Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"அயன்" திரைப்படத்தைப் புறக்கணிப்போமா?

Featured Replies

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பது பற்றி இங்கே களத்தில் விவாதித்திருக்கின்றோம். பலர் புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கின்றீர்கள்.

சன் தொலைக்காட்சியை புறக்கணிப்பதன் ஊடாக சன் நிறுவனத்திற்கு ஏற்படும் இழப்பை விட, அது தயாரிக்கும் படங்களை புறக்கணிப்பது அதிக இழப்பை அதற்குக் கொடுக்கும்.

அடுத்ததாக சன் தயாரிப்பில் சூர்யா நடிக்கும் அயன் படம் வெளிவரவுள்ளது. இந்தப் படத்தை புலம்பெயர் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்து சன் தொலைக்காட்சிக்கு எங்கள் உணர்வுகளை தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்.

இதை நாம் வெற்றிகரமாக செய்தால், அது நிச்சயமாக ஒரு தாக்கத்தை கொடுக்கும்.

"அயன்" படத்தை புறக்கணிப்பதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்களா?

  • Replies 146
  • Views 15.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக

சபேசன், காட்டாறு, குட்டியைத்தவிர மீதி எல்லோரும் சூர்யாவின் விசிறியள் போல் உள்ளது? :D

நான் தமிழ்படம் பார்த் 3 வருடங்கள். இருந்தும் இம்முயற்ச்சிக்கு எனது ஆதரவுகள்!

நான் தமிழ் படங்கள் பார்ப்பது இல்லை.. பாட்டு மட்டுமே கேட்பது... அதுகும் பழைய பாடல்.. உங்கள் முயற்சிக்கு என் மனபுர்வமான ஆதரவு.. :)

இப்படித்தான் அஜித்தின் கேவலமான படம் ஒண்றை புறக்கணிக்கிறோம் என்று எங்களவர்கள் தேவை இல்லாத விளம்பரத்தை ஓட்டி காட்டினர்... படு தோல்வி அடைந்து இருக்க வேண்டிய அந்த படம் தயாரிப்பாளருக்கு விளம்பர செலவை குறைத்து ஓரளவு குறைந்த நட்டத்தையே கொடுத்தது.....!!

Edited by தயா

  • தொடங்கியவர்

எச்சரிக்கை :- உங்களின் உளவுரனை குறிவைத்தும் எதிரி தாக்குதல் நடத்தி கொண்டு இருக்கிறான்...

கவனமாக நகருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடைசியாக திரையரங்கில் திரைப்படம் பார்த்தது எப்ப எண்டு ஞாபகமே இல்லை..! இருந்தாலும் வாழ்த்துகள்..!!

படம் எப்ப ரிலீஸ்? முதல் நாளிலேயே பார்த்து விட்டுதான் மறு வேலை...!!

பகுத்தறிவு சிங்கங்கள் எல்லாம், படம் புறக்கணிப்பு என்ற போராட்டத்தில இறங்கும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கான மக்கள் போராட்டம் விரிவடைந்து போயிருக்கு

கவனம்: எமக்கான முக்கிய எதிரிகளே நாங்கள் தான்... பார்த்து வரவும்

  • தொடங்கியவர்

இங்கே அயன் படத்தை புறக்கணிப்பதை ஒரு வினாவாக வைத்திருக்கின்றேன். நீங்கள் தருகின்ற கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றிய முடிவை எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் எமக்கு செய்கின்ற தீங்குகள் பற்றி இங்கே நிறையப் பேசி விட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது பற்றி எம்மில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அது நடக்கப் போவது இல்லை. அப்படி நடக்காமல் போவதற்கு சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றனவும் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிகள் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தீங்குகளை எமக்கு செய்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டப் போகின்றோம்?

கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பது அனுபவம் கண்ட உண்மை.

எதிரியோடும், எதிரிக்கு துணை போகின்றவர்களோடும் சமரசம் செய்து கொள்வதை எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

இங்கே சூர்யாவின் படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசவில்லை. சன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தை புறக்கணித்து, சன் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எம்முடைய எதிர்ப்பை காட்டுவது பற்றிப் பேசுகிறேன்.

நாங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தமிழ்நாட்டை சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய திரைப்படம் ஒன்றைப் புறக்கணித்துக் காட்டுவதுதான் சிறந்த வழி.

உலக நாடுகள் எமது போரட்டத்துக்கு எதிராகவே நடந்து கொள்கிறார்கள்.

அப்படியான

அனைத்து நாடுகளையும் எதிர்ப்போம்.

அவர்களிடமிருந்து பெற்றுள்ள அனைத்து வசதி வாய்ப்புகளையும் உதறித் தள்ளுவோம்.

அகதி அந்தஸ்த்து : குடியுரிமைகளைக் கூட துறப்போம்.

வாறீங்களா சபேசன்?

இன்னும் யார் தயார்?

Edited by Thalaivan

  • தொடங்கியவர்

தலைவன்,

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

ஆனால் எமது முளையை மழுங்கடிக்கும், எமது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்யும், எமது எதிரிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பது எந்த வகையிலும் சரியாக இருக்க முடியாது.

சன் நிறுவனத்திற்கு நாம் எப்படி எங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகின்றோம்? இதுவரை சன் நிறுவனம் வாங்கிய படங்களில் அதிக பொருட் செலவில் உருவானது "அயன்". இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.

எங்கள் எதிர்ப்பை வலுவான முறையில் தெரியப்படுத்துவோம்.

இயக்குணர் மணிவண்ணன் கூட ஈழத்தழிழருக்காகக் குரல் கொடுத்தார், நடிகர் சூரியா எம் மக்களுக்காக என்ன செய்தார் என்று ஆதரவு வழங்கத் துடிக்கிறீர்கள்?

படம் பார்கக் குடுக்கும் காசில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள், அவர்கள் உயிர் மட்டுமல்ல உங்கள் மனமும் நிறையும்.

படம் எப்ப ரிலீஸ்? முதல் நாளிலேயே பார்த்து விட்டுதான் மறு வேலை...!!

பகுத்தறிவு சிங்கங்கள் எல்லாம், படம் புறக்கணிப்பு என்ற போராட்டத்தில இறங்கும் அளவுக்கு தமிழீழ விடுதலைக்கான மக்கள் போராட்டம் விரிவடைந்து போயிருக்கு

கவனம்: எமக்கான முக்கிய எதிரிகளே நாங்கள் தான்... பார்த்து வரவும்

புலி எண்டு சொன்னால் குறைஞ்சா போவீங்கள்....??

நேற்று ஒரு அண்னையை கண்டன்.. லண்டனிலை பல கடைகள் வைத்து இருப்பவர்... பொருட்கள் புறக்கணிப்பை பற்றி அவரிட்ட கேட்டன்... அவர் சொன்னார் நான் நிப்பாட்டி கன காலம் ஆச்சுது... ஆனால் சனம் வந்து சாமான் வாங்கி போட்டு சொல்லுதாம் தம்பி கொஞ்சம் பொறுங்கோ சாமானை இங்கை விட்டு போட்டு ஒருக்கா வெளிய போட்டு வாறன் எண்டு போகுதாம்... கேட்டால் அங்கர் பால்மா முடிஞ்சு போச்சுது அதுதான் பக்கத்து கட்டையிலை வாங்கி போட்டு வாறன் எண்று...

இப்படியே போனால் நாங்கள் எங்கட வியாபாரத்தை ஒட்டு குழுக்களின் கடைகளுக்கும், சிங்கள வியாபாரிகளிடமும் இழக்க வேண்டி இருக்கும் எண்று அவர் சொன்னதுதான் பஞ்ச்... சிங்கள , தமிழ் ஆக்கள் நல்லா திட்டம் போட்டு இலங்கை சாஅமானுக்கு எண்று மட்டும் கடைகளை திறந்தால் வியாபாரம் அள்ளலாம் எனும் நிலைமைக்கு தான் நிலமை போய் கொண்டு இருக்கு என்கிறார்...

இப்படி இருக்குது எங்கட புறக்கணிப்புகள்... எதை தொடங்கினாலும் அதை முடிக்க மாட்டினம்... அதுக்கை அடுத்ததுக்கை போக வேணும்... இப்படியே எல்லாத்தையும் கெடுத்து கொண்டு எதையும் முடிக்காமல் அரை குறையாய் விடுவது...

சிலை அரை குறையளுக்கு சொன்னாலும் புரியாது சொந்தமாகவும் புரியாது... இப்படி இருக்கு தமிழர் நிலை...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் சினிமா, தமிழ் நாட்டு தொலைக்காட்சிகள் ,,மற்றும் தி.மு.க. இவைகளை குறை சொன்ன யாழில சிலபேருக்கு கோவம் பொத்துக்கொண்டு வருகுது... என் எண்டுதான் எனக்கு விழங்கேல்லை...யாரவது நீண்டகால உறுப்பினர் கொஞ்சம் விளக்கம் தாறியளோ?

வளர்த்தால் குடும்பி சிரைச்சால் மொட்டை..! இதுதான் சிலருக்கு தெரியுதே அழகாக வெட்டி சீவ முடியும் எண்டது புரிவதில்லையே....!! ஏன் அப்படி எண்டு உங்களுக்கு தெரிஞ்சால் சொல்லுங்கோவன்...

Edited by தயா

மேலும் பல கட்டுரைகளுக்கு

http://www.webeelam.net

:) எல்லாம் விளம்பரம் மயம்....

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் கருத்துக்கு ஆதரவு அளிக்கிறேன்.

கடந்த 2 வருடங்களாக திரையரங்குகளில் சென்று திரைப்படம் பார்ப்பது விருப்பமில்லாமல் இருக்கிறது. இதனால் திரையரங்கில் சென்று படம் பார்ப்பதை தவிர்க்கிறேன். இராமேஸ்வரம் என்ற படம் வந்தபோது ஈழத்துக்கதை என்று தெரிந்தவர் சொல்லக் கேட்டுப் போய் பார்த்தேன். அயனோ, கியனோ எதுவந்தாலும் இப்ப திரையரங்குகளுக்கு செல்வதைத் தவிர்க்கிறேன். சிறுவனாக இருந்த போது திரைப்படம் பார்ப்பது என்றால் நல்ல விருப்பம். இப்ப வயது போகப்போக இவ்விருப்பம் குறைந்து விட்டது. அத்துடன் சன் தொலைக்காட்சி தொடர்ந்து புறக்கணித்து வருபவன். கலைஞர் தொலைக்காட்சி அவுஸ்திரெலியாவில் ஒளிபரப்பாவதில்லை.

ஆகக் குறைந்தது திரையரங்குக்குச் சென்று பார்ப்பதையும் ஒரிஜினல் டிவிடிக்களை வாங்கிப் பார்ப்பதையுமாவது தவிர்த்துக் கொள்ளுங்கள். வேண்டுமானால் கள்ளக் கொப்பியில் பாருங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சன் திரைப்படத்தை புறக்கணிப்பதற்கு சிறந்த வழி அதை திரையிடுபவனிடம் ( அவனும் தமிழன் தானே) பேசி, வரும் தேர்தல் வரைக்குமாவது திரையிடுவதை நிறுத்த சொல்லலாம்

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பை சன் நிறுவனம் தயாரிக்கும் 'அயன்' திரைப்படத்தைப் புறக்கணிப்போமா? என்று எழுதினால் நன்றாக இருக்கும் சபேசன்.

இங்கே அயன் படத்தை புறக்கணிப்பதை ஒரு வினாவாக வைத்திருக்கின்றேன். நீங்கள் தருகின்ற கருத்துகளின் அடிப்படையில் இதைப் பற்றிய முடிவை எடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் எமக்கு செய்கின்ற தீங்குகள் பற்றி இங்கே நிறையப் பேசி விட்டோம்.

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தோற்கடிப்பது பற்றி எம்மில் பலர் கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அது நடக்கப் போவது இல்லை. அப்படி நடக்காமல் போவதற்கு சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றனவும் முக்கிய காரணமாக இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிகள் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ தீங்குகளை எமக்கு செய்து கொண்டிருக்கின்றன.

எங்களுடைய எதிர்ப்பை நாம் எப்படிக் காட்டப் போகின்றோம்?

கடிதங்கள் எழுதிப் பயன் இல்லை என்பது அனுபவம் கண்ட உண்மை.

எதிரியோடும், எதிரிக்கு துணை போகின்றவர்களோடும் சமரசம் செய்து கொள்வதை எப்பொழுது நிறுத்தப் போகின்றோம்?

இங்கே சூர்யாவின் படத்தை புறக்கணிப்பது பற்றிப் பேசவில்லை. சன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தை புறக்கணித்து, சன் நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு எம்முடைய எதிர்ப்பை காட்டுவது பற்றிப் பேசுகிறேன்.

நாங்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தமிழ்நாட்டை சென்றடைவதாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு பெரிய திரைப்படம் ஒன்றைப் புறக்கணித்துக் காட்டுவதுதான் சிறந்த வழி.

சபேசன் உங்களைப் போன்ற தெளிவாக, பிரச்சனைகளை சரியான திசையில் இருந்து பார்த்து எழுதக் கூடியவர்கள் கூட வெறும் சினிமா புறக்கணிப்பு என்று இறங்குவதை பார்க்க கவலையாக இருக்கு.

இந்திய, முக்கியமாக தமிழக சினிமா என்பதே பார்பனியத்தினையும் அதன் இருப்பையும் பேண முயலும் ஒரு ஊடகம். அதன் மூலம் இந்திய பெரும் தேசியத்தின் வல்லாதிக்கத்தினை பார்பனியத்தின் ஊடாக தொடர்ந்து பேணுகின்றது. அது மக்களின் சினிமா அல்ல.

சன் ரீவியும் சன் நிறுவனத்தின் அனைத்து ஊடகங்களும் (கலாநிதி மாறனின் ஊடகங்கள்) பார்ப்பனியத்திற்கு காவடி தூக்கும் பங்காளிகள் தான். என்று தி. மு. க என்ற பெயரில் மட்டுமே திராவிடத்தினை தாங்கி நிற்கும் கட்சி, காங்கிரஸ் எனும் ஆரிய கட்சிக்கு பல்லாக்கு தூக்கியதோ அன்றில் இருந்தே அது தமிழ் தேசியத்திற்கு எதிராகத் தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது (இந்திரா அம்மையாரை நேருவின் மகளே என்று வாழ்த்திய காலம் தொடக்கம்) . அப்படியான பின்புலத்தினைக் கொண்ட சன் ரீவியினையும் அதன் சினிமாவையும் நாம் வெறும் நட்டத்தினை ஏற்படுத்தி காட்டுவோம் என்ற பெயரில் மாத்திரமே எதிர்ப்பது வேடிக்கையானது.

முதலில் எமது எதிரி யார் என்பதை புரிந்து கொள்வோம். எதிரி பல்லாக்கு தூக்கிகள் அல்ல. இந்திய பெரும் தேசியவாதமும் அதனின் ஒரு அங்கமாக இருந்து அதனை பேணிவரும் இந்திய சினிமாவும் தான். ஒரு 'அயனை' எதிர்ப்பதால் இந்த இந்து/இந்திய/ பார்பனிய தேசிய வாதத்தில் எந்த ஒரு ஓட்டையும் வந்துவிடப் போவதில்லை. மாறாக எம் ஈழ / தமிழ் சமூகத்தில் இருக்கும் ஓட்டைகள் தான் மேலும் தெளிவாக வெளித் தெரியும்.

எம் பிரதான எதிரி இந்திய வல்லாதிக்க வெறியும் அதன் முதுகெழும்பான பார்பனியமும் தான்.கலாநிதி மாறனும் சன் நிறுவனமும் அதன் கோடிக்கணக்கான கண்ணிகளில் ஒன்று.. அவ்வளவு தான், நாம் தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்க முயல்கின்றோம்

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் பெரிதாக தமிழ் படங்கள் திரையில் பார்ப்பதில்லை ஆனால் இந்த படம் வெளிவந்தவுடன் நிச்சயமாக பார்ப்பேன்.

தலைவன்,

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

ஆனால் எமது முளையை மழுங்கடிக்கும், எமது போராட்டத்தை இருட்டடிப்புச் செய்யும், எமது எதிரிகளுக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நாம் தயாராக இல்லை என்பது எந்த வகையிலும் சரியாக இருக்க முடியாது.

சன் நிறுவனத்திற்கு நாம் எப்படி எங்கள் எதிர்ப்பைக் காட்டப் போகின்றோம்? இதுவரை சன் நிறுவனம் வாங்கிய படங்களில் அதிக பொருட் செலவில் உருவானது "அயன்". இது ஒரு அருமையான சந்தர்ப்பம்.

எங்கள் எதிர்ப்பை வலுவான முறையில் தெரியப்படுத்துவோம்.

சபேசன்

இங்கே உங்கள் பிரச்சனை இந்திய சினிமா எதிர்ப்போ

தமிழர் பிரச்சனைகளை சண் - கலைஞர் எதிர்ப்போ அல்ல

உண்மையிலேயே ஒரு தொலைக் காட்சியின் வளர்ச்சிக்காக நீங்கள் தேசியத்தை பாவிக்க முயல்கிறீர்கள்.

நான் ஏற்கனவே கூட இது குறித்து எழுதினேன்.

உண்மைகள் கசக்கும்.

இல்லாவிட்டால் இது எதிர்காலத்தில் நமது பயணத்துக்கு தடையாகும் என்றால்

உடனே இவன் எமக்கு எதிரானவன் என்ற கருத்தே நம்மிடம் உள்ளது.

எல்லாத்துக்கும் ஓம் போட வேண்டும்.

இதுதான் எமது குணாம்சம்.

உலக நாடுகளுக்கு எதிராக நாம் ஊர்வலம் போகின்றோம்:. அவர்களின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துகின்றோம். வேறு பல வழிகளில் நாம் எமது எதிர்ப்பைக் காட்டுகின்றோம்.

தாயகம் என்று வருகின்ற பொழுது, எமக்கு அகதி அந்தஸ்த்து தந்து, குடியுரிமை தந்து எங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்ட உலக நாடுகளுக்கே நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்க பின்னிற்கவில்லை.

இதே போல் இந்தியாவில்

அதுவும் தமிழகத்தில் மேற்கத்தைய நாடுகளை விட அதிகமான ஈழத்து மக்கள் வாழ்கிறார்கள்.

அகதிகளாக வாழ்வதை விட அங்கே சும்மா வாழ்கிறார்கள்.

இல்லை என்று யாராலும் சொல்ல முடியுமா?

அவர்களுக்கும் நீங்கள் பிரச்சனை கொடுக்கப் போகிறீர்கள்.

இங்கே நாம் தமிழீழத்தைச் சேர்ந்தவர்கள்தான் போகிறோம்.

அங்கே மட்டுமல்ல (தமிழகம் : பம்பாய் . டெல்லி)

அமெரிக்கா : மலேசியா போன்ற இடங்களில்

ஊர்வலம் போவது இந்திய தமிழர்

அங்கே தீயிட்டு தன்னையே சாகடித்துக் கொள்வது இந்திய தமிழர்.

இவர்களது உணர்வை : அன்பை இழக்கப் போகிறீர்கள்.

ஏதோ புலம்பெயர் நாடுகளின் வீதிகளில் தடைகளை ஏற்படுத்துவதாக சொல்கிறீர்களே?

போராடுவதாக சொல்கிறீர்களே?

இந்த நாடுகள் தொடர்ந்து பண உதவிகளை செய்கிறது.

தொடர்ந்தும் ஆதரவு வழங்குகிறது.

சும்மா வீதிகளை தடைசெய்து ஒன்றும் நடக்காது.

கூட்டம் கூட்டி மட்டும் ஒன்றும் ஆகாது.

உங்களைப் போன்றவர்கள் ஒரு குழுவாக போய்

இங்குள்ள அரசியல் தலைமைகளை சந்தியுங்கள். பேசுங்கள்.

போராடுங்கள்.

எமது மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது

எமது சொந்தங்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.

எமது குடியுரிமையை வைத்து எம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

நீங்கள் அந்த அரசுக்கு உதவி வழங்குகிறீர்கள்?

அல்லது கண்டும் காணாமல் இருக்கிறீர்கள்.

எமது குடியுரிமையை வைத்து என்ன பிரயோசம்

நாங்களும் இந்நாட்டு பிரஜைதானே?.

எனவே எமது குடியுரிமையை

நாம் திருப்பித் தர முடிவெடுத்திருக்கிறோம்.

நாங்கள் அங்கே போய் சாகப் போகிறோம்.

தாங்க முடியவில்லை.

இப்படி சொல்ல எத்தனை பேரால் முடியும்?

சொல்லுங்கள். செய்யுங்கள்?

மனுவெல்லாம் கொடுக்க முன்னர்

அவர்களிடம் எழுத்து மூலம் அனுமதி பெறுங்கள்.

நாங்கள் இந்த நாளில் நடத்தும் கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்

நாங்கள் மனுக் கொடுக்கவிருப்பதாக எழுதி

அவர்களது பதிலுக்கு பின் கவனயீர்ப்போ : போராட்டமோ நடத்தி

அவர்களிடம் மனுக்கொடுக்க முயலுங்கள்.

அதை விட்டு விட்டு

அங்க போய் நின்று

வா வெளியே மனுக் கொடுக்க வேணும்

என்று சண்டித்தனம் காட்டாதீர்கள்.

வீதிகளை தடை செய்வதை பெரிய காரியமாக சொல்கிறீர்கள்.

இதை பார்த்து இவர்கள் நகைக்கிறார்கள்?

எம்மை வெறுக்கிறார்கள்?

ஒரு நாட்டின் முகுகெலும்பே போக்கு வரத்துதான்.

ஒரு விபத்து நடந்தாலே

ஒரு சில நிமிடங்களிலேயே அதை சரி செய்து

பாதையை திறக்கிறார்கள் அவர்கள்.

நாம் பல மணி நேரம்

அப்படியானவர்களது ஒழுங்கு முறைகளை மீறுகிறோம்.

ஒருநாள் இருநாள் விடுவார்கள்.

வெகு விரைவில் கைவைப்பார்கள்.

அதன் பின் அது தொடரும். உள்ளே போடுவார்கள்.

அவர்களது நாட்டின் சட்டதிட்டங்களை மதிப்பதில்லை என

நாடு கடத்துவார்கள்?

இதையே பேசி வருகிறார்கள். இது நடக்கும்.

இது எங்கட நாடு அல்ல.

அவர்கள் அதிக சிரமப்பட்டு உருவாக்கிய நாடு.

நமக்கு அவர்களைப் போல் வாழ வழியமைத்திருப்பதை கெடுக்காதீர்கள்.

போராட்டம் செய்யுங்கள்.

அது எங்கே அனுமதி தந்துள்ளார்களோ அங்கே?

அவனவன் நேரத்துக்கு தன் பணிகளுக்கு செல்வதற்காக என்று

தான் திரும்பி உடனடியாக வீடு திரும்பி

தன் குழந்தையை அல்லது தன் மனைவியை வேலைக்கு அனுப்பிவிட்டு குழந்தையை கவனிக்க

அல்லது பள்ளிக்கு அனுப்ப அல்லது

எங்காவது அனுப்ப

அல்லது நேரத்துக்கு தனது அட்டவனைப்படி ஒருவரை சந்திக்க செல்லும் போது

அவனது நேரத்துக்கு அவனது வேலையை செய்ய முடியாவிட்டால்

இவை அவர்களை வெறுப்படைய வைக்கும்.

அவர்கள் தனது நாட்டு போலீஸிடம் : அரசிடம் முறையிடுவார்கள்.

ஒரு மின்அஞ்சல் போதும்.

அதை பரிசீலிப்பார்கள்? முடிவு?

இது போன்ற காட்சிகளை எத்தனை இந்திய படத்திலேயே பார்த்து நாமே திட்டி இருப்போம்.

எத்தனை பிரசவ வேதனைகளை

எத்தனை இழப்புகளை

எத்தனை அவசர தேவைகளை

இழந்து மக்கள் அவலப்படுவதை வெறுத்து பேசியிருக்கிறோம்?

இப்போது நாமே அதை செய்கிறோமே?

இதன் பெயர்தான் அறிவா?

புலம் பெயர்ந்தும் : இங்கு படித்தும் : இத்தனை நாடுகளைப் பார்த்தும் நாமே திருந்தாமல் இருக்கும் போது

அந்த நாடுகள் மட்டும் எப்படி திருந்தும்?

அந்த நாட்டிலுள்ளவர்கள் மட்டும் எப்படித் திருந்துவார்கள்?

வேகமாக போகும் ஒருவனுக்கு வீதி விளக்கின் சிகப்பு விளக்கை கண்டே எரிபவன் அவன்.

உங்கள் செயல்கள் வினையாகவே முடியும்.

இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

உங்கள் எதிர்ப்பை விட

அந்த நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியதில்லை

உரியவர்களுக்கு எழுதினாலே போதும்

இப்போ உள்ளதும் இல்லாமல்தான் போகும்.

உங்களால் இதையெல்லாம் சிந்திக்க எங்கே நேரம்.

எதையாவது குட்டிச் சுவராக்கிவிட்டு

தலையை சொறியத்தான் நேரம் இருக்கும்.

அதே இந்திய சினிமா நடிகர்களை கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்தும் போது

உங்களுக்கு வராத கோபம் எல்லாம் இப்ப பொத்துக் கொண்டு வருது.

இதனால் பாதிப்படையப் போவது சண் - கலைஞர் மட்டுமல்ல

அங்கு வேலை செய்யும் எமக்கும் ஆதரவான பல்லாயிரம் மக்களும்தான்.

ஒரு நிறுவனத்தை அடித்து உடைத்தால்

அந்த நிறுவனம் சமாளித்துக் கொள்ளும்.

அதை நம்பி வாழும் ஊழியர்களது குடும்பங்கள் பசியோடும் பட்டினியோடும் வேதனைப்படும்.

அவர்களில் பலர் எமக்கு சார்பானவர்களாகவே இருப்பார்கள்.

ஒரு சுப்பிரமணியசாமியும் : சோவும்

நமக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும் போது

பல சுப்பிரமணியங்களையும் : சாமிகளையும் : சோக்களையும் : சாக்குகளையும் உருவாக்கும்.

இதுக்குத்தான் சொல்லுறது

பொல்லுக் குடுத்து அடி வாங்கிறதென்று.

Edited by Thalaivan

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் மீண்டும் தவறு செய்கிறோம் போல் தோன்றுகிறது :o

தலைவன் உங்கள் கருத்தை வரவேற்கிறேன் :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.