கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
அழகுக்குட்டி செல்லம் சென்ற வார விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டுக்கு சென்று இருந்தேன்..அவளுக்கு பெண குழந்தை கிடைத்து பத்து மாதங்கள் ஆகின்றன. முதற்குழந்தை, அவளது தாயார் தாயகத்தில். இடையில் நானும் அவளது ம ச்சாளும் (கணவனின் தங்கை) உதவியாய் இருந்தோம். . கணவன் காலயில் வேலைக்குபோயவிடுவார். நம்ம செல்லக் குட்டி எழும்பிவிடுவாள். காலையில் டாட்டா பாய் சொல்லி ..அப்பாவை அனுப்பி வைப்பாள். அக்கா மகள் தன் வேலைகள் ஆரம்பிப்பாள் .அடிக்கடி நப்பி மாற்றுதல்,( diaper )தூங்க செய்தல் ...நேரத்துக்கு பாலூட்டுதல் என்று தனியாகவே எல்லாம் செய்வாள். கற்றுக் கொண்டுவிடாள். சில சமயம் வீட்டில் எல்லோரும் தூங்கக் செல்லக்குட்டி மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் இருப்பாள். . இதனால் தாயும் காலயில் சேர…
-
- 6 replies
- 1.8k views
-
-
-
அம்மாவின் காதலன் - மனோ சின்னத்துரை - சிறுகதை 19 டிசம்பர் 2023 கொஞ்ச நாட்களாக அம்மாவில் சில மாறுதல்களை அவதானிக்கத் தொடங்கினேன். அந்த அவதானிப்பு என்னையும் மீறி வளர்ந்துகொண்டே போனது. அம்மா இப்போ இடையிடையே தன்பாட்டில் சிரிக்கிறார். தனது அலங்காரங்களில் அதிக அக்கறை செலுத்துகிறார். முன்பெல்லாம் நான் நினைவூட்டி நெருக்கும்போதுதான் தலைக்கு சாயம் தீட்டுவார். இப்போது மாதம் இரண்டு தடவை, சிலவேளைகளில் மூன்றுதடவையும் கூட நடக்கிறது. தொலைபேசி சத்தம் கேட்டால் அம்மா பரபரப்பாக ஓடுகிறார். கையில் என்ன வேலையாக இருந்தாலும் அதை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுகிறார். இரண்டு தடவைகள், சமைத்துக் கொண்டிருக்கும்போதும் இப்படி…
-
-
- 6 replies
- 1.1k views
-
-
அஸ்தமன வானில்....... இளவேனிற் காலத்து இதமான தென்றலின் தாலாட்டில் மேபிள் மரங்களெல்லாம் மெல்லச் சிலிர்த்துக் கொண்டன. பூங்காவின் வாங்கில் சாய்ந்து அமர்ந்திருந்த கற்பகத்தின் பார்வை அடிவானத்து அந்திச் சிவப்பில் லயித்துக்கிடந்தது. ஆங்காங்கு அருகருகே அமர்ந்திருந்த இளம்சோடிகள் தமக்குள் ஏதேதோ பேசிச் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். முதியவர் சிலர் தம்மால் முடிந்தளவு தூரம் நடந்துகொண்டிருந்தனர். பூச்சியங்களைத் தாண்டி புவியீர்ப்பு மையத்தைத் தொடும் குளிரில் விறைத்துக் கிடந்த உடல்கள் இங்கு சற்று தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டன. மழலைகள் புற்றரையில் பந்தை உருட்டுவதும் ஊஞ்சலில் ஆடி ஆடி அலுத்து மீண்டும் படிகளில் ஏறி ஏறி வழுக்குவதுமாக விளையாட்டில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தனர். சி…
-
- 6 replies
- 1.7k views
-
-
காரில்தான் வழமையாக நான் வேலைக்கு போய் வருவது வழக்கம்… கடந்த ஒன்றரை வருடமாக ஒரு பிரபலமான தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். வழமையாக அதிகாலை ஐந்து மணிக்கு வீட்டில் இருந்து நான் வேலைக்கு கிளம்பிவிடுவது வழக்கம். அன்றும் அப்படித்தான் காரில் போய்க்கொண்டிருந்தேன்… அது ஒரு அமெரிக்கத் தெரு என்பதனால் சந்திச் சமிக்ஞை விளக்குகள் தானாக ஒளிர்ந்து மூடும்... பராமரிப்பாளர்களோ காவலர்களோ யாரும் இருப்பதில்லை. அதிகாலையில் பனிப்பொழிவு கொஞ்சம் இருந்தமையால் நான் வழமைக்கு மாறாக மெதுவாகப் போய்க்கொண்டிருந்தேன். வழமையாக நான் போய்வரும் பாதை என்பதால் எனக்கு மேடு - பள்ளம் எங்கிருக்கும் என்பதெல்லாம் அத்துப்படி... இருப்பினும் பனிக்கால எச்சரிக்கையாக கொஞ்சம் மெதுவாகவே நான் கார…
-
- 6 replies
- 10.6k views
-
-
பவானி மச்சாள் – சிறுகதை – இராகவன் பவானி மச்சாள் எங்கடை ஊரிலை இருக்கிற ஒரேயொரு முற்போக்குவாதி யாரெண்டு கேட்டால் அப்பவும் இப்பவும் எப்பவுமே அது சற்குணம் மாமாதான். அவரோடை ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளையான அம்பிகா மச்சாள் ஓயெல் படிச்சு கொண்டிருந்த மூட்டம் ஒரு நாள் , “அப்பா நான் கராட்டி பழகப் போறன்” எண்டு சொன்னாள். “அதுக்கென்ன பிள்ளை” எண்டு சற்குணம் மாமா சர்வசாதாரணமாய் சொல்ல சிந்தா மாமிதான் ஆட்லெறி செல் விழுந்து வெடிச்சமாதிரி அதிர்ந்து போனா. “இதென்ன நாசமறுப்பு. ஒரு குமர்பிள்ளை கதைக்கிற கதையைப் பார். கராட்டி பழகப் போறாவாம் கராட்டி. அதுக்கு இவரும் ஒத்தூதுறார்.” எண்டு சிந்தாமாமி அளப்பரிக்க தொடங்கீட்டா. “அதுக்கு நீயேனப்பா அளப்பரிக்கிறாய்? அவள் ஆச…
-
- 6 replies
- 2.6k views
-
-
உயிருக்காய் தன் உயிரை........ சிறுகதை.... எம் தாய் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடந்துவிட்ட, நடந்து கொண்டிருக்கும் நடக்கப்போகும் இது போன்ற தியாகங்களால் நடந்தேறும் உண்மைச் சம்பவங்களை சிறிது கற்பனை கலந்து தந்திருக்கிறேன் ''எவ்வளவு நேரமாய் இவவை பார்த்துக்கொண்டு நிக்கிறது ஒரு நாளைக்கு ரியுசனுக்குப் போகாட்டி என்ன செத்தாபோயிடுவ'' என்று தனக்குள்ளே யாழினியைப் பேசிக்கொண்டான் ஆதவன். அந்த ஒடுங்கிய ஒழுங்கையில் இருபக்கமும் உள்ள பனை வடலியொன்றில் தனது சயிக்கிலை சாத்திவிட்டு வெள்ளை மணலில் தனது சயிக்கிலுக்கு பக்கத்தில் உட்கார்ந்தான் அவன். சிறிது நேரம் செல்ல பொறுமையிழந்தவனாய் சயிக்கிலையும் எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் சென்றதும் யாரோ கூப்பிடுவது கே…
-
- 6 replies
- 1.6k views
-
-
அது ஒரு மரண வீடு அதுக்குத்தான் போய் விட்டு வந்தேன் .அதனால் தான் என்னவோ மனசு என்னமோ மாதிரி இருக்கு. இறந்தவன் வேண்ட பட்டவனோ அல்ல.இருக்கும் பொழுது ஒரு நாளும் கண்டதில்லை .அவனை முதல் முதலாக பிணமாக பார்க்க வேண்டிய எனக்கு ஏதோ எழுத்து போலும்,எனக்கு வேண்ட பட்டவருக்காக போயிருந்தேன் , மனசுக்கு என்னமோ மாதிரி இருந்தது இறந்தவனை பார்த்து அல்ல, அந்த மரண வீட்டு சடங்கு நடக்கும் சூழல் போய் விட்டு வந்தாலே ஒரு மாதிரி இருக்குமோ என்னவோ. இறந்தவன் இள வயதுக்காரன் என்ற படியால் அகலா மரணம் என்று நினைக்கலாம் ,அப்படி இல்லை வருத்தம் வந்து தான் இறந்து இருந்தான் . இது பற்றிய விசயங்களை நானே தேடி கேட்க வேண்டியதில்லை . அங்கு வந்தவர்களே பேசி கொண்டார்கள். அவர்களுக்கு தான் பேசிக்கொள்வதற்க்கு உந்…
-
- 6 replies
- 2.1k views
-
-
ஈழப்போராளிகளின் காதலும் குழந்தைகளும் Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, December 19, 2012 http://mullaimann.blogspot.de/2012/12/blog-post_19.html இன மத மொழி பேதங்கள் தாண்டிய எங்கேயெல்லாமோ வாழ்கிற ஆயிரமாயிரமானவர்களின் தமிழ் ஈழக்கனவோடும் தாம் நேசித்தவர்களின் கனவுகளோடும் வாழ்கிற மனிதர்களோடு அவளும் ஒருத்திதான். உலகத்துப் பெண்களின் அம்மாக்களின் பிரதியாய் அவள் தனது குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தவே இப்போது உழைக்கிறாள். 4வயதில் ஆறுவயதெனப் பதிவுசெய்து ஆங்கிலப்பள்ளியில் அப்பா சேர்த்துவிட்டு அவளை வேகமாக முன்னேற வேண்டுமெனவே சொல்லியனுப்பினார். அன்று 2வயதால் மூப்படைய வைத்து முன்னேறென்று சொன்ன அப்பா இன்று இருந்தால் அவளுக்காக தற்கொலையே செய்து கொண்டிருப்பார். 4வயதில் முன்…
-
- 6 replies
- 1.7k views
-
-
தாயாகத் தந்தையாக… சேர்மனியில் பிரதானமான நகரங்களில் ஒன்று பிராங்போட் மெயின்ஸ். அங்கே உள்ள மண்டபம் ஒன்றில் தனத்தின் நண்பரின் திருமண விருந்துபசார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அவன் தனது இரண்டு பிள்ளைகளுடன் அதற்கு வந்திருந்தான். திருமணத் தம்பதியினருடன் புகைப்படம் எடுப்பதற்காக மேடைக்கு குழந்தைகளையும் அழைத்துச் சென்று, நின்றபோது, மேடைக்கு முன்னிருந்த அனைவரினது கண்களும் அவனையும் அவன் பிள்ளைகளையும் உற்று நோக்கின. புகைப்படம் எடுந்து முடிந்தபின் தனம் தனது பிள்ளைகளை அணைத்துக் கூட்டிச் சென்று, முன்பிருந்த இடத்தில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்தான். அப்போது அங்கே வந்த ஒருவர் "இவர்கள் என்ன இரட்டைப் பிள்ளைகளா" என வினாவினார். தனம் "ஓமோம்..." என்றான் "இரட்டைப் பிள்ளைகள் ஆணும் பெண்ணு…
-
- 6 replies
- 3.6k views
-
-
நான் கனவுகள் காண்பவன் என நீங்கள் கூறலாம். ஆனால் நான் ஒருவன் மட்டுமே கனவுகள் காண்பவனல்ல.” மிகவும் புகழ் பெற்ற அமெரிக்க இசைக் கலைஞர் ஜான் லெனான் எழுதிய இந்த வரிகள் அவருக்கு மிகவும் பிடித்தமானது. ஜான் கண்ட கனவுகள் பலவற்றை, ஏன் அனைத்தையும் நனவாக்கிக் காட்டியவர். அவர் நனவாக்கிக் காட்டிய முயற்சியின் பலன்கள் நமக்கு நன்றாக தெரிந்தவை. பலரும் அன்றாடம் பயன்படுத்துபவை. ஆனால் அவற்றைப் பற்றித் தெரிந்த அளவு நமக்கு அவரைப் பற்றித் தெரியாது. அவரது வாழ்க்கை, கனவிலும் கற்பனை செய்ய முடியாத திருப்பங்களையும் விசித்திரங்களையும் கொண்டது. நம் வீட்டில் கணிப்பொறி இருப்பதற்குக் காரணமானவர் பில் கேட்ஸ் என்று முடிவுக்கு வர வேண்டாம். பில் கேட்ஸ் நடை பழகிக் கொண்டிருந்த காலத்தில் அவர் ஒலிம்பிக்ஸ் ஒட்டத…
-
- 6 replies
- 2.2k views
-
-
குளித்து விட்டு வந்துநின்ற அஞ்சலியை ‘டச்’ பண்ண மறுப்பு நியூசிலாந்திலிருந்து அழகன் கனகராஜ் kanaga.raj132@gmail.com . வாழைப்பழமுனு சொன்னதுக்கு பிறகுதான் ஞாபகத்துக்கு வருது, நான்கு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு நியூசிலாந்துக்கு வருகை தந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர், ஒக்லான்ட் மிருகக்சாட்சிசாலைக்கும் விஜயம் செய்வதற்கு மறந்துவிடவில்லை. பிரதமருக்கு முன்பாகவே நாங்கள் அங்கு சென்றுவிட்டோம். பிரதமர் தலைமையிலான குழுவினர் ஒரு வாயிலூடாகவும் நாங்கள் மற்றுமொரு வாயிலிலூடாகவும் செல்லவேண்டியதாயிற்று. குறுக்கு வழியில், நாங்கள் அங்கு சென்றுகொண்டிருந்தபோது, நான், ஒரங்குட்டானைக் கண்டேன். ஒரங்குட்டானை கண்டதும், ச…
-
- 6 replies
- 1.2k views
-
-
வெய்யிலைக் கண்டால் தான் வெளியிலே சென்று இதமான காற்றைச் சுவாசிக்க முடிகிறது. கடந்த இரு மாதங்களாகக் குளிருக்குப் பயமில்லாமல் வீட்டை விட்டு எங்காவது போய்வர விருப்பமாயிருந்தது. பாரீஸில் அப்படியும் அடிக்கடி மழை பெய்து கொண்டிருக்கிறது .இது கூட மனசுக்கு இதமான காலநிலையாகவே இருக்கிறது.இப்படியாக வானத்தை அண்ணார்ந்து பார்த்துப் பார்த்து இந்தக் கோடைகால விடுமுறையில் பூங்காக்களைத் தேடிச் சென்று சுத்தமான காற்றை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.எமது சுற்றாடலில் வசிப்பவர்களும் அங்கு வருவார்கள்.அப்போது தான் அயலவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்து கதைக்க நேரம் கிடைத்தது போலிருக்கும். அங்கிருந்து உரையாடிக் கொண்டிருந்த பெண்ணொருவர் தன் மகளுக்குக் கட்டாயம் பருவமடைந்ததற்கான சடங்கைச் செய்ய வேண்டும் என்ற…
-
- 6 replies
- 1.3k views
-
-
கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்… துப்பறியும் ஜாக்கிச்சானின் கண்ணாடி மேசையில் இருந்த ஐபோன் கண் சிமிட்டியது.. கிறீஸ் மனிதன் என்ற பெயர் அதில் மின்னி மறைந்தது.. ஜாக்கிச்சான் சிந்தித்தார்.. தனது சுங்கானை எடுத்து சிகரட் துகள்களை பொத்தி அடைந்துவிட்டு தீ மூட்டி புகையை இழுத்தார்… மனம் புகைக்குள் மறைய அங்கே ஒரு புலி தெரிந்தது.. கண்களை கூர்மையாக்கிப் பார்த்தார்… புலியேதான்.. கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்… அது புலிதான் ஆனால் பழைய தமிழ்நாடு வண்டலூர் செக்ஸ் புலி… பாவம் பரிதாபமாகப் படுத்திருந்தது.. அவசரமாக நூல் நிலையம் வந்து, தமிழ…
-
- 6 replies
- 2k views
-
-
சின்னப்பன்றி: அகரன் அதிசயமாக அன்று காலை இயல் என்னை எழுப்பினாள். நாம் எழும்புவதற்கு கால் மணி நேரம் இருந்தது. கண்கள் அதிசயிக்கும்படி தானாகவே குளித்து, தன்னை அழகு படுத்தி, தனக்கு பிடித்த ‘அனா’ சட்டையை அணிந்திருந்தாள். காதுகள் அதிரும்படி பிரெஞ்சு மொழியில் ‘’Petit cochon réveille-toi’’என்றாள். (சிறிய பன்றி கண்விழி) எனது வாழ்வில் என்னை ‘சின்ன பன்றி’ என்று அழைத்தது, நான்கு வயதை நிறைத்துக் கொண்டிருந்த என் இயல். நான் பதறிப் போனேன். அவள் ‘பெரிய பன்றி’ என்றிருந்தால் பதட்டத்தின் அளவு குறைந்திருக்கும். பொதுவாக தமிழில் பன்றி, எருமை, குரங்கு, நாய் என்று ஊரில் திட்டு வேண்டியதால் அவை ‘கெட்ட’ வார்த்தைகள் என்று என்னிடம் படர்ந்திருந்தது. ஒரு இருட்டு மேகம் போல முகத்தை மாற்றி ‘’ இதை ய…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
கடைசிச் சடலம் யோ.கர்ணன் ஓவியங்கள் : ஸ்யாம் எனக்கு இப்போதும் நன்றாக நினைவில் உள்ளதுஇ ஒரு மரணம் அதன் அர்த்தங்களுடன் என்னுள் பதிந்த நாள்! எனக்கு அப்போது ஆறு வயது. இலங்கை ராணுவத்தின் வாகன ரோந்து அணியினரால் சுடப்பட்டுஇ வீதியில் கிடந்த அம்பி மாமாவை அப்பாவும் இன்னும் சிலருமாக வீட்டுக்குக் கொண்டுவந்தனர். அவரது வயிறு பிளந்து இருந்தது. பெரிய உடம்புக்காரரான அவர்இ ஒரு விலங்கைப்போலத் துடித்துக்கொண்டு இருந்தார். வாகனம் பிடித்து மருத்துவமனைக்குக் கொண்டுபோகும்போது வழியிலேயே இறந்துபோனார். அம்பி மாமாவின் முகம் மங்கலாகவே நினைவில் உள்ளது. எப்போதும் எனக்கு இனிப்பு வாங்கித் தருவதுஇ பிளந்த வயிறுஇ மரண ஓலம்இ அவரில் இருந்து பெருகிய ரத்தம் தவிரஇ வேறு எதுவும் நினைவில் இல்லை. நா…
-
- 6 replies
- 3.2k views
- 1 follower
-
-
Posted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி Posted byBookday04/11/2025No CommentsPosted inStory “சவ்வு மிட்டாய்காரர் (90 கிட்ஸ்)” சிறுகதை – கு.மணி பப்பர …. பப்பர …. பப்பர … ஒலிச் சத்தம் மாணவர்களின் காதுகளை கிழித்தது. சவ்வு மிட்டாய்காரர் தகரத்தால செய்யப்பட்ட நீண்ட புனல் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒலி வாங்கிக்கொண்டு ஊதி கொண்டிருந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் மாணவர்கள் காசிருப்போர் படையெடுத்து வந்தனர் சவ்வு மிட்டாய் வாங்கிட. ராமண்ணாவின் சவ்வு மிட்டாய்க்கு பெரியவர் முதல் சிறியவர் வரை அடிமை. அவரின் ஊதல் சப்தம் கேட்டாலே பலர் அவர் முன் குவிந்திடுவர் காரணம் அவரது சவ்வு மிட்டாய் மட்டுமல்ல. அந்த சவ்வு மிட்டாயை சுற்றி இருக்கும் மூங்கில் மேலே இருக்கும்…
-
-
- 6 replies
- 524 views
-
-
நித்தியகல்யாணியில் தேடி தேடி ஆயும்போது காலை ஆறு மணி இருக்கும். மதிலுக்கு மேலால் வளர்ந்து நிற்கும் மரத்தை ஆட்டுக்கு குலை குத்தும் கம்பியால் எட்டி கொப்பை வளைக்கும் போது யாழ்ப்பாணத்து காலை பனி தலையில் கொட்டும்….. ப்ச்ச்… ஒரு சின்ன ஒலைப்பெட்டியில் மொட்டு தவிர்த்து பூவை புடுங்கி போட்டுக்கொண்டு அப்படியே செம்பரத்தைக்கு தாவுகிறேன். ஒரே மரத்தில் எத்தனை வகை பூக்கள்? அம்மா இந்த செம்பரத்தை “ஒட்டில்” FRCS செய்தவர்! அதில் ஐந்தாறை மடக் மடக்கென்று ஓடித்து போட்டுக்கொண்டு; தோட்டத்தில் நின்ற கனகாம்பரம், ரோசா, கடதாசிப்பூவில் கை வைப்பதில்லை. பேப்பர் பூ எல்லாம் சாமிக்கு வைக்க கூடாதாம். கனகாம்பரம் கலியாண வீடு, சாமத்திய வீடு ஏதும் வந்தால் கொண்டைக்கு வைக்க தேவை. ரோசா விசிட்டர்ஸ் வந்தால் மணிக்கணக்…
-
- 6 replies
- 1.5k views
-
-
அமைதி காக்கும் படை என இலங்கையின் வடகீழ் மாகாணத்துக்கு வந்திருந்த இந்திய இராணுவத்தினர், மேற்கொண்ட அமைதிக்கு மாறான நடவடிக்கையின் ஓரு கட்டமாக, யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருந்த முரசொலி நாளிதழ்களின் அச்சியந்திரங்களை, இரவு நேரத்தில் குண்டு வெடிக்கவைத்துத் தகர்த்துவிட்டுச் சென்றனர். அடுத்த நாள் காலை, வழமைபோல் கடமைக்கு அலுவலகம் சென்று, நடந்ததை அறிந்து அதிர்ச்சியுற்றது, உடைந்து கருகிக்கிடந்த இயந்திர பாகங்களைப பார்த்து பிறகு இருண்ட மனதுடன் வீடு திரும்பினேன். இனி வேலை இல்லை. வருவாய் இல்லை. எங்கே வேலை கேட்டது, யாரைக் கேட்பது? இன்னும் என்ன செய்வான்களே!;.......... கேள்விகளுடன் பேருந்து நிலையம் நாடி நடந்தேன். அடுத்த சில நாளில் இந்த இராணுவத்தின் பிரிவு ஒன்று தென்மராச்சிக்கு வந்து நில…
-
- 6 replies
- 2.1k views
-
-
கூடுகள் சிதைந்தபோது......... ---------------------- கோடை வெயில் அனலாய்க் கொதித்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது விசிறி விட்டுப்போன காற்றில் மட்டும் லேசாய் ஈரப்பதன். வீட்டுக்குள் இருக்க அலுப்பாய் இருக்க இந்தப் பூங்காவில் வந்து அமர்ந்துகொண்டேன். எவ்வளவு நேரம்தான் அந்த நான்கு சுவர்களையும் பார்த்துக்கொண்டிருப்பது.....? கண்தொடும் தூரத்தில் பள்ளிச் சிறுவர்கள் ஊஞ்சலாடிக்கொண்டு இருக்கிறார்கள். சற்றுத் தூரத்தில் இரண்டு இளவட்டங்கள் நெருக்கமாய் அமர்ந்து, கைகளைப் பிணைத்தபடி உலகையே மறந்து இருக்கின்றனர். அந்த மரத்திற்கு கீழ் அமர்ந்திருக்கும் சீனநாட்டுச் சோடி ஒவ்வொருநாளும் இதே நேரத்திற்கு இங்கே வந்து அமர்ந்து விடுகிறார்கள். அந்த வயது முதிர்ந்த ஆப்க…
-
- 6 replies
- 4.1k views
-
-
கருப்பி என்ட உடனே எங்கட கருப்பி என்டு நினைக்க வேண்டாம் இத வேற கடவுளே, இன்னைக்காவது வேலை கிடைக்கணும்...' மனதுக்குள் உருக்கமான வேதனையுடன் அவன் வேண்டுதல்.. அது கடவுளை சென்றடைந்ததா என்று காத்திருந்து பார்ப்பதற்கு அவனுக்கு நேரமில்லை. இடது கையைத் திருப்பி கைக்கடிகாரத்தைப் பார்த்தவன் மேலும் அவசர அவசரமாக .. நடக்கலானான்.. கோயில் வாசல்.. கழற்றிவைத்த பாதணிகளை பெறுவதற்கு அந்தப் பையனை வேறு காணவில்லை.. 'எங்க போனான் இவன்?' என்று யோசித்துக்கொண்டிருந்தவனி
-
- 6 replies
- 1.6k views
-
-
வாழ நினைத்தால் .................. வாழ்கை என்று நினைக்கும் போது எம் முன்னே வா ........என்கிறது ,பின் வாழ் .......என்கிறது அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது .என்ன அழகான தத்துவமுத்துக்கள் . அவனும் வாழ தான் நினைத்தான் . ராகவனுக்கு வயது நாற்பது .வைத்திய சாலைக்கே உரிய அந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான், அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம் என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும். இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்து ,சம்பவதுக்காக் ஒருவனை அனுமதித்து …
-
- 6 replies
- 1.5k views
-
-
டிக் டிக் டிக் ஓயாமால் கேட்டபடி என்ன அது அதனருகே நான்,எத்தனையோ சத்தங்களை முன்பு கேட்டு கொண்டிருந்த பொழுதும் இப்பொழுது இந்த சத்தம் உறுத்தி கொண்டிருந்தது அது ஒரு சுவர் மணிக்கூடு அதனருகே நான் ,,ஏன்... இருக்க வேண்டும்...இருந்தே தீரவேண்டும்..அது ஒரு ஆஸ்பத்திரி வார்ட் ..நேற்று வரை நல்லாத்தான் இருந்தேன்..யார் சொன்னார்கள்...நான் தான் சொல்லுகிறேன்...மற்றவர்களுக்க
-
- 6 replies
- 1.6k views
-
-
ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான். அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான். உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று? அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான். குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.? அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும் குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்? அந்த மனிதர்மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா. குருடன்:ஐயா…
-
- 6 replies
- 2.5k views
-
-
மோகினிப்பேய் இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில் யுனிவர்சிட்டிப் படிப்பை முடித்து,கொழும்பில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கமர்ந்து கொஞ்சநாட்களில், கல்லூரி நாட்களிலும் யுனிவர்சிட்டி நாட்களிலும் இருந்து சுதந்திரமோ,நேரமோ இனிவருவது அருமை என்று அவனுக்குத் தெரிந்தது. இனி அப்படியான சுதந்திரமும் தான் நினைத்ததைச் செய்ய நேரமும் கிடைப்பதென்றால் அவனடைய உழைப்பு வருமானம் போன்றவற்றையும் யோசிக்க வேண்டும் என்பது யதார்த்தத்தின் வெளிப்படை என உணர்ந்தான். பணத்தைப்பற்றிக் கவலைப்படாமல் கொஞ்சநாட்கள் தான் நினைத்தததைச் செய்யலாம் என்ற அவனுடைய அந்…
-
- 6 replies
- 3k views
-