நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு காரணமான கியூபா? மார்க்சிய அறிஞர் ரான்ரெட்னூர் ஈழத்தமிழர் இனப்படுகொலையை வரலாற்று வழியில் விளக்கி தொடராக ஐந்து கட்டுரைகளை எழுதி, 2009 நவம்பரில் வெளியிட்டார். இதன்வழி இலத்தீன் அமெரிக்க இடதுசாரி அரசுகளின் கடமைகளைச் சுட்டிக்காட்டினார். இவற்றில் முதல் கட்டுரையின் சுருக்கம் இங்கு தமிழில் தரப்படுகிறது. முழுக்கட்டுரைகளுக்கும் காண்க http://www.ronridenour.com/. “உலகெங்கிலுமுள்ள சுரண்டப்படும் மக்கள் எங்கள் தோழர்கள்; உலகெங்கிலுமுள்ள சுரண்டுபவர்கள் எங்கள் எதிரிகள்… எங்கள் நாடு இப்பரந்த உலகை உள்ளடக்கியது; உலகெங்கிலுமுள்ள புரட்சியாளர்கள் எங்கள் சகோதரர்கள்” என்றார் பிடல் காஸ்த்ரோ. ‘புரட்சிக்கான கருத்தியல் உந்து சக்தி…
-
- 4 replies
- 1.3k views
-
-
குயிலியை மறக்க முடியுமா ! தமிழ் குலம் உள்ளவரையில் அவர்களின் தியாகமும் வீரமும் எந்நாளும் போற்றுதலுக்குரியதல்லவா. இன்றைக்கு 228 ஆண்டுகளுக்கு முன்னால் வெள்ளையரின் அடிமைத்தளையறுக்க வாள் பிடித்து களம் கண்ட வேலு நாச்சியாரின் மெய்காவலராய் இருந்தவர்தாம் குயிலி. " பகையே எம்மை மண்ணில் புதைத்தாய் எம் மண்ணை எங்கே புதைப்பாய்" என்கிற உணர்ச்சி வரிகளை காசி ஆனந்தனை பாட செய்த செம்மணி படுகொலைகளை புரிந்து கணக்கில்லா தமிழர்களை உயிருடன் புதைத்து எக்காள சிரிப்புடன் வலம் வந்து கொண்டிருந்த இன எதிரியை "கடவுள் மறந்தாலும் , கரும்புலிகள் மறப்பதில்லை" என்கிற வரிகளை உண்மையாக்கி களம்காணும் புலிப்போத்துகளின் ஆதித்தாயல்லவா குயிலி. 8 ஆண்டுகள் மறைவு வாழ்க்கைக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாம் நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு மிக சிறியதொரு நாடு. இந்தியாவின் பரப்பளவை ஒப்பிடுகையில் இஸ்ரேலின் பரப்பளவை விட நூறு மடங்கு பெரியது இந்தியா. இஸ்ரேல் நாட்டின் பரப்பில் பாதிக்கும் மேல் நெகவ் பாலைவனம். ஒன்றரைக் கோடி மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு சிறிய நாடு. இஸ்ரேல் மீது பல்வேறுபட்ட எதிர்மறை கருத்துகள் இருந்த போதிலும் தன்னம்பிக்கைக்கு இந்த நாட்டை விட உலகில் வேறு எந்த நாட்டையும் உதாரணமாக கூற முடியாது. உண்மையில் யூதர்களுக்கு உடல் முழுக்க மூளை எனும் வார்த்தை நன்கு பொருந்தும். 1948 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி தான் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேல் நாட்டின் அதிகாரபூர்வ மொழிகள் ஹீப்ரூ மற்றும் அராபி. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ். இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகையில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரான்சில் மறக்கமுடியாத நாட்களாக 07-08-09/01/2015 அமைந்துவிட்டன... ஏழாந்திகதி காலை 11 மணியளவில் CHARLIE HEBDO என்னும் பத்திரிகை அலுவலகத்திற்குள் ஆபத்தான நவீன ஆயுதங்களுடன் புகுந்த இரு இளைஞர்கள் (சகோதரர்கள்) Chérif Kouachi (32 வயசு), Said Kouachi,( 34வயசு ( மத்தியகிழக்கைச்சேர்ந்தவர்கள்) அல்லாவின் பெயரைச்சொல்லியபடி குறி தவறாதும் துப்பாக்கி சூட்டில் அனுபவப்பட்டவர்கள் போல் சுடுகின்றனர். காவலுக்கு இருந்த காவல்துறையினர் இருவர் மற்றும் பத்திரிகையின் முக்கிய பிரமுகர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட 11 பேர் காயமடைகின்றனர். அதில் நால்வரின்நிலை கவலைக்கிடமானதாக இருக்க கொலையாளிகள் வந்த வாகனத்திலேயே தப்பிவிடுகின்றனர்...... மக்கள் கொதித்து எழுந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுப…
-
- 23 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைகள் ஓயப் போவதில்லை. ஆதரவாளர்களைப் பொறுத்த வரை சாகாவரம் பெற்ற மாமனிதராகிய பிரபாகரன் அவர்களின் இதயத்தில் குடியிருக்கலாம். நக்கீரன் போன்ற தமிழ் தேசிய நாளிதழ்கள் அதற்கான ஆதாரங்களையும் அள்ளிவீசலாம். உலகம் அதைக் கடந்து நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. போர் உச்சத்தில் இருந்த போது, தமிழர்கள் கொல்லப்பட்ட போது வராத ஐ.நா. செயலாளர் பான் கி மூன், எல்லாம் முடிந்த பிறகு இலங்கைக்கு விஜயம் செய்கிறார். இன்று பூகோள அரசியல் முற்றாக மாறி விட்ட நிலையில், பிரபாகரன் உயிரோடு இருந்தாலும், இறந்திருந்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கை இந்தியத் தரப்புக்கள் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஆளாளுக்குக் கறுவிக் கொண்டு நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருக்கையில் மறு புறத்தில் சிப்பாய்கள் காணாமற்போன விடயத்தில் மர்ம முடிச்சு அவிழும் சூழல் ஏற்பட்டிருப்பதாக இப்போது தெரியவருகின்றது. இலங்கைக் கடற்படையின் நான்கு சிப்பாய்கள் முல்லைத்தீவுக் கடலில் திடீரென மாயமாக மறைந்தமை, அதன் பின்னர் சில தினங்கள் கழித்து இராமேஸ்வரம் மீனவர்கள் நால்வர் இலங்கையின் நெடுந்தீவுக்கு அருகே காணாமற்போனமை போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் தமிழகத்திலும் மிகுந்த பரபரப்பான செய்திகளாக அடிபட்ட போதிலும், தமிழகத் தேர்தல் சுட்டுக்கு மத்தியில் அந்த விவகாரங்கள் அப்படியே அமுங்கித்தான் போயின. ஆனாலும், இந்த மர்ம மறைவுக்குப் பின்னால் கட்டவிழும…
-
- 0 replies
- 1.3k views
-
-
ராஜேந்திர சோழன் 1000 தமிழ்மகன் வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்... ''ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
சவுக்கு விருது [size=3]சவுக்கில் யாருக்கும் விருது கொடுக்கும் வழக்கம் இருந்தது இல்லை. திடீரென்று விருது வழங்க வேண்டும் என்று முடிவெடுத்ததற்கு வலுவான காரணம் உண்டு. ஒரு இனத்தின் மேன்மையை உயர்த்துகிறார் ஒருவர். ஒரு இனத்துக்காக வாழ்வையே அர்ப்பணிக்கிறார் ஒருவர். தன் உயிர், மூச்சு, ஆவி, அந்த ஆவியில் வெந்த இட்லி ஆகிய அனைத்தையும் தன் இனத்துக்காகவே தியாகம் செய்கிறார் ஒருவர். தனது இனம் அழியும்போது, அந்த இனத்தைக் காப்பதற்காக பணம், பதவி, தன் குடும்பம், சொத்து, தன் செல்வாக்கு அத்தனையையும் தியாகம் செய்கிறார் என்றால் அவருக்கு விருது வழங்காமல் இருந்தால், தமிழ் கூறும் நல்லுலகம் நம்மைப…
-
- 0 replies
- 1.3k views
-
-
‘தியாகி, ‘துரோகி’ என்ற இரு அந்தங்கள் Editorial / 2019 ஜனவரி 24 வியாழக்கிழமை, மு.ப. 12:31 Comments - 0 போர் முடிவடைந்து, பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், எம்மை நாமே கேட்ட வேண்டிய கேள்விகள் உள்ளன. அக்கேள்விகளை, மனச்சுத்தியுடன் கேட்க வேண்டும். அதற்கான பதில்களையும் தேட வேண்டும். இதைச் செய்வதாயின் எம்மை நாமே சுயவிமர்சனம் செய்தாக வேண்டும். சுயவிமர்சனத்துக்குத் தயாரில்லாத மனிதர்களிடமோ, சமூகத்திடமோ எதிர்பார்க்க அதிகம் இல்லை. இன்று விமர்சனத்துக்கோ, சுயவிமர்சனத்துக்கோ தயாரில்லாத சமூகமாக இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகமும் அதனிலும் மேலாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகமும் உள்ளது. முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டமும், அதற்கு முந்தைய தமிழ்த்தேசி…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தல் தொடர்பாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்னென்ன? இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தேர்வுசெய்யப்பட்டார். அப்போது இருந்த நாடாளுமன்றத்தில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மூன்று இடங்கள் மாத்திரமே இருந்ததால், புதிய சட்டங்களை இயற்றுவதில் சிக்கல் இருந்தது. இந்நிலையில், தான் ஜனாதிபதியாக பதவியேற்ற அடுத்த நாளே, அதாவது செப்டம்பர் 25ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நட…
-
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில் இந்தியா தன் நிலையை இந்த மூன்று தேசங்களோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளவேண்டும்: அமெரிக்கா, சீனா, ஜப்பான். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளின்படி, இந்த மூன்று தேசங்களுக்கு அடுத்தபடியாக இந்தியா மொத்த உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) நான்காவதாக இருக்கும் என்று தெரிகிறது. இந்த மூவரில் யாரோடு இந்தியா நெருக்கமான உறவு கொள்ளமுடியும்? அதன்மூலம் பயன் பெறமுடியும்? அடுத்த இருபது, முப்பது ஆண்டுகளில், இந்த நான்கு தேசங்களுள் இந்தியாவில்தான் ஏழைமை அதிகமாக இருக்கும். படிப்பறிவற்ற நிலை அதிகமாக இருக்கும். உள்நாட்டுக் குழப்பங்கள் அதிகமாக இருக்கும். ஊழல் அதிகமாக இருக்கும். ஆனால் முன்னேற்றத்துக்கும் புதுமைக்கும் வாய்ப்புகளும…
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களைச் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆளாக்கிவரும் சிங்களம், ஆரம்ப காலத்தில் தரப்படுத்தல் என்ற கொடுமையை திட்டமிட்டு புகுத்தி தமிழ் மாணவர்களை வதைத்தது. இலங்கை சுதந்திரமடைந்த காலப் பகுதியில் (1948) ஈழத்தமிழர்கள் கல்வியில் நன்கு சிறப்புற்று இருந்தார்கள். குறிப்பாக வடக்கில் பல கல்லூரிகள் நிறுவி, உயர் கல்வி பெற்று மேம்பட்டனர். தமிழர்கள் கல்விக்கு வழங்கிய முக்கியத்துவம், அவர்களின் புலமைசார் மரபு ஆகியவை அவர்கள் கல்வியில் சிறப்புற ஏதுவாக்கின. ஒப்பீட்டளவில் சிங்கள மாணவர்களை விட அதிகளவில் தமிழ் மாணவர்கள் உயர் கல்வி கற்றனர். இதைக் கண்டு பொறுக்காத சிங்கள ஆட்சியாளர்கள், இதை சீரற்ற ஒரு நிலையாகக் கருதினர். தமிழர் வாய்ப்புக்களை சிங்கள மாணவர்களுக்கு கைமாற்றுவதற்கு திட்டம் தீட்டினர். இ…
-
- 0 replies
- 1.3k views
-
-
நான்காம் கட்ட ஈழப்போர் தமிழருக்கு ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்பிலும் பார்க்க ஏமாற்றங்களே அதிகமாக காணப்படுகின்றது. சமாதனம் எனும் இருளுக்குள் ஆரம்பித்து போர் எனும் காட்டுத்தீயுள் தொலைந்து நிற்கிறது தேசியம். பழைய நம்பிக்கையீனஙகள், வழமையன கேள்விகள் ஆரம்பித்துவிட்டன. தேசியம் என்று ஒலித்த குரல்கள் எல்லாம் அடக்கிவாசிக்க தொடங்கிவிட்டன. உங்களை சுற்றி மீண்டும் ஒரு முறை பார்த்துக்கொள்ளுங்கள், உஙகளுக்கு வீரப்பிரதாப கதை சொன்னவர்கள் சட்டக்கதை சொல்லிகொண்டிருப்பர். குப்பி கடித்திடும் வீரம் தான் இல்லை, என்னை காக்கவென என்னை காத்தவர் கைக்கே விலங்கிடும் வெள்ளையனிடம், யாரைக் காக்க யாருக்கு இடுகிறாய் விலங்கு என்று தட்டிகேட்க கூட முடியவில்லை உனக்கு? மீண்டுமொருமுறை பொன்சேகா போகட்டும…
-
- 1 reply
- 1.3k views
-
-
சம்பந்தர் துரோகியா? நிராஜ் டேவிட் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வரலாறு பற்றியும், அதன் உருவாக்கத்தின் பின்னால் இருந்த உழைப்புக்கள் பற்றியும் கடந்த வாரம் இந்தப் பத்தியில் சற்று விரிவாக ஆராய்ந்திருந்தோம். சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இலங்கை ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், த.தே.கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றது. சுயநிர்ணய உரிமை, வடக்கு கிழக்கு இணைப்பு என்கின்ற கோரிக்கையின் அடிப்படையில் அந்த அமைப்பு தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது. இந்தத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையிலேயே தமிழ் மக்களை அரசியல் ரீதியாக வழிநடாத்த தகுதியானதா? தமிழ் தேசியக் கூட்டமைப்பே இன்று ஈழத் தமிழர்களின் உண்மையான அரசியல் பிரதிநிதிகளா? …
-
- 11 replies
- 1.3k views
-
-
ஏஞ்சல் தொலைக்காட்சியில் கடந்த 8-4-2014 அன்று இரவு 8.30 மணிக்கு அதுதான் இது என்ற நிகழ்ச்சியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தார் தமிழர்களின் வீடுதோறும் சென்று பணம், நகைகளை கொள்ளையடித்து பணம் ஈட்டினர். தெரு ரெளடிகளைப் போன்று பணத்திற்காக மக்களை மிரட்டினர் என வெளியானது. இதை அறிந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர், அதன் பொதுச்செயலாளர் ப.வேலுமணி தலைமையில் சுமார் 60 பேர் வில்லிவாக்கம் காவல்நிலையத்திற்குச் சென்று மேற்கண்ட தொலைக்காட்சி நிறுவனத் தலைவரை கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்தனர். அத்ன்படி வழக்கும் பதிவுச் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏஞ்சல் தொலைக்காட்சி நிறுவனத்திற்குள்ளே நுழைந்த தமிழர் எழுச்சி இயக்கத்தினர் கொடுத்த நெருக்கடியால், நிருவாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இற…
-
- 19 replies
- 1.3k views
-
-
ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை நீதியின் தோல்வி – மன்னிப்புச் சபை 4 Views தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை கைவிடுவதாக தெரிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கு கைவிடப்பட்டமை யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களிற்காக நீதியை வழங்குவதற்கு இலங்கை அதிகாரிகள் தவறியுள்ள இன்னுமொரு கவலை தரும் மைல்கல் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் ந…
-
- 1 reply
- 1.3k views
-
-
நிலா என்ற பகீரதி: முழுமையான பின்னணி! பிரான்ஸ் குடியுரிமையை கொண்ட முருகேசு பகீரதி என்ற பெண் அவரது எட்டு வயது குழந்தையுடன் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட விடயம் இப்பொழுது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் உயர்மட்ட தளபதியொருவரை கைது செய்துவிட்டதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு கொண்டிருக்க, தமிழ் ஊடகங்கள் வேறுவிதமாக செய்தி வெளியிட்டு கொண்டிருக்கின்றன. தமிழர்கள் மீதான அடக்குமுறை அல்லது ஆட்சிமாறிய பின்னரும் நிலைமைகள் மாறவில்லையென அவை கூறுகின்றன. இந்த அரசியல் விளையாட்டுக்குள் நுழையாமல், கைதான பகீரதியின் பின்னணிகளை மட்டும் அலசுவதே நமது நோக்கம். கைதான முருகேசு பகீரதி என்பவர் விடுதலைப்புலிகளின…
-
- 1 reply
- 1.3k views
-
-
முண்னணிப் போர் அரங்கில் பெண்கள் சண்டையிட விரும்பினால் அதைத் தடுக்க யாரல் முடியும். பண்பாட்டுத் தடைக் கற்கள் குறுக்கே நின்றன. இப்போது அவை படிப்படியாக அகற்றப்படுகின்றன. பெண்களை களமருத்துவ அணியில் சேர்த்தார்கள் பிறகு இராணுவ வாகன ஓட்டுநர்களாக இணைந்தார்கள். இவை ஆபத்தில்லாத பணிகள் அல்ல. அப்கானிஸ்தான் போரில் அமெரிக்கப் பெண்கள் களமருத்துவப் பிரிவிலும் கனரக வாகனம் ஒட்டும் பிரிவிலும் பங்காற்றுகிறார்கள் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், படுகாயம் அடைகிறார்கள் மேற்கு நாட்டவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. உலகெல்லம் சென்று களச் செய்திகளைத் திரட்டும் எனக்கு அப்கானிஸ்தான் அனுபவும் வித்தியாசமானது. ஏனென்றால் அது அமெரிக்க வெள்ளைப் பெண்கள் பங்குபற்றும் போர் களத்தில் காயப் படுவோரை அகற்றும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடாவின் பிரதான நகர்களில் ஒன்றான ரொரன்ரோவிலும் இன்று "வெல்க தமிழ்" நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந் நிகழ்வுகள் இன்று மாலை 5 மணிக்கு ஸ்காபுரோ ரவுன் சென்ரரினுள் உள்ள சிவிக் சென்ரரில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வுகள் பற்றிய முழுமையான விபரங்கள், மற்றும் வாகன ஒழுங்குகள் பற்றிய விபரங்களுக்கு கனேடிய தமிழ் வானொலியை கேட்க்கொள்ளுங்கள். (இணையம் அது தவிர நேரடியாக நிலக்கீழ் தொடர்ந்தினூடாக செல்ல முடியும். வெல்க தமிழ் பற்றிய சிறப்பு ஒலிபரப்பு இப்போழுது தொடக்கம் நாளை நன்பகல் 12 மணிவரை ஜெனிவாவிலிருந்தும், அதன் பின்னார் ஒட்டாவாhவிலிருந்தும், அதன் பின்னர் ரொரன்ரோவிலிருந்தும் நேரடி ஒலிபரப்பு நடைபெறவுள்ளன. ************************** ஜெனீவாவில் நடைபெறவுள்ள உலகத்தமிழினத்தில் உரத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஈழத்தமிழர் உரிமையும் நீதியற்ற உலகமும் ஈழத்தமிழர் உரிமை விவகாரத்தில் சர்வதேச மௌனம் அதிகமான அப்பாவி உயிர்களைப் பலியெடுத்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இணைந்து தலைவர் பிரபாவிற்கு (தமிழருக்கு) எதிராக போர் தொடுத்தது என்பதை நிரூபிப்பதற்கு சர்வதேச மௌனமும், உதவிகளும், இந்தியாவின் செயற்பாடுகளும் சாட்சியங்களாக இருக்கின்றன. இதை யாரும் சொல்லி விளங்கவேண்டியதில்லை. இலங்கை அரசாங்கத்தின் எந்தச் செயல்களும் மற்றைய காத்திரமான கண்டிப்புக்களுக்கு உட்படவில்லை. சிறுவரைப் படையில் சேர்த்தல் குற்றம் என்று சொல்பவர்கள். சிறுவர், சிறுமியர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என்று வகை தொகையாகக் கொல்வது எந்த வகைக் குற்றத்திலும் இடம் பெறாதா? கொன்றவர்கள் அவர்களை சார்ந்தவர்களாயிற்றே. சர்வதேச போர…
-
- 0 replies
- 1.3k views
-
-
வன்னியிலுள்ள பொது மக்களை வெளியேற அனுமதிக்காவிட்டால், விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத அமைப்பாக கருதபட்டு தடைசெய்யப்படுமென மஹிந்த தெரிவித்துள்ளார். ஒரு தலைப்பட்சமாக ஒப்பந்தத்தை கிழித்து, யுத்தத்தை அரசு ஆரம்பித்த பொழுதே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் செயற்பாடுகள் தடைசெய்யபட்டு விட்டன. 83லும் 98லும் தடை செய்தபோது, புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களளை அரசு காரணம் காட்டியது. அதேபோன்று வெளிச்சக்திகளின் அழுத்தத்தால் 87ல், 2002ல் போர் நிறுத்தம் ஏற்பட்டபோது, விடுதலைப் புலிகள் மீதான தடையை அரை மனதோடு நீக்கியது அரசு. ஆனாலும், இம் முறை மேற்கொள்ள உத்தேசித்துள்ள 'தடை' நகர்வில் பிராந்திய அரசியல் நகர்வொன்று பின்னிப் பிணைந்துள்ளது. தமிழ்நாட்டு அழுத்தத்தால், கொழும்…
-
- 0 replies
- 1.3k views
-
-
சீமானின் முகமூடி காணொளி இணைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 8 replies
- 1.3k views
-
-
http://www.dailyjaffna.com/2015/03/blog-post_2.html
-
- 10 replies
- 1.3k views
-
-
முதல் பாகம் படிப்பதற்கு இங்கே சொடுக்கவும் கி.மு.1000 ஆண்டை ஒட்டி மைய ஐரோப்பாவிலும், வட இத்தாலியிலும் வழங்கி வந்த மொழி எத்ருஸ்கன் ஆகும். அப்போது அங்குஇலத்தீன் மொழியும் கிடையாது. கிரேக்க மொழியும் கிடையாது. கிரேக்கர்களும் இலத்தீனியர்களும் குடியேறியவர்களே! எங்கிருந்துகுடியேறினர் என்பது இன்னும் அறுதியிடப்படாத ஆராய்ச்சியாகவே உள்ளது. கிரீட் தீவு என்பவர் பலர். எத்ருஸ்கன் மொழியோஇந்த இரண்டைக் காட்டிலும் பழமையானதாக ஆனால் இந்த இரண்டு மொழிகளுக்கும் தொடர்பற்றதாக இருந்தது. எனினும்திருவிட மொழியோடு எத்ருஸ்கன் மொழிக்குத் தொடர்பு இருக்கிறது. ஐரோப்பாவில் திருவிடமொழி எங்ஙனம் முளைத்தது? (1) திருவிடர்கள் குமரிக்கண்ட மக்கள். குமரிக்கண்டம் சிதையும்போது திருவிட மக்கள் உலகெங்கும் குடியேற…
-
- 1 reply
- 1.3k views
-