Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்வாணி சொல்வதை கேளுங்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திலிருந்து ஈழத்திற்கு சென்று அங்கு நடந்த இறுதிச்சமரில் சிக்குண்டுடிருந்த தமிழ்வாணி என்கிற பெண்மணி சொல்வதை கேளுங்கள்.

th_1245950592163_11298.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தவம் போன்றது இந்தப் பெண்ணின் மனிதாபிமானமும், மனவுறுதியும்.

மனிதர்களுக்குள் உண்மை உரம்பெறுவதற்கு இப்படிப்பட்டவர்களின் வாழ்வுகள் உறை ஆகின்றது அவர்தம்முள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் மருத்துவரல்ல. biomedical scientist..!

இவரின் மன உறுதியும் சேவை மனப்பான்மையும் மக்களின் துயரை உள்ளபடி சொல்லும் நேர்மையும் பாராட்டுதலுக்குரியது..! :rolleyes:

Edited by nedukkalapoovan

இந்த பெண்மணி வன்னியில் இறுதி போரின் போது அங்கு இருக்க வில்லை... விசா முடிந்த பிறகும் வவுனியாவில் சுத்தி திரிந்தவரை பிடித்து நாங்கள் முகாமில் அடைத்தோம் ... அவரை பிரித்தானிய அதிகாரிகள் பின்னர் கூட்டி செண்றனர் எண்று இலங்கை அறிக்க விடுவதுக்கான சாத்தியம் அதிகம்..

காரணம் கிழ் இருக்கும் செய்தி...

இலங்கைக்கு எதிராக போர் குற்ற விசாரணை வந்தால் சாட்சியம் கூற தயார்": வன்னி பகுதியிலிருந்து திரும்பியுள்ள தமிழ் பெண்மணி

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது பலர் உயிரிழந்தது தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை தேவை என்று மனித உரிமை அமைப்புகள் கோரி வருகின்றன.

அப்படியாக போர் குற்றங்கள் குறித்த விசாரணை நடைபெறுமாயின் அது தொடர்பில் சாட்சியம் அளிக்க தான் தயாராகவுள்ளதாக போரின் இறுதிகாலத்தின் வன்னிப் பகுதியில் தங்கியிருந்த லண்டனில் இருக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழ் பெண்மணி தமிழ்வாணி ஞானகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் போர் முடியும் வரை வன்னிப் பகுதியிலும், அதன் பின்னர் இம்மாதத்தின் முதல் வாரம் வரை வடக்கே வவுனியாவில் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் தங்கியிருந்தாகக் கூறும் அவர் அப்போது இடம் பெற்ற நிகழ்வுகள் குறித்து தனது கருத்தினை தமிழோசையிடம் வெளியிட்டார்.

தனது உறவினர் ஒருவரை சந்திக்க விஸ்வமடு பகுதிக்கு விடுமுறைக்காக சென்றதாக் கூறும் அவர், 2008 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாக் காலம் முடிந்த பிறகும் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக தொடர்ந்து அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகக் கூறுகிறார்.

போர் இடம் பெற்ற காலகட்டத்தில் வன்னிப் பகுதியில் இடம் பெற்ற கடுமையான மோதல்களில் பல மக்கள் உயிரிழக்க நேரிட்டதை தான் நேரில் கண்டதாகவும், காயப்பட்ட மக்களுக்கு உதவ முடியாமல் மருத்துவமனைகள் மிகவும் சிரமப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மருத்துவ துறையில் ஓரளவு பயிற்சி உள்ளதாக கூறும் அவர், போர் காலத்தில் அங்கு இருக்க நேரிட்ட சமயத்தில் அங்கு காயப்பட்டு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு முடிந்த உதவிகளை செய்ததாகவும் கூறுகிறார்.

உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை தெரியாது

போர் இடம் பெற்ற சமயத்தில் அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து தன்னால் சரியான கணக்கு தரமுடியாது என்றும் தெரிவிக்கிறார்.

விடுதலைப் புலிகளால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை தான் பார்க்கவில்லை என்று கூறும் தமிழ்வாணி, ஆனால் மருத்துவமனைக்கு வந்தவர்கள் அனைவருமே ஷெல் தாக்குதலால்தான் காயப்பட்டு வந்தார்கள் என்று தெரிவிக்கிறார்.

அவர் வெளியிடும் கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...ntaffairs.shtml

தவம் போன்றது இந்தப் பெண்ணின் மனிதாபிமானமும், மனவுறுதியும்.

மனிதர்களுக்குள் உண்மை உரம்பெறுவதற்கு இப்படிப்பட்டவர்களின் வாழ்வுகள் உறை ஆகின்றது அவர்தம்முள்.

எங்கட பாண்டு007, நெல்லையனையும் விடவா....?? சும்மா டமாசு பண்ணாதேங்கோ....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் மருத்துவரல்ல. biomedical scientist..!

இவரின் மன உறுதியும் சேவை மனப்பான்மையும் மக்களின் துயரை உள்ளபடி சொல்லும் நேர்மையும் பாராட்டுதலுக்குரியது..! :rolleyes:

நன்றிகள் நெடுக்கு திருத்திவிடுகிறேன்

பதட்டம் இல்லாமல் தெளிவாக கதைச்சு இருக்கிறா. சில மாதங்களுக்கு முன்னம் இவவை காணவில்லை என்று ஊடகங்களில செய்தி வந்தது. உயிரோட தப்பி வந்தது சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்

பதட்டம் இல்லாமல் தெளிவாக கதைச்சு இருக்கிறா. சில மாதங்களுக்கு முன்னம் இவவை காணவில்லை என்று ஊடகங்களில செய்தி வந்தது. உயிரோட தப்பி வந்தது சந்தோசம்.

பதட்டப்பட என்ன இருக்குது. வெளிநாட்டுப் பாஸ்போட் விசா இருக்கேக்க என்ன பதட்டம். பிரிகேடியரே கோல் பண்ணிச் சொல்லி இருக்கிறார் விட்டாச்சு என்று. அப்புறம்...??!

நாங்களும் தான் வவுனியா தாண்டி வந்தனாங்கள். சிறீலங்கா அடையாள அட்டை மட்டும் தான் வைச்சிருந்தம்.. கொண்டு போய் அடைச்சு வைச்சிட்டு போட்டோ எடுத்து.. வீடியோ எடுத்து.. நாலு அடியும் தந்திட்டுத்தான்.. விட்டவங்கள். எந்தப் பிரிகேடியரும் கோல் பண்ணிச் சொல்லேல்ல... விடச் சொல்லி..! :o:lol::D:)

பசில் வேற சந்திக்கனும் என்றாராம்.ம்ம்ம்...! வெளிநாட்டு பாஸ்போட்டுக்கு அவ்வளவு மரியாதை. ஆனால் சிறீலங்கா அடையாள அட்டைக்கு.. தூசிக்கும் மரியாதை இல்லை...! இதெல்லாம் ஒரு நாடு. அதற்கு ஒரு தேசியம்.. ஒருமைப்பாடு..! :D:)

இவா சொல்லித்தான் இந்த மேற்குலக நாட்டுக்கு உதுகள் தெரிய வருகிறது என்றது அவைட சுத்துமாத்து.

ஐநாவை வெளியேற்றியதும் இவர்களே. சிறீலங்கா போர் நிறுத்தத்தில் இருந்து ஒருதலைபட்சமாக வெளியேறிய போதும் தடுக்க காத்திரமாக செயற்படாமல்.. ஆயுதங்களை அன்பளிப்பாக வழங்கியதும் இவர்களே...! அவற்றையும் நாம் மறக்கக் கூடாது..!

வன்னிக்கு 7 அவதார புருஷர்களா போய் சிறீலங்கா இராணுவத்தை வழி நடத்திய கிளிநொச்சி உட்பட அனைத்தையும் பிடிக்க வழிகாட்டியவர்களில் பிரிட்டன் அதிகாரியும் அடக்கம். அமெரிக்க அதிகாரியும் அடக்கம். ஜப்பான் அதிகாரியும் அடக்கம். அதை நாங்கள் இலகுவா மறந்திட்டம்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வியில் கூறியது, செவ்வியின் பின்னால் செய்தியாளரிடம் பேசியது என்பவற்றின் தமிழாக்கம். கீழே

சிறிலங்காவின் வட பகுதிக்கு, உறவினை பார்க்கச்சென்ற பிரித்தானிய குடியுரிமை கொண்ட, தமிழ்வாணி ஞானகுமார் சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய இறுதி யுத்தத்தில் சிக்கி, வன்னி மக்களுடன் இடம்பெயர்ந்த வேளை, இடைத்தங்கல் முகாம்களில் தடுத்து வைக்கப்ப்பட்டிருந்தார். பிரித்தானிய அரசின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் கடந்த 8 ஆம் திகதி, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, பிரித்தானியா செல்ல அனுமதிக்கட்டார்.

சிறிலங்காவின் இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது மக்களோடு மக்களாக இருந்த அவரின் அனுபவங்களை கண்டிறியவும், இடைத்தங்கல் முகாம்களின் உண்மையான நிலைமை பற்றி தெளிவுறவும் தமிழ் மக்கள் சார்பில் தற்போதுள்ள ஒரே ஒரு ஆதாரபூர்வமான நபரகாக இவர் இருப்பதால் அவரை பேட்டி கண்டுள்ளது கார்டியன். காரிடியனின் இணையத்தளத்தில் வெளியான அவரது செவ்வியில் தமிழ்வாணி ஞானகுமார் கூறியவை :

எனது பெயர் தமிழ்வாணி ஞானகுமார். 25 வயது. எனது மைத்துனர் வன்னியில் இருந்ததால் அவரைப் பார்ப்பதற்காக வன்னிக்குச் சென்றேன். எனக்கு ஆறு மாத கால விசா இருந்ததால் நான் சிறிது காலம் அங்கு தங்கியிருக்க எண்ணி தங்கியிருந்தேன்.

பின்னர் அங்கிருந்த நிலைமைகளைப் பார்த்த போது உடனடியாக அங்கிருந்து என்னால் வெளியேற முடியாதென்று எண்ணினேன். உடனடியாக அங்கிருந்து வெளியேறுவது பாதுகாப்பானதல்ல என்றும் உணர்ந்தேன்.

அங்கு மக்கள் பட்ட பெருந்துன்பங்களை நேரில் பார்த்த போது அங்கு தங்கியிருந்து அந்த மக்களுக்கு என்னாலான உதவியைச் செய்ய வேண்டும் என்று எண்ணம் வந்தது.

இராணுவம் முன்னேறி வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. விமான மற்றும் செல் தாக்குதல்கள் தொடர்ச்சியாக அண்மித்துக் கொண்டு வந்தன.

பெருமளவான மக்கள் கொல்லப்பட்டும் படுகாயத்திற்குமாளானார்கள். மழை வேறு பெய்து கொண்டிருந்தது. இரத்தம் தண்ணீருடன் கலந்து ஓடிக் கொண்டிருந்தது. பாடசாலைகள் வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டன. எல்லாத் தெருக்களிலும் தண்ணீருடன் இரத்தமும் கலந்து ஓடிக் கொண்டிருந்தது. அப்பிராந்தியத்தில் இருந்த அனைவரும் தமிழர்கள் என்பது தெரிந்தது தானே.

கடைசி இரண்டு வாரங்களும் மிகவும் ஆபத்தானவையாகவும் கடும் மோதல்கள் நிறைந்தனவாகவும் இருந்தன. படுகாயமடைந்தவர்களுக்கு ஏற்ற இரத்தம் இருக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பினாலும் மற்றவர்களால் உதவ முடியவில்லை. ஏனெனில் போதுமான மருத்துவ வசதிகள் அங்கிருக்கவில்லை. மருத்துவத்திற்குத் தேவையான உபகரணங்களும் அங்கிருக்கவில்லை.

செல்லிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்த மக்கள் ஒவ்வொரு இடமாகத் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தார்கள். ஆனாலும் அந்தத் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்களால் முடியவில்லை.

ஒரு நாள் நான் இருந்த சத்திரசிகிச்சைக் கூடத்தின் அருகில் செல்லொன்று வந்து விழுந்தது. படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த அந்த அறையில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.

நீங்கள் ஒரு கணமும் ஆறுதலாக நித்திரைக்குப் போக முடியாது. உங்களுக்கு எதிரி இருக்கிறான். அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நீங்கள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.

அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினாலும் அவர்களால் வெளியேற முடியாதவாறு நிலைமை இருந்தது. நாள் தோறும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தாhர்கள். எனவே ஆரம்பத்திலிருந்து இறுதி வரை அவர்கள் அங்கேயே இருந்தார்கள்.

அங்கிருந்த மருந்துப் பற்றாக் குறையாலும் ஏனைய நிலைமைகளாலும் அவர்களால் பெருமளவானோரைப் பாதுகாக்க முடியாமற் போய்விட்டது.

செல் மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களால் இறுதி ஐந்து நாட்களில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

நான் முதலில் இரண்டாவது வலய முகாமிலேயே முதலில் இருந்தேன். பின்னர் என்னை முதலாவது வலய முகாமுக்கு அழைத்து வந்தார்கள். 48 மணி நேரத்துள் என்னை விடுவிப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அது வாரங்களாகி மாதங்களானது. நான் நினைத்தேன். இனி இங்கிருந்து மீள்வதற்கு வழி ஏதும் இல்லை என்று. இக்காலப்பகுதியில் வௌ;வேறு தரப்பினரால் நான் ஐந்து முறை விசாரணைக்குள்ளாக்கப்பட்டேன

உயிரோட வந்து, உண்மைகளைச் சொன்னது சந்தோசம்.

யாரோ ஒருவர் யாழிலை கூட இவவுக்கு உதவி செய்யப் போறேன் என்று விபரங்கள் சேர்த்த ஞாபகம்... :rolleyes:

நன்றி வாணி

எல்லாத் தகவல்களையும் திரட்டி ஆவணபடுத்தி அடுத்த சந்திக்கு கையளித்தல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

20081217_EP03.jpg

Defence Advisors/Attaches of 7 countries visit Sri Lankan SF HQ in Vanni [Photo: Sri Lankan Defence Ministry]

Visit of 'strategic partners'

[TamilNet, Thursday, 18 December 2008, 12:19 GMT]

The Defense Advisers/Attaches of seven countries, USA, UK, Japan, India, Pakistan, Bangladesh and Maldives were taken on a one day tour to Vanni by the Colombo government on Monday. Suffering from heavy military debacles and facing serious economic crisis, the Colombo government is badly in need of parading strategic partners and abettors to attract means and justification for its genocidal war before time runs out, note political observers. The visitors represented three of the Co-Chair countries, USA, UK and Japan and four South Asian countries having maritime boundaries.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வாணி

எல்லாத் தகவல்களையும் திரட்டி ஆவணபடுத்தி அடுத்த சந்திக்கு கையளித்தல் வேண்டும்

சாஸ்திரி தயவு செய்து இந்த ஆவணத்தை சனல் 4 கொடுங்கோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சுனாமி

  • கருத்துக்கள உறவுகள்

துணிகரமான பெண்.உலகத்திற்கு சாட்சி சொல்ல விதி விட்டு வைத்த உயிர்.

  • கருத்துக்கள உறவுகள்

துணிகரமான பெண்.உலகத்திற்கு சாட்சி சொல்ல விதி விட்டு வைத்த உயிர்.

இன்னும் வரும்.............

  • கருத்துக்கள உறவுகள்

வாணி தான் வசிக்கும் நாட்டில் , தனது பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

உண்மை ஒரு போதும் தோற்றது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
">
" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

.... தமிழ்வாணி விடுதலையாகி கொழும்புக்கு வந்து, இங்கு வருவதற்கு முன்பாக தற்காலிகமாக தங்கி நின்ற உறவினர்கள், இன்று சிங்கள புலனாய்வுத்துறையினரால் தூக்காப்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் கூறினார். .... உண்மை, பொய் தெரியவில்லை????!!!

  • கருத்துக்கள உறவுகள்

.... தமிழ்வாணி விடுதலையாகி கொழும்புக்கு வந்து, இங்கு வருவதற்கு முன்பாக தற்காலிகமாக தங்கி நின்ற உறவினர்கள், இன்று சிங்கள புலனாய்வுத்துறையினரால் தூக்காப்பட்டுள்ளதாக நண்பர் ஒருவர் கூறினார். .... உண்மை, பொய் தெரியவில்லை????!!!

இருக்கலாம் ..........

மிகப்பாரிய அளவில் எம்மை பூண்டோடு அழிப்பதற்கு சிங்களம் தயாராக உள்ளது.

உண்மை!! அதற்கு எமது ****இன் சிந்தனையும், தூரநோக்கும் இடமளித்து விட்டது!!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை!! அதற்கு எமது ****இன் சிந்தனையும், தூரநோக்கும் இடமளித்து விட்டது!!

இப்ப **** இதுக்கு என்ன செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப **** இதுக்கு என்ன செய்யலாம்.

இருக்கும்போது கொண்டாடி பெயரைப் பாவித்து வருமானத்தைப் பெருக்கிக் கொணாடார்கள். இல்லையென்ற பின்னர் சுருட்டிய பணத்தில் பங்கு கிடைக்கவில்லை என்ற கோபத்தில் திட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.. குஷியாக இருக்க வழியைக் காட்டினால் தோளில் வைத்து மீண்டும் கொண்டாடுவார்கள்..

ஏன் இந்த அழிவுகள்/ அவலங்கள்? என்ன பிழைகள் விட்டோம்? ஏன் விட்டோம்? ... இனி என்னத்தைச் செய்யலாம்?? எவ்வாறு செய்யலாம்?? யாருடன் நாம் சேர வேண்டும்??? ............. எல்லாவற்றிற்குமான பதில்களை தேடுவோம்!! அதனைவிவாதிப்போம்!! ஆயுவு செய்வோம்!! ... சரியான பாதையை தேர்ந்தெடுப்போம்!! .... அதைவிடுத்து எம்மை, அரசியல் சூனியத்தில், எமக்கு இவ்வளவு அவலங்களையும், அழிவுகளையும் கொடுத்த சிந்தனைகளை தலைமேல் தூக்கி வைத்து ஆடுவதை நிறுத்துவோம்!!! ... புதிய சிந்தனைகள் உருவாகட்டும் ... புதிய தலைமைகள் உருவாகட்டும் ....

Edited by Nellaiyan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.