கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3072 topics in this forum
-
ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75 அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்.. நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம் தான் தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலி…
-
- 40 replies
- 4.6k views
-
-
இந்நாவலின் வாசிப்பின்போத ு வைரமுத்துவின் கருவாச்சியை நினைவு வருவதை உணரலாம். ஒரு பெண் தனித்து வாழும்போது சமூகம் அவளுக்கு கொடுக்கும் இன்னல்கள், குறைந்தது மூன்று ஆண் கதாபாத்திரங்க ள் முதல் ஊரே அவளுக்கு எதிராகவும் பல இன்னல்களும் கொடுக்கும். அதையெல்லாம் சமாளித்து பின் ஊர் உணரும் புண்ணியவதி ஆவாள் கருவாச்சி. தரவிறக்கம் செய்ய: http://books.sharedaa.com/2008/01/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-karuvachi-kaviyam.html நன்றி
-
- 0 replies
- 2.1k views
-
-
இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது. தமிழர் நிலங்கள் பறிபோகின்றது. புலம்பெயர் தமிழர்களின் நிலங்களை இலங்கையரசு கையகப்படுத்த முயற்சி. இடம் பெயர்ந்த மக்களின் காணிகளில் இராணுவம். மீள் குடியேற சென்ற மக்களை இராணுவம் விரட்டியது.....இவை அண்மைக்காலங்களாக தமிழ் ஊடகங்களிலை வெளிவாற செய்தித் தலைப்புக்கள். அது மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலை இருக்கிற தமிழரின்ரை காணியள் பற்றின விபரங்களை இலங்கையரசு சேகரிச்சுக்கொண்டும் இருக்கினம். இந்த வருச வக்கேசனுக்கு என்ரை சொந்தக்காரன் ஒருத்தர் லண்டனுக்கு வந்து இருவத்தைஞ்சு வரியமாகிது போனமாதம் ஊருக்கு போனவர்.ஊருக்கெண்டால் கொழும்புக்கு... அங்கை அவர் ஒரு அப்பாட்மென் வாங்கிவிட்டிருக்கிறார். வருசா வருசம் வக்கேசனுக்கு அங்கைபோய் தங்கிட்டு வருவார்…
-
- 32 replies
- 3.6k views
-
-
நேரம் போய் விட்டதை அப்பொழுது தான் உணர்ந்தான் .அதை துரத்தி பிடிக்கும் நினைப்பில் அவசரத்தில் அவன் செய்யும் காரியங்களை பார்க்க அவனுக்கே ஒரு நகைப்பாக இருந்தது.ஒரு கணம் சுதாகரித்து தனது அடுத்தடுத்த வேலைகளை செய்ய தயாரானவனை றேடியோவில் சரியாக இப்ப ஏழு மணி என்று கொண்டு இசை முழக்க பரிவாரங்களுடன் வந்த கே.எஸ் ராஜா இடை மறித்தார்.கிழக்கு பறவை மேற்கு வானில் பறக்க பார்க்குது என்று ஏதோ சொல்லி ஓடாத படத்தை ஓட்டுவதற்க்காக கூவுவதை பார்க்க எரிச்சல் எரிச்சலாக வந்தது .உந்த வானொலி நிகழ்ச்சி முடிய அரை மணி நேரம் எடுக்கும் அதுக்கு முதல் அவன் அந்த எக்ஸ்பிரஸ் பஸை பிடிக்கவேண்டும் அதற்காக அந்த அரை மணித்தியாலத்துக்குள் கால் மைல் தூரத்தில் உள்ள சந்தியை அடைந்தே தீரவேண்டும் அதுக்குள் எல்லாம் முடிக்கவேண்டும்…
-
- 20 replies
- 1.8k views
-
-
எப்போதாவது ஒரு நாள் நீ வந்து போகும் தருணங்களில் உன்னைப் பக்குவப்படுத்தி கட்டி வைத்து, என்னுள்ளே திணித்துக் கொள்ள முடியாத காதலனாக நான். மெதுவாய் என்னுள் நுழைந்து கொண்டு, மெல்லவும், விழுங்கவும் முடியாத உவர்ப்பு நிறை உணவின் சுவையினைத் தந்து விட்டுச் செல்கின்றாய் நீ. ஒவ்வோர் நாளிகையும் உனைப் பற்றியதான என் உருவமற்ற உணர்வுகளுக்கு உணர்ச்சியூட்டிச் செல்கின்றது.நிரூபனின் நாற்று மெதுவாய் மனதின் அடி வாராத்தில் நீ வந்து நிரந்தரமாய்த் தங்கி விட வேண்டும் எனும் ஆசையினால் என்னுடைய நாளாந்த கடமைகளை மறந்து உன் நாமத்தை உச்சரிப்பதோடு ஐக்கியமாகிவிட்டேன் நான். அவள் பற்றிய மொழிகளினை விட, அவளின் ஒவ்வோர் அசைவுகளிலும் தான் நான் என்னைப் பறி கொடுத்திருக்கிறேன். அவள் ஒரு அபிநயக்காரி. …
-
- 2 replies
- 3.4k views
-
-
சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. “மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக…
-
- 5 replies
- 1k views
-
-
“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள…
-
- 5 replies
- 987 views
-
-
ஒரு அன்னையின் நீதிக்கான புலம்பல் பாகம் ஒன்று. http://youtu.be/1YnbpNK9Alg http://www.eeladhesa...ndex.php?option
-
- 1 reply
- 962 views
-
-
மாதவி தன் போட் காரை அந்த பசன் டிசைனிங் நிறுவனத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு தனது வகுப்பை நோக்கிப் போனாள்...அது ஒரு தனியார் நிறுவனம் அதில் படிப்பது என்றாலே அதிக காசு செலவாகும். மாதவி அந் நிறுவனத்தில் சுமார் ஆறு மாதமாக நவீன ரக ஆடை வடிவமைப்பு,மேக்கப் போடுதல்,தலை முடியை எப்படி எல்லாம் ஸ்டைலாக்கலாம் போன்றவற்றை படித்து வருகிறாள். இவள் இப்படி எல்லாம் வந்து படிக்கிறதாலே அவளை வசதியான வீட்டு செல்லப் பிள்ளை என நினைக்க வேண்டாம்.அவளுக்கு வேலையும் இல்லை, காதலனும் இல்லை,இப்ப காதலிக்கிற வயசும் இல்லை அவளுக்கு நாற்பது வயது[நாற்பது வயதில் காதலிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.] கல்யாணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.கணவன் ஒரு வியாபாரி,வியாபாரத்திற்காக ஊர்,ஊராக சுற…
-
- 109 replies
- 27.3k views
-
-
புதிய தலைமுறை..... நான் குடியிருக்கும் மாடிப்பகுதியில் எங்கள் வீட்டிற்க்குப் பக்கத்து வீட்டில் புதியதாக ஒரு தமிழ் ஜயர்க் குடும்பம் வந்திருப்பதாக றூமில் இருந்த நண்பர்கள் கதைத்தது கட்டிலில் படுத்திருந்த எனது காதில் விழுந்தது. ஜயர் என்ற வார்த்தையைக் கேட்டதும் எனக்கு எப்பொழுதும் ஜோசப்பினதும் சுமதியினதும் நினைவுதான் வரும்.ஜோசப்பினது திருமணத்தின்போது என்னைச் சோகமாகப் பார்த்த அவனது பார்வை இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.சுமதியைப் பற்றிய கவலை இன்றுவரைக்கும் என் மனதில் ஒரு ஆறாத காயமாக இருக்கிறது. அதனால்தான் இன்றும் அவளது குடும்பத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறேன்.எங்கு போகப் போகிறார்கள் பக்கத்து வீட்டில்தானே இருக்கிறார்கள் ஆறுதலாக சந்திக்கும்போது விசாரிப்போம் என்று …
-
- 14 replies
- 2.7k views
-
-
........................................................................ குறுந்தொடர். முற்குறிப்பு. ...இந்தத் தொடரின் தலைப்பை படிக்கிறவர்களிற்கும். அதன் சம்பவங்களை படிக்கிறவர்களிற்கும்.அவரவர் மனதில் பலவித உணர்ச்சிகள் தோன்றலாம். தொடரின் தலைப்பை படித்தவர்களிற்கு நான் எழுத்துப் பிழை விட்தைப்போல தோன்றலாம். அல்லது வேண்டுமென்றே நக்கலாக எழுதியது போல தோன்றலாம்.அல்லது ஏதாவது அர்த்தம் இருக்குமென்றும் தோன்றலாம்.. தொடரும் சம்பவங்கள் பலரும் சந்தித்த அனுபவித்து வாழ்ந்த அனுபவங்களே. கதையில் நான் சொல்லும் அனுபவங்களை அனுபவித்தவர்கள். நினைவுளை மீட்டிப்பார்பார்கள். அதனை பகிர்ந்தும் கொள்வார்கள்.சிலர் எரிச்சலடைந்து திட்டுவார்கள்.சிலர் கேள்விகள் கேட்பார்கள்.சிலர் எங்கே பிழ…
-
- 113 replies
- 17.3k views
- 1 follower
-
-
வணக்கம் என்னினிய உறவுகளே சுமார் ஜந்து வருடங்களுக்கு பின் நான் வன்னிபெருநிலப்பரப்பின் மையமாக விளங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்க்கு பயணித்தபோது என் மனதில் அழியாது சுழன்று கொண்டு இருக்கும் சிங்களஅரசின்வலிந்த போரின் கொடுரங்களை யாழ் உறவுகளுக்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன்................
-
- 24 replies
- 3.4k views
-
-
அன்பு நண்பர்களே இது என் மனதில் உள்ள முதல் கிறுக்கள், எழுத்து & சொற் பிழைகள் இருந்தால் மன்னித்து அறியத் தாருங்கள் மாலை நெருங்குகின்றது என்பதை குளக்கட்டில் இருந்து நம்மட ஊர் கறுப்பியில் இருந்து பமிலா அண்டர்சன் வரை கிளு கிளு கதைகளை அளந்து விட்டுக் கொண்டிருந்த எங்களை கொக்குகளும் நாரைகளும் போட்ட சத்தம் கன நேரம் அவைகள் கூட்டுக்கு கூட்டமாக பறந்து போவதை திரும்பி பார்க்க வைத்தன. தூக்கணங் குருவிகளும் குளக்கட்டில் நின்ற பனை ஓலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் தங்கள் கூடுகளில் இருந்து எங்களின் ஆபாசக் கதைகளை தங்கள் குஞ்சுகள் கேட்கக் கூடாது என்று கூட்டம் கூட்டமாக பறந்து பறந்து கீச்..கீச் என்று கத்திக் கொண்டிருந்தன. வாய்க்கால் ஓரங்களில் காய்த்திருக்கும் நரி பயந்தங்காய்களை ப…
-
- 8 replies
- 2.9k views
-
-
வீட்டில் லீவுவில் நிற்பதால் காலை எழுந்து கணணியில் செய்திகளை மேய்ந்துகொண்டும் அரட்டையில் வந்தவர்களுடன் அரட்டையடித்தபடியும் இருந்தேன் கைத்தொலைபேசி உதறியது எடுத்துப்பார்த்தேன் எனது தம்பியின் பெயர் காட்டியது.ஒரு கணத்தில் எனக்குப் புரிந்து விட்டது ஏதோ வில்லங்கமான செய்திதான். தொலைபேசியை எடுத்தேன். அண்ணை..குருவண்ணா செத்திட்டார்.நான் கொஸ்பிற்றல்லைதான் நிக்கிறன்.பொடியை அவையின்ரை வீட்டை கொண்டு போயிட்டு போனடிக்கிறன்.அம்மாக்கு இப்ப சொல்லவேண்டாம்.நான் நேரிலை போய் சொல்லுறன். தொலைபேசி துண்டித்தது.மனைவியும் மகளும் வெளியே போயிருந்தனர்.வீட்டிலும் எவரும் இல்லை அவசரமாக எனது மூத்த அண்ணணிற்கு கனடாவிற்கு தொலைபேசியடித்து செய்தியை தெரிவித்துவிட்டு நான் சில நிமிடங்கள் கணணிய…
-
- 43 replies
- 4.3k views
-
-
வாசியுங்கள் பொறுமை இருந்தால், கதைதான் ஆனால் இது நிஐம் எல்லா இனத்தினரிடமும் (பல நாடுகள் & Office வேலை ல் செய்த அனுபவத்தால்). எங்கட ஆட்கள் எல்லாம் பேச்சில் எழுத்தில் வீரர் செயலில் ZERO. தான் அன்றைக்கு ஆஷாவோட கதைக்க வேண்டியதை எல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லிப்பாத்துக் கொண்டான் சந்திரகாந்தன். பல தடவைகள் சொல்லிப் பார்த்துக் கொண்டதால் முதல் தடவை சொன்னது மறந்து போனதோடு அதுதான் அழகான வார்த்தைளோடு அமைந்திருந்தது என்ற ஏக்கமும் அவனுக்குள் வரத் தொடங்கியது. மறந்ததை நினைவுபடுத்த முனைய உள்ளதும் மறந்து போய்..சரி ஒண்டும் வேண்டாம் முதல்ல இருந்து சொல்லிப்பாப்பம், திரும்ப ஒவ்வொரு வார்த்தையாக கோர்க்கத் தொடங்கினான். அவன் வாய் வார்த்தைகளைக் கோர்க்க மனம் ஆஷாவோடு கட்டில் வரை ப…
-
- 13 replies
- 6k views
-
-
காவல் நாய்... முருகனின் வீட்டைக் கடக்கும்போது டாம்போவின் இடிபோன்ற குரல் அந்த வீதியே அதிரும்படி கேட்டது.என்னடா சத்தம் பசிக்கிறதா என்று வீட்டுக்குள் இருந்து டாம்போவை அதட்டிக் கொண்டு முருகன் வேகமாக வெளியில் வந்தான். டாம்போ இபொழுது நன்றாக வளர்ந்து ஒரு பெரிய நாயாகி விட்டிருக்கிறது. டாம்போ முருகன் வீட்டிற்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகியிருக்கவேண்டும். முருகன் வீட்டுச் சாப்பாடோ இல்லை டாம்போவின் பரம்பரை ஜீனோ தெரியவில்லை ஒன்றரை வருடங்களுக்குள் அது புசு புசுவென்று வளர்ந்து அந்த ஏரியாவிலேயே பெரிய அடிக் கடியன் நாயாக நெடுத்திருந்தது. அதன் கரிய மூஞ்சையும் நெடிய கால்களும் பார்ப்பதற்கு ஊர் நாயொன்றிற்கு ஓநாய்க் கால்களும் மூஞ்சையும் முளைத்தது போலிருந்தது. முருகன் தகப்பன…
-
- 9 replies
- 4.6k views
-
-
முள்ளிவாய்க்காலின் மூச்சுக்காற்று… மனிதனால் வீசமுடியாத காட்டுமிராண்டிக் குண்டு வீச்சுக்கள்.. மானிடத்துக்கு விரோதமான படுகொலைகள்… நாகரிக உலகமே வெட்கித் தலைகுனிந்து வெந்து வெந்து சாகவேண்டியளவு பாலியல் வக்கிரங்கள்.. பிணங்களைப் புணர்ந்த பேய்கள்.. உலக சாஸ்திரங்கள் பிணம் தின்றன.. ஐ.நா சாத்திரங்கள் மலம் கொட்டி நாறின.. ஐயோ.. என்ற அலறலுடன்.. வாழ வேண்டிய குழந்தைகள் எல்லாம் செத்து சிதறி.. ஓ..ஓ.. சாவே தலைகுனிந்து நின்றது.. சமஸ்கிருதம்.. சிங்களம்… சீனம்… பாகிஸ்தான்… மொழிகளின் வெற்றிச் சத்தத்தைத் தவிர அங்கு வேறெதையும் கேட்க முடியவில்லை.. சொற்ப நேரத்தில் முள்ளிவாய்க்கால் உறைந்து போனது.. மறுநாள்… எஞ்சிய எலும்புகளை கூட்டி அள்ளி.. எரித்து.. பஸ்ப்ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
என்குறிப்பு.. என்னுடைய பயணத்தொடரில் அதிகமாக அரசியல் கலந்துவிட்டது என்றும் அதனாலேயே சுவாரசியமான விடயங்களிற்கும் கருத்துக்களை பகிர முடியவில்லையென பலரும் குறைப்பட்டிருந்தனர். எனவேதான் அரசியல் கொஞ்சமும் கலக்காத அனைவரும் கருத்துக்கள் பகிரக் கூடியதானதொரு குறுந்தொடரை எழுதியிருக்கிறேன். இக்கதையை எழுதிய பின்னர் எனக்கு இரண்டு பிரச்சனைகள் ஒன்று குறுங்கதையாகத்தான் எழுத முடிவெடுத்திருந்தேன்.எழுதி முடித்தபின்னர் பார்தால் அது நீண்டுகொண்டேயிருந்தது.அதனால் குறுந்தொடராக்கிவிட்டேன்.அடுத்தது கதையை எழுதி முடித்துவிட்டு திரும்பப் படிக்கும் போது இதனை கதைகதையாம் பகுதியில் இணைக்கலாமா அல்லது பேசாப்பொருள் பகுதியில் இணைக்கலாமா என்கிற சந்தேகம் வந்துவிட்டது.ஆனாலும் முடிந்தளவு விசரம் இல்லா…
-
- 79 replies
- 13.5k views
-
-
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய ஒரு ஓய்வான பொழுதில் சகோதர (சிங்கள) மொழி கன்சல்டன்ட் சொன்னார். பழைய காலத்தில் மக்களிடம் (சிங்களவர்) ஒரு வழக்கம் இருந்ததாம்! ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதுதான் அது! சும்மா கதை விடுதா பயபுள்ள? -அதிர்ச்சியுடன் சந்தேகமாகப் பார்க்க, புரிந்து கொண்டு சொன்னார். காட்டுப் புறங்களில் விவசாயம் செய்யும் போது வீடும், விவசாய நிலமும் அதிக தூரத்தில் இருக்கும். இரவில் காட்டு விலங்குகள் காரணமாக பயிர் நிலத்தைக் கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் வீட்டில் மனைவி தனியாக! அப்போ வேறு ஆண்கள் இடையில் வந்துவிடாமல் மனைவியை ஒருத்தரும், பயிர்நிலத்தை ஒருத்தரும் மாறி,மாறி!? ஏன் இரண்டு பேரும்…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்காவில் யானைக் கணக்கு எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். போன வாரம் கண்டி தலதா மாளிகையில் தலையாரி யானையாக பல வருடங்கள் இருந்த ராஜா எனும் கொம்பன் யானை எழுபது வயதில் மூப்புக் காரணமாக மரணமடைந்தது. இந்த இரு செய்திகளும் சில யானைக் கதைகளையும் சிறி லங்காவில் சம்பிரதாயம் என்ற பெயரில் இந்த அரிய விலங்குகளுக்கு இழைக்கப் படும் அநீதிகளையும் பற்றி என் நினைவுகளைக் கிளறி விட்டது. யானை, அனேகமான பல காட்டு விலங்குகள் போல, முழுவதுமாக அடர் காட்டில் வாழப் பிறந்த ஒரு விலங்கு. தனியனாகத் திரியும் யானைகள் அரிது-அப்படித் தனியனாக அலையும் யானை அனேகமாக மூர்க்கமான ஆட்கொல்லியாகவே இருக்கும் (செங்கை ஆழியானின் "யானை" நாவல் ஒரு தனியன் யானையைப் பற்றியது). கூட்டமாக இந்த ராட்சத விலங்குகள் வாழ, சில நூற…
-
- 31 replies
- 6.2k views
-
-
அன்பார்ந்த தமிழீழ மக்களே அருளினியன் [சற்றே பெரிய சிறுகதை இது தயவு செய்து பொறுமையாக வாசியுங்கள்] நான் சின்னப்பிள்ளையா முதலாம் ஆண்டு படிக்கேக்க எங்கட ஊருக்கு பக்கத்து ஊரில ஒரு ஐயா இருந்தவர் நெட்டையா ஒற்றை பனை மரம் போல இருக்கும் அவரோட ஒரிஜினல் பெயர் வந்து பரமேஸ்வரன்,ஆனா பரமேஸ்வரன் எண்டு சொன்னா யாருக்கும் தெரியாது.நெட்டை பரமர் எண்டோ அல்லது,நெட்டை ஐயா எண்டா யாழ்ப்பாணத்திற்கே தெரியும்,ஏன் ஐயா எண்டா எங்கட ஊரச் சுத்தி இருக்கிற பெரும்பாலான ஊருக்கு தெரியும். மனிசன் பழைய கம்யூனிசக்காரன் வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை போட்டு அவர் நடந்து வாரத பார்த்தா அச் சொட்டா MGR மாதிரி இருக்கும்,எம் சி ஆர் போல மனிசனும் சும்மா தகதக எண்டு பொன் நிறத்தில மின்னுவார்,ஆளிண்ட தோற்றமே பாக்கி…
-
- 2 replies
- 1.3k views
-
-
கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்… துப்பறியும் ஜாக்கிச்சானின் கண்ணாடி மேசையில் இருந்த ஐபோன் கண் சிமிட்டியது.. கிறீஸ் மனிதன் என்ற பெயர் அதில் மின்னி மறைந்தது.. ஜாக்கிச்சான் சிந்தித்தார்.. தனது சுங்கானை எடுத்து சிகரட் துகள்களை பொத்தி அடைந்துவிட்டு தீ மூட்டி புகையை இழுத்தார்… மனம் புகைக்குள் மறைய அங்கே ஒரு புலி தெரிந்தது.. கண்களை கூர்மையாக்கிப் பார்த்தார்… புலியேதான்.. கிறீஸ் மனிதனுக்கும் புலிக்கும் என்ன தொடர்பு.. ஒரே குழப்பம்… மேலும் கண்களைச் சுழற்றினார்… அது புலிதான் ஆனால் பழைய தமிழ்நாடு வண்டலூர் செக்ஸ் புலி… பாவம் பரிதாபமாகப் படுத்திருந்தது.. அவசரமாக நூல் நிலையம் வந்து, தமிழ…
-
- 6 replies
- 2k views
-
-
கே.பி , கருணான்ரை ஆளை கலியாணம் கட்டாதை…! அவன் ஒரு நாத்திகன். கடவுளை நம்பாதவன். இயல்பிலேயே சம்பிரதாயம் , சாத்திரம் , சாதி , வேற்றுமை எல்லாவற்றிற்கும் எதிரானவன். வீட்டில் வணங்கும் சாமிகளின் உருவங்களை இவன் கண்ணிலிருந்து மறைத்து வைத்தது ஒருகாலம். 9பிள்ளைகளிலும் அம்மா அப்பாவிற்கும் அண்ணன் அக்காக்களுக்கும் வில்லங்கம் பிடித்த இளைய பிள்ளையவன். இயல்பிலேயே அவன் வாசிப்புப்பழக்கம் மொழிகளைக் கற்றுக்கொள்தல் அவனுக்குக் கொடையாயிருந்தது. பைபிள் , பகவத்கீதை , குரான் அடங்கலாக இராமாயணம் முதல் உலகப்புரட்சியாளர்கள் வரை படித்திருக்கிறான். எல்லாவற்றிற்கும் அவனிடம் மாற்றுக்கருத்து இருந்து கொண்டேயிருக்கும். வீட்டில் எல்லாரும் சொல்வார்கள் “அவன் ஒரு கலகக்காரன்“ என்று. 1984ம் …
-
- 12 replies
- 3.9k views
-
-
லண்டனில் தெருக்களில் கடந்த வார இறுதியில் தொடங்கிய so call வன்முறை இங்கிலாந்து பல பாகங்களிலும் பரவி இப்பொழுது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.Darcus Howe என்ற கறுப்பின லண்டனிலும் வாழும் எழுத்தாளருடன் நேர்முக உரையாடலை பிபிசி தொலைகாட்சி அத்தருணம் நடத்தியது. நேர்முக உரையாடலின் பொழுது அறிவிப்பாளரின் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த இவ் எழுத்தாளர் இதை கலவரம் என்று கூற மாட்டேன் இதை மக்கள் எழுச்சி என்றே தான் கூறுவேன் என பதிலளித்தார்.லண்டனில் கறுப்பு இனத்தவர் ஒருவர் தமிழ் நாட்டு என்கவுண்டர் பாணியில் சுட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் லண்டன் வாழும் கறுப்பு சமூகத்தனிரால் ஏற்ப்படுத்தப் பட்டட எதிர்ப்பு ஊர்வலம் ஆர்ப்பட்டம் பின் கலவரமாக வெடித்தது .பல கடைகள் உடைக…
-
- 1 reply
- 1k views
-
-
ஆஷ்ட்ரேயில் உதிர்ந்திருக்கும் விரல்கள் நேசமித்திரன் மழை முடிந்திருக்கும் மரத்தின் கிளைகள் தாழ்ந்திருக்கின்றன .உன்னுடனான முதல் சொல்லை இத்தனைத் தயக்கங்களுடன் துவங்க நேரும் ஒரு பொழுதை எப்படி கடப்பது.தண்டவாளத்தின் குறுக்குக் கட்டைகளைப் போல் புதைபட்டிருக்கும் நினைவின் சாயைகளில் இருந்து மீட்டெடுக்க கூடாததாய் இருக்கிறது பகிர்ந்த கணங்களின் துடிப்பு மீதமிருக்கும் தசை. உச்சிப் பகலில் உயரமாய் தெரிகிறது ஆகாயம்.குடித்துக் கொண்டிருக்கும் கன்றை வலிந்து இழுத்து கலயம் ஏந்தும் மடியில் சொட்டும் துளிகள் இந்த சொற்களுக்கான ஈரம் தரக் கூடும்.அதீதமான துக்கத்தை தருபவை மிக விழைந்த பிரியங்களாய் இருக்கின்றன .கிளையைப் போல் பிரிந்து பறவையைப் போல் பறந்து போவது என்பதெல்லாம் எழுதுவதைப்போல…
-
- 0 replies
- 746 views
-