துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
போப் பிரான்சிஸ் காலமானார்! உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429008
-
- 1 reply
- 211 views
-
-
சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த றவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் க…
-
- 7 replies
- 715 views
-
-
மே 18, 19 ஆகிய தினங்களில், முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின்போது, படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்கள் ஒவ்வொருவரையும் இந்த நாட்களில் நினைவு கூறுகின்றேன். அனியாயமாக கொல்லப்ப்ட இந்த ஒவ்வொரு ஆத்மாக்களையும் கடவுள் பாதத்தில் சமர்ப்பிக்கின்றேன், அவர்கள் ஆத்மா சாந்திஅடைவதாக!. அவர்களை இழந்த உறவினர்கள் ஒவ்வொருவருக்கும் கடவுள்தாமே ஆறுதலாக இருப்பராக!. நினைவஞ்சலிகள்!
-
- 19 replies
- 1.7k views
- 1 follower
-
-
கிழக்கு லண்டன்... நியுகாம் தொழிற்கட்சி கவுன்சிலராக பல ஆண்டுகள் மக்களால் தெரிவு செய்யப்பட்டு வந்த போல் சத்தியநேசன் உடல்நலன் குறைவு காரணமாக கடந்த 5ம் திகதி காலமானார். இவர் அடிப்படையில் புளொட் அமைப்புச் சார்ந்தவராக இருந்தாலும்.. புலம்பெயர் மண்ணில்.. தமிழீழத்துக்கு சார்பான நிகழ்வுகளை முன்னின்று நடத்துவதிலும் பிரித்தானியர்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளைக் கொண்டு செல்வதிலும் முக்கிய பங்காற்றியவர் ஆவார். 1980 களில் இருந்து அகதிகளாக வந்த தமிழர்களுக்கு அரசியல் தஞ்சம் கிடைக்க பல வழிகளிலும் இவர் தன் உதவிகளை வழங்கி வந்திருப்பது தெரிந்ததே. கடந்த சில காலங்களாக தாயகத்தில் சில வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்து வந்திருக்கிறார். இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் இன்…
-
-
- 11 replies
- 1.3k views
-
-
மக்களுக்கும் போராளிகளுக்கும் வீரவணக்கம் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 903 views
-
-
சென்னை: மக்கள் சக்தி இயக்கத் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தி சென்னையில் இன்று காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த 80 வயதாகும் உதய மூர்த்தி, சென்னை திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இளைஞர்களுக்காக பல்வேறு சுய முன்னேற்ற நூல்களை எழுதியுள்ள உதயமூர்த்தி, ஆனந்த விகடனில் எழுதிய 'நம்மால் முடியும் தம்பி நம்பு' என்ற சுய முன்னேற்றத் தொடர் வாசகர்களிடையே வெகுவான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. உதய மூர்த்தி மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். http://news.vikatan.com/?nid=12112#cmt241
-
- 17 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பின்... பொக்கிஷமாக கருதப்படும், மாஸ்டர் சிவலிங்கம் காலமானார்! இலங்கையில் சிறுவர்களுக்கு கதைகூறுவதில் விசேட தன்மையினைக்கொண்டிருந்தவரும் மட்டக்களப்பின் பொக்கிஷமாகவும் கருதப்படும் மாஸ்டர் சிவலிங்கம் நேற்று (புதன்கிழமை) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லடியை சேர்ந்த இவர் சிறுவர்களுக்கு கதைகள் கூறுவதில் பிரபல்யம்பெற்றவராகவும் கலைஞராகவும் எழுத்தாளராகவும் பல்திறமைக்கலைஞராகவும் திகழ்ந்துவந்தார். காலமான மாஸ்டர் சிவலிங்கம் அவர்களின் இறுதிக்கிரியைகள் கல்லடியில் உள்ள இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்று கல்லடி உப்போடை இந்து மயானத்தில் மாலை 4.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள…
-
- 11 replies
- 849 views
-
-
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா காலமானார் ! இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் Sayanolipava முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உப தலைவருமான பொன்.செல்வராசா இன்று காலமானார். 1994ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில், தேர்தலில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினராக இவர் தெரிவானர். 2000ம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நிமலன் சௌந்தரநாயகம் படுகொலை செய்யப்பட்ட பின்னர், பொன்.செல்வராசா அவரது வெற்றிடத்திற்கு நியமன நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2010ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடாக தேர்தலில் போட்…
-
- 1 reply
- 278 views
-
-
உணர்ச்சிக் கவிஞர் காசியாணந்தன் அவரகளினால் இயற்றப்பட்டு, நேற்றைய தினம் காலமான உயர் திரு. ஜீவன் ஜோசப் அவர்களால் இசையமைத்துப் பாடப்பட்ட பாடல் இது. 70களில் இலங்கை முழுவதும் மட்டக்களப்பின் பெருமையை பறைசாற்றி ஒலித்த பாடல் இது. காலமான ஜீவன் சேர் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி. மட்டக்களப்பின் ஒரு மிகப் பெரிய அடையாளத்தை நாம் இழந்துவிட்டுள்ளோம். நன்றி.நிராஜ் டேவிட்
-
- 5 replies
- 1.1k views
-
-
சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர். மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவ…
-
- 16 replies
- 3k views
-
-
மண்காக்கும் மறவர்களுக்காய் ----------- மண்ணுக்காய் தங்கள் எதிர்காலக் கனவுகளை, குடும்பத்தை சுற்றத்தை விட்டுப் பிரிந்து புனிதப் பணியிலே வித்தாகிவிட்ட சகோதரர்களுக்கு என் தலைசாய்த்த வணக்கங்கள். இந்த நேரத்தில் தாம் பெற்ற செல்வங்களை களத்திற்குத் தந்து விட்டு சிரமங்களை அனுபவிக்கும் பெற்றோர்இ சகோதரர்களுக்காய் நாம் எதாவது ஆக்கபுூர்வமான வழியில் உதவுவோமா? லண்டனிலே சிறுவர் இல்லங்களிலே இருக்கின்ற குழந்தைகளைத் தத்தெடுத்து அந்தக் குழந்தைகளுக்காக மாதாந்தம் 15 பவுண்களை வழங்குகின்ற திட்டம் ஒன்று நடைமுறையில் இருந்து வருகிறது. அதுபோல மாவீரர் குடும்பங்களைப் பொறுப்பெடுத்து புலத்தில் வாழ்பவர்கள் உதவிசெய்தால் என்ன? இதுபோன்ற ஒரு ஆக்கபுூர்வமான பணியை ஏன் யாழ் களம் தொடங்கக…
-
- 16 replies
- 2.6k views
-
-
மதுரை சிந்தாமணி இழப்பு! மதுரை: மதுரை மக்களின் ஒரு முக்கிய அடையாளம் சினிமா ரசனை. சினிமாவை ரசிக்காத, ரசிக்க முடியாத மக்களை மதுரையில் பார்ப்பது அரிது. அப்படிப்பட்ட மதுரையில் சினிமா தியேட்டர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும்.? மதுரையில் உள்ள ஒவ்வொரு தியேட்டருக்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கும். ஒவ்வொரு தியேட்டர் குறித்தும் பக்கம் பக்கமாக பேசிச் சிலாகிக்கக் கூடிய அளவுக்கு கதைகள் இருக்கும். அப்படிப்பட்ட தியேட்டர்களில் ஒன்றுதான் சிந்தாமணி. 'அம்சவல்லி பவனி'ல் பிரியாணி சாப்பிட்டுவிட்டு, சிந்தாமணிக்குப் போய் செகண்ட் ஷோ பார்க்காத மதுரைக்காரர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படிப்பட்ட சிந்தாமணி தியேட்டர் தற்போது உடைபட்டுக் கொண்டிருக்கிறது. மது…
-
- 1 reply
- 712 views
-
-
மந்துவிலில் 106 வயது வரை வாழ்ந்த மூதாட்டி மரணம்! தென்மராட்சி – மந்துவில் பகுதியில் 106 வயது வரை ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்ந்த மூதாட்டி ஒருவர் நேற்று (09) இரவு மரணமடைந்துள்ளார். மந்துவில் கிழக்கு கொடிகாமப் பகுதியில் வசித்து வந்த சின்னத்தம்பி வள்ளி என்ற குறித்த மூதாட்டி 80 வயதுவரை கூலி வேலை செய்து வந்ததாகவும் தெரியவருகிறது. மூதாட்டியின் கணவர் 1998ம் ஆண்டு மரணமடைந்துள்ளார். இவருக்கு ஒரு மகளும் இரு பேரப்பிள்ளைகளும் மூன்று பூட்டப்பிள்ளைகளும் இருக்கின்றனர். https://newuthayan.com/மந்துவிலில்-106-வயது-வரை-வாழ/
-
- 2 replies
- 752 views
-
-
மனித உரிமைகள் இல்லத்தின் ஸ்தாபகர் திருவாளர். பிரான்சிஸ் சேவியர் காலம் ஆகினார்... பிரபல சட்டத்தரணியும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், இலங்கையில் சட்ட உதவிகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சேவையாற்றும் மூத்த நிறுவனங்களில் ஒன்றான மனித உரிமைகள் இல்லத்தை ஸ்தாபித்தவருமான திருவாளர். பிரான்சிஸ் சேவியர் அவர்கள் யூன் 10, 2016 (வெள்ளிக்கிழமை) அன்று கனடாவில் காலம் ஆகினார். யூலை 25, 1933ல் யாழ்ப்பாணம் நாரந்தனையில் பிறந்த இவர், தனது இளமைக்காலத்தினை யாழ்ப்பாணத்திலேயே கழித்திருந்தார். ஆரம்பத்தில் தபாலதிபராக நியமணம் பெற்றிருந்த அவர் தனது விடாமுயற்சி, கல்வியறிவு மற்றும் தனிப்பட்ட ஆளுமைகளின் காரணமாக இலங்கை சட்டக் கல்லூரியில் அனுமதியினை ப…
-
- 0 replies
- 541 views
-
-
மயிலந்தனைப் படுகொலை: இன்றைக்குப் பத்தொன்பது ஆண்டுகளின்முன் 1992ஆம் ஆண்டு ஆகசுடு 0...9ஆம் நாள், மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மயிலந்தனை என்ற கிராமத்தில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்தில் 39 அப்பாவித்தமிழ் மக்கள் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 34பேர் கை, கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக்கப் பட்டனர். கொல்லப்பட்டோரில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். இவ்வெறியாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஊழிய சலுகையும், அதிகாரி பதவிகளும் வழங்கப்பட்டு அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டனர். திராய்க்கேணி படுகொலை: 21 ஆண்டுகளின்முன் ஆகசுடு 07ஆம் நாள் 1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திராய்க்க…
-
- 1 reply
- 916 views
-
-
ஆழ்ந்த அனுதாபங்கள் மயூராவின் குடும்பத்திற்கு! மயூராவின் இழப்பைக் கேட்டு அதிர்ச்சியுற்றோம். மிகவும் நட்பாக பழகக் கூடிய பண்பும் மிகவும் திறமையான மாணவியாகவும் பெற்றோர்களுக்கு ஆசை மகளாகவும் திகழ்ந்தார். இவரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம். ===>>நண்பர்கள்<<===== 9ஆம் மாத நினைவஞ்சலியும் வீட்டுக்கிருத்தியமும் Date of Birth 1985-10-11 Date of Death 2007-03-09 செல்வி முருகையா மயூரா (முகாமைத்துவப் பிரிவு, யாழ். பல்கலைக்கழகம் 2007) பொன் மயிலே! புதுச்சரமே! புன்னகையே! புதுமலரே! பூமுகத்தைக் காண்போமா? புன்னகையை இரசிப்போமா? ஆசைச் செல்வமே! அன்பு மலரே! பாசம் மாறாத நேசத்தாமரையே! கைகள் கூப்புகின்றோம் கண்மலர்கள் த…
-
- 10 replies
- 3.2k views
-
-
[size=3]மாதகலைச் சேர்ந்த மரியா திரேசா மனோன்மணி தோமஸ் 21 ஜூலை 2012 அன்று இறைபதம் அடைந்துவிட்டார். [/size][size=3]இவர் காலம் சென்ற கபிறியல் தோமஸ் , ஜெனொவேவா தோமஸ் தம்பதிகளின் அன்பு மகளும் காலம் சென்ற லியோ தோமஸ் ( முத்துராசா) ராஜேந்திரம்தோமஸ், மங்கையகரசி சந்திரசேகர ( மங்கை) இவர்களின் சகோதரியும், காலம் சென்ற லீனா தோமசின் அன்பு மைத்துனியும் மற்றும், இலங்கையில் வசித்துவரும் இமானுவேல் சந்திரசேகர (சிறாப்பர்) கனடாவில் வசித்து வரும் திருமதி புஸ்பம் தோமஸ் (புஸ்பம்) இவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார். இவரின் பூதவுடல் கொழும்பு பொரலையில் உள்ள ஜெயரட்ண மலர்ச்சாலையில் புதன் கிழமை (25/07/2012) தொடக்கம் பார்வைக்கு வைக்கப்பட்டு வியாழக்கிழமை (26/07/2012) மாலை 4 மணியலவில் திருப்பலியுடன் பொரலை…
-
- 8 replies
- 1.5k views
-
-
மரண அறிவித்தல் . செல்வி அனுஜா பாஸ்கரன் மறைவு 11-08-2012 குப்பிளானைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை பாஸ்கரனின் மகள் 11-8-2012 அன்று அகால மரணமானார். அன்னாரின் இறுதிக் கிறிகைகள் பின்னர் அறியத்தரப்படும். தகவல் லோகநாதன் டென்மார்க்
-
- 10 replies
- 2.1k views
-
-
ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்) தோற்றம் : 16 டிசெம்பர் 1967 — மறைவு : 10 சனவரி 2018 யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விர…
-
- 42 replies
- 4.3k views
-
-
மரண அறிவித்தல் திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) திரு.கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) மலர்வு : 7 மார்ச் 1983 — உதிர்வு : 20 ஓகஸ்ட் 2012 தெல்லிப்பளை மாத்தனையை பிறப்பிடமாகவும் சுவிஸ் முய்லிங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சுதர்ஷன் (சுதன்) அவர்கள் 20 -08 -2012 திங்கட்கிழமை அன்று அகால மரணமானார்- அன்னார் காலஞ்சென்றவர்களான முருகர் ,தெய்வானை மற்றும் வல்லியர் லட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் முருகர் கந்தசாமி,ராசம்மா தம்பதியரின் அன்பு மகனும் ஆவார். சுதாகரன்,சுதர்சினி ,சுகேனினி,சுகம்சன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் பத்மவதனா,சுதாகரன் ஆகியோரின் மைத்துனரும் திசானனின் அன்புச் சித்தப்பாவும் ஆவர். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்ற…
-
- 9 replies
- 2.3k views
-
-
மரணஅறிவித்தல் திருமதி தங்கம் தருமன். பிறப்பு: 02.04.30 இறப்பு:19.07.09 தாயகத்தில் கரவெட்டி மேற்கு, ஆண்டார்வளவு பிறப்பிடமாகவும். புலத்தில் டென்மார்க் வயன் நகரினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம் தருமன் அவர்கள் இன்று காலை (19.07.2009) ஞாயிற்றுக் கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் இராசு, அமரர் சீனியர், அமரர் அம்மா, அப்புத்துரை ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். அன்னார் தர்மகுலசிங்கம் பிரபல எழுத்தாளர், டென்மார்க் அரசியல்வாதி, மொழிபெயர்ப்பாளர்(டென்மார்க்) , தர்மதேவி (இலங்கை), தர்மராணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பவானி(டென்மார்க்), அமரர்குலசிங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
மரிக்கார் ராம்தாஸ் காலமானார் இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை காலமானார். அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8879
-
- 8 replies
- 1.8k views
-
-
கேட்கவே மிகவும் வருத்தமாக இருக்கின்றது, வாதவூரான்! தங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கிறேன்!
-
- 75 replies
- 7.6k views
- 1 follower
-
-
மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். மறைந்த தமிழக முதல்வர்.... ஜெயலலிதா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.
-
- 9 replies
- 2.1k views
-
-
கப்டன் லெட்சுமி மாரடைப்பால் காலமானார் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண்போராளியாவர் இவர் பற்றிய குறிப்பு ஒன்று............... கேப்டன் லட்சுமி எனப்படும் லட்சுமி சாகல் (Lakshmi Sahgal,பிறப்பு அக்டோபர் 24, 1914- 23 சூலை, 2012 ) என்பவர் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் அக்காலத்தின் சென்னை மாகாணம் பகுதியை சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் …
-
- 0 replies
- 1.6k views
-