கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
பகுதி ....1 என்ன இவள் இப்படிச் சொல்லிக் கொண்டு வாறள் எண்டு எல்லாரும் நினைக்கிறது எனக்கு விளங்குது..என்ன செய்யிறது..?நானும் எனது ஆக்கத்துக்கு பல தரப் பட்ட பெயர்களை வைத்துப் பார்த்தேன் இது தான் தற்போதைய நிலையில் புலம் பெயர்ந்து இருக்கும் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் பொருந்தும் போல இருந்துச்சு "பணம் பந்தியிலே குணம் குப்பையிலே" எண்ட பெயரை வைச்சுட்டன்..எனது எழுதுக்கு பச்சை புள்ளி தராட்டிக்கும் பறவாயில்லை...சிவப்பு மட்டும் குத்திப் போடாதியள்..எனக்கு சிவப்பை கண்டாலே அலர்ஜி..எனது முன்னேற்றத்துக்கு தட்டிக் கொடுப்பதும் தள்ளி விழுத்துவதும் உங்கள் கைகளில் தான் இருக்கு.இனி விடயத்துக் வாறன்.. எல்லோரும் அறிந்த விடயம் பெருவாரியாக 1983,1984 ஆண்டுப் பகுதியிலிருந்து வெளிநாடுகள…
-
- 15 replies
- 3.9k views
-
-
குடந்தை பஸ் நிலையம். மார்க்கட் இழந்த நடிகையைப் போல சீந்துவார் இன்றி, நின்று கொண்டிருந்தது.அந்த டப்பா பஸ். ஓட்டுநர் ராசு வண்டிக்கு அடியில் அமர்ந்தவாறு கவலையுடன் பாகங்களைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தான். ஹூம்.. அடுத்த எஃப்.சி. வரை வேற ஒரு ஸ்பேர் பார்ட்டும் மாத்தாம இந்த டப்பாவை ஓட்டியாகணும்...! சுப்பய்யர் பஸ் சர்வீஸ் ஒரு காலத்தில் ஓஹோ என்று ஓடியது. 12 வண்டிகள். ஆனால் சுப்பய்யருக்கு ஏகப்பட்ட பொண் குழந்தைகள். எல்லாத்தையும் கட்டிக் கொடுக்க கொட்டிக் கொடுத்தும் வட்டிக் கொடுத்தும் அழிச்சது போக இந்த டப்பா மட்டும் மீதி. இன்னொரு பொண்னு இருக்கு. அதுக்காக இந்த ரூட்டை இழுத்துப் பிடிச்சுட்டு இருக்காரு சுப்பய்யரு. ராசுவோட அப்பாவும் இந்தக் கம்பெனியில டிரைவரா இருந்தாரு. அப்ப…
-
- 1 reply
- 1.4k views
-
-
அசோகா சக்கரவர்த்தி தன் ரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது எதிரே ஒரு புத்தத்துறவி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததும் ரதத்திலிருந்து இறங்கி வந்து அவர் காலில் விழுந்து வணங்கினார். அதைக் கவனித்த அவரது தளபதிக்கு மாமன்னர் ஒரு பரதேசியின் காலில் விழுவதா என்று வருத்தம் ஏற்பட்டது. அதை அரண்மனைக்கு வந்ததும் மன்னரிடமே வெளிப்படுத்தினார். மன்னரோ அவரது வினாவுக்கு விடையளிக்காமல் ஒரு ஆட்டுத்தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத்தலை மூன்றும் உடனே வேண்டும் என ஒரு வினோதமான ஆணையிட்டார். மூன்று தலைகளும் கொண்டு வரப்பட்டன. மன்னர் மூன்றையும் சந்தையில் விற்றுவரச் சொன்னார். ஆட்டுத்தலை உடனே விலை போயிற்று.புலித்தலையை வாங்கப் பலரும் யோசித்தனர். இறுதியில் ஒரு வேட்டைக்காரர் தன் வீட்டு சுவற்றில் …
-
- 1 reply
- 1.3k views
-
-
என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை... நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , அன்புக்கு பஞ்சம் இல்லை .பெரிய பட்டண மத்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பலவகை எல்லாம் ...கொண்டு ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் பப்பா.. நெஞ்கிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) தொடரும் ...பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டன் ..பப்பா ..அந்த பாட்டு…
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-
-
'கந்தசாமி எம்.எல்.ஏ., பதவியிலிருந்து விலகல். கட்சியிலிருந்தும் விலகினார்' என்று டி.வி-யில் பிளாஷ் நியூஸ் ஓடியது. தொண்டர்கள், மக்கள், பத்திரிகையாளர்கள் என கந்தசாமியின் வீடே நிரம்பி வழிந்தது. கந்தசாமி வெளியில் வந்தார். அவரை நிருபர்கள் மொய்த்தனர். "ஏன் சார் திடீரென்று இந்த ராஜினாமா?" "நான் கடந்த மூன்று வருடமா எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருக்கேன். ஆனால், என்னை நம்பிவாக்களித்த மக்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியல. மக்களுக்கு பயன்படாத இந்த பதவி இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன என்று முடிவு செய்து ராஜினாமா செய்து விட்டேன்." "கட்சியிலிருந்தும் விலகியிருக்கீங்களே?" "நான் என் முடிவை என் கட்சி தலைமையிடம் சொன்னபோது என் தலைமை அதை ரசிக்கவில்லை. மாறாக, நான…
-
- 2 replies
- 1.3k views
-
-
பதினொரு பேய்கள் அ. முத்துலிங்கம் ஆறு மாதம் சென்ற பின்னர்தான் தோழர் சிவா சுப்பிரமணியத்துக்கு என்ன பிரச்சினை என்பது புரிய ஆரம்பித்தது. இயக்கத்தில் அவர் சேர்ந்து மூன்று வருடம் ஆகியிருந்தது. அவருடன் சேர்த்து செயல்குழுவில் 11 பேர் இருந்தனர். அவர்தான் யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பாளர் என்று அறிவிப்பு வந்துவிட்டது. ஆனால் செயற்குழுக் கூட்டத்தில் செல்வன் கேட்ட கேள்வி அவரை யோசிக்க வைத்தது. அதில் இருந்த நியாயம் அவருக்கும் தெரியும். மற்ற குழுக்காரர்கள் அவனை அவமானப்படுத்திவிட்டார்கள். எல்லோரிடமும் வாகனம் இருந்தது. துப்பாக்கி இருந்தது. அவர்களிடம் ஒன்றுமில்லை. தலைவர்கள் இந்தியாவில் சொகுசாக உட்கார்ந்துகொண்டு கட்டளைகள் பிறப்பித்தார்கள். எப்படிப் போராட முடியும்? யாழ்ப்பாணத்தில் மாத்த…
-
- 2 replies
- 2.4k views
-
-
பதினோராவது பொருத்தம் இப்படி ஒரு தேசிய விருது உங்களுக்குக் கிடைக்கும்னு நினைச்சீங்களா?” தன்னைச் சூழ்ந்து நின்ற பத்திரிகை நிருபர்களில் இந்தக் கேள்வியைக் கேட்ட அந்த இளம் நிருபரை ஒரு பளிச்சிடும் புன்னகையோடு பார்த்தாள் வர்ஷா. 23 வயதான சித்தன்னவாசல் ஓவியம். ” ‘மகிள ரத்னா’ என்கிற பெயரில் ஒரு விருது இருப்பதும், அது சமூக சேவையில் ஈடுபட்டு இருக்கும் சிறப்பான பெண்களைத் தேர்ந்தெடுத் துக் கொடுக்கப்படுகிறது என்கிற விஷயமும் இன்னிக்குக் காலையில்தான் எனக்குத் தெரியும். பொதுவாக, எனக்கு விருதுகளில் விருப்பம் இல்லை. இது எல்லாம் ஒரு நாள் சந்தோஷம்!” மூத்த நிருபர் ஒருவர் கேட்டார்… ”இந்தச் சின்ன வயதிலேயே சமூக சேவையில் இறங்கிட்டீங்க. அதுல சிறப்பா சேவை செஞ்ச த…
-
- 0 replies
- 1.1k views
-
-
பதுங்கு குழி எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போ…
-
- 1 reply
- 1k views
-
-
பதுங்குகுழியும் பட்டினி வாழ்வும் “எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடூர வாழ்க்கை” அவள் மீண்டும் விம்மி விம்மி அழத்தொடங்கினாள். “அழாதையம்மா கண்ணைத் துடை…என்ன செய்யிறது தமிழராய் பிறந்து துலைச்சிட்டோம் அதுதான்…” “அதுக்கு கடவுளுக்குக் கூடக் கண்ணில்லைத்தானேயப்பா” என்றபடி அவள் மேலும் விம்மத் தொடங்கினாள். பதுங்கு குழிக்குள் இருந்து இன்றுடன் வெளியுலகு பார்த்து மூன்று நாட்கள் ஆகி விட்டிருந்தது. நேற்றும் முந்தநாளும் பிள்ளைகள் நித்திரை கூடக் கொள்ளவில்லை. ஒரே செல்லடி… இன்றுதான் செல்லடி கொஞ்சம் குறைந்து பிள்ளைகள் நித்திரை கொள்கிறார்கள். பாவம் அவள் என்னதான் செய்வாள் வாழ வேண்டிய வயதில் கணவனை யுத்தத்தின் கோரப் பற்களுக்கு இரையாக்கிவிட்டு… தனிமையில் மூன…
-
- 15 replies
- 2.4k views
-
-
பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன் ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.” “ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார். “இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆ…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஆன்டன் செகாவ் 'பந்தயம்' மரண தண்டனை வேண்டுமா என்று உலகம் முழுவதும் விவாதங்கள் இருந்து கொண்டிருக்கின்றன. மூன்று பேரின் முடிவை தள்ளி போட தமிழர்கள் தவித்து வருகின்றோம். ஒருவரின் உயிரை எடுக்க யாருக்கு உரிமை உள்ளது என்ற வாதத்தை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில், அந்தக் கேள்விக்கான பதிலை தனது எழுத்தின் மூலம் சிறுகதையாக்கி முடிவை காவியம் போல் செதுக்கியிருக்கிறார் புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஆன்டன் செகாவ். எப்போதோ படித்த இந்தக் கதை எப்போதும் துரத்திக் கொண்டிருக்கிறது வாழ்ந்தே ஆக வேண்டிய நம் வாழ்க்கையைப் போல. அந்தக் கதையின் ஆங்கில வழி தமிழாக்கம் இது. பந்தயம் பனி பொழியும் ஓர் இரவில் தன…
-
- 1 reply
- 1.1k views
-
-
"மறுபடியும் இந்தத் தடவை யாரைக் கெடுக்கிறாய்?" தோளின் பின்னாலிருந்து சுவாமிநாதனின் குரல் கேட்டதும், விசு பேனாவை மேஜை மீது வைத்துவிட்டான். இனி அவன் இருக்கும் வரை எழுத ஓடாது. "புதுப் பறவையா?" சுவாமிநாதன் கேட்டான். விசு சிரித்தான். சுவாமிநாதனைப் பார்த்தால் அவனுக்குச் சிரிப்பு வரும். இயலாமையை நல்லதனம் என்று நினைத்துக் கொண்டு திருப்திப் பட்டுக்கொள்பவர்கள். சுவாமிநாதன் நல்லவன். சிகரெட் பிடிக்கமாட்டான். சீட்டாட மாட்டான். முதல் வரிசையில் உட்கார்ந்துகொண்டு பாடத்தை சிரத்தையாகக் கேட்பான். பெண்களின் நிழல் கூடப் பிடிக்காது. அவனைக் கண்டால் விசுவுக்கு பாவமாக இருக்கும். வேடிக்கை என்னவென்றால் விசு என்றால் சுவாமி நாதனுக்கும் இரக்கம்தான். " பெண்களுக்கே இல்லாத …
-
- 0 replies
- 745 views
-
-
பந்தல் ஏறிய கொள்ளுக்கொடி! - சிறுகதை பி.ச.குப்புசாமி, ஓவியங்கள்: ம.செ., மரங்களின் மீதும் காடுகளின் மீதும் தனிக் காதல்கொண்டவர் என் நண்பர். அவரை முதலில் அறிமுகப்படுத்திவிடுகிறேன். என் நண்பருடைய தந்தை ஃபாரஸ்ட்டராகப் பணிபுரிந்தவர். தாயை இழந்த என் நண்பரும் அவர் சகோதரியும், இளம் வயதில் அடிக்கடி காட்டிலே இருந்த தந்தையிடம் போய்த் தங்குவது உண்டு. தாவரங்களின் மீதான அவரது காதல், அப்போது இருந்து மூண்டிருக்கும் என்று நினைக்கிறேன். அதோடுகூட, அவர் கொஞ்ச காலம் ஒய்.எம்.சி.ஏ-வில் தங்கிப் பயின்றவர். எதிலும் அறிவியல்பூர்வமான மனோபாவம் செலுத்துபவர். எல்லாம் சேர்ந்து அவரை வார்த்தன என்றும் சொல்லலாம். தாவரங்களை அவர் ஏதோ சத்தியங்கள் போல் பேணினார். '…
-
- 1 reply
- 1.9k views
-
-
பனங்காடு – கருணாகரன் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி செல்லும் நெடுஞ்சாலையில் முப்பது கல் தொலைவில் இருக்கிறது இயக்கச்சி. முறைப்படி சொல்ல வேண்டுமானால், கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் வழியில் 169 கல் தொலைவில் இருக்கிறது ஊர். கிலோ மீற்றரில் சொல்வதென்றால், 270ஆவது கல்லில் இருக்கிறது அது. இப்போது இரண்டு கற்களும் அங்கே உண்டு. எந்தக் கல்லை வைத்தும் அடையாளம் கண்டுவிடமுடியும். யாழ்ப்பாண ராஜ்ஜியத்திலிருந்து கண்டி ராஜ்ஜியத்துக்குப் போகும் வழியே இந்த நெடுஞ்சாலை என்று சொல்வார் மாமா. ஐரோப்பியர்கள் முதலில் இலங்கையில் நெடுஞ்சாலைகளை அப்படித்தான் அமைத்திருக்கிறார்கள் என்பது அவருடைய வாதம். கண்டி ராஜ்ஜியத்திலிருந்து கொழும்பு கோட்டை ராஜ்ஜியத்துக்கும் கோட்டை ராஜ்ஜியத்திலிருந்து கா…
-
- 1 reply
- 882 views
-
-
மூத்தவளின் பிறந்தநாள் கொண்டாட்டத்திக்கு சிவாவின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பாக ஆயத்தங்கள் செய்ய தொடங்கிவிட்டாள்,இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.சிவாவின் மனைவி சுதா பல வருடங்களுக்கு முதலேசிட்னிக்கு குடிபெயர்ந்தவள்.சிவா அவளை திருமனம் செய்தபடியால் அவுஸ்ரேலியா பிரஜாவுரிமை கிடைத்தது.சிவாவைவிட சுதாவுக்கு வெளிநாட்டு அனுபவங்கள் அதிகமாகவே இருந்தது சப்ரைஸ் பார்டிகள்,பிறந்தநாள் பார்டிகள் ஒழுங்கு செய்வதுபோன்றவற்றில் அவளுக்குத்தான் அதிகம் அனுபவமிருந்தது. பிள்ளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது என்றால் ஒரு புது சட்டை உடுத்தி,கேக் வெட்டி ,5,6 பலூன் கட்டி கொண்டாடினால் போதும்தானே இதற்கு போய் ஏன் ஒரு மாததிற்கு முதலே பெரிய கலியாணவீடு செய்யிறமாதிரி பில்டப் காட்டுவான் என நினைத்தான். மூத்தவ…
-
- 19 replies
- 3.6k views
-
-
[size=5]பனங்கொட்டை பொறுக்கி[/size] குரு அரவிந்தன் உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல் மேய்வதற்குப் பகீரதப் பிரயத்…
-
- 3 replies
- 1.1k views
-
-
பனங்கொட்டை பொறுக்கி பனங்கொட்டை பொறுக்கி குரு அரவிந்தன் (குரு அரவிந்தன்) உள்நாட்டுப் போரின் பாதிப்பு ஆங்காங்கே வெளிப்படையாகத் தெரிந்தது. கவனிப்பு அற்ற பிரதேசம் என்பதால் ஏ9 பாதை குண்டும் குழியுமாயிருந்தது. சில இடங்களில் பாதைகள் செப்பனிடப் பட்டிருந்தன. முன்பெல்லாம் இப்பாதையில் பயணிக்கும்போது பயந்து நடுங்கிக் கொண்டே பயணிக்கவேண்டும். இராணுவத்தின் கெடுபிடி ஒருபக்கம், தெருவோரக் கண்ணிவெடிகளின் பயம் மறுபக்கம். தப்பித்தவறி வண்டி பாதையைவிட்டு விலகினால் காவு கொள்ள எங்கேயென்று கண்ணிவெடிகள் காத்திருக்கும். பாதை ஓரத்தில் அக்குள் தண்டு பிடித்து மெல்ல மெல்ல நொண்டிக் கொண்டு சென்ற அந்த சிறுவனுக்காக என் மனம் பரிதாபப்பட்டாலும், சற்றுத்தள்ளி மூன்று காலில் நொண்டிக் கொண்டு புல…
-
- 11 replies
- 3.3k views
-
-
பனி -இளங்கோ ஓவியம்: கருணா அவன் பழைய கிங்ஸ்டன் தெரு, 401 நெடுஞ்சாலையோடு இணைகின்ற பகுதியில் நடந்து கொண்டிருந்தான். மெல்லியதாகப் பெய்த பனி, அணிந்திருந்த கறுப்பங்கியின் மேல் மல்லிகைப் பூவைப் போல விழுந்து கரைந்து போய்க்கொண்டிருந்தது. வானத்தை மூடியிருந்த கருஞ்சாம்பல் போர்வை ஒருவகையான நெகிழ்வை மாலை நேரத்துக்குக் கொடுக்க, இலைகளை உதிர்த்த மரங்கள் தலைவிரிகோலமாய் வானை நோக்கி எதையோ யாசிப்பது போலத் தோன்றியது. எல்லா இழைகளும் அறுக்கப்பட்டு தானும் தனித்துவிடப்பட்ட தனியன்தானோ என்கிற வெறுமை இவனுக்குள் பரவத் தொடங்கியது. தலைவிரிகோல மரங்களைப் போன்று, பனித்திடலில் இரு கால்கள் புதைய நடமாடும் மரமெனத் தன்னை உருவகித்தும் கொண்டான். இன்னகாரணம் என்றில்லாது கண்களிலிருந்து நீர் கசியத்தொடங்குமளவு…
-
- 10 replies
- 1k views
-
-
பனி நிலா - சிறுகதை சிறுகதை: அராத்து, ஓவியங்கள்: செந்தில் கார் டயர் டொம்ம்ம் என்று வெடித்து வண்டி 130 டிகிரி திரும்பித் தேய்த்துக்கொண்டு போனது. மதிய நேரமே இரவுபோலக் காட்சியளித்தது. கடும் மழையால் இப்படி இரவு போல இருந்தாலும், இப்போது மழை பெய்யவில்லை. இந்தக் குளிரிலும் இரண்டு குளிர்ந்த பியர் அடித்துவிட்டு தன் உயர்ரக ஏசிக்காரை புகையிட்டு நாறடித்துக்கொண்டு வந்த தரண், முன்னால் சென்ற காரின் டயர் வெடித்ததைப் பார்த்ததும், பதமாக பிரேக் அடித்தான். டயர் வெடித்த காரிலிருந்து பதற்றமேயில்லாமல் ஒருத்தி இறங்கினாள். பார்ப்பவர்க்கு ஸ்கர்ட்டும் டாப்ஸும் அணிந்திருப்பதுபோலத் தோன்றினாலும், அது ஒரே கவுன். உடலுடன் ஒட்டியில்லாமல் படர்ந்து இருந்தது. தரண் அவளைக…
-
- 0 replies
- 3.5k views
-
-
தண்டவாளத்தின் ஓரமாக கவிழ்ந்து கிடந்த ஒற்றைச்செருப்பை மீண்டும் திரும்பிப் பார்க்கிறேன். என்னையறியாமல் கண்களை அதன் மற்றைய செருப்பை தேடுகின்றன. அருகில் எங்கேயும் காணவில்லை. ஏமாற்றத்துடன் தொடருந்து வருகிறதா என்று பார்க்கிறேன் அல்லது பார்ப்பது போல நடித்து என்னை ஏமாற்றிக்கொள்ள முயல்கிறேன். இதோ இந்த தண்டவாளத்தில் எத்தனையோ பொருட்கள் சிதறியும் சிதைந்தும் கிடக்கின்றன. குழந்தைகளின் பொருட்கள் கிடக்கின்றன. உடைந்து போன குடை கிடக்கிறது. கையுறைகள் கிடக்கின்றன. யாரோ ஒரு பெண் அணிந்த அலங்கார தலைமுடி கூட கிடக்கிறது. ஆனால் இந்த செருப்பை மட்டும் மனது ஏன் காவிக்கொண்டு வருகிறது. மீண்டும் அந்த செருப்பு கிடந்த இடத்தை பார்க்கிறேன். முழுமையாக பார்ப்பதற்காக கொ…
-
- 8 replies
- 1.9k views
-
-
-
மச்சான் சுமதி வீட்டு வாசலில நிக்கிறாடா.. என்ற தகவலோடு MB5 மோட்டார் சைக்கிளில் பறந்து வந்திருந்தான் ரங்கன். பதிலுக்கு.. பொறுடா மச்சான்.. இப்பவே வெளிக்கிட்டு வாறன்டா.. கொஞ்சம் வெயிட் பண்ணு என்று அறைக்குள் நம்பர் 11 ஐ கொழுவிக் கொண்டே சவுண்டு விட்டான் சங்கர். 1986 களில் கோடை வெப்பத்தை தாங்க முடியாத யாழ் நகரத்து குடிமக்கள் மாலை நேரங்களில் வீட்டு முற்றத்துக்கு தண்ணீர் தெளித்துவிட்டு வீட்டுக்கு முன் கேற்றடியில் காத்து வாங்கிறம் என்று சொல்லி கூடி நிற்பது வழமை. அதேபோல் அன்றும் சுமதி வீட்டின் முன்னும் பெண்கள் கூடி இருந்தனர். சுமதி வீட்டில் கண்டிப்பான தகப்பன், தாய் மற்றும் 3 இளம் பெண் பிள்ளைகள், அவர்களின் நண்பிகள் என்று எப்போதுமே இளம் பெண்களின் நடமாட்டம் அதிகம். சுமதிக்கு…
-
- 15 replies
- 2.9k views
-
-
பயணங்களின் முடிவில்! சுமிக்கு, சோர்வாக இருந்தது. நாள் முழுவதும் ஓயாத வேலை; பண்டிகை தினம் என்பதால், சோளிகளும், சுடிதார்களும் வந்தபடி இருந்தன. ஒரு பக்கம் மகிழ்ச்சி தான் என்றாலும், தோள்பட்டையும், கையும் தேய்ந்துவிட்டது போன்று வலித்தன. உதவிப் பெண் கூட சொன்னாள்... 'அக்கா... டிசைனர் சோளி, பிரைடல் சோளி ரெண்டுக்கும் உங்க கையால கட்டிங் செய்தா தான், பர்பெக்ட்டா இருக்கு...' என்று! உண்மை தான்; நான்கு ஆண்டுகளுக்கு முன், குருட்டு தைரியத்தில், 'சுமி ஸ்டிச்சஸ்' என்று ஆரம்பித்தது, இன்று பெயர் விளங்கும் கடையாக வளர்ந்து வருவதில் பெருமை தான். மகன் மழலையாக மடியில் இருக்க, கண…
-
- 0 replies
- 926 views
-
-
அவள் கண்களில் மிரட்சியோடு என்னை பார்த்துக் கொண்டு அந்தப் படகில் கிடந்தாள். அவள் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. என்னோடு வருவதை அவள் விரும்பியும் இருக்கலாம். ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வில் அவளின் கைகளை கட்டிப் போட்டிருந்தேன். அன்றைக்கு கடல் அமைதியாக இருந்தது. அவளையும் தூக்கி படகில் போட்டுக் கொண்டு வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன். ...... என்னுடைய மனைவியின் வருகைக்காக நானும் என்னுடைய சிறுவயது மகளும் காத்துக் கொண்டிருந்தோம். இன்று பகல் முழுவதும் காத்திருந்து விட்டு வந்தாலும் வராவிட்டாலும் இரவில் பயணத்தை தொடர வேண்டும். பகலில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. யாராவது மனிதர்களின் கண்களில் பட்டு விடலாம் சில வாரங்களுக்கு முன்புதான் என்னுடைய மனைவிக்க…
-
- 13 replies
- 1.8k views
-
-
பயணம் ..................... பத்து வருடங்களிற்கு பின்னர் மீண்டும் இந்தியாவிற்கான எனது பயணம். கடைசியாக 2001 ம் ஆண்டு நேபளம் சென்று அங்கிருந்து தரைவழியாக இந்தியா போயிருந்தேன்.ஆனால் இந்தமுறை எனது பயணம் எனக்கே வித்தியாசமானதாகவிருந்தது. காரணம் இந்தத் தடைவை எனது சொந்தப் பெயரில் சொந்தக் கடவுச்சீட்டில் பிரெஞ்சுப் பிரசையாக செல்வது மட்டுமல்லாது விடுமுறை எடுத்து மனைவியுடன் அவளது குடும்பம் மற்றும் என்னுடைய நண்பர்களை மட்டுமே சந்திப்பதற்காக செல்லும் பயணம்.இந்தப் பத்து வருடத்தில் என்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. எனது இந்திய நண்பர்கள் அனைவருமே நான் போராட்டத்தில் இணைந்ததன் பின்னர் அறிமுகமானர்கள் மட்டுமல்லாது ஈழப் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை எம்முடன் கைகோர்த்து நடந…
-
- 283 replies
- 41k views
- 2 followers
-