Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் பதவி!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும், ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் பதவி..

ஷீலாவுடன் ஜெ. முக்கிய ஆலோசனை!

 

தமிழக முதல்வர் பதவியை மீண்டும் ஓ.பன்னீர் செல்வத்திடமே கொடுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாக புதிய செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே நேற்றும், தீர்ப்புக்கு முன்பு சென்னையில் வைத்தும் ஜெயலலிதா அவருடன் ஆலோசனை நடத்தி விட்டதாக கூறப்படுகிறது.

 

28-tamilnadu-finance-minister-o-panneers

 

மேலும் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தவே முன்னாள் தலைமைச் செயலாளரும், முதல்வரின் செயலாளராக தற்போது இருந்து வருபவருமான ஷீலா பாலகிருஷ்ணனை அவர் பெங்களூருக்கு அழைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

ஜெயலலிதா எதையும் திட்டமிட்டு செய்பவர். தீர்ப்பு சாதகமாக வந்தால் என்ன செய்ய வேண்டும், பாதகமாகப் போனால் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் ஏற்கனவே திட்டமிட்டு விட்டதாக கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்.

 

முன்பு 2001ம் ஆண்டு தான் பதவியில் இருந்து விலகியபோது முதல்வராக நியமித்த ஓ.பன்னீர் செல்வத்தையே மீண்டும் முதல்வராக நியமிக்க அவர் தீர்மானித்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இப்போதைக்கு அவர் மட்டுமே ஜெயலலிதாவின் முழுமையான விசுவாசியாக இருப்பவர் என்பதால் அவரையே மீண்டும் முதல்வராக அமர்த்த ஜெயலலிதா விரும்புவதாக தெரிகிறது.

நத்தம் விஸ்வநாதன், செந்தில் பாலாஜி, நவநீத கிருஷ்ணன் ஆகியோரை அவர் முழுமையாக நம்பவில்லை என்றும் சொல்கிறார்கள். அவர்களுக்கு ஓ.பி.எஸ் எவ்வளவோ மேல் என்றும் ஜெயலலிதா உறுதியாக நம்புகிறாராம்.

 

அதேசமயம், ஷீலா பாலகிருஷ்ணனை முதல்வராக்கினால், அவரால் சட்டசபையில் எதிர்க்கட்சிகளை அரசியல்வாதி போல சந்திப்பது சிரமமாக இருக்கும் என்றும் ஜெயலலிதா யோசிப்பதாக கூறப்படுகிறது. அதை விட முக்கியமாக கேரளாவைச் சேர்ந்தவர் ஷீலா என்பதும் கூட அவருக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த ஷீலாவை முதல்வர் பதவியில் அமர்த்தினால் அது முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி விவசாயிகளிடம் தான் சம்பாதித்து வைத்துள்ள மிக நல்ல பெயரை பாதித்து விடலாம் என்ற யோசனையும் ஜெயலலிதாவுக்கு உள்ளதாம்.

 

எனவே ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்கி விட்டு, அவருக்கு உதவியாக ஷீலாவை அவர் நியமிக்கலாம் என்று லேட்டஸ்டாக வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

எல்லாம் இன்று மாலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்குப் பின்னர் தெளிவாகத் தெரிந்து விடும்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த முதல்வர் யார்? – பட்டியலில் ஆறு பேர், யார் என்று இன்று தெரியும்.

[sunday 2014-09-28 09:00]
sheela-panneerselvam-senthil-balaji1-300

சொத்து குவிப்பு வழக்கில் முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பளித்ததை தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் உட்பட 6 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதில், முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று தீர்ப்பளித்த நீதிபதி மைக்கேல் குன்ஹா 4 பேருக்கும் 4 ஆண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதித்துள்ளார். இதையடுத்து, முதல்வர் ஜெயலலிதா பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

  

இதையடுத்து, புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கடந்த 2001ல் வழக்குகளில் சிக்கி ஜெயலலிதா முதல்வர் பதவியை இழந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி வகித்தார். இந்த முறையும் அவருக்கு முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்ததும், கோர்ட் அறையில் இருந்த ஒ.பன்னீர்செல்வத்துடன் ஜெயலலிதா சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இதனால், பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி உறுதி என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், மாநிலங்களவை எம்.பி. நவநீதகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன், அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

அதிமுக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் அனைவரும் பெங்களூரில் முகாமிட்டுள்ளனர். ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, இவர்கள் இன்று காலை சென்னை திரும்ப உள்ளனர். அதிமுக உயர்மட்ட குழு கூட்டம் சென்னையில் கூடி புதிய முதல்வர் பெயரை இறுதி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது. மூத்த அமைச்சர் ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் இக்கூட்டம் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் ஜெயலலிதாவால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒருவர் முதல்வராக அறிவிக்கப்பட உள்ளார். அதன் பிறகு இது குறித்த தகவல் கவர்னர் ரோசையாவுக்கு தெரிவிக்கப்படும். புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் புதிய அமைச்சர்கள் யார், யார் என்ற பட்டியல் அறிவிக்கப்படும். அமைச்சரவை பட்டியலில் ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்தவர்களுக்கு அதே இலாகா ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு, சிலர் புதிதாக அமைச்சரவை பட்டியலில் இடம் பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இன்று கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அவசர அவசரமாக எம்எல்ஏக்கள் சென்னை விரைந்துள்ளனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=117656&category=IndianNews&language=tamil

ஷீலா துணை CM மாம், தமிழ்தேயத்தின் கழுத்தில் கத்தி  எங்க போகபோகுதோ .


ஒரு தமிழர் முதல்வர் ஆகிவிட்டார் அதனால் நாம் தமிழர் கட்சி கலைக்கப்படுமா  :icon_idea:

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ரயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார்.

பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=111372

Edited by துளசி

10711021_894170677262250_805949631132867

தமிழ்நாடு முதலமைச்சராக தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் எம்.எல்.ஏவும், முன்னாள் நிதியமைச்சருமான ஒச்சாண்டித்தேவர் பன்னீர்செல்வம் பதவியேற்றார். இது இவரது இரண்டாவது முதல்வர் பதவிக்காலமாகும். முக்குலத்தோர் சமுதாயத்தைச்சேர்ந்த இவர் பக்தவக்சலம் அவர்களின் பின் முதல்வராகும் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
10670232_779484092098331_141143416620207

 

  • கருத்துக்கள உறவுகள்

மனுசனுக்கு உடம்பெல்லாம் மச்சம் போல கிடக்கு......சும்மாவிருந்தே மு.அமைச்சராகி விடுவார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடக்கம் முதலமைச்சருள் உய்க்கும்

 

 

தமிழினத்தை ஒரு மலையாளி ஒரு போதும் ஆளக்கூடாது என்பதில் தமிழர்கள் உறுதியாக நின்றனர். அதன் எதிரொலியாக பன்னீர் செல்வம் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. பன்னீர் செல்வம் ஒரு பொம்மை முதல்வராக செயல்பட்டாலும் உண்மையில் அதிமுக உறுப்பினர்களுள் அவர் ஒரு நல்ல தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். வேற்றின மக்களிடம் ஆட்சி அதிகாரம் செல்லாமல் ஒரு தமிழரிடம் ஆட்சிப் பொறுப்பு வந்ததில் மகிழ்ச்சி. புதிய முதல்வருக்கு நம் வாழ்த்துகள்.

அடுத்தது, ஜெயாவின் இந்த வீழ்ச்சிக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழினத்திற்கு எதிரான சில கொள்கைகளை ஜெயலலிதா கொண்டிருந்தாலும் தமிழர் நாட்டின் உரிமைகளை இந்திய அரசிடம் எளிதில் அவர் விட்டுக் கொடுக்கவில்லை. இந்திய அரசின் தொடர் தொல்லைகளுக்கு அவர் எதிர்வினை ஆற்றிக் கொண்டே தான் இருந்தார். பாஜக அரசும் தொடர்ந்து தமிழினத்திற்கு பல துன்பங்களை கொடுத்துக் கொண்டே தான் வந்துள்ளது. இந்த நிலையில் தமிழன விரோத இந்திய அரசை எதிர்க்கும் ஒரு வலுவான முதல்வர் நமக்கு தேவைப்படுகிறார். இல்லையெனில் நம் மொழியையும், நம் இனத்தையும் ஒட்டுமொத்தமாக பாஜக அரசு அழித்துவிடும் அபாயம் உள்ளது. தமிழகத்தின் உரிமைகளை ஒரு போதும் விட்டுக் கொடுக்காத மன உறுதியை புதிய முதல்வர் பன்னீர் செல்வம் பெற்றிருக்க வேண்டும். வரும் நாட்களில் தமிழகத்திற்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கிறது, அடுத்த தேர்தல் வரும்வரை பன்னீர் செல்வம் தமிழர் நாட்டை பாதுகாக்க மிகுந்த விழிப்புடன் செயல்படுதல் வேண்டும். அதற்காக அவருக்கு தமிழின மக்களும் துணையாக இருத்தல் வேண்டும்.

2016 தேர்தலில் தமிழினத்திற்கு ஆதரவான சக்திகளும், தமிழ்த் தேசிய சக்திகளும், திராவிட அரசியலை எதிர்க்கும் சக்திகளும் ஒன்றிணைந்து தமிழின விரோத கட்சிகளையும், இந்திய தேசிய கட்சிகளை தமிழ் மண்ணில் இருந்து துரத்தி அடிக்க வேண்டும். அதற்கான வேலைகளை இப்போதே தமிழர்கள் நாம் தொடங்குவோம். தமிழினம் காக்க ஒற்றுமையுடன் செயல்படுவோம்.

இராச்குமார் பழனிசாமி

(Facebook)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
vijaykanth.jpg28-o-pannerselvam-1-600.jpg

 

இதுவரை.... ஜெயலலிதா இருந்த சட்டசபைக்கு போகாமல், ஒழித்துத் திரிந்த... எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த்,
இனி... பன்னீர்ச் செல்வம் உள்ள, சட்டசபைக்கு துணிந்து... போவர் என்று நம்புகின்றேன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.25 மணியளவில் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிமையான பதவியேற்பு விழாவின்போது அவருக்கு ஆளுநர் ரோசய்யா, பதவிப்பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். பதவிப்பிரமாண சத்தியப் பிரமாணத்தை வாசித்தபோது அவரது குரல் தழுதழுத்தபடி இருந்தது. அத்துடன் ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். எனினும் இந்த வைபவம் அரச தொலைக்காட்சியான பொதிகை ஊடாகக் கூட ஒளிபரப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. - See more at: http://malarum.com/article/tam/2014/09/29/5849/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81-.html#sthash.2GeJgG8O.dpuf
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு

 
op_2131550f.jpg
பதவியேற்பு விழாவில் கண்ணீர்விட்ட ஓ.பன்னீர்செல்வம்: படம்: எஸ்.ஆர். ரகுநாதன்

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 1.25 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார்.

ஆளுநர் மாளிகையில், எளிமையான முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.பன்னீர்செல்வத்துடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்களுக்கோ, முக்கியப் பிரமுகர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை.

அமைச்சரவை இலாகாக்களில் மாற்றம் ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

photo_3_2131621a.jpg

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். | படம்: பி.அரவிந்த் குமார்

கண்ணீர் மல்க பதவியேற்பு

ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான நிகழ்ச்சியில் தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், பதவியேற்பு நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து அவர் அழுத வண்ணமே இருக்கையில் அமர்ந்திருந்தார்.

பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார். மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் பலரும் கண்ணீர் சிந்தினர்.

subbu_2131580a.jpg

பதவியேற்பின்போது கண்ணீர்விட்ட அமைச்சர் முக்கூர் என்.சுப்ரமணியன். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டிருந்தபோதே தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவராகத் தேம்பித் தேம்பி அழுதபடி இருந்தார் பா.வளர்மதி.

அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். பா.வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார்.

kanneee1_2131561a.jpg

பதவியேற்பு விழாவில் கண்ணீர் மல்கிய அமைச்சர்கள். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

2-வது முறையாக முதல்வரானார்:

டான்சி வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வராக பதவியேற்றது செல்லாது என கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, ஜெயலலிதா பதவி இழந்தார். அப்போது, ஓ.பன்னீர் செல்வம்தான் புதிய முதல்வராக பதவியேற்றார்.

அதேபோல, இப்போது சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவியிழந்த நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2-வது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

முதல்வர் பொறுப்பேற்றார்:

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச்செயலகத்தில் முறையாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை மரியாதை நிமித்தமாக தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் சந்தித்தார்.

பெங்களூர் விரைகிறார்:

தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஓ.பன்னீர்செல்வம் தலைமைச் செயலகம் சென்று முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். அங்கு கையெழுத்திட்ட பின்னர் இன்று மாலை 4.45 மணி விமானத்தில் பெங்களூர் செல்கிறார். அவருடன் அமைச்சர்களும் பெங்களூர் செல்கின்றனர். முதல்வராக பதவியேற்ற பின்னர் அவரது முதல் பயணம் பெங்களூர் நோக்கி உள்ளது. தீர்ப்புக்குப் பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலைதான் ஓ.பன்னீர்செல்வம் சென்னை திரும்பினார்.

ஒருமனதாக தேர்வு:

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைக்க வருமாறு பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பையடுத்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, ஜெயலலிதாவின் முதல்வர் பதவியும், சட்டப்பேரவை உறுப்பினர் பதவியும் தானாகவே பறி போனது. முதல்வர் பதவி காலியானதால், அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி இழந்தது.

இதையடுத்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக அதிமுக எம்.எல்.ஏ.க்களின் அவசரக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.20 மணிக்கு தொடங்கியது. இதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மட்டு மின்றி, வழக்கத்துக்கு மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சியின் மூத்த தலைவர்கள், தேமுதிக அதிருப்தி உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன், முன்னாள் டிஜிபி நடராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

பெங்களூரில் இருந்து ஜெயலலிதா கொடுத்தனுப்பிய ஒரு கடிதத்தை கூட்டத்தில் படித்துக் காட்டியதாக கூறப்படுகிறது. பின்னர், அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல் வம் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டார். மாலை 4.30 மணி அளவில் கூட்டம் முடிந்ததும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச் சாமி உள்ளிட்டோர் போயஸ் கார்டனுக்கு சென்றனர். 6 மணி வரை அங்கு ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் ராஜ்பவனுக்கு புறப்பட்டனர்.

ராஜ்பவனில் ஆளுநர் கே.ரோசய்யாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவையும் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தையும் அளித்தார். சுமார் 10 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.

இதையடுத்து, ஆட்சி அமைக்க வருமாறு ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்தார். புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வம் தமிழகத்தின் 28-வது முதல்வரானார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6457528.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அழுதாலும் பதவியை ஏற்றுக்கொண்டார்களே..  :D

எல்லாரும் ரொம்ப ஓவரா சீன போடுறாங்க.... பார்க்க ரொம்ப கேவலமா இருக்கு அவர்களது தாய்/தகப்பன் இறந்ததுக்கு கூட இப்படி கண்ணீர் சிந்தியிருப்பானுன்களா???

  • கருத்துக்கள உறவுகள்

 

vijaykanth.jpg28-o-pannerselvam-1-600.jpg

 

இதுவரை.... ஜெயலலிதா இருந்த சட்டசபைக்கு போகாமல், ஒழித்துத் திரிந்த... எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த்,

இனி... பன்னீர்ச் செல்வம் உள்ள, சட்டசபைக்கு துணிந்து... போவர் என்று நம்புகின்றேன். :)

 

சட்டசபை வளாகத்திலை விகாந் வரும்போது இங்கிலீசிலை அறிவிப்புகளை செய்தால் மனிசன் மறுபடியும் பாய்ஞ்சு ஓடியிடும். :)

  • கருத்துக்கள உறவுகள்

'இந்திய தேசியம்' மற்றும் 'இந்து தேசியம்' அமைக்கிறேன் என வடக்கத்திய ஊடகங்களின் ஆசியோடு அசுர பலத்தில் இருக்கும் மோடிக்கும் மூடி போட்டு மிகச் சரியான பதிலடி கொடுத்து தடுப்பதற்கு தமிழநாட்டில் தற்பொழுது அதே பலத்துடன் இருக்கும் ஜெயலலிதாவை விட்டால் வேறு யாரும் இல்லை. தமிழகத்தின் தனித் தன்மை பாதுகாக்கப் படவேண்டும். 2009 முந்தைய தமிழின செயல்பாடுகளை ஒப்பிடுகையில் கருணாதியை விட ஜெயலலிதாவின் சில நடவடிக்கைகள் தற்பொழுது பரவாயில்லை.

அந்தவகையில் ஜெவை பாராட்டலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.