கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
எலியம் - உமா வரதராஜன் கொஞ்சம் பழைய வீடுதான். ஆனால் அது ஓர் அழகான வீடு. பக்கத்துக் கொன்வென்றில் இருந்து வாத்தியம்மா சொல்லிக் கொடுக்கும் வாசகங்களை அப்படியே ஒப்புவிக்கும் பாலர்களின் ஒருமித்த குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கும். வைத்தியசாலை வெகு கிட்டத்தில் இருந்தது. சந்தை கூட அவ்வளவு தூரத்தில் இல்லை. இவன் வீட்டுக்கு நேர் எதிரே புகைப்படப் பிடிப்பு நிலையம் ஒன்று இருக்கிறது. தேவையானால் இவன் தன் வீட்டிலிருந்தே ஒப்பனைசெய்து கொண்டுபோய்ப் படம் எடுத்துக் கொள்ளலாம். அவர்களுடைய பௌடரையும், ஒல்லாந்தர் காலத்து அழுக்கு நிரம்பிய சீப்பையும் பாவிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அதற்குப் பக்கத்திலுள்ள பேக்கரியில் பாண் போடுவார்கள்; 'கேக்'கும் போடுவார்கள். ஆனால் இரண்டுக்கும் இடையில…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரிகேடியர் துர்க்கா, பூமி யில் வாழப்போகும் கடைசி நாள் அன்று திடுக்கிட்டு விழித்தபோது, காலை ஐந்து மணி. அவர் மூன்றா வது நாளாகப் பதுங்கு குழியில் இரவைக் கழித்திருந்தார். வழக்க மாக, தோய்த்து அயர்ன் பண்ணி விறைப்பாக நிற்கும் அவருடைய சீருடை சேற்று நிறமாக மாறிவிட்டது. சப்பாத்துகளைக் கழற்றி, மண்ணை உதறி மறுபடியும் அணிந்துகொண்டார். சுவரில் சாத்திவைத்த S97 துப்பாக்கியின் மேல் வண்டு அளவிலான இலையான் ஒன்று உட்கார்ந்திருந்தது. அதை அடிக்கக் கை ஓங்கியவர், மனதை மாற்றி ஆயுத உறையைக் கையில் எடுத்து, திசைகாட்டியும் சங்கேத வார்த்தைத் தாளும் இருப்பதை உறுதி செய்த பின்னர், இடுப்பிலே கட்டினார். நிரையாக நீண்டுகிடந்த பங்கர்களைப் பார்த்தார். ஆள் நடமாட்டமே இல்லை. வெளியே வந்து அவசர அவசரமாக காலைக் கடன்கள…
-
- 4 replies
- 1.7k views
- 1 follower
-
-
அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் மாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்து த் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் …
-
- 1 reply
- 1.2k views
-
-
மெசொபொத்தேமியா சுமேரியர் Posted Today, 05:04 PM கடந்த வருடம் நானும் என் கணவரும் இரண்டு பிள்ளைகளும் விடுமுறையில் இத்தாலி சென்று இருந்தோம். கணவரின் ஒன்றுவிட்ட சகோதரன் தினேஷ் அங்கிருந்தான். இத்தாலி பற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருந்தாலும் அவன் இருக்கும் துணிவு ரோமில் போய் இறங்கியாச்சு. எங்க பாத்தாலும் கூடுதலா சிங்களவங்கள்தான். கூடிக் கூடி நிண்டு கதைச்சுக்கொண்டு நிண்டாங்கள். அவங்கள் எங்களப் பாத்து நக்கலடிச்சுச் சிரிச்சமாதிரி இருந்திது. அவங்களுக்கு முன்னாலை கேவலப்பட்டுப் போனது போலை அவமானமா இருந்திது. கணவரின் தம்பியை பத்து வருடம் கழித்துப் பார்த்தபடியால் என்ர மனுசன் குடும்பக் கதையள் கதைக்கத் தொடங்கீட்டார். போலி எண்ட இடத்திலதான் தம்பி இருந்தபடியால் அங்க போற பஸ்சில ஏறி இருந்தாச்…
-
- 103 replies
- 14.3k views
-
-
பழனி மலை பூக்காரி | சிறுகதை | பொன் குலேந்திரன். ஆறு படைகளில் மூன்றாம் படைவீடான பழனி மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரம் உள்ள மலையை 690 படிகள் எறி பக்தர்கள் கடந்து வர வேண்டும். நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. அந்த மலையில் பல பூக்கடைகள் இருந்தாலும் பூக்காரி வள்ளியம்மையிடம் பூ வாங்க வரும் பக்தர்கள் அனேகர். அதுக்கு பல காரணங்கள் இருந்தன. அவைகளில் முக்கியம் அவளின்முத்து சிரிப்பழகு. இரண்டாவது தேன் சொட்டும் பேச்சழகு. மூன்றாவது கண் சிமிட்டும் போது அவளின் பார்வையின் அழகு, நான்காவது அவளின் இடையழகு, ஐந்தாவது அவள் மாலை கட்டும் அவளின் விரல்களின் அசைவின் அழகு. ஆறாவது அவளின் நீண்ட கருங் கூந்தல் அ…
-
- 2 replies
- 2k views
-
-
ஆக்காட்டி கோமகன் திருமணம் செய்த தம்பதிகளுக்கும் காதலர்களுக்கும் இனிமையாக இருந்துவந்த தொலைபேசி நான் புலம் பெயர்ந்த நாட்களில் இருந்து எனக்கு ஒவ்வாமையாகவே இருந்து வந்திருக்கின்றது. அன்பு பாசம் என்பதை தவிர்த்து இழப்புகளையும் சோகங்களையும் காசுப்பிரச்சனைகளையும் அமிலமாக அது என் நெஞ்சில் இறக்கியிருக்கின்றது. எப்பொழுதும் நான் என்னை மறந்த ஆழ்ந்த நித்திரையின் அதிகாலைப் பொழுதுகளிலேயே அது என் அறையின் வாசல் கதவை தட்டியிருக்கின்றது . 90ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியின் ஒருநாளான இன்றும் அப்படித்தான் காலை மூன்று மணிக்கு எலார்ம் அடிக்க முதலே தொலைபேசி ஒலித்தது. அரக்கப் பரக்க பதறி எழுந்து ‘யாரை இழக்கப்போகின்றேன் அல்லது யாருக்கு பஞ்சாயத்து பண்ணப்போகின்றேன்’ என்ற சிந்தனையோட்டத்தில் …
-
- 2 replies
- 2.7k views
-
-
வணக்கம் பிள்ளையள்! ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வந்து உங்களோடை புலம்பிப் போட்டுப் போறதே எனக்குத் தொழிலாப் போச்சுது. என்ன செய்ய அடிக்கடி வந்து உங்களோடை ஊர்க்கதைகளைப் பறைய எனக்கும் ஆசை தான். ஆனால் இந்தக் கண்டறியாத நாட்டிலை அதுக்கெல்லாம் நேரமெங்கையணை? சரி நான் நேரை விசயத்துக்கே வாறன். இப்ப எங்கடை தமிழ் ஊடகங்களுக்குச் செய்திப் பஞ்சம் வந்திட்டுது. அதிலையும் மழைக்கு முளைக்கிற காளான்கள் மாதிரி ஒவ்வொரு நாளும் முளைக்கிற இணைய செய்திச் சேவைகள் தங்கடை பக்கங்களை நிரப்ப என்னத்தைப் போடலாம் எண் ஆவெண்டு பாத்துக் கொண்டிருக்க கொண்டிருக்க இன்னொரு பக்கம் புதுசா வாற செய்தித் தளங்களாலை தங்கடை இடம் பறிபோயிடுமோ எண்ட பயத்திலை இருக்கிற பழைய ஆக்களும் பரபரப்புச் செய்திகளுக்கு ஆலாய்ப் பறக்கினம…
-
- 14 replies
- 1.6k views
-
-
ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது... கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார் பல எலும்புகள் முறிந்துவிட்டதால்.. இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து "அப்பா.. என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?" என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நி…
-
- 82 replies
- 308.7k views
-
-
அடேலினா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் பா.விஜயலட்சுமி ஓவியம்: ஸ்யாம் ஆல்ப்ஸ் மலையின் மிதமிஞ்சிய குளிர், கணப்புச் சூட்டைத் தாண்டி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அடேலினாவின் உடலை சன்னமாக குலுங்க வைத்தது. கண்கள் மூடி தூக்கத்தில் கனவுகண்டு புன்னகை புரிந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் கைதொடும் தூரமாகக் கிடப்பதைப் போல விரிந்துகிடக்கும் ஆல்ப்ஸ் மலையின் பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கெவின். கெவின்... நாற்பது வயதைத் தொட 1,460 நாட்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவன். ஆல்ப்ஸ் மலையின் பனிப்படுகைகளில் உருண்டு, புரண்டு ஐஸ்கட்டிகளை ஆராய்ச்சி செய்பவன் - ‘கிளேசியர் ரிசர்ச் சயின்ட்டிஸ்ட்’. அவனிடம் பயிற்சியாளினியாக வேலைக்குச் …
-
- 0 replies
- 1.3k views
-
-
லண்டனிலை நடந்த ஆர்ப்பாட்ட பேரணியிலை கலந்து கொள்ளவும் வேறை பல சந்திப்புக்களிற்காகவும்.லண்
-
- 25 replies
- 4.3k views
-
-
எப்பவும் போல நான் அதே அவசரத்துடன் நடந்து கொண்டிருந்தேன் .என்னைப்போல் பலர் அப்படி.எங்கோ என்னத்துக்கோ என்று தெரியாமால் முட்டி மோதி கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் நிலக்கீழ் சுரங்க நிலைய பாதையின் ஒரு மூலையில் எந்த வித சலனமுற்று தூங்கி கொண்டிருந்தான் ஒருவன்.பலர் இப்படி அங்கும் இங்கும் தெருவோர பாதைகளில் தூங்குவது ஒரு காலத்தில் சூரியன் மறையாத ராஜ்யம் வைத்திருந்தவர்களின் தலை நகரத்திலும் இப்ப சகஜம் என்றாலும்.எனக்கு அவன் ஒருவிதத்தில் பரிச்சயமானவன். இதே பாதையில் இதே அவசரத்துடன் இதே பட படப்புடன் கடந்த பத்து வருடங்களாக யாருடையதோ பண மூட்டையை நிமிர்த்தி வைக்க சென்று வருகின்றேன் .அவர்கள் தூக்கி எறியும் அற்ப சொற்ப பணத்துக்காக.இப்படி சென்று திரும்பு வழியில் தான் அவன் என் கண்ணில் தென்ப…
-
- 1 reply
- 860 views
-
-
அது நான்தான் இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் அவன் கண்களைக் கூசவைத்தன. நெடுஞ்சாலையில் காரை வேகமாக விமான நிலையத்தை நோக்கி ஓட்டினான் வசந்தகுமாரன். அவனுடைய புது மனைவி தன்னந்தனியாகக் கொழும்பிலிருந்து வருகிறாள். அவள் வரும்போது அவன் அங்கே நிற்க வேண்டும். 13 மாதத்திற்குப் பிறகு மனைவியைப் பார்க்கப்போகிறோம் என்று நினைத்தபோது மனது குறுகுறுவென்று ஓடியது. காரை மூன்றாவது தளத்தில் நிறுத்திவிட்டுத் தரிப்புச் சீட்டில் காரை நிறுத்திய இடத்தைக் குறித்து வைத்துக்கொண்டான். புது மனைவியுடன் திரும்பும்போது காரைக் கண்டுபிடிக்க அலையக் கூடாது. வருகைக்கூடத்தில் நிறைய ஆட்கள் சேர்ந்துவிட்டார்கள். அவனுக்குப் பக்கத்தில் ஒருவர் உரத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவ…
-
- 2 replies
- 1.5k views
-
-
எட்டாப் புத்தகம்! பொன்னம்பி அவனிடம் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தான்."நீ (அரசியல்)அமைப்பிலே வேலை செய்யாமல் வெளியிலே போய் பயிற்சி எடுக்கணும் என்று அவசரப்படுகிறாய்.உனக்குத் தெரியுமா, இங்கே(தளத்திலே) வேலை செய்வது தான் முக்கியமானது,ஒரு காலத்தில் உணர்வாய்!"என்றான். இதையெல்லாம் நின்று நிதானிக்கும் நிலையில் அவன் இருக்கவில்லை.. .மனோவும் ,சதிஸும் ...கிராமத்திலிருந்து பயிற்சிற்குச் சென்ற பிறகு இவனுக்கு மன அலைகள் அடிப்பது அதிகமாகியிருந்தன. .மனோ,அவனுடன் சிறு வயதிலிருந்து படித்த நல்ல நண்பன்.சதாசிவம் வாத்தியாரின் பல பிள்ளைகளில் ஒருத்தன். ரமேஸினுடைய அம்மாவும் அங்கே படிப்பிக்கிற சந்திரா ஆசிரியை தான். சதிஸ் கிராமத்தில் இருந்து வட்டுக்கோட்டையில் படித்திருக…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஊமை! – சிறுகதை ரமேஷுக்கு அன்று முதலிரவு. பால் செம்புடன் படுக்கையறைக்குள் நுழைந்த மனைவி பத்மாவை பாசத்தோடு அரவணைத்து தனது அருகில் உட்கார வைத்தான். தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் விரிவாக எடுத்துரைத்தான். நான் ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்ப்பதாகவும், தனக்கு ஒரு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு என்றும், அப்பா ரயில்வேயில் வேலை பார்ப்பதாகவும், அம்மா கொஞ்சம் வாயாடியானாலும் அன்பாவனவர் என்றும் கூறினான். நீ குடும்பத்தில் மூத்த மருமகள் என்பதால் எல்லோரிடமும் அன்பாகவும் – பாசமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து கொள்…
-
- 1 reply
- 3.7k views
-
-
அந்தச் சிறுவனுக்கு பத்து வயசுதான் இருக்கும். இதற்குமுன்னர் அவனுடைய அதிகபட்ச ஆசைகள் எல்லாம் சின்னச் சின்ன விளையாட்டுச் சாமான்கள் மேலேயே இருந்தது. ஆனால், வயசும் கூடியதாலோ என்னவோ, இப்போது அவன் கொஞ்சம் அதிகமாகவே ஆசைப்பட்டான். அவனுக்கு ஒரு சைக்கிள் வேண்டும். அவனுடைய பாடசாலை நண்பர்களில் பலபேர் சைக்கிள் வைத்திருந்தார்கள். அவர்களிடம் அடிக்கடி கேட்பான், "நான் ஒருக்கா ஓடிப் பார்க்கவா?" என்று. கெஞ்சிக்கேட்டும் ... அந்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவில்லை. "என்ர சைக்கிளில சைக்கிளோடப் பழகி அதை உடைச்சிட்டியென்டால்...யார் தர்றது?" என்ற நக்கலான பதில்களே வந்தன. ஆனாலும் அப்பாவின்ர கிழட்டுச் சைக்கிளில வாருக்குள்ளால கால விட்டு ... பலதடவை விழுந்தெழும்பி ஓரளவுக்கு சைக்கிள் ஓடப் பழகியிருந்த…
-
- 29 replies
- 3.4k views
-
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்கனவே அண்ணவின் பை தண்ணீர் போத்தல் மத்திய உணவு பெட்டி என்று தோளில் மாட்டி பல முறை ஒத்திகை பார்த்தாயிற்று . அந்த சுப நாளும் வந்தது . முதலில் பாலர் வகுப்பு என்னும் .( அரிவரி )வகுப்பு . முதல் நாள் அதிகாலயே எழுந்து விட்டேனாம். அப்பா அப்போது பட்டணத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். எனது நச்ச்ரிப்பு தாங்காமல் அம்மா கடிதம் எழுதி எனக்கு தேவையாதை ஒரு நண்பர் மூலம் கொடுத்து விட்டிருந்தார் . பள்ளிக்கு போகுமுன்பே அதை பிரித்து ஒத்திகை பார்த்தாயிற்று. அந்த சுப நாள் ஒரு திங்கட்கிழமை. மாத ஆரம் பம என எண்ணுகிறேன். அங்கு இரு பெண ஆசிரியைக ளும் ஒரு தலை…
-
- 9 replies
- 19.5k views
-
-
அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது. மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான். இந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந…
-
- 5 replies
- 896 views
-
-
முதற்காதல் வ.ந.கிரிதரன் - நீண்ட நாட்களின் பின் நண்பனைச் சந்தித்தேன். வழக்கத்துக்கு மாறாக மகிழ்ச்சியுடனிருந்தான். இவனைக் கண்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் சில எழுந்தன. பதின்ம வயதினில் இவனொருத்தியின் மேல் காதல் மிகுந்திருந்தான். அதை அவளுக்கும் தெரியப்படுத்தியிருந்தான். அவளோ அதைத்தூக்கி எறிந்துவிட்டுச் சென்று விட்டாள். ஆனால் அவள் மீதான காதலை மட்டும் இவன் விடவேயில்லை. அவளையே நினைத்துக்கொண்டிருந்தான். எப்பொழுதும் அவனுடன் கதைக்கும்போதும் உரையாடலில் நிச்சயம் அவளது பெயரும் வரும். நீண்ட காலமாக அவளைப்பற்றிய தகவல்கள் கிடைக்காததால் அவன் பல்வேறு நினைவுகளில் மூழ்கியிருந்தான். யுத்தபூமியில் அவள் இன்னும் இருக்கின்றாளா என்றும் சந்தேகப்பட்டான். இந்நிலையில் யுத்தம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
புதுப் பெண்சாதி - அ.முத்துலிங்கம் அ.முத்துலிங்கம் நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... புதுப் பெண்சாதி கொழும்பிலே ரயில் ஏறும்போது பத்மலோசனிக்குத் தன்னுடைய பெயர் இனிமேல் பயன்படாது என்பது தெரியாது. கணவனைத் தேடினாள். அவன் மும்முரமாக இரண்டு பெரிய பெட்டிகளையும், வ…
-
- 1 reply
- 2.3k views
-
-
பாஸ்”போர்ட்”- கோமகன் யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான ஒரு அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே “சமரசங்கள்” என்ற பரம்பரையலகு அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இ…
-
- 5 replies
- 1.4k views
-
-
சிறுகதை / நன்றி காணிநிலம் காலாண்டிதழ் அர்த்தநாரிஸ்வரி எஸ். சங்கரநாராயணன் இடது மார்பில் லேசாய் ஒரு கல் தன்மை இருந்தது போல் தோன்றியது பார்வதிக்கு. உடம்பில் நரம்புகள் முறுக்கி முடிச்சிட்டுக் கொண்டு சில இடங்களில் இரத்தம் சீராகப் பாயாமல் சதை இறுகிப் போவது உண்டு. அவளுக்குத் தொடையில் அப்படி ஒர் சதைக்கட்டி இருக்கிறது. மருத்துவரிடம் காட்டியபோது, கொழுப்பு அப்படிச் சேர்ந்து கொள்கிறது, அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், என்றுவிட்டதில் அவளும் அதை அலட்சியப் படுத்தி விட்டாள். குளிக்கும்போது சோப்பு தேய்க்கையில் இப்போது இதை கவனித்தாள். இடது மார்பின் சதைத் திரளில் அவள் கைக்கு சற்று அந்தக் கல், நெகிழ்ந்து கொடுக்காத களிமண்ணாய் நிரடியது. எழுந்த ஜோரில் குதிரையின்…
-
- 0 replies
- 699 views
-
-
மனதைத் தொட்ட பதிவு...! பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, முகத்தில் கருப்பும், வெள்ளையுமாக மண்டிய ரோமக் காடு, நீண்ட பயணத்தால் களைத்த முகம் என, கையில் நகைக்கடை விளம்பரத்துடன் இருந்த ரெக்சின் பையுடன் நின்றிருந்தார். அவர் கையிலிருந்த சீட்டை பார்த்தார். ""ஆனந்த், நம்பர். 8, யோகானந்தம் நகர்?'' ""ஆமாம்... இது தான். நான் தான் ஆனந்த்... நீங்க... என்ன வேணும்?'' அவர் வறண்ட உதடுகளை, நாவால் ஈரப்படுத்திக் கொண்டார். ""நான் <உங்கப்பாவோட நண்பன்; காரைக்காலேருந்து வர்றேன். உங்கப்பா லெட்டர் கொடுத்து அனுப்பியிருக்கார்.'' பெரியவர் ரெக்சின் பை ஜிப்பை திறந்து, ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார். வாங்கிப் பார்த்த ஆனந்த், …
-
- 2 replies
- 1.6k views
-
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தா…
-
-
- 5 replies
- 681 views
- 1 follower
-
-
அண்மையில் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது அங்கு பிடித்ததும், பிடிக்காததும் பற்றிய எனது அனுபவத்தை பற்றி எழுதவேண்டும்போல் இருந்தது....முதலில் பிடிக்காததை எழுதுகின்றேன்... . இரவு கொழும்பிலிருந்து புறப்பட்டு காலை ஏழுமணியளவில் யாழ்ப்பாணத்திற்குள்ளே....வந்து சேர்ந்ததுமே முதலில் பார்த்தது நாய்களைத்தான் பல ரோட்டில் அலைந்து திரிந்தன....மனிதரைவிட நாய்களே பெருமளவில் தென்பட்டன....அதில் பல குட்டைநாய்கள்...சிலவற்றிகு உடம்பில் மயிர் முழுதும் கொட்டிப்போய் புண்ணாகி இருந்தது....வீடு போய் சேர்வதற்குள் ஏகப்பட்ட நாய்களை கண்டுவிட்டேன்...ஏற்கனேவே நாய் என்றால் எனக்கு அலர்ஜி, கடித்தால் இருபத்தியொரு ஊசி போடவேண்டும்.....அதுவும் யாழ்ப்பாணத்து ஊசி என்றால் சொல்லதேவையில்லை. ஒரு தடவை நடந்து போய்கொண…
-
- 26 replies
- 8.1k views
-
-
[size=6]நம்பிக்கையும் காசில்லாமல் கனவாகிறது. [/size] Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Tuesday, June 26, 2012 அண்ணை இப்பத்தான் அண்மையில தடுப்பிலயிருந்து வெளியில வந்தவர். 25வரியம் இயக்கத்தில இருந்தவர். ஒரு நல்ல களமுனைச்சண்டைக்காரனும் கூட. அவருக்குத் தெரிஞ்சதெல்லாம் சுடுகலனும் , கனரகமும் அதுகளை இயக்கிற வகையளுமே. ஆயுதங்களோடை அண்ணை காடுகளெல்லாம் நடந்து திரிஞ்சவர். தாயகக்கனவை நெஞ்சில சுமந்தபடி அண்ணை உருவாக்கிய போராளிகள் அண்ணையின் கையிலை வீரச்சாவான நேரங்களிலயெல்லாம் அண்ணை தன்ரை கண்ணீரை மறைச்சு இலட்சியத்தை இறுக்கமாவே வரிச்சுக் கொண்டு இயங்கின மனிசன். 2006மாவிலாற்றில சண்டை துவங்கினோடனும் மாவிலாற்றில சண்டைக்களத்தில நிண்டார். பிறகு சம்பூர் , மூதூர் , கொக்க…
-
- 6 replies
- 1.3k views
-