கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
[01] அந்தக் கடற்கரையில் அன்றைக்கு அலைகள் கொஞ்சம் அதிகமாகவே கரைதொட்டன. பெளர்ணமி நாளின் நிலவினை அவைகளும் ரசித்தன போல்! பரந்து கிடந்த மணற்பரப்பில் 'குட்டிப்பவுண்' அண்ணர் வலை பின்னிக் கொண்டிருந்தார்! ஐம்பத்தெட்டு வயசானாலும், நிலவு வெளிச்சத்தில் வலை பின்ன முடியாத அளவுக்கு கண் பார்வை மட்டுமல்ல அவர் உடலும் வலுவிழந்து போகவில்லை. அவரின்ர உண்மையான பெயர் சூசைப்பிள்ளை. சொந்த இடம் மயிலிட்டி. சம்மாட்டியாரா..... கைவிரல் முழுக்க மோதிரம் , கழுத்தில பெரிய சங்கிலி........ என அவர் வலம் வந்ததைப் பார்த்திட்டு அவரின்ர ஊர்ச்சனம் செல்லமா வைச்ச பெயர்தான் "குட்டிப்பவுண்". இவரின்ர மனிசிக்காரி தங்கராணி. அவவின்ர பெயரிலயே தங்கம் இருந்ததால்.... இந்தமாதிரி செல்லப்பெயரில் இருந்து அவ கொஞ்சம்…
-
- 14 replies
- 4.2k views
-
-
முற்றுப் பெறாத கனவுகளின் கதை... பாட்டி கனவுகளின் ராணி...பாட்டியிடமிருந்துதான் நான் கனவுகளுக்கு வர்ணம் தீட்டக் கற்றுக்கொண்டேன்...பாட்டி வெற்றிலைகளை மென்றவாறு வியப்பும்,சுவாரஸ்யமும்,புதிரும் பூத்துக்கிடக்கும் அவளின் அனுபவங்களை வார்த்தைகளாக அசை போட்டுக்கொண்டிருப்பாள்... பாட்டியின் வர்ணனைகளில் மயங்கி நின்றபடி அவள் வார்த்தைகளில் இருந்து தெறிக்கும் தலைமுறைகளின் கதைகளை நான் சேகரித்துக்கொண்டிருப்பேன்... எங்கள் கிராமம் தலைமுறைகள் கூடிக் கூடி விளைந்த முற்றம்...அவர்களின் பேச்சும்,சிரிப்பும்,அழுகையும்,சந்தோசம்களும் ,துக்கம்களும் கால நிழல்களாக அந்தக் கிராமத்தின் முற்றங்கள் முழுவதும் படிந்திருக்கின்றன...மனிதர்களின் காலடித்தடங்களும்,பிம்பங்களும்,பேச்சொலிகளும் படிந்துபடிந்து தலைமு…
-
- 14 replies
- 1.8k views
-
-
முரண்- கோமகன் 2010 “ஹொப்பித்தால் ட்ருசோ”வின் பிரதான வாயிலில் இருந்து உள்ளே செல்லும் நீண்ட சாலையில் காலைப்பனி மூடியிருந்தது. அதன் இருமருங்கிலும் நின்றிருந்த பைன் மரங்கள் இலைகளைத்துறந்து துக்கம் கொண்டாடிக்கொண்டு இருந்தன. அதன் கிளைகளில் இருந்த மொக்குகளில் பனி உறைந்து காலை வெளிச்சத்தில் பளபளத்தது. இருபக்கமும் பனிச்சொரியல் மூடியிருக்க நடுவே வீதி சுத்தமாக்கப்பட்டு கருஞ்சாரையாய் நீண்டு சென்றது. ஆங்காங்கே பனியில் சறுக்காமல் இருக்க உப்புத்தூவப்பட்டிருந்தது. “இந்த மரங்களே இப்படித்தான் வசந்தகாலத்தில் இலைகளால் நிறைந்து அத்தனை பறவைகளையும் தமக்குள் வைத்துக்கொண்டு ஒரேயடியாக சந்தோஷத்தைக் கொண…
-
- 14 replies
- 2.7k views
-
-
இன்று நமீபியா கிளம்புகிறேன்.ஆப்ரிக்காமீது எனக்குள்ள மோகம் அ.முத்துலிங்கத்தால் உருவானது. அவரது எழுத்துக்களில்வரும் ஆப்ரிக்கா ஒரு மெல்லிய வேடிக்கை கலந்த ஓர் உலகம். ஆப்ரிக்காவுக்கு இவ்வளவு சீக்கிரமாக ஒரு பயணம் சாத்தியமாகுமென நான் நினைக்கவில்லை. நானும் இயக்குநர் மாதவன்குட்டியும் செல்கிறோம். சென்று வந்தபின் அந்த அனுபவத்தைக்கொண்டு மலையாளத்தில் ஒரு படத்துக்கான கதையை எழுதவேண்டும். குஞ்சாக்கோ கோபன் நடிக்க மாதவன்குட்டி இயக்குகிறார். கதாசிரியர்கள் நட்சத்திரங்களாக உணரவேண்டுமென்றால் தெலுங்கில் எழுதவேண்டும் என்பார்கள். மலையாளத்தில் குட்டி நட்சத்திரமாக உணரலாம். மதியம் பன்னிரண்டு மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்தில் இருந்து கிளம்பி மும்பை.அங்கிருந்து ஜொகன்னஸ்பர்க். அங்கிருந்…
-
- 14 replies
- 2.7k views
-
-
இஞ்சருங்கோ.. எங்கட வீட்டுச் சேவல் அடுத்த வளவுக்க போய் அவையின்ர பேட்டோட கலைபடுகுது.. ஒருக்கா சோமண்ணையட்டச் சொல்லிட்டு இஞ்சால துரத்திக் கொண்டு வாங்கோப்பா. அங்க போய் பழகிட்டு என்றால் பிறகு அங்கையே தங்கிடும் அப்பா. இந்த முறை எங்கட புள்ளிக் கோழிக்கு அடை வைக்கலாம் என்றிருக்கிறன். ஓமடியப்பா.. நானும் கவனிச்சனான். அவர் இப்ப கொஞ்ச நாளா அங்கதான் அதிகம் மிணக்கடுறார். உந்த ஊரல்லாம் திரிஞ்சு சாவகச்சேரி சந்தையில வேண்டி வந்த வெள்ளைடையன் சேவல் என்று வளர்த்தா.. அவர் எனக்கு உச்சிக் கொண்டு திரியுறார். ஆக மிஞ்சிப் போனா காலை முறிச்சு கறிச் சட்டிக்க போட வேண்டியதுதான். இல்லையப்பா.. அது நல்ல சாதிச் சேவல். எங்கட கோழிக்கு விட்டு அந்த முட்டையில அடை வைச்சா நல்ல குஞ்சுகள் வருமப்பா. சும்மா கற…
-
- 14 replies
- 3.6k views
-
-
இந்தக்கதை ஒரு போராளியால் 17.05.2011 அன்று எழுதப்பட்டது. 2009 முள்ளிவாய்க்கால் வரை வாழ்ந்து உயிர் போகிற கடைசித்துளியிலிருந்து உயிர் மீண்ட தோழன் இவன். ஆவன் செய்த அதிர்ஸ்டமோ என்னவோ இப்போ புலத்தில் உயிரோடிருக்கிறான். தனது சுய வாழ்வு அனுபவத்தை அப்படியே எழுத்தாக்கியிருந்தான். அதனைச் செப்பனிட்டு முழுமையாக்கி இங்கே தருகிறேன். இவனுக்கு இப்போது நான் சூட்டியிருக்கிற பெயர் வசந்தன். காலம் ஒருநாள் இவனை அடையாளம் சொல்லும் நிலமை வரும்போது சொந்தப் பெயரைச் சொல்கிறேன். இரும்பென நினைத்தவர்களுக்குள் இளையோடிய காதலும் களவாழ்வும் கடைசியில் இவன் நேசித்த காதலி காற்றோடு காற்றாய் முள்ளிவாய்க்காலில் கரைந்ததும் இவனை இன்றுவரை உயிரோடு வதைத்துக் கொண்டிருக்கிறது. நேசக்கரம் மூலம் அறிமுகமான …
-
- 14 replies
- 1.9k views
-
-
புதிய தலைமுறை..... நான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று …
-
- 14 replies
- 2.7k views
-
-
கனகுராசா கக்கூசுக்குப் போகிற வழியில், கையில் வைத்திருந்த தண்ணீர் வாளி முழுவதுமாகத் துருப்பிடித்திருந்தது. அதன் ஓரங்களிலும் உள்ளேயும் பாசி பரவி பச்சைக் கலரிலிருந்தது. அவர் வெறும் மேலுடன் நின்றார். பழைய சவுதி சாரமொன்றை துாக்கிக் கட்டியிருந்தார். கக்கூசு வீட்டின் கொல்லைப் புறத்திலிருந்தது. பழைய காலக் கக்கூசு, யாழ்ப்பாணத்திற்கு கக்கூசுக் கலாச்சாரம் வந்தபோது அவரது ஐயா ஊரில் முதலாவதாகக் கட்டிய கக்கூசு அது. கிணற்றடியில் இருந்து இத்தனை முழத்திற்கு அப்பால் இருக்க வேண்டுமென சுகாதார அலுவலர்கள் அப்போது அறிவுறுத்தினார்கள். அருகாக இருந்தால் தண்ணீரில் மலக்கிருமிகள் பரவுமாம். கனகுராசரின் ஐயா அதற்கேற்ப பின்கோடியின் மூலையில் அதனைக் கட்டினார். அதற்குப் பின்புறத்தே வேலியிருந்தது. வேலிக்கு …
-
- 14 replies
- 1.6k views
-
-
முற்றத்து ஒற்றைப் பனை 'செங்கை ஆழியான்' -------------------------------------------------------------------------------- முற்றுத்து ஒற்றைப் பனை நகைச்சுவை நவீனம் 'செங்கை ஆழியான்' ஒரு 'சிரித்திரன்' பிரசுரம் ------------------------------------------------------------- முதலாம் பதிப்பு, யூன், 1972 முற்றத்து ஒற்றைப் பனை. © செங்கை ஆழியான், (க. குணராசா, B. A. Hons, C. A. S.) அச்சுப்பதிவு: ஸ்ரீ லங்கா அச்சகம், யாழ்ப்பாணம். ஓவியம்: 'கணேஷ்' ஆசிரியரின் ஏனைய நு}ல்கள் 1) ஆச்சி பயணம் போகிறாள் 2-00 2) நந்திக்கடல் 2-00 3) சுருட்டுக்கைத்தொழில் 1-00 4) அலைகடல்தான் ஓயாதோ? 1-25 5) சித்திரா பௌர்ணமி -/80 6) ஒரு பட்டதாரிய…
-
- 14 replies
- 1.6k views
-
-
ஒரு பேபரிற்காக எழுதியது மறந்த நாள் ரெலிபோன் மணிஅடித்த சத்தத்தில் நல்ல நித்திரையில் இருந்த நான் திடுக்கிட்டு எழும்பி தட்டி தடவி ரெலிபோனை எடுத்து காதில்வைத்தபடி அனுங்கிய குரலில் கலோ என்றோன் மறு பக்கம் 'கலோ தம்பி 'அவ்வளவுதான் கட்டாகி விட்டது நேரத்தை பார்த்தேன் அதிகாலை 5 மணி ரெலிபோனில் நம்பரும் விழவில்லை இது ஊரிலை இருந்து அம்மான்ரை போனாத்தான் இருக்கும் நித்திரை தூக்கத்திலை சத்தமும் விழங்கேல்லை. பாதி தூக்கத்தில் கண்ணை திறக்காமலே யாரப்பா போனிலை என்றாள் மனிசி. யாழ்ப்பாணத்திலை இருந்து அம்மா போலை கட்டாயிட்டுது என்றேன். ம்...என்னபடி மற்றபக்கம் பிரண்டு படுத்து கொண்டாள்.திரும்ப போன் அடிக்கும் என பாதி தூக்கத்தில் கண்ணை மூடியபடி எதிர்பார்த்தேன். அடிக்கவில்ல…
-
- 14 replies
- 2.8k views
-
-
எம் இனத்திற்கு ஏன் இந்தநிலை,எம்மை காக்க ஒருத்தரும் இல்லையா என்று எண்ணிக்கொண்டு வானொலியை ஒன் செய்தேன் .b.b.c தமிழோசையில் செய்தி போய்கொண்டிருந்தது."சிறிலங்காவில் இரு இராணுவத்தினர் சுட்டுக்கொலை, விடுதலைப்புலிகள் என்ற தீவிரவாத அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர் இவர்கள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு சிங்கள அரசாலும் அதன் இராணுவத்தாலும் நடாத்தபடும் அநியாயத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி தனியாக பிரிந்து செல்ல போவதாக அறிவித்துள்ளனர்".இந்த செய்தியை கேட்டவுடன் எனக்குள் ஒருவித மகிழ்ச்சி உணர்வு ஏற்பட்டது. காலப்போக்கில் அதன் தலைவரும் எனைய போராளிகளும் செய்த போராட்டங்கள்,இராணுவத் தாக்குதல் தியாகங்கள் போன்றவற்றால் அந்த அமைப்பின் மீது அளவுகடந்த பிடிப்பை ஏற்படுத்தியது.இனக்கலவரங்கள் நேரில்…
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
முதலாவது பாகத்தை வாசிக்கப் பின்வரும் இணைப்பில் கிளிக்கவும்! http://www.yarl.com/...howtopic=110495 [size=4]வவுனியா புகையிரத நிலையத்தினுள், ஒரு பெருமூச்சை விட்டவாறு யாழ்தேவி நுழைந்தது.[/size] [size=4]அநேகமானவர்கள், தங்கள் மதியச் சாப்பாடுகளை, இங்கேயே முடித்து விட அவசரப் பட்டனர். வவுனியா தாண்டினால், கையைக்காலை நீட்டிச் சாபிடுவது கொஞ்சம் கடினமாக இருக்கும்![/size] [size=4]பல பெண்கள் போட்டிருந்த தாலிக் கொடிகள், இப்போது கணவர்களிடம் கை மாறின. சில புத்திசாலியான கணவர்கள், தங்கள் உள்ளாடைகளில், ஒரு விதமான இரகசியமான பொக்கட்டுகளைத் தைத்திருப்பார்கள் போலும். அவர்கள் நகைகளை வாங்கியதும்,யாழ்தேவியின் கழிப்பறைக்குள் போய் வந்த படி, இருந்தது அதனை உறுதிப் படுத்திய…
-
- 14 replies
- 1.4k views
-
-
அழகிய மதிய பொழுது. நந்து வீட்டில் மதிய உணவருதிய பின்னர் நந்துவின் பெற்றோரும், சிந்துவின் பெற்றோரும் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இடையிலே காணாமல் போன நம்ம கதாநாயகனை தேடி சிந்து வீட்டு தோட்டத்தை நாடி சொல்கின்றாள். இனி அலட்டலை பார்க்கலாமா? (யப்பா ஒரு ஆரம்பம்குடுக்கணும்னுறதுக்க
-
- 14 replies
- 2.6k views
-
-
அப்ப இரண்டாம் வகுப்பு முடிந்து, பெரிய வகுப்பான 3 வகுப்புக்கு போகிற காலம்..ஏன் 3 வகுப்பு பெரிய வகுப்பென்று உங்களுக்கு ஒரு டவுட் இருக்கும் தானே, அதுவும் இப்பத்தையே இளந்தாரிகளுக்கு; இரண்டாம் வகுப்பு மட்டும் அரை நேரம் என்று சொல்லுகிறது படிப்பு, காலமை 8:00 மணிக்கு போய், தேவாரம் படி, வெள்ளிகிழமை என்றால் சிவ புராணம் பாடி - பள்ளிக்கூட கீதம் பாடி, ஏதன் அறிவுப்புகள் இருந்தால் அதையும் கேட்டுபோட்டு....படிக்க தொடங்க வெளிக்கிட்ட.பத்தரை, பதினொன்றுக்கு ஒரு சோட் இண்டர்வல், அதுக்கு பிறகு "விசுகோத்து" தருவினம் அதையும் சாப்பிட்டிட்டு, 12.30 ; வீட்டை வார படிப்புத்தான் அரை நேரம்..பிறகு அப்ப முழு நேரம் என்றால், வீட்டை இருந்து கட்டிக்கொண்டு போன புட்டு, பாண், இடியப்பம், தோசை...இதில ஏதாவது ஒன…
-
- 14 replies
- 1.7k views
-
-
நான் சிறுவனாக இருக்கும் பொழுதும் சரி,இளைஞனாக இருந்த காலங்களிலும் சரி கோயில் மணியகாரர்(தர்மகர்த்தா) என்றால் அவர்கள்தான் கோயிலை கட்டியவர்கள் என்று எண்ணியிருந்தேன்.அதாவது அந்த கோயிலுக்கு சொந்தகாரர்கள் அவர்கள் தான் என நினைத்திருந்தேன்.அவர்களின் செயற்பாடும் அப்படித்தான் இருக்கும் .ஜயரைவிட அவர்கள்தான் பெரியமனிதர்கள் என்றிருந்தேன்.பெற்றோரும் சொல்லிச்சினம் பரம்பரைபரம்பரையாக அவர்கள்தான் கோயில் சொந்தக்காரர்கள் அதுதான் அவர்களுக்கு முதல்மரியாதை செய்யிறவர்கள் என்று. தேர் திருவிழா போன்ற விசேட நாட்களில் இவர்களுக்குதான் முதல்மரியாதை கொடுக்கப்படும்,அதாவது தெப்பை அணிவித்து மேளதாளத்துடன் கோயிலை சுற்றிவருவார்கள்.அவர்களின் முழுக் குடும்பம்மும் அதில் பங்குபற்றும் ,அடுத்த வாரிசு யார் என்பத…
-
- 14 replies
- 2.7k views
-
-
எங்கட ஊர் யாழ்ப்பணத்தில ஒரு கிராமம் .ஆயிரத்து தொளாயிரத்து எழுபதுகளின்ர தொடக்கம் அது . அம்மா என்னை,தம்பியாக்களை தட்டி எழுப்பினா எழும்புங்கோ எழும்புங்கோ நான் எழும்பினன் எனக்கு அடுத்தவனும் எழும்பி சோம்பல் முறித்தான். சின்னவன் நல்ல நித்திரையில் கிடந்தான்.நான் எழும்பி வந்து திண்ணையில கொஞ்சநேரம் குந்தியிருந்தன். முன்னுக்கு மல்லிகைப்பந்தல் வாசம் மூக்கைத்துளைத்தது.பந்தலுக்கு கீழ மல்லிகை பூக்கள் கொட்டிக்கிடந்திது. பந்தலுக்கு அருகில முன்வேலி. தென்னை ஒலையால பின்னி வரிசைக்கீறாய் அடைக்கப்பட்டிருந்தது.முன்வேலியில கிழுவையும் சீமையும் பூவருசுகளும் இடையிடையே முள்முருக்கை மரங்களும் பலம் சேர்த்தன.வேலியில எங்கட குடும்ப உழைப்பு சேகரிக்கப்பட்டிருந்தது. சில காகங்கள…
-
- 14 replies
- 1.1k views
-
-
10 லட்சமும் 5 லட்சணமும் கனடாவில் இருந்து பெரியம்மா குடும்பம் வந்திருந்தார்கள். பெரியப்பா, பெரியம்மா, அக்கா, அக்காவின் கணவர், மற்றும் அவர்களில் குழந்தைகள். அங்கு விடுமுறை காலம், இங்கு அப்படியா? விடுமுறை காலம் அல்லவே! புலம்பெயர் வாழ்க்கையின் சாபத்தில் இதுவும் ஒன்று எனலாம். வேறு நாட்டில் இருந்து உறவினர்கள் வந்தால் விடுமுறை எடுப்பது தான் சிரமம். படிப்பு கூட பரவாயில்லை. ஒரு நாள் போகவில்லை எனில், இணையத்தில் அன்றையை பாடங்களை எடுத்து படித்து விடலாம். ஆனால் வேலை ! ஆனாலும் 1 வருடத்தின் முன்னரே தெரிந்ததால், 1 மாதம் விடுமுறை எனக்கு கிடைத்திருந்தது. அக்காவின் வாண்டுகளுடன் பொழுது இனிமையாக போய்க் கொண்டிருந்தது. இரவு நீண்ட நேரம் கண்விழித்து அம்மா, பெரியம்மாவிடம…
-
- 14 replies
- 3k views
-
-
உறவும் வரும் பகையும் வரும் ( தொடர்ச்சி ) ....... நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர் கார்த்திகையும் வந்தது .மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் .தலைநகரம் சென்று கடவு சீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன் ,நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பி . இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது .அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள் சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான் .ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் .வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெ…
-
- 13 replies
- 2.5k views
-
-
காலம் உனக்கொரு பாட்டெழுதும் : ஈழத்து எழுத்தாளர் ரஞ்சகுமார் 80 களின் ஈழத்தில் இருந்து வந்த மிகச் சிறந்த சிறுகதை தொகுப்பான மோகவாசல் தொகுதியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சிறுகதை --- வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர். இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை வி¡¢த்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தொ¢ந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எ¡¢ந…
-
- 13 replies
- 3.1k views
-
-
ஐரோப்பா-1, அழியா ஊற்று - ஜெயமோகன் 2016 வரை நான் சென்ற நாடுகள் அனைத்துமே ‘புதிய’ உலகங்கள். இன்றைய நாகரீகம் உருவாகத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் குடியேறி சமைத்துக்கொண்டவை. நான் இந்திய எல்லையைக் கடந்து சென்ற முதல் அயல்நாடு கனடா. 2001 செப்டெம்பரில் அ.முத்துலிங்கம் அவர்களின் அழைப்பின்பேரில் அந்நாட்டுக்குச் சென்றேன். முதல்வெளிநாடு என்பது எவருக்கும் எண்ண எண்ணக் கிளர்ச்சியூட்டும் நினைவு. இன்றும் நயாகராவும், மேப்பிள்காடும், டிம் ஹார்ட்டன் டீக்கடையில் அமர்ந்து பேசிய இலக்கியமும் நினைவில் இனிக்கின்றன. அதன்பின்னர் 2006 ல் சித்ரா ரமேஷ் முயற்சியால் சிங்கப்பூருக்கும் அங்கிருந்து மலேசியாவுக்கும் சென்றேன். 2009 ஏப்ரலில் ஆஸ்திரேலியாவுக்கு நோயல் நடேசன் அவர்களின் அழைப்பால் …
-
- 13 replies
- 5k views
-
-
மிகவும் அருமையான எல்லோரும் வாசிக்க வேண்டிய ஒரு கதை ,இணைக்க முயற்சித்தேன் முடியவில்லை .யாராவது முடிந்தால் இணைத்து விடவும் . . அம்ருதா யூன் இதழில் வெளிவந்த கதை இது .
-
- 13 replies
- 2.3k views
-
-
டிங்கிரி.சிவகுரு புராண இதிகாச நாடகங்களையே பார்த்து வாளும்.வேலும்.விழியும் .கண்ணாளா.மன்னா.மந்திரி என்று பழக்கப்பட்டுபோயிருந்த மக்களிற்கு வித்தியாசமான அதுவும் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை முளுக்க முளுக்க நகைச்சுவையாக இருவர் மட்டுமே மேயில் தோன்றி நடித்த இரட்டையர்கள்தான் டிங்கிரி மற்றும் சிவகுரு என்பவர்கள்.இவர்களின் வருகை சமூக மற்றும் நகைச்சுவை நாடகங்களிற்கென மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல. பினர் பல நகைச்சுவை நடிகர்கள் தோன்றுவதற்கும் காரணமாக இருந்தது என்றும் சொல்லலாம். அது மட்டுமல்ல சாதாரணமாக ஒரு நாடகம் போடுவதென்றால் விளம்பரத்தில் நாடகத்தின் பெரைச்சொல்லி பின்னர் அதில் நடிக்கும் நடிகர்களின் பெயரைச்சொல்லி விளம்பரப்படுத்துவதுதான் வழைமை …
-
- 13 replies
- 3.3k views
-
-
வாசியுங்கள் பொறுமை இருந்தால், கதைதான் ஆனால் இது நிஐம் எல்லா இனத்தினரிடமும் (பல நாடுகள் & Office வேலை ல் செய்த அனுபவத்தால்). எங்கட ஆட்கள் எல்லாம் பேச்சில் எழுத்தில் வீரர் செயலில் ZERO. தான் அன்றைக்கு ஆஷாவோட கதைக்க வேண்டியதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாத்துக் கொண்டான் சந்திரகாந்தன். பல தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டதால் முதல் தடவை சொன்னது மறந்து போனதோடு அதுதான் அழகான வார்த்தைளோடு அமைந்திருந்தது என்ற ஏக்கமும் அவனுக்குள் வரத் தொடங்கியது. மறந்ததை நினைவுபடுத்த முனைய உள்ளதும் மறந்து போய்..சரி ஒண்டும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லிப்பாப்பம், திரும்ப ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்கத் தொடங்கினான். அவன் வாய் வார்த்தைகளைக் கோர்க்க மனம் ஆஷாவோடு கட்டில் வரை ப…
-
- 13 replies
- 6k views
-
-
அக்கா யோ.கர்ணன் அக்காவிற்கு துப்பரவாக அசோக்கை பிடிக்கவில்லை. ஏதோ பெரிய அரியண்டமொன்றை பார்க்கிற மாதிரித்தான் பார்த்தாள். அவள் ஏற்கனவே நுட்பம் பார்க்கிறவள். அசோக் வேற கொஞ்சம் ஊத்தையாக இருந்தது. அசோக்கை முதல்முதல் காணேக்க, அவள் முகம் கோணலாததை பார்க்க மாட்டியள். அவளின்ர இந்த சிடுசிடுத்த முகத்தை பார்த்திட்டுதான், சிறுவன் குரங்கென்று ஆளை கூப்பிடுறனான். அவளுக்கு அசோக்கை பிடிக்காமல் போனதற்கு படிக்கிற காலத்தில நடந்த சம்பவமொன்றும் காரணமாயிருக்கலாமென்று நினைக்கிறன். அக்காவோட படிச்ச பொடியள்ளயே வலு காவாலிப் பொடியன் ஒருத்தன் இருந்திருக்கிறான். அவனின்ர பெயரும் அசோக்தான். அவனுக்கு என்ன காத்துக் கறுப்படிச்சதோ தெரியாது, அக்காவில காதல் வந்திட்டுது. அவன் எங்கட றோட்டா…
-
- 13 replies
- 1.4k views
-
-
அந்நியன் படத்தில் விக்ரம் விவேக் சதா நடிகர்ள் நடித்து ஆடி பாடிய ஹாலந்து நாட்டு அந்த அழகிய பரந்த பூந்தோட்டங்களில் நடுவில் இருந்த கைவிடப்பட்ட பழைய இராணுவ முகாம் ஒன்று இப்பொழுது அகதி முகாமாக்க பட்டிருக்கிறது. அந்த முகாமில் ஏழாம் நம்பர் றூமில் கீழ் படுக்கையில் நான் தூங்க விரும்பியும் தூங்கமால் தவித்து கொண்டிருந்தேன்,அவன் அடிச்சு பிடிச்சு ஓடிவந்து மூச்சிரைத்து சொன்னான் .வாடா உனக்கு ஒன்று காட்டிறன் என்று. இவன் மோகன் தோட்டம் துரவு சந்து ,பொந்து பீச்சு கடல் என்று வேடிக்கை பார்ப்பதிலை விண்ணன்.அத்துடன் சிக்கலை மற்றவர்களுக்கு தெரிந்தோ தெரியாமால் உருவாக்கி தருபவன் .என்பதால் காது கொடுக்காத மாதிரி மற்ற பக்கம் மாறி நித்திரை மாதிரி கிடந்தேன். அந்த அகதி முகாம் ஹாலந்து நாட்ட…
-
- 13 replies
- 6.6k views
-