கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
புலத்தில் மட்டும் அகதியாக இடம் பெயர்ந்து அதன் வலியை உணர்ந்த நான் , என் தாய் மண்ணில் அகதியாக இடம்பெயர்ந்த வலியை உணரத்தவறி விட்டேன் .அவை எனக்கு வெறும் செவிவழிச்செய்திகளே . நெருடியநெருஞ்சியில் , எனது பால்ய சினேகிதி பாமினி மூலம் இடப்பெயர்வின் வலியைத் தொடமுயற்சித்தாலும், அதுவும் எனக்கு ஓர் அனுபவப் பகிர்வில் வந்த வலியே . அண்மையில் என்னை மிகவும் பாதித்த ஓர் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன்.................................... அந்த நாட்களை எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது. என் பாட்டியின் வீட்டிற்கு எப்போதாவது பின்னேரங்களில் சென்று வருவேன்.அப்படித்தான் அந்த 1995 ஐப்பசி மாதம் 30 ஆம் திகதியும் கொழும்புத்துறையில் இருக்கும் பாட்டியைச் சந்தித்து வரச் சென்றேன்.ஆமி முன்னேறி வருவதாகச் ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
அவள் மரத்தடியில் நூல் நூற்றுக் கொண்டிருந்தாள்.. கைகள் தறியில் லயித்திருந்தாலும், மனம் முழுதும் மாறனே வியாபித்திருந்தான். உள்ளத்தில் அவன் நினைப்பு வர உதட்டில் புன்னகை அரும்பியது! பால்யவயதுத் தோழன் தான், எனினும் பருவ வயது வந்தவுடன் தான் அந்த மாற்றம் புரிந்தது! அவனைப் பார்த்ததும் எங்கிருந்தோ அவளுக்கு வெட்கம் வந்துவிடும், சொற்கள் இடம்மாறும்! கால்கள் தடுமாறும்!! பக்கத்து வீட்டு வள்ளி சொல்லித்தான் தெரிந்தது இது "அது" தான் என்று... கிட்டத்தட்ட 10 வருடங்கள்... 10 இன்பமயமான வருடங்கள்... அவனுக்காக காத்திருப்பதிலும், கதை பேசுவதிலும் அத்தனை இன்பம் அவளுக்கு...! இடையிடையே கைபிடிப்புகள், கட்டியணைப்புகளும் இடம்பெறத் தவறுவதில்லை. அரசகுமாரி அவள்.. அரண்மனை தோட்ட…
-
- 4 replies
- 1.7k views
-
-
"வருத்தமில்லா வாலிபர் சங்கம்" - இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏதோ உருப்படாதவர்களின் சங்கம் என்று முகம் சுளிக்கும் வயோதிகர்கள் நிறைந்த உலகம் இது. வருத்தப்பட்டு என்ன ஆவப்போகுது என்று முடிவு கட்டி சங்கம் அமைப்பது ஒரு பெரிய குற்றமா என்ன? "வருத்தப்பட்ட வயோதிகர் சங்கம்" இதுவரை நமது சங்கத்தை விட பெரியதாக என்னத்தை சாதித்தது என்று சவால் விட்டு என் அட்லஸ் வாலிபர் மாதத்தை ஆரம்பிக்கிறேன். என்னையும் ஒரு வாலிபனாக மதித்து 2007 ஆண்டின் முதல் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி! வால் முளைத்ததால் தான் "வாலி" என்று இராமாயண வாலிக்கு ஒரு பெயர் வந்ததோ என்று சில சமயம் நினைப்பேன். வால் இல்லாவிட்டாலும் வாலிக்கான குணநலன்கள் கைவரப்பெற்றவர்கள் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ நம்மை "வாலி"பர்கள…
-
- 4 replies
- 2.1k views
-
-
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது. அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும். இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம். அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர். நாளடைவில் அந்தத் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார். ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான். தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை. எனினும…
-
- 4 replies
- 1.1k views
-
-
இவனுக்குப் பகல் இரவு எனப்பாராது கண்ணைச் சுழட்டிக்கொண்டு வந்தது. மூன்று நாளாக ஒழுங்கான நித்திரையில்லை. நித்திரை மட்டுமில்லை. ஒழுங்கான குளிப்பு முழுக்கு கக்கூசு என்று ஒன்றுமில்லை. ரவியண்ணை வீட்டு விறாந்தையில் கிழங்கு அடுக்கின மாதிரி படுக்கிற இருபது இருகைத்தந்து பேர்களில் போன இரண்டு இரவும் இவன் தன்னையும் அடுக்கியிருந்தான். இந்தப்பக்கம் ஐயாத்துரை மாஸ்ரரும் அந்தப்பக்கம் தீபனும் இவணைக் கண்ணயரவே விடுவதில்லை என்று பிளான் பண்ணியிருந்தார்கள். க்ர்.. புர்.. என்ற அவர்களின் குறட்டைக்கு கவிண்டு படுப்பதும் காதுகளைப்பொத்திப்படுப்பதும் என்று இவனும் உள்ளநாட்டு ட்ரிக்சுகளைப் பாவித்துப்பார்த்தான். தீபன் அப்பப்ப தன் காலைத்தூக்கி இவனின் தொடைக்குமேல போட்டு அவ்..உவ்.. என்று புரியாத ஏதோ மொழியில் …
-
- 4 replies
- 1.4k views
-
-
மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா. அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம
-
- 4 replies
- 1.8k views
-
-
அட்வைஸ் நாத்தனார் சித்ரா தனது புருஷனிடம் காரணமில்லாமல் கோபித்துக்கொண்டு, அடிக்கடி அண்ணன் வீட்டுக்கு வந்து மாதக்கணக்கில் தங்குவது, அண்ணி அம்பிகாவிற்கு எரிச்சலைத் தந்தது.நாத்தனாரிடம் நேரடியாகச் சொல்ல முடியாமல் அம்பிகா கையைப் பிசைந்துகொண்டிருந்தபோது, வேலைக்காரி வேலம்மா வந்தாள். ‘‘அட, இவ்ளோதானா? நான் பார்த்துக்கறேன்!’’ என்றவள் சித்ராவிடம் என்ன சொன்னாளோ தெரியவில்லை... அடுத்த அரை மணி நேரத்தில் சித்ரா புகுந்த வீட்டுக்குப் புயலாகப் புறப்பட்டாள். அம்பிகாவிற்கு ஆச்சரியம். ‘‘வேலம்மா, சித்ராகிட்ட அப்படி என்ன சொன்னே?’’‘‘ ‘இப்படி புருஷனை விட்டு அடிக்கடி இங்கே வந்து மாசக்கணக்கா இருக்கிறியே, பொண்டாட்டி இல்லாத குறைக்கு, உன் புருஷன் அங்கே வேற யாரையாவது தேடிக்கிட்டா நீ என்ன பண…
-
- 4 replies
- 2k views
-
-
[size=3][/size] [size=5]றஞ்சியின் கதையைச் சொல்ல வேணும். அதன்மூலம் அவருடைய நிலைமையை, அவர் சந்திக்கின்ற பாடுகளையெல்லாம் நாலு பேருக்கு அறியப்படுத்தலாம். அப்படிச் செய்யும்போது இதையெல்லாம் அறிகின்றவர்களிடமிருந்து பிறக்கின்ற கருணையினால், அன்பினால், இரக்கத்தினால் அவருக்கு ஆதரவும் உதவியும் கிட்டக்கூடும் என்று நீண்ட நாட்களாக யோசித்திருந்தேன். ஆனால், அந்தக் கதையை எழுதும்போது அது சிலவேளை றஞ்சிக்குச் சங்கடங்களைக் கொடுக்கக் கூடும் என்பதால் தயக்கத்தோடு அதைத் தவிர்த்தேன். ஒரு காலத்தில் யாரிலும் தங்கியிருக்காமல், யாரையும் எதிர்பார்த்திருக்காமல் வாழ்ந்த நிலை மாறி, இப்ப பிறரை எதிர்பார்த்து, பிறரில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டு, அதுவும் இப்படி பலருக்கும் தெரியக்கூடிய பகிரங…
-
- 4 replies
- 1.2k views
-
-
உங்களுக்குக் கேட்டதா? கார்த்திக் பாலசுப்பிரமணியன் என்னிடமிருந்து அப்படியொரு கேள்வியை அந்தப் பெரியவர் எதிர்பார்க்கவில்லை போலும். பார்வையால் மேலிருந்து கீழாக என்னை அளந்தவாறே, “என்ன?” என்றார். மீண்டும் ஒரு முறை அவரிடம் அழுத்திக் கேட்டேன். “அதாங்க டி.வி, ஜன்னல் இல்லாத ஒரு ரூம் வேணும். மூணு நாளைக்கு. இருக்குதா? ” என்றேன். வழுக்கைத் தலை. ஒடிசலான தேகம். நெற்றியை நிறைத்த பட்டை. அவரைப் பார்த்தால் அந்த லாட்ஜில் வேலை செய்பவர் போன்றுதான் தெரிந்தது. “கொஞ்சம் இருங்க.. பாத்துதான் சொல்லணும்” என்று சொல்லிவிட்டு அருகிலிருந்த ஒரு நீளமான நோட்டுப் புத்தகத்தை எடுத்துப் பார்க்கத் தொடங்கினார். அந்த நோட்டைப் பார்த்ததை விட என்னை நோட்டம் விட்டதுதான் அதிகம். ” ஐயா.. நீங்க பயப்படுற மாதிரி…
-
- 4 replies
- 1.1k views
-
-
இல் அறம் வீட்டில் அவன் கூட அவளும் இருந்தாள். மனைவி. என்றாலும் அவன் ஏனோ தன்னைத் தனியனாகவே உணர நேர்ந்தது. அவளை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை அவளும் உணர்ந்தாள். இதற்கு என்ன செய்ய தெரியவில்லை. அவளால் என்ன செய்ய முடியும்? அவள் அருகில் வந்தாலே அவனிடம் ஓர் விறைப்பு வந்தாப் போலிருந்தது. கனிவு அல்ல இறுக்கம் அது. ஒரு பெண்ணை இத்தனை கிட்டத்தில் ஒருவனால் வெறுக்க முடியுமா, ஒதுக்கி அலட்சியப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. முதலில் ஆச்சர்யமும் பிறகு அதிர்ச்சியும் அவளுக்கு ஏற்பட்டன. அழுகை வரவில்லை. அவளுக்கு அழவே வராது. துக்கிரி என்றும் பீடை என்றும் ப…
-
- 4 replies
- 2.5k views
-
-
மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை. திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது. முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், உன்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எ…
-
- 4 replies
- 898 views
-
-
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலை வெட்டி வீழ்த்தி தோளின்மீது போட்டுக்கொண்டு மயானம் நோக்கி செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம் எள்ளி நகைத்துப் பேசத்தொடங்கியது: "மன்னா! பேய்களும் உறங்கும் இந்த நள்ளிரவில் இந்த சுதந்திர தமிழீழத்தின் சுடுகாட்டில் இவ்வளவு சிரமப்படும் நீ இதனால் அடையப்போவதுதான் என்ன? அதோ,புலிக்கொடி பட்டொளி வீசிப்பறக்கும் நகரத்தின் சௌந்தர்யங்களை அனுபவிக்காமல் ஏன் இப்படி உன்னை நீயே வருத்திக்கொள்ளுகிறாய்? கடின முயற்சி உடையவர்கள், சில சமயம் நல்லதே நினைத்து செய்யும் செயல்களும் அவர்களறியாமல் எதிர்மறையான பலனை கொடுத்து முயற்சியில் பெரும் பின்னடைவை உண்டாக்கிவிடும். இந்த சுதந்திர தேசத்தின் நீண்ட நெடிய…
-
- 4 replies
- 3.1k views
-
-
ஜல்லிக்கட்டு... (1)... எழுத்தாளர் லதா சரவணன் வழங்கும் பொங்கல் சிறப்பு மினி தொடர் கதை.. ஜல்லிக்கட்டு. 10 மணிக்கே ரோடு வெறிச்சோடிப் போயிருந்தது, ராக்காயியின் இட்லிக் கடையில் மட்டும் கொஞ்சம் கூட்டம் சொச்சமிருந்தது. தூங்காநகரம் என்று பெயர் பெற்ற மதுரையின் தெருக்களில் வண்டிகள் தங்கள் டயர்களை செலுத்தி ஒவ்வொரு வீட்டு வாயிலில் போட்ட கோலத்திற்குள் பாகப்பிரிவினையை ஏற்படுத்தியிருந்தது. பிள்ளைகள் ரோட்டில் ரெயில் வண்டி விட்டு விளையாடிக் கொண்டு இருந்தார்கள். தெருமுனையில் இளைஞர் சங்கத்தில் தனுஷ் கொலைவெறிப்பாடலை ரேடியோவில் பாடிக்கொண்டு இருந்தார். ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லை பூச்சாண்டிகிட்டே பிடிச்சிக்கொடுத்திடவா என்று குழந்தையிடம் போரா…
-
- 4 replies
- 1.9k views
-
-
ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும்: மாக்சிம் கார்க்கி: மொழிபெயர்ப்பு: சுரா மூலம்: லேகா புத்தகங்கள் http://www.lekhabooks.com/short-stories/322-oru-ilam-pennum-irupattharu-aangalum.html நாங்கள் இருபத்தாறு ஆண்கள். ஒரு இருட்டு நிறைந்த அறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு காலை முதல் இரவு வரை கோதுமை மாவைக் கொண்டு பிஸ்கட்டுகள் தயாரிப்பதுதான் வேலை. செங்கற்களால் ஆன, அழுக்கும் பாசியும் பிடித்த சுவரிலிருக்கும் துவாரங்கள் தான் அந்த அறையின் சாளரங்கள். வெளியே நோக்கியிருக்கும் சாளரத்தின் பலகைகள் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அதன் வழியாகச் சூரிய ஒளி உள்ளே வரமுடியாமல் இருந்தது. சாளரத்தின் பலகைகளுக்கு மேலே பிசையப்பட்ட மாவு ஒட்டியிருந்தது. …
-
- 4 replies
- 34.2k views
-
-
மொழிபெயர்ப்பாளர் ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. பள்ளியில் படிக்கும் போதே மலையாளத்திலிருந்து சிறுகதைகளை தமிழில் மொழியாக்கம் செய்யத் துவங்கியவர். தற்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். அசோகன் செருவிலின் இச் சிறுகதையை அற்புதமாக மொழிபெயர்த்துள்ளார். அவருக்கு எனது மனம் நிரம்பிய பாராட்டுகள். உத்ரா, ஜெயஸ்ரீ, சுகானா என ஒரு குடும்பமே இலக்கியத்திற்காகத் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு தீவிரமாக மொழிபெயர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருவது மிகுந்த பாராட்டிற்குரியது. இதற்குக் காரணமாக உள்ள நண்பர் பவா. செல்லதுரைக்கும் ஷைலஜாவிற்கும் அன்பும் வாழ்த்துகளும் இரண்டு புத்தகங்கள் மலையாள மூலம் : அசோகன் செருவில் தமிழில் : சுகானா மறுநாள் இரவு தான் கொ…
-
- 4 replies
- 2.8k views
-
-
திருந்தா உள்ளங்கள் எம் தொப்புள் கொடி உறவுளகின் அவலங்களை இந்த சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் எம்மவர்களின் உரிமைப் போராட்ட நிகழ்வு ஒன்று ஆர்த்தி வாழும்நாட்டிலும் முன்னெடுக்கப் பட்டிருந்த செய்தியை அவள் அறிந்து அதில் தன்னையும் முழு ழூச்சாக அர்ப்பணித்தவள் மற்ரவர்களையும் அதில் பங்கு கொள்ள வைக்க வேண்டும் என்பற்காகவும் பல இன்னல்கள் மத்தியில் தன் பள்ளிப் படிப்பையும் கவனிக்காது அயராத பணியை செய்ய தொடங்கினாள். இதனால் வீட்டிற்கு வரும் நேரம் தாமதமாகவே அவள் அம்மா அவளை பார்த்து உனக்கு சோதினை வருகுது சும்மா ஊர் உத்தியோகத்தில திரியுறாய் நாளைக்கு உதே உனக்கு சோறு போட போகுது.... சும்மா விட்டிட்டு உன்ர அலுவலை பார் என திட்டினாள். அவளுக்கு அம்மாவின் வார்த்தைகள் நெஞ்சில் …
-
- 4 replies
- 1.7k views
-
-
பூசாரி தாத்தாவின் வீடு பனையோலைகளால் வேயப்பட்டது. அந்த வீடு கொடுத்த சில்லிப்பை எந்த ஏசியாலும் கொடுக்கவே முடியாது. வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மண்தரையை சாணத்தால் மொழுகுவார் பூசாரி பாட்டி. அவர்கள் வீட்டுக்கு சென்றாலே சாணமணம் அடிக்கும். வீட்டுக்கு முன்பாக ஆலமர விஸ்தீரணத்தில் மிகப்பெரிய வேப்பமரம் ஒன்றிருக்கும். எங்கள் தெருவாசிகளின் வேடந்தாங்கல் அது. அம்மரத்தில் பொன்னியம்மன் இறங்கியிருப்பதாக பூசாரி தாத்தா சொல்வார். இரவு வேளைகளில் உச்சா போவதற்காக அப்பாவை துணைக்கழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வரும்போது, இருளில் அந்த மரம் மினுக் மினுக் என ஒளிருவதை கண்டிருக்கிறேன். மின்மினிப் பூச்சிகள் அதற்கு காரணமாய் இருந்திருக்கலாம். மரத்தின் பிரம்மாண்டமும் ஒரு மாதிரியான அடர்த்தி தோற்…
-
- 4 replies
- 3.8k views
-
-
மகத்தான ஞானி ஒருவர் தான் இறக்கும் தருவாயில், தனது சீடனை அழைத்தார். “ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். உனது வாழ்க்கையில் பூனையை மட்டும் அனுமதிக்க வேண்டாம்” என்று கூறிவிட்டு மரணத்தைத் தழுவினார். குருவின் கடைசி வார்த்தைகளை ஒரு பெரிய கூட்டமே கேட்டுக்கொண்டிருந்தது. சீடனுக்கோ யோசனையாக இருந்தது. “ நான் ஏன் என் வாழ்க்கையில் ஒரு பூனையை நுழையவிட வேண்டும்? இதுதான் எனது குருவின் ஒட்டுமொத்த கோட்பாடா?” என்று சந்தேகம் எழுந்தது. அவனோ வயதில் இளையவன். அப்போதுதான் இன்னொரு சீடர் உதவிக்கு வந்தார். அவரோ வயதில் முதிர்ந்தவர். அவர் முதுமையை அடைந்துவிட்ட காரணத்தாலேயே அவருக்கு ஆசிரமத்தின் தலைமைப் பதவி தரப்படவில்லை. அவர் இளைய சீடனிடம் கூறினார். “ குரு சொன்னது தொடர்பாக உனக்கு எதுவும் …
-
- 4 replies
- 1.3k views
-
-
கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை 1984 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை …
-
- 4 replies
- 1.5k views
- 1 follower
-
-
http://www.saatharanan.com/nostalagic-mem/ டிஸ்கி: வலையுலகப் பதிவர்களே, வாசகர்களே!! இத்தொடரில், நான் உங்களோடு ஈழத்தமிழும் கலந்து உரையாட வருகின்றேன். ஆரம்பத்தில் இத்தொடரை முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமிருந்தாலும், வலையுலக வாசகர்களின் புரிதலை முதன்மைப்படுத்தி சாதாரண தமிழினிடையே யாழ்ப்பாணத் தமிழ் கலந்து எழுதுவதாக இருக்கின்றேன். எனினும் மிகவும் பொருத்தமான பிரதிகளை முழுக்க, முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமும் உண்டு. இனி, யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கேளுங்கோவன்!!! அதென்ன மிச்சச்சொச்சம் எண்டு கேட்காமால் விடுவியளே? இவன் ஏதேனும் சொல்லுறதெண்டால் இப்படிச் சுத்தி வளைச்சுக் கொண்டு, எங்களைச் சாட்டித்தான் வண்டில் விடுவான் போலை கிடக்கு. என்னவோ விட்ற வண்டில…
-
- 4 replies
- 728 views
-
-
ஸ்பெயின் - 01 இளங்கோ-டிசே ஐரோப்பாவில் மூன்று நாடுகளுக்குக் கட்டாயம் போகவேண்டும் என்ற ஒரு கனவு எனக்குள் எப்போதும் இருந்துகொண்டிருந்தது. பிரான்ஸும், இத்தாலியும், ஸ்பெயினும் என்னை எப்போதும், அவற்றின் கலை இலக்கியங்களினூடு ஈர்த்துக்கொண்டிருக்கின்ற நாடுகள். கூடுதலாக போர்த்துக்கல்லையும் சேர்க்கலாம். சென்ற வருடம் இத்தாலியையும், அதற்கு முதல்வருடம் பிரான்ஸையும் பார்த்திருந்தேன். இந்த வருடம் ஸ்பெயினுக்கானது. La Sagarida Familla (Spain) ஸ்பெயினை அடையாளப்படுத்தும் முக்கியமான ஒரு கட்டடக்கலையாக La Sagarida Familla இருக்கின்றது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால் 1880களில் கட்டத் தொடங்கிய இந்தத் தேவாலயமானது இன்னமும் நிறைவு செய்யப்படாது இப்போதும் கட்டப்பட்டு…
-
- 4 replies
- 1k views
-
-
வரகு மான்மியம் ஆசி கந்தராஜா 1 கோயில் குருக்கள் தொலைபேசியில் தொடர்புகொண்டதாக மனைவி சொன்னாள். கோயில் கும்பாபிஷேகத்துக்கு வரகு வேணுமாம்! 'வரகுக்கு, இங்கிலிசிலை என்ன பெயரெண்டும் ஐயர் கேட்டவர்..., கோயில் விஷயமப்பா..., சாட்டுச் சொல்லித் தப்பாமல் எடுத்துக் குடுங்கோ...' மனைவியின் குரலில் கட்டளையின் தொனி இருந்தது. கோயில் குத்தம், குடும்பத்துக்கு கேடு வரும் என்ற பயம் அவளுக்கு. விவசாயப் பேராசிரியரான ஒருவர், வரகு எங்கே கிடைக்கும்...? என்ற தகவல் உட்பட, விவசாயம் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் சகலகலா வல்லவனாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு, அவுஸ்திரேலியாவிலே கோயில் மணியோசை எழுப்பும் குருக்களுக்கு! கோயில் கோபுரத்தின் உச்சியிலே, அதன் உயரத்துக்கும் அகலத்துக்கும் ஏற்றவ…
-
- 4 replies
- 1.7k views
-
-
பொதுச்சுடர் - தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன். …
-
- 4 replies
- 1.2k views
-
-
நீர்த்திரையால் இழுப்புண்ட குச்சி ஒன்று கணமும் நில்லாது மேல் எழுந்து கீழ் விழுந்து அலைந்து சீர்க்கரையில் எற்றுண்டு கிடந்த செயல் நோக்கின் சிந்திக்கின் மானிடர்தம் வாழ்க்கை இது என்றேன்! -கங்கையில் விடுத்த ஓலை வணக்கம், இது மனித வாழ்க்கையிண்ட மறுபகுதி. பலர் சிந்திக்க விரும்பாத, அறிஞ்சுகொள்ள விரும்பாத பகுதி. மரணத்தின் பின்னர் இடுகாட்டுக்கு போவதுவரை என்ன நடக்கிது எண்டு கீழ் உள்ள விபரணச்சித்திரம் சொல்லிது. ஏழு பகுதிகள் இதில இருக்கிது. மொத்தமாக சுமார் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் நீளமான கதை இது. நேரம் கிடைக்கும்போது இவற்றை முழுமையாக பார்ப்பது எங்கட குடும்பங்களில, உறவினர்கள், நண்பர்களிற்கு... அகாலமான காலம் வரும்போது அதை தாங்கிக்கொள்ள, சரியான முறையில செயற்பட்டு இறுதிக்க…
-
- 4 replies
- 2.4k views
-
-
சுறு சுறுப்பான காலைப்பொழுதில் வீதியோரத்தில் இருந்த ஒரு மிகப்பெரிய கட்டிடத்தின் பக்கத்தில் அந்த மனிதன் நின்றிருந்தான் அவன் பக்கத்தில் வெள்ளைத்தடியும், நிமிர்த்தி வைத்த தொப்பியில் சில நாணயமும்,சில தாள் காசும் இருந்தது அத்துடன் ஓர் அறிவிப்பும் இருந்தது,அதில் நான் குருடன் தயவு செய்து உதவுங்கள் என்றிருந்தது.விரைந்து செல்லும் மக்கள் அவனை கவனியாது சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஓர் இரக்க சிந்தனையுள்ள ஒரு மனிதன் நின்று அந்த அறிவிப்பை வாசித்து விட்டு தொப்பியினுள் தாள் காசு சிலவற்றைப்போட்டு விட்டு கண்தெரியாத மனிதனிடம் எந்த அனுமதியும் பெறாமல் அந்த அறிவிப்பை மாற்றி எழுதிவிட்டு சென்றுவிட்டான். நண்பகல் உணவு இடைவேளையில் வந்த இரக்க சிந்தனையுள்ள மனிதன் கண்டதெல்லாம் தோப்பி நிறைய தாள…
-
- 4 replies
- 4k views
-