Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. பிரபல எழுத்தாளர் தெணியான் மறைந்தார்! மே 22, 2022 ஈழத்தின் முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவரான “தெணியான்”என்ற புனைபெயரால் அறியப்படும் கந்தையா நடேசன் 22.05.2022 அன்று மாலை வல்வெட்டித்துறை – பொலிகண்டியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். வடமராட்சி பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன், இலக்கிய உலகில் பிரவேசித்ததும் ‘தெணியான்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் கற்று பின்னாளில் அங்கேயே நீண்ட காலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் எழுத்தாளர் தெணியான். மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் இவர் வர்ணிக்கப்பட்டவர். ந…

  2. முள்ளிவாய்க்கால் மருத்துவமனையின் மீது 13.05.2009 அன்று காலை 7:00 மணியளவில் சிறீலங்கா படையினரால் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியிருந்தனர். அதன் போது கந்தசாமி தருமகுலசிங்கம் எறிகணைத் தாக்குதலில் சாவைத் தழுவிக்கொண்டார் .இவர் நாட்டுப்பற்றாளராக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே . பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டார் . நாட்டுப்பற்றாளர் கந்தசாமி தருமகுலசிங்கம் அவர்கள் இறுதியாக முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனை பற்றி புலம்பெயர் மக்களுக்கு காணொளி வழியாக தகவல்களை வழங்கியிருந்தமை நினைவூட்டத்தக்கது. http://meenakam.com/2011/05/13/24672.html அன்று நான் உங்களோடு இன்று நீங்கள் என்னோடு அழியாத நினைவாய் என் இதயத்தில் உங்கள் தியாகம் நிச்சயம் வென்று தரும் தமிழீழம்

  3. இருந்த பலம் எல்லாம் ஒவ்வொன்றாய் இழக்கிறோம்! கடைசி மூச்சு வரை யாருக்கும் - பயப்பிடாமல் - வாழ்ந்த - உமக்காய் - கண்ணீர் அஞ்சலிதான் - இப்போது எம்மால் முடிந்தது!

    • 22 replies
    • 4.7k views
  4. மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார் 2023-04-12 09:23:48 இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், பி.பி.சி. , வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார். கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள். அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும் தனேந்திராவின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னார…

  5. யாழ்ப்பாணத்தின் மூத்த ஓவியர் இராசையா மறைந்தார்.! யாழ்ப்பாணத்தின் மூத்த பிரபல்யமான ஓவியர் ஆ.இராசையா இன்று காலமாகியுள்ளார். புற்று நோய்த் தாக்கத்துக்கு உட்பட்டிருந்த அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருப்பதாக தெரியவருகிறது.. "ஓவியர் பற்றிய இந்த வரலாறு - 2015ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது" 16.08.1946 இல் அச்சுவேலியில் ஆசை – செல்லம்மா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்த ஓவியர் இராசையா தற்போது இல 36, பண்டாரிக்குளம் வீதி, நல்லூரைத் தனது வாழ்பதியாகக் கொண்டுள்ளார். இலங்கையின் மிகப்பிரபல ஓவியர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படும் இவர் பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர். அச…

  6. நாவற்குழி இராணுவ முகாம் தகர்ப்பு முயற்சியில் 14-02-1987 அன்று வீரமரணம் அடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, லெப். சித்தாத்தன், 2ம்லெப். பரன், வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை கவர், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை குமணன், வீரவேங்கை தேவன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்!

  7. கள ஊறுப்பினர் செல்வமுத்து ஆசிரியரின் அம்மா கனடாவில் நேற்று காலமாகிவிட்டார். செல்வமுத்துவுக்கும் அவரது குடும்பத்திற்கும் களத்தின் சார்பாக எமது கண்ணீர் அஞ்சலிகள்...

    • 59 replies
    • 9.2k views
  8. திருகோணமலை கட்டைபறிச்சான் கிராந்திமுனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலில் நேற்று வீரச்சாவடைந்த மேஜர் பரணியிற்கு எம் வீரவணக்கம்

    • 2 replies
    • 2.5k views
  9. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார் FEB 17, 2015 | 18:16by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்றுமாலை அங்கு மரணமானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற கனகசுந்தரசுவாமி, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீ…

  10. முருகனின் தந்தை யாழில் மரணம்; முகம் பார்க்க அனுமதிக்காத அரசு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் எனும் ஸ்ரீஹரனின் தந்தை வெற்றிவேல் (75-வயது) இன்று (27) அதிகாலை யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளார். தனது தந்தை இறப்பதற்கு முன்னர் வீடியோ கோலில் தந்தையின் முகத்தை பார்க்க சட்டத்தரணி ஊடாக முருகன் விடுத்த கோரிக்கை தமிழக அரசு மறுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தந்தையின் உடலையாவது இறுதியாக பார்க்க அனுமதிக்குமாறு முருகன் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது உறவினர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜீவ் கா…

  11. எனது நெருங்கிய உறவின் ( அக்காவின் கணவர் ) இழப்பின் போது அனுதாபம் தெரிவித்தஇணை யவனுக்கும் அத்தனை யாழ் கள உறவுகளுக்கும், தனி மடலில் தொடர்பு கொண்டவர்களுக்கும் ,எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் ஒவ்வொருவரின் பெயரையும் எழுத முற்பட்டால் இப்பதிவு மேலும் நீண்டு விடும்......மரணச்சடங்கு கொழும்பில் வியாழக்கிழமை ( நேற்று) நடைபெற்றது அவருக்கு வயது 72.டயபடிக் , ஒரு கால் விரல் எடுத்தது சாட்டு. பின்பு செவ்வாய் அதி காலை மாரடைப்பினால் காலமானார் .எனக்கு ஒரு நல்ல தந்தையை போல் .இருந்தவர். எனது மூத்த சகோதரியின் கணவர். நான் குடும்பத்தில் ஐந்தாவது இடையில் மூன்று சகோதரர்கள். இழப்பு மிகவும் துயரமானது தான் ஆனால் வாழ்வில் நிச்சயமானது இறப்பு.உறவினர்கள் வீட்டுக்கு சந்திக்க வருவதால் ந…

  12. முன்னால் யாழ் பரியோவான் கல்லூரி முதல்வர் அமரர்.தனபாலன் அவர்கள் இறவனடி சேர்ந்துள்ளார். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன்

  13. எழிலனின், தந்தை... காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார். கிளிநொச்சியில் அவர் நேற்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிவராத நிலையில், எழிலனின் மனைவியும் வடக்கு மாக…

  14. நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன் எழுபதுகளின் மத்திய ஆண்டுகள். கோயமுத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லார் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சிற்றூரான உப்பிலிபாளையத்தில் இருந்த ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்திப் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதற்காகச் சூலூரிலிருந்து மணிவண்ணன் சைக்கிளில் வருவார். தொழிற்சாலைக்கு எதிரில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கிளை அலுவலகமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றம் இருந்தது. மதிய உணவருந்திவிட்டு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் வைத்திருந்த பெட்டிக் கடையில் பீடியோ, சிகரெட்டோ பற்றவைத்துக் கொண்ட மணிவண்ணன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் சிமென்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி தினமணியும், ஜனசக்தியும் தாமரையும் படிக்க அங்கே வருவார். அப்படித…

  15. சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த றவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் க…

  16. சிறீலங்கா அரசின் கொலைவெறியில் பலியான மக்களுக்கும், செஞ்சோலையில் கொல்லப்பட்ட இளம் சிறார்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள். ____________________________________________________ :arrow: சிங்களவன் குண்டுவீச்சிலே சிட்டுக் குருவிக்கூட்டில் மூச்சுப்பேச்சில்லை..

  17. 15 APR, 2024 | 11:14 AM வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (14) காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இரண்டு தடவை தவிசாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181093

  18. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் துணைவியார் தாமரை அம்மாள் வீரமுழக்கங்களுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டார். மிக உணர்ச்சிப்பூர்வமாக தமிழ் உணர்வாளர்கள், ஐயாவும் அம்மாவும் காட்டிய வழியில் தமிழீழ விடுதலை வென்றெடுப்போம் என்றும் தமிழின விடுதலையை வென்றெடுப்போம் என்றும் சாதியற்ற தமிழ் சமுதாயத்தை உருவாக்குவோம் என்றும் சூளுரைத்து தாமரை அம்மாள் அவர்களை நல்லடக்கம் செய்தார்கள். உறவினர்கள் பெண்கள் ஏன் சில ஆண்களும் கூட கதறி அழுத காட்சி மனதைப் பிளந்து ஆறாவலியைத் தந்துள்ளது. இதேபோல் சில தின்ங்களுக்கு முன் திரு.இறைகுருவனார் அவர்களின் நல்லடக்கத்திலும் இக்குடும்ப உறவினர்கள் கதறி அழுதது இன்னும் நெஞ்சில் நிற்கிறது. இவை இவர்கள் தமிழுக்கு மட்டும் தொன்றாட்டவில்லைத் தம் குடும்பத்திலும்…

  19. 1ம் ஆண்டு நினைவஞ்சலி -02.11.2010 அன்புக்கு வரைலிலக்கணம் எது ஆழ்ந்தபோது கண்முன்னே அம்மாவின் பாசநினைவுகள் தான் தாங்கிப் பிடிக்கின்றன மனதை எண்ணங்களும் செயல்களும் நீங்களாக கண்களை மூடி காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகிறேன் கணப்பொழுதும் ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள் நினைவுகள் தான் எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில் ஆறாத்துயிலில் கலந்திருக்கும் உங்கள் பாதங்களில் கண்ணீர்த்துளிகளாலே ஆராதனைகள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நெஞ்சுருகி வேண்டியபடியே............

  20. அஞ்சலி: கி.ராஜநாராயணன் May 18, 2021 கி.ரா மறைந்ததாக இணையத்தில் செய்தி. சமஸ் உட்பட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளம் ஏற்க மறுக்கிறது. சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றித்தன இருந்தார். தசைகளின் இயக்கமும் குறைந்து வந்தது. ஆனாலும் பெரியவர், சாவே இல்லாதவர் என்று நம்பத்தான் உள்ளம் விரும்புகிறது. நோய்க்காலம், எவரும் சென்று சந்திக்கவேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்வேன். எனக்கே சந்திக்கவேண்டுமென ஆசையிருந்தது. ஆனால் கி.ரா இளையவர்கள், வாசகர்கள் சந்திக்க வருவதை விரும்பினார். உற்சாகமாகி நினைவுகளை பெருகவிட்டு பேசிக்கொண்டிருப்பார். அவருடைய விருப்பப்படி கோபல்லகிராமம் மலையாள மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம். இப்போது இச்செய்தி. வணங்கு…

  21. என் மதிப்புக்குரிய வாசகர்களுக்கு இந்தச் செய்தி கள நிபந்தனைக்கு உட்பட்டதோ இல்லையோ தெரியவில்லை....? இருந்தும் கூறவேண்டியுள்ளது.. என் ஆக்கங்களை படித்து கருத்துச் சொல்லும் வாசகர்களுக்காக... எனது அண்ணன் தாயகத்தில் அகால மரணம் அடைந்து விட்டதனால் எனது ஆக்கங்கள் என் மன நிலை சாதாரண நிலைக்குத் திரும்பும் வரைக்கும் சில காலத்துக்கு வரமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் அறியத் தருகிறேன்.... இளங்கவி

  22. குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு கூரல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் 1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 11 ஆம் நாளன்று குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள் உட்பட 26 பேர் கிளிவெட்டி பகுதியின் குமாரபுரத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதில் 30 பேர் படுகாயமடைந்தனர். 2 தமிழ்ப் பெண்கள் படையினர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். குமாரபுரம் படுகொலை நினைவு கூரல் நிகழ்வு குமாரபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. சிறிலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 26 பேரின் புகைப்படங்களும் நிகழ்வில் வைக்கப்பட்டு இருந்தது. கிரா…

  23. சுனாமிப் பேரனர்த்தப் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு. சுனாமிப்பேரனர்த்தத்தினால் பேரழிவுகள் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகின்;றன. உலகத்தையே அதிரவைத்து மானுட சமூகத்தின் ஆன்மாவையே உலுப்பிச் சென்ற இப்பேரனர்த்தத்தின்போது இழந்த எமது உறவுகளை நினைவுகூரும் வணக்க நிகழ்வுகள் எதிர்வரும் 26.12.2006 அன்று காலை (சுனாமிப் பேரனர்த்தம் நிகழ்ந்த நேரத்தில்) தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெறவிருக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன்; ஒழுங்கமைக்கப்படவிருக்கும் இந்நிகழ்வுகள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ் வடமராட்சி கிழக்கு போன்ற இடங்களில் இடம்பெறவிருக்கின்றன. இந்நிகழ்வில் சுனாமிப்பேரனர்த்தத்தின்போத

  24. சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் முன்னை நாள் அதிபர் திரு. பூ. வெற்றிவேலு அவர்கள் காலமானர். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.