அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன. விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன. 1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) 2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 - Sikh Light Infantry) நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்…
-
- 17 replies
- 1.6k views
-
-
அறம் மறந்து சுமந்திரனின் ஊதுகுழலான ஊடக ஜாம்பவானுக்கு ஒரு திறந்த மடல்.! கால விசித்திரத்தில், எத்தனை மாற்றங்களும் உரையாடல்களும் நிகழத் தலைபட்டுள்ளனவோ, “ஓடமும் ஓர் நாள் வண்டியில் ஏறும்”, என்பார்கள். ஊடகத்துறையில் இந்தப் பழமொழி அடிக்கடி நிஜமாகிக்கொண்டே இருக்கின்றது. ஊடக ஜாம்பவானாக, தன் எழுத்து – பேச்சு ஆற்றலினால் அனைவரின் கவனிப்பைப் பெற்றிருந்த மூத்த ஊடகவியலாளர் நடேசபிள்ளை வித்தியாதரன், இன்றைய காலத்தில் தன்னை மறந்து – ஊடக அறத்தை மறத்து சுமந்திரனின் ஊதுகுழலாக – அநியாயத்தின் எழுத்து வடிவாக மாறியிருப்பது காலத் துயரமே. அவருக்கே இந்தப் பகிரங்க மடல்…! வித்தியாதரன் அவர்களே…! ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கில் தன்னலமற்ற – நீதியின் பாதையில் பயணித்த – அறத்தலைமை, நிலை…
-
- 0 replies
- 1.6k views
-
-
சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும் உலக பொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர். ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆ…
-
- 0 replies
- 1.6k views
-
-
சேகுவராவும் பிடல் காஸ்ரோவும். ஒரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி நடத்தியும், விடுதலைப் பெற்ற நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றும் பகைவர்களின் இடைவிடாத அழிப்பு வேலைகளிலிருந்து காத்தும் 32 ஆண்டு காலமாக ஈடுஇணையில்லாத தொண்டாற்றிய பெருமைக்குரியவர் பிடல் காஸ்ட்ரோ. சின்னஞ்சிறிய கியூபா நாட்டினை சர்வதிகார ஆட்சியிலிருந்து மீட்பதற்காக போராடிய பிடல் காஸ்ட்ரோவும் அவரது அற்புதமான தோழன் சேகுவேராவும் உலக வரலாற்றில் உன்னதமான இடத்தை பெற்றுள்ளனர். காஸ்ட்ரோவின் ஆட்சியை கவிழ்க்கவும், அவரைப் படுகொலை செய்யவும் அமெரிக்க வல்லரசு இடைவிடாது முயற்சி செய்தது. உலக வல்லரசான அமெரிக்காவின் நயவஞ்சகத்தை பிடல் காஸ்ட்ரோ வெற்றிகரமாக முறியடித்தார். இதன் வ…
-
- 1 reply
- 1.6k views
-
-
வல்லரசுகளின் பிடியில் பாலஸ்தீனம் Pathivu Toolbar ©2005thamizmanam.com உலகமெங்கும் அலைக்கழிக்கப்பட்டு சுற்றித் திரிந்த யூதர்கள், சுமார் 2000 ஆண்டுகள் வரை கிறிஸ்தவரின் கொடுமைகளுக்கு ஆளாகி வந்துள்ளனர். ஜெர்மனியில் 1933 - 1945 காலப் பகுதியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் சுமார் 60 லட்சம் பேர் சித்திரவதை செய்யப்பட்டு இறந்துள்ளனர். இது மட்டுமல்ல, உலகில் சிதறி வாழ்ந்த அவர்களுக்கு எம் நாட்டில் இடமளித்து வாழச் செய்வோம் என எந்த மேற்கத்திய நாடும் முன்வரவில்லை. இதற்கு யூதர்களின் இயற்கையான போக்கும் ஒரு காரணமே. இவர்களது நிலை இப்படி தொடரும் போது கி.பி.1896 ல் தியோடர் ஹெர்ஸ்ல் (Theodor Herzl 1860-1904) என்றொரு நாடக எழுத்தாளர் யூத மக்களுக்கு ஒரு …
-
- 0 replies
- 1.6k views
-
-
இரண்டாம் உலகப்போரின் முன்னோடியாக ஹிட்லர் எவ்வாறு ஒஸ்ரியாவையும் செக்கோஸ்லாவாக்கியாவையும் யுத்தமின்றி அரசியல் நகர்வுகள் மூலம் தன் பிடிக்குகள் கொண்டு வந்தார் என்பது பற்றியும், மூனிச் உடன்படிக்கை பற்றியும், ஹிட்லரை பற்றிய சோவியத் யூனியனின் எச்சரிக்கையையும் மீறி பிரித்தானிய பிரதமராக அன்று இருந்த, நெவில் சாம்பர்லைன் போட்ட தப்புக்கணக்குகள் பற்றியும், பிரிட்டனையும் பிரான்சையும் ஏமாற்றி ஹிட்லர் தனது பலத்தை எவ்வாறு பெருக்கிக்கொண்டார் என்பதையும் இந்த பகுதி விளக்குகிறது. ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட போதிலும் சீனாவுடனும் உறவை வளர்த்துக்கொண்டு தான் இருந்தார் ஹிட்லர். ஆட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னால் அணியை முடிந்தவரை பலப்படுத்த வேண்டும் என்பதால். ஜேர்மனிக்கும…
-
- 13 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் பரிணாம வழர்ச்சிப் படிகளில் பல சோதனைகளையும் தாண்டி சாதனைகளை நிலைநாட்டி வருவது யாவரும் அறிந்ததே. இந்த சாதனைகள் என்பவை தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றின் அடிப்படையிலான போரியல் வெற்றிகளினாலும் அந்த வெற்றிக்காக வித்தாகிப் போன மாவீரர்களாலும் உருப்பெற்றதாகும். http://www.eelamist.com/podcast/index.php?...%20Reviews&p=22
-
- 3 replies
- 1.6k views
-
-
முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம் மொஹமட் பாதுஷா / 2019 மே 05 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:49 Comments - 0 இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சி, மரணஓலங்கள், அச்சஉணர்வு என்பவற்றால், முடங்கியிருந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு, மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில், இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. என்னதான் நடந்தாலும், தமது குடும்பத்துக்காகவும் வருமானத்துக்காகவும் எல்லாவற்றையும் கடந்து பயணிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை, நம் ஒவ்வொருவர் மீதும், வாழ்க்கை ஏற்றி வைத்திருக்கின்றது. எனவே, இத்தனை வலிகளையும் உயிர்ப்பயத்தையும் சுமந்து கொண்டு, நிச்சயமற்ற இன்றைய சூழ…
-
- 4 replies
- 1.6k views
-
-
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்கள் யார் பக்கம்? விடுதலை பற்றியும் போராட்டம் பற்றியும் பேசிவந்த தமிழ்த் தலைவர்கள் யாவரும், இப்போது அமெரிக்காவில் இடம்பெற்ற கொலையை அடுத்து, இடம்பெற்றுவரும் போராட்டங்கள் குறித்து, வாய் திறக்கவில்லை. பல சமயங்களில், மௌனம் சொல்கின்ற செய்தி வலுவானது. அமெரிக்கா என்பது, ஆட்சியாளர்களும் அரச எதிர்ப்பாளர்களும் இலகுவாக ஒன்றிணையும் புள்ளி ஆகும். அந்தப் புள்ளியில் இன்னமும், எல்லோரும் ஒன்றிணைகிறார்கள். அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்கிறது. யோகர் சுவாமிகளின் வழியில், 'எந்தப் பொல்லாப்பும் இல்லை' என்று இவர்கள், அமைதி காக்கிறார்கள். தமிழ் மக்கள், மேற்குலகை நம்பினால் தீர்வுகிடைக்கும் என்று, இன்றும் சொல்லப்படுகிறதுளூ அன்றும் சொல்லப்பட்டது. ஆனால், என்ன கிடைத்…
-
- 8 replies
- 1.6k views
-
-
சுமந்திரனின் சுயபரிசோதனை February 12, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் தேர்தலில் தனது தோல்விக்கு முக்கியமான காரணத்தை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கடந்த வாரம் யூரியூப் தமிழ் அலைவரிசை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் விளக்கிக் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது. தலைவர் தேர்தலுக்கு பின்னரான தனது நிலைப்பாடுகள் குறித்து விரிவாகக் கூறிய அவர், நேர்காணலின் இறுதிப்பகுதியில் தேர்தல் முடிவு தொடர்பில் செய்த சுயபரிசோதனை அல்லது உள்முகச் சிந்தனை பற்றி மனந்திறந்து பேசினார். கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபாட்டுன் …
-
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் : தற்கொலை அரசியல்? May 01, 20190 நிலாந்தன் கடந்த 19ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள் தரித்து நின்றன. USS Sprunance என்ற நாசகாரிக் கப்பலும் USNS, Millinocket என்ற போக்குவரத்துக் கப்பலும் அம்பாந்தோட்டையில் ஒரு வார காலத்துக்குத் தரித்து நிற்பதென்று திட்டமிடப்பட்டிருந்தது. இவ்விரு கப்பல்களும் இலங்கைப் படைத் தரப்புடன் இணைந்து CARAT – 2019 என்றழைக்கப்படும் கப்பல் தயார் நிலை மற்றும் பயிற்சி ஒத்துழைப்பு என்ற கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டன. கடல்சார் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் பலப்படுத்துவதே CARAT என்றழைக்கப்படும் கூட்டுப் பயிற்ச…
-
- 0 replies
- 1.6k views
-
-
சென்னையிலிருந்து வெளிவரும் பார்பணீய நாளிதழும், தமிழர் விரோத சக்தியுமான "தி ஹிந்து" பத்திரிக்கையில் 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நிருபமா சுப்ரமணியன் எழுதிய கட்டுரையில் இந்தியா போர் தொடர்ந்து நடைபெற்று புலிகள் முற்றாக அழிக்கப்படுவதை விரும்பியதாகவும், இதன்பொருட்டு, சர்வதேசத்திலிருந்து வரும் போரினை நிறுத்தும் அழுத்தங்களை இந்தியா சாதுரியமாகத் தடுத்து நிறுத்தி, போர் தங்கு தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்திக்கொண்டதாகவும் கூறுகிறார். அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள் இதோ....... "யுத்தத்தின் இறுதிநாட்களில், இந்தியா பல்வேறு தளங்களில் இலங்கைக்குச் சார்பாகச் செயலாற்றிக்கொண்டிருந்தது. அதில் முக்கியமானது இலங்கையின் போர் நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச நாடுகள் கொண…
-
- 20 replies
- 1.6k views
-
-
தமிழர் அரசியலும், ‘பக்கச்சார்பற்ற’ ஊடகவியலும் படம் | TAMILNET இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில்வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்றகட்டுரைக்கு பதிலாக அமைந்த ஆங்கிலக் கட்டுரையின்[ii]மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்த சில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்…
-
- 0 replies
- 1.6k views
-
-
சுமார் 1000 நாட்களுக்கு முன்பு ஜூலை 2016 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை 52% மக்கள் ஆமோதித்தார்கள். கூடுதலான பென்ஷன் காரர் வெளியேறுவதை ஆதரித்தார்கள், அவர்களில் ஒரு தொகையினர் இவுலகை விட்டு வெளியேறி இருப்பார்கள். ஆனால் அவர்கள் விதைத்த பிரெக்ஸிட் என்ற விதை விருச்சமாக வளர்ந்து பூக்காமலும் காய்க்காமலும் நிக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இன்று திக்கு முக்காடுகிறது. 90% ஆமா என்று போட்டிருந்தால் பிரச்சனை சுலபமாக தீர்க்கப் பட்டிருக்கும். ஆம் என்று போட்டவர்கள் பெரும்பாலான பழமைவாதிகளும், பென்ஷனக்காரர்களும். இல்லை என்று போட்டவர்கள் பெரும்பாலான இளைஞர்களும் வெளிநாட்டு காரர்களும். வோட்டு போட்ட பலருக்கு தெரிய…
-
- 7 replies
- 1.6k views
-
-
பொம்மலாட்டம்! க. ரகுநாதன் உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் நாளைய பஞ்சாங்க குறிப்புகளை இன்றே பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! ஏறக்குறைய 15 ஆண்டுகள் பேச்சுக்குப் பின் உலக வர்த்தக அமைப்பில் டிசம்பர் 2001-ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப்பட்டது சீனா. அது முதற்கொண்டு சீனாவின் பொருள்கள் உலகச் சந்தையில் குவிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்தியா உள்பட உலக நாடுகள் அதை கலக்கத்துடனே பார்க்கின்றன. சீனா தயாரிக்கும் பொருள்கள் பெரும்பாலானவை தரம் குறைந்தவையாக உள்ளன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. இந்தியாவில் "சைனா பஜார்' வந்தபோது விலை குறைந்த, தரமும் குறைந்த பொருள்கள் சந்தையில் குவிந்தது, இதற்கு ஓர் உதாரணம். இந்நிலையில், சீனாவில் தயாரான 8 லட்சம் பொம்மைகளைத…
-
- 1 reply
- 1.6k views
-
-
திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் சிங்களவர்களது சட்டத்துக்கு எதிரான குடியேற்றத்துக்கு தமிழ் மக்கள் மாபெரும் போராட்டமும் பொதுக் கூட்டமும் (ஓகஸ்ட் 28) இல் இடம் பெற்றது. இந்தக் கண்டனப் பேரணியும் பொதுக் கூட்மும் தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்…
-
- 2 replies
- 1.6k views
-
-
[1] முன்குறிப்புகள் இந்தப் பதிவுத்தொடருக்கு " தமிழர்களாய் ஒன்றுபடுவோம்" என்பது பிரதான தலைப்பாகும். தொடர இருக்கும் பதிவுகளுக்கு தனித்தனியான "துணைத்தலைப்புகளும் எண்களும்" தரப்படும். அப்பதிவுகளுக்கான "முன்குறிப்புகள்" இதுவாகும். பரந்துபட்ட பின்னணி கொண்டதாக இப்பதிவுகள் அமையும். முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு என்பது ஈழத்தமிழர்க்கு மட்டுமல்லாமல் உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் ஏற்பட்ட ஒரு சோகமான பின்னடைவாகும். நாம் உண்மையான அரசியல்விழிப்புணர்வு உள்ளவர்களாக இருப்பின், அந்தக் கூட்டுஅனுபவத்திலிருந்து நாம் விலகிநிற்க முடியாது; விதிவிலக்குப் பெறமுடியாது. ஏனெனில் தமிழர்களின் பல்லாயிரக்- கணக்கான ஆண்டு வரலாற்றில் இத்த…
-
- 5 replies
- 1.6k views
-
-
அண்மைக்காலங்களில் நிறையவே உள்ளூர் உலக அரசியல் மாற்றங்கள் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாததாய் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. மீண்டுமொரு உலகளாவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் கிளர்ச்சி, சர்வாதிகார ஆட்சி கவிழ்ப்பு, ஜனநாயகத்தேர்தல்கள் என்று அநேகமான நாடுகளில் என்னென்னவோ நெருக்கடிகள். எல்லாமே ஏதோவொரு மாற்றத்தை, தீர்வை, விடிவை நோக்கிய நகர்வுகளாய் நிறையவே எதிர்பார்ப்புகளோடு. எல்லோருக்கும் எங்கேயோ இருந்து ஓர் வலுவான ஆதரவும், அதன் முடிவு நோக்கிய பயணமும் தொடர்கிறது. ஈழத்தமிழர்களுக்கும் ஓர் முக்கிய நிகழ்வாக கடந்த 2009 May மாதம் இடம்பெற்றதாக கருத்தப்படும் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான்-கி-மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கை …
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
இன்றைய திகதியில் இலங்கைக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர், ஒரு பஸ் டிரைவரின் மகள் என்று சொன்னால் நம்புவீர்களா! பாரதத் திருநாட்டின் பிரதமரைப் பார்த்தே பயப்படாத (!) இலங்கை அரக்கர்கள், ஒரு பஸ் டிரைவரின் மகளைப் பார்த்து நடுங்குவதாவது - என்று நம்பிக்கையே இல்லாமல் திருப்பிக் கேட்பீர்கள். ஆனால், அந்த பஸ் டிரைவரின் மகள் பெயரைச் சொன்னால், நான் சொல்வதை நிச்சயமாக நம்புவீர்கள். அவரது பெயர், நவநீதம் பிள்ளை. இப்போது சொல்லுங்கள் நம்புகிறீர்களா இல்லையா! (சும்மா பேரைச் சொன்னாலே நடுங்குதுல்ல!) ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையராக நவநீதம்பிள்ளை மட்டும் இல்லையென்றால், இந்நேரம் 'இனப்படுகொலை' என்கிற குற்றச்சாட்டை, செம்மணிப் புதைகுழிக்குப் பக்கத்திலேயே குழிதோண்டிப் புதைத்திருப்பார்கள் ர…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழ்த் தேசிய அரசியலில் அடுத்தது என்ன? -என்.கே. அஷோக்பரன் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இலங்கையை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. சமூகப் பரவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாவிட்டாலும், தினந்தோறும் நாடெங்கிலும் ஆங்காங்கே, புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட வண்ணமே இருக்கின்றார்கள். கொரோனா வைரஸ், முழு உலகத்துக்குமே சவாலாக மாறியிருக்கிறது. கொரோனா வைரஸின் சுகாதாரத் தாக்கம் ஒரு புறமென்றால், அதன் பொருளாதாரத் தாக்கம் அதைவிடப் பயங்கரமானதாக இருக்கிறது. தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர, நீண்ட கால முடக்கல் நிலை அமல்படுத்தப்பட்டால், தொற்றுப் பரவல் குறையும். ஆனால், அதனால் விழும் பொருளாதார அடி, நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத பாதாளத்தில் நாட்டைத் தள்ளிவிடும். ஆகவே, நோய…
-
- 14 replies
- 1.6k views
-
-
மிக மும்மரமாக, வட மாகாண சபைக்கான தேர்தல்களுக்கு முன்னர், அம்மாகான சபைகள் உருவாக வழிவகுத்த அரசியில் அமைப்பின் 13 வது சட்டத்தினையே ஒன்றுமில்லாமல் ஆக்கி, வெறும் தேர்தலை வைத்து, தமிழர்களை மட்டும் மல்லாது சர்வதேச நாடுகளையும் ஏமாத்த சகோதரர்கள் போட்ட திட்டம் இந்திய கோப சுழியில் சிக்கி சிதறி விட்டது போல் தெரிகின்றது. அவிட்டு விட்டப் பட்ட, அமைச்சரவையில் இருந்த இனவாதிகள் மீண்டும் கட்டப் படுகின்றனர். தமிழர்களுக்கு உள்ள ஒரே வழி, இந்தியாவின் உதவியுடன் வரையப் படும் இந்த சிறு கோட்டினைப் பிடித்து ரோட்டினைப் போடுவது தான். http://www.dailymirror.lk/news/32300-govt-to-proceed-with-pc-polls-under-existing-provisions-of-13th-amendment.html
-
- 17 replies
- 1.6k views
-
-
இஸ்ரேலின் அழிச்சாட்டியம் இஸ்ரேலின் அழிச்சாட்டியம்: உலக ஒழுங்கு மாற்றங்களை கவனமாக பயன்படுத்த வேண்டிய முஸ்லிம் உலகு மொஹமட் பாதுஷா இன்னும் ஒரு உலக மகா யுத்தம் வந்து விடுமோ அல்லது அதற்குச் சமமான மனிதப் பேரவலம் இடம்பெற்று விடுமோ என்ற அச்சமும் கவலையும் உலக மக்களை ஆட்கொண்டுள்ளது. அகன்ற பலஸ்தீனத்தில் ஒவ்வொரு நொடியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உயிரிழப்புக்களும் இன அழிப்பும் அந்தக் கவலையை ஏற்படுத்துவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. பலஸ்தீன மண்ணை இஸ்ரேல் 75 வருடமாக ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமன்றி அதன் எல்லைகளை அகலமாக்கி இன்னுமின்னும் பலஸ்தீன நிலத்தைச் சூறையாடி வருகின்றது என்பது உலகுக்கே தெரியும். இருப்பினும், இஸ்ரேலின் மீது இம்முறை ஹமாஸ் நடத்திய ஏவுகணைத் த…
-
- 23 replies
- 1.6k views
-
-
வன்னியில் தமிழீழத் தேசியத் தலைவர் வசித்ததாக கருதப்படுகின்ற நிலக்கீழ் மாளிகை வீடு ஒன்று சிறீலங்காப் படையினரால் அழிக்கப்பட்டிருக்கின்றது. புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியில் உள்ள காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இந்த வீடு மிகவும் ஆச்சரியம் மிக்க கட்டுமானமாக அமைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட தளபதிகளைத் தவிர இளநிலைத் தளபதிகளால் கூட கால்பதிக்க முடியாத இடமாக இருந்த இந்த வீடு, இன்று இடித்தழிக்கப்பட்டிருக்கின்றமையானது தமிழ் மக்களிடையே பெரும் கவலைகளைத் தோற்றுவித்துள்ளது. போரியல் ரீதியில் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியிலும் தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழீழத் தேசியத் தலைவரும் கைதேர்ந்தவர்களாக இருந்தனர் என்பதற்கு இந்த நிலக்கீழ் மாளிகை வீடு எடுத்துக்காட…
-
- 1 reply
- 1.6k views
-
-