Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Abscess பற்றி தெரியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் உள்ள மருத்துவர்கள் யாராவது இதைப்பற்றி சொல்லமுடியுமா

  • கருத்துக்கள உறவுகள்

http://en.wikipedia.org/wiki/Abscess

வேறு யாரிடமாவது விசாரித்து பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பொதுவாக கேட்டு இருக்கிறீங்கள் போல் இருக்கு......மேலும் பல தகவல்களை தொடர்ந்து வருபவர்கள் எடுத்து வருவார்கள் தானே...

பெண்களுக்கு ஏற்படக் கூடிய abscess பற்றிய சின்ன விளக்கம்..

http://video.answers.com/what-a-breast-abscess-is-231375369

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த முகநூல் நண்பர் வைத்தியராய் இருக்கிறார்.

Abscess பற்றி விபரம் கேட்டேன்.

Abscess என்பது சீழ்கட்டி. ஆபத்தானது அல்ல. மரக்க வைத்து சீழை அகற்றக் குணமாகும்.

என்று எழுதியிருந்தார்.

Abscess என்பது சீல் கட்டுதல். ஊரில் 'கட்டுக் கட்டுதல்' என்று சொல்வார்கள். உடலின் வெளிப்புறங்களில் உண்டாகும். (அக்குள், கவட்டுப் பகுதி, தொடை, முழங்கை.............). வெளிப்புறங்களில் உண்டாகும் இதனை drain பண்ணி எடுப்பார்கள்.

முக்கியமாகான இடங்களிலோ அல்லது உடலின் உட்புறத்திலோ உண்டானால் ஆபத்தாக இருக்கலாம் என நினைக்கிறேன். 'சீல் கட்டும்' இடத்தைப் பொறுத்தே இது அமையுமென நினைக்கிறேன்.

சிலருக்கு வெயில் காலங்களில் முதலில் கட்டியாக வரும், நாளடைவில் சீழ் பிடித்து பெருத்தபின் கத்தி வைத்து அந்தக் கட்டியினுள் உள்ள சீழை அகற்றுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.

இணையத்தில் தேடியபோது கிடைத்தது...

வாய்க்குள் ஏற்படக் கூடிய (சீழ் பிடித்த) கட்டி

Tooth_abscess_clip_image001.jpg

http://www.curetoothdecay.com/Tooth_abscess.htm

http://www.youtube.com/watch?v=TKjxpStUdDY&feature=related

ஏனைய தோல் பகுதிகளில் ஏற்படக்கூடிய (சீழ் பிடித்த) கட்டி

hdc_0001_0001_0_img0003.jpg

http://www.humanillnesses.com/original/A-As/Abscess.html

பார்ப்பதற்கு கொஞ்சம் சங்கடமான இணைப்பு...

  • கருத்துக்கள உறவுகள்

abscess-89.jpg

(அண்மைய வழமைக்கு மாறான வெயில் காலங்கள் ஐரோப்பாவில் நிலவுவதால்.. இதன் தாக்கம் பலரிடத்தில் அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கு இறுக்கமான வியர்வை தேங்கும் ஆடைகளை அணிவதும் காரணமாக அமையலாம். ஈரலிப்பான சூழல்.. கிருமிகளின் தொற்றை அதிகரிக்கும். )

எமது உடலின் உட்பகுதிகளை பாதுகாக்கும் முக்கிய உறுப்பு தோல். இதன் மீதே அதிக கிருமிகளின் தாக்கம் உள்ளது. கிருமிகளின் குறிப்பாக பக்ரீயாக்களின் அல்லது ஒட்டுண்ணிகளின் அல்லது பிற உடலுக்கு ஒவ்வாத பொருட்களின் தாக்கம் காரணமாக உடல் வெள்ளை அணுக்கள் அவற்றோடு சண்டை இட்டு அவற்றை அழிக்க முற்படும். இதன் போது தாக்கம் சற்று அதிகம் என்றால்.. அவ்வாறு அழிக்கப்பட்ட கூறுகள் (கழிவுகள், நீர்த்தேக்கம்), இரத்தக் கலங்கள் போன்றவை தோலின் கீழ் பகுதியில் தேங்க ஆரம்பிக்கும். அவை சிறிய கட்டிகளாக வளரும். இவற்றையே பொதுவாக அப்ஸெஸ் என்பார்கள்.

இனங் காண்பது: குறித்த பகுதியில் செந்நிற தோற்றம் இருக்கும். வீக்கம் இருக்கும். எரிவு அல்லது சொறிவு இருக்கும். சீழ் வெளியேறலாம்.. வெளியேறாமலும் இருக்கலாம்.

தோன்றும் இடங்கள்: பொதுவாக தோல் மற்றும் வாய் மேலும் தொற்றுக்கான வாய்ப்புள்ள எந்த அங்கத்திலும் தோன்றலாம். மூளை.. முண்ணான் உட்பட.

மருந்து: அவற்றின் வகைக்கு ஏற்ப பல வகைப்படும். சாதாரணமானவை.. ஓரிரு நாட்களில் தானே ஆறிவிடும். சில வாரங்களாக நீள்பவை தொடர்பில் பொதுவாக மருத்துவர்கள்.. கத்தியால் கீறி உள்ளடக்கத்தை அகற்றி விடுவார்கள். அத்தோடு அன்ரிபயோரிக் (antibiotic) (மக்களில் பலர் பனடோல்.. அஸ்பிரின் போன்றவை அன்ரிபயோரிக் என்று நினைக்கிறார்கள் அது தவறு. அவை pain killers) penicillin போன்றவை வழங்கப்பட்டு தொற்று முற்றாக அகல வழி செய்வார்கள்.

இதில் பயப்பிடும் படி எதுவும் இல்லை. ஆனால் தொற்றை நீண்ட காலத்துக்கு விட்டு வைப்பதோ அல்லது இப்படியான வீக்கம் நீண்ட காலத்துக்கு இருப்பதோ நல்லதல்ல. எனவே உங்கள் குடும்ப வைத்தியரின் ஆலோசனையை உடனடியாக பெற்றுக் கொள்வதே நன்று. எந்த அன்ரிபயோரிக்கையும் நீங்களாக மருந்துக் கடையில் வாங்கி பாவிக்கக் கூடாது. மருத்துவரின் பரிந்துரைக்கு அமையவே பாவிக்க வேண்டும். இன்றேல் பின் விளைவுகள் பாரதூரமாக அமையலாம்.

தடுப்பு முறை: வெயில் காலத்திலும் சரி எப்போதும் சரி தூய உடைகளை அணிந்து கொள்வது கிரமாக உடலை சுத்தம் செய்வது.. மேலும் வாய்ச் சுகாதாரத்தை உச்ச அளவில் பேணுதல் போன்ற செயற்பாடுகள்.

உதவி: pubmed/health

(குறிப்பு: இது தொடர்பாக குறிப்பை எழுதிய நான் பொது மருத்துவர் கிடையாது. இந்த நோய் தொடர்பான மருத்துவ அறிவை மட்டும் பெற்றுக் கொண்டுள்ளேன். எனவே மேலதிக விபரங்கள் மற்றும் நோயை இனங்காணுதல் மற்றும் சிகிச்சைகளுக்கு உங்கள் குடும்ப வைத்தியரை அல்லது பொதுநல வைத்தியரை நாடி ஆலோசனை பெற்று அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயற்படுங்கள்.)

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ்

மூளை, முண்ணான் போன்ற இடங்களில் இந்தக் கட்டிகள் உருவானால் மிக ஆபத்தாக அமையுமா? அதனை என்னவென்று அழைப்பார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்

மூளை, முண்ணான் போன்ற இடங்களில் இந்தக் கட்டிகள் உருவானால் மிக ஆபத்தாக அமையுமா? அதனை என்னவென்று அழைப்பார்கள்?

மூளையில் தோன்றும் இவ்வாறான தொற்றுக்களை Brain abscess என்று அழைப்பார்கள். நோய் ஏற்படும் அங்கத்தின் பெயர் முன்னீடாக (prefix) நோயின் பெயர் பின்னீடாகும் (suffix).

இது சாதாரணமாக ஏற்படுவதில்லை. நியுமோனியா போன்ற கடும் பக்ரீரிய தாக்கம் உள்ளவர்களில் அல்லது தலையில் பலமான காயங்கள் ஏற்பட்ட நிலையில் இவை தோன்றலாம். உடலின் வேறுபகுதிகளில் தொற்றிக் கொள்ளும் கிருமிகள் மூளை.. முண்ணானை அடைந்து பலமாக தாக்குவதால் இது தோன்றும். அதுமட்டுமன்றி எயிட்ஸ்.. புற்றுநோய்.. நிர்ப்பீடண (நிர்ப்பீடண செயற்பாட்டுக் குறைவுக்கான மருந்து உட்கொள்பவர்களில்.. குறிப்பாக அங்க மாற்றீட்டு சத்திரசிகிச்சை செய்பவர்களிடத்தில்) (suppress the immune system) பிரச்சனை உள்ளவர்களில் இது தோன்றும். சாதாரண தொற்று ஆபத்துக்களை பெரிதும் தராத போதும் தீவிரமான தொற்று நரம்புக்கலங்களை பாதிக்கச் செய்யின் விளைவு ஆபத்தானதாக அமையலாம்.

இது தொடர்பான மேலதிக விபரங்கள்:

http://www.ncbi.nlm.nih.gov/pubmedhealth/PMH0001787/

இந்த இணையத் தள தகவல்களை கூடிய நம்பிக்கைக்குரியவை. பல்கலைக்கழகங்களில் இதனையே அதிகம் பாவிக்கிறோம். விபரங்களை அறிய.

Edited by nedukkalapoovan

தகவலுக்கு நன்றி நெடுக்ஸ். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.எனக்கு முள்ளந்தண்டின் கடைசிப்பகுதியில் குயிலலகு என்புக்கு சற்று மேலே சற்று பெரியா கட்டி நீளமாக வந்தது.முதலில் குடும்ப வைத்தியரிடம் சென்றேன் எனக்கு முதல் ஒரு அண்டிபோயடிக் தந்தார்கள் அதற்கு சரிவரவில்லை பிறகு இன்னுமொன்று தந்தார்கள் அதுவும் சரிவரவில்லை.பிறகு கடந்த ஞாயிற்று கிழமைதான் சத்திரசிகிச்சை செய்தார்கள்.என்ன பிரச்சினை என்றால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது.இன்று தான் வேலைக்கு வந்திருக்கிறேன்.எனக்கு இருந்து செய்யிற வேலை எண்டபடியால் தான் வந்ததாக வைத்தியர் கூறினார்.ஆனால் இன்னுமொரு தடவை சத்திர சிகிச்சை செய்யவேண்டி வருமென்று கூறினார்.இதை தவிர்க்க என்ன செய்யலாம்?

நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகள். இன்னும் கொஞ்ச நாள் மருத்துவ விடுப்பில் இருந்திருக்கலாமே?

உங்கள் மருத்துவரை கேட்டால் தெரியும் கட்டி எங்கே இருந்ததென்று. முள்ளந்தண்டுக்கு வெளியே என்றால் அதிகம் பயப்படத்தேவையில்லை. எதுக்கும், பயோப்சி செய்து பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன் - வருமுன் காப்பதற்காக.

  • கருத்துக்கள உறவுகள்

அது தானே... ஏன் அவசரப் பட்டு வேலைக்கு போனீர்கள் வாதவூரான்.

நலம் பெற வாழ்த்துகின்றேன்.

11480.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ்சிறி அண்ணா மற்றும் ஈஸ் அண்ணாவுக்கு.நான் குடும்ப வைத்தியரை கேட்டேன் எலும்பில் பாதிப்பு இல்லாதபடியால் அதிக ஆபத்தில்லை என்று சொன்னார்.எனக்கு அடிக்கடி ஏதாவது வருத்தம் வந்துகொண்டே இருக்கும் நிறையா மருத்துவ விடுப்பு எடுத்து விட்டேன்.இப்ப இருக்கிற நிலமையிலை வேலையை காப்பாற்றி கொள்ள இப்பிடி அவசரப்பட வேண்டி கிடக்கு என்ன செய்யிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்.எனக்கு முள்ளந்தண்டின் கடைசிப்பகுதியில் குயிலலகு என்புக்கு சற்று மேலே சற்று பெரியா கட்டி நீளமாக வந்தது.முதலில் குடும்ப வைத்தியரிடம் சென்றேன் எனக்கு முதல் ஒரு அண்டிபோயடிக் தந்தார்கள் அதற்கு சரிவரவில்லை பிறகு இன்னுமொன்று தந்தார்கள் அதுவும் சரிவரவில்லை.பிறகு கடந்த ஞாயிற்று கிழமைதான் சத்திரசிகிச்சை செய்தார்கள்.என்ன பிரச்சினை என்றால் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து ரத்தம் ஓடிக்கொண்டே இருந்தது.இன்று தான் வேலைக்கு வந்திருக்கிறேன்.எனக்கு இருந்து செய்யிற வேலை எண்டபடியால் தான் வந்ததாக வைத்தியர் கூறினார்.ஆனால் இன்னுமொரு தடவை சத்திர சிகிச்சை செய்யவேண்டி வருமென்று கூறினார்.இதை தவிர்க்க என்ன செய்யலாம்?

உங்கள் வைத்தியர் சரியான வகையில் தான் இதனை கையாண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு இந்த நோய் வந்ததன் பின் காய்ச்சல்.. குளிர்.. முதுகு நோ இப்படியான அறிகுறிகள் தென்பட்டிருந்தால் அது பிரச்சனைக்குரியதாக இருந்திருக்கும்.

பொதுவாக வெயில் காலங்களில் இறுக்கமான ஆடைகள் அணிவதாலும்.. தொடர்ந்து ஒரே இடத்தில் இருப்பதால் ஏற்படும் உராய்வுகளினால் தோலின் காப்புப் படை விலகுவதாலும் குறித்த பகுதிகளில் கிருமிகளின் தொற்றுக்கு வாய்ப்பதிகம் என்பதால் இது வந்திருக்கும். இது தோல் சம்பந்தப்பட்ட Abscess என்பது போலவே தென்படுகிறது.

எனவே சுத்தமான காற்றோட்டமுள்ள இறுக்கமற்ற ஆடைகளை அணிவதோடு பருத்தியிலான சுத்தமான உள்ளாடைகளையும் அணியுங்கள். தினமும் ஒன்று அல்லது இரண்டு உள்ளாடை என்று பாவிக்க வேண்டும். இந்தப் புண்கள் மாறும் வரையாவது இருக்கையில் செயற்கையல்லாத குஷன் (cushion) பாவித்து இருங்கள். குறித்த பகுதி தொடர்ந்து இருக்கையோடு தொடுதலடைந்து தேய்வடைவதை தவிர்க்க வேண்டும்.

புண் ஆறி இருந்தால்.. கொஞ்சம் வசலின் கலந்த பொடி லோஷன் (body lotion) தடவிக் கொள்ளலாம். அது பாதுகாப்பான ஈரலிப்பை வழங்கி தோல் உதிர்வதை உராய்வதைக் குறைக்கும். மேலும் ஒரு சில துளி டெற்றோலை ஓரளவு நீரில் நன்கு கலந்து முழு வெளி உடலை அல்லது குறித்த பகுதிகளை சுத்தம் செய்து கொள்ளலாம். செறிவான அளவு டெற்றோலை நேரடியாக உடலின் வெளிப்புறத்தே ஆனாலும் பாவிப்பது கூடாது. ஏனெனில் டெற்றோல் ஒரு கிருமி கொல்லி (Antiseptic). இது கிருமிகளை மட்டுமன்றி எமது உடற்கலங்களையும் கொன்று விடும்.

இது விடயத்தில் நல்ல தனிநபர் சுகாதாரமும் கவனமுமே அவசியம். சீக்கிரம் நீங்கள் இதில் இருந்து விடுபட வேண்டுகிறேன்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான், நலம் பெற பிராத்திக்கின்றேன்.

வாதவூரான் குறைந்தது ஒரு வாரமாவது ஓய்வில் இருந்து சுகத்தைக் கவனித்து நலம் பெறவும்.

  • கருத்துக்கள உறவுகள்

வேலை,வேலை என ஓடாமல் உடம்பை கவனியுங்கள் வாதவூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊரிலை கட்டுகட்டிட்டுது எண்டு உதைத்தான் சொல்லுறவையோ? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வாழ்த்திய கறுப்பி அண்ணா ,குட்டி அண்ணா மற்றும் ரதி அக்காவுக்கும் ஆலோசனை கூறிய நெடுக்கண்ணாவுக்கும் நன்றிகள்.இன்றுடன் என்னுடைய வருடாந்த விடுமுறை ஆரம்பிக்கிறது இரண்டு வாரங்கள் (இது ஏற்கனவே விண்ணப்பம் செய்தது) இது சுற்றுலா போவதற்காக என்று போட்டது.இப்ப சுற்றுலா சரிவராது வீட்டிலை ஒய்வு எடுக்க வேண்டியது தான்.சந்தோசமான செய்தி என்னவென்றால் எதிர்பார்த்ததை விட காயம் வேகமாக ஆறி வருவதாக வைத்தியர் கூறினார்.இன்னும் மூன்று வாரம் எடுக்கும் என்று தான் எதிர் பார்த்ததாகவும் ஆனால் இப்ப இன்னும் ஒரு பத்து நாள் போதும் என்றும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வேண்டுகின்றேன்

ஓய்வெடுத்து நலமுடன் வாருங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி விசுகண்ணா

  • 2 weeks later...

வாதவூரான் - நன்றாக குனமடைந்துவிட்டீர்களா?

  • 1 year later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று சாரதி பரீட்சையில் சித்தியடைந்த சந்தோசத்தை கொண்டாட விடாமல் திரும்பவும் சிவ பூசையில் கரடி மாதிரி வந்து நுழைஞ்சுது இது.இன்று திரும்ப சத்திர சிகிச்சை அதே இடத்தில்.ஆனால் இந்த முறை முழுக்க மயக்கி போட்டு தான் செய்தார்கள்.இப்ப பெரிசா வலி தெரியவில்லை நாளைக்கு தான் தெரியும்.போன முறை மாதிரி இல்லாமல் நன்றாக செய்துள்ளார்கள் என்ன திரும்பவும் வரலாமாம்

  • கருத்துக்கள உறவுகள்

உடம்பை வடிவாய் கவனியுங்கள் அண்ணா...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.