Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேரும் விழுதும்

கலைகள் | கலைஞர்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வேரும் விழுதும் பகுதியில் கலைகள், கலைஞர்கள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் கலைகள், கலைஞர்கள் பற்றிய அவசியமான கட்டுரைகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
இசை சம்பந்தமான பதிவுகள் "இலக்கியமும் இசையும்" என்ற புதிய பகுதியிலேயே இணைக்கப்படல்வேண்டும்.

  1. தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம் கரகாட்டம் போர் தேங்காய் அடித்தல் நாடகங்கள் மற்றும் பஜனைப் பாடல்கள் போன்ற கலை துறைகளில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் சிலம்ப ஆசான் தில்லை சிவலிங்கம் என அழைக்கப் படுகின்ற தில்லையம்பலம் தவராசா அவர்கள். 8 வயதில் இருந்து சிலம்பம் சூரசங்காரம் அவர்களிடமும் பின் நடராசா சோதிசிவம் அவர்களிடமும் பயிற்சி பெற்று தமிழாராட்சி மாநாட்டில் சிலம்ப நிகழ்வில் வைத்து இவரது ஆசான் நடராசா சோதிசிவம் அவர்களினால் சிலம்பாசான் பட்டம் வழங்கி கௌரவிக்கப் பட்டவர் அதனைத் தொடர்ந்து தனது திறமையினால் நிறைய சிலம்ப மாணவர்களை உருவாக்கியிருக்கின்றார். இன்றும் கூட சிலம்பம் பயிற்சியளித்து வருகின்றார். அமரர் சாண்டோ எம் துரைரத்தினம் அவர்களினால் சிலம்பச் சக்கரவர்த்தி என ப…

  2. புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு நிகழ்வுதளத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் ஒரு ஆற்றொழுக்கான மாற்ற நிலையினை அண்மைய காலங்களில் அனுபவிக்க கூடியதாக இருக்கிறது. ஆனால் அந்த மாற்ற நிலையானது புலம்பெயர் தமிழ் இலக்கிய தரத்தினை மேம்படுத்துகிறதா என்று நோக்கினால் அதற்கான பதில் ஒரு மௌனம் கலந்த பெருமூச்சாகவே இருக்கிறது. ஒரு வாசகனின் வெளிப்பார்வைக்கு ஒரு கவர்ச்சிகரமான உலகமாக தோற்றமளிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகள் சமூகம் மிக கேவலமான பண்புசார் உத்திகளுடன் தான் இன்று தமக்கான தளத்தினை கட்டமைத்துள்ளது என்றால் அது மிகையில்லை. ஒரு குறிப்பிட்ட கால இயங்கு நிலை இழந்த அல்லது மறுக்கப்பட்ட ஒரு தரப்பினரும், தொடர்ந்து இயங்கு நிலையில் இருக்கும் ஒரு தரப்பினரும்…

  3. 30வது பெண்கள் சந்திப்பு- ஒரு பார்வை -உமா (ஜேர்மனி )- 1990ம் ஆண்டு ஜேர்மனியின் கேர்ண நகரில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பின் 30வது தொடர் ஒக்டோபர் மாதம்12ம் திகதி பாரிஸில் நடைபெற்றது. இச்சந்திப்பின் ஆரம்பவுரையை நிகழ்த்திய விஜி, 1990 களில் ஜேர்ம னி கேர்ண நகரில் தொடங்கிய இப்பெண்கள் சந்திப்பு, 30 வது சந்திப்பு வரை பல ஐரோப்பிய நாடுகளிலும், கனடாவிலும் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறிப்பிடக்கூடியது. இதற்கு முதல் மூன்று சந்திப்புகள் பிரான்சில் நடைபெற்றுள்ளதாகவும், எல்லாச் சந்திப்புகளுமே காத்திரமான சந்திப்புகளாக அமைந்தனவென்றும், 2000ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட பெண்கள் சந்திப்பில் தலித் சிந்தனையாளரும் பெண்ணியவாதியுமான சிவகாமி கலந்து கொண்டு ஆழமான கருத்துகளை வழங்கியதோடு பங்குபற…

    • 50 replies
    • 5.6k views
  4. 1967´ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் பிறந்த இவர், தனது 16´வது வயதிலேயே.... ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்டு.. கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் வண்ண ஓவியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின் ஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் வண்ண ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சென்னை கவின் கல்லூரியில் தற்போது ஓவிய பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். இவரின் ஈழப் போர் ஓவியங்கள்.... பலரது கவனத்தை ஈர்த்தது.

  5. 41வது இலக்கியச் சந்திப்பு – யாழ்ப்பாணம் 2013 (குவர்னிகா – இலக்கியச் சந்திப்பு மலர் வெளியீடு) 41வது இலக்கியச் சந்திப்பு (இலங்கை – யாழ்ப்பாணம்) எதிர்வரும் யூலை 20 – 21ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. கீழ்வரும் வகையில் இலங்கை இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி உள்ளடக்கங்கள் அமையும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம், பன்மைத்துவம், சமனிலை என்பவற்றின் அடிப்படையில் ஈழ இலக்கியத்தில் பேசுபொருளாக இருந்த – இருக்கின்ற அனைத்து விடயங்கள் பற்றியும் எத்தகைய சார்பு நிலைகளுமின்றி, பேசுவதற்கான அரங்குகள் திறந்துள்ளன. 1. பாரம்பரியக் கலைகள் மலையக, முஸ்லிம், தமிழ்ச் சமூகங்களின் கலை, பண்பாடு, மரபுரிமை மற்றும் அவற்றின் இன்றைய நிலை தொடர்பான அரங்கு. 2. சாதியம் யாழ்ப்…

    • 25 replies
    • 3.5k views
  6. ஈழத்து கலைஞன் ,அந்த கால கட்டத்திலேயே பொப்பிசையை ஈழத்தில் உருவாக்கிய ”ஈழத்து மெல்லிசை மன்னர் ” எம்.பி.பரமேஸ் அவர்களை ஒட்டுமொத்த திரையுலகம் மறந்த பொழுதும் தேடி கண்டடைந்து அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கொடுத்து மகிழ்வதில் ”கலகம்” தன்னம்பிக்கையும் பெருமிதமும் கொள்கிறது.. எம்.பி.பரமேஸ் சார்பாக தமிழர்களின் விடிவெள்ளி தமிழ் தேச தந்தை பாவலேறு பெருஞ்சித்திரனாரின் பேத்தியும்,தமிழ் தேச களத்தில் வீறு கொண்டு நிற்பவருமான அக்கா ,வழக்குறைஞர். அங்கயற்கண்ணி அவர்கள் பெறுவதை உறுதி செய்கிறோம்.. திராவிட விடுதலை கழகம் பொறுப்பாளரும் தமிழீழ தலைவர் பிரபாகரனோடு மிக நெருக்கமாக நின்றவறுமாகிய அய்யா கொளத்தூர் மணி அவர்களின் கரங்களால் அக்கா அங்கயர்கண்ணி பெற்று கொள்கிறார்... வாழ்த்துவ…

    • 2 replies
    • 1.1k views
  7. https://www.youtube.com/watch?feature=player_embedded&v=F-ONVu7RytU#at=73

  8. நேற்று அளவெட்டிஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற இசை தொகுப்பு வெளியீடும் இசை நிகழ்ச்சியும் சில புகைப்படங்கள் 2நன்றி முகனூல்

    • 1 reply
    • 859 views
  9. உலகின் மிகமுக்கியமான திரைப்படவிழாக்களில் ஒன்றான ‘ஷங்காய் சர்வதேச திரைப்பட விழா’வில் (Shanghai International Film Festival) விருதுக்கு போட்டியிடும் படங்களில் ஒன்றாக A GUN & A RING என்கின்ற ஈழத்தமிழரின் திரைப்படமும் தெரிவிவாகியிருந்தது. ஈழத்தமிழர் விஷ்ணு முரளியின் தயாரிப்பில் லெனின் எம்.சிவம் இயக்கத்தில் TTN ‘படலைக்குப்படலை’ புகழ் மன்மதன் என்கின்ற பாஸ்கர் மற்றும் பலரின் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. ‘ஷங்காய் திரைப்பட விழா’வில் சிறந்த நடிகர் என்ற பாராட்டைப் பெற்றுத் திரும்பியிருந்த பாஸ்கர் அவர்களை, எமது ஊடக இல்லத்திற்கு அழைத்து நேர்காணல் செய்திருந்தோம். அவர் எம்முடன் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஊடக இல்லம்:- எமது ஊடக இல்லத்தின் சார்பாக உங்களை வரவேற்பதில் ம…

    • 1 reply
    • 818 views
  10. ஈழத்து நடிகர் நடிகமணி வி.வி.வைரமுத்து அவர்களின் அரிச்சந்திரன் நாடகம் ஈழத்து நடிகர் நடிகமணி வி.வி.வைரமுத்து மண்ணில் 11.02.1924 விண்ணில் 08.07.1989 வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு மகனாக வைரமுத்து பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூர…

  11. வணக்கம் என் நண்பர்களே எமக்கு கிடைத்த முத்துக்களை பற்றி பத்மலிங்கம் ஒரு அருமையான கர்நாடகா சங்கீத முத்து புத்தூரில் பிறந்து எங்களுக்கு பெருமையை தந்த உன்னதமான ஒரு சொத்து http://www.youtube.com/watch?v=1Sts_4UnJxE நன்றி முகனூல்

  12. நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை? - யோ. கர்ணன் ஐரோப்பாவிலுள்ள நண்பரொருவர் சிலதினங்களின் முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது சற்றே நீண்டது. அதன் குறிப்பிட வேண்டிய பகுதிகள் கீழே உள்ளன. ‘சில விடயங்களை ஊகிக்கத்தான் முடியும். ஆதாரங்களுடன் நிறுவ முடியாது. ஆதாரமான நம்பிக்கைகளினடிப்படையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால், சிலவேளைகளில் அவற்றை ஆதாரங்களுடன் நிறுவவும் கூடும். இலக்கிய சந்திப்பு விவகாரமும் இவ்வாறனதே. இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதே ஒருவிதமான உள்நோக்கத்தினடிப்படையிலானதுதான் என்பதே எனதும் இங்குள்ள சில தோழர்களினதும் அசையாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. உங்கள் முகப்புத்தக தகவல்களை கவனித்து வருகிறேன். எனது நம்பிக்கைகளிற்கா…

    • 5 replies
    • 1.1k views
  13. அப்புக்குட்டி இராஜகோபாலன்

    • 5 replies
    • 1.2k views
  14. பாண்டிச்சேரி சென்றிருந்தபோது ஒரு நண்பர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். நண்பர் நல்லவாசகர், இனியவர்.இசையிலும் ஓவியத்திலும் ஈடுபாடு கொண்டவர். இத்தகையோரில் பெரும்பாலானவர்கள் ஒருவகை அப்பாவிகளாக, பிறர் தங்கள்மீது ஏறி அமர்ந்து காதைக்கடிக்க அனுமதிப்பவர்களாகவே இருப்பார்கள். அவரும் அப்படித்தான். தன் பக்கத்துவீட்டுக்காரர் நல்லவாசகர் என்றும் அவருக்கும் சங்கசித்திரங்களைக் கொடுத்திருக்கிறேன் என்றும் நண்பர் சொன்னார். அந்த பக்கத்துவீட்டுக்காரர் நான் பாண்டிச்சேரி வந்திருப்பதை அறிந்து சந்திக்கவிரும்புவதாகவும் சொன்னார். பார்ப்போம் என்று நான் சொன்னேன். அநத பக்கத்துவீட்டுக்காரர் ஒருகாலத்தைய திமுகக் காரர். அண்ணாத்துரை எழுதிய எல்லா நூல்களையும் வாசித்தவர், இன்றும் வாசிப்பவர் என்றார் நண்பர். அவர் …

  15. சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது. சிலம்பல்' என்ற வினைச் சொல்லுக்கு "ஒலித்தல்' என்பது பொருள். மலைப்பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, மிருகங்களின் இரைச்சல் போன்ற நாலாவித ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்பதால் மலைக்கு, "சிலம்பம்' என்ற பெயருண்டு. எனவே, மலை நிலக் கடவுளான முருகனுக்கும், "சிலம்பன்' என்ற பெயருண்டு. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு "சிலம்பம்' என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட் டத்தில் கடையநல்லூரு…

  16. நேர்காணல் "பெண்மொழி இன்னமும் சமூகப் பொதுமொழியாக மாறவில்லை" - ஔவை சந்திப்பு: கருணாகரன் ஔவை நவீனத் தமிழ்க் கவிஞர்களில் முக்கியமானவர். 1980களில் ஈழத்தில் எழுந்த பெண்கவிஞர்களின் எழுச்சியோடு எழுத வந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ‘பெண்’ பற்றிய மரபார்ந்த சிந்தனையை உடைத்துப் புதிய நோக்கில் சிந்திக்கும் வழியைத் திறந்துகொண்டு வந்த ‘சொல்லாத சேதிகள்’ அணியில் முக்கியமானவர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருகின்றபோதும் ‘எல்லை கடத்தல்’ என்ற ஒரு கவிதை நூல் மட்டுமே இதுவரையில் வெளிவந்திருக்கிறது. தொடர்ந்து எழுத்திலும் களச் செயற்பாடுகளிலும் இயங்கி வருகிறார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயின்று, பின்னர் ஆசிரியர் பணி, கல்விச் ச…

    • 3 replies
    • 2.2k views
  17. எழுத்தாளர் பாலகுமாரன் நேர்காணல் - வித்தகன் நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை ஒரு சவாலாக நினைத்துத்தான் உழைத்தேன். இதோ நாற்பது ஆண்டுகள்ல 260 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இந்த ராட்சச வேகத்துக்குக் காரணம் நான் ஒரு ஒர்கஹாலிக். வேலை வெறியன். நல்லா ஒர்க் பண்றது ஒரு போதையான விஷயம். இடையறாது ஒர்க் பண்றதும் அப்படித்தான். அல்பமான விஷயங்களில் என்னால ஈடுபடவே முடியாது. உதாரணமா, எந்தப் பயனும் இல்லாம என்னால அரட்டை அடிக்கவே முடியாது. அதனால எனக்கு நண்பர்களும் கிடையாது.’ கர்ஜிக்கும் குரலில் கணீரென்று பேசிய பாலகுமாரன், ஆழத்துக்கான நேர்காணலின் ம…

  18. பிரமீள்- மேதையின் குழந்தைமை உதயசங்கர் திருநெல்வேலியிலிருந்து விளாத்திகுளத்துக்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு வேலை மாற்றலாகி வந்த ஜோதிவிநாயகம் கோவில்பட்டியில் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துத் தலையை கழுத்துக்கு ரெண்டடி மேலே தூக்கிக்கிட்டு திரிந்த எங்கள் தலையில் ஒரு தட்டு தட்டி ( அப்படி தட்டுகிற அளவுக்கு எங்கள் எல்லோரையும் விட ஆறடி உயரத்தில் இருந்தார் ) ஏல உங்களுக்கு என்னல தெரியும் உலக இலக்கியம் பத்தி? என்று கேட்டார். அதுவரை எங்களைக் கேள்வி கேட்க யாரிருக்கா என்று தெருக்களில் யாரும் இல்லாத ராத்திரிகளில் பேட்டை ரவுடிகள் மாதிரி கர்ஜித்து புகை விட்டுத் திரிந்து கொண்டிருந்தோம். அவருடைய கேள்வியினால் எங்களுக்கானால் வெளம். எங்களைப் பார்த்து எப்படிக் கேட்க…

  19. பிரித்தானியாவில் பெண் எழுத்தாளர்கள்! நவஜோதி ஜோகரட்னம் ,லண்டன் “கோயில்களில் பாட்டுக்கள் பாடி நாட்டியம் ஆடுகின்ற நாட்டியப் பெண்களைத் தவிர, மற்றையோரில் தமிழை எழுத வாசிக்கத் தெரிந்த இரு பெண்களை மாத்திரம் யாழ்ப்பாணத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்களுள் ஒருத்தி அளவெட்டியிலும் மற்றவள் உடுப்பிட்டியிலும் இருக்கிறாள். வேறும் ஒருத்தி இருப்பதாக கேள்விப்படுகிறேன். இன்னமும் அவளைச் சந்திக்கவில்லை” என்று 1816 ஆம்; ஆண்டில் அமெரிக்க சமயக் குழுவின் பாதிரியார் வண.மெயிக் எழுதிய குறிப்புகள் ( “யாழ்ப்பாணத்துச் சமூகத்தில் பெண்கல்வி, வள்ளிநாயகி இராமலிங்கம்”) யாழ்ப்பாணத்தில் நிலவிய பெண்கல்வி நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் உடுவில், வேம்படி, உடுப்பிட்டி, பருத்தித்துற…

  20. சென்னை. 07.03.2013 விமல் சாமிநாதன் என் அன்புகுரிய தோழன் அவனது சிங்கள மனைவி பிள்ளைகள் எல்லாம் இன்று அருகிப்போய்விட்ட உண்மையான மனிதர்கள். சே குவேரா வாழ்ந்த தலைமுறையில்தான் இத்தகைய இலட்சிய வாதிகளை நான் சந்திதிருக்கிறேன். அப்படி ஒரு வாழ்க்கையைத்தான் நானும் தேடினேன்.அத்தகைய கனவுகளோடு அலைந்த சிங்கள தமிழ் முஸ்லிம் மலையக தோழர்கள் தோழியர்கள் பலருடன் சேர்ந்து கனவுகண்ட அந்த நாட்களை போர் சிதைதழித்துவிட்டதுதான் சோகம்.. ஒரு கலைஞனாக நான் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியதில்லை. நான் நம்பியவற்றுக்காக உயிரை பணயம் வைக்க நான் ஒருபோதும் தயங்கியதுமில்லை.. தமிழ் பேசும் மக்களுகெதிரான இன ஒடுக்குதலை எதிர்த்து எழுந்த காலங்களில் வடபகுதி முஸ்லிம் மக்கள் பாதிக்…

  21. ஓர் அகதியில் பாடல் - வ.ஐ.ச. ஜெயபாலன் வ.ஐ.ச. ஜெயபாலன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974-ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். எழுபதாம் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட புரட்சியில் இலக்கியத்திலும் செயற்பாடுகளிலும் இவர் பங்கு வகித்திருந்தார். வன்னி மண்ணின் வாசனையையும் வரலாற்றுச் செய்திகளும் அடங்கிய “பாலி ஆறு நகர்கிறது” கவிதைத் தொகுப்பு ஜெயபாலனின் முதல் கவிதைத் தொகுப்பாக அறியப்படுகிறது. அன்று தொடங்கிய இன்று வரை இவர் கவிதைத்துறை…

    • 7 replies
    • 2.3k views
  22. எஸ்.ஜானகி - பத்மபூஷன் இழந்த கெளரவம் விக்கி 1962-ம் ஆண்டு… எஸ்.எம்.எஸ் எனப்படும் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு ஒரு சிக்கல். ‘கொஞ்சும் சலங்கை’ படத்துக்கு சிங்கார வேலன் சந்நிதியில் ஒரு நாதஸ்வர வித்வானும், ஒரு கை தேர்ந்த பாடகியும், பக்தியும் காதலும் பொறாமையற்ற போட்டியுமாய் இணைந்து இசைக்கும் ஒரு பாடல். கீர்த்தனைகளையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு ஆபேரியில் அக்மார்க் தமிழிசை மரபில் அசத்தலாக ஒரு மெட்டும் ரெடி செய்துவிட்டார் எஸ்.எம்.எஸ். நாதஸ்வர சக்கரவர்த்தியாகிய ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யர் காருக்குறிச்சி அருணாசலமும் சிரத்தையுடன் ரிகர்சல் முடித்து தன் பங்கிற்கு ரெடி. தமிழ்த்திரையுலகின் கலைவாணியாகிய பி.சுசீலா பாட அழைக்கப்படுகிறார். எப்பேர்ப்பட்ட மலையையும் சாதாரணமாகத் தாண்டும் …

    • 3 replies
    • 1.9k views
  23. 'காந்தள்பூவும், சோழக்காடும்' : வளர்ந்து வரும் இலங்கை கலைஞர்கள் பற்றிய ஓர் ஆய்வு! அண்மையில் கடல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடிய இலங்கை பாடகர் ஆர்யன் தினேஷ் முதல் வளர்ந்து வரும் மேலும் பல உள்ளூர் தமிழ் இசைக்கலைஞர்கள் வரை அவர்களது தேடல்கள், முயற்சிகள், வளர்ச்சிப்படிகள் பற்றி அலசுகிறது இக்கட்டுரை. கல்யாண வீடுகள், கோவில் திருவிழாக்கள், தேனீர் கடைகள் என்று ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த இசையும்- பாடல்களும் கணனிகளுக்குள்ளும், ஐபோட்டுக்குள்ளும், எம்.பி.3 சுழலிகளுக்குள்ளும் சுருங்கிவிட்ட காலம் இது. புதிய பாடல்களின் வரவை அறிய வானொலிகளைச் சுற்றிக்கொண்டிருந்த நாட்கள் மலையேறிவிட்டன. போட்டிபோட்டுக் கொண்டு ‘முதலில் புதிய படங்களின் பாடல்களை உங்களுக்கு…

  24. எழுத்தாளர் சுஜாதாவின் செவ்வி https://www.youtube.com/watch?v=n95UbgiDpHA

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.