியினர் 1951ம் ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு 'பிரேமவதி மனம்பேரி' எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக 'பிரேமவதி மனம்பேரி' நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள். இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தா…

  10. எதை மாற்ற முடிந்தாலும் அவரவர் தலைவிதியை யாராலும் மாற்ற முடியாது என்பதற்கு என் வாழ்க்கையில் நடந்த சில முக்கியமான சம்பவங்களை சுருக்கமாக எழுத நினைக்கின்றேன். 80 களில் யாழ் இந்துவில் க.பொ.த.சாதாரண பரீட்சையில் ஓரளவான பெறுபேறுகளை பெற்றுக்கொண்டேன்.அப்போது அடுத்து என்ன துறையில் படிப்பைத் தொடர்வது என்று வீட்டில் எல்லோரிடமும் ஒரு ஆதங்கம். காரணம் ஏற்கனவே எனது மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உயர்தரம் கற்றவர்கள் அல்லது கற்றுக் கொண்டு இருப்பவர்கள். மூத்த அக்கா அதிகம் படித்து வைத்தியராக வர நினத்து எல்லாத்தையும் கோட்டை விட்டு விட்டார். 24 மணி நேரமும் புத்தகமும் கையுமாக அலைந்து கடைசியில் நாலு பாடத்திலும் சித்தி அடையவில்லை. சின்னக்கா கலைத்துறையிலும் இரு சகோதரர்கள் வர்த்தகத் த…

  11. Started by Innumoruvan,

    சனிக்கிழமை காலையில் மற்றும் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ் மளிகைக்கடைக்குப் போவது எனக்கு மிகப்பிடிக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ, தமிழ் கடையில் காணும் எங்கள் மக்கள் எல்லோர் மீதும் ஒரு அதிகரித்த ஈர்ப்பை உணருகிறேன். ஒரு ஆச்சியைக் கண்டால் கையைப் பிடிச்சுக் கூட்டிப்போகவேணும் போல, ஒரு அப்புவைக் கண்டால் அவர் தன்னைப் பெரிய மனிதர் என்று மீண்டும் உணரும் வகை அவரிடம் ஏதாவது கேட்கவேணும் போல, ஒரு அண்ணையைக் கண்டால் எப்பிடிச் சகோதரம் சுகம் எண்டு கேட்கவேண்டும் போல, வடிவான பொம்பிளைப் பிள்ளையள் ஆரைப் பாத்தாலும் முகவரி பட ஜோதிகாவைப் பாத்தது போல—எங்கட பிள்ளையள் எண்ட உரிமையோட—ஒரே உணர்வுப் பிரவாகம். இது மனிதரில் மட்டுமல்ல, கருணைக் கிழங்கில, கத்தரிக்காயிலை என்று பல பரிமாண உணர்வுப் பிரவாகம். கறுப…

  12. Started by putthan,

    பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும்…

    • 25 replies
    • 2.4k views
  13. Started by putthan,

    "அண்ணே எங்க போகவேணும்" பஸ்வண்டியை விட்டு கீழே இறங்கியவுடன் அந்த குரலை கேட்க மனதில் என்னை அறியாமலே ஒரு மகிழ்ச்சி ,"மாத்தயா கொயத யன்னே" என்ற குரல் போய் அண்ணே எங்க போகவேணும் என்றது எனது சனத்துடன் நான் ஜக்கியமானது போன்ற ஒர் உணர்வு உண்டானது.கையில் இருந்த ஒரே ஒரு பையையும் தூக்கிக் கொண்டு "தம்பி மானிப்பாய் போகவேணும் ஒட்டோவில மீற்றர் இருக்கோ,மீற்றர் போடுவீரோ" "அண்ணே இங்க மீற்றர் இல்லை மானிப்பாய்க்கு போக 400 ரூபா வரும்" "என்ன வழமையாக 300 ரூபா தானே கொடுக்கிறனான் ,நீங்கள் என்ன நானூறு கேட்கிறீங்கள்". . யாழ்நகரில் ஒட்டோ ஒடத்தொடங்கிய பின்பு கொழும்பில் இருந்து வந்த பஸில் இறங்கி இப்பதான் முதல் முதலாக ஒட்டோவில ஏறி ஊருக்கு போறன் என்ட விசயம் ஒட்டோக்காரனுக்கு தெரியாது என்ற எண்…

  14. "பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளை சேரும் என்பதற்கு கிருஷ்ணர் சொன்ன குட்டிக்கதை!" *************************************** குருசேஷத்திர போர் முடிந்த சமயத்தில் திருதராஷ்டிரன், கிருஷ்ணரிடம் கிருஷ்ணா நான் குருடனாக இருந்தபோதும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன். அப்படியிருக்க ஒருவர்கூட மீதமில்லாமல் எனது 100 பிள்ளைகளும் இறந்ததற்குக் காரணம் என்ன? என்றார். கிருஷ்ணர் - உனக்கு நான் ஒரு கதை சொல்கிறேன். அதற்குப் பதில் சொன்னால், நீ கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன். என்றார். கதையை சொல்ல ஆரம்பித்தார்... நீதி தவறாது ஆட்சி செய்த அரசனிடம் வறியவன் ஒருவன் சமையல்காரனாகச் சேர்ந்தான். மிகச் சுவையா சம…

  15. தாதா தாவூத் இப்ராஹிம்: Most wanted person (க்ரைம் தொடர்-1) மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட ஹோட்டல் அது. அரபிக் கடலில் எழும் அலைகள் கரையில் வந்து மோதும் பொழுது, உடையும் சாரல் துளிகள் அந்த ஹோட்டல் வாசலில் வந்து தெறிக்கும். அதனால் எப்பொழுதும் ஈரமாகவே இருக்கும் அந்த ஹோட்டல் வாசல் சாலை. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பெரிய பிசினஸ் புள்ளிகள், பாலிவுட் ஸ்டார்கள், முக்கியமான அரசியல் வாரிசுகள், உயர் அதிகாரிகள் என அனைவருவே அதிகார வர்க்கம்தாம். அந்த பிரமாண்ட ஹோட்டலில் யார் யாருடன் வருகிறார், யார் யாருடன் போகிறார் என்கிற விபரங்கள் ஹோட்டல் நிர்வாகத்திற்கு தெரிந்தாலும் அதை வெளியில் சொல்வதில்லை. பாலிவுட்டில் மிக பிரபலமாக இருந்த கனவுக்கன்னி நடிகை ஒருவர் மாலை நேரம் ஒன்றில…

    • 25 replies
    • 14.2k views
  16. தொலைபேசி தொல்லைபேசியான கதை டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன். அம்மாதான் போனில். அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி …

    • 24 replies
    • 6.1k views
  17. "இருந்தால்" இல்லாமல் ஆன கதை "பெத்தவள் மேல் கொஞ்சமாவது அன்பு இருந்தால், உடனே புறப்பட்டு வா.." - அம்மாவின் கடிதம். இந்த கல்யாணத்திற்கு போனால் தான் எனக்கு அம்மாவின் மேல் இருக்கும் அன்பு வெளிவருமா?அல்லது நிரூபணமாகுமா? அம்மா எப்பொழுதும் இப்படி தான். நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்து இருக்கிறேனே. சரி வீட்டிற்கு போயும் கனநாட்கள்...அல்ல வருடங்கள் ஆகிவிட்டது. 5 வருடங்களாக அதிகமாக வேலைகள் இருந்ததால் , எதற்கும் இடமில்லாமலே இருந்தது. இப்பொழுதுதான் கொஞ்சம் பரவாயில்லை. கல்யாணமும் வேற்று மனிதருக்கு அல்லவே. என் கூட பிறந்த சகோதரிக்கு தானே.சரி போகலாம் என நினைத்து வந்தது தவறோ என தோன்றியது. நினைவில் ஆழ்ந்திருந்த போது பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சிணுங்கி…

  18. [size=1][/size] [size=4]கந்தையர், வழக்கத்தை விடக் கொஞ்சம் 'பிசியாக' இருந்தார்.[/size] [size=4]'வதனா விலாசின்' மேலே கட்டப்பட்டிருந்த, ஒரு விதமான மாடியிலிருந்து, தற்காலிக படிகளைத் தூக்கிவைத்து, அதன் வழியே ஒரு விதமான,தனக்கேயுரித்தான லாவகத்துடன் கீழே இறங்கியவர், படிகளை எடுத்துச் மறைவான சுவரொன்றில், சாத்தியதும், மேலேயொரு, மாடி இருப்பதற்கான, எந்த வித அடையாளமும், அங்கு காணப் படவில்லை![/size] [size=4]மள மளவென்று, காலைக்கடன்களை முடித்தவர், மீன்கடைக்குப் போன பெடியன், வந்திட்டானா என்று கடைக்கண்ணால் பார்த்து உறுதிப் படுத்திய பின்பு, முன்னாலிருந்த கடைக்குப் போய், ஒரு மல்லிகைப் பூமாலையை, வாங்கிக் கொண்டு வந்து, ஒரேயடியாகப், புத்தர், பிள்ளையார், முருகன்,லட்சுமி, அரபிக்கில் எழுதப…

  19. Started by putthan,

    கந்தர் என்ன கடைக்கோ என்று சுரேஷ் கேட்டது தான் தாமதம் கந்தர் கடுப்பாகி இல்லை படம் பார்க்க வந்தனான் என்றார்.கந்தர் கோபபட்டதிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று யோசிக்கும் பொழுதே அவர் அருகில் வந்து உன்னட்ட எத்தனை தரம் சொல்லுறது கந்தர் என்று கூப்பிடாதே என்னுடைய பெயர் "ஸ்கந்தா" எங்களுடைய தமிழ் சனம் எவ்வளவோ நிற்குது இங்கே,அவையளுக்கு என்னுடைய பெயர் கந்தர் என்று தெரிந்தால் என்னுடைய "இமேஜ்" என்னாகும் மச்சான் என்றவர் கடையில் வாங்கிய பொருட்களை காருகுள் கொண்டு போய் வைத்துவிட்டு சுரேஷிடம் இருந்து விடைபெற்றார். காரில் வீடு செல்லும் போது கந்தருக்கு மனசு ஏதோ போல் இருந்தது சுரேஷுடன் அப்படி பேசி இருக்க கூடாது என்று மனதில் எண்ணியவர் வீட்டை போய் அவனுடன் தொலைபேசியில் கதைக்கவேண்டும் என்று க…

    • 24 replies
    • 3.8k views
  20. படம் காட்டுறம் வாங்கோ கடந்த ஒரு பேப்பரில் எனக்கு ASIA வேணும் என்கிற எனது அனுபவ கதை பலரும்விரும்பி படித்ததால் இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய இன்னொரு அனுபவக்கதை இதுவும் 80களின்ரை ஆரம்ப காலகட்ட கதைதான் இந்த காலகட்டம்தான் தொலைகாட்சி பெட்டியும் இலங்கையிலை பரவலா அறிமுகமாக தொடங்கின கால கட்டம். அந்த கால கட்டத்திலை கோயில் திருவிழா. கலியாணவீடு .சாமத்தியவீடு எண்டு எல்லா மங்கல விழாவிலையும் ரிவியிலை விடிய விடிய அஞ்சு . ஆறு படம் ஓடுறகாலம்.ஆரம்பத்தில் இந்த ரிவி டெக் ஆகியவற்றை சில வீடியொ கடையளும் வாடைகைக்கு விடுவினம் அவையளிட்டை போய் சொன்னா சரி. ரிவி டெக் ஆகியவற்றை ஒரு வானில் கொண்டு வந்து இறக்கி படத்தை போட்டு செற்பண்ணி விட்டிட்டு படங்களை மாத்துறதுக்காகவே ஒருத…

    • 24 replies
    • 4.6k views
  21. மெளனமாய் ஒரு காதல் அந்த பள்ளி நாட்கள் நீண்டு போகாதா என் அங்கலாய்க்கும் ஒரு மாலைபொழுதில் .............. கிராமத்தின் முக்கியமான்( இருபாலாருக்குமான )கலவன் பாடசாலைகளில் ஒன்றில் ராகவன் உயர்வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான். பணி நிமித்தம் இடம் மாற்றலாகி வந்தவர்கள் தான் .கேசவ வாத்தியார் குடும்பம். அவர்களுக்கு அழகான் ஒரே ஒரு பெண . அன்று ஒரு தை திங்கள் முதலாம் வாரம் , இவர்கள் பாட்சாலை யின் அனுமதிக்காக காத்திருந்தார்கள் அப்பாவும் பெண்ணும். தலைமை ஆசிரியர் அன்றைய பணியில் மூழ்கி இருந்ததால் , ராகவன், அவர்களுக்கு உதவும் முகமாக , வரவேற்பறையில் ஒரு ஆசனத்தில் இருத்தி , காத்திருக்கும்படி சொன்னான். அவன் வகுப்புக்கு சென்றுவிடான். சில மணி நேரங்களில் வகுப்பு ஆசிரியரை இ…

  22. மௌனங்கள் கலைகின்றன. கடந்துவந்த வாழ்வியலை மீட்டிப் பார்க்கும் ஒரு தொடர்பதிவு இந்த மௌனங்கள் கலைகின்றன. எனக்குள் புதையுண்டு கிடக்கும் அனைத்தையும் வரிகளாக்கி இந்த பதிவை படைக்க உள்ளேன். முகட்டு ஓடு பத்து வயது தாண்டினாலே பெண்பிள்ளைகளை வீடுகளில் அடக்க ஒடுக்கமாக இரு என்று பெரியவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்து விடுவார்கள் என்பது தாயகத்தில் வளர்ந்த அனைவருக்கும் விளங்கும். எங்கள் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் ஆண்சகோதரர்களுடன் பிறந்து வளர்ந்ததாலோ... அல்லது ஆண்பிள்ளைகள் போன்றே அரைக்காற்சட்டை சேர்ட்டையே அதிகம் அணிவித்து வளக்கப்பட்டதாலோ என்னவோ இந்தப் பெண்பிள்ளையின் அடக்க ஒடுக்கம் என்பது எனக்கு என் சுதந்திரத்தை முடக்குவதாக இருந்தது. இருந்தாலும் வீட்டில் நான…

  23. நாகராஜின் மகனுக்கும், செல்லையாவின் மகளுக்கும் திருமணப்பேச்சு. நாகராஜ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். நாகராஜ் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் நிமலன். செல்லையா குடும்பத்தினர் 1995 ல் இடப்பெயர்விலிருந்து கொழும்பில் வசிக்கிறார்கள். செல்லையாவுக்கு 2 பெண்பிள்ளைகள். மூத்தவளுடைய திருமணப்பேச்சு தான் இப்போது நடைபெறுகிறது. அதற்காக நாகராஜ் கொழும்பு வந்திருக்கிறார். பேச்சுவார்த்தை நன்றாக தான் நடைபெற்றது, சீதனப்பேச்சை செல்லையர் ஆரம்பிக்கும் வரை. 'எங்களிடமிருந்து என்னதை எதிர்பார்க்கிறீர்கள்?' என்ற செல்லையரின் கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகராஜ் சொன்னார். 'மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வீடு வாங்கிற எண்ணம் இருக்கு. அதற்கு கொஞ்ச தொகை உங்களிடமிருந…

  24. அவனது மாசறாட்டி நிறுத்தப்படுவதற்கு முன்னரே ஓடிவந்து காத்து நின்ற வலே சாவிகளைப் பற்றிக்கொள்ள, மகசீன் ஒன்றின் அட்டைப் படத்தில் இருந்து விழுந்தவர்களாக அவனும் அவளும் அந்த ஆடம்பர உணவகத்துள் நுழைகிறார்கள். மேற்றடீ ஓடிவந்து அவனது பெயரைக்கூறி அதியுச்ச மரியாதையினை உடல்மொழியில் காட்டி வரவேற்று, அவளையும் குழைந்து, அவர்களது இருப்பிடம் அழைத்துச் செல்கின்றான். உணவகத்தில் அமர்ந்திருந்த அவனை ஒத்த தரத்தினர் உடல்மொழியில் அவன் தங்கள் தரத்தவன் என்பதை காட்டிக்கொள்கின்றனர். பலர் அவனின் தம்மை நோக்கிய பார்வையினைத் தமக்கான அங்கீகாரமாகக் கருதுவது வெளிப்படையாய்த் தெரிகிறது. அவனும் அவளும் அமர்ந்து கொள்கின்றனர். ஆர்மானி சூட்டின் பொத்தானைக் கழட்டியபின் ஒரு கையின் கவ்ளிங்ஸ்சை மறுகரத்தால் உறுட்டியபடி அவ…

  25. வழமையாக எம்மவர் கொண்டாட்டங்கள் இந்த மண்டபத்தில்தான் நடை பெறும்.கலியாணவீடு,பிறந்தநாள் ,மனித சாமிமார்களின் பூஜை,மற்றும் கோவில்கள் கட்டமுதல் சாமியை இங்கு வைத்துதான் பூஜை செய்வார்கள் பின்பு கோவிலுக்கு எடுத்து செல்வார்கள் இப்படி பலவித எம்மவர்களின் சடங்குகள் இந்த மண்டபத்தில் நடை பெறும் நானும் பலதுக்கு சென்று இருக்கிறேன் .இனிமேலும் செல்வேன். நன்பனின் பிறந்த நாள் கொண்டாட்டம் அங்கு நடை பெற்றது .பலர் வந்திருந்தார்கள் அநேகமானவருக்கு அறிமுகம் தேவைப்படவில்லை எல்லோரும் ஒரே இடத்தை சேர்ந்தவர்கள். பெண்கள் தங்களுக்கு தெரிந்தவர்களுடன் சேர தொடங்கினார்கள் ,ஆண்களும் தண்ணி நன்பர்கள் ஒன்றாக சேரத் தொடங்கினார்கள். இளம் வயதினர் தங்களுக்கு என்று ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டனர். நான் இரு…

    • 24 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.