அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
ஈழத் தமிழர் பிரச்சினையில் ஸ்டாலின் செய்யப்போவது என்ன? – அகிலன் 96 Views தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், ஈழத் தமிழர் பிரச்சினையில் சாதகமான மாற்றங்கள் எதனையாவது ஏற்படுத்துமா? கடந்த ஒருவார காலமாக எழுப்பப்படும் பிரதான கேள்விகளில் ஒன்றாக இது இருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சமிஞ்ஞைகள் எதனையும் இதுவரையில் காண முடியவில்லை. உலகத் தமிழர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் நுணுக்கமாக அவதானித்த விடயமாக இருந்தது, தமிழகத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம்தான். ஜெயலலிதாவில் தொடங்கி எடப்பாடியில் முடிவடைந்த அ.தி.மு.க. ஆட்சி பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், ஆட்சிமாற்றம் எதிர் பார்க்கப்பட்ட ஒன்…
-
- 1 reply
- 326 views
-
-
-
பாகிஸ்தான் சம்பவம் :வெட்கமும் துக்கமும் - மொஹமட் பாதுஷா பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் மிலேச்சத்தனமாக படுகொலை செய்யப்பட்டமையினால், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவிலும் அதேபோன்று, இலங்கை முஸ்லிம்கள் மற்றும் சிங்கள சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திலும் ஒரு எதி;hபாராத தர்மசங்கடமும், நெருக்கடி நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை முஸ்லிம்கள் மீதான இன, மத நெருக்கடிகள் சற்று தளர்வடையத் தொடங்கும் தருணங்களில், எதோ ஒரு திசையில் இருந்து இவ்வாறான ஒரு இக்கட்டான நிலை தோற்றுவிக்கப்படுவது அண்மைக்காலங்களில் தொடர் நிகழ்வாகியிருக்கின்றது. 'இலங்கையர் ஒருவர் பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டுள்ளார்' என்ற செய்திக்கும், 'இலங்கையைச் சேர…
-
- 1 reply
- 751 views
-
-
“ஒப்பரேசன் தமிழ் தேசியத்தின் முடிவு”: சுமந்திரனை புரிந்துகொள்ளுதல் - சமகளம் லோ. விஜயநாதன் தமிழர்கள் எப்போது தமக்கென்று அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார மூலோபாய கொள்கைகளை வகுக்கக்கூடிய நிறுவனமயப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உருவாக்கி அவற்றுக்கூடாக தமது தேசவிடுதலை போராட்டத்தை நகர்த்த முற்படுகின்றார்களோ அன்றுதான் அழிவு நிலையில் இருக்கும் தமிழ் தேசியம் பாதுகாக்கப்படும். இல்லாதுவிட்டால் ஏகாதிபத்திய நாடுகளின் எடுபிடிகளாக மாறி இப்போதுவரை இலக்கற்ற பாதையில் பயணிப்பதுபோன்றே தொடர்ந்தும் பயணிக்கவேண்டி வரும். இதற்கு சிறந்த உதாரணம் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் எனும் நபரின் பிடிக்குள் சிக்கி தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளாகும். தமிழ் …
-
- 1 reply
- 671 views
-
-
தமிழர் அரசியல்: கண்கட்டி வித்தையின் உச்சம் Editorial / 2019 ஏப்ரல் 02 செவ்வாய்க்கிழமை, பி.ப. 06:01 Comments - 0 -அ.அகரன் தனி மனித வாழ்வியலில், ஒருவனது நடத்தையின் பாங்கு, அவனது முன்னேற்றத்திலும் வெற்றியிலும் எவ்வாறு முக்கியத்துவம் பெறுகின்றதோ, அதனிலும் மேலாக, ஒரு நாட்டின் அதிகாரபீடத்தில் இருக்கின்றவர்களின் கருத்துகளும் செயற்பாடுகளும் அந்த நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் சக்திகளாக அமைகின்றன. இலங்கையில், நாட்டினுடையதும் மக்களினுடையதும் நலன்களைப் பின்னிறுத்தி, வெறும் சுயநல அரசியலை, கட்சி அரசியல் ஊடாகச் செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஏற்படும் அரசியல் முரண்பாட்டின் வெளிப்பாடான காழ்ப்புணர்ச்சி கருத்துகள், சர்வதேச ரீதியாகப் பெரும் தா…
-
- 1 reply
- 585 views
- 1 follower
-
-
"விழித்தெழு பெண்ணே!" [நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னிட்டு] தமிழர் எழுச்சி மற்றும் இலங்கைத் தமிழரின் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பகுதியில் இருந்து இன்றுவரை வரலாற்றின் நினைவுகளை கிசுகிசுக்களை வடக்காற்று ஏந்திய யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், தெருக்களில் வெள்ளம் போல் ஓடத் தொடங்கியிருந்த சுவரொட்டிகளைப் பார்த்துக் கொண்டு நின்றாள் நிலா. அவள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றவள், நம்பிக்கையும் உறுதியும் நிறைந்தவள். நவம்பர் 14, 2024 அன்று நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் அவளது மனதைக் கனக்கச் செய்தது. நிலா இலங்கையின் சிக்கலான அரசியல் இயக்கவியலை, குறிப்பாக உள்நாட்டுப் போருக்குப் பின்னர் தனது தமிழ் சம…
-
-
- 1 reply
- 601 views
-
-
சென்ற வாரம் நூலகம் நிறிவனத்தினரின் கனடாப் பிரிவினர் ஒழுங்கு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் அது தொடர்பான சிக்கல்களும் பறற்றிப் பேச வாய்ப்புக் கிடைத்தது. நூலகம் நிறுவனம் எண்ணிம நூலகம் என்பது மட்டுமல்ல ஈழத் தமிழ் ஆவணங்கள், நூல்கள் மேலும் பல்வேறுபட்ட அறிவுச் சான்றுகளையும் பேணவிழைகிற ஒரு சிறப்பான முயற்சியாகும். எண்ணிம நூலகம் பற்றிய நிகழ்வில் யாழ் நூலக எரிப்புப் பற்றிப் பேசுவதும் தவிர்க்க முடியாமல் போய்விட்டது. அமைப்பாளர்களில் ஒருவர் குறிப்பிட்டது போல, "அப்போது எமது நூலகம் ஏண்ணிம நூலகமாக இருந்திருக்குமானால் எரிப்பு ஏற்படுத்திய்இருக்கும் பாதிப்புக் குறைந்த அளவிலேயே இருந்திருக்கும்". எனினும் அது வேறு காலம். இது வேறுகாலம். என்னையும் என்போன்ற நூற்றுக்…
-
- 1 reply
- 812 views
-
-
ஈராக்கில் இருந்து அமெரிக்கா வெளியேறல் - ஜனகன் முத்துக்குமார் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா கொண்டுள்ளது. அது இத்தாலி, ஜப்பான், ஹொண்டுரஸ், பேர்கினா பாஸோ, ஈராக், தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் தளங்களை அமைத்துள்ளது. ஐக்கிய அமெரிக்க ஆர்வத்தையும் பிராந்திய ஸ்திரத்தன்மையையும் இராணுவ இருப்பு பாதுகாக்கிறது. ஆயினும்கூட, குறித்த நிலைமையைத் தக்கவைக்க ஐக்கிய அமெரிக்கா பல தடைகளை எதிர்கொள்கிறது. ஈராக்கில், எதிர்ப்பாளர்களுக்கு எதிரான உள் அமைதியின்மை மற்றும் வன்முறை மோதல்கள் தொடர்கின்றன. அந்நா…
-
- 1 reply
- 667 views
-
-
-
முஸ்லிம் கூட்டமைப்பு: அதிகரிக்கும் சாத்தியங்கள் ‘ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்’ என்று இஸ்லாம் மார்க்கம் சொல்கின்றது. ஆனால், குறிப்பாக இலங்கைச் சோனகர்களின் வாரிசுகள் எந்தளவுக்கு அதைப் பின்பற்றுகின்றார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது. தம்முடைய மார்க்கம் சொல்கின்றது என்பதற்காகவோ அல்லது சமூகவியல் நலன்களை அடிப்படையாகக் கொண்டோ, இலங்கை முஸ்லிம்களும் அவர்களது தலைவர்களும் ஒற்றுமைப்பட்டுச் செயற்படுவதைக் காண்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது. மாற்றுக்கருத்தியல் என்பது காத்திரமான வாதங்களுக்கும் ஆரோக்கியமான இறுதித் தீர்மானங்களுக்கும் வித்திடும் என்ற நிலை மாறி, அது கருத்து வ…
-
- 1 reply
- 709 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிக…
-
- 1 reply
- 503 views
-
-
உலக அரசாங்கங்கள் ஒரு பொதுவுடமையின் கீழ்த்தான் இயங்குகின்றன. இங்கே பொதுவுடமையின் கீழ் இயங்குதல் என்பதன் பொருள், அரசாங்கம் ஒன்று இன்னொரு அரசாங்கத்திற்கு ஒத்துழைத்தல், உதவுதல் என்று பொருள்கொள்ளப்படும். உலக நாடுகள் அத்தனையும் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் என்று இன்னபிற செயற்பாடுகளில் ஒத்துழைப்புக்களோடு செயற்பட்டாலும், இன்னொரு முக்கியமான விடையங்களில் அரசாங்கங்கள் ஒத்துழைப்போடு தான் இயங்குகின்றன. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்னும் மையப்பொருளோடு ஒன்றிக்கிறது. பொதுவாக, உலகில் தோன்றிய அத்தனை போராட்ட இயக்கங்களின் வளர்ச்சியின் பின்னணியில் அரசாங்கங்களின் பங்களிப்பு அளப்பரியது. அது உலகத்தை ஆட்டிப்படைத்த ஒசாமா பின்லேடனாக இர…
-
- 1 reply
- 500 views
-
-
இலங்கையை பொறுத்தமட்டில் 2012ஆம் ஆண்டு பொருளாதார நிலை பல்வேறு ஏற்றத்தாழ்வுகளை சந்தித்திருந்தது. 2012ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி வளர்ச்சி வீதம் 8 சதவீதமாக அமைந்திருக்கும் என பல தரப்பினரின் மூலம் எதிர்வுகூறப்பட்டிருந்த போதிலும், வருட நிறைவில் 6.8 வீத வளர்ச்சியே எய்தப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் நாட்டில் நிலவிய வெவ்வேறான சூழ்நிலைகள், காலநிலை மாற்றம், அரசியல் சூழல், பங்குச்சந்தை நிலைவரம், நாணய மாற்றுக் கொள்கை போன்றவற்றுடன், சர்வதேச நாடுகளில் நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் அமையதியற்ற சூழ்நிலை போன்றனவும் பங்களிப்பு வழங்கியிருந்தன. நாட்டின் பொருளாதாரத்தில் பிரதான பங்களிப்பு செலுத்தும் துறைகளாக …
-
- 1 reply
- 759 views
-
-
ஒரு தொலைக்காட்சியால் என்ன செய்ய முடியும்? பதிவு செய்த நாள் - / மார்ச் 22, 2013 at 10:16:30 PM எந்தவொரு பொதுப் பிரச்சினையிலும் கருத்தொருமிப்பை உற்பத்தி செய்யும் வலிமை கொண்டவை ஊடகங்கள். உண்மையை ஊருக்குச் சொல்லுவதும் ஊடகங்களால் சாத்தியம்; உண்மையை மறைப்பதும் அவற்றால் சாத்தியம். ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்று கிளர்ந்தெழுந்த்த தமிழக மாணவர் சமூகத்திற்கு முகம் கொடுத்தது புதிய தலைமுறை தொலைக்காட்சி. நீதிக்கான அறப்போராட்டம் பற்றிய தொடர் நேரலைகள், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் முக்கியப் பங்கு வகித்தன. 2009 ஆம் ஆண்டில் புதிய தலைமுறை…
-
- 1 reply
- 1k views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-07#page-3
-
- 1 reply
- 400 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய கடுமையான விமர்சனங்கள்
-
- 1 reply
- 692 views
-
-
இந்துசமுத்திர மாநாடு சீனாவுக்கு எதிரான நகர்வா? கடந்த ஆவணி மாதம் 30ஆம் திகதியும் புரட்டாதி 1ஆம் திகதியும் கொழும்பு நகரில் இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்து சமுத்திர மாநாடு இந்து சமுத்திர ஓரத்தில் அமைந்துள்ள நாடுகளினதும் இந்து சமுத்திர நாடுகளினதும் அவதானத்தையும் கரிசனையையும் பெற்றுள்ளது. இந்து சமுத்திர மாநாட்டினை 1970களில் இலங்கை முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் இந்து சமுத்திரத்தை யுத்த சூன்யமற்ற வலயமாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் குழப்பக் கூடாது. இரண்டும் சாரம்சத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபட்டவை இந்து சமுத்திர மாநாடு தனியொரு அரசாங்கத்தினாலோ அல்லது அர…
-
- 1 reply
- 787 views
-
-
இருவேறு கோணங்கள் இரண்டு வகையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். நாளாந்த வாழ்க்கையில் எழுந்துள்ள பிரச்சினைகள், புரையோடிய நிலையில் நீண்ட நாட்களாகத் தீர்வு காணப்படாமல் உள்ள இனப்பிரச்சினை ஆகிய இரண்டு பிரச்சினைகளுமே அவர்களை வாட்டிக்கொண்டிருக்கின்றன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவான காரியமல்ல. அது உடனடியாகச் செய்யக்கூடிய காரியமும் அல்ல என்பதை அவர்கள் நன்கறிவார்கள். ஆயினும் நாளாந்த வாழ்க்கைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அவர்களுடைய ஆர்வமும் அக்கறையும் தவிப்பாக மாறியிருப்பதையே காண முடிகின்றது.…
-
- 1 reply
- 532 views
-
-
குழப்புகிறாரா? குழம்புகிறாரா? வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீண்டும் அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒருவராக மாறியிருப்பதாக கூறப்படுகிறது. அவரது அண்மைய அறிக்கைகள், கருத்துகளில் ஏற்பட்டுள்ள தளம்பல் அல்லது குழப்ப நிலை, பல்வேறு தரப்பினரும் அவரை வைத்து அரசியல் செய்யும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை விளக்கி ஓர் அறிக்கையுடன் நிறுத்திக் கொண்டிருந்தால், அரசியல் சார்பற்றவர் என்ற நடுவுநிலையுடன் நின்று கொண்டிருக்க முடியும். அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார் என்றே பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. 2015 ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
மக்களின் உயிர்களுடன் விளையாட்டு !!! 22 SEP, 2022 | 02:44 PM இலங்கையைப் பொறுத்தவரையில் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு புதிய பிரச்சினைகள் தலைதூக்குவது சர்வசாதாரணமாக காணப்படுகின்றது. அதுவும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரச்சினைகள் எவ்வாறு எழுந்தன என்பதும் நாம் கடந்த காலங்களில் வெளியான செய்திகளில் இருந்து அறியமுடியும். அந்தவகையில் தற்போது புதியதொரு பிரச்சினையொன்றை மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எப்லடொக்சின் எனும் அமிலம் கலந்த திரிபோஷா, சமபோஷ, யஹபோஷ, லக்போஷ உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இலங்கையில் கடந்த …
-
- 1 reply
- 493 views
- 1 follower
-
-
தேசிய பிரச்சினை தீர்வுக்கு அவசியமான மன்னிக்கும் பெருந்தன்மை March 3, 2022 Photo, Selvaraja Rajasegar நீண்டகாலமாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த எட்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கைதிகள் அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டிருப்பது எதிர்பாராத ஒன்று. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அண்மைக்கால போராட்ட இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்களில் சமார் 4000 பேரை கைதுசெய்து தடுத்து வைத்தது என்றாலும் அவர்களில் பலர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், நூற்றுக்கணக்கானவர்கள் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் பல மாதங்களாக வாடுகிறார்கள். அவர்களை விடுதலை செய்யவேண்டும் அல்லது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று உள்நாட்டு மற்றும் சர்…
-
- 1 reply
- 296 views
- 1 follower
-
-
இணைந்து வந்தார்கள்- பிரிந்து சென்றார்கள்!! வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார்’ என்ற நூல் கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம்–வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அந்த மேடையில் அமர்ந்திருந்தார். விக்னேஸ்வரன் ஆதரவு அணியும், கூட்டமைப்பி னரும் சங்கமித்த நிகழ்வாக அது அமைந்தது. 5ஆண்டுகள் அஞ்சாதவாசம் கிட்டத்தட்ட 5ஆண்டுகளுக்கு முன்பாக, 2013ஆம் ஆண்டு …
-
- 1 reply
- 696 views
-
-
24 JUN, 2024 | 03:01 PM விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை விவகாரத்தில் பெரும்பான்மையினப் பௌத்தர்கள் நீதிமன்றக் கட்டளைகளையும் சட்டங்களையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. குருந்தூர் மலையில் எவ்வித மதம் சார்ந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படக்கூடாது என நீதிமன்றம் கட்டளைகளைப் பிறப்பித்தபோதும் அந்த நீதிமன்றக் கட்டளைகளை பல தடவைகள் மீறி, பெரும்பான்மையின பௌத்தர்களால் பாரிய அளவில் பௌத்த விகாரை குருந்தூர் மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அந்த விகாரை அகற்றப்பட வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அந்த விகாரையை உடைத்தால் இனங்களுக்கிடையில் பிளவு…
-
- 1 reply
- 436 views
- 1 follower
-
-
நடைமுறை அரசியல் மிகக் கடினமான பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. பலம் வாய்ந்த சக்தியை அழிக்க மென்மையான இராஜதந்திரத்தை ஒரு கூரிய ஆயுதமாக பயன்படுத்தும் வித்தை அரசியலில் உண்டு. முள்ளிவாய்க்காலின் பின் இத்தகைய ஒரு தந்திரத்தை எதிரி மிகச் சாதுரியமாக அரங்கேற்றி வருகின்றார். இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பின்தள்ள காலனிய ஆதிக்க எஜமான் ஒரு இலகுவான தந்திரத்தை பிரயோகித்தார். அதே தந்திரத்தைத்தான் இப்பொழுது தமிழ் மண்ணில் சிங்கள பேரினவாத சக்திகள் அரங்கேற்றி வருகின்றன. சுதந்திரத்திற்கு முன் பிரித்தானியாவை விடவும் சுமாராக 21 மடங்கு பெரிய நிலப்பரப்பை கொண்ட இந்தியாவை 7,500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள பிரித்தானியாவால் இலகுவாக கட்டுப்படுத்தவும் ஆளவும் முடியாது. …
-
- 1 reply
- 444 views
-
-
சிறு பொறிகள் - நிலாந்தன் லட்சக்கணக்கானவர்கள் திரளும் நல்லூர்த் திருவிழாவின் ஒரு பகுதியாக “ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம்” என்ற தலைப்பின் கீழ் ஒரு சிறு கலந்துரையாடல் களம் திறக்கப்பட்டது. ஊருணி என்பது திருக்குறளில் உள்ள ஒரு வார்த்தை. ஊரில் நீரை நுகரும் இடம் அவ்வாறு என்றழைக்கப்பட்டது. பத்தாம் திருவிழாவில் இருந்து தொடங்கி நல்லூர் வளாகத்துக்குள் பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள புடவைக் கைத்தொழில் திணைக்கள வளாகத்தில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. அங்கு நிலத்தடி நீரைப் பாதுகாப்பது தொடர்பான கண்காட்சியும் இடம்பெற்றது. பங்களிப்புடன் கூடிய ஆராய்ச்சிக்கூடாக வடக்கின் நீரைப் பாதுகாப்புக்கான அமைப்பும், வடக்கின் இளம் நீர் வாண்மையாளர்களும் இணைந்து முன்னெடுத்த மேற்படி கலந்த…
-
- 1 reply
- 265 views
- 1 follower
-