கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
இதுதான் பானுமதி ஸ்டைல்! அக்காக் குருவியின் கூவல் மட்டுமே கேட்கும் அமைதியான பாண்டி பஜார் வைத்தியராமன் தெரு. பழைய நினைவுகளில் ஆழ்ந்திருப்பதுபோல் காட்சிதரும் பானுமதியின் பங்களா. தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஒரு பிற்பகல். எனக்கு முன்னால் பானுமதி உட்கார்ந்திருக்கிறார். திரையில் வரும் நிழல் பானுமதி அல்ல; நிஜ பானுமதி! பணிப்பெண் அவருக்கு முன்னால் ஒரு கோப்பைப் பழச்சாறும் எனக்கு காபியும் கொண்டுவந்து வைத்தார். “வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று சினிமா. மற்றொன்று காபி” என்றார் பானுமதி. திரையில் ஜொலிக்கிற நட்சத்திரமாய் நின்றுவிடாமல் சாதாரண மனுஷியாகத் தனது நினைவுகளையும் அனுபவங்களையும் கள்ளம் கபட…
-
- 15 replies
- 3.5k views
- 1 follower
-
-
பாற்கஞ்சி! … சி.வைத்திலிங்கம். June 30, 2018 சிறப்புச் சிறுகதைகள் (5) – மூத்த படைப்பாளர்களின் சிறுகதைகளை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் – சி.வைத்திலிங்கம் எழுதிய ‘பாற்கஞ்சி’ என்ற சிறுகதை இடம்பெறுகின்றது. தொடரும் காலங்களில் ஏனைய சிறுகதைகள் வெளிவரும். ........ ‘ராமு, என் ராசவன்னா குடிச்சுடுவாய், எங்கே நான் கண்ணை மூடிக்கொள்கிறேன். குடிச்சிடு பார்க்கலாம். நாளைக்குப் பாற்கஞ்சி…’ ‘சும்மாப்போம்மா. நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ் குடிக்க மாட்டேம்மா.’ ‘இன்னும் எத்தனை நாள் பஞ்சமடா? வயலிலே நெல் முத்தி விளைஞ்சு வருது. ஒனக்கு வேணாம்னா பாற்கஞ்சி தாரனே’ ‘கூழைப் பார்த்தாலே வவுத்தைப் புரட்டுதம்மா…
-
- 0 replies
- 3.5k views
-
-
உறவு என்பது... படுதலம் சுகுமாரன் ஊருக்குள் நுழைந்தது கார். காருக்குள் இருந்தபடி ஆர்வமாக வெளியில் பார்த்தான் ஆனந்தன். கடந்த வருடங்களில் அவன் வரவை எதிர்பார்த்து... ஊர்மக்கள் பத்து பேராவது சாலை ஓரம் கூடியிருப்பர். இப்போதும் அது போலவே ஊர் மக்கள் திரண்டு வரவேற்க காத்திருப்பர் என நம்பினான். ஆனால், இந்த முறை வரவேற்க ஆளில்லாமல் தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. ஆனந்தனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தான் வருவது யாருக்கும் தெரியாதா, பெரியம்மா யாருக்கும் தகவல் சொல்லவில்லையா? வருடம் தோறும் ஆடித் திருவிழாவுக்கு வந்துவிடுவேன் என்பது எல்லாரும் அறிந்ததுதானே... கடந்த நாலு வருடங்களாய் தொடர்ந்து வந்து கொண்டுதானே இருக்கிறேன். ஒருவேளை, நான்தான் தேதி மாறி வந்துவிட்டேனோ என்று பலவக…
-
- 1 reply
- 3.5k views
- 1 follower
-
-
பெண் பார்த்து நிச்சயம் செய்து கல்யாணம் முடிக்கும், அண்ட் நகர வாசத்தின் வீச்சை வீட்டுக்குள் கொண்டுவராத பெரும்பான்மைகளுக்கான பதிவு இது so மொக்கை கேள்விகளை தவிர்க்கவும். முதல்ல பெண்லாம் பார்த்துட்டு போயி, அப்பறம் மாப்பிள்ளை நகை வேண்டாம்ன்னு சொல்லி, பெத்தவங்க மட்டும் அவங்க கவுரவம் அதில் அடங்கி இருக்குன்னு குறிப்பிட்ட நகையை பேசி முடிச்சு நிச்சயதார்த்தம் வரைக்கும் இந்த பெரியவங்க எல்லாம் சேர்ந்து ஒரு வழியா கொண்டு வந்திடுவாங்க. இந்த சமயத்தில் நமக்கு இருந்த ஒரு டென்சன் கொஞ்சம் முடிவுக்கு வந்திருக்கும் அது என்னன்னா, நாம பயந்துட்டே இருப்போம், நம்மள எல்லாம் இந்த மாப்பிள்ளைக்கு பிடிக்குமா? ஒரு வேளை நம்மள ரிஜெக்ட் பண்ணிட்டா என்ன பண்றது, ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீட்ல இருந்து தக…
-
- 2 replies
- 3.5k views
-
-
நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க கஜனின் மனதிலும் ஒரு வித பதட்டம் அதிகரித்தது. வழமைக்கு மாறாக இதயம் விரைந்து அடித்துக் கொண்டது. இதயத் துடிப்பின் சத்தத்தை காதுகள் கூட உணர முடிந்தது. கால்களில் ஒரு வித நடுக்கம் பற்றிக் கொண்டிருந்தன. நெற்றியால் வியர்த்து ஊர்த்திக் கொண்டிருந்தது. இவ்வளவுக்கும் மத்தியில் கண்களைக் கூர்மையாக்கி அவள் மிக நெருங்கி வரும் வரை காத்திருந்தான். வெள்ளை வெளீர் என்ற பள்ளி உடையில் உயர்தர மாணவிக்குரிய மிடுக்குடன் பாவனா தோழிகள் சகிதம் நடந்து வந்து கொண்டிருந்தாள். வழமையாக காணும் பாவனாவாக அன்றி அன்று அவளின் முகத்தில் அழகு ஒளிவீசிக் கொண்டிருந்தது. நேற்றிரவு முகத்தை பசைகள் தடவி வெளிர்க்க வைத்திருப்பாளோ என்ற எண்ணத்தை மனதில் பறக்க விட்டபடி.. எக்ஸ்கியூஸ் மி.. …
-
- 26 replies
- 3.5k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் புதினம் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற "போலிகள் " என்ற கதையை இத்துடன் இணைத்துள்ளேன். கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். அன்புடன் மணிவாசகன் போலிகள் காலையில் தன்னுடைய பெற்றோல் நிரப்பும் நிலையத்திற்கு வந்ததிலிருந்தே சதாசிவத்தின் கால்கள் நிலத்தில் நிற்க மறுக்கின்றன. பரபரப்பும் அவசரமும் கலந்த வேகத்துடன் அவர் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கிறார். லண்டன் மாநகரின் அந்தப் பிரபல்யமான கோயில் திருவிழாவின் இன்றைய உபயகாரர் அவர்தான். பரபரப்பு இருக்காதா என்ன? அதுவும் அவருடைய பரம எதிரி குலசேகரத்தின் திருவிழாவைப் புகழ்ந்து சனமெல்லாம் வாய்நிறையப் பேசிக் கொள்வதைக் கேட்கக் கேட்க தன்னுடைய திருவிழாவை எப்பாடு பட்டாவது குலசேகரத்தின் திருவி…
-
- 16 replies
- 3.5k views
-
-
சித்தப்பா சித்தப்பா என் விடுமுறைப் பயணம் முடிந்து என் வேலைப் பளுக்களும் சற்று ஓய்ந்து மீண்டும் உங்களுடன்......... சென்ற ஆனி மாத இறுதியில் ஒரு வெளிநாட்டுப் பயணம் போய் இருந்தேன். நான் சந்தித்தத் சிறு சம்பவம். எல்லோரும் எதிர்பார்த்ததுபோலவே அந்த நாளும் வந்தது . நான் கணவர் இரு மகன் களுடன் சென்று இருந்தேன் சற்று ஆர்வமாக அடுத்து என்ன என்ற ஆவலோடு விமானத்தினுள் அதற்கான் கடமைகளை முடித்து கொண்டு எங்கள் ஆசன பதிவு தேடி அமாந்தோம். சில நிமிடங்க ளில் விமானம் நிறைந்து புறப்பட ஆரம்பம் . எல்லோரும் மெளனமாய் கடவுளை நினத்துக் கொண்டு இருந்ததனர் .அருகில் உள்ள சாளரத்தினூடே எட்டிப்பார்த்தேன் கிண் என்ற காது இரைச்சலுடன் மீது மெதுவாக விமானம் கிளம்பியது. சிலர் வாசிப்பதும்…
-
- 11 replies
- 3.5k views
-
-
பனி நிலா - சிறுகதை சிறுகதை: அராத்து, ஓவியங்கள்: செந்தில் கார் டயர் டொம்ம்ம் என்று வெடித்து வண்டி 130 டிகிரி திரும்பித் தேய்த்துக்கொண்டு போனது. மதிய நேரமே இரவுபோலக் காட்சியளித்தது. கடும் மழையால் இப்படி இரவு போல இருந்தாலும், இப்போது மழை பெய்யவில்லை. இந்தக் குளிரிலும் இரண்டு குளிர்ந்த பியர் அடித்துவிட்டு தன் உயர்ரக ஏசிக்காரை புகையிட்டு நாறடித்துக்கொண்டு வந்த தரண், முன்னால் சென்ற காரின் டயர் வெடித்ததைப் பார்த்ததும், பதமாக பிரேக் அடித்தான். டயர் வெடித்த காரிலிருந்து பதற்றமேயில்லாமல் ஒருத்தி இறங்கினாள். பார்ப்பவர்க்கு ஸ்கர்ட்டும் டாப்ஸும் அணிந்திருப்பதுபோலத் தோன்றினாலும், அது ஒரே கவுன். உடலுடன் ஒட்டியில்லாமல் படர்ந்து இருந்தது. தரண் அவளைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
ஓலைக் கிளி எஸ். ராமகிருஷ்ணன்ஓவியங்கள் : ஸ்யாம் அபார்ட்மென்ட்டின் காவலாளி வந்து வீட்டின் காலிங் பெல்லை அடித்தபோது காலை மணி எட்டரை இருக்கும். பேப்பர் படித்துக்கொண்டு இருந்த நான் எழுந்து கதவைத் திறந்தபோது, சற்று எரிச்சலான குரலில் வாட்ச்மேன் சொன்னான், ''டாக்டர் சார், உங்களைப் பாக்க ஒரு கிழவன் ஒரு பொண்ணைக் கூட்டிக்கிட்டு வந்து கேட் முன்னாடி உட்கார்ந்து இருக்கான். விடிகாலை நாலு மணிக்கு எல்லாம் அந்த ஆளு வந்து உங்க பேரைச் சொல்லிக் கேட்டான். மூணாவது ஃப்ளோர்ல வீடுன்னு சொன்னேன். அய்யா தூங்கி எந்திரிச்சி குளிச்சி, சாப்பிட்டு ரெடியாகட்டும். அதுவரைக்கும் இப்படி உட்கார்ந்துக்கிடுறேன்னு சொல்லி பைக் ஸ்டாண்ட் பக்கமா உட்கார்ந்துக்கிட்டான். பேரைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
முறிவு - சிறுகதை எம்.கோபாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி “நான்தான் ஆஸ்பத்திரியில இருக்கும் போதே சொன்னேன்ல... `வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதுக்கு முன்னாடியே பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிடலாம்’னு. இப்ப வந்து என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? அதான் தங்கச்சிமார்க மூணுபேர் இருக்காங்கல. ஆள் மாத்தி ஆள் வந்து அவங்களே பார்த்துக்கட்டும். என்கிட்ட வந்து எதையும் கேக்காதீங்க. வேளாவேளைக்கு ஆக்கிவெக்கிறேன். வேற என்ன வேணாலும் சொல்லுங்க. செய்றேன். இதுமட்டும் என்கிட்ட கேக்காதீங்க. அவ்ளோதான்” - விஜயாவின் குரல் தணிவாக ஒலித்தது. உண்ணம்மாள் தலையைத் திருப்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இளங்கோ அடங்கிய குரலில் பேசுவதும், விஜயா பதில் சொல்வது…
-
- 0 replies
- 3.5k views
-
-
பூசைக்கு நேரம் போனதை உணர்ந்த கந்தர் ஓட்டமும் நடையுமாக வந்து காலை கழுவி தலையிலும் தண்ணிரை தெளித்து விட்டு அரோகரா என்று தலையில் கையை வைத்து கும்பிட்டபடியே பூசை மணி அடிக்க முதலே முருகனிடம் தனது பிரசனத்தை தெரியபடுத்தி பூசை முடியமட்டும் யாரையும் திரும்பி பார்க்காமல் முருகனுடன் இரண்டர கலந்து விட்டார்.ஜயர் வீபூதி சந்தனம் கொடுக்கும் போது தான் தனக்கு பக்கத்தில் நிற்பவர்களை ஒரு நோட்டம் விட்டார். தனிமையில் பேச்சு துணைக்கு யாரும் கிடைக்கவில்லை என்று பார்த்து கொண்டு நின்ற சுரேசிற்கு கந்தரை கண்டவுடன் அருகே சென்று என்ன அண்ணை எப்படி சுகம் ஏன் பூசைக்கு கொஞ்சம் "லேட்டா" வந்தனீங்க என்று கேட்டான்.மகள் வேலையால் வந்து கூட்டி கொண்டு வர நேரம் போயிட்டுதோ? சீ..சீ நான் அவளின்ட காரில ஏற ஏல…
-
- 12 replies
- 3.5k views
-
-
பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............ அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை. பண்ணை வீட்டுக்கு போகும் பிரதான நீர் வழங்கல் குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை …
-
- 2 replies
- 3.5k views
-
-
யாழ்ப்பாணத்துக்கு கணணி பரவலாக அறிமுகமான நேரத்தில் எத்தினை பேர் ஊரில் இருந்தீர்களோ தெரியாது..அப்படி இருந்திருந்தால் அந்த நேரம் புதிது புதிதாக முளைத்த பல கணணி திருத்தும் கடைகளையும் பார்த்திருப்பீர்கள்..அந்த நேரம் கணணி யாழ்ப்பாணத்துக்கு புதிது என்பதால் பிள்ளைகளுக்கு கணணி வாங்கிகொடுத்த பெற்றொர் பலருக்கு அதைப்பற்றி பெரிதாக விளக்கம் ஏதும் தெரியாது..அப்படியான பெற்றொர்கள் கணணி பிழைத்துவிட்டது என்று இந்த திருத்துபவர்களிடம் போனால் அவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பல..(எல்லாரும் அல்ல)..இந்த நிலமை புலம்பெயர்ந்த பின்னும் பல தமிழ் வீடுகளில் கணணி பற்றிய பெரிய அறிமுகம் இல்லாத பெற்றோரை பல கண்ணணி திருத்துபவர்கள் ஏய்ப்பது நடக்கிறது..இப்படிப்பட்ட ஊர் காட்வெயர் எஞ்சினியர்களை வைத்து ஒரு பதிவ…
-
- 31 replies
- 3.5k views
-
-
``சிங்கள தன்னவத? ´´ (சிங்களம் தெரியுமா) என்றார் கண்ணாடித் தடுப்பிற்கு அப்பால் அமர்ந்திருந்த மீசையற்ற அதிகாரி. இல்லையென்று தலையாட்டினான் சீலன். ``தன்னாய்´´ (தெரியாது) என சிங்களத்திலேயே அவனால் பதிலளித்திருக்க முடியும். கொழும்பில் தங்கியிருந்த கடந்த இரண்டு வருட காலத்தில் எக்காய், தெக்காய், துணாய் எனச் சில எண்களும் மேக்க, பைனவ, கருணாகர எனச் சில பயணச்சொற்களுமாக அவன் அறிந்து வைத்திருந்தான். சென்ற முறை கூட இதே பாஸ்போட் ஒபிஸில் (Office, ஆபிஸ்) தெரிந்த சில சிங்களச் சொற்களை வைத்துத்தான் சமாளித்தான். அப்போதெல்லாம் சிங்களம் தெரியாது எனச் சொல்லும் மனநிலை அவனிடத்தில் இருக்கவில்லை. ``தெரியாது..? எவ்வளவு காலம் இங்கை இருக்கிறது? ´´ இலக்கணங்கள் மீறிய போதும் கேள்வித் தொனியிலான அவர…
-
- 12 replies
- 3.5k views
-
-
சக்கைக் குழி - சிறுகதை சிறுகதை: எஸ்.செந்தில்குமார், ஓவியங்கள்: செந்தில் மலைப்பாதையில் பேருந்து வளைந்து திரும்பி மெதுவாக நகர்ந்துசென்றது. பேருந்தின் முன்விளக்கின் வெளிச்சம் விழுந்த இடத்தைச் சக்திவேல் பார்த்தான். தேயிலைத் தோட்டத்திலிருந்து ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு காட்டுப்பன்றிகள் பாதையின் குறுக்கே ஓடி, சரிவிலிருந்து தோட்டத்துக்குள் நுழைந்தன. பன்றிகள் உறுமிய ஓசையும் தேயிலைச் செடியின் ஊடே ஓடிய சலசலப்பும் கேட்டன. ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். விடிவதற்கு இன்னமும் நேரம் இருந்தது. பனிக்காற்றுடன் தேயிலையின் மணமும் காற்றில் பரவியிருந்தது. பின்னிருக்கைப் பயணிகள் சிகரெட்டைப் பற்றவைக்கும் சத்தமும் அதைத் தொடர்ந்து புகையிலை கருகும் வாசமும் பேருந்து முழுக்க நிறைந்…
-
- 1 reply
- 3.5k views
-
-
1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது "அடைக்கலம்" சிறுகதை முதற்பரிசு பெற்றது. முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_09.html
-
- 15 replies
- 3.5k views
-
-
ஆசை முகம் மறந்து போகுமோ - சிறுகதை ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு மரங்கொத்திப் பறவைகள் மரங்களில் ‘டொக்... டொக்...' எனக் கொத்தும் சத்தம், அந்தக் காட்டின் அடர்த்தியான மௌனத்தைக் கலைத்துக்கொண்டிருந்தது. எங்கோ காட்டாறு ஓடும் சத்தம், பின்னணி இசைபோல் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டிருந்தது. காற்றில் பெயர் தெரியாத ஏதேதோ பூக்களின் வாசம். அந்தப் பெரிய குமிழ் தேக்கு மரத்துக்கு மேலே, வெள்ளிச்சரம் போல் மழை சடசடவெனப் பெய்துகொண்டிருக்க, அவளும் அவனும் மரத்தில் சாய்ந்தபடி நின்றுகொண்டிருந்தனர். அவள் தனது முகத்தில் வழிந்த மழைநீரை, தனது மெல்லிய விரல்களால் வழித்தபடி, மேல் கண்களை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அப்போது மரத்…
-
- 0 replies
- 3.5k views
-
-
சென்ற மாதத்தில் ஒரு வாரம் பானுமதி யின் அம்மவும் அப்பாவும் ...ஒரு விசேடத்துக்காக அயல் ஊர் சென்று இருந்தார்கள். போக முன்னமே மகன் கார்த்திக்கும் மகள் பானுவும் மகிழ்வாக் தான் அனுப்பி வைத்தார்கள். வளர்ப்பு நாய் லூனாமட்டும் எந்நேரமும் முகத்தை தொங்க .வைத்து இருந்தது ... .பாரும்மா அதற்கு கூட விளங்கி விட்டது போலும் ..... இவர்களுக்கும் ஒரு படிபினையாக் இருக்கட்டும் என் அப்பா சொல்லிக் கொண்டார் . பானு இளம் வயதுப் பெண் என்றாலும் .. சமையல் ..வீடுபரமரிப்பு என்பவற்றில் கள்ளம் ..ஏதாவது சாட்டு சொல்லி தப்பி கொள்வாள். அக்கா தம்பி இருவ்ரும் பொறு ப்பு எடுத்து கொண்டனர் ... உறவினர் வீடு அயலில் இருந்ததால் கவனித்து கொள்ளும்படி சொல்லி சென்றாரக கள் அம்மாவும் அப்பாவும். …
-
- 4 replies
- 3.5k views
-
-
நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!" தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!" கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்" ஒரு ஜன்னல் கண்ணாடியில் …
-
- 43 replies
- 3.5k views
-
-
நாட்டுக்கட்டை நாக்கமுத்து கரும்பு ஜோரா விளைஞ்சதில கையில கொஞ்சம் காசுகிடக்குது. வீட்டுக்கு ஒரு பிரிஜ்சுப் பெட்டி வாங்கினால் காத்தாயி குளிர்ந்துவிடுவாள் என்ற ஆசையில நாக்கமுத்து ரங்குப்பெட்டியில மடிச்சு வச்சிருந்த கரை வேட்டியையும் தோள்ள தலைவர் எம்.ஜீ.ஆர் படம்போட்ட துண்டையும் எடுத்துப் போட்டுக்கொண்டு பட்டணத்துக்கு பஸ் பிடித்துப் போய்ச் சேர்ந்தார். அங்கை இங்கை தேடி ஒருவழியா பெரியதொரு எலக்றிக்கல் சாமான் விற்பனை செய்யும் கடையைக் கண்டுபிடித்து எம்மாம் பெரிய கடை என முணுமுணுத்தக்கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனார். வெளியில சுட்டு எரிக்கிற வெய்யிலுக்குக் கடை ஜில்லென்று குளிரா இருக்கிறது. கடையையே இம்மாம் பெரிய பிரிஜ்ஜிற்கை வச்சிரு…
-
- 7 replies
- 3.5k views
-
-
இந்த இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்யலாம் கடைசி பேட்டி மெல்லக் கொல்வேன் மேற்கே செல்லும் விமானம் - பாகம் 1 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 2 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 3 நேற்றைய கல்லறை கறுப்பு வரலாறு
-
- 10 replies
- 3.5k views
-
-
"என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என் வீட்டு யன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் என் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாக கேட்டுப்பார் உன் பெயர் சொல்லுமே" என்று பொங்கும் பூபாளம் நிகழ்ச்சி காலையில் காதல் நாணத்துடன் இசைத்துக் கொண்டிருந்தது. பாடலின் வரிகளில் தன்னை மறந்து பூக்களுடன் கதைக்க தொடங்கினாள் ஐங்கரி. "என் வீட்டு பூக்கள் என்னவனின் பெயரை கனவிலும் சொல்ல தயங்காது" என காதலனை எண்ணியவறே மல்லிகையில் "இச்"சென்று முத்தம் ஒன்றைப் பதித்ததாள். இலைகளிலிருந்து வந்து சிதறிய பனித்துளிகள் முகத்தில் பட்டதும் சட்டென நினைவுக்கு வந்தாள். காதல் மயக்கத்தில் தான் அங்கே செய்ததை நினைத்து முகம் சிவக்க நாணினாள். திடீரென்று கடிகாரத்தைப் பார்த்தவள் "அட 8 மணி ஆகிவிட்டது…
-
- 17 replies
- 3.4k views
-
-
ஆனந்தி வீட்டு தேநீர்! - சிறுகதை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... வா.மு.கோமு, ஓவியங்கள்: ஸ்யாம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தினுள் சாய்வு இருக்கையில் 10 நிமிடங்களாக அமர்ந்து, எதிரில் தெரிந்த பெரிய மானிட்டரையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் முருகேசன். எந்தெந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில்கள், எந்தெந்த நேரத்தில் கிளம்பும் என்ற தகவல்கள், அங்கு இருந்த தகவல் பலகையில் நிதானமாக ஓடிக்கொண்டிருந்தன. பலத்த இரைச்சலுக்கு இடையிலும் இவன் காதினுள் தேனை ஊற்றுவது போல் ஒரு பெண்ணின் குரல், 'பயணிகளின் கனிவான கவனத்துக்கு’ என்று ஆரம்பித்து ஊற்றியது. எப்போதுமே பரபரப்பாக இருக்கும் இடம் என்பதுபோல, பயணிகள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ய…
-
- 1 reply
- 3.4k views
-
-
அப்பா எங்கே? எனது அப்பா எங்களுடன் இல்லையே என்ற கவலை என் மனதை எப்போதும் வாட்டிக்கொண்டிருந்த போதும் இன்று எனது நண்பியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்று வந்ததிலிருந்து எனக்கு அப்பாவை உடனே காணவேண்டும்போல இருந்தது. எனது மனவாட்டத்தைக்கண்ட அம்மாவின் முகத்திலும் சோகத்தில் சாயல் பரவத்தொடங்கியது. "அம்மா, எனக்கு அப்பாவைப் பாரக்கவேண்டும்போல் இருக்கிறது" என்று கூறினேன். அம்மா பதில் எதுவும் சொல்லாமல் தனது வேலைகளிலேயே கவனமாக இருந்தார். மீண்டும் நானே அம்மாவின் அருகில் சென்று "இன்று எனக்கு அப்பாவைப் பார்க்கவேண்டும்போல இருக்கிறது என்றேன்" என்றேன். "அப்படிப்பார்க்க முடியாது என்று உனக்குத் தெரியும்தானே, பிறகு ஏன் என்னைக்கேட்கிறாய்?" என்றார். அம்மா கூறியது சரிதான். …
-
- 8 replies
- 3.4k views
-
-
எப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான். மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான். அவள் பற்றிய மொழிகளினை விட, அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் தான் நான் என்னைப் பறி கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு அபிநயக்காரி. …
-
- 2 replies
- 3.4k views
-