கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
சுவிஸிலிருந்து கனடாவிற்குப் ‘பாய்ந்த‘ தமிழர் ஒருவரை போலந்து நாட்டில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இப்படி பரவலாக தமிழ் சனங்கள் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள். சுவிஸில் விசா பிரச்சனைகளின் சிக்கல்களாலும் அதன் முடிவுகளை அறிந்துகொள்ள காலங்கள் வருடங்களை விழுங்குவதாலும் பலரும் அடுத்த தெரிவாக கனடாவினைத் தெரிவு செய்கிறார்கள். அவர்கள் மட்டுமின்றி சுவிற்சர்லாந்தில் வேலை விசா என்று செற்றில் ஆகிவிட்டவர்கள் கூட பிள்ளைகளின் ‘படிப்பிற்காக‘ என்று அண்மைக் காலங்களில் கனடாவிற்கு குடிபெயர்கிறார்கள். அண்மையில் கனடா சென்று வந்த நண்பர் ஒருவரிடம் சனமெல்லாம் கனடா கனடா என்று ஓடுகிறார்களே அப்படி என்னதான் அங்கே இருக்கென்று கேட்டேன். அவர் பதிலுக்கு அங்கு இடியப்பம் ஐந்து சதங்களுக்கு வாங்கலாம் என்றா…
-
- 22 replies
- 3.6k views
-
-
தமயந்தியைத் தேடுகிறேன். அவளைச் சந்தித்ததும், அச்சந்திப்பு பின்பு தொடர்கதையாகியதும் அதுவே எனது இளமைக்காலத்தில் பல இராசாயண மாற்றங்களை என்னுள் கொண்டுவந்ததும் தற்செயலானதே ஆனால் அதன்பின்பான நினைவுகள் மட்டும் நிரந்தரமானவை . யாழ் மத்திய கல்லூரியின் விளையாட்டுமைதானத்தில் பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப்போட்டி நடக்கும்போது வேம்படிமகளிர் கல்லூரி உட்பட யாழ்நகரப்பகுதி தவிர குடாநாட்டின் முண்ணணிப்பாடசாலைகள் கலந்துகொள்ளும் போட்டியாதலால் எம்போன்ற இளவட்டப் பாடசாலை மாணவர்கள் அங்கு ஆயராவதில் தவறேதும் இருப்பதாக அப்போது மட்டுமல்ல இப்போதும் எனக்குத்தோன்றவில்லை. ஓரிரு நாள் நடைபெறும் பெண்களுக்கான விளையாட்டுப்போட்டியில் அவ்வேளைய ரோமியோக்கள் நாங்கள் அழையா விருந்தாளிகள…
-
- 8 replies
- 1.4k views
-
-
[size=4]தமிழனும் நோ இங்கிலீசும் .....................[/size] [size=4] இலங்கையின் வடபகுதியின் விவசாயக் கிராமத்தில் இருந்து அண்மையில் கனடா நாட்டுக்கு குடும்ப ஒன்றிணைவின் மூலம் வந்திருந்தார்கள் திரு தமிழனும் திருமதி தமிழனும ... வந்து மூன்று மாதங்கள் தான் இருக்கும் . அவர்களது மகள் வழிப் பேரப்பிள்ளைகளுடன் பொழுது இனிமையாக் கழிந்தது. ஒரு நாள் மகள் தனது இரு குழந்தைகளையும் நீச்சல் வகுப்புக்கு அழைத்து சென்று இருந்தார். இவர்கள் காலாற நடக்க அந்த தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்றலில் உலாவிக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு அறுபதின் இறுதி வயதுகளில் வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. திரு தமிழன் முன்னே செல்ல திருமதி பின்னே சென்று கொண்டு இருந்தார். ஒரு (சீயேன்னா )ரக வாகனத்தில் வெள…
-
- 20 replies
- 1.9k views
-
-
தமிழனை மீட்கும் ஆண்டு 19/01/2009 -------------------------------------------------------------------------------- பல இன்னல்களையும், நெருக்கடிகளையும் தந்த ஆண்டாக 2008ஆம் ஆண்டு கடந்து 2009 என்னும் புதிய ஆண்டில் தடம்பதித்திருக்கிறோம். இந்த புதிய ஆண்டு பெரும்பாலும் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தரும் ஆண்டாக அமையும் என பல்வேறுபட்ட தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது எந்தளவிற்கு சாத்தியப்பாடானதாக அமையும்? அவ்வாறு சாத்தியப்பாடானாலும் அது எந்தவகையில் அமையும்? என்ற கேள்விகள் எழுகின்றன. தற்பொழுது உலகமெங்கும் இருக்கும் கண்களும் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும், எமது விடுதலைப் போராட்டம் உச்சக்கட்ட நிலையை எட்டியிருக்கும் இந்த நிலையில், தம…
-
- 0 replies
- 818 views
-
-
சிறிலங்காவின் இனப்பிரச்சினை மூன்று இனங்களையும் மூன்று துருவங்களாக்கியுள்ளது. ஆனாலும் இந்த மூன்று இன மக்களுடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவை தந்த அனுபவங்கள் பல. இவற்றுள் சில மிகவும் கசப்பானவை இன்னும் சில மிகவும் நெகிழ்ச்சியானவை. ஏங்கள் வீட்டில் வேலை செய்து எங்கள் அம்மாவின் சாப்பாட்டைச் சாப்பிட்டு எங்களில் ஒருவனாகப் பழகிய சிங்கள இனவெறியனே எங்கள் வீட்டைத் தீயிட்ட கசப்பான கடந்த கால நினைவும் என் மனதை விட்டு அகலவில்லை. கொடும் புற்றுநோயினால் எனது தாய்க்கு தினமும் இரத்தம் மாற்ற வேண்டிய தேவையுடன் நான் இருப்பதை அறிந்து எனக்குக் கூடத் தெரியாமல் தன் பெயரைக் கூடச் சொல்லாமல் என் அம்மாவிற்குக் குருதி தந்த எனது அலுவலகத்தில் வேலை செய்த சிங்களச் சகோத…
-
- 205 replies
- 28.7k views
-
-
தமிழர்களும் யூதர்களும் - ஜூட் பிரகாஷ் நானூறு ஆண்டுகளிற்கும் மேலாக எகிப்து தேசத்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மீட்டுக் கொண்டு, அவர்களது தாயகம் நோக்கி போய்க் கொண்டுருந்த மீட்பர் மோசேயின் பயணத்தை செங்கடல் இடைமறிக்கிறது. உலக வரலாற்றில் முதலாவது மாபெரும் இடப்பெயர்வு எனக் கருதப்படும் இடப்பெயர்வு தான், யூதர்கள் எகிப்திலிருந்து வெளிக்கிட்டு, நாற்பது ஆண்டுகள் வனாந்தரங்களில் அலைந்து திரிந்து, கடைசியில் பாலும் தேனும் ஓடும் தங்களது சொந்த நிலத்தை வந்தடைந்தது. எகிப்திலிருந்து யூதர்களை மீட்டு வருவது மீட்பர் மோசேக்கு லேசுப்பட்ட விடயமாக இருக்கவில்லை. ஒவ்வொரு முறையும் எகிப்தின் ராஜாவான பார்வோனிடம் போய் “என் மக்களை போக விடு (Let my people go)” என்று மோசேயும் ஆரோனும் க…
-
- 3 replies
- 1.9k views
- 1 follower
-
-
பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஞ்ஞானச் சொற்பொழிவில் பார்த்த வீடியோ காட்சி இது: ஒரு ஆபிரிக்கச் சிறுமி-பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம். சில கட்டில்கள் மட்டுமே கொண்ட ஒரு பின் தங்கிய மருத்துவ நிலையத்தில் சோர்ந்து கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளை எட்டத்திலிருந்து படம் பிடிக்கும் வீடியோவை நோக்கி தண்ணீர் எனச் சைகையில் கேட்கிறாள். தண்ணீர் வழங்கப் படுகிறது. ஆனால் ஒரு முறடு வாயில் வைத்ததுமே வேதனையில் முகம் கோண தண்ணீர் குவளையைத் தட்டி விடுகிறாள். தாதி மாரின் கரங்களை மெதுவாகக் கடிக்கவும் முயல்கிறாள். தாகமும் தண்ணீரின் வேதனைக்குப் பயப்படும் தவிப்பும் அவள் கண்களில் தெரிகின்றன. இவள் பாதிக்கப் பட்டிருக்கும் நோய் நிலைமைக்குப் பெயர் "நீர் வெறுப்பு நோய்" (hydrophobia) இந்த நிலைமைக்குக் கார…
-
- 8 replies
- 1.8k views
-
-
தமிழீழம் தான் நம் கனவு... சிறு கதை.... சாந்தி சரியாக் கேளுங்கோ...இதில எல்லாம் ஆயத்தம் உங்கட உடுப்பு எல்லாம் சரிதானே.. விடிய முதல் இதால வருவினம். அண்ணை சொல்லிவிட்டது ஞாபகமிருக்குத்தானே....? வந்தினமெண்டா விடாம கவனிப்பம்..சரியோ..! குழப்பமில்லை தானே ''ஒன்றும் குழப்பமில்லை பயப்படாதேங்கோ... நான் அவர் வளர்த்த ஆளல்ல...எனக்கு பத்து போனாலும் மற்றவருக்கு ஒன்று என்றாலும் போகவேணும் என்ற பொலிசியெல்லாம் எனக்கில்லை...! என்னக்கு ஒன்று போனாலும் மற்றவருக்கு பத்துப் போகவைப்பன் என்ர வளர்ப்பு அப்படி ...தெரியுமல்ல....'' சொல்லி முடித்தாள் சாந்தி. ''அண்ணையும் பாவம் தானே எங்கள் எல்லாருக்காகவும் இத்தனை வருடமா கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார்தானே.. அவரோட பாக்கேகை இதெல்லாம்...…
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
இந்த இணைப்புகளில் இருந்து தரவிறக்கம் செய்யலாம் கடைசி பேட்டி மெல்லக் கொல்வேன் மேற்கே செல்லும் விமானம் - பாகம் 1 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 2 மேற்கே செல்லும் விமானம் - பாகம் 3 நேற்றைய கல்லறை கறுப்பு வரலாறு
-
- 10 replies
- 3.5k views
-
-
கதை சொல்லவா? 13/ தமிழ் புத்தன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
-
- 0 replies
- 999 views
-
-
ரமில் ரைகர்ஸ் பிறீடம் பைற்றர்ஸ் என்று ரீவிக்குள்ளே நின்று நெஞ்சை முன்னுக்குத் தள்ளித்தள்ளிக் கத்திய இளம்பெடியனை எங்கேயோ கண்டதாக அகதித்தஞ்ச விசாரணை தமிழ் மொழிபெயர்ப்பாளர் குமாரசூரியர் விரலைத் தலையில் தேய்ச்சுக்கொண்டே யோசித்தார். இளம்பெடியன் சேட்டில் புலியை வைத்திருந்தான். தொப்பியில் புலியை வைத்திருந்தான். மிதமான குளிரைத்தாங்கும் சால்வையிலும் புலிதான் படுத்திருந்தது. கன்னங்களில் கறுத்தக் கோடிழுத்திருந்தவனும் குஞ்சுத் தாடியும் சொக்கிலேற்றுக்கும் குங்குமக் கலருக்கும் இடைப்பட்டை கலரில் தலைமயிரின் முன்பக்கத்தைக் கொஞ்சம் வைத்திருந்தவனுமாகிய இளம்பெடியனை குமாரசூரியர் தன் நினைவுக்குள் கொண்டுவர முடியுமாவென்று திரும்பவுமொருக்காத் தேய்ச்சார். கிட்டத்தட்ட பதின்மூண்டு பதின்நாலு வருச அவர…
-
- 37 replies
- 4.2k views
-
-
தமிழ்க் கதை யோ.கர்ணன் ஆயிரத்தெட்டு சிறுகதைகளும், இருபத்தேழு குறுநாவல்களும், பதின்மூன்று நாவல்களும், நான்கு நாடகங்களும், மூன்று உரைநூல்களும், ஒரு சமையல் குறிப்புமென கணக்கில்லாமல் புத்தகங்கள் போட்டுத் தள்ளிய கலைஞர் அப்புக்காத்துவை உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். தெரியாவிட்டாலும் பாதகமெதுவுமில்லை. சிலர் அவரது புத்தகங்களில் ஓரிரண்டாவது படித்திருக்கக் கூடும். இந்த இரண்டு நிபந்தனைகளிற்கும் நீங்கள் உட்படுவீர்களெனில் இதற்கடுத்த பந்தியை வாசிக்கத் தேவையில்லை. கடந்து சென்று விடலாம். அவரை அறியாதவர்களிற்காக இதற்கடுத்த பகுதியை எழுத நேர்கிறது. முத்தமிழையும் கரைத்துக் குடித்த முத்தமிழறிஞர்கள் பரம்பரையில் கலைஞர் கருணாநிதிக்கு பின்பாக பெயர் சொல்லத்தக்க நபர்க…
-
- 19 replies
- 2.3k views
-
-
தமிழ்க் கூலி.. தம்பி என்ன நடத்து போறீயள் வாங்கோ நான் கொண்டு போய் உங்கட முகாமிலை விடுகிறன்... வளியில் போன ஒருவர் தானாக முன்வந்து தனது உந்துறுளியில் கொண்டு செண்று விட முன் வருகிறார்... அந்த போராளிக்கும் அவர் அடிக்கடி காணும் பழகிய முகம் தான்... அனேகமான தமிழர்களின் கட்டுப்பாட்டு பிரதேசங்களின் நடக்கும் வழக்கமான நிகள்வு தான் இது... இல்லை அண்ணை பறவாய் இல்லை பக்கம் தானே நான் நடந்து போகின்றேன்... சாச்சா எனக்கு ஒரு கஸ்ரமும் இல்லை நீங்கள் ஏறுங்கோ தம்பி.. நான் போற வளிதான்... வேற வளி இல்லாமல் அந்த போராளியும் உந்துறுளியில் ஏறிக்கொள்கிறார்... தம்பி நீங்கள் எங்களுக்காக எவ்வளவு கஸ்ரப்படுகிறீயள் உங்களுக்காக இது கூட செய்ய இல்லை எண்டால் தமிழனாக இருக்…
-
- 5 replies
- 1.5k views
-
-
சனிக்கிழமை காலையில் மற்றும் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ் மளிகைக்கடைக்குப் போவது எனக்கு மிகப்பிடிக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ, தமிழ் கடையில் காணும் எங்கள் மக்கள் எல்லோர் மீதும் ஒரு அதிகரித்த ஈர்ப்பை உணருகிறேன். ஒரு ஆச்சியைக் கண்டால் கையைப் பிடிச்சுக் கூட்டிப்போகவேணும் போல, ஒரு அப்புவைக் கண்டால் அவர் தன்னைப் பெரிய மனிதர் என்று மீண்டும் உணரும் வகை அவரிடம் ஏதாவது கேட்கவேணும் போல, ஒரு அண்ணையைக் கண்டால் எப்பிடிச் சகோதரம் சுகம் எண்டு கேட்கவேண்டும் போல, வடிவான பொம்பிளைப் பிள்ளையள் ஆரைப் பாத்தாலும் முகவரி பட ஜோதிகாவைப் பாத்தது போல—எங்கட பிள்ளையள் எண்ட உரிமையோட—ஒரே உணர்வுப் பிரவாகம். இது மனிதரில் மட்டுமல்ல, கருணைக் கிழங்கில, கத்தரிக்காயிலை என்று பல பரிமாண உணர்வுப் பிரவாகம். கறுப…
-
- 25 replies
- 3.1k views
-
-
தமிழ்த் துரோகி — பூ அரசு கையை பிளேட்டால் வெட்டி, கூட்டணிக்காரரிற்கு பொட்டு வைத்து விட்டு தமிழீழம் கிடைக்கும் வரை கலியாணம் கட்ட மாட்டேன் என்று அறுவைதாசன் சபதம் எதுவும் செய்யவில்லை. ஆனாலும் அவனுக்கு வயது வட்டுக்குள்ளே போன பிறகும் கலியாணம் நடக்கவில்லை. எந்தப் பெட்டையும் அவனை ஏறெடுத்து பார்த்ததில்லை. "தும்பிக்கையான் துணை" திருமண சேவை நடத்தும் சுந்தரம் சித்தப்பா காட்டும் பெட்டைகளின் படங்களை இவனுக்கு பிடிக்கவில்லை. அவனின்ரை தாய் தான் எங்கடை பரம்பரையின்ரை பேர் உன்னோடை முடியிறதோ எண்டு அழுது குழறி விடாமல் தொடர்ந்து பொம்பிளை பார்த்துக்கொண்டு இருந்தாள். சலரோகம், ரத்தக்கொதிப்பு தான் உங்கடை பரம்பரைச் சொத்து. இதுவெல்லாம் ஒரு பரம்பரை என்று அறுவை தாயிடம் எரிந்து விழுந்தாலும் யா…
-
- 8 replies
- 2.1k views
-
-
சரசு மருந்து குடிச்சிருச்சு.. ஆசுபத்திரிக்கு கொண்டு போறாங்களாம்” தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய் விட்டான். மணிவேல்தான் பதறினான். ”நான் போறேன்” சண்முகம் விடவில்லை. “நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.” கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பும்போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது. ‘கூட வரீங்களா’ சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அம்மா.. அப்பா’ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க’. தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை. மணிவேல் தணிந்த குரலில் சொன்னான். “உடன…
-
- 3 replies
- 1.6k views
-
-
சன் என்று மனைவி விஜி அழைக்க திடுகிட்டு தன் சிரிப்பை நிறுத்தினான,ஏன் இப்ப உங்கள்பாட்டில் சிரித்து கொண்டு இருந்தனீங்கள் யாராவது பார்த்தால் விசர் என்று நினைக்க போறார்கள் என்றவல் அது சரி இப்ப ஏன் சிரித்தனீங்கள்.அதுவோ சும்மா என்ன நினைத்தேன் சிரித்தேன்,அப்படி என்ன பெரிசாக கிழித்து போட்டீங்கள் இப்ப உங்களை நினைத்து சிரிக்க என்றவளை பார்த்த சன்,அதற்கு காரணமே நீர் தான் விஜி என்றான். 25 வருடங்களிற்கு முன் நீர் எப்படி என்னை கூப்பிடுறனீர் என்பதை யோசித்தேன் அது தான் சிரித்தேன்.ஏன் எப்படி கூப்பிட்டனான் என்று சொல்லுங்கோ எனக்கு இப்ப எல்லாம் மறந்து போய் விட்டது.அது சரி இப்ப உமக்கு ஒன்றும் நினைவு இருக்காது ஏன் என்றா நீர் இருகிற இடம் அப்படி."இஞ்சாருங்கோ"."இங்கேயப்ப…
-
- 11 replies
- 2.6k views
-
-
வழமை போல.. பார்க்கில் ஓடிக்கொண்டிருந்தேன். எதிரே ஒரு நடுத்தர வயதுக்காரர் வந்து கொண்டிருந்தார். அவர் என்னைக் கண்டதும் இல்லாமல்..ஏதோ தெரிந்தவர் போல.... தம்பி கொஞ்சம் நில்லும்... என்றார் தமிழில். நானோ காதில் விழாதது போல என் கருமத்தில் கண்ணாய் இருந்தேன். எனக்கு முன்னால் ஒரு அழகான பிகரு வேற ஓடிக் கொண்டிருந்தது. அதை எப்படியாவது கடந்து போயி.. ஒருக்கா.. அந்தப் பிகரின்.. மூஞ்சியை பார்த்திடனும் என்ற கொள்கை வெறியோட வேற.. நான்.. ஓடிக் கொண்டிருந்தேன். நான் என் கொள்கையில் நீண்ட நேரம் செலவழிக்கல்லை. சிறிது நேரத்துக்குள்ளாகவே.. இலகுவாகவே அந்த பிகரை விரட்டி பிடிச்சு.. கடந்து போய்.. திரும்பிப் பார்த்தும் விட்டேன். சும்மா சுமாரான பிகர் தான். பார்க்க தமிழ் பிகர் போல இருந்திச்சு. நாட்…
-
- 31 replies
- 3.7k views
-
-
[size=4]அண்டைக்கு, லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்! விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது! நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குட…
-
- 15 replies
- 1.2k views
-
-
தரிசனம் -இளங்கோ கிருஷ்ணன் இன்று காலை நான் கடவுளைப் பார்த்தேன். சரி, சிரிக்க வேண்டாம். நிஜமாகவே பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால், நான் கதாசிரியன். கதாசிரியன் சொல்வதை நம்பத் தொடங்குவதுதான் கதை கேட்பதன் முதல் தகுதி. சரி, கடவுளைப் பார்த்தேன் என்றேன் அல்லவா? எங்கு பார்த்தேன் என்று சொல்லவில்லையே, கோயம்பேடு மார்க்கெட்டில்தான் தரிசனம். அதுவும் ஒருமுறை அல்ல; இரு முறை. அதை தரிசனம் என்று சொல்லலாமா தெரியவில்லை. என் கண் எதிரே தட்டுப்பட்டார். அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில். எத்தனையோ கோடி பக்தர்கள் எத்தனை எத்தனையோ வழிகளில் தேடித் திரிகிறார்கள். நாள்தோறும் ஆறுகால பூஜை செய்து, விரதம் இருந்து, சஷ்டி படித்து, சபரிமலைக்கு மாலை போட்…
-
- 0 replies
- 1k views
-
-
தரிசனம் கிடைக்காதா? ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் ("தம்பிக்கு" "தங்கைக்கு" அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல்…
-
- 63 replies
- 9.5k views
-
-
இதுதான் பானுமதி ஸ்டைல்! அக்காக் குருவியின் கூவல் மட்டுமே கேட்கும் அமைதியான பாண்டி பஜார் வைத்தியராமன் தெரு. பழைய நினைவுகளில் ஆழ்ந்திருப்பதுபோல் காட்சிதரும் பானுமதியின் பங்களா. தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஒரு பிற்பகல். எனக்கு முன்னால் பானுமதி உட்கார்ந்திருக்கிறார். திரையில் வரும் நிழல் பானுமதி அல்ல; நிஜ பானுமதி! பணிப்பெண் அவருக்கு முன்னால் ஒரு கோப்பைப் பழச்சாறும் எனக்கு காபியும் கொண்டுவந்து வைத்தார். “வாழ்க்கையில் எனக்குப் பிடிக்காத விஷயங்கள் இரண்டு. ஒன்று சினிமா. மற்றொன்று காபி” என்றார் பானுமதி. திரையில் ஜொலிக்கிற நட்சத்திரமாய் நின்றுவிடாமல் சாதாரண மனுஷியாகத் தனது நினைவுகளையும் அனுபவங்களையும் கள்ளம் கபட…
-
- 15 replies
- 3.6k views
- 1 follower
-
-
தர்க்கத்திற்கு அப்பால்... ஜெயகாந்தன் வெற்றி என்ற வார்த்தைக்குப் பொருளில்லை நினைத்தது நடந்தால் வெற்றி என்று நினைத்துக் கொள்கிறோம். தோல்வி நிச்சயம் என்று எண்ணித் தோற்றால், அந்தத் தோல்வியே வெற்றிதான். ஒரு காலத்தில் எனக்கு இப்படிப்பட்ட 'வெற்றி 'கள் வாழ்க்கையில் நிறையவே சம்பவித்தன. என் வாழ்க்கையையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய காரியமாய்ப் பக்கத்து நகரத்துக்குப் போயிருந்தேன் வழக்கம்போல 'தோல்வி நிச்சயம் ' என்ற மனப்பான்மையுடன் போன நான், வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப் போனேன். தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்குத் தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. கற்பனைக்கும் எட்டாத ஒரு பேரழகியை ரகஸ்யமாய் மனசிற்குள் காதலித்து, அந்தக் காதலை அவளிடம் வெளியிடும் என் …
-
- 0 replies
- 1k views
-
-
தர்மஅடி இந்த வார ஒரு பேப்பரிற்காக தர்மஅடி என்பது அனேகமாக ஊர்விட்டு வேறை ஊருக்குபோய் ஏதாவது பிரச்னை வந்தால் தான் அனேகமாக இந்த தர்மஅடி கிடைக்கசந்தர்ப்பம் உண்டு. உங்களிலும் சிலபேர் இந்த தர்ம அடி எங்கையாவது வாங்கியிருக்கலாம் அல்லது தர்ம அடிகிடைக்க இருந்த நேரத்தில் தப்பியிருக்கலாம்.அதையெல்லாம
-
- 25 replies
- 5.7k views
-
-
தர்மம்! செய்தித்தாளைப் படித்து முடித்ததும், குளிப்பதற்காக கிளம்பினார், அருணாசலம். அப்போது, மொபைல் போன் ஒலிக்க, எடுத்துப் பார்த்தார்; நண்பர், கதிரேசனிடமிருந்து அழைப்பு! ''கதிரேசா... ஏதாவது அவசர விஷயமா... மணி, 11:00 ஆகப் போகுது... குளிச்சுட்டு வந்து பேசட்டுமா...'' என்றார். 'சரி' என்று அவர் கூறியதும், குளியல் அறைக்குள் நுழைந்தார், அருணாசலம். அருணாசலமும், கதிரேசனும் நண்பர்கள். தங்கள் கடமைகளை எல்லாம் முடித்து, பணி ஓய்வு பெற்று, அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். குளித்து முடித்து, நெற்றியில் திருநீறு இட்டு வந்தவர், பின், மொபைல் போனை எடுத்து நண்பர் கதிரேசனை அழைத…
-
- 0 replies
- 1.3k views
-