அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? உண்மை! சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்... சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம். சிங்கின் ஆட்சி முதலில் இந்த நாட்டைப் ப…
-
- 6 replies
- 2.1k views
-
-
மொழிகளில் பலமானது மௌனம் என்று எங்கோ எப்போதோ வாசித்த ஒரு ஞாபகம். இக்கூற்று நியாயமானதா, லொஜிக்கலானதா என்ற ஆராய்ச்சிகளிற்கெல்லாம் அப்பால், உலக அரசியலைப் பொறுத்தவரை இக்கூற்று கவனத்திற் கொள்ளப்படவேண்டி ஒன்றாகவே தோன்றுகின்றது. உதாரணமாக, அண்மைக்காலமாக புலம்பெயர் "ஆய்வாளர்கள்" விடுதலைப்புலிகளின் மொனத்திற்கு மனம் போன போக்கில் காரணம் கற்பித்து வருவது இங்கு நோக்கத்தக்கது. இந்நிலையில், அண்மையில் எனது கவனத்தை ஈர்த்த ஒரு உலக அரசியல் மௌனம் தொடர்பான ஒரு சிறு பதிவாகவே இப்பதிவு அமைகிறது. இம்மாதம் 6ம் நாள் (06-09-2007), இஸ்றேல் சிரியாமீது ஒரு வான் தாக்குதலை நிகழ்த்தியது என்ற செய்தி, சம்பவம் நடந்து ஏறத்தாள பத்து நாட்களின் பின்னர் தான் பரந்த அளவில் வெளியானது. இருப்பினும் ஏன் இந்தக் …
-
- 4 replies
- 2.1k views
-
-
ஒரு தனிநபருக்கு முன்னால் தொடர்ந்தும் தோற்றுக் கொண்டிருக்கும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் யதீந்திரா சுமந்திரன் தனது பேச்சுக்களாலும் செயலாலும் எப்போதுமே தமிழ் அரசியலில் சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வருகிறார். தனக்கு சரியென்பதை மட்டுமே பேசுவேன் என்பதை மிகவும் இறுமாப்புடன் மேற்கொள்ளும் ஒருவராகவே சுமந்திரன் இருக்கிறார். இதன் காரணமாக எழும் எந்தவொரு விமர்சனங்களைக் கண்டும் சுமந்திரன் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. பிறிதொரு வகையில் நோக்கினால் இதுவே சுமந்திரனின் பலமாகவும் இருக்கிறது. இப்போதும் சுமந்திரன் கூறியதாக சொல்லப்படும் ஒரு கருத்து தொடர்பில் சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. அதற்கு சுமந்திரன் வழங்கியிருக்கும் பதில் மேலும் சர்ச்சைகளை ஏற்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி? 8 ஆகஸ்ட் 2017 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், 'பலுச்சிஸ்தான்' என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், 'பக்தூனிஸ்தான்' கோருகின்றனர். பல தசாப்தங்களாக தொடரும் காஷ்மீர் விடுதலைக்கான போராட்டங்கள், சீனாவின் ஷி…
-
- 14 replies
- 2.1k views
-
-
அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர். ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை. உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும். அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார். உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். ***** எமது இனமானது கல்வியினால் முன்னேறிய இனம். வட அமெரிகாவில், அமெரிக்க சுதந்திர பிரகடனத்துடன், முதலாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ, இரண்டாவது பிரிட்டிஷ் சா…
-
- 25 replies
- 2.1k views
-
-
"ஊருக்குச் செல்வதை விட வேறு என்ன கனவு இருக்கிறது" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தீபச்செல்வன் 18 அக்டோபர் 2013 "ஒவ்வொரு மனிதர்களின் இரவுக் கனவுகளும் சம்பூர் பற்றியதாகத்தான் இருக்கிறது" உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம் காரணமாக அகதிகளாக்கப்பட்ட பலர் இன்னமும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பவேயில்லை. யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த பின்னரும் அகதிகள் இன்னமும் தமது சொந்த இடத்தில் குடியமர முடியவில்லை என்பது நாட்டின …
-
- 7 replies
- 2.1k views
-
-
மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு... 1 இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்திருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா? அல்லது தனியாய் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா? என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமைபெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறத…
-
- 14 replies
- 2.1k views
-
-
எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் படை மற்றும் உளவுத் துறையின் மிரட்டல் கெடுபிடிகளுக்கு அஞ்சி, அகதிகளை பெரும் பொருட் செலவில் ஏற்றி வரும்…
-
- 5 replies
- 2.1k views
-
-
‘மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா’ -இலட்சுமணன் ஸ்ரீ லங்காவின் எட்டாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான தேர்தலில், தத்தமது தரப்புகளின் தேர்தல் வெற்றியை ஈட்டிக் கொள்வதற்கான கொள்கைப் பிரகடனங்களைத் தேர்தல் விஞ்ஞாபனங்களாக, ஏட்டிக்குப் போட்டியாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஸ்ரீ இத்தகைய சூழலில், தமிழ்த் தேசிய அரசியலில் 13 அம்சக் கோரிக்கைகள் தொடர்பான மாற்றுத் தீர்வு முன்மொழிவொன்றை, புதிய ஜனநாயக முன்னணி, கடந்த வார இறுதியில் வெளியிட்டிருந்தது. இதில், ‘பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள், ஒற்றையாட்சி முறையில் மாகாணங்களுக்கான உச்ச வரம்பிலான அதிகாரப்பகிர்வு, காணி, அபிவிருத்தி, நிதி, தொழில்வாய்ப்பு’ போன்ற பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இத்த…
-
- 0 replies
- 2.1k views
-
-
-
குட்டையைக் குழப்பும் விக்கி -புருஜோத்தமன் தங்கமயில் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தகுதியற்றவர் என்று, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து, அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. சித்திரை வருடப் பிறப்புக்கு முதல் நாள், சமூக காணொளி ஊடகமொன்றுக்கு விக்னேஸ்வரன் பேட்டியளித்தார். வழக்கம் போலவே, அந்தப் பேட்டியும் முன்னதாகவே கேள்வி- பதில்கள் தயார்படுத்தப்பட்டு, அதன் பிரதிகளை வைத்துக் கொண்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. அதாவது, ஏற்கெனவே தயார்படுத்தப்பட்ட கேள்விகளை நெறியாளர் கேட்டதும், அதற்குப் பதில்களை பிரதித் தாள்களைப் பார்த்து, விக்னேஸ்வரன் வாசிப்பார். அப்படித்தான் அந்தப் பேட்டி…
-
- 18 replies
- 2.1k views
-
-
"என்னைப்பெத்த ராசாவே கொஞ்சம் சேதி கேளு ராசாவே! உண்ணாமல் இருப்பதாக சொன்னாக உருகிப் போனேன் உயிரோடு புதைஞ்ச சனம் யாரை நம்பிப் புதைஞ்சதையா உண்ணாமச் செத்த சனம் உலகநாட்டைப் பார்த்ததையா வெளிநாட்டுத்தமிழரால விடிவெள்ளி பூக்குமெண்டு வழிநெடுகப் பார்த்த சனம் இப்ப வவுனியாவில் கிடக்குதையா கனிமொழியும் வருவாளோ கனிபழமும் தருவாளோ முள்ளுக்கம்பி பின்னால முளிபிதுங்கி நிற்பவரே மகிந்த ராசபக்சா மகிமைதனைப் பாரீரே" http://unarvukall.blogspot.com/
-
- 13 replies
- 2.1k views
-
-
மைத்திரியால் காப்பாற்றப்பட்ட தரப்புகள் புருஜோத்தமன் தங்கமயில் / 2018 நவம்பர் 21 புதன்கிழமை, மு.ப. 01:44 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம், நாட்டை நாளுக்கு நாள், அதள பாதாளத்தை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றது. அரசியல் ஸ்திரத்தன்மை மாத்திரமல்ல, பொருளாதாரம், நிர்வாகம் போன்ற துறைகளிலும் முடக்கம் ஏற்பட்டிருக்கின்றது. வருட இறுதியில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பத்தால், அடுத்த வருடத்துக்கான பாதீட்டுத் திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கும் வரை, நாடாளுமன்றத்தில் எந்தவொரு சிறிய விடயத்தையும் மைத்திரியால் நிறைவேற்ற முடியாது. அதைப் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கமாட்…
-
- 0 replies
- 2.1k views
-
-
சென்னை நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி, கோடம் பாக்கம் சிவலிங்கம், விருகம் பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிவகங்கை ராசேந்திரன், சத்தியமங்கலம் முத்து, அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், விராலிமலை சண்முகம், பீளமேடு தண்டபாணி, மயிலாடுதுறை சாரங்கபாணி... இவர்களெல்லாம் இந்தித் திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியைக் காக்கவும் உயிர் நீத்த தியாகிகள். இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் 1965-ம் ஆண்டு தமிழகமே பற்றி எரிந்தது எனலாம். மாணவர்கள் முன்னின்று நடத்திய அந்தப் போராட்டத்தில் பல நூறு பேர் உயிர் நீத்தனர். போராட்டத்தை அடக்க ராணுவம் வந்தது. மொழியைப் பாதுகாக்க நடைபெற்ற ஒரு போராட்டத்தை ஒடுக்க ராணுவம் களத்தில் இறங்கியதும், அந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோரின…
-
- 0 replies
- 2.1k views
-
-
வணக்கம் நண்பர்களே விதுவுக் இப்ப 7 அரைச்சனி உச்சத்திலபோல வேண்டாத சிந்தனையெல்லாம் வருது சேர்மார்கற் இதைப்பற்றி உங்களுக்கு தெரிந்தவற்றை கூறமுடீயுமா உங்கள் அனுபவம் அல்லது நீங்கள் கேள்விப்பட்டவை
-
- 3 replies
- 2.1k views
-
-
ஒருவருட உக்ரைன் போர் சாதித்தது என்ன? வேல்ஸ் இல் இருந்து அருஸ் March 3, 2023 உக்ரைன் மீதான ரஸ்யாவின் படை நடவடிக்கை ஆரம்பித்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் (24) ஒரு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. முதலில் உக்ரைனுக்கும் ரஸ்யாவுக்குமான மோதல் என நம்பப்பட்ட போர் நேட்டோவுக்கும் ரஸ்யாவுக்குமான போர் என உலகம் பின்னர் மெல்ல மெல்ல தெரிந்து கொண்டது. உக்ரைனில் தமது ஆயுதங்களை குவித்து ரஸ்யாவின் படை பலத்தை அழித்துவிடுவது ஒருபுறம் இருக்க உலக நாடுகளில் ரஸ்யா மீதான தடைகளை கொண்டுவந்து அதன் பொருளாதாரத்தை முடக்குவதனையும் மேற்குலகம் தீவிரமாக செய்தது. தற்போது இந்த பூமிப்பந்தில் உள்ள நாடுகளில் அதிக பொருளாதார தடைகளை கொண்ட நாடாக ரஸ்யா உள்ளது. முதலில் ச…
-
- 13 replies
- 2.1k views
-
-
அமெரிக்கா 2020: எதிர்பார்ப்புகளும் அதிர்ச்சிகளும்! 2008, 2012 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் எனக்கு நன்கு நினைவிருக்கின்றன. மாலை நான்கு மணிக்கு வாக்களிப்பு சூரியன் முதலில் மறையும் கிழக்குக் கரையில் (நியூயோர்க்) முடிவுக்கு வர ஆரம்பிக்கும் போது, தொலைக்காட்சி உயிர்பெறும். நவம்பர் குளிருக்கு ஒரு இதமான பானமும், சமையலை ஒதுக்கி வைத்து விட்டு பிசாவும் எடுத்துக் கொண்டு குந்தினால் நள்ளிரவு நெருங்கும் போது வெற்றியாளர் யாரென்று தெரியவரும். அந்த இரு ஆண்டுகளும் அமெரிக்காவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகள்: அமெரிக்காவின் முதலாவது ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா வந்த ஆண்டு 2008, அவர் இரண்டாவது தடவையும் பலமான போட்டியாளரான ஜோன் மக்கெய்னை வென்ற ஆண்டு 2012. 2016...…
-
- 12 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஜநா செயலாளர் பதிவிக்கான வேட்பாளர்கள் பற்றிய தமிழர்கள் நிலைப்பாடு என்ன? புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஊடகங்கள் சமூகம் தங்களது நிலைப்பாடு என்ன என்று தெரிவித்தாக இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை. ஈழத்தமிழர்கள் இவ்வாறு மொளனம் காப்பது சரியா? இது தெளிவில்லாததால் வந்த மொளனமா இல்லை நம்பிக்கையீனத்தால் வந்த இராஜதந்திர மொளனமா? மலரப்போகும் சுதந்திர தமிழீழம் அடுத்த ஜநா செயலாளர் பதிவிக்காலத்தில் நடப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். எமது மொளனம் சரியானதா? தாயகத்தில் உள்ள மோசமான கள நிலமைகளால் நாங்கள் இந்த விடையங்களை சிந்திக்க பங்களிக்க பங்குபற்ற நேரம் முன்னுரிமை இல்லாமல் இருக்கும் துர்பாக்கிய நிலையா? உங்கள் கருத்துக்கள் :roll: :arrow:
-
- 9 replies
- 2.1k views
-
-
இன்றைய உலகப் பொருளாதார மயமாக்கல் என்ற நிலைக்கூடாக உலக நாடுகள் அனைத்தும் தம் பூகோள அரசியல் இருப்பையும் தாண்டி நெருங்கி வரக்கூடிய நிலமையே காணப்படுகின்றது. பூமிப் பந்தில் இருக்கக்கூடிய நாடுகளின் வாழ்க்கை முறை அதனால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் அனைத்து நாடுகளையும் சென்றடையக் கூடியதாக காணப்படுகின்றது. உலகின் எந்த மூலையிலும் ஏற்படக் கூடிய புயலோ பூகம்பமோ இல்லை போரோ கூட உலக நாடுகளின் பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரும் தாக்கத்தை உடனும் ஏற்படுத்துவதை நாம் காண்கின்றோம். அந்த வகையில் இன்று உலகின் சில பகுதிகளில் ஏற்படக்கூடிய இனங்களுக்கிடையிலான மோதல்களும் சுதந்திரத்துக்கான போராட்டங்களும் உலகின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்வதுடன் வசதி பெற்ற நாடுகளின் சந்தை வாய்ப்புக்களைய…
-
- 6 replies
- 2.1k views
-
-
பிரபாகரனுக்குப் பின் : இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை ? சாத்திரி முந்தைய நாள் போராளி 28 நிமிடங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை Getty Images Image caption வேலுப்பிள்ளை பிரபாகன் (இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்தே; பிபிசியின் கருத்துக்கள் அல்ல.- ஆசிரியர்) இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும் புலம் பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளிலும் ஏற்பாடாகி கொண்டிருக்கின்றது . பிரபாகர…
-
- 8 replies
- 2.1k views
-
-
மைத்திரியின் 100-நாள் ஆட்சியில் வடக்கு – ஒரு ஆய்வு எமது விசேட செய்தியாளர் ஜெரா 100 நாள் திட்டம் குறித்த விமர்சனங்கள் கொழும்பை மையப்படுத்திக் காரசாரமாகப் பேசப்படுகின்றன. விமர்சிக்கப்படுகின்றன. வடக்கில வாழும் தமிழர்களின் பெரும்பாலானவர்களுக்கு இந்தத் திட்டம் பற்றி அடிமுடி எதுவும் தெரியாது. காரணம் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் சாதாரணர்களை இலக்குவைத்தவை மிகச் சாதாரணம். அத்துடன் 100 நாள் திட்டத்தின் அனேக சாரங்கள் ஆட்சியியலுடனும், அதன் இருப்பைத் தக்கவைத்தலுடன் தொடர்புபட்டது. எனவேதான் தமிழ் புத்திஜீவிகளிடமிருந்து இந்த 100 நாள் திட்டம் பற்றியும் 100நாட்களின் ஆட்சி பற்றியும் கொழும்புமிரர் வினவ திட்டமிட்டது. இந்த ஆட்சி மாற்றம் இலங்கை மக்களால் கொண்டுவரப்பட்ட போதிலும், மேற…
-
- 0 replies
- 2k views
-
-
“மகாவம்சம்” மூல நூல் இலங்கையின் பண்டைய இதிகாசம் தொடக்கம் கி.பி 301 வரையான மாகாசேனன் மன்னரின் காலப்பகுதிவரை மகாநாம தேரரால் எழுதப்பட்டது. அது; முதல் 36 அத்தியாங்களைக் கொண்டது. 37வது அத்தியாயத்தை அவர் எழுதிக்கொண்டிருக்கும் மகாநாம தேரர் போது மரணமாகிவிட்டார். அது 50 செய்யுள்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் “அத்தியாயம் நிறைவுற்றது” என்று குறிப்பிட்ட அவர் 37வது அத்தியாயத்தில் அப்படி குறிப்பிடாததால் அவர் அந்த அத்தியாயத்தை முடிக்கவில்லை என்றும் தொடரவிருந்தார் என்றும் பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகின்றன. 2வது தொகுதி 2வது தொகுதி கி.பி 301 முதல் கி.பி 1815 வரையான ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் வரும் வரையான காலப்பகுதியைப் பதிவு செய்க…
-
- 0 replies
- 2k views
-
-
யுத்த நிலை தீவிரமடைந்து வருவதை அடுத்து நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது எனப் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் வெளியிட்டிருக்கின்றனர். என்று யுத்த பீதி அதிகரித்து வருவதால் நாட்டின் பங்குச்சந்தை வீழ்ச்சியடைகிறது. புதிய முதலீடுகளை வெளி நாட்டு முதலீட்டாளர்கள் நிறுத்திவைக்கத் தொடங்கிவிட்டனர். தாக்குதல் அச்சுறுத்தல்கள் காரணமாக கிரிக்கெட் மற்றும் சர்வதேச நிகழ்வுகளை நாட்டில் நடத்த முடியாத சூழ்நிலையும் உரு வாகி யிருக்கிறது. அரச படைகளுக்கும் விடுதலைப் புலி களுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந் திருக்கின்றன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் மட்டுமன்றி நாடு முழுவதுமே முழு அளவி லான யுத்தத்தினுள் சிக் கிக்கொள்ளும் அபாயமும் ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் கொழும…
-
- 4 replies
- 2k views
-
-
கிழக்கு நெருக்கடி: சில வெளிப்படை உண்மைகள், பாகம் - 01 'யாழ். குடா முற்றுகையும் ஊடகங்களின் அரசியலும்" என்ற தலைப்பில் அண்மையில் நான் எழுதியிருந்த ஆய்வு கட்டுரையில் மறைந்த மாமனிதர் சிவராம் தொடர்பாகவும் அவரது தேசிய சிந்தனைகள் தொடர்பாகவும் சில கருத்துக்களை பதிவு செய்திருந்தேன். அது பின்வருமாறு அமைந்திருந்தது: '........அழிவின் விளிம்பில் நிற்கும் தமிழினம், தமிழ் ஊடகங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறது. தமிழ்த் தேசியப் பரப்புரை உலகம் அளவிடமுடியாத் தேவை நிரப்பீடு கொண்டது. அதை ஈடு செய்வதற்கு தேசியத்தின் மீதான பற்றுறுதியும் காதலும் மட்டும் போதுமானவையல்ல. தற்கொடையும் துணிச்சலும் துறைசார் புலமையும் ஆளுமையும் அவசியம். அத்தகையவர்களை இனங்கண்டு நாம் இணைத்துக் கொள்ளத் தவறும் …
-
- 8 replies
- 2k views
-
-
இலங்கை க.பொ.த. சாதாரணதரம் (G.C.E. O/L): தமிழர் செறிந்து வாழும் பிரதேசப் பெறுபேறுகள் – ஓர் மீளாய்வு (2005 – 2019) மணிவண்ணன் மகாதேவா May 10, 2020 முன்னுரை G.C.E. O/L பொதுத் தேர்வு வரையான கற்பித்தல் என்பது மாணவர்களின் கல்விப் பாதையில், அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரு படிக்கல்லாகவே பலகாலமாக இருக்கிறது. இதன் நோக்கம் மாணவர்களின் அறிவுத்திறனை ஆரம்ப வகுப்புகளில் இருந்து படிப்படியாகப் பலப்படுத்தி, அவர்களின் எதிர்காலக் கல்வி மற்றும் தொழிற் பாதையை அவர்களே தெரிவு செய்வதற்கு உதவுவதேயாகும். அதே நேரத்தில் இந்தப் பொதுத்தேர்வு மட்டுமே மாணவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் காரணியில்லை என்ற புரிதல் எமக்கு இருக்கவேண்டும். …
-
- 3 replies
- 2k views
-