கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஏவல் - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: ஸ்யாம் ‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில் குடியிருந்த பாலத்தடி மாடன் எழுந்து, ஏவல் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். அவருக்கு…
-
- 0 replies
- 1.8k views
-
-
லண்டன்அகதி இளைய அப்துல்லாஹ் லண்டனில் எறிக்கும் வெயில்தான் வெள்ளைக்காரருக்கு பிடிக்கும். ஆனால் எனக்கு குளிர்தான் பிடிக்கும். காரணம் பல. பகலில் அந்த வெக்கையில் கட்டிலில் படுக்க முடியாது வியர்த்து ஒழுகும். இரவில் யன்னலைத் திறந்தாலும் அவியும். கட்டில் சூடு கிளைமேட் எல்லாம் சேர்ந்து வேகும் நித்திரை வராது. சிலர் வேர்வை ஒழுக ஒழுக படுப்பார்கள். என்னால் முடியாது. இப்பொழுது குளிர்காலம். எல்லோரும் குளிர் உடுப்புக்கு மாறி விட்டார்கள். ஹவுன்ஸ்லோவில் இருந்து எமது வீட்டுக்கு போகும் பாதைக்கு செல்ல கொஞ்சம் வேகமாக நடந்தால் பத்து நிமிடம் நடக்க வேண்டும். நடந்து தான் போகிறேன். குளிர் முகத்தில் அறைகிறது. மழை தூறப்போகிறது. வெள்ளைக்காரர் சொல்லுவினம் வைபையும் வெதரையும் நம்ப முடியாது எண்டு. …
-
- 5 replies
- 1.8k views
-
-
கீறோகொண்டாவின் TVS விக்டர் புதுசாக யாழ்ப்பாணத்தில அறிமுகமான நேரம்... தெரிஞ்ச பெடியன் ஒருத்தன் ஊருக்குள் முதன்முதல் புதிசாக இறக்கி இருந்தான்....அது எழுப்பிய இரைச்சல் அழகிய ஒரு ரியூனிங்காக இருந்தது வாசிகசாலையில் குந்தியிருந்த எனதும் நண்பனதும் காதுகளுக்கு...அப்பொழுது ஆளையால் பார்த்தபார்வைகளிலேயே முடிவெடுத்தோம்..வாசிகசாலை டியூட்டி முடித்து அவரவர் வீடுகளுக்கு நுழைந்ததும் அர்ச்சனையை ஆரம்பித்திருந்தோம்...அடித்து அடித்து அம்மியையும் நகர்த்தலாம் என்பது உண்மையோ இல்லையோ நச்சரித்து நச்சரித்து வீட்டுக்காறரின் மனதை மாற்றலாம் என்பது எங்கள் இருவரதும் வாழ்வில் பலவிடயங்களில் நிரூபணமாகி இருக்கிறது...அதிலொன்றுதான் இந்த கீறோ கொண்டா சீன்... வாசிகசாலையில் இருந்து ஆளையாள் பார்த்த கணத்தில் எடு…
-
- 15 replies
- 1.8k views
-
-
பாதை - சிறுகதை கவிதைக்காரன் இளங்கோ - ஓவியங்கள்: ஸ்யாம் திங்கட்கிழமை காலை நேரப் பரபரப்பைத் தவிர்க்க திட்டமெல்லாம் போட்டு ஒவ்வொரு வாரமும் தோற்றுதான்போகிறாள் ரம்யா. ஞாயிற்றுக்கிழமைகளின் அசமந்தக் காலையிலேயே அதை முடிவுசெய்வாள். ஆனாலும் முடிவதில்லை. ரயில்வே டிக்கெட் கவுன்ட்டரில் டிரெயின் நீளத்துக்கு ஒரு க்யூ நிற்கிறது. சனிக்கிழமையே மாதாந்திர பாஸை ரெனியூவல் செய்திருக்க வேண்டும். விட்டாச்சு. தாம்பரம் போகும் டிரெயின், மூன்றாவது நடைமேடையிலிருந்து கிளம்பக் காத்திருக்கிறது. ஏற்கெனவே லேடீஸ் ஸ்பெஷலைத் தவற விட்டுவிட்டாள். இது சூப்பர் ஃபாஸ்ட். `சட்டென மாம்பலம் ஸ்டேஷன் போய்விடலாம்’ என, மனக்கணக்கு வேகமாக ஓடியது. …
-
- 0 replies
- 1.8k views
-
-
அப்பலேர்ந்து அந்தக் கயவாணிப் பயபுள்ள ஒரு மாதிரியா என்னய உத்து உத்துப் பாக்குறான். மூஞ்சி முச்சூடும் தழும்ப வைச்சுக்கிட்டு சண்டைக்கோழி ராஜ்கிரண் ஸ்டைலுல ஒரு லுக்கு. எதோ அவம் பொண்டாட்டி தாலிய நான் அறுத்தா மாரி ரவுசு காட்றான். எங் காலக்கொடுமை அவனயும் என்னயும் ஒரே றூம்புக்குள்ளாறதான் போட்டு அடைச்சிருக்கு. நா ரீஜண்டான ஆளுதான். இந்த ஈ.சீ.ஆர். றோட்டாண்ட ஒரு பில்டிங் கட்றாங்க இல்ல… அங்ஙன காட்டுவெயாரோ சாப்டுவெயாரோ என்னா கசுமாலமோ… அங்ஙனதா நமக்கு வேல. வேலன்னா இன்னா சும்மாவா… ஒரு நாளிக்கு எத்னை கல்லு தூக்கணும் தெர்யுமா… கல்லுத் தூக்கித் தூக்கியே ஒடம்பு கல்லு மாரி ஆய்ப் போய்ச்சு. எம் பொண்டாட்டி தேவியும் அங்ஙனதாம் வேலை பாக்குறா. என்னய மாரி நல்ல கலர்ரா ரெண்டு பசங்க. கறுப்புத்தா நைன…
-
- 7 replies
- 1.8k views
-
-
அவர் பூபாலசிங்கம் உதயகுமார். அவரது மனைவி ப்ரியா உதயகுமார். ‘தாய்’ எனும் கிரீடத்துக்கு உரிமை கொண்டாட அவருக்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே இருந்தன. உதயகுமாரின் சாயலையொத்த அழகிய பிஞ்சுக் குழந்தையொன்றை உதயகுமாருக்குப் பரிசளிக்க அவர் கனவு கண்டார். அக் குழந்தையினதும் ப்ரியாவினதும் எதிர்காலத்தை சிறப்பாக்குவதே உதயகுமாரின் இலட்சியமாக இருந்தது. அதற்காக அவர்கள் நிறைய கனவுகள் கண்டார்கள். அவர்களது அழகிய அக் கனவுகள் மேல் ஷெல் மழை பொழிகையில் அவர்கள் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தப்பியோட வேண்டியிருந்தது. எனினும், தமது பாதுகாப்புக்காகத் தப்பியோடுவதைக் கூட அவர்களால் செய்ய முடியாதிருந்தது. ஏனெனில், விடுதலைப் புலிகளால் பொதுமக்கள் அந் நேரம் மனிதக் கேடயங்களாக ஆக்கப்பட்டிருந்தனர்.…
-
- 3 replies
- 1.8k views
-
-
ஆமை - ஜெயமோகன் Turtle’s back background texture abstract pattern nature. நாங்கள் சென்றபோது நாகப்பன் முதலாளி வீட்டிலேயே இருந்தார். மிகப்பெரிய கேட்டுக்கு உள்ளே பிஎம்டபிள்யூ கார் நின்றிருந்தது. எட்டிப்பார்த்துவிட்டு ராஜேந்திரன் “கார் நிக்குது” என்றான். கேபினில் இருந்து வாட்ச்மேன் எட்டிப்பார்த்து “ஆரு? என்ன?” என்றான். “நாங்க பனை சொசைட்டியிலே இருந்து வாறம்… பனைப்பாதுகாப்புச் சங்கம். முதலாளியை பாக்கணும்” என்றான் ராஜேந்திரன். “டொனேசனுக்குன்னா ஆரையும் உள்ள விடக்கூடாதுன்னாக்கும் அறிவிப்பு” என்று வாட்ச்மேன் சொன்னான். “இல்ல, இது டொனேசன் இல்லை. வேற விசயம்…” என்று ராஜேந்திரன் சொன்னான். “முதலாளிக்க சொத்து ஒண்ணு இருக்கு… பனைவிளை. அது சம்பந்தமான பேச்ச…
-
- 6 replies
- 1.8k views
-
-
சரோஜா அம்மா அன்று விடிந்ததிலிருந்து பரபரத்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவரின் பரபரப்பை பார்த்த அவர் கணவர் சரோஜா அம்மாவை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் விதமாக „இங்க பாரு இப்படி ஓடி ஓடி எல்லாவற்றையும் தயார் படுத்திக்கொண்டு உம்முடைய உடம்பை கெடுக்க வேண்டாம் . நீ இப்படி எல்லாம் ஆர்ப்பரிக்கிறதுக்கு உன்னுடைய மருமகன் இன்று வருவானோ, என்னவோ தெரியாது . அவனுக்கு தானே எங்களை அவ்வளவாக பிடிப்பது இல்லை. ஆகவே இந்த ஆர்பாட்டங்களை விட்டு விட்டு எனக்கும் உனக்கும் கோப்பி போட்டுகொண்டு வந்து இந்த கதிரையில கொஞ்சம் அமரும்“ . சிறு கண்டிப்புடனும், கரிசனையுடனும் குமரேசன் கூறினார் . அதற்கு „என்னங்க சொல்றீங்க ? இன்றைக்கு உங்களுக்கு 80வது வயது பிறந்த நாள் . மகள் ரதி கட்…
-
- 5 replies
- 1.8k views
-
-
மூமின் - ஷோபாசக்தி இன்று அதிகாலையில், முஹமெட் அஸ்லம் வீட்டிலிருந்து புறப்பட்டபோது, அவனது பெயர் நாகநாதன் முருகவேள் துலீப் என்றுதான் இருந்தது. ஒரு மணிநேரத்துக்கு முன்புதான் அவன் பெயரை மாற்றியிருந்தான். பள்ளிவாசலிலிருந்து அவன் வெளியே வந்தபோது, பள்ளிவாசலுக்கு எதிரே நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருக்கும் காவல்துறையினரின் இரண்டு வாகனங்களுக்குள்ளும், பொலிஸ்காரர்கள் கைகளில் நவீனரகத் துப்பாக்கிகளுடன் அமர்ந்திருந்தார்கள். அந்த சிறிய பள்ளிவாசல், பாரிஸின் புறநகரான ‘லு ரன்ஸி’யில் சற்று ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்திருந்தது. பள்ளிவாசலைச் சுற்றி அரைக் கிலோ மீட்டருக்கு வெறும் புற்தரைதான். பள்ளிவாசலை குடியிருப்போடு இணைக்கும் சிறு தெருவில் அஸ்லம் நடந்துகொண்டிருந்தபோது, நீண்ட அங்கிக…
-
- 5 replies
- 1.8k views
-
-
சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து ...... மாலை வெயில் இரவை நோக்கி சென்று கொண்டு இறந்தது ...என் வீட்டு முற்றத்தில் அழகான இரு குருவிகள் அருகில் அமர்ந்து .ஒன்றை ஒன்று பார்த்து கொண்டு இருந்தன .மரக்கிளை காட்டில் ஆட அவையும் ஆடிய படியே .....சற்று செல்ல ... ஒன்றையொன்று உதடுகளால் உரசிகொன்டனே ...ஒன்று சற்று பெரிதாக இருந்தது . கழுத்லே கருமையாக ...,மத்தது ..சிறிதாக சிறு புள்ளிகளுடன் ....சிறிது நேரம் செல்ல ..ஒன்று சிறு குச்சிகளை ஒவொன்றாக கொண்டு வந்து சேர்த்து ..மற்றயது அருகிலிருந்த காய்ந்த இல்லை சருகுகளை கொண்டு வந்தது .நானும் ஜன்னலோரம் பார்த்து கொண்டு இருந்தேன் ........... மாலை பசுக்கள் வந்து மாட்டு கொட்டில் அடைவதற்காக அழும் சத்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
காளிமுத்துவின் பிரஜாஉரிமை அ-செ-முருகானந்தன் இலங்கையின் சமூக பொதுவாழ்வில் காளிமுத்து பிரமாத சேவைகள் புரிந்துவிட்டதாக அப்படி ஒன்றும் பிரமாதப்படுத்தவில்லை. அதனால் இலங்கையின் கௌரவப் பிரஜையாக அரசாங்கம் அவனை ஏற்றுக்கொள்ளவுமில்லை. ஒரு சாதாரண தோட்டத் தொழிலாளியாகத்தான் இலங்கை மண்ணில் அவன் வாழ்ந்தான். காளிமுத்துவின் குடும்பம் ஒரு தலைமுறையல்ல, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மலைநாட்டை வாழவைத்தது. அந்த மூதாதைகளின் வியர்வையில் செழித்து வளர்ந்துதான் இன்று ராஜகிரித் தோட்டம் கம்பீரத்தோற்றங்கொண்டு குளு குளுவென்று நிற்கிறது. ஏன், உண்மையைச் சொன்னாலென்ன, மலைநாடு இன்றைக்கெல்லாம் மலைபோல நிமிர்ந்து நிற்பது இந்தியப்பாட்டாளிகளின் உழைப்பின்மீதுதான். பிரிட்டிஷ்காரன் இலங்கையில் …
-
- 2 replies
- 1.8k views
-
-
ஒன்றே ஒன்று ........தாங்கோவன் அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். .வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் . என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது . ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளந…
-
- 8 replies
- 1.8k views
-
-
பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம் முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும், மேல், ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து …
-
- 2 replies
- 1.8k views
-
-
சங்கரன் வாழ்வில் ஆறு சுளைகள் - ஆதிரன் கனகமணிக்கும் அவளின் மகன் சங்கரனுக்கும் சுமுகமான உறவு அற்றுப் போய் வருடங்கள் ஆகிவிட்டிருந்தன. சிறுசிறு காரணங்கள் இருந்தாலும் மொத்தமான வெறுப்புக்கு செண்பகராணி பொறுப்பாயிருந்தாள். அவள் அவனுக்கு முறையில் சித்தியாகவும் இன்னொரு முறையில் அத்தை மகளாகவும் இருந்தாள். அவனை மாமா என்று அழைக்கும் அளவுக்கு அவள் சின்னப் பெண்ணாகவே இருந்தாள். சங்கரனுக்குப் புத்தி மந்தம். பெரிய உதட்டில் இடது ஓரத்தில் சதா எச்சில் ஒழுகும். மெலிந்த தேகம் என்றாலும் கைகளும் பாதங்களும் பெருத்து அவனது உடல்வாகுக்கு ஒவ்வாத ஒரு தினுசில் இருக்கும். ஊரில் தப்பையன் என்றே அவனை அழைத்தார்கள். சிலர் வாத்துக்காலு என்றும். அடங்காத தலைமுடியும் லேசான மாறுகண்களும் அவனை மனிதர்…
-
- 1 reply
- 1.8k views
-
-
அப்பா வருவாரா? வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு ,தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள் ,ராகவன் எற்கானவேஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவான், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத i நிலையால்.கெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க .இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர். யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில…
-
- 8 replies
- 1.8k views
-
-
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஞ்ஞானச் சொற்பொழிவில் பார்த்த வீடியோ காட்சி இது: ஒரு ஆபிரிக்கச் சிறுமி-பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம். சில கட்டில்கள் மட்டுமே கொண்ட ஒரு பின் தங்கிய மருத்துவ நிலையத்தில் சோர்ந்து கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளை எட்டத்திலிருந்து படம் பிடிக்கும் வீடியோவை நோக்கி தண்ணீர் எனச் சைகையில் கேட்கிறாள். தண்ணீர் வழங்கப் படுகிறது. ஆனால் ஒரு முறடு வாயில் வைத்ததுமே வேதனையில் முகம் கோண தண்ணீர் குவளையைத் தட்டி விடுகிறாள். தாதி மாரின் கரங்களை மெதுவாகக் கடிக்கவும் முயல்கிறாள். தாகமும் தண்ணீரின் வேதனைக்குப் பயப்படும் தவிப்பும் அவள் கண்களில் தெரிகின்றன. இவள் பாதிக்கப் பட்டிருக்கும் நோய் நிலைமைக்குப் பெயர் "நீர் வெறுப்பு நோய்" (hydrophobia) இந்த நிலைமைக்குக் கார…
-
- 8 replies
- 1.8k views
-
-
உடலின் அலைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் ஓவியம் : செல்வம் பழனி மலாய் சந்தேஷ் என்ற பெங்காலி ஸ்வீட்டை உங்களுக்குப் பிடிக்குமா? நான் அதைச் சாப்பிடுவதே இல்லை. என் மனைவி ஸ்வீட் ஸ்டாலுக்குப் போகும்போது எல்லாம் ‘அது நன்றாக இருக்கும், வாங்கலாம்’ என்பாள். எப்படி அவளிடம் சொல்வது, மலாய் சந்தேஷ் என்பது வெறும் இனிப்பில்லை... அதன் பின்னே சொல்ல முடியாத நினைவுகள் சேர்ந்திருக்கின்றன என்று. அப்போது நான் கரக்பூரில் வேலையில் இருந்தேன். அது ஒரு தொழிற்சாலை நகரம். இந்தியாவின் புகழ்பெற்ற ஐ.ஐ.டிகளில் ஒன்று கரக்பூரில் இருக்கிறது. அது ஒரு தனி உலகம். கரக்பூர், ரயில்வேயின் முக்கியக் கேந்திரம். நூறு ஆண்டுகளுக்கும் முன்பே அங்கே ரயில் நிலையம் அமைக்கப்பட்டுவிட்டது என்றார்கள். கரக்பூர் …
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழப்போராளிகளின் காதலும் குழந்தைகளும் Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Wednesday, December 19, 2012 http://mullaimann.blogspot.de/2012/12/blog-post_19.html இன மத மொழி பேதங்கள் தாண்டிய எங்கேயெல்லாமோ வாழ்கிற ஆயிரமாயிரமானவர்களின் தமிழ் ஈழக்கனவோடும் தாம் நேசித்தவர்களின் கனவுகளோடும் வாழ்கிற மனிதர்களோடு அவளும் ஒருத்திதான். உலகத்துப் பெண்களின் அம்மாக்களின் பிரதியாய் அவள் தனது குழந்தைகளின் வாழ்வை மேம்படுத்தவே இப்போது உழைக்கிறாள். 4வயதில் ஆறுவயதெனப் பதிவுசெய்து ஆங்கிலப்பள்ளியில் அப்பா சேர்த்துவிட்டு அவளை வேகமாக முன்னேற வேண்டுமெனவே சொல்லியனுப்பினார். அன்று 2வயதால் மூப்படைய வைத்து முன்னேறென்று சொன்ன அப்பா இன்று இருந்தால் அவளுக்காக தற்கொலையே செய்து கொண்டிருப்பார். 4வயதில் முன்…
-
- 6 replies
- 1.8k views
-
-
காஸ்மிக் திரை சிறுகதை: தமிழ்மகன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ‘‘இந்தச் செய்திகளை எல்லாம் மக்கள் நம்புகிறார்களா?’’ ஹாசினி வெறுப்புடன் கேட்டுவிட்டு, இடதுகை மணிக்கட்டில் கட்டியிருந்த ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள். ‘‘நம்புகிறார்களா எனத் தெரியாது, ஆனால் விரும்புகிறார்கள் ஹாசினி. இதை நீ நம்பித்தான் ஆக வேண்டும்.’’ அங்கு இருந்த ஆறு பேரும் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தனர். ‘‘ஹாசினி, சீக்கிரம் முடிவெடு. செய்திப் பிரிவு தயாராகிவிட்டது. மொத்தம் 20 நிமிடங்கள்தான். அதில் நான்கு க்ளிப்பிங்ஸ். நீ பேசப்போவது ஐந்து நிமிடங்கள்கூட இருக்காது.’’ ஹாசினி மீண்டும் ஆல்ஸ்ட்ரிப்பைப் பார்த்தாள். உலக நேரம், பால்வீதி புள்ளியின் நான்காம் பரிமாண…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஊருக்கு போன காலகட்டத்திலை ஏதோ அலுவலாக யாழ் நகரம் வந்தம் இருந்தம் என்று இல்லாமால் ..ஒரு படம் இங்கு பார்த்தால் என்ன என்று தினவு எடுத்திச்சு ..வெளிநாட்டு தியேட்டர்களில் அல்லது டிவிடிக்களில் பார்க்காத படமா ..அப்படி என்ன பெரிய படமாக பார்த்து கிளிக்க போறம் என்று அலுப்படித்தாலும் பார்த்தே தீருவேன் என்ற உறுதியுடன் அந்த இரண்டு மணி சோ பார்க்க நடையை கட்டினேன் .பார்க்க நான் தேர்ந்த எடுத்த படம் எந்திரன் ..அந்த படம் ராஜா தியேட்டரில் வந்து இரண்டு அல்லது மூன்று கிழமை தான் அப்பொழுது இருக்கும் ....25 வருடங்களின் முன்னர் ஒரு புதுப்படம் வந்து அதுவும் முன்னனி நாயகர்கள் நடித்திருந்தால் ...என்ன கோலாகாலம் என்னனென ஆர்ப்பாட்டங்கள் இருக்கும்.இந்த பிரபல நடிகர்களின் படங்கள் ஓடுவதன் காரணமாக ம…
-
- 11 replies
- 1.7k views
-
-
கிறிஸ்மஸ் நேரம் எண்ட படியால் கூட வேலை. பதினான்கு மணி நேரம் வேலை செய்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டம் எடுக்க காரில் ஏறினால், பெட்ரோல் குறைவு என்று டிங்கு டிங்கு எண்டு சத்தம் போட்டு காரும் வெறுப்பேத்தியது. பெற்றோலை போட்டுவிட்டு மட்டையை பாவிக்காமல் காசுடன் உள்ளுக்கு சென்றார் சின்னதுரை, ஒரு போலிஷ் கார வயோதிபர் கவுண்டரின் பின்னால் நின்றார். சின்னதுரையை பார்த்தவுடன், ஏன் கவலையாய் இருக்கிறாய் என்று கேட்டார்? சின்னதுரைக்குள் ஒரு பரப்புரை பொறி தட்டியது. சின்ன: எனது ஊரில எண்ட சொந்த காரரை ஸ்ரீ லங்கா இராணுவம் கடத்தி போட்டான். போலிஷ்: என்னது? உனது நாட்டு இராணுவமே மக்களை கடத்துகிறதா? சின்ன: இராணுவம் மட்டுமில்லை. எங்கட அமைச்சர், ஜனாதிபதி எல்லாம் ஆக்கள் கடத்து…
-
- 12 replies
- 1.7k views
-
-
ஐ.நாவில் மங்காத்தா..! மங்காத்தாவா… மகிந்தாத்தாவா மன்மோகன் சிங் குழப்பம்.. போர்க்குற்ற விசாரணை கண்டிப்பாக நடாத்தப்பட வேண்டுமென பான் கி மூன் பிடிவாதமாகச் சொன்னதால் மகிந்த உறக்கமின்றி துடித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு காலமும் மகிந்தாஜி மகிந்தாஜி என்ற மன்மோகன் சிங் கொஞ்சநாளாக மங்காத்தாஜி, மங்காத்தாஜி என்றபடி தன்னைப் பார்த்து தலைப்பாகையை தடவுவதை நினைத்தால் சினமாக இருந்தது.. இதற்குள் யாரோ ஒரு கேடுகெட்ட புத்தபிக்கு வந்து 600 தமிழ் பெண்களின் முலைகளை விராண்டி இரத்தம் எடுத்துவிட்டு ஐ.நா போனால் போர்க்குற்றம் விலகுமென்று சொல்ல, கிறீஸ் மனிதனை அனுப்பி முலைகளை விராண்டியதுதான் மிச்சம்.. பிரச்சனை தீர்ந்தபாடில்லை.. அப்போதுதான் கெகலிய ரம்புக்கல ஒரு பெ…
-
- 5 replies
- 1.7k views
-
-
நானென்னடி பிசாசா? என்ர மூச்சுக் காத்தை உடம்பை விட்டு வெளியாலயும், வெளிக்காத்தை உடம்புக்கு உள்ளயும் எடுக்க முடியாம, ஒருவழியா திணறிக் குளறி? அட சத்தியமா நான் குளறினன் சத்தம் வரவே இல்லை. ஊப்ஸ்...... ஒருவேளை நான் செத்துப் போட்டனோ? பாழ்படுவார் அடிச்ச செல்லில காயந்தானே பட்டன். அதுவும் இந்தக் காலில கொஞ்சம் இரத்தம் ஓடுது. இதுக்குப் போய் நான் செத்துப் போவனே?.. ஆ…… ஐயோ இதென்ன என்ர கால் முழங்காலுக்குக் கீழ அரைச்ச இறைச்சிமாதிரிக் கிடக்கு “ஐயோ என்ர கால் போட்டுது.. ஐயோ என்ர கால் போட்டுது. ஆராவது என்னைத் தூக்குங்கோடா. அடுத்த செல்லுகளை கட்டையில போவாங்கள் குத்த முன்ன என்னைத் தூக்கிக் கொண்டு போங்கோடா.. எனக்கும் பெண்டு பிள்ளைகள் இருக்கடா….” “அடேய் அடேய் மொல்ல …
-
- 10 replies
- 1.7k views
-
-
ஓடிப்போன ஒட்டகம் இந்தப்பனிக் குளிருக்கு எவன் வீட்டிற்குள்ளையே அடைபட்டுக்கிடப்பான். என்ரை நாட்டிலைதான் நான் சுதந்திரமாகச் சுத்தலாம் என்று ஒரு துண்டுக் காகிதத்திலை எழுதி வைத்திட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டுக் கிளம்பி டுபாய்க்குக் கப்பல் ஏறின ஒட்டகம், கோடைகாலம் தொடங்க...... போனதுபோலவே சொல்லாமல் கொள்ளாமலுக்கு இரண்டு நாளுக்குமுதல் வந்து தன்ரை அறையுக்கை படுத்துக்கிடந்தது. சரி என்னதான் நடக்குது பார்ப்பம் என்று பேசாமலுக்கு இருந்தால் அது பாட்டுக்குத் திரும்பவும் தன்ரை குணத்தைக் காட்டத் தொடங்கிவிட்டுது. அதுதான் அந்தக் கதையளை உங்களுக்குச் சொல்லுவமென்று வந்து உட்கார்ந்தால் வைத்தியரிடம் மருந்தெடுக்கப்போறதுக்கு நேரமாச்சுது. கோபியாதையுங்கோ போட்டுவந…
-
- 9 replies
- 1.7k views
-
-
நன்றி நிவேதாவுக்கு வெறுத்துப் போயிற்று. சமையலில் அவள் கெட்டி. தன் குடும்பத்தினருக்காக ஒவ்வொரு நாளும் எதையாவது புதுசு புதுசாகச் செய்ய வேண்டுமே என பதைபதைப்பாள். அதில் தன் திறமை முழுவதையும் காட்டி சுவை கூட்டுவாள். அவள் புத்தக கலெக்ஷன் முழுவதுமே சமையல் கலை புத்தகங்களால் நிரம்பி வழியும். ஆனாலும் என்ன? ஒரு சின்ன பாராட்டுகூட கிடைக்காது! இன்று அவள் பார்த்துப் பார்த்து செய்த அரிதான ரெஸிபி... சாப்பிட்ட யாருமே ‘‘நல்லா இருக்கு’’ என வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை. கணவன் சாப்பிட்டு கை கழுவிய வேகத்தில் ஆபீஸ் கிளம்பிப் போய் விட்டான். குழந்தைகள் இருவரும் வேகவேகமாக அள்ளிப் போட்டுக்கொண்டு பள்ளிக்கு ஓடிவிட்டனர். மாமியாரும் சாப்பிட்டு முடித்தவுடன் அரட்டை அடிக்க பக்கத்த…
-
- 0 replies
- 1.7k views
-