Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். ஜோதிடபானு "அதிர்ஷ்டம்" சி சுப்பிரமணியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

prabakaran.jpg

தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் உண்மையான ஜாதக அடிப்படையில் கிரக நிலைகளை ஆராய்ந்தபோது கிடைத்த உண்மைகளை இங்கே கூறுகிறோம்.

பிறந்தநாள் : 26-11-1954.

பிறந்த நேரம் : பகல் 12.00 மணி, 02 நிமிடம்.

பிறந்த இடம் : யாழ்ப்பாணம் அருகிலுள்ள கிராமம்.

ஜென்ம லக்னம் : கும்பம்.

ஜென்ம ராசி: விருச்சிகம்.

ஜென்ம நட்சத்திரம் : கேட்டை 1-ஆம் பாதம்.

திதி: பிரதமை திதி.

ஜெயவருடம், கார்த்திகை மாதம், 11-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.

பாதசார விவரம்

அனுஷம் 3-ல் சூரியன்.

கேட்டை 1-ல் சந்திரன்.

அவிட்டம் 3-ல் செவ்வாய்.

விசாகம் 2-ல் புதன்.

பூசம் 2-ல் குரு (வக்ரம்).

விசாகம் 2-ல் சுக்கிரன் (வக்ரம்).

விசாகம் 1-ல் சனி.

பூராடம் 1-ல் ராகு.

திருவாதிரை 3-ல் கேது.

மூலம் 3-ல் மாந்தி.

அவிட்டம் 3-ல் லக்னம்.

ஜனன கால மகாதசை - புதன் மகாதசை இருப்பு: 14 வருடம், 07 மாதம், 13 நாட்கள்.

இந்தக் கணிப்பை எழுதிய நாள்: 21-05-2009. அன்று பிரபாகரன் வயது 54, ஐந்து மாதம், 25 நாள்.

தற்போது சந்திரன் மகாதசை- 07-07-2002 முதல் 07-07-2012 வரை நடக்கிறது.

இன்னும் மூன்று வருடம், ஒரு மாதம், 18 நாட்கள் சந்திர தசை பாக்கி உள்ளது.

சந்திர தசையில் புதன் புக்தி: 07-05-2008 முதல் 07-10-2009 வரை.

கேது புக்தி: 07-10-2009 முதல் 07-05-2010 வரை.

சுக்கிரன் புக்தி: 07-05-2010 முதல் 07-01-2012 வரை.

சூரியன் புக்தி: 07-01-2012 முதல் 07-07-2012 வரை.

07-07-2012-ல் சந்திர தசை முடிகிறது.

சந்திர தசையில் புதன் புக்தியில் அந்தரங்கள் முறையே-

08-05-2009 முதல் 17-07-2009 வரை குரு அந்தரம்.

17-07-2009 முதல் 07-10-2009 வரை சனி அந்தரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954 என்பதும்; அவருக்கு கேட்டை நட்சத்திரம் என்பதும் நூறு சதவிகிதம் உண்மையானது!

கனடா நாட்டில் வசிக்கும் அவருடைய சகோதரி ஒரு தமிழ் வார இதழுக்கு அளித்த பேட்டியில்- பிரபாகரனின் பிறந்தநாள் 26-11-1954, பகல் 12.00 மணி, 02 நிமிடம் என்றும்; பிரபா கரனின் நட்சத்திரம் கேட்டை, விருச்சிக ராசி, யாழ்ப்பாணம் அருகில் பிறந்தார் என்றும் சொல்லியிருந்தார். இந்த விவரங் களைக் கொண்டு, சரியான விவரம் தானா என்று உறுதி செய்து கொண்டு தெளிவாகக் கணிக்கப் பட்ட ஜாதகம் இது.

பிரபாகரனின் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி உச்சம். லக்னாதிபதி- உயிர்காரகன் சனி உச்சம். ஆயுள் ஸ்தானாதிபதி புதன் பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன், சனியுடன் சேர்க்கை பெற்றுள்ளார். இந்த ஜாதக அமைப்பின்படி எண்பது வயதுவரை பிரபாகரனுக்கு மரணம் கிடையாது!இந்த உண்மையான ஜாதகப்படி பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்வது சுத்தப் பொய்!

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகம் உலகப் புகழ்பெற்ற - மிகவும் விசேஷமான ஜாதகம்!

பிரபாகரன் தன் லட்சியத்தைக் கண்டிப்பாக அடைந்தே தீருவார். 07-07-2012 முதல் 07-07-2013-க்குள் "தனித் தமிழீழம்' என்ற உயர்ந்த லட்சியத்தைக் கண்டிப்பாக அடைவார்.

பிரபாகரன் 07-07-2012-க்குமேல் தனித் தமிழீழத்தின் தளபதியாக பல வருடங்கள் ஆட்சி செய்து உலகப் புகழுடன் வாழ்வார். பிரபாகரன் ஜாதகப்படி 07-07-2012 முதல் அவருடைய ஆயுள்காலம் வரை தனித் தமிழீழத்தின் அதிபராக ஆட்சி செய்வார்.

07-07-2012 முதல் 07-07-2013-க் குள் செவ்வாய் தசையில் ராகு புக்தியில் தனித் தமிழீழ ம் மலரும். செவ்வாய் கிரகம் வலுவாக லக்னத்தில் நின்றதைக் காண்க. அவிட்டம் 3-ல் செவ்வாய் நின்ற தையும் காண்க. செவ்வாய் கிரகம் போர்க்கிரகம்; பூமிகாரகன். செவ்வாய் தைரிய- வீர- பராக்கி ரம ஸ்தானத்துக்கு அதிபதி. செவ்வாய் ராஜ கிரகம். செவ்வாய் சொந்த சாரம் பெற்று வலுவாக லக்னத்தில் நின்றதால் 07-07-2012-க்குமேல் செவ்வாய் தசையில் பிரபாகரன் ஈழ நாட் டின் அதிபதியாவார். செவ்வாய் கிரகத்தின் பூமியே தனித் தமிழ் ஈழம்தான். தனித் தமிழீழத்தின் அதிபதியே செவ்வாய் கிரகம்தான்.

பிரபாகரனின் மனைவி, மகன், மகள், குடும்ப உறுப்பினர்கள் எல்லாரும் தீர்க்காயுளுடன் இருப்பார்கள். 09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார். 20-12-2009 முதல் பிரபாகரன் பலம் பொருந்திய மாபெரும் மனிதராகச் செயல்படுவார்.v 2010-ஆம் வருடம் பிரபாகரனுக்குப் பொற் காலம். பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்று சொன்னவர்கள் எல்லாரும் தலை குனிவார்கள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

09-09-2009-க்குப் பிறகு பிரபாகரன் வெளியே வருவார். தனக்கு மரணம் இல்லை என்பதை நிரூபிப்பார்.

வேல் குத்தி தூக்குக் காவடி எடுக்க நேர்ந்திருக்கிறன். நாள் நெருங்கி விட்டது..

:unsure: ....... முடியல

.... வன்னி மக்களே குறிப்பாக சிங்கள சிந்திரவதை முகாங்களில் வாழ்பவர்களே,

நீங்கள் பலிக்கடாக்கள்தான்!! மீட்சியே இல்லை!! ...

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: ....... முடியல

.... வன்னி மக்களே குறிப்பாக சிங்கள சிந்திரவதை முகாங்களில் வாழ்பவர்களே,

நீங்கள் பலிக்கடாக்கள்தான்!! மீட்சியே இல்லை!! ...

உந்த சாத்திரிக்கு முதலிலை வெடிவைக்க வேணும்! இந்த சாத்திரியாலை வன்னியிலை உள்ள முகாம் சனங்கள் இன்னும் முப்பது வருசம் அந்த முட்கம்பிவேலிகளுக்குள் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஒருவரின் தலையில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு......

வாழ்ந்து பழகிவிட்டோம்

திடீரென மாறுவது கடினம்

பார்க்கலாம்

ஆனால்

அந்த நம்பிக்கை எம்மனதில் இருந்து கொண்டேயிருக்கும்

அதை எந்த நல்லையனாலும் மாத்தமுடியாது

உந்த சாத்திரிக்கு முதலிலை வெடிவைக்க வேணும்! இந்த சாத்திரியாலை வன்னியிலை உள்ள முகாம் சனங்கள் இன்னும் முப்பது வருசம் அந்த முட்கம்பிவேலிகளுக்குள் தான்!

எலும்பு இல்லா நாக்காலை எப்படியும் கதைக்கலாம்..

சாத்திரிக்கு வெடி வைக்கிறதுக்கு முதல் உங்களுக்கு வெடி வைக்கனும் நீங்கள் ஒரு பச்சேந்தி.. அம்மா அடிச்சா அப்பாட்ட போறது அப்பா அடிச்சா அம்மாட்ட போறது ..அது தான்யா உங்களின் பழக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வைத்தியசாலையில் மயங்கிக் கிடந்த ஒருவரை மோச்சரியில் கொண்டு போய்ப் போடுமாறு பணியாளர்களை டாக்டர் உத்தரவிட்டாராம். இருவர் உணர்வற்று இருந்தவரை ஸ்டெச்சரில் வைத்து மோச்சரிக்குக் கொண்டு போனார்களாம்.

மயங்கியவர் இடையில் உணர்வு பெற்று “என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?”; என்று கேட்டிருக்கிறார். பணியாளர்கள் “உன்னைப் பிணவறைக்குக் கொண்டு போகிறோம்.” என்றிருக்கிறார்கள். விழித்துக்கொண்டவர் “அட அனியாயமே நான் இன்னும் சாகவேயில்லையே!” என்றிருக்கிறார்.

அதற்குப் பணியாளர்கள் “டாக்டரைவிட நீ பெரிய அறிவாளியா? பேசமல் படு.” என்று அதட்டியபடியே அவரை பிணங்களோடு பிணமாகப் போட்டுவிட்டுப் போனார்களாம்.

இப்படித்தான் தேசியத் தலைவரையும் சிலர் இறந்துவிட்டதாகவும், சிலர் சாகவில்லையென்றும் கருதிக்கொண்டிருக்கிறார்கள். அவர் இருப்பதாகச் சொல்பவர்கள் உறுதியோடு கூறுகிறார்கள். இல்லையென்பவர்கள் தெளிவற்றிருக்கிறார்கள்.

ஹ{ம்! எல்லாவற்றிற்கும் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சாத்திரிக்கு முதலிலை வெடிவைக்க வேணும்! இந்த சாத்திரியாலை வன்னியிலை உள்ள முகாம் சனங்கள் இன்னும் முப்பது வருசம் அந்த முட்கம்பிவேலிகளுக்குள் தான்!

அப்ப நீங்களும் ஒத்துக் கொண்டு விட்டீர்கள்.

கட்டுரையை வாசிச்ச எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கிறது.

இரண்டு பேரைத் தவிர கட்டுரையை வாசிச்ச எல்லோருக்கும் ஆறுதலாக இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

சனம் நின்மதியாக வாழ உந்த மகிந்தவினுடைய ஆயுளையும் பார்த்து சொன்னால் நல்லாயிருக்கும். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சனம் நின்மதியாக வாழ உந்த மகிந்தவினுடைய ஆயுளையும் பார்த்து சொன்னால் நல்லாயிருக்கும். :unsure:

அதுதானே

இல்லாதவர்.....??? என்பவரைத்தேடுவதை விட

இருப்பவரின் இடத்தை உறுதிப்படுத்தலாமே.......

உந்த சாத்திரிக்கு முதலிலை வெடிவைக்க வேணும்! இந்த சாத்திரியாலை வன்னியிலை உள்ள முகாம் சனங்கள் இன்னும் முப்பது வருசம் அந்த முட்கம்பிவேலிகளுக்குள் தான்!

இப்ப எண்டால் வெளியாலை மக்களை சிங்களவன் விட்டு சுக போகமாகவே வாழ வைக்கிறான்...??? இல்லை முன்னம் எல்லாம் பிரபாகரன் போராட வரமுன்னம் எண்டாலாவது....???

உந்த தமிழ் அடிமை மூளை இருக்குது பாருங்கோ உதுதான் தமிழனுக்கு இண்டைக்கு வரைக்கும் சாகடிக்குது...

தமிழனுக்கு விமோசனம் பிரபாகரன் இருந்தால் மட்டும்தான் இல்லை எண்டால் உங்களை மாதிரி ஒரு பச்சோந்தியை நம்பி தமிழன் ஒண்டையும் நிரந்தரமாக பெற முடியாது அதை அப்பிடி பெற்றாலும் தக்க வைக்க முடியாது...

நீங்கள் பேசாமல் வீட்டிலை இருக்கிறவையை குழப்புறதோட நிண்டால் எல்லாருக்கும் நல்லது...

சிங்களவன் சொல்லும் பொய்யான பிரச்சாரங்கள் மட்டும்தான் இப்போது 99% உலாவுகிண்றது.. அதை நீங்கள் 100% மாக நம்புகிறீர்கள்.. ஆனால் உண்மை நிலை தலை கீழாக தான் இருக்கிறது... இதுக்கான பதிலை காலம் தான் உங்களுக்கு வழங்கும்... ( இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்)

உங்களை போல சிலரின் வாதமான தலைவர் இருந்தால் அவர் மாவீரர் நாளுக்கு வர வேண்டும் என்பதும் இல்லை...

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மை.

30 வருடங்களுக்கு மேலாகியும் புரியவில்லை!

நான் கடந்த இரண்டு மாதகாலமாக ஒரு பைத்திய நிலையிலிருந்து வெளியேறி தற்போது மிகவும் தெளிவாக இருக்கிறேன்! கடந்த 30வருடகாலமாக ஒரு சிலர் இந்த விசர் பற்றி விமர்சித்தபோது அவர்களை துரோகிகள் என்றேன்! ஆனால் இன்று கண்களை நன்கே திறந்து பார்த்தபோது தான் எனது முட்டாள் தனம் புரிகிறது. இந்த முட்டாள் தனம் பலருக்கு தற்போது தான் புரிய வந்துள்ளது! ஆனால் இந்த முட்டாள் தனத்தை பலர் வெகுவிரைவில் தாமாக புரிந்து கொள்வார்கள்!

புரிய மறுக்காது என்னை துரோகி பச்சோந்தி என்று விமர்சிப்பவர்களுக்கு இந்த முட்டாள் தனம் பற்றி புரிய பல நாட்கள் எடுக்கப்போவதில்லை. ஆனால் தலையை மண்ணுக்குள் புதைத்து உலகமே இருண்டுவிட்டது என்றால் அவர்கள் சாகும் வரை முட்டாள்களாகவே வாழ்ந்து சாவார்கள்!

வெறுமனே பொய்களில் வாழ்ந்து போவதை விட வலியான உண்மைகளை ஜீரணித்து வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகருவதே சாலச்சிறந்தது!

உண்மைகள் நெடுநாள் உறங்குவதில்லை!

நறுக்கென்று நாலுவார்த்தை

இப்படி புத்திசாலியாகி என்னத்தை பெற்றுக்கொடுக்கப்போகின்றீர

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைகள் நெடுநாள் உறங்குவதில்லை!

இதைத் தானே நாங்களும் சொல்கிறோம்.

30 வருட வருத்தம் மாறியதையிட்டு சந்தோசம்.வருத்தம் ரொம்ப கடுமையாய்த் தான் வாட்டிப் போட்டுது போல

யூதர்களுக்கு ஜேர்மானியர்கள் ஞானத்தை கொடுத்தது போல எங்கள புலம் பெயர்ந்த டமிழ்சுக்கும் பிரிதானியர்கள் , ஐரோப்பியர்களும் குடுப்பார்கள் என்பதும் உண்மைதான்...

இதை புரியும் போது எங்கட சந்ததிகள் நடுத்தெருவில் நிற்கும் என்பதும் கசப்பான உண்மைதான்....

Edited by தயா

கனமான............கணிப்பு

ஆனால் தமிழன் தன் குடிமிச்சண்டையை நிறுத்துவானா???

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தலையை மண்ணுக்குள் புதைத்து உலகமே இருண்டுவிட்டது என்றால் அவர்கள் சாகும் வரை முட்டாள்களாகவே வாழ்ந்து சாவார்கள்!

உங்கள் சுயசரிதைக்கு நன்றி. :D

நான் கடந்த இரண்டு மாதகாலமாக ஒரு பைத்திய நிலையிலிருந்து வெளியேறி தற்போது மிகவும் தெளிவாக இருக்கிறேன்!

தெளிவாகியே இப்படியென்றால் ..... :unsure:

வெறுமனே பொய்களில் வாழ்ந்து போவதை விட வலியான உண்மைகளை ஜீரணித்து வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு நகருவதே சாலச்சிறந்தது!

இதை தானே திருப்பி திருப்பி சொல்கிறார்கள் உண்மையை தேடி செல்லுங்கள் என்று.

சிங்களவன் சொல்லும் பொய்யான பிரச்சாரங்கள் மட்டும்தான் இப்போது 99% உலாவுகிண்றது.. அதை நீங்கள் 100% மாக நம்புகிறீர்கள்.. ஆனால் உண்மை நிலை தலை கீழாக தான் இருக்கிறது... இதுக்கான பதிலை காலம் தான் உங்களுக்கு வழங்கும்... ( இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்)
:):(
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவர் இருக்கிறார் இல்லை என்பதற்கு அப்பால் இப்போது அவரின் 'ஆளுடையை கொல்லும்' விக்கிரமாதித்த முயற்சியில்

சில இணையங்களும் சில உதிரிகளும் உதார் விட்டுக் கொண்டு இருக்கினம்.

இந்தச் சாத்திரி எந்தச் சாத்திரியோ நானறியேன். சாத்திரத்தைவிட...

எங்களின் தலைவர் இன்னுமொரு 100 வருடங்களுக்கு தமிழ்இனத்தை வழிநடாத்தும் ஒரு அடையாளமாக ஒரு சக்தியாக

ஒரு மூச்சாக இருப்பார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:icon_mrgreen: ....... முடியல

.... வன்னி மக்களே குறிப்பாக சிங்கள சிந்திரவதை முகாங்களில் வாழ்பவர்களே,

நீங்கள் பலிக்கடாக்கள்தான்!! மீட்சியே இல்லை!! ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செம்மறிக் கூட்டம்

:icon_mrgreen:

:icon_mrgreen:

உண்மையா நீர் தான் செம்மறி போல..ஏன் வேர ஒரு தலைப்பிலை எழுதினதை இங்கை கொண்டு வந்து வாயை பிலக்கிறிங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா தழிழர் நீங்கள்????????????

எம் இனத்துக்காக தன்னையே தந்த ஒரு மாவீரர் உயிருடன் இருக்கிறார் என்றால் அதுக்கு சந்தோசப் படுங்கோ அவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேணும் என்று வாழ்த்துங்கோ

துரோகிகளுக்கு மாலையும் பதவியும்! தன்னையே தந்தவனுக்கு சாவா என்ன கொடுமை இது.

தழிழ் சிறி நன்றி

இது குறள் இணையத்தில் இருந்து எடுக்கப் பட்டது

எப்படி சனிமாற்றம் பாத்தியளோ உங்களின் ஆட்டா மாவுக்கு எப்படி?

Edited by jhansirany

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.