Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. அரிசி சோமசந்தரம் மாஸ்ரரின்ர இளைய பொடியன் பெரிய கள்ளன் என்றில்லை. கள்ளனென்றால் கறுப்போ வெள்ளையோ துணியால முகத்தை மூடிக் கட்டிக் கொண்டு வாள் அல்லது துவக்கு கொண்டுவந்து களவெடுக்க வேணும். களவெடுக்கேக்க ஒராளைப் போட்டுத்தள்ள வேணும். இல்லையென்றால் இரண்டு பேரின்ர காதையோ கையையோ அறுத்தெறிய வேணும். இல்லையென்றால் கள்ளனுக்கு மரியாதையில்லை. இவன் கள்ளன் இல்லையென்றும் இல்லை. முந்தி சின்னப் பொடியனாக இருக்கேக்க கைச் செலவுக்கு என்ன செய்வான்? மாஸ்ரர் சேட்டைக் கழற்றிப் போட்டிட்டு ஈசிச் சேரில படுத்து வயித்தைத் தடவிக் குடுத்துக் கொண்டிருப்பார். இவன் பொக்கற்றுக்குள்ளயிருந்து இருபதோ முப்பது ரூபா எடுத்து கொப்பி உறைக்குள்ள வைச்சு மறைச்சிடுவான். இன்று பார்த்து கன நேரமிருந்து படிப்பான். மா…

  2. இது யோ.கர்ணனின் வலைத்தளத்திலிருந்து பதிகிறேன். எழுத்து எண்ணம் யாவும் கர்ணன். யுத்தத்தின் பின் வீடுகளிற்கு திரும்பிக் கொண்டிருக்கும் முன்னாள்ப் போராளிகள் சந்திக்கும் நெருக்கடிகள் பற்றி பல்வேறு இடங்களிலும் பலரும் பதிவு செய்திருக்கிறார்கள். ஆகவே நான் புதிதாக எதனையும் இங்கு குறிப்பிடவில்லை. அவர்கள் பற்றி, அவர்களது நிலைமை பற்றி இந்த உலகத்திற்கு குறிப்பாக தமிழ் சமூகத்திற்கு மிகத் தெளிவாகவே தெரியும். ஆயினும் காக்கப்படும் கள்ள மௌனத்தின் அர்த்தம் மிகக் கேவலமானது. இதுபற்றி ஒருவர் குறிப்பிடும் போது எழுதியிருந்தார் – ‘அவர்கள் வெற்றிகளிற்கு மட்டுமே உரிமை கோருவார்கள்’ என. உண்மைதான் அதனைச் சிறு திருத்தத்துடன் ஏற்றுக் கொள்ளலாம். வெற்றிபெற்றவர்களிற்கு மட்டுமே அவர்கள் உரிமை கோரு…

  3. காலம் மட்டும் எவருக்காகவும் காத்திருக்கவில்லை. அவர்களது அவ்வப்போதைய உரையாடல்களிலிருந்து தேவகி மருத்துவத் துறையில் படிக்கிறாள் என்றும், இரத்தினபுரியில் மாமாவின் கடையிருக்கின்றது என்றும், அங்குதான் உயர்தர வகுப்புப் பரீட்சை எடுத்ததாகவும். போட்டியில்லாததால், இலகுவாக மருத்துவத் துறை கிடைத்ததாகவும் தெரிந்தது. அவனிலும் பார்க்க, அவளுக்குப் புள்ளிகள் மிகவும் குறைவாகவே கிடைத்திருந்தது. முறைப்படி பார்த்தால் அவனுக்குக் கோபம் வந்திருக்க வேண்டும். பதிலாக அவளது குறுக்கு வழி சென்ற கெட்டித் தனத்தை எண்ணி, மகிழ்ச்சியே ஏற்பட்டது. தானும் அப்படி வேறொரு பிற்போக்கான இடத்திலிருந்து ஏன் சோதனை எழுதவில்லை என்று தன் மீது தான் கோபம் வந்தது. மூன்று வருடங்களின் முடிவில் கையில் ஒரு மட்டை கிடை…

  4. Started by Innumoruvan,

    சனிக்கிழமை காலையில் மற்றும் பொங்கலிற்கு முதல் நாள் தமிழ் மளிகைக்கடைக்குப் போவது எனக்கு மிகப்பிடிக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ, தமிழ் கடையில் காணும் எங்கள் மக்கள் எல்லோர் மீதும் ஒரு அதிகரித்த ஈர்ப்பை உணருகிறேன். ஒரு ஆச்சியைக் கண்டால் கையைப் பிடிச்சுக் கூட்டிப்போகவேணும் போல, ஒரு அப்புவைக் கண்டால் அவர் தன்னைப் பெரிய மனிதர் என்று மீண்டும் உணரும் வகை அவரிடம் ஏதாவது கேட்கவேணும் போல, ஒரு அண்ணையைக் கண்டால் எப்பிடிச் சகோதரம் சுகம் எண்டு கேட்கவேண்டும் போல, வடிவான பொம்பிளைப் பிள்ளையள் ஆரைப் பாத்தாலும் முகவரி பட ஜோதிகாவைப் பாத்தது போல—எங்கட பிள்ளையள் எண்ட உரிமையோட—ஒரே உணர்வுப் பிரவாகம். இது மனிதரில் மட்டுமல்ல, கருணைக் கிழங்கில, கத்தரிக்காயிலை என்று பல பரிமாண உணர்வுப் பிரவாகம். கறுப…

  5. வியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. “”எப்படியிருக்கிறது உன் விடு தலை?” என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: “”வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.” அமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்க…

  6. அது ஒரு கோடைகாலத்தின் மாலை நேரம். சூரியன் பகல் நேரத்துச் சந்திரனைப் போல வானத்தில் வெள்ளயாகத் தன்னை, அடையாளம் காட்ட எத்தனித்துக் கொண்டிருந்தது. கலங்கிய வண்டல் மண் கலந்து மஞ்சள் நிறத்துடன் 'தேம்ஸ் நதி' அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. சந்திரன், அந்த நதிக்கரையின் ஓரத்தில் போடப்பட்டிருந்த ஒரு இரும்புக் கதிரையில் இருந்தவாறே, கலங்கியிருந்த நதியின் அசைவுகளை அவதானித்துக் கொண்டிருந்தான். அவனது முகத்தில், அடர்த்தியாகத் தாடி வளர்ந்திருந்தது. அவனருகில் ஒரு சிகரெட் பெட்டியோன்று, தனது வாயை அகலத் திறந்த படி, வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கச் சுருள், சுருளாகப் புகை வளையங்கள், அவனது வாயாலும் மூக்காலும் வந்து கொண்டிருந்தன. அங்கு வந்த சில ஜப்பானியர்களுக்கு, அவனது இருப்பு ஒரு இடைஞ்சலாக …

  7. Started by Sembagan,

    தோட்டம் எனது பிள்ளைகள் அடிக்கடி, தோட்டத்தைப் பற்றியும் மரங்கள் நடுவது, பழங்கள் பிடுங்குவுது, வளர்ப்பு மிருகங்களுக்கு தண்ணீர் வைப்பது எனப் பலவாறு பேசிக்கொண்டே இருப்பார்கள். கேட்க எனக்கு சந்தோசமாகத்தான்; இருக்கும். தாய்தகப்பன்ரை காசை செலவளிச்சுக்கொண்டு. வேலை வெட்டியில்லாமல் சும்மா ஊர் சுத்திக்கொண்டு பெடியள் பெட்டையள் இருக்கேக்கை என்ரை பிள்ளையள் இப்படியெண்டாலும் கஸ்டப்படுகுதுகளே என எண்ணும்போது சந்தோசம்தானே… எண்டாலும் இப்படித் தோட்டம் செய்யிறவை… ஒருநாள் பார்தது ஒருநாள் தாய் தகப்பன் இருக்கிறார்கள் என்று ஒரு பழமாவது கொண்டுவந்து தாறதுமில்லை. கூட்டிக்கொண்டுபோய் காட்டுறதுமில்லை… இதை நினைச்சால்தான் எங்களுக்கு உள்ளாற வருத்தம்.;… என்ன செய்வது பிள்ளையளை என்னண்டு கேட்கிறது,.. அத…

  8. முருகா நீ ஏன் இப்படிக்... இவங்கள் கொஞ்ச நாட்களாக ஓவர் ஆட்டம் போடுறாங்கள். "நான் ரண்டு வச்சிருக்கிறன்", என்றான் விஜயன். "மூண்டு என்னட்டை" என்றான் அச்சுவேலி ரங்கன். "நான் எப்படியும் இந்த சனிக்கிழமை ஒண்டு வாங்கிப்போடுவன்" என்கிறான் விக்கி. ஐந்தாம் வகுப்பில் இருந்து ஆறாம் வகுப்பிற்கு வந்தால் புதுக் கொம்பாஸ் பெட்டி, கொப்பி, இலவசப் புத்தகங்கள் என்று போக இதுவும் சேர்ந்தாயிற்று. வீட்டிலே கேட்கக் கொஞ்சம் வெட்கம். மெதுவாக அம்மாவை அப்பாவிடம் காசு வாங்கச் சொன்னேன். அச்சுவேலியில்தான் இது விற்கும். "இதெல்லாம் தேவையில்லாத வேலை, கொம்மாவைக் கேட்டாத் தச்சுத் தருவா" என்று அப்பா சொல்லிப்போட்டார். சட்டை தைத்து மிஞ்சிப் போன சீததைத் துணியில் "சஸ்பென்ரர்" என்ற பெயரில் ஒன்று தைக்கப்பட்டு …

    • 6 replies
    • 1.8k views
  9. Started by கோமகன்,

    காலை வேளை 5 மணியாகி இருந்தது . தூரத்தே சேவல் ஒன்று காலை விடிவதற்குக் கட்டியங் கூறியது .இருட்டுக்கும் பகலுக்கும் நடந்த போரில் இருட்டு தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்தது . எனக்குப் பக்கத்தில் படுத்திருந்த றொனியன் காலை நக்கி அதன் சந்தோசத்தைக் காட்டியது . இன்னும் கடைசி மகள் எழுந்திருக்கவில்லை . நான் மெதுவாக எழும்பி உடம்பை சிவருக்கு முட்டுக்குடுத்துக் கொண்டு இருந்தேன் . இடுப்பில் கட்டி இருந்த மூத்திரப்பை முட்டியிருந்தது . எனக்கு வாய் நமநமத்தது . பக்கத்தில் இருந்த வெத்திலையையையும் , பொயிலையையும் பாக்கையும் , கலந்து வாய்க்குள் வைத்துக்கொண்டேன் .என் மனமோ காலம் என்னும் சக்கரத்தை திருப்ப முயன்று வெற்றியுங் கொண்டது .எனது அப்பா மலாயாவில் வேலை செய்து கொண்டிருந்தபோது நான் பிறந்தேன் . எனக…

  10. வணக்கம் என்னினிய உறவுகளே சுமார் ஜந்து வருடங்களுக்கு பின் நான் வன்னிபெருநிலப்பரப்பின் மையமாக விளங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்க்கு பயணித்தபோது என் மனதில் அழியாது சுழன்று கொண்டு இருக்கும் சிங்களஅரசின்வலிந்த போரின் கொடுரங்களை யாழ் உறவுகளுக்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன்................

  11. ஊரிலை சின்னவயிசிலை பள்ளிக்கூடத்திலை பாரதிதாசனின்ரை தலைவாரிப் பூச்சூடி உன்னை பாடசாலைக்கு போவென்று சொன்னாள் உன் அன்னை எண்டொரு பாட்டுச் சொல்லித் தருவினம். அது உண்மையிலை பெண்குழந்தையளிற்கான பாட்டு அதையேன் பெடியளிற்கும் படிப்பிச்சவையெண்டு தெரியாது ??..ஆனால் அதிலை ஒரு வரி வரும் கடிகாரம் ஓடுமுன் ஓடு எண்டு. அதற்கான அர்த்தம் அண்டைக்கு எனக்கு உண்மையா விளங்கேல்லை ஆனால் வெளிநாடு வந்தால் பிறகுதான் அதன் உண்மையான அர்த்தம் புரிந்தது இங்கு தமிழாக்களின்ரை நிகழ்வுகளைத் தவிர மற்றையபடி எல்லாமே நேரம்..நேரம்.. நேரம்.. நேரத்தை பிடிக்க ஓடிக்கொண்டிருக்கின்றோம்.. ஊரிலையெண்டால் வீடுகளிலை வரவேற்பறையிலை மட்டும் ஒரு மணிக்கூடு இருக்கும்.அப்பிடி எங்கை வீட்டிலையும் ஊரிலை ஒரு பெரிய மணிக்…

  12. ஒரு விதவையின் வெறி ஒரு அழகான கிராமம். நீரோடை, குளங்கள், வயல்கள், மரங்கள், இடைக்கிடையே சிறிய காடுகள். காடுகளில் மயில்கள், மான்கள். இயற்கையின் அழகை இரசித்தவாறே, சுதந்திரமாக, மிக்க வளத்துடன் மக்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்தக் கிராமத்துக்கும் அயல் கிராமத்துக்கும் இடையே உள்ள நீரோடை சம்பந்தமாக, இரண்டு கிராம மக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இத் தகராற்றைத் தீர்த்;;து வைப்பதாக, வேறொரு கிராமத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவன் முன் வந்தான். ஏதோ பிரச்சினை தீர்ந்தால் சரி என்ற எண்ணத்தில், ஒப்புக்காக இரண்டு கிராம மக்களும் உடன்பட்டனர். ஒரு நாள் அதிகாரி, தன் உதவியாளர்கள் சகிதம் நீரோடைப் பக்கம் வந்தான். அங்கே, அந்த அழகான கிராமம் கண்ணுக்குத் தெரிய, அதற்குள் …

    • 3 replies
    • 24.5k views
  13. கயிறே என் கதை கேள்! தூக்குத் தண்டனைக் கைதி முருகன் சொல்லும் கண்ணீர்க் கதை (பாகம் 12) உங்கள் மனசாட்சியைத் தொட்டுப் பார்க்கும் என்னுடைய கேள்விகள் தொடர்கின்றது. கேள்வி 18: ''நீதிபதிகளும் விமர்சனத்துக்கு அப்பாற்​பட்டவர்கள் அல்ல; அவர்களும் மனிதர்களே!'' - சட்டரீதியான, நீதி வழியிலான அற்புதமான இந்தக் கருத்தை பல வழக்குகளில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளே பதிவு செய்து இருக்கிறார்கள். மிகவும் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பொய்ச் சாட்சி​யங்களின் அடிப்படையில் அப்பாவிகள் தண்டிக்கப்பட வாய்ப்பு துளி அளவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. போதுமான அடிப்படைகளும், ஆதாரங்களும் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத் தீர்ப்புகளையும், நீதிபதிகளின் முடிவுகளையும் மறுக்கவோ, விமர்சிக்கவோ சம்பந்…

  14. Started by nunavilan,

    சிலை ஆட்டம் விஸ்வநாத் வஸந்த பவன் மசால் தோசையும் டிகிரி காஃபியையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுவதற்குள் நான் இங்கே மண்டையைப் போட்டுவிடுவேன் என்று நினைக்கிறேன். இந்தச் சதிகார கும்பலிடம் சிக்கி நான் சின்னாபின்னமாவதற்கு பேசாமல் மேலே போய் சேர்ந்துவிடலாம் என்று தான் இந்த முடிவு. எங்கள் குலசாமி அடியக்கமங்கலம் ஐயனாரை வேண்டிக்கொண்டு போய் சேர்கிறேன். இந்த விவஸ்தை கெட்ட அநீதி பெருக்கெடுத்து ஓடும் மாய உலகத்திற்கு ஒரு பெரிய கும்பிடு. டாட்டா. பை. பை. வாழ்க வையகம். -விஷ்ணு வாடகைக் குடிலுக்கு வெளியே நெடிதுயர்ந்த அரசமரத்தின் கீழிருந்து ஆறாவது முறையாக வேர்க்கடலை மடித்த கசங்கிய வாராந்திரியின் 24-ம் பக்க எண்ணைச் சுற்றியிருக்கும் வெற்றிடத்தில் க…

    • 0 replies
    • 1.1k views
  15. "உச்சிதனை முகர்ந்தால்" என்கிற மயிலிறகால் மனதை வருடுகிற பெயரில் திரைப்படம். ஆனால் திரையரங்கைவிட்டு வெளியே வருகின்ற போது துக்கமும் வேதனையும் நெஞ்சை அடைக்கிறது. மனம் வெதும்பி இயலாமையை எண்ணி கண்களில் கண்ணீர் வழியத்தான் ஒவ்வொருவரும் வெளியேறினார்கள். கண்கூடாக பார்த்தேன். என்னைப் போன்ற பெண் பிள்ளையைப் பெற்றவர்களை இந்த திரைப்படம் குறைந்தபட்சம் ஒருவார காலத்திற்காவது தூக்கத்தை கெடுத்துவிடும். கதை என்கிற பெயரில் கற்பனைகளை மட்டுமே கட்டவிழ்த்துவிட்டு 'காசு' பார்க்க துடிக்கிறவர்கள் மத்தியில்... மனிதநேய வரலாற்றிலேயே மறக்க முடியாத, மறைக்க முடியாத கொடுமைக்குள்ளான ஈழத்துச் சொந்தங்களின் துயர வரலாற்றில் ஒரு துளியை, அதுவும் உண்மையில் நடந்ததை எடுத்துக்கொண்டுள்ளார். அதையே குடும்பப்பாங்கோ…

  16. அவனுக்கு இன்று அரசாங்க முத்திரை இடப்பட்டு வந்த கடிதத்தை பார்த்ததிலிருந்து உப்பிடித்தான் இருக்கிறான்.வீட்டுக்கு அண்மையிலுள்ள சந்தியை இதற்க்குள் வந்து விட்டேன் என்பதை நினைக்கும் பொழுது அவனுக்கே ஆச்சரியமாயிருந்தது,.இப்ப கொஞ்ச நேரம் முன் தான் அந்த டச்சு கிழவனிடம் விடைபெற்று வந்த மாதிரி இருந்தது, அவனை அறியாமால் வருபவர்கள் போவர்களுக்கு வழி விட்டு மற்றும் திரும்ப வேண்டி இடத்தில் திரும்பி நிற்க வேண்டிய இடத்தில் நின்று இவ்வளவு தூரத்தை நடந்து கடந்தது ஒரு நிமிடத்துக்குள் என்ற மாதிரி இருந்தது.அதற்கு காரணம் அவனுக்கு தெரியாததல்ல,, .எண்ணங்களோடு முட்டி மோதி சமாதனப்படுத்தி இருக்கும் பொழுது மறுபுறத்தில் தீடிரென்று கொழுந்து விட்டு எரியும் மனக்குமுறல்களை தணித்து ஆழ்மனத்தை அடக்குவதில் செலவழி…

  17. என் உள் மனது இன்றைக்கும் உச்சரிக்கும் ஓர் பெயர் நிவேதா.... எத்தனை புயல்கள், எத்தனை பூகம்பங்கள், எத்தனை ஆழிப்பேரலைகள் வாழ்வில் வந்து தாக்கிவிட்டுச் சென்ற போதும் எல்லாக் காயங்களையும் கொஞ்ச நேரமாவது ஆற்றிக்கொள்ளும் மருந்தாய் என் வாழ்வில் தென்றலாய் வந்து வருடிச்செல்லும் ஓர் பெயதான் நிவேதா.... ஆம் பாடசாலை செல்லும் வயதில் ஏற்பட்ட பருவக்காதல் தான். பலரும் சொல்வார்கள் பாடசாலை செல்லும் வயதில் ஏற்படுவது உண்மையான காதலல்ல அது ஓர் இனக் கவர்ச்சியென்று. அது இனக் கவர்ச்சியானால் ஏன் அது இன்றைக்கும் நீடிக்கிறது, அவள் பெயரின் நினைவு இன்றைக்கும் ஏன் என் நினைவை வருடிச் செல்கிறது, ஏன் என் நினைவைவிட்டு அகல மறுக்கிறது.... சரி.. சரி... வாருங்கள் என் வீட்டு அடுப்படியில் இருந்து அவள்…

  18. யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில் மரங்களும் பறவைகளும் இயற்கையும் அரசியலையும் உண்மைகளையும் பேசினால் !!! (யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு கிராம வீட்டில் ) அந்த முற்றத்திலே ஒரு நிழல்வாடிமரமும் பூவரசும் ஒன்றையொன்று தமது இலைகளால் தொட்டுப்பேசி கதைத்துகொண்டன , இந்த காற்று அளவாக அடிப்பதனால் நான் உன்னை தொட்டு கதைக்க இலகுவாயிருக்கின்றது என்றது நிழல்வாடி. அது கிடக்கட்டும் இந்த முற்றத்து மண்ணிலே எத்தனை கொடூரம் எங்கள் இருவர் கண்முன்னால் நிகழ்ந்தது அதை என்னால் என்றுமே மறக்க முடியாது என்றது பூவரசு. அதைகேட்டு நிழல்வாடி அழத்தொடங்கியது. பூவரசுவும் அழுதது அப்போது மழை மேலிருந்து துளிர்த்தது இந்தா இருவரும் அழுகிறதை நிறுத்துங்கள் என்றது மழை. இப்படியே அழுது வடிந்து என்ன பயன் வல…

  19. பதுங்கு குழி எழுத்தாளர்: பொ. கருணாகரமூர்த்தி நாச்சிக்குடா வீழ்ந்ததிலிருந்து மாதவன் மனத்துள் அந்தகாரம் புகுந்துகொண்டது. இராணுவம் முன்னேறிய வேகத்தைப் பார்க்கையில் மாதவனது மனம் துவண்டுபோனது. இனிமேலும் நாம் இப்போரை வெல்லமுடியுமோ என்று ஒரு சந்தேகமுண்டாகியது. அவன் அடிக்கடி யோகபுரத்திலுள்ள தன் வீட்டுக்குப்போய், அம்மாவையும் சகோதரங்களையும் பார்த்து வருவதும் அவனது அணியின் பொறுப்பாளனுக்குப் பிடிக்கவில்லை. இப்போது தந்தைக்கு திவசம் கொடுப்பதற்காக வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறான். தந்தைக்கான சடங்குகளைச் செய்வதற்கும் அணித் தலைவனிடம் மண்டாடியே ஒருநாள் விடுப்பு எடுத்து வந்து நிறைவேற்றவேண்டியுள்ளது. தேசத்தின் நிலமையில் மக்களின் பொருண்மியம் பெரிதும் குன்றிவிட்டதால் இப்போ…

  20. இழந்துபோன சிலவற்றின் வாசனைகள்..... (இந்தவார ஒருபேப்பரிற்க்காக எழுதியது) பிரான்ஸில் நானிருக்கும் வீட்டிற்க்கு முன்னால் உள்ள குட்டிப்பூங்கவின் நடுவில் ஓர்க் மரம் ஒன்று ஓங்கி வளர்ந்து கிளை பரப்பி சடைத்திருந்தது.சுற்றிலும் கட்டடங்கள் நிறைந்த மரங்கள் அற்ற சூழழில் வளர்ந்திருந்த அந்த ஓர்க் மரம் பூமியில் தவறி விழுந்த தேவதையைப்போல எப்பொழுதும் வானத்தை அண்ணாந்து பார்த்து தன் தனிமையை நினைத்து அழுவது போலிருக்கும் எனக்கு.அதன் கீழே வட்டவடிவ இருக்கை ஒன்று போட்டிருந்தார்கள்.கோடைகாலங்களில் கிடைக்கும் ஓய்வான நேரங்களில் எனது தனிமையையும் ஊரையும் உறவுகளையும் பிரிந்து வந்த சோகங்களையும் சுமந்து சென்று மனிதர்களின் இடையூறுகள் இல்லாமல் நிறைந்த அமைதியைப் பரப்பிக்கொண்டிருக்கும் அந்தப்பூங்க…

  21. நல்ல வெயில் எறித்த சனிக்கிழமை காலை நேரம். லிஃப்டில் இருந்து இறங்கிக் கீழே வர, வழக்கம்போல் அந்த நிலமட்டத்தில் இருந்த சீமெந்துக் கதிரை மேசைகளில் சீனக் கிழவர்கள் கடதாசி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரண்டு மலேக் கிழவர்கள் பிளாஸ்ரிக் பையில் இருந்த 'ரெக் எவே' தேனீரை ஸ்ரோ (straw) வைத்து உறிஞ்சிக் கொண்டிருந்தார்கள். இப்பதான் அரை றாத்தல் பாணை நேற்று இரவு தின்றும் மிஞ்சின கோழிக்கறியுடன் கலந்து அடித்தது, என்றாலும் நிறையற் ரின் பாலும் கடும் தேயிலைச் சாயமும் கலந்து 75 சென்ற் இற்கு விற்கும் பிளாஸ்ரிக் பை தேனீரைக் குடிக்கவேணும்போல் இருந்தது. இப்பதான் அவனைப் பார்த்தேன். இந்திய அல்லது இலங்கையனாக இருக்கவேண்டும் எனக்கு மிகக் கிட்ட நின்றான். என்னை விடச் சற்று உயரம். கொஞ்சம் மெலிந்த உடல…

  22. சிறையிலிருந்து வருகிற கடிதங்களும் கண்ணீர் கதைகளும். இவை வெறும் கடிதங்கள் அல்ல. தன்னின விடுதலைக்காக பெயரை மறைத்து புகழை வெறுத்து இயங்கியவர்களின் கடிதங்கள். ஒவ்வொருவரும் தனது வாழ்நாளை விடுதலைக்காக கொடுத்துவிட்டு இன்று யாருமற்று நோய்களோடும் துயர்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தங்களது குடும்பங்களுக்கு வாழ்வைக் கொடுக்குமாறு எம்மிடம் கையேந்தி நிற்கின்றார்கள். நேற்றுவரை 690 கைதிகள் தங்களுக்கான உதவிகளை வேண்டியுள்ளனர். ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகம் சேர்ந்து செய்ய வேண்டிய காலப்பணியிது. தனித்த ஒருவரால் ஒரு பத்து அல்லது நூறு பேருக்கும்தான் உதவ முடியும். எல்லாரும் இப்பணியில் உங்களை இணைத்து ஒரு கைதியின் குடும்பத்தை உங்கள் உறவாக்குங்கள். கடிதம் 1 பர…

    • 5 replies
    • 1.4k views
  23. யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி சந்தை சாக்லட் தொழிற்சாலையாக காட்சியளித்தது. வியாபாரிகள் சைக்கிளில் கட்டிக்கொண்டுவந்திருந்த மரக்கறி மூட்டைகளை இறக்கி அன்றைய ஏலத்துக்கு தயாராகிக்கொண்டிருந்தனர். Special Task Force officer குமரன் Splender Motorbike இல் வந்து இறங்கும் போது நேரம் சரியாக நான்கு மணி. யாழ்ப்பாணம் ASP திலீபன் spot இல் ஏற்கனவே காத்துகொண்டிருந்தார். “எப்பிடி தெரியும் திலீபன்?” “சந்தைல தேங்காய் கடை வச்சிருக்கிற சண்முகம் தான் inform பண்ணினவர்” “வரச்சொல்லுங்க” “நான் தான் அய்யா சண்முகம், காலைல சந்தைக்கு பின்னால ஒதுங்க…” “எத்தினை வருஷமா இங்க கடை வச்…

  24. கடந்த ஒரு பேப்பரி இந்தப் பதிவினை ஒரு நிஞாபகப்பதிவாகவே மேலோட்டமாக எழுதியிருந்தேன். அதனை படித்த பலரும் இந்திய இராணுவகாலத்தில் தெய்வேந்திர சர்மா தலைமையில் நடந்த hடுகொலைகளைகளை ஏன் எழுதவில்லையென்றும் இனி வருங்காலத்தில் யாரும் புத்தகங்களையோ பதிவுகளையோ தேடி எடுத்து மினக்கெட்டு படிக்கப்பது அரிழதாகவே இருக்கும் எனவே அவற்றை கணணி பதிவுகளாக்குவது அவசியம் இன்று இல்லாவிட்டாலும் எதிர்வரும் காலத்தில் எமது மக்கள் எதிர்கொண்ட அழிவுகளை எமது சந்ததி அறியவேண்டிய தேவை உள்ளதால் அவற்றை முடிச்தளவு கட்டாயம் எழுதும் படி கேட்டிருந்தனர் எனவேதான் அதன் தொடராக இந்தப் பதிவினை எழுதுகின்றேன். இந்திய இராணுவம் சுதுமலையம்மன் கோயிலை பெரும் எதிர் பார்ப்புடன் முற்றுகையிட்டு அங்கு புலிகள் இல்லாத கார…

  25. அமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும். ஒரு பேப்பரிற்காக நினைவுப்பதிவு சாத்திரி இலங்கைத்தீவில் தமிழர்களிற்கு தீர்வும் சமாதானமும் வாங்கித் தருவதாக சொல்லியபடி இந்திய இராணுவம் அமைதிப்படை என்கிற பெயரில் வந்திறங்கி தமிழர்களின் அமைதியை பறித்து அவலங்களை மட்டுமே கொடுத்து இருபத்தி முன்று ஆண்டுகள் .ஆகிவிட்டது 10.10 1987 ம் ஆண்டுஆண்டு யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவத்தின் மராட்டிய பட்டாலியன் (First Battalion of Maharatta Light Infantry)யாழ் பிரந்திய பத்திரிகைளான ஈழமுரசு முரசொலி ஈழநாடு பத்திகை அலுவலகங்களை குண்டு வைத்து தகர்த்ததிலிருந்து யுத்தத்தை தொடங்கி விட்டிருந்தனர்.அதைனைத் தொடர்ந்து புலிகளும் வேறு தெரிவுகள் எதுவும் இன்றி இந்திய இராணுவத்துடன் மோதிப்பார்…

    • 16 replies
    • 2.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.