Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. எங்கள் சிப்பாய்களில் எவனும் உன்னைக் காதலித்து ஏமாற்றிவிட்டானா?” என் குரலிலிருந்த பரிகசிக்கும் தொனிக்கும் அவளது திடுக்கிடும் பாவத்திற்கும் துளியும் பொருந்திப் போகவில்லை. படுக்கை விரிப்பின் மறுமுனையில் கிடந்த எனது இடுப்புவாரைக் கையிலிடுத்து வினோதமாக உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பவளின் கவனத்தைக் கோரவே அக்கேள்வியைக் கேட்டிருந்தேன். “என்ன கேட்டீர்கள்?” ஏற்கனவே சிவந்திருந்த கன்னத்தில் புது இரத்தம் பாய்ந்திருந்தது. “ஒன்றுமில்லை.. என்னவோ குறிப்பற்று சொன்னேன்”. அறைக்குள் நான் நுழைந்ததிலிருந்து அவளது பார்வையில் அத்தனை ஆழம் இருக்கவில்லை. சிமிட்டாத இமைகள் அவள் அந்தப் பேச்சை அப்படியே விடப்போவதில்லை என்பதாகவோ மேற்கொண்டு என்னிடம் எதுவுமே பேசப்போவதில்லை என்பதாகவோ எதையோ அறிவித்தன…

  2. நெஞ்சம் மறப்பதில்லை அந்த அரச மரம் அங்கிருக்கிறதா? என்று என் கண்கள் தேடியது. ""அந்தப் பக்கமெல்லாம் இப்ப போக முடியாதுண்ணா... புதர் மண்டிக் கிடக்கு'' என்றான் என் தம்பி. ""அது ரொம்பப் பெரிசாச்சே கொஞ்சம் தள்ளி நின்னு கூடப் பார்க்கலாமே. சுத்தி வரக் கல் பாவியிருக்கும் பாரு. அதப் பார்க்கணும் எனக்கு'' என்னையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தான். அந்த ஒளியைக் கண்டு கொண்டானோ என்னவோ? நினைப்பு தந்த சந்தோஷத்தை மலர்ச்சியை முகத்தில் கண்டிருக்கலாம். ""சரிண்ணா... வாங்க போவோம்'' அவனோடு நடந்தேன். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்று நின்று விட்டான். ""இந்த எடம் எதுன்னு தெரியுதா?'' சுற்று மு…

    • 1 reply
    • 1.1k views
  3. நெஞ்சாத்தியே நீதானடி என் வாழ்கையே (1) பாகம் 1 தூங்கி எழுஞ்சு கிளம்பி ரெடி ஆகவே மணி பன்னிரண்டு ஆச்சு. இன்று ஓய்வு நாள். அதனால் தாமதமாகவே எழுந்தேன். அக்கா காலைலயே இட்லி, பொங்கல்னு தலபுடலா ரெடி பண்ணி வச்சிருந்தா. என்ன எப்பவும் காய்ஞ்சு போன ப்ரெட் தானே இருக்கும். இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? அம்மா அளவுக்கு இல்லனாலும் ஓரளவுக்கு நல்லாவே சமைப்பா. அதனால தைரியமா சாப்பிடலாம். நான் சாப்பிட சாப்பிட “இன்னும் எடுத்துக்கோடா” என்று மேலும் ரெண்டு இட்லியை எடுத்து வைத்தாள் தட்டில். “போதும். இப்பவே இவ்வளோ சாப்டா அப்புறம் லஞ்ச் என்ன சாப்பிடுறது? வாயித்துல கொஞ்சமாச்சும் இடம் காலி இருக்கணும்” நான் தடுத்தேன். “டேய் அடி வாங்குவ. காலைலேயே எழுஞ்சு எல்லாம் ரெடி பண்ணிருக்கேன். நீதான் சாப்…

  4. நெஞ்சின் ஆசை நனவாக... செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் தாயகம் சென்று சேவை செய்ய இருக்கும் தன் முடிவை உறுதி செய்திருந்தாள் மோகனா. மூன்று பெண்களும், நான்கு ஆண்களுமாக ஒருவருட உடன்படிக்கையின் பேரில், அதில் இந்த நாட்டைச்சேர்ந்தவர்களும் அடங்களாக அவளின் பயணம் வெற்றிகரமாக பதியப்பட்டிருந்தது. முதன் முதலாக அவளின் தாயக பயணம் இது. மனதுக்குள் சோடாக் குமிழ் போல் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே மனதிற்குள் ஒரு சின்னப்பயம். அதையும் மீறிக்கொண்டு அவள் உள்ளத்தில் இருந்த மனஉறுதி தன்னால் முடிந்த சேவையை தன் தாய்நாட்டிற்காக செய்ய வேண்டும் என்ற திடமான உணர்வு அவளின் நாடி நரம்பெங்கும் வியாபித்து, அந்த பயத்தினை முறியடித்து இருந்தது. வீட்டுக்கு வந்து தன் பயணம் பற்றிக் கூறியபோது அ…

  5. Thu, 10 Sept. at 16:41 நெஞ்சில் பதிந்த நிலவு – சித்தி கருணானந்தராஜா டியர் கண்ணன், உங்கள் மெயில் கிடைத்தது. நான் தடுமாறிப்போய் நிற்கிறேன். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நீங்கள் எப்போது வருவீர்கள்? வீட்டில் ஏதோ கசமுசாவென்று அம்மாவும் அப்பாவும் பேசுகிறார்கள். எனக்குக் கலியாணம் பேசுகிறார்கள் போலத் தெரிகிறது. என்னிடம் இதுபற்றி யாரும் இதுவரை பேசவில்லை. கடைசியாகத்தான் என்னிடம் வருவார்கள் என்று நினைக்கிறேன். அதற்கிடையில் நான் என்ன ஏது என்று சரியாகத் தெரியாமல் குறுக்கே விழுந்து எதையாவது கேட்டால் வெட…

    • 2 replies
    • 892 views
  6. நெஞ்சில் உள்ள சோகம் ஒன்று ........... புலம் பெயர் மண்ணில் , ஒரு மாசி மாத நாளிலே . மதியும் கணவனும் இரு பிள்ளைகளும் நெருங்கிய உறவினர் வீட்டுக்கு பயணித்தார்கள். அவர்களுக்கு அன்பளிப்பாக ,ஒரு சிறு உணவுப்பொருளை அருகிலிருந்த கடையில் வாங்கி கொண்டு , பயணத்தை தொடர்ந்தார்கள் . இவர்கள்வயது ஒத்ததா இரு சிறுவர்களும் அவ்வீடில் இருந்தார்கள். கனடாவின் ,பனிப்புயல் ,வீசியடித்து ஓரளவு ஓய்ந்து இருந்த காலம்,இன்னும் சில இடங்களில் இறுகிய கல்லாகவும் சில இடங்களில் வீட்டு தாழ்வார குழாய் மூலம் உருகி சொட்டு சொட்டாக ... வடிந்து கொண்டு இருந்தது .இவர்கள் அவ்வீட்டை அண்மித்ததும் ,சிறுவர்கள் இருவரும் இறங்கி ஓடி விட்டனர், மதியும் கணவனும் காரை விட்டு இறங்கி , ஒரு அடி எடுத்து வைத்தவள் , கதவு இ…

    • 10 replies
    • 2.1k views
  7. நெடுநல்வாடை வையகம் பனிப்ப, வலனேர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென ஆர்கலி முனைஇய கொடுங்கோற் கோவலர் ஏறுடை இனநிரை வேறுபுலம் பரப்பிப் புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன் கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க மாமேயல் மறப்ப மந்தி கூரப் பறவை படிவன வீழக் கறவை கன்றுகோ ளழியக் கடிய வீசிக் குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாள் புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப் பொன்போற் பீரமொடு புதற்புதல் மலரப் பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி இருங்களி பரந்த ஈர வெண்மணற் செவ்வரி நாரைய டெவ்வாயுங் கவரக் கயலறல் எதிரக் கடும்புனற் சாஅய்ப் பெய…

  8. வரலாற்றின் பக்கங்கள் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல.. பல பாடங்களைச் சொல்லிச் செல்பவை. பல நாட்டு மனித வரலாறுகளைப் படித்தாலும் ஐரோப்பிய வரலாற்றின் மேல் எப்போதும் தீராத ஆர்வம். காரணம் இருந்த வளங்களை அவர்களைப் போல வீணடித்தவர்களும் செம்மையாகப் பயன்படுத்தியவர்களும் அன்றைக்கு மட்டுமல்ல… இன்றைக்கும் யாருமில்லை. குறிப்பாக பிரெஞ்சுப் புரட்சி… இந்தப் புரட்சி மூலம் பிரான்ஸ் மக்கள் சுதந்திரம் பெற்ற விதம், பெற்ற சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் பட்ட பாடுகள், எதை எதிர்த்து அவர்கள் போராடினார்களோ, எதிலிருந்து விடுதலை பெற விரும்பினார்களோ அதற்குள்ளேயே மீண்டும் விரும்பிப் போய் மாட்டிக் கொண்டது… இப்படி ஒவ்வொரு நாட்டவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய படிப்பினைகள் ஏராளம். இங்கே ப…

  9. வணக்கம் கள உறவுகளே!!! இந்தப்பகுதியுடன் நெருடியநெருஞ்சியை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . இவ்வளவுகாலமும் எனது இம்சைகளை தாங்கி ஆக்கமும் ஊக்கமும் தந்த கள உறவுகளுக்கு நான் என்றுமே கடமைப்பட்டுள்ளேன் . இந்தப் பயணக்கட்டுரையை எழுதத் தயங்கி நின்ற பொழுது விசுகண்ணைதான் என்னைத் தட்டிகொடுத்தார் ,ஊக்கமும் தந்தார் . அவருக்கு நான் நன்றி என்று சொல்லி எமது நெருக்கத்தைத் தள்ளி வைக்க விரும்பவில்லை . என்றுமே எனது வளர்ச்சி உங்கள் கைகளிலேயே உள்ளது . வழமை போலவே உங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றேன் . நேசமுடன் கோமகன் ******************************************************************************************************************************* …

  10. கள நண்பர்களுக்கு வணக்கம். நான் கடந்த மாதம் பூராக பிரான்ஸ்சில் இல்லை. ஏறத்தாள 25 வருடங்களுக்குப் பின்பு இலங்கைக்குச் சென்றிருந்தேன். எனது வாழ்க்கையில் பாதியை தொலைத்த எனது புலப்பெயர்வு கடந்த மே மாதத்தில் எனக்குப் புதிய ரத்தத்தைப் பாச்சியது. நான் 25 வருடங்களின் பின்பு தாயகத்தைப் பார்த்தபொழுது எனது மனதின் வலிகளையும், நான் பார்த்த கேட்ட செய்திகளை கற்பனை என்ற கலப்படங்கள் இல்லாது உங்களுடன் பகிரலாம் என ஆவலாக உள்ளேன். இதன் தலைப்பு < நெருடிய நெருஞ்சி> . இதை நான் விளம்பரத்திற்காகவோ அல்லது பொழுது போக்கிற்காகவோ எழுதவில்லை. உங்களுடைய ஆரோக்கியமான விமர்சனங்களே என்னைத் தொடர்ந்து எழுத வைக்கும் ஊக்கிகள். நண்பர் சாத்திரி தனது பயணத்தை சொல்லும் பொழுது , நானும் சொல்வது சரியா …

  11. பொழுது விடிந்து நெடு நேரமாகியும் மலரினால் படுக்கையை விட்டு எழும்ப முடியாதபடி மனம்மிக சோர்வாக இருந்தது. சூரியக்கதிர்கள் பூமியைச் சூடாக்க ஆரம்பித்த வேளையது. அறையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தவள் மெல்ல பார்வைத் திருப்பி தனதருகில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை பார்வையால் வருடினாள். தம்மை மறந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தவர்களை பார்க்கையில் கணவன் நினைவு எழுந்து கண்களில் நீர் படலமிட்டது. மனம் விரும்பி வாழ்ந்தவனை இழந்து, வன்னியிலிருந்து தப்பிப் பிழைத்து பிள்ளைகளுடன் வந்தவளை ஊர் மட்டுமல்ல உறவுகளே ஒதுக்கித்தான் வைத்தன. பெற்றோரை மீறி தன் வாழ்வைத் தீர்மானித்தவள் என்ற காரணம் மட்டுமல்லாது, அtவளுடன் கதைத்தாலே தமக்கு ஆபத்து என்ற காரணமும் கற்பித்து அவளை ஒதுக்கியே வைத்தன…

  12. நேரம் வீட்டில் எல்லோரும் சோனாவுக்கு ‘ஹேப்பி பர்த் டே’ சொல்லிவிட்டார்கள். காலேஜ் தோழிகளும் போனில் வாழ்த்தி விட்டார்கள். வாட்ஸ்அப் குரூப்களிலும், ஃபேஸ்புக்கிலும் ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள். ஆனால் அவளுடைய காதலன் விஷாலிடமிருந்து மட்டும் எந்த அழைப்பும் இல்லை. ‘‘பையன் நம்ம பர்த் டேவை மறந்துட்டானோ?’’ - சோனா கொதித்துப் போனாள். மணி 9, 10, 11, 12 என்று ஓடி, மாலை 5ம் ஆகிவிட்டது. இன்னும் விஷாலிடமிருந்து போனைக் காணோம்.சரியாக ஐந்தரைக்கு ‘விஷாலி’ என்ற ஒளிர்வுடன் செல் அலற, ‘படவா ராஸ்கல்’ என மனதில் சீறியபடி ‘நங்’ எனப் பச்சையை அழுத்தினாள். ‘‘ஸ்வீட்டி, ஹேப்பி பர்த் டே டு யூ..!’’ ‘‘உனக்கு இப்பத்தானாடா விடிஞ்சது..?’’ என்று சோனா எகிறினாள். ‘‘என்ன ஹனி, இப்பிடி எரிஞ்சு விழ…

    • 3 replies
    • 1.1k views
  13. எழுதியவர்: ரவி நடராஜன் அது ஒரு வழக்கமான வட அமெரிக்க நாள். காலையானதைக் கடிகார அலாரம் அறிவித்ததில் நாள் ஆரம்பமானது. அலுவலகம் கிளம்புவதற்கு இன்னும் 1.5 மணி நேரமே உள்ளது. அதற்குள், செய்ய வேண்டியவை ஏராளம். ஒரு வழியாக, காலை வேலைகளை (அதாவது ஒரு 30 நிமிட தேகப் பயிற்சி, 45 நிமிட காலைக் கடன்கள்,, 15 நிமிட சிற்றுண்டி தயாரிப்பு மற்றும் உண்பது) முடித்து காரை விரட்டி, அலுவலத்திற்கு பயணம். முதலில் இந்த சிக்னலை யாராவது சரி செய்ய மாட்டார்களா என்று அலுத்துக் கொள்ளும் அளவிற்கு, 30 செகண்டுகள் எவ்வளவு மெதுவாக நகர்ந்து பச்சையானவுடன், அடுத்த சிக்னலுக்கு விரைய வேண்டும். ஒரு வேளை, சிக்னலில் 30 செகண்டுகள் படிப்படியாகக் குறைவதை காட்டாவிட்டால், அவ்வளவு அலுத்துக் கொள்ள மாட்டோமா? என்னுடைய …

  14. நேர்த்திக் கடன் - எஸ்.அகஸ்தியர்- - எழுத்தாளர் எஸ்.அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அவரது நினைவாக இச்சிறுகதை பிரசுரமாகின்றது. இதனை அனுப்பியுதவிய அவரது புதல்வி நவஜோதி யோகரட்னம் அவர்களுக்கு நன்றி. - பதிவுகள்.காம் - ‘உவள் ஒரு சரியான திடுமலிக் குமரி, சோக்கான வெள்ளைப் பொட்டை. அறுவாள் நல்ல சட்டையாப் போட்டுக்கொண்டு ஒதுக்கமா நில்லாம, இந்த நடுச்சந்தியில் இளிச்சுப் பிடிச்சுக்கொண்டு என்ன கண்டறியாத விடுப்புப் பாக்குது....!’ ‘போச்சுடா, ஆரோ அவசரமாக வாறான். வாறவனும் இளவட்டம் தான்....?’ ‘உவள் ஒரு நாய்ப் பிறவி, சிரிச்சமணீயம் அவனைத் தேடியல்லோ போறாள்? படு தோறை....’ ‘சனியன் இளிக்கிற விறுத்தத்தைப்பார். மூதேவி, போற வாறவங்களுக்கெல்லாம் வாயத் துற…

    • 1 reply
    • 808 views
  15. Started by நவீனன்,

    நேர்வழி! வாசலில் தன் பழைய, டி.வி.எஸ்., 50ஐ நிறுத்தி வீட்டிற்குள் நுழைந்தார், ரங்கநாதன். களைத்துப் போயிருந்த அவர், முகத்தை கழுவி, துணியை மாற்றி, ஹாலில் வந்து அமர்ந்தார். பேன் காற்று அவருக்கு ஆசுவாசம் தர, தன்னையறியாமல் ஆழ்ந்த பெருமூச்சை வெளியிட்டார். மாவட்டக் கல்வித் துறையில் அதிகாரியாக பணியாற்றும் ரங்கநாதன், அடுத்த ஆண்டு ஓய்வு பெற இருக்கிறார்; சம்பளத்தை தவிர வேறு எந்த பணத்தையும் வாங்க மாட்டார். அவரிடம் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால், விஷயத்தில் நியாயம் இருந்தால் மட்டுமே உதவுவார். அதற்கு எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார். அதேபோல தவறான காரணங்களுக்கு, யாராவது ஆதாயம் தேடி வந்தால், சம்மதிக்க …

  16. கதையாசிரியர்: பாரதிமணியன் ஆபிஸ்க்கு கிளம்ப நேரம் ஆகிவிட்டதே என்று அடிக்கடி செல்போனில் டைம் பார்த்துக்கொண்டே, அவசர அவசரமாக காலை டிபனைச் சாப்பிட்டான் அமுதன். சாப்பிட்டதும் பக்கத்தில் டைனிங் டேபிள் மேல் இருந்த டம்ளர் தண்ணீரை எடுத்து ‘மடக் மடக்’ கென்று குடித்துவிட்டு, எழுந்து வாஷ்பேசினில் கையை கழுவினான். அவனுடைய ஆபீஸ் பேக்கை எடுத்துத் தோளில் மாட்டிக்கொண்டு ஆபீஸ்க்கு கிளம்ப… மனைவி சங்கீதா அவனிடம் லஞ்ச் பாக்ஸைக் கொண்டு வந்து கொடுத்தாள். அந்த நேரம் பார்த்து, அவனுக்கு வந்த செல்போன் அழைப்பை, அவன் காதில் இருந்த ப்ளூடூத் இணைப்பில் தொடர்பு ஏற்படுத்திப் பேச ஆரம்பித்தான். சங்கீதா கொடுத்த டிபனை வாங்கி பேக்கில் வைத்துக்கொண்டு, அவளைப் பார்த்து ‘சரி, கிளம்புகிறேன்’ என்பதுபோல தலையை மட்டும்…

  17. நோக்கப்படாத கோணங்கள் இன்றைக்கு எங்களுடைய கல்யாண நாள் மாமா, நான் ஒருக்கா கோவிலுக்குப் போட்டு வாறன், பிள்ளை படுத்திருக்கிறாள், எழும்பினால் இந்தப் பாலைக் குடுங்கோ என்ன? ஓடியாறன். ஞாயிற்றுக்கிழமை பொழுது விடிந்ததும் விடியாததுமாக குளியல் அறையில் கேட்ட தண்ணீர் சத்தத்துக்கும் சமையல் அறையில் இருந்து வந்த தாளித்த மணத்துக்கும் விடை தெரியாமல் படுக்கையில் கிடந்து தவித்த ஓவிசியர் தணிகாசலம் மருமகள் சியானியை நிமிர்ந்து பார்த்தார். தினமும் இறுக்கமான ஜீன்சும் ரீசேட்டும் என்று பரபரப்பாக இருப்பவள் இன்று பட்டுப் புடவையில் மட்டுமல்ல ஒருவித வெட்கமும் கலந்த தொனியில் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.இந்தா பிள்ளை கொஞ்சம் நில்லு! என்ற ஓவிசியர் சட்டைப் பையிலிருந்து நூறு டொலர் காசை எடுத்து நீட்ட…

    • 8 replies
    • 1.3k views
  18. நோக்கியாவும் கயல்விழியும்! நெல்சன் சேவியர் இந்தக் கதையை நான் என்றுதான் ஆரம்பிக்க வேண்டும் என்று எனக்கும் ஆசை. ஆனால் இந்தக் கதையில் வரும் நான் என்பது என்னைக் குறிக்கும் என்பதாலும் என்னை உங்களுக்கு முன்பே தெரியும் என்பதும்தான் என்னுடைய பிரச்சினை. மேலும் அடுத்து நிறையக் கதைகளை நான் எழுத வேண்டி இருப்பதால்தான் யோசிக்கிறேன். பரவாயில்லை, நான் என்றே சொல்கிறேன். ஏனெனில் இது என்னுடைய கதை. நான்தான் அதை சொல்லியாக வேண்டும். இந்தக் கதை முடிந்ததும் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பீர்கள் என்பதுதான் கவலை. இப்படிக் கவலைப்பட்டால் நான் எப்படி எழுத்தாளன் ஆக முடியும்? நான் உங்களுக்குத் தெரிந்த இளைஞன்தான். என்னுடைய வயது ஒரு நல்ல வயதுதான். என்னுடைய பிரச்சினையே நான் காதலிக்காமல் போய்…

  19. நோஸ்ராடாமஸ்.... 1503 டிசம்பர் 14, பிரான்ஸின் வடக்கு பகுதியில் யூத தம்பதியினருக்கு பிறந்தார். (பின்னர், தந்தை கத்தோலிக்க மதத்துக்கு மாறினார்.) மருத்துவராக சாதாரண வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தார். திடீரென பிரான்ஸ்ஸில் கொள்ளை நோய் பரவத்தொடங்கியது. மருத்துவராக இருந்து பலரை காப்பாத்திய நோஸ்ராடாமஸால் அவரது குடும்பத்தை காப்பாத்த முடியவில்லை. தனது மனைவி,பிள்ளைகளை இழந்தார். இவ்விழப்புகளுக்கு பிறகு ஒரு நாடோடியாக மாறினார். நாடோடியாக இருந்தவேளையில் ஒரு பாதிரியாரின் நட்பு கிடைத்தது. அவரிடம் சீடராக பணியாற்றிய காலப்பகுதியில் நோஸ்ராடாமஸின் மன நிலையில் பெரும் மாற்றங்கள் நிகழத்தொடங்கியது. தனியாக இருந்து நீண்ட நேரம் வானத்தை உற்று பாக்க தொடங்கினார். யாரையாவது பார்த்து எதாவது சொல்ல அது …

  20. எனக்கு அப்போது ஏழு வயதிருக்கும். என்னவென்று சொல்லத்தெரியாத ஓர் கனமான, பீதி நிறைந்த அமைதிக்குள் மூழ்கிக்கிடந்தந்தது எனது தேசம். மேலே நீறு மூடிக்கிடந்தாலும் முழு வீச்சுடன் வெடித்தெரியத் தயாராகிக் கொண்ட்ருந்த விடுதலை வேட்கைத்தீயின் வெப்பம் அவ்வப்போது ஆங்காங்கே தலை காட்டி, உயிரின் ஆழம் வரை சிலிர்க்கச் செய்து விட்டு மறைந்தாலும், அதை இன்னதென்று கிரகித்துக் கொள்ளும் பரிபக்குவமோ அறிவாற்றலோ முதிர்ச்சி அடையாத வயது. ஆகவே தென்றலாகத்தன் வீசிக் கொண்டிருந்தது எனது பட்டாம் பூச்சிப் பருவம். அன்று பாடசாலை விடுமுறை நாள். வறுத்த அரிசிமாவுடன் தேங்காய்ப்பூவும் சேர்ந்து வேகும் வசனை, புதிதாய்ப்புலர்ந்த காலைப்பொழுதின் உற்சாகத்திற்கு உரம் கூட்டிக்கொண்டிருந்தது. அம்மா சுடவைத்துத் த…

    • 16 replies
    • 2.5k views
  21. Started by nunavilan,

    பகிடிவதை விதுஷன் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று விசேட சித்தியும், ஒரு திறமைச் சித்தியும் பெற்று சித்தியடைந்த மாணவன். கல்முனையில் பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவன். தந்தையை இளமையிலேயே இயற்கைக்குப் பலி கொடுத்தவன். வயதுடைய தாயையும், தனக்குக் கீழ் இரு தங்கைகளையும் கொண்டவன். இவ்வளவு காலமும் தாய் தயிர் காய்ச்சி விற்றும், அரிசி குற்றி விற்றும், விதுவை ஆளாக்கி விட்டாள். அவனும் விடுமுறைகளில் சிறுசிறு வேலைக்குச் சென்று பணம் தேடினான். ஆனால், இனி? அவனது எதிர்காலப் படிப்பு கேள்விக் குறியாகி விட்டது. தாய்க் கிழவி ஓயாத இருமலுடன் மூலைக்குள்ளே முடங்கி விட்டாள். இதுவரை இவர்களை எட்டிப்பார்க்காத சொந்தங்கள் விதுஷன் பல்கலைக்கழகம் செல்லவிருப்பதை…

    • 13 replies
    • 3.7k views
  22. Started by நவீனன்,

    பகை நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்புசிறுகதை: நர்சிம், ஓவியங்கள்: ஸ்யாம் மயானம் ஸ்தம்பித்தது. எல்லோருடைய பார்வையும் செல்வத்தின் மீது குவிந்திருந்தது. குமாரசாமி அய்யா, செல்வத்தைப் பார்த்துக் கத்தியதால்தான் இந்த அமைதி. மயானத்தில் ஒரு நொடி மயான அமைதி. `எங்கே... செல்வம் பதிலுக்கு ஏதாவது சொல்லி, மீண்டும் பெரிய சண்டை மூண்டுவிடப்போகிறதோ' என்ற அச்ச முடிச்சு, ஒவ்வொருவரின் பார்வையிலும் விழுந்திருந்தது. மீண்டும் கத்தினார் குமாரசாமி. “ஏன்டா, இங்கன என்ன கொமரியா கொள்ளையில போயிட்டா? `போறேன் போறேன்'னு இழுத்துக்கிட்டுக்கெடந்த கெழவி, கல்யாணச்சாவாப் போயிருக்கா. ஒம் பொண்டாட்டி நெற மாசமா இருக்காளாம்ல... அப்ப நீ காட்டுப் பக்கம் வரலாமா, ஆகுமா, என்னா இதுக்கு…

  23. பகையின் உச்சக்கட்டம்: ஆலடி அருணா கொலை வழக்கு | நெல்லையில் உள்ள ஆலடிபட்டியில் பிறந்தவர் அருணாச்சலம், பிறகு ஆலடி அருணாவாக மாறியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்தர்வர். எதிரிகளே அவ்வளவு இல்லாதவர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்? வடக்கன்குளம் S.A ராஜா என்பவர் பல கல்லூரிகள் நடத்திவந்தார். அவருக்கு போட்டியாக ஆலடி அருணா கல்லூரி திறக்க முடிவு செய்தார். அங்கு ஆரம்பித்தது பகை. அது விஸ்வரூம் எடுக்க 31.12.2004 ஆலடி அருணா கொலை செய்யப்பட்டார். இறுதியில் ராஜா விடுதலையும் ஆனார்.

  24. பக்கத்து வீட்டு இளைஞன் !! : மொழி பெயர்த்தவர்: சுரா நன்றி: www.lekhabooks.com/ சுராவின் முன்னுரை ‘பக்கத்து வீட்டு இளைஞன்’ (Pakkathu veettu ilaignan) - இளமை ததும்பும் இந்தக் கதையை மலையாளத்தில் படித்த நிமிடத்திலேயே அதைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். கெ.கெ.சுதாகரன் (K.K.Sudhakaran) ஒரு நூலகர். இந்த நாவலைத் தவிர, வேறு சில நல்ல நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார். இந்தப் புதினத்தின் கதாநாயகி ரேகா நம்மை ஆச்சரியப்பட வைக்கும் கதாபாத்திரம். அதை முழுமையாகச் செதுக்கியிருக்கிறார் சுதாகரன். அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆர்வம் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு அத்தியாயத்தைப் படிக்கும்போதும் நமக்கு உண்டாகும். இதன் இற…

    • 19 replies
    • 7.9k views
  25. “சும்மா போ அன …இனி வெறுங்கல்லு .. என்னால தோண்ட ஏலாது” “என்ற அச்சா குஞ்சல்லோ, இன்னும் ரெண்டு அடி தான் .. தோண்டினா .. குத்தி போட்டு மண்மூடை அடுக்கலாம்” “அப்ப பின்னேரம் லலித்தொட கிரிக்கட் விளையாட விடுவியா?” “சரி என்னத்தையும் போய் விளையாடு .. இப்ப இத கிண்டு” அம்மா கிரிக்கட் விளையாட பெர்மிஷன் தந்த சந்தோசத்தில் போட்ட பிக்கான் கொஞ்சம் ஆழமாகவே விழ, யாழ்ப்பாணத்து கல்லு “நங்” என்று சத்தம் போட்டது. கொஞ்சம் கையால் மண்ணை கிளறி, கல்லை க்ளீன் பண்ணிவிட்டு, மீண்டும் சரியான கொட்டு பார்த்து பிக்கான் போட்டேன். சர்க்கென்று பிக்கான் இறங்க, நான் பிடியை ஒரு எம்பு எம்ப சர்ர்க்க்க்க் என்று இன்னொரு சத்தம். பிக்கான் மரப்பிடி முறிந்துவிட்டது! என்னடா இது சிறுகதை போலே ஆரம்பிக்கிறே…

    • 26 replies
    • 5.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.