துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
எழுத்தாளரும் நடிகருமான முல்லை யேசுதாசன் காலமானார் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட நடிகருமான முல்லை யேசுதாசன் (சாமி) மாரடைப்பினால் இன்று (07) உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கள்ளப்பாட்டினை சேர்ந்த முதுபெரும் கலைஞரான முல்லை யேசுதாசன், 1990 ஆண்டில் இந்தியாவுக்கு அகதியாக சென்றதுடன், அங்கு திரைப்பட துறையில் ஆர்வம் கொண்டவராக திரைப்படங்கள் உருவாக்கப்படுவதை கற்றுக்கொண்டார். மீண்டும் 1991 ஆம் ஆண்டு தாயகத்துக்கு திரும்பிய அவர் திரைப்படம் எடுக்கும் ஆவலில் இயக்குநர் தாசனுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். முதல் முதல் செவ்வரத்தம் பூ, எதிர்காலம் கனவல்ல பேன்ற குறும்படங்களை இயக்கிய இவரின் நடிப்பு திறனை தூண்டுவதற்கு காரணமாக இருந்தது சேர…
-
- 15 replies
- 1.7k views
-
-
வணக்கம்., நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரும்,பெரியாரியத்தை தன் வாழ்நாள் முழுவதும் சிறப்பாக பின்பற்றியவருமானதமிழீழச்செல்வன் என்ற முருகேசன் தனது 28 வது வயதில் எதிர்பாராதவிதமாகமாரடைப்பால் 10.1.2011 காலை 10.00 மணிக்கு உயிர் நீத்தார். தமிழ்ச்சமூகப்போராளி தமிழீழச்செல்வன் வாழ்நாள் குறிப்புகள்தனது தொழிற்கல்வியை முடித்து விட்டு, தனது மாமாவுடன் சாதாரணமின்பழுதுபார்ப்பு பணியாளராக அனைவருக்கும் அறிமுகமானார். அப்போதுஅவருக்கு வயது 15. படிப்படியாக பெரியாரியலை கற்றார். திராவிடர் கழகத்தில்தன்னை இணைத்துக் கொண்டார். பின்பு, பெரியார் திராவிடர் கழகத்தின்களப்பணியாளராக மாறினார். 2004-ல் தாராபுரத்தில் நடைபெற்ற தமிழர் உரிமைமுழக்க மாநாட்டின் மிக முக்கிய பங்காளராக ப…
-
- 15 replies
- 1.2k views
-
-
துயர் பகிர்தல் திருமதி இலட்சுமி கந்தையா தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும் அவுஸ்த்திரேலியாவை வதிவிடமாகவும் வாழ்ந்த எங்கள் அன்னை திருமதி இலட்சுமி கந்தையா அவர்கள் ஜேர்மனி ஓபகௌசன் நகரில் 4-08-06 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்கள் அன்னையின் இறுதிப்பயணத்திற்கான ஈமக் கிரிகைகள் எதிர்;வரும் 12ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 10மணி தொடக்கம் பகல் 13மணிவரை நடைபெறும். அன்னையின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்கவும் ஆன்ம சாந்திக்காக அஞ்சலித்து ஆராதிக்கவும் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றோம். நடைபெறும் இடம் - Ostfriedhof - Bergstrasse Osterfeld -Oberhausen மகன்- மகள் தர்மகுலசிங்கம் (குலம்) - கோசல்யா சொர்ணலிங்கம் ஓபகௌசன்-ஜே…
-
- 15 replies
- 4k views
-
-
முகமாலை முன்னரங்கச் சண்டையில் இன்னுயிர் ஈத்த கப்டன் இசைச்செல்வி உட்பட 10 வீரர்களுக்கு வீரவணக்கம்
-
- 15 replies
- 3.1k views
-
-
மாவீரர் நாள் 2006 கார்திகை-27 கொல்லும் பகையழித்து வெல்லும் தேசம் தந்து மெல்ல தூங்கிய எம் தேசத்து வீரப்புதல்வர்களே கண்ணீருடன் உங்களுக்கு என் வீரவணக்கம்
-
- 15 replies
- 2.7k views
-
-
டாக்டர் இந்திரகுமார் காலமாகிவிட்டார். பிரபல எழுத்தாளரும், நடிகருமான டாக்டர் க.இந்திரகுமார் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் காலமாகிவிட்டார். இலங்கையில் தயாரிக்கப்பட்ட வாடைக்காற்று என்ற தமிழ்ப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். தனது எழுத்தால் வாசகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இவர் எழுதிய 'மண்ணிலிருந்து விண்ணுக்கு' என்ற நூலிற்கு இலங்கை, இந்திய (தமிழக) அரசுகளால் பரிசுகள் பெற்ற பெருமைக்குரியவர். இன்னும் பல நூல்கள எழுதி வெளியிட்டவர். இவரது இறுதிச்சடங்குகள் எதிர்வரும் ஞயிற்றுக்கிழமை காலை 8.00 - 11.30 மணிவரை Eastham, London இல் நடைபெறும்.
-
- 15 replies
- 2k views
-
-
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையில் திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களினதும் போராளிகளினதும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
-
- 15 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசிய ஊடக உலகில் பிரசித்தி பெற்ற ஒலிபரப்பாளராக விளங்கிய திருமதி கௌசி ரவிசங்கர் அவர்கள் காலமானார். 2009 மே 18இற்கு முன்னர் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களின் நிர்வாகத்தின் கீழ் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தமிழ் (ஐ.பி.சி) இயங்கிய காலத்தில் அதன் ஒலிரபரப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் கௌசி ரவிசங்கர் கடமையாற்றினார். அக்காலப் பகுதியில் தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில் (ரி.ரி.என்) கலை நிகழ்ச்சிகள் சிலவற்றையும் கௌசி ரவிசங்கர் தொகுத்து வழங்கினார். 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகமாலையில் யாழ் - கண்டி நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பொழுது அங்கிருந்தவாறு ரி.ரி.என் தொலைக்காட்சிக்கும், ஐ.பி.சி வானொலிக்கும் நிகழ்வுகளை அவர் …
-
- 15 replies
- 1.3k views
-
-
இள வயதில் மனதை மிகவும் பாதித்த படமிது... ஜூலை '83 கலவரத்தில் பலியான அனைத்துயிர்களுக்கும் நினைவு அஞ்சலிகள். .
-
- 14 replies
- 1.1k views
-
-
சண்டை எண்டா அவனுக்கு ஒரு கலை, அவனில் எந்த பதட்டமும் இருக்காது, சிம்பிளா நிப்பான்” என்று தளபதிகளால் கூறப்பட்டவரும் யாழ் மக்களை போதை பாவனைகளில் இருந்து மீட்டவருமான கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நிலவன் அவர்களின் மூன்றாமாண்டு வீரவணக்க நாள் (26.12.2007) சுவிசில் நடைபெறவுள்ளது. ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்து கடற்புலிகள் அணிக்கு வந்திருந்த நிலவனது…
-
- 14 replies
- 1.7k views
-
-
'விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்! பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். இளம் நடிகர்கள் பலரின் படங்களுக்கு இவர் பாடிய பாடல்களைக் கேட்டபோது நான் அவரை ஓரிளைஞராகவே எண்ணியிருந்தேன். பின்னரே அவர் திரைத்துறைக்குப் பாட வந்ததே அவரது ஐம்பது வயதில் என்பதையறிந்து வியந்தேன். ஆழ்ந்த இரங்கல். இவர் பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் பி.இராமையாப்பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாட…
-
- 14 replies
- 1.3k views
-
-
[size=3] என் அன்பிற்குரிய தோழர் விடியல் சிவா இன்று காலை 10.30 க்கு சாவடைந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என்னை உலுக்கியது.நக்சல் பாரி இயக்கத்தில் அவர் இருந்த காலத்தில் ஏற்பட்ட அறிமுகம் நேரில் சந்திக்காமல் 35 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்தது.தோழர் நான் உங்களை பார்க்காமலே இறந்துவிடுவேன் என்று அவர் 5 வருடங்களுக்கு முன்னர் கூறிய வார்த்தை இன்று பலித்துவிட்டது [/size]
-
- 14 replies
- 2.3k views
-
-
இலங்கையின் முன்னாள் மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். உயரம் பாய்தல் வீரரான நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் 1952 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை சார்பாக பங்கேற்ற பெருமையை பெற்றுள்ளார். 1958 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் உயரம் பாய்தலில் 1.95 உயரத்திற்கு ஆற்றலை வௌிப்படுத்தி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் இலங்கைக்கு தங்கப்பதக்கம் ஈட்டிக்கொடுத்த முதல் வீரர் என்ற வரலாற்று சிறப்பும் நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு உள்ளது. 1962 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு விழாவில் உயரம் பாய்தலில் வௌ்ள…
-
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. மும்பையை சேர்ந்த ‛பாலிவுட்' பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர், கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியா…
-
- 14 replies
- 1.1k views
- 2 followers
-
-
யாழ் இந்துக்கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் கப்டன் சோமசுந்தரம் இன்று அதிகாலை காலமானார்.
-
- 14 replies
- 1.1k views
-
-
9.7.2006 சிங்களத்து சமாதானப் புறா வேடமிட்டு வந்த சந்திரிக்க அரசால், 141 அப்பாவித் தமிழ்மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்ட நாள் ஆகி இன்றோடு 11 வருடங்கள் கழிந்து விட்டன! தேவாலயமாக இருந்தபோதும், அங்கே பாதுகாப்பிற்கு மக்கள் தங்குவார்கள் என்று தெரிந்தபோதும், குண்டு வீசி அவ்வுறவுகளைச் சின்னபின்னமாக்கிய நாளை எப்படி மறக்க இயலும்!! தமிழன் என்பதற்காக கொல்லப்பட்ட, அந்த உறவுகளுக்காக கண்ணீர் அஞ்சலிகள்!!
-
- 14 replies
- 3.5k views
-
-
குடும்பத்தில் பெரியவராகப் பிறந்துவிட்டதால் பா ராமச்சந்திர ஆதித்தனை உறவினர்களும் ஊழியர்களும் பெரிய அய்யா என்று அழைத்தனர். ஆனால் தன் குணத்தாலும் பண்பாலும் கூட அவர் பெரிய அய்யாவாகவே திகழ்ந்தவர் என்றால் மிகையல்ல. தன் ஊழியர்களைப் பார்த்துக் கொள்வதில் அவருக்கு நிகரானவர் இல்லை. அவரது மாலை முரசு, கதிரவன், தேவி, கண்மணி, பெண்மணி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றிய ஊழியர்கள் அனைவருமே நினைவு கூரும் விஷயம், ஊழியர்களுக்கு சம்பளம் தருவதில் பெரியவர் காட்டிய நேரம் தவறாமை. எத்தனை பெரிய நெருக்கடியிலும் சம்பளத்தை மட்டும் 7-ம் தேதியோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னதாகவோ தந்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அவர். 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை தினம் என்றால் ஒரு நாள் முன்…
-
- 13 replies
- 1.4k views
-
-
பண்டிதர் நடராஜா காலமானார் இணுவிலைப் பிறப்பிடமாகவும், தமிழ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டி தர் கா.செ.நடராஜா (வயது 75) நேற்று தமி ழகத்தில் காலமானார். ஓய்வுபெற்ற கோப்பாய் கிறிஸ்தவக் கல் லூரி ஆசிரியரான இவர் "தமிழா விழித் தெழு!', "இளங்கோவின் கனவு', "இணுவையூர் அப்பர்', முதலான பல நூல்களை எழுதியவர். இந்து கலாசார அமைச்சின் கீழ் இந்து கலாசாரத் திணைக்களத்தின் நூல் வெளியீட்டுக் குழுவில் கடமையாற்றிய இவர் "தக்ஷண கைலாய மான்மியம்' என்ற நூலையும் தொகுத்தவராவார். இவர் எழுதிய "தமிழா விழித்தெழு' என்ற நூலின் காரணமாக 1958களில் அன்றைய அரசினால் எச்சரிக்கப்பட்டவர். "சூரியன் எவ்.எம்.' வானொலியின் செய்தி ஆசிரியரான குருபரனின் தந்தை இவர் என் பது குறிப்பிடத்தக்கது. -உதயன்
-
- 13 replies
- 2.4k views
-
-
17-08-2006அன்று சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதலின்போது ஏற்பட்ட முறியடிப்புச் சமரில் வீரகாவியமான லெப் கேணல் ராணிமைந்தன் (ராம்) (உதயச்சந்திரன் திருநாவுக்கரசு வரதராசன் 154ம் கட்டை கிளிநொச்சி செல்வபுரம்) அவர்களுக்கு இவ் அகதி தமிழனின் வீரவணக்கம்
-
- 13 replies
- 5.4k views
-
-
கண்ணீர் அஞ்சலி
-
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
மூத்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் காலமானார் 2023-04-12 09:23:48 இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும் ரொய்ட்டேஸ், பி.பி.சி. , வீரகேசரியின் ஊடகவியலாளருமான பொன்னையா மாணிக்கவாசகம் அவர்கள் காலமானார். கடந்த யுத்த காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கான ஊடகப்பணியாற்றியவர் மாணிக்கவாசகம் அவர்கள். அன்னார் ஓய்வுபெற்ற வவுனியா தெற்கு பிரதி கல்விப்பணிப்பாளர் நாகேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் வைத்தியகலாநிதி பவித்திராவின் பாசமிகு தந்தையும் வைத்தியகலாநிதி தினேஸின் அன்பு மாமனாரும் தனேந்திராவின் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் வவுனியா வைரவபுளியங்குளம் 10 ஆம் ஒழுங்கையில் உள்ள அன்னார…
-
- 13 replies
- 1.1k views
- 1 follower
-
-
சினிமா, தொலைக்காட்சி, வானொலி, மேடை, என கலைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக புகழோடு விழங்கிய "கலைமாமணி" இளவாலை, முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் 27-11-10 அதிகாலையில் பாரிஸில் காலமானார். இலங்கை வானொலியில் இவரது எழுத்து, நடிப்பு, இயக்கத்தில் ஒலிபரப்பான 'முகத்தார் வீடு" நாடகம் சுமார் ஜந்து வருடங்களாக (268 வாரங்கள்) ஒலிபரப்பாகி சாதனை படைத்ததால் இவருடைய பெயருக்கு முன்னால் "முகத்தார்" என்னும் பெயர் இணைந்துகொண்டது. இந் நாடகம் பின்னர் பாரிஸில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. 1979ல் வெளியான "வாடைக்காற்று" திரைப்படத்தில் பொன்னுக்கிழவன் என்னும் பாத்திரத்தில் திறம்பட நடித்திருந்ததால் அன்றைய ஜனாதிபதி திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் …
-
- 13 replies
- 1.4k views
-
-
பிரபல கதாசிரியர், தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்! சென்னை: பிரபல திரைப்பட தயாரிப்பாளர்,கதாசிரியர் பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று மரணமடைந்தார். சினிமா ஸ்டுடியோவில் 'செட்' உதவியாளராக வேலை செய்யத் தொடங்கிய பஞ்சு அருணாசலம், கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றினார். பல திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் 'இளையதலைமுறை', 'மணமகளே வா', 'புதுப்பாட்டு' உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆறிலிருந்து அறுபது வரை,கல்யாண ராமன்,எங்கேயோ கேட்ட குரல், ஆனந்த ராகம், ஜப்பானில் கல்யாணராமன், மைக்கேல் மதன காமராஜன், வீரா, ராசுக்குட்டி உள்ளிட்ட பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 13 replies
- 1.2k views
-
-
மதுரை: தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76. சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா. தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமண…
-
- 13 replies
- 1.2k views
-
-
ஓராண்டாகியும் மாறாத உன் நினைவுடன் வீரவணக்கம்
-
- 13 replies
- 4.5k views
-