துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
644 topics in this forum
-
எம் யாழ்கள உறவான ஜஸ்ரினின் தந்தையார் 'ஜோசப்' அவர்கள் இன்றிரவு (வியாழக்கிழமை) வவுனியாவில் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை சற்று முன்னர் ஜஸ்ரின் வவுனியாவில் இருந்து அறியத் தந்தார். அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்
-
- 48 replies
- 3.9k views
- 1 follower
-
-
தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். வார்ஸா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர் இவர். தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் து.மூர்த்தி மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் கருத்தாக்கங்களிலும் ஆழமான பற்று கொண்டவர். ’தமிழியல் புதிய தடங்கள்’ என்ற இவரது நூல் தமிழியல் ஆய்வில் முக்கியமான புத்தகம். 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ என்ற இவரது குறுநூல் பெரியார் மீது முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசிய நோக்கிலான விமர்சன…
-
- 0 replies
- 431 views
-
-
இந்தியப் படையினர், யாழ் வைத்தியசாலையில் 21,22 .10.1987 அன்று, வைத்தியர்கள், தாதிமார் உட்பட 21 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த நாள். இந்தியப் படையினரால், படு கொலை செய்யப் பட்ட.... நோயாளிகள், வைத்தியர்கள், தாதியருக்கு... நினைவு வணக்கங்கள்.
-
- 7 replies
- 548 views
-
-
மதுரை சிந்தாமணி இழப்பு! மதுரை: மதுரை மக்களின் ஒரு முக்கிய அடையாளம் சினிமா ரசனை. சினிமாவை ரசிக்காத, ரசிக்க முடியாத மக்களை மதுரையில் பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட மதுரையில் சினிமா தியேட்டர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்.? மதுரையில் உள்ள ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கும். ஒவ்வொரு தியேட்டர் குறித்தும் பக்கம் பக்கமாக பேசிச் சிலாகிக்கக் கூடிய அளவுக்கு கதைகள் இருக்கும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் ஒன்றுதான் சிந்தாமணி. 'அம்சவல்லி பவனி'ல் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, சிந்தாமணிக்குப் போய் செகண்ட் ஷோ பார்க்காத மதுரைக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட சிந்தாமணி தியேட்டர் தற்போது உடைபட்டுக் கொண்டிருக்கிறது. மது…
-
- 1 reply
- 730 views
-
-
யாழ்களத்தில் தமிழகத்தில் இருந்து இணைந்திருந்த எனது அன்புத் தோழர் தமிழுணர்வாளர் புரட்சிகரதமிழ்தேசியனின் மகள் ஹெமா அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் சென்னை வெள்ளத்தில் இறைபதம் அடைந்தாள். மகளின் பிரிவால் துயருற்றிருக்கும் தோழருக்கும் சகோதரிக்கும் இறைவன் சமாதானத்தைக் கொடுப்பானாக. மகளின் ஆத்மா அமைதியாக இளைப்பாறுவதாக!
-
- 43 replies
- 4.3k views
-
-
யாழ்கள உறவு சுமேரியர் அம்மா (நிவேதா உதயன் ) அவர்களின் தந்தையார் ஜெர்மனியில் இன்று காலமாகிவிட்டார். அன்னாரின் ஆத்மசாந்திக்காக பிரார்த்திப்பதுடன் துயரிலும் பங்குகொள்கிறேன்.
-
- 82 replies
- 12.4k views
-
-
ஈழப் பேராசிரியர் தமிழ் மொழியின் தூதர் தனிநாயகம் அடிகளாரின் பிறந்த தினம் இன்று: சேவியர் தனிநாயகம் அடிகள் எனப்படும் தமிழ் மொழியின் தலைமகனின் பிறந்தநாள் இன்று. இலங்கையில் உள்ள இலங்கையில் உள்ள காம்பொன் ஊரில் ஹென்றி ஸ்ரனிஸ்லால், சிசில் இராசம்மா வஸ்தியா பிள்ளை தம்பதிக்கு முதல் பிள்ளையாக நூற்றியொரு ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தார். கல்லூரிக்கல்வியை ஆங்கில வழியில் படித்து முடித்த அவர். இவரின் இயற்பெயர் ஸ்டானிஸ்லஸ் சேவியர் என்றாலும் பின்னர் தமிழ் மீது கொண்ட பற்றால் சேவியர் தனிநாயகம் என்று மாற்றிக்கொண்டார். இலங்கையில் இருந்த திருச்சபை அவரை இத்தாலி போய் படிக்க அனுமதிக்காமையால் மலங்காரச் திருச்சபையில் இணைந்து தி…
-
- 0 replies
- 734 views
-
-
சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்.. சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவரும் தமிழருமான எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த 92 வயதான நாதன், தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன். இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர…
-
- 6 replies
- 818 views
-
-
கவிஞரும் தமிழ் பற்றாளருமான நா.முத்துக்குமார் அவர்களின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 21 replies
- 1.9k views
-
-
பழம்பெரும் கவர்ச்சி நடிகை நடிகை ஜோதிலட்சுமி காலமானார். சென்னை: பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி காலமானார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அவர் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். பெரிய இடத்துப் பெண் தமிழ் திரைப்படத்தில் 1963ல் அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. 1970களில் கறுப்பு வெள்ளை கால தமிழ் சினிமா தொடங்கி இன்றைய கம்யூட்டர் காலம் வரை சினிமா, சின்னத்திரை என அழகாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜோதிலட்சுமி. ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஜோதிலட்சுமியின் கவர்ச்சி நடனத்திற்காகவே படங்கள் ஓடி வெற்றி பெற்றுள்ளன. இன்றைக்கும் அதே அழகோடு சீரியல்களில் நடித்து வந்தார். ரத்த புற்று நோயினால் பாதிக்கப்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
பழம்பெரும் நடிகர், இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் காலமானார் சென்னை: தமிழ் சினிமாவின் பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், நடிகருமான 'வியட்நாம் வீடு' சுந்தரம் சென்னையில் இன்று(சனிக்கிழமை) காலமானார். தமிழ்த் திரையுலகில், 1970-ம் ஆண்டு 'வியட்நாம் வீடு' என்ற திரைப்படத்தின் மூலம் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமானவர் சுந்தரம். இவர் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபல திரை நட்சத்திரங்களுடன் பணியாற்றியுள்ளார். இவரது கதை, வசனம் மற்றும் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் வெளியான 'கௌரவம்' படம் பலராலும் பாராட்டப்பட்டது. மேலும், பல பிரபல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'வள்ளி' தொடர்வரை அவர் நடித்திருக்கிறா…
-
- 8 replies
- 938 views
-
-
பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்! சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் 'இளையதலைமுறை', 'மணமகளே வா', 'புதுப்பாட்டு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 13 replies
- 1.3k views
-
-
மரிக்கார் ராம்தாஸ் காலமானார் இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை காலமானார். அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8879
-
- 8 replies
- 1.8k views
-
-
கண்ணீர் அஞ்சலி! அமரர் செ.க.சிவப்பிரகாசம் ( சிற்பக்கலாநிதி) யாழ். மத்திய கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் இன்று இறைவனடி சேர்ந்தார். இவர் திருமதி. அன்னலட்சுமி ( முன்னைநாள் ஆசிரியை, யாழ். மத்திய கல்லூரி) அன்புக்கணவரும் துசியந்தன்(யேர்மன்) Dr. அனுசியந்தன் அவர்களின் தந்தையுமாவார்.இலங்கையில் மிகப்பிரத்தி பெற்ற கலைஞரான இவரது சிற்பங்களில் ஒன்றாக சங்கிலியன் சிலைய்யுள்ளது. எமது நிறுவுனர் அதிபர் வண.ஜேம்ஸ் லின்ச் அவர்களின் சிலையும் இவராலேயே செய்யப்பட்டது. அண்மையில் யாழ். மணிக்௬ட்டு கோபுரத்தை சுற்றி நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலைகளையும் இவரே உருவாக்கினார்.யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் சார்பில் எங்கள் கண்ணீர் அஞ்சலிகள். …
-
- 7 replies
- 692 views
-
-
மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் திருவாளர். பிரான்சிஸ் சேவியர் காலம் ஆகினார்... பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர். பிரான்சிஸ் சேவியர் அவர்கள் யூன் 10, 2016 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் காலம் ஆகினார். யூலை 25, 1933ல் யாழ்ப்பாணம் நாரந்தனையில் பிறந்த இவர், தனது இளமைக்காலத்தினை யாழ்ப்பாணத்திலேயே கழித்திருந்தார். ஆரம்பத்தில் தபாலதிபராக நியமணம் பெற்றிருந்த அவர் தனது விடாமுயற்சி, கல்வியறிவு மற்றும் தனிப்பட்ட ஆளுமைகளின் காரணமாக இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதியினை ப…
-
- 0 replies
- 550 views
-
-
வீரகேசரி, மித்திரன் போன்ற பத்திரிகைகளின் செய்தியாளர்களில் ஒருவரும், T.R.T, I.B.C மற்றும் கனேடிய தமிழ் வானொலிகளில் செய்திகள் வாசிப்பாளரும், மனித உரிமைப் பேரவை அங்கத்தவருள் ஒருவரும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு சாத்வீக வழிகளில் பெரும் பங்காற்றியும் வந்த விஜயரத்தினம் வரதராஜா (வீ ஆர் வரதராஜா) அவர்கள் 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று யேர்மனியில் காலமானார். தற்போது சமகால நிகழ்வுகள்பற்றி எழுதிவரும் இவரது இழப்பு ஊடகத்துறைக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாருக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகள்!!
-
- 9 replies
- 842 views
-
-
இயல்பு வெளிப்பாடுகளை வைத்து மனிதர்களை அளவிடுவது தவறு - செல்வநாயகம் ரவிசாந்த் 16.04.2007 ஆம் ஆண்டு படு கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரும், கவிஞரும், இலக்கிய வாதியுமான ‘எஸ்போஸ்’ எனப்படும் சந்திரபோஸ் சுதாகரின் நினைவுப் பகிர்வு நிகழ்வு மறுபாதிக் குழுமத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை 16.04.2016 பிற்பகல் -4 மணிக்கு ஆரியகுளம் சந்தியில் அமைந்துள்ள புதிய உயர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. விமர்சகர் சி.ரமேஸ் நிகழ்வை முன்னிலைப்படுத்தினார். கவிஞர் கருணாகரன், ஆசிரியர் பெருமாள் கணேசன், ஆசிரியர் ப. தயாளன், எழுத்தாளர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன், சமூக ஆய்வாளர் தெ . மதுசூதனன், கவிஞர் தானா விஷ்ணு ஆகியோர் எஸ்போஸுடனான தமது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதனைத…
-
- 0 replies
- 960 views
-
-
மோகன் ஆர்ட்ஸ் - மூனா எழுபதுகளின் நடுப்பகுதியில் பருத்தித்துறையில் மோகன் வரைந்த விளம்பரப் பலகைகளே அதிகமாக இருந்தன. மோகனின் வரவுக்கு முன்னர் ஜெயம் ஆர்ட்ஸ்தான் நகரில் பிரபலம். அடிமட்டம் வைத்து எழுதியது போன்றிருக்கும் ஜெயம் ஆர்ட்ஸின் நேரான எழுத்துப் பாணியை மோகனின் வளைந்த நெளிந்த எழுத்துக்கள் மேவி நின்றன. மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என்று நேரடி வர்ணங்கள் இல்லாமல் வர்ணக்கலவைகளை தனது எழுத்துக்களில் மோகன் பயன்படுத்திக் கொண்டிருந்தார். இது அப்பொழுது ஒரு மாற்றமாகவும் புதுமையாகவும் இருந்ததால் பல வியாபாரிகள் மோகனின் வாடிக்கையாளர்களாக மாறி இருந்தார்கள். மோகன், தமிழ்நாட்டில் ஓவியர் மாதவனிடம் சித்திரக்கலையைப் பயின்றவர். ஓவியத்துறையை தொழிலாகவும் செய்யலாம் என்ற…
-
- 11 replies
- 1.4k views
-
-
இலங்கை வானொலி நாடக சினிமா நடிகர் கே எஸ் பாலசந்திரன் கனடாவில் இன்று காலமானர் . இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் இயக்குனரும் ஆவார் . இந்த மாபெரும் தமிழ் கலைஞனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகள் .
-
- 49 replies
- 5.4k views
-
-
வரலாறாகிவிட்ட ஆப்ரகாம் லிங்கன் February 12, 2016 - பி.தயாளன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வீம்ஸ் (Weems) என்பவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டான் அச்சிறுவன். அந்த வரலாற்று நூலைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தபோது, அது ‘கிராஃபோர்டு’ என்கிற விவசாயிடம் இருப்பதாக அறிந்தான். பன்னிரெண்டு மைல் தூரம் நடந்துபோய், ‘கிராஃபோர்டைச்’ சந்தித்தான். அவரிடம்? “வீம்ஸ் எழுதின ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ வாழ்க்கை வரலாற்று நூலைக் கொடுங்கள்; படித்துவிட்டுத் தருகிறேன்” என்று மன்றாடிக் கேட்டு வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்து அடுப்பு வெளிச்சத்தில் ஆர்வத்தோடு அந்நூலைப் படித்து முடித்தான். பின்னர் சுவரின் இடுக்கில் நூலைச் சொருகி வைத்துவிட்டுத் தூ…
-
- 0 replies
- 799 views
-
-
இயற்கை எய்தினார் மிருதங்க பூபதி அவுஸ்திரேலியாவில் மிருதங்க பூபதி, ஞானச்சுடரொளி, கலாபூஷணம், யாழ்ப்பாணம் ஸ்ரீ ஆறுமுகம்பிள்ளை சந்தானகிருஷ்ணன் காலமானார். எம்மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வல்லமை படைத்த மிருதங்க வாத்தியக் கலைஞர் ஸ்ரீ ஆ.சந்தானகிருஷ்ணன் அவர்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இயற்கை எய்தினார். ஈழமணி திருநாட்டின் யாழ்ப்பாணம் மூளாய் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தன் தந்தையாரான ஸ்ரீ ஆ.வி. ஆறுமுகம்பிள்ளையிடம் குருகுல முறைப்படி கல்வி கற்றவர். அமரர்களான இசை மேதைகள் வலங்கைமான் ஸ்ரீ ஏ.சண்முகசுந்தரம்பிள்ளையும், ஸ்ரீ ஏ.பாலகிருஷ்ணனும் (மூளாய்) இவர்களது சகோதரர்கள் ஆவார்கள். காலம் சென்ற சந்தானகிருஷ்ணன் ஓய்வுபெற…
-
- 2 replies
- 839 views
-
-
யாழ் கருத்துக்கள உறவான கலைஞனின்(கரும்பு, முரளி, மாப்பு) தந்தையார் சற்று முன்னர் இறைபதம் எய்தினார். தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் கலைஞனின் துயரிலும் அவருடைய குடும்பத்தினரின் துயரிலும் பங்கெடுத்துக் கொள்கிறோம். குருநாதசுவாமி கோவிலடி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவகுருநாதன் அவர்கள் 17.02.2013 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சுப்பிரமணியம் நீலாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும், அமிர்தாம்பிகையின் ஆருயிர் கணவரும், செல்வஜோதி (அவுஸ்திரேலியா), சிவசக்தி (டென்மார்க்), வாசுகி (அமெரிக்கா), கோணேஸ்வரன் (கனடா), முரளிதரன்…
-
- 116 replies
- 12k views
- 1 follower
-
-
பேபி சுப்பிரமணியத்தைப் பெற்றெடுத்த வீரத்தாயின் மறைவுக்கு வீர வணக்கத்தை தெரிவிக்கின்றேன்: வைகோ பேபி சுப்பிரமணியம் தாயார் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் : ’’தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுடைய முழு நம்பிக்கைக்கும் உரியவரான பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன் அவர்களின் அன்புத்தாயார் செல்வநாயகி நடராஜா, கடந்த 19 ஆம் தேதியன்று இரவில் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் மறைந்தார் என்ற செய்தி அறிந்து தாங்க முடியாத வேதனை அடைந்தேன். ஆருயிர்ச் சகோதரர் பேபி சுப்பிரமணியத்தைத் தமிழகத்தில் உள்ள ஈழத்து உணர்வாளர்கள் அனைவருமே நன்கு அறிவார்கள். கசங்கிய அழுக்குச் சட்டையும், ஒரு நான்கு முழ வேட்டிய…
-
- 9 replies
- 1.9k views
-
-
அஞ்சலி: ஆ. வேலுப்பிள்ளை (1936 - 2015) உறுதிகொண்ட நெஞ்சினர் எம்.ஏ. நுஃமான் தமிழறிஞர், பேராசிரியர் வேலுப்பிள்ளை இன்று நம்முடன் இல்லை. நவம்பர் முதலாம் தேதி அவர் காலமானார் என்ற செய்தியை அவரது மாணவர்களும் தமிழியல் ஆய்வாளர்களும் கவலையோடு எதிர்கொண்டனர். அவர் நெடுநாள் நோய்ப்படுக்கையில் இருக்கவில்லை. அமெரிக்காவில் சன் ஃபிரான்சிஸ்கோவிலுள்ள தனது வீட்டில் குளியலறையில் விழுந்ததனால் ஏற்பட்ட தலைக்காயம் அவரது மரணத்துக்குக் காரணம் எனத் தமிழ்நெற் செய்தி வெளியிட்டிருந்தது. அந்தவகையில் அது எதிர்பாராத திடீர் மரணம்தான். இறக்கும்போது அவருக்கு வயது 79. இன்னும் சில ஆண்டுகளாவது அவர் …
-
- 4 replies
- 1.2k views
-
-
யாழ் பரியோவான் கல்லூரியின் மூத்த ஆசான் S .P ஜீவானந்தம் ஆசான் கடந்த 10 ஆம் திகதி இறைபதமடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஜீவானந்தம் ஆசானிடம் கல்விகற்ற என் ஆரம்ப நாட்களை நினைக்கிறேன். மிகவும் கண்டிப்பான ஆசான். எனது வளர்ச்சியில் இவரது பங்கும் அளப்பரியது. நன்றி ஆசான்.
-
- 3 replies
- 1.3k views
-